தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 16, 2023

இது பகுத்தறிவா ?

ணக்கம் நட்பூக்களே... மேலே புகைப்படத்தில் எழுதி இருக்கும் வாசகத்தை பார்த்தீர்களா ? மனிதர்களுக்கு பக்தி இருக்க வேண்டியதுதான் இப்படி அற்பத்தனமாக எழுதலாமா ? இந்த வகையான கூதரைகளால்தான் இருக்கும் பக்தியும் கேலிக்கூத்தாகிறது.
 
இந்த உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகளாகிறது என்பது நாம் அறிவியல் மூலமாக அறிந்த உண்மை. சாய்பாபா என்ற மனிதர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து. மறைந்தது எத்தனை ஆண்டுகள் இருக்கும் ? இவர் பிறப்பதற்கு முன்பு சூரியன் தோன்றவில்லையா ? எதற்காக இப்படி வார்த்தைகளை போட்டு கொச்சைபடுத்துகின்றார்கள் ? இவர் ஓர் இஸ்லாமியர் சமூகத்தை சார்ந்தவர் என்றும் சொல்கின்றார்கள்.
 
கல்லில் செதுக்கிய சிலையை வணங்குகிறோம், மரக்கட்டைகளில் செதுக்கிய சிலைகளை வணங்குகிறோம், தங்கம், வெள்ளி, பித்தனை, இரும்பு, அலுமினிய உலோகங்களில் வடித்த சிலைகளை வணங்குகிறோம், தாள்களில் அச்சிட்ட படத்தை வணங்குகிறோம், நெகிலி பதாகைகளில் அச்சிட்ட படத்தை வணங்குகிறோம், நடமாடும் மனிதர்களை வணங்குகிறோம், அவர்கள் போலி என்று அறிந்தாலும் வணங்குகிறோம், இறந்த அரசியல் தலைவர்களை வணங்குகிறோம், திரைப்படக் கூத்தாடிகளை வணங்குகிறோம், இறுதிவரை குடிகாரனாக வாழ்ந்து நேற்று இறந்து போன நமது குடும்பத்து உறுப்பினரை வணங்குகிறோம் இன்னும் எவ்வளவுதான் வணங்கணும் ?
 
நம்ம சகலை நித்தியானந்தாவை இன்னும் கடவுளாகத்தானே பாவிக்கின்றார்கள். அடப்பாவிகளா... உங்களுக்கு இறைவன் படைத்த மூளை என்ற ஒரு பகுதி இருக்கிறதா ? இல்லையா ? இன்றுவரை கொழுந்து ரஞ்சிதா பூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்வதை ஏற்பது மாண்புடையதா ? இல்லை எனக்குத்தான் ஏதும் விளங்கவில்லையா ? கொஞ்சம் விளக்கினால் நானும் உங்களுடன் ஐலேசா... ஐலேசா... என்று சொல்லி கைலாசா வந்து விடுவேன். சமீபத்தில் வெசய் ரசிக குஞ்சுகள் என்ற அறியாமைகள் பதாகை வைத்து இருந்தார்கள் அதில் எழுதி இருந்தது இதுதான்...
 
‘’மனிதனை படைத்தவர் கடவுள்
கடவுளை படைத்தவர் விஜய்’’
 
ஏண்டா... அரிய ஆமைகளா ? கடவுள் இருப்பதை நம்பும் உனது அறிவுக்கு இது உகந்ததா ? ஆனால் கடவுள் இல்லவே இல்லை என்றும் சொல்லும் பகுத்தறிவாதிகள் ஒருபோதும் இப்படி சொல்வதில்லை. ஏண்டா இப்படி சந்தி சிரிக்க வைக்கிறீங்க... ? போங்கடா போயி வேலையைப் பாருங்கடா...
 
சிவாதாமஸ்அலி-
ஆயிரம் பெரியார் வந்தாலும் இவங்கே இப்படித்தான்...
 
Chivas Regal சிவசம்போ-
இந்த ஆளு ரஞ்சிதா மேலேயே ஒரு கண்ணா இருக்காரே...

Share this post with your FRIENDS…

24 கருத்துகள்:

  1. ஆர்வக்கோளாறில் எதை வேண்டுமானாலும் பேசுவது... பக்திப்பித்தில் கன்னாபின்னாவென்று உளறுவது...​ அறிவிலிகள்.

    பதிலளிநீக்கு
  2. எதையாவது செய்து பிறர் கவனத்தை ஈர்க்க முயலுபவர்கள், சொந்தச் சரக்கு இல்லாதவர்கள். இவர்களைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பண்ணறது?

    சென்ற மாத்த்தில் கும்பகோணத்தில் கே எஸ் அழகிரியை, வாழும் காமராசரே ன்னு போஸ்டர் அடிச்சிருந்தான் ஒரு மடையன். கீழ்ப்பாக்கம் கேஸ்கள் நிரம்பிய இடம் தமிழகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      உண்மைதான் தமிழ்நாட்டில் நிறைய முடுமைகள் பெருகி விட்டனர்.

      நீக்கு
  3. பேதைமை... இதை விட வேறு சொல்வதற்கு சொற்கள் இல்லை...

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹாஹா கில்லர்ஜி!!! கரெக்டா உங்க கண்ணுல பட்டிருக்கு பாருங்க!!!

    அறிவு கெட்ட மக்கள்! இதுக்குப் பெயர் பக்தி!! ஹாஹாஹா இது கண்மூடித்தனமான பக்தி! ஆன்மீகம்னு வேற பிதற்றல்கள்! அதனாலதான் இப்படியான மூடநம்பிக்கைகள் இருக்கறதுனாலதான் மக்களின் அறிவு பக்குவம் அடைவதில்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக என்ன செய்வது ? நான் எங்கு போனாலும் இப்படி விடயங்கள் எனது கண்ணில் பட்டு விடுகிறது.

      நீக்கு
  5. ஸ்‌ரீராம் கண்ணில் இங்க கீழ வர விளம்பரம் அவர் இங்க வந்தப்ப கண்ணில் பட்டிருக்காதுன்னு நினைக்கிறேன்!!!! ஹிஹிஹி வேற ஒண்ணுமில்லை பல்லு பிடுங்கி வேற நடும் படம்!!!!!விளம்பரம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. யாசகம் பெற்ற பணத்தை மக்கள் பணிக்கு எனக் கொடுத்தவரும் இதே தமிழ் மண்ணில் தான் வாழ்கின்றார்..

    அவரது கால் தூசிக்கு ஈடாக மாட்டாத பதர்களைப் பற்றி என்ன பேச்சு..

    இந்தக் கழிவுகளைக் கடந்து செல்வோம்!..

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    மனிதர்களின் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளை என்னவென்று சொல்வது? இறையின் மேலும் இறை சார்ந்த பெரியவர்களின் மேலும் பக்தியும், நம்பிக்கையும் இருக்க வேண்டியதுதான்.. அதற்காக இதைப்போன்ற வாசகங்கள் மூலம் மக்களுக்கு பக்தியை வலுக்கட்டாயமாக உணர்த்துவது தேவையா? சகோதரி கீதாரெங்கன் அவர்கள் சொல்வது போல், இந்த விளம்பரம் உங்கள் பார்வையில் படுதற்காகவே வந்து சேர்ந்ததே.!! :))) இதைப்படிக்கும் போது நம்முள் சாதாரணமாக இருக்கும் பக்தியும் விலகி விடும் போலும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. என்னத்தை சொல்வது ? பித்து பிடித்து அலையும் மனிதர்கள்.



    பதிலளிநீக்கு
  9. பக்தி இருக்க வேண்டியதுதான். அது எல்லை மீறி போகும் போது இப்படி எல்லாம் பேசுவார்கள் போலும். இப்படி எல்லாம் கண்டபடி எழுதுவதால் பக்தியை கேலி செய்யும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    நாமகல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் கவிதை நினைவுக்கு வருகிறது.
    சூரியன் வருவது யாராலே?
    சந்திரன் திரிவதும் எவராலே?
    பாடலை படிக்க சொல்லவேண்டும்.
    நாம் எல்லோரையும் இயக்குபவன் ஒருவர் இருக்கிறார்.அவர் இவர்களை இப்படி எழுத சொல்கிறார் போலும்!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  10. இப்படியெல்லாம் எழுதாதீர்கள் ஜி... இதனை படிக்கும் பக்தாள் மனம் வேதனைப்படும் என்பதால் உங்களை அந்த கடவுள் கோபித்துக்கொள்ள போகிறார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      நான் "நித்யவஸ்தா" மந்திரம் சொல்லி தப்பி விடுவேன்.

      நீக்கு
  11. இது பஹூத் அறிவு இல்லையோ? இவங்களுக்குத் தான் அறிவே இருக்குனு நினைப்பு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      இப்படியும் எடுத்து கொள்ளலாமோ ?
      இஃஹி இஃஹி இஃஹி

      நீக்கு
  12. மிக மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு