தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மார்ச் 10, 2022

நினைத்தேன்...

 
விஞ்ஞானம் படித்து விஞ்ஞானி ஆக நினைத்தேன்.
கலைஞனாகி திரைப்பட நாயகனாக நினைத்தேன்.
 
அரசியல்வாதியாகி நாட்டை ஆள நினைத்தேன்.
இந்திய கிரிக்கெட் குழு வீரனாக நினைத்தேன்.
 
மருத்துவம் படித்து மருத்துவராக நினைத்தேன்.
சட்டம் படித்து நீதியரசர் ஆகவும் நினைத்தேன்.
 
இராணுவத்தில் கேப்டனாவும் நினைத்தேன்.
மெய்ஞானம் படித்து சாமியாராக நினைத்தேன்.
 
இந்த உலகை என் வசப்படுத்த நினைத்தேன்.
அதற்குள் மூதேவி அலாரம் அடித்து நின்று
 
கொண்டு உறங்கிய எனது உறக்கத்தை
நிறுத்தி கனவையும் கலைத்து விட்டது.
 
சாம்பசிவம்-
அப்துல் கலாம் நூலை படிச்சு இருப்பாரோ....

28 கருத்துகள்:

  1. ஆகா!...

    // நின்று கொண்டு உறங்கிய எனது..//

    ஜி!...
    இந்த இடத்தில் தான் நீங்கள் நிற்கின்றீர்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வாங்க ஜி நிற்கத்தான் செய்யிறேன்.

      நீக்கு
  2. அன்பு தேவகோட்டைஜி,
    நல்ல கனவுகள் பலிக்கட்டும். இப்பொழுதும் நீங்கள்
    பெரியவர் தான். நல்ல தந்தை.
    நல்ல தமிழ் சொல்பவர்.
    நலமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. ஹா..  ஹா..  ஹா...

    ஒரே நேரத்திலேயே  இவ்வளவையும் நினைத்தால் பின்னே அலாரம் அடிக்காமல் என்ன செய்யும்!

    பதிலளிநீக்கு
  4. அது சரி... ஒரே நாளில் இத்தனை கனவா இல்லை தொடர்ந்து பல நாட்களாகத் தூங்கிக்கொண்டு இருந்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நின்ற இடத்தில் பல நாட்கள் உறங்க முடியுமா ? மாட்டுத்தாவணிக்கு வந்தீர்களா ?

      நீக்கு
  5. கனவுகள் மெய்பட வேண்டும் என்றால் தூங்க கூடாது என்கிறதோ கடிகாரம்.

    இருந்தாலும் இத்தனை ஆசைகள் ! அதுதான் இன்னும் கனவுகள் நீண்டு கொண்டு போக வேன்டாம் என்று அலாரம் அடித்து எழுப்பி விட்டது போலும் கடிகாரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அலாரம் அடிக்கவில்லை எனில் பதிவு நீண்டு இருக்கலாம்.

      நீக்கு
  6. கனவு காணும் படம் சூப்பர்

    பதிலளிநீக்கு
  7. ஹாஹாஹாஹா கில்லர்ஜி.....ஒரே நேரத்துல இவ்வளவு கனவும் கண்டீங்கனா கனவை நிறைவேறும் கனவு தேவதை குழம்பிவிடமாட்டாரோ!!!!!

    கலாம் அவர்கள் சொன்ன கனவின் அர்த்தமே வேறன்னு சாம்பசிவம் கிட்ட சொல்லுங்க! நல்ல காலம் சிவாஸ் ரீகல் வரலை இல்லைனா தத்துவமா உளறிக் கொட்டியிருப்பார்!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவதை குழம்பியதால்தான் இதுவரை எதுவும் நடைக்கவில்லை.

      நீக்கு
  8. பகல் கனவோ! நகைச்சுவையாக உங்களின் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறீகள் என்று தோன்றுகிறது. படம் ஏதோ ஒரு பொது இடம் என்று நினைக்கிறேன் விமானநிலையமோ? காத்திருக்கும் போது கண் அயர்ச்சி!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அது வாஷிங்டன் விமான நிலையத்தில் கனவில் இருக்கும் போது எடுத்தது.

      நீக்கு
  9. கனவு கண்டு பலிக்கலைனா பலிக்க வைக்க வேண்டாமோ? திரைப்படக் கதாநாயகர்களைப் பாருங்க. ஒரு படத்தில் விஞ்ஞானி, ஒரு படத்தில் மருத்துவர், இன்னொன்றில் நீதிபதி, இன்னொன்றில் காவல் துறை அதிகாரி, கிரிக்கெட் வீரர், சாமியார் என அனைத்து வேஷங்களிலும் நடிச்சு ஆசையைத் தீர்த்துக்கறாங்க. :))))) உங்களுக்குத் தான் அலாரம் தேவையில்லாத நேரத்தில் அடிச்சுத் தொலைக்குது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க என்ன செய்வது எல்லாம் விதிப்படி நடக்கும். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. கீதா அவர்கள் சொல்லியதுபோல் சினிமாவில் நடித்து அத்தனை கனவுகளையும் பலிக்க வைக்கலாமே. வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே என்மீது நம்பிக்கை வைக்கவும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களா ?

      நீக்கு
  11. கனவை அலாரம் கெடுக்கிறதே. இல்லாவிட்டால் இன்னும் நிறைய கனவு வந்திருக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் அலாரத்தை உடைத்து விட்டேன்.

      நீக்கு
  12. கனவு பலிக்கட்டும். நல்ல கற்பனை ஜி.

    பதிலளிநீக்கு