இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 30, 2014

நம்மால் முடியும் தம்பி


இது ஆஸ்ட்ரேலியா இந்த மாதிரியான விசயங்களைப் பார்த்து நாம் ஆச்சர்யப்படுகிறோம், நமது நாட்டிலும் தலைக்குமேல் இந்த மாதிரி தொங்கு ரயில்கள் ஓடாதா ? என, நிச்சயம் முடியும்.... 

இதற்கு நம்மிடம் பொருளாதாரமும் இருக்கிறது, திறமையும் இருக்கிறது, நமது பொருளாதாரம் 60 % வெளிதேசங்களில் முடங்கி கிடக்கிறது, அதேநேரம் அது அவர்களுக்கே உபயோகமாக இருக்கிறது, அதேபோல நமது திறமைசாலிகள் வெளிதேசங்களில் இருந்து தமது வாழ்வாதாரத்துக்காக, வேறு வழியின்றி அடகு வைக்கப்பட்ட ஆபரணங்களைப் போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், இதே போலத்தான் கடுமையான உழைப்பாளிகளின் நிலையும் இதை எல்லாம் ஒன்று திரட்டி, நமது பொருளாதாரங்களையும், திறமைசாலிகளையும், உழைப்பாளிகளையும் மீட்டு இந்தியாவில் செயல்படுத்தினால்  ?

தலைக்கு மேல் ஓடும் ரயில் என்ன ? தரைக்கு கீழ் பறக்கும் ரயில்களைக்கூட நாம் உருவாக்க முடியும், நாளை நமது சந்ததிகளாவது வாழட்டுமே ! 

அதற்கு முதலில் வேண்டியது மனம், இது சரியாக இருந்தால் நாமும்கூட நமது இந்தியாவில் வானுயர்ந்த கட்டடங்கள் கட்டலாம், அயல் தேசங்களில் கட்டிக் கொடுக்கத் தெரிந்த நமக்கு நமது தேசத்தில் கட்டத் தெரியாதா ? 

மனம் இருந்தால் மார்க்கமுண்டு 
என நம்முன்னோர்கள் சொல்லி வைத்தது நமக்காகத்தான், ஆனால் இதன் அர்த்தம் புரியாமல் நாம் நம்மை அழித்துக் கொண்டு வாழ்கிறோம், நாம் யாருக்காக வாழ்கிறோம் நமது சந்ததிகளுக்காகத்தானே... அவர்களுக்காகத்தானே வாயைகட்டி, வயித்தைகட்டி வாழ்ந்தார்கள், வாழ்கிறோம், வாழப்போகிறார்கள் 

ஆகவே நாளைய சரித்திரம் படைக்க, நமது அரசாங்கம் இன்றே முயற்சியை துவங்கட்டும்.... சரி இந்த அரசாங்கம் என்ற பூனைக்கு மணியை கட்டுவது யார்

நாம்தான் MONEYயை வாங்கி கொண்டு ஓட்டு போடுகிறோமே ! பின்னேயாரு கட்டுவது..........?

CHIVAS REGAL சிவசம்போ-
யேன், நாங்க கட்ட மாட்டோமா ? கொஞ்சம் MONEY யோட, ஒரு மணியை வாங்கித்தாங்க நான் போயி, கத்த்த்த்துர்ர்ர்ரேன்.....

Video
(Please ask Audio Voice)

வெள்ளி, நவம்பர் 28, 2014

திருமண அழைப்பிதழ்


முன்குறிப்பு - பெயரின் வண்ணம் சிவப்பு, ஊரின் வண்ணம் கருப்பு.

ஏங்க, திருப்பதி இருக்காரா ?
அவரு, காலையிலதான் பழனிக்கு போனாரு நீங்க யாரு ?
நான், வாத்தியார் சிதம்பரம்.
வாங்க, என்ன விசயம் ?
நம்ம, பழனி மகளுக்கு வர்ற புதன்கிழமை திருப்பதியில தாலிகட்டி சிதம்பரம் வடுகநாதா மஹால்ல வரவேற்பு வச்சுருக்காங்க குடும்பத்தோட வந்துருங்க, ஆமா நீங்க...
நான், அவரு மனைவி பவானி.
தப்பா நினைக்காதீங்க, நான் இதுவரை பார்த்ததில்லை, அதனாலதான் கேட்டேன் நமக்கு எந்த ஊரு ?
எனக்கு, பவானி.
அப்படியா ? யேன் மச்சினனுக்குகூட பவானிலதான் பேசி முடிச்சுருக்கோம் ஆவணில கல்யாணம்.
அப்படியா, யாருவீட்ல ?
நம்ம, கருதாஊரணி மேலத்தெரு திருமலை இருக்கார்ல அவரு மகள் தென்குமரி.
அவளைத்தான், கன்னியாகுமரி குமரிமுத்து கூட்டிகிட்டு ஓடுனதா சொன்னாங்களே ?
உண்மைதான், ஆனா நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட்லயே வளைச்சு புடிச்சு கொண்டு வந்துட்டாங்களாம்.
அப்படியா... சந்தோஷம்.
சரி, கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருங்க.
நல்லது வந்துடுறோம்.

பின்குறிப்பு – படிக்கிற நீங்களும் கல்யாணத்துக்கு, வந்துடுங்க....

 
காணொளி

மேலே உள்ள காணொளிக்கும், பதிவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை பிறகு எதற்கு ? என கேட்கலாம் பழைய காலங்களில் காய்கறி கடைகளில் கத்திரிக்காய், தக்காளி வாங்கும்போது ஓசியாக கருவேப்பிள்ளை கொடுப்பார்கள் இல்லையா, அதைப் போலவே இதுவும் இருக்கட்டுமே... மேலும் காணொளியில் வரும் நண்பர்களோடு எமக்கு கொடுக்கல் வாங்கல் தகறாறு ஏதும் இல்லை என்பதையும் இதன் மூலம் அறிவித்து கொள்(ல்)கிறேன்.

செவ்வாய், நவம்பர் 25, 2014

காயல்பட்டணம், கயல்விழி & காயாம்பு


என் வாழ்வில், என்னை சந்தோஷப்படுத்திய நண்பர், நண்பிகளைவிட என் மனதை காயப்படுத்தியவர்கள் ஏராளம், தாராளம் சர்வசாதாரணமாய் ஒருவார்த்தையை சொல்லிவிட்டு அவர்கள் போய்விடுவார்கள், அந்த வார்த்தைகள் எனக்குள் முள்ளாய் குத்திக்கொண்டே.. இருக்கும், விபரம் தெரிந்த நாள்முதல் இப்படித்தான் சராசரி மானிட ஜீவராசிகளைப்போல் என்னால் இருக்க முடிவதில்லை, மற்றவர்கள் பார்வையில் எனது வாழ்க்கை நன்றாக தெரிவதற்கும், எனது பார்வையில் நாசமாய் போனதற்கும் காரணம் எனது ஞாபகசக்தி எதையுமே மறக்க முடிவதில்லை, 

வெள்ளி, நவம்பர் 21, 2014

என் நூல் அகம் 1


மதுரை பதிவர் விழாவில் கலந்து கொண்டதே ஒரு மகிழ்ச்சியான விசயம் அதில் பெரும் மதிப்பிற்குறிய ஐயா ஜியெம்பி அவர்களை சந்தித்து பேசியதும், அவரிடம் பெற்ற ஆலோசனைகளும், தன்கைப்பட ஒப்பமிட்டு கொடுத்த ‘’வாழ்வின் விளிம்பில்’’ என்ற நூலை தந்தது ஒரு அளப்பெரிய பொக்கிஷம் பெற்றதைப் போன்ற உணர்வைப் பெற்றேன் இதை எழுத்துக்களில் தங்களிடம் விவரிக்கும் பக்குவம் இந்தக் கத்துக்குட்டிக்கு போறா.... இதை படித்து முடித்து விட்டேன்.

வெள்ளி, நவம்பர் 07, 2014

மதுரையை கலக்கியது யாரு ?

Just click on the photo to view it in big size.
தமிழ் வாழ அந்த தமிழோடு நாமும் வாழ.



26.10.2014 மதுரை மாநகர் எமது அன்புத் தங்கை தமிழ்ச்செல்வியின் வீடு.

அதிகாலையிலேயே எழுந்து தயாராகினேன் இரண்டு சக்கர வாகனத்தோடு காரணம் இருப்பு கொள்ள முடியவில்லை எமது கழுத்தில் கைக்குழந்தை (புகைப்படக்கருவி) தொங்கி கொண்டிருக்க... நானும், மருமகன் K.விவேக்கும் புறப்பட்டோம் பதிவர் திருவிழாவுக்கு... வைகை ஆற்றுப்பாலத்தை கடக்கவும், வண்டியூர் தெப்பக்குளத்தின் மையத்தில் அமர்ந்திருந்த சிறிய கோவில் வளாகத்தை சுற்றி நின்றிருந்த மரங்கள் தங்களின் கிளையென்ற கைகள் கொண்டு கையசைத்து வருக... கில்லர்ஜி என எம்மை அழைப்பது போன்ற உணர்வு வலதுபுறம் வளைந்தால் கீதா நடன கோபால நாயகி மந்திர் பள்ளி வளாகம் தென்பட வண்டியை விட்டு இறங்கினேன்.

(புகைப்படங்கள் அனைத்தும் அனுமதி பெற்றே வெளியிடப்படுகிறது)



முகவாயிலில் கண்கொள்ளாக்காட்சி ஆம் ! பழுத்தபழம் ஐயா திரு.சீனா அவர்கள் தனது துணைவியாருடன் நின்று கொண்டு ‘’வாங்க கில்லர்ஜி’’ என அன்பொழுக அழைத்தார். ஐயாவை வணங்கி விட்டு கரம் பற்றினேன்.... சற்று நேரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் தலைக்கவசத்துடன் ஒருவர் வந்தார்.. கண்களை ஊடுறுவினேன். சட்டென கணித்து ஐயாவிடம் சொல்லி விட்டேன், தலைக்கவசத்தை கழட்டும் முன்னே சொல்லி விட்டீர்களே... ஆம் சுழற்சி நாயகன் திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்

பசுமை நினைவுகளை புகைப்படக்கலைஞர் K.விவேக் நிழற்படமாக சுட்டுத்தள்ள தொடங்கினார்.



உள்ளே நுழைந்தோம் பிரமாண்டமான பதாகைகள் எம்மையும் வரவேற்றன... சற்று நேரத்தில் மதிப்பிற்குறிய ஐயா திருச்சி திரு.தி.தமிழ் இளங்கோ அவர்கள் தொடந்து... எம்மை கழுத்துவரை கல்லாக்கிய மதுரை மன்னன் பகவான்ஜி (நேற்றிரவே வலைச்சித்தர், பகவான்ஜி, குடந்தையார் அனைவரையும் ஹோட்டல் ராஜேஸ்வரியில் சந்தித்து விட்டேன் என்பது வேறு விசயம், வாத்தியார் திரு.பாலகணேஷ் அவர்கள் மன்னிக்க) 

பிறகு ஐயா திரு.தருமி அவர்களை, தொடந்து ஐயா கவிஞர் திரு.ரமணி அவர்கள், துளசிதளம் திருமதி.கீதா அவர்கள் கணவருடன் வருகை தந்தார், அடுத்து பெங்களூருவிலிருந்து 76 வயது இளைஞர் ஐயா திரு.G.M. பாலசுப்பிரமணியன் அவர்கள், தனது துணைவி மற்றும் மகனுடன் வந்தார். அபுதாபி அண்ணல் கவிஞர் திரு.மகேந்திரன் அவர்கள், திரு.குடந்தையூர் சரவணன், வலைச்சித்தர், திரு.திண்டுக்கல் தனபாலன், திரு.மணவை ஜேம்ஸ் அவர்கள், திரு.டி.என். முரளிதரன் அவர்கள், திரு.கோவை ஆவி அவர்கள், வாத்தியார் திரு.பாலகணேஷ் அவர்கள்

திடீரென பரபரப்பு சில காலங்களாக நேற்று மாலையில்கூட எமது செவிகளில் செல்களின் வழியே ஒலியலை மூலம் கேட்டுப்பழகிய எமது இனிய நண்பர் திரு.கரந்தையார் அவர்கள் மனைவி, மகளுடன் வருகை தந்தார். முதன் முதலாக ஒளியாக நேரில் கண்டதால் வணங்கி கட்டித்தழுவி வரவேற்றேன். கூடவே சோழ நாட்டில் பௌத்தம் முனைவர் ஐயா திரு. B. ஜம்புலிங்கம் அவர்களின் வரவு.













சிட்டுக்குருவி திரு.விமலன் (தங்களோடு புகைப்படம் எடுக்க முடியவில்லை கடைசிவரை தாங்கள் விலகியே இருந்தீர்கள்) 

தன்னை ஸ்கூல் பையன் என அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தார் திரு.ஸ்பை உண்மையிலேயே ஸ்கூல் பையன் போலவே இருந்தார். அவரோடு புகைப்படம் எடுக்க முடியவில்லை.







திடீரென மின்னல் போல தோன்றினர் மலர்த்தரு திரு.மது கஸ்தூரி மற்றும் அவரது துணைவியார் மகிழ்நிறை திருமதி.மைதிலி கஸ்தூரி ரெங்கன், புதுக்கோட்டை கலக்கல் மன்னன் திரு.நா.முத்து நிலவனார் அவர்கள், கவிஞி திருமதி.தேன் மதுரத்தமிழ் கிரேஸ் குடும்ப சகிதமாய் வந்து கலக்கினார்கள். தேவகோட்டை பெற்றமகள் புதுக்கோட்டை கவிஞி திருமதி.மு.கீதா அவர்கள், நண்பர் திரு.வலிப்போக்கன் அவர்கள், திரு.நவாஸ் அவர்கள், திரு.மகாசுந்தர் அவர்கள், 

எமக்கு ஆச்சர்யம் என்ன என்றால் அனைவருமே எம்மை அடையாளம் கண்டு வாங்க கில்லர்ஜி என்று சொல்லி விட்டார்கள். சகோதரி மைதிலியின் குழந்தைகள்கூட கில்லர்ஜி அங்கிள் என.... நான்தான் திணறினேன், விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. குடந்தையாரின் குறும்பட வெளியீடு மற்றும் நண்பர் திரு.கரந்தையார், கவிஞி திருமதி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ், கவிஞி திருமதி.மு.கீதா, திரு.பி.ஆர். ஜெயராமன் ஆகியோரின் நூல் வெளியீடு, எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் சிறப்பு பேச்சு

நிகழ்ச்சியினை அபுதாபி அண்ணல் கவிஞர் திரு.மகேந்திரன் அவர்கள் அழகாக தொகுத்து வழங்கியதை சற்றுப் பொறாமையுடனே... பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன். 




தமிழ் வாழ அந்தத் தமிழோடு நாமும் வாழ....








பதிவர்கள் மேடையேறி தங்களை சுய அறிமுகம் செய்து கொள்ள அழைக்கப்பட்டார்கள்

தமிழ் வளர்த்த மதுரையிலே எமது வாழ்வில் முதல்முறையாக மேடையேறினேன். நேரமின்மை காரணமாக ஐந்து நிமிடம் மட்டுமே பேசினேன். 

ஆனால் எமது திட்டப்படி நான் பேச நினைத்த நிறைய விசயங்கள் பேசமுடியவில்லை எமது கனவை அடுத்த விழாவில் புதுக்கோட்டையில் கலக்கல் மன்னன் திரு.நா.முத்து நிலவனார் அவர்கள் நனவாக்குவார்கள் என்று நம்புகிறேன். ஐயா அவர்களுடன் சிறிது நேரமே பேசியதில் ஐயாவும், நானும் .......த்திகத்தில் ஒரு அலசல் அலச முடிந்தது. போதாது, போதாது இன்னும் இருக்கிறதே.... கேள்விக்கணைகள்.... பரவாயில்லை பதிவுகள் மூலம் அவரை சந்திப்போம்.





76 வயது இளைஞர் ஐயா திரு.G.M. பாலசுப்பிரமணியன் அவர்களுடன் பேசிய வார்த்தைகள் எமது வாழ்வின் பொன்னான தருணங்கள். ஐயா கையொப்பமிட்டு எமக்கு கொடுத்த வாழ்வின் விளிம்பில் என்ற தனது நூல் மறக்க முடியாதகும். 

இனிய நண்பர் திரு.கரந்தையார் அவர்களும் கரந்தை மாமனிதர்கள் என்ற தனது நூலை அன்புடன் கையொப்பமிட்டு கொடுத்தார்கள்.

வாத்தியார் மின்னல் வரிகள் திரு.பாலகணேஷ் அவர்கள் தனது சரிதாசணம் என்ற நூலை எமது பதிவை தொடர்கிறேன் என்று சொல்லி கையொப்பமிட்டு கொடுத்தார்கள்

இனியதோழி கவிஞி திருமதி.மு.கீதா அவர்களும் ஒரு கோப்பை மனிதம் என்ற நூலை பருகச்சொல்லி, கையொப்பமிட்டு கொடுத்தார்கள்

இனியதோழி கவிஞி திருமதி.தேன் மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களும் துளிர் விடும் விதைகள் என்ற நூலை கையொப்பமிட்டு கொடுத்தார்கள்.

நண்பர் திரு.கோவை ஆவியும் தனது ஆவிப்பா என்ற நூலை கையொப்பத்துடன் வழங்கினார்.

அனைவருக்கும் நன்றியும் வேண்டுகோளும் இவை அனைத்தையுமே படித்து அதனைக்குறித்து பதிவிடுவேன் அதற்கு கால அவகாசம் தருவீர் தங்களுக்கே தெரியும் எமக்கு தற்போது வேலை நிறைய இருக்கிறது.






(புகைப்படங்கள் அனைத்தும் அனுமதி பெற்றே வெளியிடப்படுகிறது)







நண்பர் திரு.கரந்தையார் அவர்கள் காண இருகண்கள் போதாது என தனது பதிவில் சொன்னதை நானும் உணந்தேன். நண்பர் திரு.கரந்தையார் அவர்களிடம் மட்டுமல்ல, ஐயா முனைவர் திரு.B. ஜம்புலிங்கம் அவர்களிடம் மட்டுமல்ல, ஐயா திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களிடம் மட்டுமல்ல, தோழர் திரு.மது அவர்களிடம் மட்டுமல்ல, நிறைய எவ்வளவோ பேசுவதற்கு கேள்விக்கணைகளுடன் வந்தேன் எங்கே ? நேரம் கிடைத்தது நேரம் போனதே தெரியவில்லை திடீரென சூரியன் மேற்கே போய்விட்டான், அழைத்தால் மீண்டும் நாளைதான் வருவேன் என மறைந்தே விட்டான்.







விழா ஏற்பாடுகளை பம்பரமாய் சுழன்று வேலை செய்த, ஐயா திரு.சீனா அவர்கள், நண்பர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்கள், திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், நண்பர் திரு.பகவான்ஜி அவர்கள், திரு.தமிழன் கோவிந்தராஜ் அவர்களுக்கு கில்லர்ஜியின் மனமார்ந்த நன்றிகள்.




புதுக்கோட்டை கலக்கல் மன்னன் ஐயா திரு.நா.முத்து நிலவனார் அவர்களுக்கு பணிவான கோரிக்கை. பதிவர் சந்திப்பு என்பது தலைப்பு. சந்தித்தோம் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் ? ஒருவருக்கொருவர் பேசினோமா ? ஆகவே அடுத்த புதுக்கோட்டை விழாவில் மடை திறந்த வெள்ளம்போல் மனம் திறந்து பேச குறைந்த பட்சமாக மூன்று மணி நேரமாவது இடைவேளை விடவேண்டும் என்பது எமது அவா.



இடையே ஜிகிர்தண்டா வழங்கப்பட்டது.





முடிவில் ஒரு வருத்தமும்கூட இனிய நண்பர் திரு.வே.நடனசபாபதி மற்றும் நண்பர் திரு.துளசிதரன் மற்றும் கீதா அவர்கள் நண்பர் திரு.தளிர் சுரேஷ், திரு.கிங் ராஜ், திரு..பாண்டியன், திரு.ஜெ.பாண்டியன், அவர்கள் வராமல், அவர்களை சந்திக்காமல் போனது மன வருத்தத்தை தந்ததே...



குறிப்பு இதில் பெயர் குறிப்பிடாத பதிவர்கள் தயவு செய்து மன்னிக்க எம்முடன் பேசியவர்களை குறிப்பிட்டு விட்டேன் ஆயினும் ஒருசிலர் எம்மிடம் பேசுவதற்க்கு தயங்கியதை கவனித்தேன் காரணம் அறியேன்.

02.11.2014 தினமலரில்...

Video All Persons

 Video I am on the stage speech.
மதுரையை கலக்கியது யாரு ?



அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

(புகைப்படங்கள் அனைத்தும் அனுமதி பெற்றே வெளியிடப்படுகிறது)

 வாழ்க தமிழ். 

07.11.2014