திருமால்,
திருடுவதில் ஒரு கைதேர்ந்த கலைஞன் வெகுநாளாக கண்காணித்திருந்து ஒருநாள் சிலம்பனி
சன்னதி தெருவில் உள்ள அந்த பங்களாவில் வீட்டில் உள்ளவர்கள் திருப்பதி ஏழுமலையானை
தரிசிக்க போயிருக்க இதுதான் கோவிந்தா போட Sorry கொள்ளையடிக்க, சரியான தருணம் எனமுடிவு செய்தான், இரவு ஒருமணி நைசாக பங்களா
கேட்டருகே போய், உட்கார்ந்திருந்த வாட்சுமேனிடம்
அண்ணே தீப்பெட்டி கொடுங்க
என கேட்டுக் கொண்டே.. குளோரா
எப்படியும் ஐந்துமணி நேரமாகும்
மயக்கம் தெளிய.. அதற்குள் வேலையை முடித்து விடலாம், பாக்கெட்டுக்குள் கையை விட்டு
சாவியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான், இருட்டில் கையில் கத்தியை ஏந்திக் கொண்டு
நேராக மாடிக்கு போய் தனது, சாவிக் கொத்திலிருந்து ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தான்
மூன்றாவது அறையில் சுவற்றுடன் பதித்திருந்த பீரோவை திறக்க, கட்டுகட்டாய்....
பணமும் நகைகளும், சிறுசிறு வெள்ளிச்சிலைகளும் இருந்தது, ஒவ்வொன்றையும் பக்குவமாக
எடுத்து மூட்டையில் கட்டினான் இரண்டு மணி
நேரத்தில் எல்லா வேலையும் முடிந்து விட்டது.
கீழே வந்தான் கிச்சனை பார்க்கவும் பசிப்பதுபோல் இருந்தது உள்ளே போய் என்ன
இருக்கிறது எனபார்த்தான், ஹாட்பாக்ஸில் சப்பாத்தியும், ஒரு பாத்திரத்தில்
கோழி குருமாவும் இருந்தது, திருமாலுக்கு கோழி என்றால் பயங்கர இஷ்டம் மொத்தத்தையும்
கொட்டி ஒரு பிடிபிடித்தான், முரட்டு ஏப்பம் வந்தது, இவனிடம் ஒரு கெட்டபழக்கம்
சாப்பிட்டால் சிறிது நேரமாவது தூங்க வேண்டும், ஹாலுக்கு வந்தவன் வீட்டில்தான் யாரும்
இல்லையே சோபாவைப் பார்த்ததும் A/cயை போட்டு விட்டு சாய்ந்தான்.
வாட்சுமேன் தோலைத்தட்டி
உசுப்பிய, அடுத்த பங்களா வாட்சுமேன்
என்ன.. இன்னும் தூங்குறே ?
கண் விழித்த, வாட்சுமேன் அட.. விடிந்து
விட்டதே ! சட்டென இரவு நடந்தது ஞாபகம்வர விருட்டென
கம்பை எடுத்துக் கொண்டு உள்ளே ஓட... கூடவே அடுத்த பங்களா வாட்சுமேனும்... ஹாலில்
சோபாவில் சாய்ந்து கொண்டு ஒருவன் கிடக்க... பக்கத்தில் மூட்டை ஒன்று கிடக்க...
தோல்பட்டையில் கம்பு
அழுத்துவது போல் உணர்ந்த திருமால்
திருதிருவென முழித்துப் பார்க்க எதிரே இரண்டுபேர் அதிலொருவன் கம்பை உயர்த்தி
நடு மண்டையில் ஒரு போடு போட்டான், மண்டை பிளந்து மீண்டும் மயக்கமாய் சாய்ந்தான்.
நடு மண்டையில்
ஒரு போடுபோட்ட வாட்சுமேன் டெலிபோனில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விபரம் சொல்லிக் கொண்டிருக்க...
அடுத்த பங்களா வாட்சுமேன் கையில் கயிறுடன் ஓடிவந்து கொண்டிருக்க... கூடவே
அடுத்தடுத்த பங்களாக்காரர்களும் வந்து கொண்டிருக்க... ஹாலில் A/c உர்ர்ர்ர்ரயென
உருமிக் கொண்டிருந்தது....
சாம்பசிவம்-
திருப்பதி 7 மலையான்
எல்லாத்தையும் காப்பாத்திட்டாரே....
CHIVAS REGAL சிவசம்போ-
திருமலையில உள்ளவரு, திருமாலை மாட்டி விட்டுட்டாரே...
KILLERGEE-
நல்லவன் வாழ்ந்து
சாவதும், கெட்டவன் செத்துச்செத்து வாழ்வதும்தான் இறைநியதி.
Video
(Please
ask Audio Voice)
By
KILLERGEE
From Devakottai (INDIA)
Happy Diwali