தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 13, 2015

சோலையாண்டவர்.

 

திரைப்பட நடிகர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக இந்த ஏரியாவுக்கெல்லாம் வந்து படிக்க மாட்டீங்க... எனக்கு நல்லாத் தெரியும், இருந்தாலும் என் மனதில் உள்ளதை கொட்டிவிட (கழட்டிஆசை, இந்த ரசிகர் மன்றம் அப்படின்னு சொல்லிக்கிட்டு எந்த பொழப்பையும் பார்க்காம, உங்களுக்கு, கட்டவுட் வைக்கிறதும், பாலாபிஷேகம் செய்யிறதும், அப்புறம் உங்களிடம் இதையே காரணமாவச்சு உங்களை சீட்டிங் போடுறதும்னு திரியிறவங்களை, நம்பாதீங்க... ஏன்னா உங்களுக்கு மவுஸ் உள்ளவரைதான் இவங்கே இப்படி இருப்பாங்கே அப்புறம் அடுத்த நடிகரை தேடிப் போயிடுவாங்கே...

எனக்கு இதுதான், அம்மா, அப்பா, நிலா, சூரியன், வானம், நிலம், தண்ணீர், நெருப்பு, மரம், மல்லிகைப்பூ, கள்ளிச்செடி, குறிஞ்சிமலர், அரளிவிதை என எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் இந்த மாதிரியான செயல்களில் நான் ஈடுபட்டதில்லை, காரணம் எனது வளர்ப்பு அப்படி. 

உங்க எல்லோருக்கும் தெரியும் ராமராஜன் அப்படின்னு ஒரு கிராமத்து ராஜன் இவரு, திருச்செந்தூரின் கடலோரத்தில் பாராளுமன்ற தொகுதிக்குகூட நின்று ஜெயித்தாரு, எல்லா தாய்மார்களுக்கும், நல்லாத் தெரியும், இவரு பாட்டுப்பாடியே பால் கறக்கிறதுல (பசுமாட்டிடம்) வல்லவரு, நல்லவரும்கூட அவரு மிகபெரிய அளவில் பிரபலமாகி இருந்தவரு, பிரமாண்டமா கல்யாணம் செய்தாரு, பிரமாதமா ரெட்டை பெண் குழந்தைகள் பெற்றாரு, பிரமாண்டமான மானாமதுரை கடனா, கட்டியா, கர்த்தனா, தியேட்டரைக்கூட வாங்கினாரு, இவ்வளவு பிரமாண்டமா வளர்ந்தவரு, இப்ப காணாமல் போயிட்டாரு, அவரு மனைவி நளினமானவரு அவரு மட்டும், பிரமாண்டமாயிட்டாரு, (அவரை விட்டு வந்த நேரமோ, என்னவோ) இப்படிப்பட்டவருக்குத்தான், 

எனது நண்பன் ஒருவன் பெயர் சோலையாண்டவர், ரசிகர் மன்றம் வைத்து எந்தநேரமும் சென்னைக்கு போறதும், வர்றதுமாக இருப்பான், கிராமராஜனையும் சந்திப்பான், தொழிலில் கவனம் கிடையாது, அப்பா வைத்துக் கொடுத்த கடையும் காணாமல் போய் விட்டது, (ரா.ரா.போல) இதனால் சொந்த பந்தங்கள் பெண் கொடுக்க யோசித்து, யோசித்து கடைசிவரை கொடுக்கவில்லை, வேறு வழியில்லாமல் நாடோடிகள் கூட்டத்தில் போய் கல்யாணம் செய்து கொண்டான், (அவளும் பெண்தானே) அங்கும், இங்குமாய் வாழ்ந்து கடைசியில் அவன் மனைவியும் ஒருநாள் காணாமல் போய் விட்டாள், (ரா.ரா.போல) இன்று அவன் மட்டும் தனிமரமாய்.... 

பிறகு ஒருநாள் அவனைப் பார்த்தேன் உதவி கேட்டான், கேட்ட உதவியும் செய்கிறேன் எனச் சொல்லி அதற்கு முன் அவனிடம் ஒரு காலத்தில் நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், என்னைப் புழுவைப்போல பார்த்தான், அதற்குப் பகரமாக அவனை நாக்கைப் புடுங்கிற மாதிரி நாலுகேள்வி கேட்டேன், பணம் நாளைக்கு வாங்கிக்கிறேன்னு வீட்டுக்கு போனவன், அரளி விதையை அரைத்து குடிக்கப் போகும்போது.... யாரோ பார்த்து தடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

மறுநாள் நான் போயி ஒன்றும் சொல்லாமல், பணத்தை கொடுத்து விட்டு வந்தேன், என்றோ காணாமல் போன அவன் முகவரி இன்று காணப்படுகிறது.

CHIVAS REGAL சிவசம்போ-
இவருட்ட, பசின்னு சொன்னா விருந்தை வச்சுட்டு சோத்துல லத்தை அள்ளி வச்சுருவாரோ.... 

 VIDEO

சனி, ஜூலை 11, 2015

நெடுங்குடி, நெட்வொர்க் நெடுமாறன்


இந்த நெடுஞ்சாலை துறையினருக்கும், (Highway Department) குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கும் (Water Supply & Drainage Board) எவ்வளவு தைரியம், நெஞ்சழுத்தம் இருந்திருக்க வேண்டும் நம்மைக் கேட்க யார் ? என்ற இறுமாப்பு, சாலை போட்ட பிறகு குழாய் பதித்தார்களா ? குழாய் பதித்த பிறகு சாலை போட்டார்களா ?

புதிய சாலை எனசொல்ல சாத்தியமில்லை, சாலையும் புதுப்பித்திருக்கிறது ஆகவே இது இருவரையும் சேரும், சர்வ சாதாரணமாக இந்த தவறை செய்து விட்டு போய் விட்டார்களே ! இது தவறென்று இவர்களுக்கு சொல்வது யார் ? சொல்ல வேண்டியவர்கள்  இவர்களுக்கு மேல் தவறுகளை செய்து கொண்டிருக்கின்றார்களே ! கேட்க கூடிய சந்தர்ப்பம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது அப்பொழுதும் மக்கள் தேர்தலை திருவிழாபோல நடத்தி அவர்களை அனுப்பி விடுகிறார்கள், வேறு யார்தான் இவர்களுக்கு இந்த தவறை உணர்த்துவது

முதல்வன் மாதிரி திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் சரியான செயலென காட்சிக்கு காட்சி கைதட்டும் மக்கள் தியேட்டரை விட்டுவெளியே வந்ததும் மறந்துபோய் விடுகிறார்களே ஏன் ? இது சரியெனில் வாழ்க்கைக்கும் எடுத்து கொள்ள வேண்டியதுதானே ! அப்படியானால் கை தட்டியது முட்டாள்த்தனமான செயலா
இந்த மாதிரியான அதிகாரிகள் திருந்த ஒரே வழி, 

இந்த செயலுக்கு காரணமான அதிகாரிகள் இதே வழியாக அவசர வேலையாக இரவு நேரத்தில் அவர்களே மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்து முட்டிமோதி மண்டை உடைந்து, கால் ஒடிந்து மருத்துவனையில் ஒரு மாதம் கிடத்தி வருவோரும், போவோரும் நலகுசலம் கேட்டு துன்புறுத்தும் போதுதான் உடல் வேதனையும், மன வேதனையும் சேர்ந்துதான், செய்தது தவறென உணர்த்தும்

சரி இந்த சந்தர்ப்பத்தை யார் அமைப்பது ? வேறுயார் ? இறைவன்தான் ? ? ? 

அதே நேரம் இறைவன் இவர்களுக்கு மரணத்தை கொடுத்து விடக்கூடாது, குறைந்த பட்சமாக 10 ஆண்டுகளாவது நுடமாக வாழ்ந்து மரணிக்க வேண்டும்.

CHIVAS REGAL சிவசம்போ-
நாட்டுல, நீதிபதிகளுக்கு பஞ்சம்னு சொல்றாங்க, இந்த மாதிரி ஆளுகளை ''போடச் சொன்னா'' குடிகாரப்பய ஒழர்ர்ர்ர்ர்ரான்னு சொல்வாங்க....

புதன், ஜூலை 08, 2015

தேசத்துரோகிகள்.

வருடந்தோரும், பேரூந்துகள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன, போக்குவரத்து துறையும் கணக்கெடுத்து வழக்கமான நஷ்டக்கணக்கில் எழுதிவைத்து விடுகிறார்கள், காவல்துறையினரும் வழக்கம்போல துப்பு துலக்கி கோப்புகளை தூக்கி பரணில் வைத்து விடுகிறார்கள், கடைசியில் பாரம் மக்க(ல்)ள் தலையில்... யாருக்கும் இதனைப்பற்றிய கவலையில்லை, சரி இந்த பேரூந்துகளுக்கு தீ வைப்பதும், தீ வைக்கச் சொல்வதும் யார் ? பாக்கிஸ்தானியர்களோ, அமெரிக்கர்களோ, ஜப்பானியர்களோ, சைனாக்காரர்களோ, அல்ல இந்தியன் Yes, The GREAT இந்தியன், இந்திய வாக்குறிமைபெற்ற, இந்திய Passport பெற்ற, இந்தியனே. இந்தியாவின் எல்லைக்குள் ஊடுருவுகின்றானே... அன்னியன் அவனைக்கூட மன்னித்து விடலாம், ஆனால் இவர்களைப்போன்ற தேசத்துரோகிகளை ஒருபோதும் மன்னிக்ககூடாது. இதில் நமது பணமும் உள்ளது எனஅறியாத அறியாமைகளின் செயல், தூண்டிவிடும் அரசியல்வாதிகளுக்கோ, நஷ்டத்தைபற்றி சிந்தையில்லை ஏனெனில் பின்னால் எடுத்துக்கொ(ல்ல)ள்ளலாம், நடுத்தரமக்களுக்கு குடும்பகௌரவம் பாதிக்கப்படுமே எனவாயைத்திறப்பதில்லை, உணவருந்தும் நேரத்தை தவிற, சரி வேறுயார்தான் இதை சரிசெய்வது ? முடிவு எடுக்க வேண்டியது யார் ? பிறகு விலைவாசிகள் ஏறுகிறது என்றால் எப்படி ? அப்புறம் குத்துதே, கொடையுதே என்றால் எப்படி ? வேலியில போற ஓணானை (அரசியல்வாதிகள்) புடிச்சு ஜீன்ஸுக்குள்ளே விட்டது யாரு ?


CHIVAS REGAL சிவசம்போ-

அப்படீனா, ஜீன்ஸையே பார்க்காம, கோவணத்தோட திரியிறவங்களுக்கும் விலைவாசி ஏறிடுச்சே... ஏன் ?

ஞாயிறு, ஜூலை 05, 2015

பொக்கிஷம்.

உயிருள்ள ஜீவராசியான மனிதர்கள், பலபேர் என் மனதை காயப்படுத்தியது உண்டு இப்பொழுதும்கூட, மேல் காணும் இந்த உயிரற்ற பொருள் என்வாழ்வில் பலமுறை எனது கௌரவத்தை காப்பாற்றி இருக்கிறது, எனது கஷ்டங்களில் பங்கு எடுத்துள்ளது மற்றவர்களை பொருத்தவரை இதுஒரு கையில் கட்டும், சாதாரண கடிகாரம் என்னைப் பொருத்தவரை நான் மிகமிக நேசிக்கும் உயிரற்ற ஜீவன்.
ஒரு காலகட்டத்தில் இந்த ஜீவன் என்னைவிட, நைனா முஹம்மதுவிடமே அதிககாலம் இருந்தது, காரணம் அவர்தான் இதை வைத்துக்கொண்டு எனக்கு பணம் கொடுப்பார் இந்த ஜீவனைவிட அதிகமான பணத்தை நான் வட்டியாக கொடுத்து இருக்கிறேன், இவ்வளவு வட்டி கொடுப்பதற்கு விற்று விடலாமே எனநினைக்கலாம் விற்று விட்டால், மீண்டும் வைப்பதற்க்கு வேறு ஜீவனில்லை என்னிடம், வட்டி கொடுப்பவனின் மனநிலையை நான் முழுமையாக அறிந்தவன், அதனால்தான் நம்வாழ்வின் கடைசி காலம்வரை யாரிடமும் வட்டி வாங்ககூடாது என முடிவு செய்தேன், கஷ்டப்பட்டாவது மீட்டு விடுவேன் மீட்டும், மீண்டும்... மீண்டும்... அவரிடமே..... இப்பொழுது நிரந்தரமாக மீட்டு விட்டேன் இந்த ஜீவனுக்காக நான் நிறைய வைத்தியசெலவு செய்துள்ளேன் இப்பொழுது இந்த ஜீவன் என்னை விட்டு பிரிவதில்லை, என்வாழ்வில் நான் நேசிக்கும் உயர்ந்த விசய வரிசையில் இந்த ஜீவனும் உண்டாகும், கடைசிவரை ஒரு பொக்கிஷம் போல், இந்த பொக்கிஷத்திற்கு நான் இதுவரை சக்களத்தியை கொடுத்ததில்லை, கொடுக்கப் போவதுமில்லை, ஒரு நன்றிக்காக உயிரற்ற ஜீவனுக்கே.... நான் இத்தனை தூரம் நன்றிக்கடன் செலுத்தும்போது உயிருள்ள ஜீவராசிகளுக்கு நான் எவ்வளவு செலுத்த கொடுக்கவேண்டும், அதற்காகத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன் இதுவரை கிடைக்கவில்லை அந்த மாதிரி ஜீவராசி இதற்க்கு இன்னுமொரு காரணமும் உண்டு இதை எனக்கு பரிசு தந்த அந்த ஜீவராசி இந்த பூவுலகில் இன்று இல்லை. 

புதன், ஜூலை 01, 2015

சருகனி, சகுனம் சற்குணவதி


வீட்டில், எதற்கெடுத்தாலும் பெண்கள் சகுனம் பார்ப்பார்கள். உதாரணத்திற்கு திடீரென ஊருக்கு போகவேண்டிய சூல்நிலை உண்டாகும் உடனே புறப்படுவோம், அன்று பார்த்து திங்கள் கிழமையாக இருக்கும். போதக்குறைக்கு வடக்கே சூலம் வேறு, உடனே பெண்கள் என்ன சொல்கிறார்கள் ? இன்னைக்கு வேண்டாம் திங்கள் கிழமை பயணம் போனால் ? திரும்பாப் பயணமா போயிடும் என்பார்கள். கிழமை என்ன செய்யும் ? எல்லா நாளும் போல திங்களும் வந்து போகும் அவ்வளவுதான்.

திங்கள் என்று யார் பெயர் வைத்தது ? ஒருவேளை அவர்கள் மங்கள் என்று பெயர் வைத்திருந்தால் இந்த பெண்கள் என்ன சொல்லி இருப்பார்கள் ? மங்கள் கிழமை பயணம் போனால் மங்களகரமா இருக்கும் உடனே புறப்படுங்கள் என்று சொல்வார்கள்.

ஏனென்றால் புதன்கிழமை ஏதாவது நல்லகாரியம் நடந்து விட்டால் ? பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்று சொல்கிறவர்கள்தானே இவர்கள். ஆனால் ஆறு நாட்கள் கழித்து புதன்  மறுபடியும் வரும் அதை ஏனோ இவர்கள் மறந்து விடுகிறார்கள். அதே நேரம் பலருடைய வாழ்வில் இந்த புதன்கிழமை தறுத்தினியம் தாண்டவம் ஆடியிருக்கிறது. அதெல்லாம் கணக்கில் வராது.


வடநாட்டுக்காரர்கள் ஹிந்தியில் கிழமையை, வார் என்று சொல்வார்கள் செவ்வாய்க்கிழமையை மங்கள்வார் என்று சொல்கிறார்கள். நாம்கூட செவ்வாயை, வெருவாய் என்று ஒதுக்குகிறோம். அரேபியர்கள்கூட, திங்கள் கிழமையை யும்மெல் இத்தினீன் என்கிறார்கள். இதற்கு இரண்டாவது நாள் என்று அர்த்தம்.

(ஏதோ காரியத்துக்கு சொல்வது போல இருக்கும்)

ஆனால் எல்லோருக்குமே ஒரே சூரியன், ஒரே பகல். ஆகவே, எதை எல்லாமோ, பெயர் மாற்றம் கொண்டு வருகிறார்கள் இந்த திங்கள் கிழமையை மங்கள் கிழமை என்று மாற்றினால் என்ன ?

 
சாம்பசிவம்-
ஏய்யா, நீ சும்மாவே இருக்க மாட்டியா அம்மாவே மாத்தி சும்மான்னு சொல்லச் சொல்லுவே போலயே ஏற்கனவே நிறையப்பேரு பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு அம்மாவ வீட்ல சும்மாதான் வச்சு இருக்கான். நீ வேற ஏய்யா, குட்டைய குழப்புறே ?