இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 28, 2014

பாம்பனிலிருந்து.... பாம்பாட்டி


மனிதர்கள் செய்யும் தவறுகள், மதம் சொன்னது எனச்சொல்வது, உண்மைதானா

மதம் எப்படி தவறு செய்யச் சொல்லும் ? 

அப்படிச் சொன்னால் அது மதம்தானா ? எனமனிதன் ஏன், சிந்தித்துப் பார்க்க மறுக்கிறான் ? அதேநேரம் எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கிறது அதை அவன் செய்வதில்லை, காரணம் நடைமுறை வாழ்வுக்கு அது, பாதகமாக இருப்பதாக கருதுகிறான்.

தனக்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றுவதை 

அவன் நடைமுறைப்படுத்த முனைகிறான், மதத்தில் தவறில்லை மனிதா, நீ புரிந்து கொண்ட விதத்தில்தான் தவறு. ஆம் மனிதா

இறுக்கம் கொண்டமனம் இரக்கம் கொள்ளாது 

ஆகவே மனதை மென்மையாக்க முயற்சி செய். 
மானிடா மதம் உன்னைப் பிடித்தாலும் சரி, உனக்கு மதம் பிடித்தாலும் சரி, அழிவு மனிதனுக்கே ! மதத்திற்கு அல்ல !
(You have Brain too much, because just think after you decide) 
ஆகவே, எது சரியென யோசி, 
(but one thing only you, don't include others) 
பிறகு நீ தானாகவே மனிதனை நேசிப்பாய். 

வாழும் காலம் என்பது, ராமேஸ்வரத்திலிருந்து... தனுஷ்கோடி போய் மீன் பிடிப்பது போன்றது, போகும் தூரம் என்பது, ராமேஸ்வரத்திலிருந்து... கச்சத்தீவு போய் மீன் பிடிப்பது போன்றது.

மதம். யானைக்கு, பிடித்தால் காடு அழியும்.
மனிதனுக்கு, பிடித்தால் நாடு அழியும்.

காடு அழிந்தால் மனித உயிருக்கு பாதிப்பில்லை, நாடு அழிந்தால் மனித உயிரும் அழிந்து, நாடே காடாகும் நமது முன்னோர்கள் விஞ்ஞானம் வளராத அந்தக் காலத்தில் நமக்காக காட்டை அழித்து நாட்டை உருவாக்கினார்கள், இன்று விஞ்ஞானம் அபார வளர்ச்சி என, பீற்றிக்கொள்ளும் மானிடா, நாட்டை மீண்டும் காடாக்க வேண்டுமா ? எதைச் சாதிக்க நினைக்கிறாய் ? எதை எடுத்துப் போக நினைக்கிறாய் ? இந்த நிமிடம் நீ மரணித்தால் ? போன நிமிடம் வரை நீ உண்டதுதான் நீ எடுத்து போக முடிந்தது ''எடுப்புச்சாப்பாடு'' எனச் சொல்வார்களே ! அதைத் தவிர வேறொன்றும் இல்லை.

காணொளி

36 கருத்துகள்:

  1. மனிதர்களிலே இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்ஜீ. நல்வர்களினால் உலகம் நிலைப்பதாக சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 100 க்கு 100 உண்மையே நண்பா,,, இதற்க்குள் நாம 2 பேரும் இருக்கிறோமா ?

      நீக்கு
    2. கண்டிப்பாக வலிப்போக்கன் இருக்கிறார். ஆனால் தாங்கள்.............................................................................................?
      (சும்மா ....)

      நீக்கு
    3. என்னை கூட்டிக்கொண்டு போறதே நீங்கதானே... தெரியலையா ?

      நீக்கு
  2. இறுக்கம் கொண்ட மனம் இரக்கம் கொள்ளாது!..

    - வைர வரிகள்.. வாழ்வியலின் நுட்பம்.

    தொடரட்டும் நற்சிந்தனை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்திற்க்கும் நன்றிகள் கோடி ஐயா.

      நீக்கு
  3. மதம்

    மனிதன் மதத்தைப் பின்பற்றினால் மகிழலாம்
    மதம் பின்பற்றினால் அழியலாம்.

    நன்றி சகோதரரே.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு! வந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறி விட்டான்....பாடல் நினைவுக்கு வந்தது.! மனிதன் பேராசை பிடித்தவன். இங்கிருந்து எல்லாவற்றையும் ஏதோ அவனது சொத்து போல...அள்ளித் தனதாக்கிக் கொள்ளத்தான் பார்க்கின்றான் இன்றிருக்கும் வீடும் நாளை யாருடையதோ என்ற எண்ணம் கூட இல்லாமல்.....ஏதோ எல்லாமே அவனது என்ற நினைப்பில்..எல்லாவற்றையும் ஆளவும் நினைக்கின்றான்...அதனால்தான் அழிவையும் நோக்கி வெகு சீக்கிரமாகப் பயணிக்கவும் செய்கின்றான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, தங்களை போன்றவர்களின் நீண்ட கருத்துரைதான் என்னை அருமையான பதிவுகளை எழுத தூண்டுகிறது நன்றி.

      நீக்கு
  5. தன் சுயநலத்திற்காக மனிதன் மதங்களையும் ,கடவுள்களையும் பயன்படுத்திக் கொள்கிறான் ..இங்கே மதுரையில் வஞ்சகம் இல்லாமல் லஞ்சம் வாங்கும் ஒரு பத்திரப் பதிவு அதிகாரி , மாடியில் இருந்து தூரத்தில் திருப்பரங்குன்றம் முருகனை வணங்கிய பின்புதான் ஆபீஸில் நுழைவார் .இவர்களுக்கு எல்லாம் எதற்கு கடவுள் ,விபூதிப் பட்டை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கேள்வி நியாயமானதே பகவான்ஜி.

      நீக்கு
  6. யானைக்கு பிடித்தால் காடு அழியும்
    மனிதனுக்கு பிடித்தால் நாடு அழியும்.

    மதத்தைப்பற்றி நன்றாகச் சொன்னீர்கள் சகோதரரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் நன்றி சகோதரி.

      நீக்கு
  7. நெத்தியடி பதிவு ! உண்மை ! மதங்கள் பொய் சொல்வதில்லை ! பொய் சொல்வதெல்லாம் மதத்தை தங்களின் பிழைப்பாக அமைத்துகொண்ட மதகுருமார்கள்தான் ! இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துரையின் கடைசிவரிகள் பிடறியடி.

      நீக்கு
  8. மதம் - யானையையும், மனிதனையும் கொண்டு ஒப்பிட்டு சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமான வருகைக்கு கொஞ்சூண்டு நன்றி.

      நீக்கு
  9. ஏன் ??????? என்னாச்சு???? ஒரு காமெடி !! ஒரு காட்டமான பதிவு என்ற முடிவோ?? மதம் -விளக்கம் - அருமை ண்ணா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் காமெடி வேணுமா ? தங்களுக்காக.... அடுத்து ''சுட்டபழம்''

      நீக்கு
  10. மிக அருமையான சிந்தனைகள்! சிறந்த பகிர்வு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைவிடவா ? நான் ஐயர் பாஷையில் இரண்டு வார்த்தை கேட்டேன் உடன் அக்ரஹாரம் கதையை விட்டு விட்டீர்கள் அருமை நண்பரே... நன்றி.

      நீக்கு
  11. மதம் சொன்னதாக - சிலர்
    சொல்கிறார்கள்...
    சொய்கிறார்கள்...
    ஆனால்,
    மதம் சொன்னதாக
    இதுவரை
    எனக்குத் தகவல் கிட்டவில்லை.

    பதிலளிநீக்கு
  12. அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நண்பரே... நன்றி.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் பதிவுகள் இன்னம் படிக்க ஆர்வம் ஏற்படுத்தியது..அந்த பாம்பு வீடியோ எனக்குப் புரியலைங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவுக்கும், கருத்துரைக்கும், இணைப்பில் வந்ததற்க்கும் முதற்கண் நன்றி தங்களின் ஆர்வத்தை நிச்சயமாக பூர்த்தி செய்வேன்...
      இந்தபதிவர் பாம்பனிலிருந்து ஊதுகின்றான் என நினைக்கலாமே பாடல் வரிகளை கேட்டீர்களா ?

      நீக்கு
  14. மதம் இன்று பாதை மாறிப் பயணிக்கிறது

    பதிலளிநீக்கு
  15. பாதை மாறிப்போகும் போது ஊரும் வந்து சேராது....

    பதிலளிநீக்கு
  16. மதம் தவறாக பயன்படுத்தப்படும் பொழுது நாடு அழிவது உறுதி. மதம் மக்களை நல் வழிப்படுத்த என்பதை பல பேர் புரிந்துகொள்வதில்லை எனபது வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், இணைந்து கொண்டமைக்கும், ஒரு கும்பிடு Mr. கும்மாச்சி.

      நீக்கு
  17. மதத்தின் பெயரொடு மண்ணிலே மீறல்!
    வதத்தில் முடியும் வளர்ந்து!

    மதம் பற்றி நல்ல ஒப்பீட்டுப் பதிவு.
    எல்லாம் எல்லை மீறினால் நாசம்தான்.

    அருமை சகோதரரே!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. Kindly add - Feedburner Widget - in your blog, enabling to enter Email id.
    My email id: rathnavel.natarajan@gmail.com
    Thank You.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Feed Burner Widget இணைத்து விட்டேன், வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  19. வணக்கம்
    அண்ணா.
    மனதில் உதித்த வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுத்து. படிப்பவர்கள் மனதில் ஒரு தெளிவை உண்டுபன்னிட்டிங்கள்... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி ரூபன்.

      நீக்கு