அபுதாபி
முஷபாவில் ஒரு நாள், சிவமணியும், ஹனீபாவும் அறுக்கும்போது...
ஏத்தா அரபிக்காரன் கம்பு லூஸ் ன்னு சொல்றானே என்னத்தா அர்த்தம் ?
ஏப்பு இப்படி அட்டுப் புடிச்ச மாதிரி கேக்கிறிய ?
ஏத்தா இது கூடவா தெரியலே ?
அப்படின்னா இன்னா அர்த்தம் ?
கம்புலூஸுன்னா... எத்தனை ரூபான்னு
அர்த்தமுத்தா.
அது,
கம் புலூஸ் சுல.
அதத்தானத்தா நானும் சொன்னேன்.
ஏப்பு இப்படி உயிர எடுக்கிறிய…
ஏத்தா அரபிக்காரன் ஸூத்தாநீ கேட்டா,
என்னத்தா சொல்விய ?
ங்கொய்யால, கம்பெடுத்து விளாசிப்புட மாட்டோம்.
அதுக்கு ஏத்தா கம்பெடுக்கிறிய ஸூத்தானி ன்னு
கேட்டா... மாபி தானி ன்னு சொல்ல வேண்டியதானே !
மொதல்ல என்ன கேட்டீங்க ?
வேற இருக்கான்னு கேக்றான் இல்லேன்னு, சொல்ல வேண்டியதானே !
அது ஸ்ஸூ தானி ல.
எல்லாம் ஒரு எலவுதான்த்தா.
ஙொக்கால் நம்மல்ட்ட கேட்ருவானா அப்படி முட்டித்
தூக்கிடுவோமுல..
பாத்துத்தா கொம்பு ஒடிஞ்சிரப் போகுது.
ஒடிஞ்சாலும் முட்டுவோமுள்ள !
ஏத்தா அரபிக்காரன் ரோத்தால்ன்னு, சொல்றானே
என்னத்தா ?
ஏப்பு இப்படி மெட்ராஸ்காரன் மாதிரி பேசிறிய !
அப்படின்னா போ, வா, ன்னு அர்த்தமுத்தா...
சரிப்பு அரபியில போ அப்படின்னு, சொல்றதுக்கு ரோ ன்னு சொல்றாங்கள்ல அப்படின்னா, போடா ன்னு
எப்படி சொல்றது ?
ரோடான்னு சொல்ல வேண்டியதான்.
நம்மள ஒரு நாளைக்கு துபாய்க்கு கூட்டிட்டு போயி சுத்திகாமிங்கப்பு.
பெஸ்டிவெல் வரட்டும்த்தா, கண்டிப்பா போவோம்.
அப்ப இன்ன இருக்கு ?
அப்பத்தானே ராட்டணம்மெல்லாம் இருக்கும்.
ஏறி சுத்தலாம் காலத்துக்கும் இப்படி செண்பகநாதன் மாதிரிதானத்தா இருக்கீங்க.
நாங்கல்லாம் மோசமான ஆளுப்பு.
நீங்க மோசமா இருந்தாலும், நாசமா போனாலும் காசா அப்புக்கு என்னா ?
ஏப்பு பேசிக்கிட்டு இருக்கும் போது என்னை இழுக்கிறீங்க ?
நீங்க இப்படி நினைக்கிறீங்க, உங்களைப்பத்தி
இவரு என்ன சொன்னாரு தெரியுமா ?
என்னப்பு சொன்னாரு ?
அதை வாயால சொல்ல முடியாதுப்பு,
அப்ப,.... என்னையா கரண்டு போச்சு ?
அவருதான் சொன்னாருல வாயால சொல்ல முடியாதுன்னு,
விட்டுத் தொலைக்க வேண்டியதானே அவரு எப்பவுமே ENTRANCEல வச்சு இருப்பாரு இப்ப பாரு இழுத்த, இழுல கரண்டே போச்சு.
செம...!
பதிலளிநீக்குஇந்தவிசயங்களில்.... பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே எல்லாம் புரியும்.
நீக்குபடித்தமைக்கு, நன்றி.
this is very semma Ragallai
பதிலளிநீக்கு