தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 05, 2016

Apple TV


ஐயா வணக்கம் எங்களது APPLE TV யின் ஆறாமாண்டு விழா கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிகழ்ச்சிக்காக தங்களது சிறப்பு பேட்டி தொடங்கலாமா ?
வணக்கம் தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ ! ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்து ஆறாத் தொண்டாற்றும் APPLE TV க்கு எமது ஆறா''வடு வாழ்த்துக்கள்.

நன்றி ஐயா உங்களோட நாவல்கள் எல்லாவற்றிலுமே கதாநாயகன்-கதாநாயகி என்பதற்க்கு கசாநாயகன்-கசாநாயகி என்றே எழுதுகிறீர்களே, ஏன் ? கதா மீது கோபமா ?
ஹிந்தியில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை ''அது'' எனது நாவலில் மட்டுமல்ல எனது நாவால் கூட உச்சரிக்க மாட்டேன்.

ஹிந்தியிலும் கதை எழுதுகிறீர்கள் அந்த வார்த்தையை உபயோகப்படுத்தியது இல்லையா ?
அது'' போகும் பாதையில் நான் செல்வதில்லை.

அப்படியானால் மலையாளத்தில் கதை என்பதற்க்கு கதா என்கிறார்கள், நீங்கள் மலையாளத்தில் கதை எழுதும்போது இதை எப்படி.... ?
அதில் துணையெழுத்து வராது கவனிக்க வேண்டும் ''கத'' என்பதுதான் சரி. மலையாளத்தில் இதுதான் (കഥ) அதே போல தெலு(ங்)குவிலும் கதைக்கு ''கத'' என்றுதான் சொல்வார்கள், தெலு(ங்)குவில் இதுதான் (కథ)

உங்கள் கதையில் வரும் எல்லா பெண்களுமே கடைசியில் ஏதாவது ஒரு வகையில் கொல்லப்படுகிறார்களே.. ஏன் ?
அவர்களின் ''விதி'' முடிந்திருக்கலாம் என்பதைவிட, குற்றவாளி நிச்சயமாக சிறைக்குச் செல்கிறான் என்பதுதான் படிப்பவர்களுக்கு நான் கொடுக்கும் பாடம்.

ஐயா போனமாத க்ரைம் நாவல் ''தண்டு'' வில் வரும் பாண்டுரங்கன் தண்டவாளத்தை தாண்டும்போது மாண்டு போனான், ஆனால் இந்த மாத நாவல் ''மண்டு'' வில் உயிரோட வருகிறான்... இது எப்படி ?
ஒரு திரைப்படத்தில் எதிரி அருவாளால் வெட்டும்போது கசாநாயகன் கையால் தடுத்துப்பிடித்து ஒடித்து வீசுகிறான், மற்றொரு படத்தில் கசாநாயகன் நெஞ்சில் 3 குண்டுகள் பாய்ந்தும் 6 பேரை அடித்தே கொன்று விட்டு 12 KM காரை ஓட்டிச்சென்று வீட்டிற்க்கு வந்து தாயின் மடியில் விழுந்து இறந்து விட்டு மறு படத்தில் அதே தாயை காதலியாக்கி ஸ்விட்சர்லாந்துக்கு கூட்டிக் கொண்டு போயி டூயட் பாடுகிறான் இன்னொரு படத்தில் ரவுடியொருவன் கத்தியால் குத்தும்போது கசாநாயகன் பற்களால் கடித்து நிறுத்துகிறான் அடுத்தொரு படத்தில் வில்லன் பறந்து போகும் ஹெலிகாப்டரை கசாநாயகன் ஜீப்பில் வேகமாக பறந்து போயி மோதி வெடிக்கச் செய்து வில்லனை கொன்று விட்டு கீழே குதித்து தப்பித்து விடுகிறான் இதையெல்லாம் உண்மையென நம்பி ரசிகர்கள் கைதட்டும்போது.... எனது ''தண்டு'' வில் வந்த பாண்டுரங்கன் கண்ணாடியார் வீதியில் குடியிருக்கும் கண்ணபிரான் மகன் என்றும் ''மண்டு'' வில் வரும் பாண்டு ரங்கன் மண்டோதரியின் கொழுந்தன் என்றும் வாசகர்கள் ஏன் யூகித்து கொள்ளக்கூடாது ?

நீங்கள் எழுதிய ''ஒரு நடிகை நடித்து பார்க்கிறாள்'' என்ற நாவல் பிரபல நடிகை கனிகாஸ்ரீ யோட வாழ்க்கை வரலாறு எனசொல்லப்படுவது உண்மையா ?
ஒரு நடிகைக்கு நாடி ஜோஸியம் பார்க்கும் அவசியம் எனக்கில்லை அந்த கதையின்படி அவளுக்கு நடிக்கத் தெரியாது ''தனது மனதால்'' இளைஞர்களின் மனதை துடிக்க வைக்கிறாள், இருப்பினும் அவள் மிகப்பெரிய நடிகையென அவளுக்கு அவார்டும் பேரும் புகழும் கிடைக்கிறது இதை தக்க வைத்துக் கொள்ள அவள் தனிமையில் நடித்துப் பார்க்கிறாள் இதுதான் கதை. மற்றபடி எனக்கும் நடிகை கனிகாஸ்ரீக்கும் தொடர்பு கிடையாது என்பது எனது மனைவி பூங்கோ(ந்)தைக்கும் தெரியும்.

கலையை வளர்பதற்கே நான் கலைத்துறைக்கு வந்தேன் எனநடிகை கலையரசி சொன்னது குறித்து..... ?
ஒருவேளை அப்பொழுதான் தனக்கும் ரசிகர்கள் சிலை வைப்பார்கள் என்ற எண்ணமாக இருக்கலாம்.

சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை எனசொல்வது ஏன் ?
சாதாரண குடிமகன் கனவில்கூட காண முடியாததெல்லாம் நனவாக்கி கொள்ளலாம் என்பதால்.

சமீப காலமாக உங்களுடைய எழுத்துக்கள் இன்றைய இளைஞர்களை புரட்சியில் கொண்டு போய் விடுமென குற்றம் சாட்டுகிறார்களே இது உண்மையா ?
என்னுடைய குறிக்கோளே அதுதான் வாழ்ந்து முடிந்த பெரியவர்களையும், சீரியல்களில் மூழ்கி கிடக்கும் பெண்களையும் கள்ளம் கபடமற்ற குழந்தைகளையும் வைத்து இந்த நாட்டை ஆளமுடியாது.

இன்றைய இளைஞர்கள் நடிகைகளுக்கு கோயில் கட்டுகிறார்களே... இவர்களால் நாட்டை ஆள்வது....... எப்படி ?
அது தரங்கெட்ட குடும்பத்தில் தகாத முறைகளால் பெறப்பட்ட, பெற்ற விபரமறியா விட்டில் பூச்சிகளின் வேலை அவர்களை தவிர்த்துப் பார்த்தால் ஆயிரமாயிரம் வைரங்கள் இந்தியாவில் உண்டு அந்த வைரங்களுக்கு நம்மைப் போன்ற சிற்பிகள் பட்டை தீட்டினால் ஜொலிப்பது அவர்கள் மட்டுமல்ல உலகளவில் நமது இந்தியாவும் கூட.

இது முடியும் என நம்புகிறீர்களா ?
முடியும்மென மனிதன் நினைத்ததால்தான் விஞ்ஞானம் வளச்சி அடைந்து என்முன் வயர் இல்லாத மைக்கில் நமது வார்த்தைகளை பதிவு செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

இது உடனே நடக்க கூடிய காரியமா ?
உடன் நடக்காது இருப்பினும் நாம் துவங்கி வைப்பது நமது கடமை காரணம் நாளைய நமது சந்ததிகளுக்காக எப்பொழுதுமே மரம் நட்டவன் கனியை சுவைப்பதில்லை எதற்கும் ஒருகால அவகாசம் வேண்டும்.

எத்தனையோ தலைவர்கள் முயன்றும் முடியாதபோது உங்களால்......
சில முட்டுக்கட்டைகளை உடனுக்குடன் களைந்தால் மட்டுமே நாம் அடுத்தகட்ட செயல்களில் இறங்கி வெற்றி காணமுடியும்.

அந்த முட்டுக்கட்டைகள் யார் ? அரசியல்வாதிகளா ?
இல்லை இந்த இடத்திலேயே அவநம்பிக்கைகளை வளர்த்து அடுத்த செயல்களுக்கு போகவிடாமல் நேரவிரயம் செய்யும் உங்களைப் போன்ற அதிகப் பிரசங்கிகளை.

ஐயா கேள்வி கேட்பது எங்களது கடமை இல்லையா ?
நாளை இந்தியா வளர்ந்தால் பலன் எனக்கும் எனது சந்ததிகளுக்கும் மட்டுமல்ல உமக்கும் உமது சந்ததிகளுக்கும் சேர்த்துதான் என்பதை நினைவில் கொள்ளாமல் வேற்று நாட்டவன் போல் கேள்விகணை தொடுப்பதா கடமை ?

மன்னிக்கவும் கடமை கண்ணியம் கட்டுபாடு காத்து பொருமையாக பதில் சொல்கிறீர்களா ? என்பதற்காகத்தான் எங்களது APPLE TV சார்பாக கேட்கப்பட்டது எனது சார்பாக அல்ல APPLE TV சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி.
நல்லது தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !

கில்லர்ஜி தேவகோட்டை

வியாழன், மார்ச் 03, 2016

கள்ளக்குறிச்சி, கல்யாணராமன் Weds கல்யாணி

இந்த டிக்கெட் எடுத்த எனது முயற்சி கொஞ்சம் கஷ்டமானது தேதியையும், நேரத்தையும் பாருங்கள்.

இன்றைக்கு தேதி11மாதம்12 வருஷம் 13 மணி 14 நிமிஷம் 15 நொடி16 இது நல்லாயிருக்கு அதனால இந்த சமயத்துல தாலி கட்டி கல்யாணம் செய்து கொள்ளலாம் என நானும் கல்யாணியும் முடிவெடுத்தோம் ஆனால் வீட்டில் எதற்கு எடுத்தாலும் பஞ்சாங்கம் பார்ப்பார்கள் ஆச்சாரமானவர்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் முக்கியமான காரணம் அவள் மள்ளாங்கி ஜாதியைச் சேர்ந்தவள் நாங்கள் ஊடகழி ஜாதி, அதனால் வீட்டிக்கு தெரியாமல் கோவிலில் வைத்து முடித்துக் கொள்ளலாம் எனமுடிவு செய்து விட்டோம் அதன்படி மலையில் அமைந்திருக்கும் தேவகோட்டை தேவையறிந்த தேவதையம்மன் கோவிலில் நண்பர்கள் ஜமாலுதீன், ஆல்பர்ட் துணையோடு தாலி கட்டுவதாக முடிவெடுத்தோம் அவர்கள் தான் இதற்கு சரியானவர்கள் ஜமால்கூட கேட்டான்..
ஏன்டா கல்யாணராமா அந்த நேரத்துல கோவில்ல நடை சாத்தி விடுவாங்களாமே ஐயர் கூட இருக்க மாட்டாராமே ?
அதனால என்னடா ஐயரா தாலி கட்டப்போறாரு நான்தானே தாலி கட்டபோறேன் நீ கல்யாணியை கூட்டிக்கிட்டு சரியான நேரத்துக்கு கோவிலுக்கு வந்துரு.. நானும் ஆல்பர்ட்டும் சாமான்களை வாங்கிட்டு ஒரு மணிக்கெல்லாம் கோவிலுக்கு வந்துடுவோம்.
ஏற்கனவே BOOKING செய்து வைத்த LODGEல் போய் பட்டு வேஷ்டியை உடுத்திக்கொண்டு சாமான்களை வாங்கி கொண்டு கோவிலை நோக்கி வந்தார்கள் CARரை கல்யாணராமன் தான் ஓட்டி வந்தான் சொன்னபடியே ஒரு மணிக்கு வந்து விட்டார்கள் மலையில் கொஞ்ச தூரம் சென்ற பிறகுதான் கல்யாணராமனுக்கு ஞாபகம் வந்தது..
டேய் ஆல்பர்ட் CARக்கு PARKING TICKET வைக்க மறந்துட்டேன் நீ சாமான்களை கொண்டுபோ POLICE வந்தா FINE எழுதிடுவான் இப்ப வந்துடுறேன் நமக்கு நேரம் இருக்கு.
அவனை அனுப்பி விட்டு கீழே வந்து TICKET எடுத்து CAR-ரில் வைத்து பூட்டி விட்டு வேகமாய் வந்தான், மலைஏற குனிந்து படியைத் தொட்டு வணங்கும்போது... நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்...
ஆத்தா நீ தான் அவனைக் கேக்கணும் தாயே....
என ஓங்காரமிட்டு தேங்காயை உடைத்தார்.. உடைந்த தேங்காயின் பகுதி குனிந்த கல்யாணராமனின் கண்ணில் அடித்துக் கிழிக்க...
''அம்மா''
எனஅலறி மயங்கி கீழே விழுந்தான்... யாரோ ஒருவர் 108டை அழைத்து AMBULANCEக்கு விபரம் சொல்லிக் கொண்டிருக்க... மலையின் மேலே கல்யாணி.
ஆத்தா தாயே இந்த கல்யாணத்தை நீ தான் நல்லபடியா நடத்தி வைக்கணும் உனக்கு108 தேங்காய் உடைக்கிறேன்.
என மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்... எதுவுமே தெரியாமல் மாலைகளை தூக்கி கொண்டு மலை ஏறிக் கொண்டிருந்தான் ஆல்பர்ட்.
 காணொளி

செவ்வாய், மார்ச் 01, 2016

Weekly Book


அண்ணே... ஆண்மீகத்துல ஈடுபட்டா ஆண்மீகவாதினு சொல்றாங்க சரி அப்படீனா பெண்மீகத்துல ஈடுபட்டா ஏன் பெண்பித்தன்னு சொல்றாங் ?
அடமூதேவி K-9 கிட்டே கேட்கிற கேள்வி எல்லாம் எங்கிட்டே கேட்கிறியடா... அது ஆண்மீகம் இல்லை ஆன்மீகம். அடுத்தது பெண் மீகம் இல்லை பெண் மோகம்.

ஆண்மீகம் புக் படிச்சேன் அதான் சந்தேகம் கேட்டேன்.
நீ முதல்ல ஒழுங்கா... பாடத்தை படி.

அண்ணே நடிகை நளினா போனவருஷம் 17 வது பிறந்தாள் கொண்டாடுனாங்க அப்படீனா... இந்த வருஷம் 18 தானே அப்பயேன் 17 வது பிறந்தநாள்னு கொண்டாடுறாங்க ?
அவங்க படிக்கும்போதே... கணக்குல வீக்காம்.

யேண்ணே உலக அழகி கிளியோ பாரட் அவுங்க இங்கிலீஷ்காரங்களா ? தமிழ்க்காரங்களா ரெண்டு மொழியையும் சேர்த்து பெயர் வச்சு இருக்காங்களே ?
அடமுண்டமே அவுங்க பேரு கிளியோ பாரட் இல்லை கிளியோ பாட்ரா.

அப்படியா நான் தமிழ்ல வீக்ல அதான்...
நீதான் வீக்லீ புக் படிக்கிறதுலகூட வீக்தானே...

அவுங்க சகோதரனை கல்யாணம் செய்து கிட்டாங்களாமே... ஏன் அந்த நாட்டுல வேறஆள் கிடைக்கலையா ?
ஆமா அதுக்கு சானியா மிர்ஷா எவ்வளவோ... தேவலை.

அப்படீனா அவங்களுக்கு பிறந்த குழந்தை அவுங்க அம்மாவை அம்மாயினு கூப்பிட்டுச்சா ? இல்லை அப்பத்தானு கூப்பிட்டுச்சா ?
வரலாறுல வராத கேள்வியெல்லாம் கேட்கிறியடா நான் எங்கேடா போவேன் நீ வரலாறுலயும் வீக்கா ?

யேண்ணே அறிவு வளரணும்னா அறிவியல் படிச்சா போதும்னு சொல்றாங்களே... உண்மையா ?
அய்யோ... அறிவுக்கொழுந்து அதுக்கு நிறைய படிப்பெல்லாம் இருக்கு இங்கிலீஷ் படிக்கணும்.

அதுக்கு ஜாக்கிஷான் சினிமா பார்த்தால் போதாதா ?
இப்படியே பார்த்தால் நீ இங்கிலீஷ் படம் டைரக்ட் பண்ணலாம்.

அப்படீனா புவியியல் எதுக்கு படிக்கிறாங்க ?
எனக்கு பூமி சுத்துடா... ஆளை விடுடா சாமி.