இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மே 13, 2022

உபத்திர புத்திரன்

ணக்கம் நண்பர்களே... முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’’ என்ற கவிஞர் அ.மருதகாசியின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
 
இதோ எனது பாடல்...
 
பிள்ளை மடல் கீழே
பொய்க்கும் துண்டு போலே
பிள்ளை மடல் கீழே
பொய்க்கும் துண்டு போலே
இல்லம் உரசுதுங்கள் பண்பாலே
இல்லம் உரசுதுங்கள் பண்பாலே
பிள்ளை மடல் கீழே
பொய்க்கும் துண்டு போலே
 
பள்ளியறை கீழே
அள்ளும் பயல் மேலே
பள்ளியறை கீழே
அள்ளும் பயல் மேலே
கிள்ளி விளையாடிக்
கொண்டேன் என் மேலே
கிள்ளி விளையாடிக்
கொண்டேன் என் மேலே
 
பிள்ளை மடல் கீழே
பொய்க்கும் துண்டு போலே
கன்னியலை சாமியின் கீழே
கன்னியலை சாமியின் கீழே
என் கையாலே என்னருகில்
பேணுகின்றேன் உரிமையினாலே
என் கையாலே என்னருகில்
பேணுகின்றேன் உரிமையினாலே
 
பின்னல் கருமாரி உன் மேலே
கன்னி என்பாலே என்ன உடை
பின்னல் கருமாரி உன் மேலே
கன்னி என்பாலே என்ன உடை
அணிந்து கொண்டேன் ஆவலினாலே
அணிந்து கொண்டேன் ஆவலினாலே
ஆ... ஆ...ஆ... ஆ...
பிள்ளை மடல் கீழே
பொய்க்கும் துண்டு போலே
 
மந்தை தரும் பகடி என்னாலே
நரகத்தின் கீழே ஆ... ஆ...ஆ... ஆ...
மந்தை தரும் பகடி என்னாலே
நரகத்தின் கீழே உந்தன் கனம்
வாடிக் கொண்டேன் துன்பத்தினாலே
உந்தன் கனம் வாடிக் கொண்டேன்
துன்பத்தினாலே
 
சந்தை விலை ஏறினதாலே
உந்தன் பின்னாலே சந்தை விலை
ஏறினதாலே உந்தன் பின்னாலே
செம்பருத்தி கருக்கி கொண்டேன்
உன் பணம் கீழே செம்பருத்தி
கருக்கி கொண்டேன் உன் பணம் கீழே
 
பிள்ளை மடல் கீழே
பொய்க்கும் துண்டு போலே
இல்லம் உரசுதுங்கள் பண்பாலே
பிள்ளை மடல் கீழே
பொய்க்கும் துண்டு போலே
ஆ... ஆ... ஆ... ஆ...
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1958
படம்: உத்தமபுத்திரன்
பாடலாசிரியர்: அ.மருதகாசி
இசை: ஜி.ராமநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா
 
இதோ கவிஞர் அ.மருதகாசியின் பாடல் வரிகள்
 
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
 
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
அல்லி விழி தாவக் கண்டேன்
என் மேலே அல்லி விழி தாவக்
கண்டேன் என் மேலே
 
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
வெண்ணிலவை பூமியின் மேலே
வெண்ணிலவை பூமியின் மேலே
புன்னகையாலே கண்ணெதெரில்
காணுகின்றேன் பிரேமையினாலே
புன்னகையாலே கண்ணெதெரில்
காணுகின்றேன் பிரேமையினாலே
 
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே
அன்ன நடை பயிலக் கொண்டேன்
ஆசையினாலே
அன்ன நடை பயிலக் கொண்டேன்
ஆசையினாலே
ஆ... ஆ... ஆ... ஆ...
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
 
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே ஆ... ஆ...ஆ... ஆ...
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே எந்தன் மனம்
ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன்
இன்பத்தினாலே
 
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே சிந்தை நிலை
மாறினதாலே எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன்
என் மனம் போலே செம்பவளம்
நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
 
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுந்தன் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
ஆ.... ஆ... ஆ... ஆ... ஆ...
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=vNLRpeXzb3Y
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

35 கருத்துகள்:

  1. வணக்கம்

    நெஞ்சைத் தொடும் பழைய பாடல்களுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே நலமா ? தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  2. வரிகளில் வரும் வார்த்தைகளை மாற்றுகிறீர்கள்.  பொருள்?  சமயங்களில் அது இல்லாமல் போய்விடுகிறதே...   ஆனாலும் நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி பொருள் சில இடங்களில் இல்லாமல் போகிறது ஆனாலும் ஏதோவொன்று தொடர்கிறது...

      நீக்கு
  3. ஊத்த மப்புத் திறன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய வார்த்தையாக இருக்கிறதே...

      நீக்கு
    2. அவரும் உத்தமபுத்திரன் தலைப்பை உல்ட்டா செய்திருக்கிறார்!

      நீக்கு
  4. இந்த மாற்றுப் பாடல் குறிப்பிடுவதை என்னால் புரிஞ்சுக்க முடியலை. ஆனாலும் அந்த மெட்டுக்கேற்றபடி நீங்கள் மாற்றுவது உங்கள் திறமையைக் குறிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் நானும் இதையே சொல்கிறேன் அதே மெட்டுடன் பாடினால் பொருந்தும் வரிகளே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. அப்படியே பதவுரை எழுதி விடுங்கள் ஜி...!

    பதிலளிநீக்கு
  6. மாற்றிய கவிதை என்ன சொல்ல வருகிறது என்று தெரியவில்லை.
    முல்லை மலர் மேலே பாடல் மிக அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. போட்டுத் தாக்குங்கள்..

    ஆனால் நல்ல இலக்கியத் தரமான பாடல்களை விட்டு விடுங்கள்..

    பிழைத்துப் போகட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இன்றைய பாடல்களை (?) மாற்றி எழுத முடியாது.

      நீக்கு
  8. காய்த்த மரம் கல்லடி படும் என்பார்களே.. அதற்கு இதுவும் சாட்சி..

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான பாடல் - உங்கள் பாணியில் மாற்றி இருப்பது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி.

      சில கருத்துரைகள் ஸ்ஃபாமில் கிடக்கிறது காரணம் தெரியவில்லை

      நீக்கு
  10. கில்லர் ஜி மெட்டிற்கு ஏற்ப பாடல் உங்கள் பாணியில் நன்றாக எழுதுகிறீர்கள். நல்ல திறமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  11. ஹாஹாஹாஹா மெட்டு ஓல்டு இது உங்க பாட்டு!!! மாற்றிப் பாடும் பாடல்களில் பல வற்றில் நீங்கள் பொதுவாக அர்த்தம் கொண்டு வந்துவிடூவீர்கள்..பெரும்பாலும்...ஆனால் இந்தப் பாடலில் தொடக்கமே கொஞ்சம் அர்த்தம் சேரவில்லை. பரவால்ல விடுங்க ஜி. மெட்டு நல்லா பொருந்தி வருகிறதே அதுவே பெரிய விஷயம்.

    இப்ப வர பாடல்களில் வார்த்தைகளே புரியலையே!!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் வார்த்தைகளை எதிர்ப்பதாக எழுதுவதே முக்கிய காரணம் வேறொன்றுமில்லை.

      நீக்கு
    2. மெட்டுக்கு ஏற்ப பாடல் . உங்கள் வழமையானது போல் இல்லை.

      நீக்கு
    3. வருக சகோ அப்படியா ? அடுத்த பாடலில் கவனம் செலுத்துவோம்.

      நீக்கு
  12. மூலப்பாடலையும், உங்கள் பாடலையும் இணைத்துப் பார்த்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    தங்களது பாடல் வரிகள் அந்த பழைய பாடலுக்கு பொருத்தமாக உள்ளது. தலைப்பு உத்தம புத்திரனுக்கு பொருத்தமாக தேர்ந்தெடுத்த மைக்கு பாராட்டுக்கள். சில இடங்களில் தலைப்புக்கு ஏற்றபடி பாடலின் பொருள் சரியாக வரவில்லையோ என எனக்கும் தோன்றுகிறது. ஆனால், நீங்கள் இயற்றிய பாடல் எப்போதும் போல் பழைய பாடலுக்கு கனகச்சிதம்.சிறந்த பாடலாசிரியர் ஆகிக் கொண்டு வருவதற்கு வாழ்த்துகள்.

    நேற்று என்னால் வலையுலகிற்கு வரவியவில்லை. அதனால் தாமதம். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      மெட்டு ஏற்ற எதிர்பத வார்த்தைகளை கோர்த்து எழுதுவதே எனது முதல் குறிக்கோள். அர்த்தங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை.

      நீக்கு
  14. கவிஞர் கில்லர்ஜீக்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவை இன்னும் தேவை. எனவே இதுபோன்ற பழைய பாடல்களை தழுவிய உங்கள் புதிய பாடல் பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  15. நிறைய இடங்களில் பொருள் இல்லாமல் இருப்பதுதான் குறை கில்லர்ஜி. கொஞ்சம் யோசித்து எழுதினால் அதிலும் நீங்கள் உங்கள் கைவரிசையைக் காண்பிக்க முடியும். முயலுவீர்கள் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்துக்கு நன்றி. நிச்சயம் முயல்கிறேன்.

      நீக்கு
  16. கவிஞர்க்கு வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு