இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 20, 2014

திருவாடானை, திருடன் திருமால்


திருமால், திருடுவதில் ஒரு கைதேர்ந்த கலைஞன் வெகுநாளாக கண்காணித்திருந்து ஒருநாள் சிலம்பனி சன்னதி தெருவில் உள்ள அந்த பங்களாவில் வீட்டில் உள்ளவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போயிருக்க இதுதான் கோவிந்தா போட Sorry கொள்ளையடிக்க, சரியான தருணம் எனமுடிவு செய்தான், இரவு ஒருமணி நைசாக பங்களா கேட்டருகே போய், உட்கார்ந்திருந்த வாட்சுமேனிடம்
அண்ணே தீப்பெட்டி கொடுங்க 
என கேட்டுக் கொண்டே.. குளோராஃபாம் அடித்து வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து வாட்சுமேன் முகத்தில் அழுத்தவும் வாட்சுமேன் உட்கார்ந்த நிலையிலேயே மயக்கமானான்.

எப்படியும் ஐந்துமணி நேரமாகும் மயக்கம் தெளிய.. அதற்குள் வேலையை முடித்து விடலாம், பாக்கெட்டுக்குள் கையை விட்டு சாவியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான், இருட்டில் கையில் கத்தியை ஏந்திக் கொண்டு நேராக மாடிக்கு போய் தனது, சாவிக் கொத்திலிருந்து ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தான் மூன்றாவது அறையில் சுவற்றுடன் பதித்திருந்த பீரோவை திறக்க, கட்டுகட்டாய்.... பணமும் நகைகளும், சிறுசிறு வெள்ளிச்சிலைகளும் இருந்தது, ஒவ்வொன்றையும் பக்குவமாக எடுத்து மூட்டையில் கட்டினான் இரண்டு மணி நேரத்தில் எல்லா வேலையும் முடிந்து விட்டது.

கீழே வந்தான் கிச்சனை பார்க்கவும் பசிப்பதுபோல் இருந்தது உள்ளே போய் என்ன இருக்கிறது எனபார்த்தான், ஹாட்பாக்ஸில் சப்பாத்தியும், ஒரு பாத்திரத்தில் கோழி குருமாவும் இருந்தது, திருமாலுக்கு கோழி என்றால் பயங்கர இஷ்டம் மொத்தத்தையும் கொட்டி ஒரு பிடிபிடித்தான், முரட்டு ஏப்பம் வந்தது, இவனிடம் ஒரு கெட்டபழக்கம் சாப்பிட்டால் சிறிது நேரமாவது தூங்க வேண்டும், ஹாலுக்கு வந்தவன் வீட்டில்தான் யாரும் இல்லையே சோபாவைப் பார்த்ததும் A/cயை போட்டு விட்டு சாய்ந்தான். 

வாட்சுமேன் தோலைத்தட்டி உசுப்பிய, அடுத்த பங்களா வாட்சுமேன் 
என்ன.. இன்னும் தூங்குறே
கண் விழித்த, வாட்சுமேன் அட.. விடிந்து விட்டதே ! சட்டென இரவு நடந்தது ஞாபகம்வர விருட்டென கம்பை எடுத்துக் கொண்டு உள்ளே ஓட... கூடவே அடுத்த பங்களா வாட்சுமேனும்... ஹாலில் சோபாவில் சாய்ந்து கொண்டு ஒருவன் கிடக்க... பக்கத்தில் மூட்டை ஒன்று கிடக்க... 

தோல்பட்டையில் கம்பு அழுத்துவது போல் உணர்ந்த திருமால் திருதிருவென முழித்துப் பார்க்க எதிரே இரண்டுபேர் அதிலொருவன் கம்பை உயர்த்தி நடு மண்டையில் ஒரு போடு போட்டான், மண்டை பிளந்து மீண்டும் மயக்கமாய் சாய்ந்தான்.

நடு மண்டையில் ஒரு போடுபோட்ட வாட்சுமேன் டெலிபோனில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விபரம் சொல்லிக் கொண்டிருக்க... அடுத்த பங்களா வாட்சுமேன் கையில் கயிறுடன் ஓடிவந்து கொண்டிருக்க... கூடவே அடுத்தடுத்த பங்களாக்காரர்களும் வந்து கொண்டிருக்க... ஹாலில் A/c உர்ர்ர்ர்ரயென உருமிக் கொண்டிருந்தது....

சாம்பசிவம்-
திருப்பதி 7 மலையான் எல்லாத்தையும் காப்பாத்திட்டாரே....

CHIVAS REGAL சிவசம்போ-
திருமலையில உள்ளவரு, திருமாலை மாட்டி விட்டுட்டாரே...

KILLERGEE-
நல்லவன் வாழ்ந்து சாவதும், கெட்டவன் செத்துச்செத்து வாழ்வதும்தான் இறைநியதி.

Video
(Please ask Audio Voice)
By
KILLERGEE
From Devakottai (INDIA)

Happy Diwali

புதன், அக்டோபர் 15, 2014

சிவப்பு மனசு.

أنا قـلــبـي أبــيـض
 
சிலபேர், பேசும்போது கேட்டிருப்பீர்கள், ''எனக்கு வெள்ளை மனசு'' என்று சொல்வார்கள், மனசு என்றால் இதயம். அது எப்படி வெள்ளையாக இருக்கமுடியும் ? என்னிடம் The GREAT இந்தியர்கள், பாக்கிஸ்தானியர்கள், மட்டுமல்ல, அரேபியர்கள், எஜிப்தியர்கள், பாலஸ்தீனியர்கள், சூடானியர்கள், ஜோர்டானியர்கள், ஈராணியர்கள், ஒமானியர்கள், எமனியர்கள் கூட சொல்லியிருக்கிறார்கள், அனா கஃல்பி அபியத் என்று, நான் பலமுறை வாதாடியிருக்கிறேன், அது எப்படி வெள்ளையாக இருக்கமுடியும் ? ஒன்று கருப்பாக இருக்கவேண்டும் அல்லது சிவப்பாக இருக்கவேண்டும், அதற்க்கு அவர்கள் சொன்னது, ''உன்னைப்போல் உள்ளவர்களுக்கு கருப்பாகத்தான் இருக்கும்'' என, நான் ஒத்துக்கொள்கிறேன் எனது இதயம் உள்ளே கறுப்பு, வெளியே சிவப்பு. அது எப்படி சிவப்பாக இருக்கும் ? எனது இதயத்தை உள்ளே பார்த்தால் இருட்டில் கருப்பாக இருக்கும், அதே இதயத்தை அறுத்து வெளியே எடுத்துப்பார்த்தால் ரத்தச்சகதியாக சிவப்பாக இருக்கும். எனக்கு மட்டுமல்ல, ''மச்சான் மச்சக்காளை''க்கு மட்டுமல்ல, ''அத்தான் சங்கிலி''க்கு மட்டுல்ல, ''கொளுந்தியாள் கோகிலா''வுக்கு மட்டுல்ல, ''மைத்துனி மைதிலி''க்கு மட்டுமல்ல, ''மைத்துனர் மைனர் குஞ்சு''க்கு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து மதமானிடனுக்கும் மட்டுமல்ல, மதப்பிரிவினை இல்லாத, (மதத்திற்க்குள் கட்டுப்பட்ட) காட்டுவாசி மானிடனுக்கும் கூட இதே நிலைதான்.
 
சாம்பசிவம்-
ஆனா, ''ல்பு '' இருட்டுக்குள்ளே பார்க்கும்போது ''அபியத்''தா, தெரியுதே..
 CHIVAS REGAL சிவசம்போ-
இதையே நாம சொன்னா, கிருதுகாலம் புடிச்சவன்னு சொல்வாங்கே.... குவாட்டருக்கு ஒருரேட்டு, ஃபுல்லுக்கு ஒருரேட்டுன்னுங்கிறது மாதிரி ஜாதிக்கொரு நீதி.


வெள்ளி, அக்டோபர் 10, 2014

Swiss Part – 2


எனது இந்திய மொழியில், स्वागतम् (ஸுவாகதம்) என்று எழுதி வைத்திருக்கும் வரவேற்பு பலகை

SWISS FRANCS

பேருந்து பயணச்சீட்டு.



இவன் பச்சை தமிழன் அல்ல !

ஸ்விஸ் வங்கிகளில் ஒன்று 



தத்தளிக்கும், படகு.
தெருக்களில் செல்லும் பேருந்துகளுக்கான மின்சாரக்கம்பிகள். 

நமது இந்திய மொழியில், अलपिदा (அல்பிதா) என்று எழுதி வைத்து விடை கொடுக்கும் பலகை

நன்றி, மீண்டும் போவேன்.

முன்பதிப்பு  காண கீழே சொடுக்கவும்.
காணொளி காண்க.

டைட்டில் ஸாங் பாடிய ஐயா திரு. எம்மெஸ்வி அவர்களுக்கு நன்றி.
சரி அடுத்து ஜெர்மனி போவோமா ?

(நமது இனிய இந்தியா, தி கிரேட் தேவகோட்டையிலிருந்து வெளியிடுகிறேன்)
F.P- 23 Jul 2013

ஞாயிறு, அக்டோபர் 05, 2014

நெஞ்சு பொறுக்குதில்லையே...

இந்த திரைப்படம் எடுக்கும் கூத்தாடிக் கூட்டமே... உங்கெளுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா ? சமூகத்தை 90% சீரழித்தாலும் 10% மாவது அரசியல்வாதிகளின் கோல்மால்களை, மொள்ளமாறித்தனத்தை, முடிச்சவித்த வித்தையை, கடைக்கோடியிலிருக்கும் பாமரனுக்கும் புரியும்படி திரைப்படம் எடுத்து தெளிய வைத்தது யாரு ? கீதையில சொன்ன தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் ஏன்டா ? நாசமாப் போறவங்களா ? இந்த வசனத்தை ஏன்டா ? நீங்களெல்லாம் சொல்றீங்க ? உங்களோட சுயபோதைக்கு பாதைமாற்றி உபயோகப் படுத்துறீங்களேடா, அரசியல் தொண்டனாவது படிக்காதவன் முட்டாள்த்தனமா, நமது பணம் என்பது தெரியாமல் வாயில்லா ஜீவன் பேரூந்து நம்மளை சுமந்துகிட்டு போகும் அதை தீ வைக்கின்றான், நீங்க கல்லூரியில படிச்சுட்டுதானேடா வர்றீங்க நாட்டைத் திருத்தப்போறோனு... சொல்லிக்கிட்டு நீங்களெல்லாம் அந்த அரசியல்வாதிகளைவிட மோசமாப் போயிட்டீங்களடா உங்களைச் சொல்லி குற்றமில்லைடா இன்னும் உங்களை நம்பிக்கிட்டு கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யிறானே முட்டாப்பயல்கள் அவங்கே இருக்கும்வரை நீங்க, ஆடுவீங்கடா... ஆடுங்கடா... இது உங்களோட ஆடுகளம் ஆடவிட்டது ஆட்டு மந்தை கூட்டம் திரைப்படம் ஆரம்பிக்கும்போது பகவானை காண்பித்து புஷ்பாபிஷேகம் செய்து காண்பிக்கின்றீர்களே... ஏன்டா ? பேதியிலே பெரண்டு போயிறுவியலா, உங்களுக்கு இறைநம்பிக்கை இருக்கிறதாடா ? இல்லை உங்களை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக... செய்கிறீங்களாடா ? திரைப்படத்தில யோக்கியன் யோகமூர்த்தி மாதிரி நடிக்கிறீங்களேடா, நிஜ வாழ்க்கையில ஃபிராடு பிச்சைமுத்து மாதிரி இருக்கியலடா, உண்ணாவிரதம்னு சொல்லிக்கிட்டு நீங்க பேசுறதையெல்லாம் காது கொடுத்து கேட்க முடியலையடா, உங்களுக்காகத்தானேடா, செல்லம்மா புருஷன் அன்றே எழுதினான் கவி.
நெஞ்சு பொறுக்குதிலையே...
நெஞ்சு பொறுக்குதிலையே...
இந்த நிலைகெட்ட மனிதரை
நினைந்து விட்டால்....
நெஞ்சு பொறுக்குதிலையே...
நெஞ்சு பொறுக்குதிலையே...
அந்தக் கவிஞனைப்பற்றி... திரைப்படம் எடுக்கவோ, அவனது கவியைப்பற்றி பாடவோ, உங்களுக்கு தகுதியுண்டாடா ? தன்னலம் மட்டும் கருதும் துரோகிகளே... நீங்களெல்லாம் பேசுறதை எனது கணினியில கேட்டுக்கொண்டு இருக்கும்போது... பக்கத்துல இருந்தவன் பொருக்க முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு மண்ணை அள்ளி தூவிட்டுப் போயிட்டானேடா.. எனது கணினி இப்போ, மணினியாகிப் மண்ணாப்போச்சேடா மண்ணாப் போறவங்களே... உங்களை மரியாதை குறைவா பேசலைடா, மனசு பொருக்க முடியலைடா ஏன்னா ? நான் மனிதநேயம் உள்ள, மதவாதமற்ற தமிழன்டா... எனக்கு கணினி இப்போ நீங்களாடா வாங்கிக் கொடுப்பீங்க ? இல்லை பரிதாபப்பட்டு இந்தப் பாமரனுக்கு நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள் தான் வாங்கி கொடுக்கப்போறாரா ?


Video
(Please ask Audio Voice)


வியாழன், அக்டோபர் 02, 2014

என்உயிர்த்தோழி.

என்வாழ்நாள், வரை என்னுடன் எங்கும் வருபவள், நான் சோர்ந்து போனாலும் என்னுடன் சேர்ந்து வரவிருப்பவள், நான் சந்தோஷமானாலும் என்னுடன், நான் கவலையடைந்தாலும் என்னுடன், நான் ஆடிப்பாடினாலும் என்னுடன், நான் ஓடிப்போனாலும் என்னுடன், நான் தேவகோட்டையிலிருந்து... தேவிபட்டணம் போனேன் அவளும் என்னுடன், காரைக்குடியிலிருந்து... காரைக்கால் வந்தேன் அவளும் என்னுடன், கடலாடியிலிருந்து... கடலூர் போனேன் அவளும் என்னுடன், பாம்பனிலிருந்து... பாம்பே போனேன் அவளும் என்னுடன், ஒருமுறை போரூரிலிருந்து... போர்பந்தர் போனேன் அவளும் என்னுடன், என்றால் பார்த்து கொள்ளுங்களேன் என்னை பிரியமாட்டாள், அவள் என்னைவிட்டு தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ், என்ன ஆவணி அவிட்டத்தன்று கூட அவள் என்னை பிரிந்ததில்லை, என்மரணகாலம் வரையிலும் இப்படியே இருப்பாளா ? என்னுள் சந்தேகம் காலமும் கடந்தது, என்மக்கள் திருமணமாகி என்னை விட்டு, AMERICA, GERMANY என போய்விட்டார்கள், எனினும் அவள் என்னைவிட்டு பிரியவில்லை, என்னுள் சந்தோஷம் இவள் மரணகாலம்வரை, கண்டிப்பாக வருவாள், என்னுள் நம்பிக்கை கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என, காலம் முடிவுக்கும் வந்தது ஒருநாள் இறந்தும் விட்டேன், என்னுள் அதிசயம் அட... உண்மைதான் இறந்தவர்கள் சொந்தபந்தங்கள் வந்து அழுவதை உணரமுடியும் ஆனால் பேசமுடியாதுயென சின்னவயதில் (1975) எனது ''அப்பத்தா கள்ளப்பிறாந்து'' சொன்னது ஞாபகம் வந்தது, சரிபோகட்டும் நம்ம விசயத்துக்கு வருவோம், என்னைக்குளிப்பாட்டி பாடையில் ஏற்றினார்கள் தாரைதம்பட்டை முழங்க, தெருவில் தூக்கிப்போனார்கள், என்னுள் கவலை ''மேற்படியாரை'' சந்திக்கப்போறோம் என்னுள் பயம் பெருங்கொண்ட அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், கிரிக்கெட்வீரர்கள், ஆஸ்ரம மடாதிபதிகள், டிவி சேனல்காரர்கள், பத்திரிக்கைகாரர்கள், பதவியிலுள்ள அதிகாரிகள், தொழிலதிபர்கள், இவங்கே யாரும் ஒருபயவரலை, சும்மா சொந்தக்காரங்க பத்துப்பேரு, நண்பருங்க நாலுபேரு மட்டும் வந்தாங்க... சுடு(ம்)காடும் வந்துவிட்டது என்னுள் ஆச்சர்யம் காரணம் அவளும் வந்தாள், அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே... என்கூடவே வந்த அவள்தான் என்உயிர்த்தோழியான, என் நிழல்பூச்சி.
 
சாம்பசிவம்-
தோழரே,  நீர் மறைந்து போனாலும் இணையதளத்தில் இணைந்திருப்பீராக ?
CHIVAS REGAL சிவசம்போ-(தனக்குள்)
அப்படீனா இந்தஆளு, செத்துப்போனாலும் WEBSITEல வருவானோ ?
Video
(Please ask Audio Voice)