இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 01, 2015

எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன்

 

வணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ், "திறக்காத புத்தகம்" பத்திரிக்கையிலிருந்து, வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு, எங்களது வாழ்த்துகளை கூறி உங்களிடம் சில கேள்விகள்.

வணக்கம் தமிழ் வாழ அந்த, தமிழோடு நாமும் வாழ  ஆரம்பிக்கலாம்.

ஐயா நீங்க என்ன, படிச்சு இருக்கீங்க ?

எமது இரு கைகளிலிருந்து... ஒரு கையில் உள்ள விரல்களைகூட முழுமையாக விரிக்க முடியாத அளவு.


உங்களுடைய பொழுது போக்கு என்ன ?

எழுத்து, எழுத்து, எழுத்து, Or Typing, Typing, Typing, Only.


உங்களுக்கு எழுத, TYPING தெரிந்த மொழிகள் ?

தற்காலம், ஐந்து இவை மேலும் தொடரலாம்.


இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த மாதிரி எழுதுவீங்க ?

எனது சுயநினைவு கொண்டு எனது சரீரத்திலிருந்து என்னால் எனது மூத்திரத்தை வெளியேற்ற முடியும், என்ற நிலைவரை.


ஆசைக்கும், பேராசைக்கும் வித்தியாசம் சொல்லமுடியுமா ?

ஒரு எழுத்தாளன், தன்னைப் போலவே, தன் மக்களும் எழுத்தாளனாக வரணும்னு ஆசைப்பட்டால் அது பேராசை, அதேமக்கள் தன்னுடைய எழுத்துக்களை ஆத்மார்த்தமாக புரிந்து கொண்டால் போதும்னு ஆசைப்பட்டால் அதுஆசை, இது இரண்டுமே நடக்காமல் போனால் அது நிராசை.


பிள்ளைகள், பெற்றோர்களுக்கு கடன் பட்டவர்களா ?

நிச்சயமாக இல்லை, மாறாக பெற்றோர்களே கடன்பட்டவர்கள், கடைசி காலத்தில் எங்களை பார்த்து கொள்வதற்காகத்தான் நான் மக்களைப் பெற்றேன் என்று காலங்காலமாக சொல்லி வருவதெல்லாம் நொண்டிச்சாக்கு, தான் ஆண்மகன் என்பதை கணவனும், தான் மலடி அல்ல என்பதை மனைவியும் இந்தச மூகம் கேட்காத கேள்விக்கு பதில் சொல்வதற்காகவும், வம்ச விருத்திக்காகவும், தங்களது உணர்வுக்கு வடிகால் தேடும் கூட்டு முயற்சி என்பதுதான் உண்மை, இருப்பினும் நாம் மாறுபட்டதற்கு காரணம் பந்த பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தமிழர்கள்.


நடிகர்களுக்கு, ரசிகனாய் இருப்பதில் பலன் உண்டா ?

நடிகனுக்கு ரசிகனாய் இருப்பதைவிட, அரசியல்வாதிக்கு தொண்டனாய் இருப்பதைவிட ஒரு எழுத்தாளனுக்கு வாசகனாய் இரு ஏதேனும் பலன் உண்டாகலாம், ஏனெனில் அவன் தனது பிழைப்புக்காக, உலக நடப்பை சொல்வான், படிப்பறிவின் உயர்வை சொல்வான், அன்பின் ஆழத்தை சொல்வான், நட்பின் நேசத்தை சொல்வான், காதல் செய்வதை சொல்வான், கடத்துவது எப்படியென சொல்வான், பின் அதன் விளைவை சொல்வான், கொலை செய்வது எப்படியென சொல்வான், அதன் விளைவையும் சொல்வான் இதில் நல்லதை மனதில் நிறுத்தி விடவும், கெட்டதை துறத்தி விடவும், உனக்கு தெரியுமெனில் நீ ஆறறிவு பெற்ற மானிடன்.


கடவுளை கண்டால் என்ன கேட்பீர்கள் ?

இதில் எனக்கு நம்பிக்கை இல்லை.


கடவுள்மீதா ? காண்பதுமீதா ?

கேள்வி, கடவுளைப் பற்றியா ? காண்பதைப் பற்றியா ?


காண்பதைப்பற்றி...

அதற்கே எடுத்துக் கொள்ளலாம்.


ஒருக்கால், கடவுளை கண்டால் ?

முதலில் எனக்கு "கால்" இருக்கிறதா ? என உறுதி செய்து கொண்டு, கடவுளிடம், நான் நினைத்த நேரம் மட்டும் மற்றவர் கண்களுக்கு தெரியாத வண்ணம் மறையும் வித்தையை கேட்பேன், அதன் மூலம் என் இந்தியாவுக்கு மட்டுமல்ல ! உலகிற்கே நல்ல அரசியல்வாதிகளை கொண்டு வருவேன், நிச்சயமாக துளியளவும் நான் பயன் பட்டுக் கொள்ள மாட்டேன், இது எனக்கு வரம் கொடுக்க வரும் இருகால் உள்ள கடவுள் மீதுசத்தியம்.


போற்றப்படக்கூடியவர்கள்... ?

நாட்டுக்காக உழைத்த ராணுவீரர்களும், விஞ்ஞானிகளும் மட்டுமே.


நல்ல நண்பர்களை, புரிந்து கொள்வது எப்போது ?

உன்மீது நம்பிக்கை வைத்து தன் சகோதரியை மட்டுமல்ல, தன் மனைவியையும் உன்னுடன் அனுப்பி வைக்கும் படியான சூழ்நிலையில்....


நீண்டகாலம் தொடரும் நண்பர்கள் யார் ?

மனைவி.


மனைவியை, நண்பனாக நினைக்க முடியுமா ?

ஏன் முடியாது ? மனைவி ஆலோசனை சொல்லும் நண்பனாக மட்டுமில்லை, அணைத்து ஆறுதல் கூறும் தாயாகவும் முடியும், பாடையில் ஏற்றிய பிறகும் இடுகாட்டில் உடன்கட்டை ஏறியவர்களை மறந்து விட்டீரா ?


மிகப்பெரிய வலி எது ?

மனைவி, உதாசினப்படுத்தி பேசிய வார்த்தைகள்.


மிகப்பெரிய சந்தோஷம் எது ?

மனைவி, வாயால் பாராட்டுப் பெறுவது.


இவைகள், இரண்டையும் அனுபவித்த அனுபவம்.. ?

முதலாவது நிறைய அனுபவித்துள்ளேன், இரண்டாவது இனியெனும் கிடைக்க சாத்தியமில்லை. 


உங்களது, வாழ்வில் கவலையளிக்கும் விசயம் ?

கடைசிவரை, என்னை புரிந்து கொள்ளாமலே மறைந்து விட்ட என்னவள்.


உங்களது, வாழ்வில் சந்தோஷமளிக்கும் விசயம் ?

மிக, மிக சொற்பகாலமாயினும் எனக்கு கிடைத்திருந்த, உத்தமி.


உங்களுக்கு, பிடித்த விசயம் ?

உண்மையை மட்டும் பேசியது, பேசிக்கொண்டிருப்பது, பேசப்போவது.


காதலைப்பற்றி... ?

அது, ஒரு மாயக்கண்ணாடி போன்றது புரியாதவன் கீழே போட்டு உடைத்து விடுவான், புரிந்து கொள்ள நினைப்பவனுக்கு கண்ணாடியின் ரசம் மறைந்து விடும்.


காதலித்து திருமணம் செய்வது, பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பது எதில் சந்தோஷம் ?

பெற்றோர்கள் செய்து வைத்த திருமணத்திற்கு பிறகு காதலிக்க ஆரம்பித்தால் கடைசிவரை சந்தோஷமே மனைவி வீட்டாருடைய ஆதரவு தொடர்ந்து கிடைக்கும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கேடு நினைக்க மாட்டார்கள், ஒருக்கால் நினைத்தால் ? அவர்கள் பெற்றோர்களே அல்ல !


மன்னிக்கப்பட வேண்டியவர்கள் ?

தன் கற்பை காப்பாற்றிக் கொள்ளவதற்காக கொலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட உத்தமிகள், செய்த தவறை உணர்ந்து யாரும் அறியாவண்ணம் தனிமையில் அழுதவர்கள். 


சமூகத்தில், விபச்சாரிகள் உருவாக காரணம் யார் ?

விபச்சாரன்தான் ஆண் தொடவில்லையெனில் விபச்சாரிகள் உருவாக முடியாது விபச்சாரன் ஒழிந்து விட்டால் விபச்சாரி அழிந்து விடுவாள்.


விபச்சாரன் என்ற சொல் தமிழில் இருக்கிறதா ?

ஒரு அன்னிய பெண்ணைத் தொட்டு அவளுக்கு விபச்சாரி என்று பெயர் வைத்து, அந்த செயலுக்கு விபச்சாரம் என்று சொல்பவனை விபச்சாரன் என்று சொல்லக்கூடாதா ? இதுவரை இல்லையெனில் இனிமேல் இருக்கட்டுமே...  


நீங்கள், தண்டிக்க நினைக்கும் மனிதர்கள் ?

அனாதை குழந்தைகள் உருவாக காரணமானவர்களை, குழந்தைகளை பிச்சையெடுக்க வைக்கும் கும்பல்களை, குழந்தைகளை பாலியல் செய்தவர்களை, அப்பாவிப் பெண்களை பிடித்து வைத்து விபச்சாரம் செய்பவர்களை, மனநலம் குன்றியவர்களை துன்புறுத்தும் பைத்தியக்கார மனிதர்களை, ஆயுள் தண்டனை கைதிகளை துன்புறுத்தும் அதிகாரிகளை, இவைகளை தடுக்க முடிந்தும் தடுக்காதவர்களை, வாக்குரிமையின் தன்மையை உணராதவர்களை.


தேர்தலில், வாக்களிக்க விரும்பாதவர்களைப்பற்றி... ?

பணத்தை, வாங்கிகொண்டு வாக்களிப்பவனைவிட தேர்தலை புறக்கணிப்பவன் உயர்ந்தவனே.


தேர்தலை புறக்கணித்தால், ராணுவஆட்சி வராதா ?

எல்லோரும் ஒரே நிலை என்ற மாற்றமும், வருமே.


ராணுவ ஆட்சி வந்தால் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுமே ? நான்கு பேர் சேர்ந்து நின்றுகூட பேசமுடியாதே ?

இப்பொழுது மட்டும் சுதந்திரம் கிடைத்து விட்டதா ? நான்கு பேர் சேர்ந்து சந்திரனுக்கு ஸ்கட்(SCAT) விடுவதைப்பற்றி பேசப் போகிறானா ? இல்லை, அதை தடுத்து நிறுத்தும் பேரியாட் (PERIYAT) டைப்பற்றி பேசப் போகிறானா ? ஒழிக்கப்பட வேண்டிய அரசியல்வாதியை வாழ வைப்பதைப்பற்றி பேசி தன் வாழ்க்கை ஒழிந்து போய்க் கொண்டிருப்பதை மறந்து பேசிக் கொண்டிருப்பான், தனது அபிமான நடிகைக்கு எந்த இடத்தில் கோயில் கட்டலாமென ஆலோசித்து கொண்டிருப்பான், என்றைக்கு ஒரு பெண் இரவில் தனியாக தன் வீட்டிற்கு நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் இந்தியா சுதந்திரநாடு.


மக்களை, ஏமாற்றும் போலிச் சாமியார்களைப்பற்றி... ?

இதிலொன்றும், தவறில்லை அவர்கள் முட்டாள்களை மட்டும்தானே ஏமாற்றுகிறார்கள்.


இதில், IAS, IPS படித்தவர்களும், இருக்கிறார்களே ?

இதிலிருந்து தெரிவது, படித்தவர்கள், எல்லோருமே அறிவாளி கிடையாது, படிக்காதவர்கள் எல்லோருமே முட்டாள்களும் கிடையாது.


ஒரு மதபோதகர் எப்படி இருக்க வேண்டும் ?

ஏழையாக, அன்றாடங்காச்சியாக.


நேர்மையாக வாழ சுலபமான வழிகள் ?

தவறு செய்ய வெட்கப்பட்டால் போதுமானது, இதுகூட ஒரு மதத்தின் போதனைதான், குறிக்கப்பட வேண்டியது நான் மதபோதகன் அல்ல !


அரசியல்வாதிகளுக்காக, தீக்குளித்தவர்கள், தீக்குளிக்கப் போகிறவர்களைப்பற்றி.. ?

வீட்டில் வளர்த்த, விட்டில் பூச்சிகள்.


நடிகைகளுக்கு, கோயில் கட்டுபவர்களைப்பற்றி... ?

நாட்டில் மக்கள் தொகையை கூட்டிக் காண்பிக்க ஜனித்த மனித ஜடங்கள்.


தமிழ்த் திரையுலகில், வேற்று மொழிக்காரர்களின் ஆதிக்கம் பெருகி வருவது குறித்து... ?

அது, தமிழ்நாட்டின் சாபக்கேடு.


வந்தாரை, வாழவைக்கும் தமிழகம் என்று சொல்கிறார்களே...

இதைச்சொன்னவன், நிச்சயமாக தமிழனாக இருந்திருக்க மாட்டான் பிழைப்பு தேடி வந்த, வேற்று மாநிலத்தவன் கிளப்பிவிட்ட புரளி, அதுவே நிலைத்து விட்டது, இனியெனும் சொல்பவன் நாவை சுட்டெறிய வேண்டும்.

  

சங்குஜா விருதுபெற்ற "அழும் விழிகளும், விழும் துளிகளும்" என்ற உங்களது நாவலை இயக்குனர் சாம்பசிவம் "கண்ணீர் மழை" என்ற பெயரில் திரைப்படம் ஆக்கப்போவது உண்மையா ?

உண்மைதான், எனது நெடுங்கால கனவு அது.

 

தங்களது, வாழ்க்கையில் இழந்தவை ஏதேனும்.. ?

வாழ்க்கையையே இழந்து போனதால் வாழ்க்கையில் ஏதும் இழந்ததாக என் கண்களுக்கு தென்படவில்லை.


இழந்து போன வாழ்க்கையை மீண்டும் பெற முடியாதா ?

விகடகவினு எழுதிவிட்டு அதை இடமிருந்து வலமாக படித்தாலென்ன ? வலமிருந்து இடமாக படித்தாலென்ன ? மீட்டாலும் அதே நிலைதான் மீன் கருவாடாகும், கருவாடு மீன் ஆகாது.


உங்களை பிடிவாதக்காரர், என்பது உண்மையா ?

பிடித்தபடி, வாழ நினைப்பதற்கு பெயர் பிடிவாதமா ?


மணிகண்டன் ஆகிய தாங்கள் எழுத்து துறைக்கு வந்ததால் எமகண்டன்னு பெயர் மாற்றிய விஷேசம் ஏதும்... ?

உன் ஜாதகப்படி, கேது எட்டாம் வீட்ல குடியிருக்கிறதாலதான், சேதுகூட பிரச்சனைக்கு வந்தான் மேலும் சூது, வாது தெரியாத உனக்கு மணியால கூட ஆபத்து உண்டு ஒருவேளை எமனோட துணையிருந்தால் நல்லதுனு சோலந்தூர், சோசியர் சோனைமுத்து சொன்னார், அதனாலதான் மணியத் தூக்கிட்டு எமனை இணைச்சுகிட்டேன், பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்னு சொல்வாங்க, என் ஊரோடு சேர்ந்து பேரும் புகழ் பெறட்டுமே. 


ஐயா, இந்த கேது, சூது, வாது, சரி இடையில வந்த சேது.... ?

பக்கத்து வீட்டுக்காரன், இடப்பிரச்சனையில நீதி மன்றத்துல வழக்கு போட்டுட்டான். 


நல்லது, உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி ஐயா.

நன்றி தமிழ்வாழ அந்த தமிழோடு நாமும் வாழ !


வாங்கி விட்டீர்களா ? தனிக்கிழமை தோறும் வெளிவரும் "திறக்காத புத்தகம்"


CHIVAS REGAL சிவசம்போ-

என்ன எலவுக்கு வாங்கணும் ? அதான் திறக்காதே...

அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

99 கருத்துகள்:

  1. இவ்ளோ நேரம் உங்களுக்கு எப்டிசகோ கிடைக்குது, தனிக்கிழமை வரும்பொழுது
    திறக்காத புத்தகத்த வாங்கலான்னு இருக்கேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் முதல் வருகைக்கு வணக்கம் இதற்க்கு பதில் சொல்லனும்னா ? இதையே பதிவாகத்தான் போடுவேன் சரியா ? காரணம் அம்பூட்டு விசயம் கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.

      நீக்கு
  2. எமனஸ்வரம்..எழுத்தாளர் எமகண்டன் அவர்கள்.நிருபர் நிருமாராவ் அவர்களுக்கு அளித்த பேட்டி..... பச்சை மிளகாளை கடித்ததுபோல் இருந்தது. சனிக்கிழமைக்கு இன்னும் ஒன்றறை நாள் இருப்பதால்“ திறக்காத புத்தகம்” சனிக்கிழமை வாங்கிக் கொளளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக சனிக்கிழமை வாங்க முடியாது நண்பா,,, காரணம் இது வெளிவருவது தனிக்கிழமையாம்.

      நீக்கு
  3. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் நண்பரே...

      நீக்கு
  4. நல்ல நண்பர்கள்,விபச்சாரன் பதில்கள் உண்மையிலேயே அருமை,அருமை.
    உங்கள் புகைப்படத்தில் இருக்கும் மீசையின் ரகசியத்தை சகோ மைதிலியின் பதிவு முலம் தெரிந்து கொண்டேன்.

    அப்புறம் இந்த பதிவு என்னுடைய டாஷ்போர்டில் வரவில்லை நண்பரே
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் குறிப்பான விடயத்தை சொன்னதற்க்கும் நன்றி நண்பரே... ஹலோ சகோ மைதிலி சொன்னது புகைப்படக்கலையைப்பற்றி மீசையை பென்சிலில் வரைந்து வச்சு இருக்கேனு நினைச்சீங்களோ.... நேரில் பார்த்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் ஏன் ? Australia Sydney Banks town Airportல, பார்கும்போது தெரியலையா ஆமாமா ? நீங்கதான் கழட்டி விட்டுட்டு போயிட்டீங்களே...

      நீக்கு
  5. திறந்த புத்தகமாய்
    திறக்காத புத்தகம்
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் திறந்த மனதாய் பாராட்டியதற்க்கு நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      நீக்கு
  6. நல்ல வேளை ஜி... தொடர்பதிவோ என்று நினைத்தேன்... முடிவில் சுபம்...!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி சும்மா இருக்கிறவனை தேவையில்லாத சிந்தனையை தூண்டி விடுறீங்க... அப்புறம் முதல் ஆளா, நீங்கதான் மாட்டுவீங்க சொல்லிபுட்டேன்.

      நீக்கு
  7. ஆஹா ! அற்புதமான பேட்டியாய் இருக்கிறதே ! நடுவில் சில கருத்துகள் எனக்கு உடன்பாடில்லை என்றபொழுதிலும் , தங்களின் கருத்துகள் அனைத்தும் வரவேற்கபடவேண்டியவை அண்ணா !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... அந்த சிலதை திறக்காத புத்தகமாய் மூடி வைத்து என் மனதை வருத்துவதைவிட (நண்பர் திரு. பகவான்ஜி போல) திறந்த புத்தகமாய் சொன்னால் எம்மை திருத்திக்கொள்ள உதவுமே....

      நீக்கு
  8. இது பேட்டி!
    புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வந்து இது பேட்டி என்று சொல்லும்போது எமக்கும் நம்பிக்கை வந்து விட்டது நன்றி,

      நீக்கு
  9. ஒரு சின்ன வருத்தம் ..அந்த காலத்தில் என்னதான் கணவன் மேல் உயிரையே வைத்திருந்த மனைவி என்றாலும் உடன்கட்டை ஏற உடன்பட்டிருக்க மாட்டாள் ..ஆணாதிக்கம் மிகுந்த சமூகக் கொடுமை அது ...சமூகத்தின் கொடுமைக்குப் பயந்தே உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும் !அதை விரும்பி மனைவிமார்கள் செய்தார்கள் என்பதைப் போல் இருக்கும் கருத்தைத் தவிர வேறொன்றும் தவறாய் தோன்றவில்லை !
    அதுசரி ,வப்பாட்டிகள் தினத்தில் எமனேஸ்வரனை பேட்டி எடுக்க வேண்டிய அவசியம் என்ன :)
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பகவான்ஜி தாங்கள் சொல்வது உண்மையே ஆணாதிக்கம் 80ல் எமக்கும் உடன்கட்டை sorry உடன்பாடு உண்டு
      ஆமாவுல நானும் கேட்கணும்னு நினைச்சேன் நிருபர் நிருபமா ராவ் கிட்டே....

      நீக்கு
  10. அன்பின் இனிய ஜி!..
    தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் -
    எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்க வாழ்க!.
    - என்று வாழ்த்துகின்றேன்!..
    அன்புடன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி பதிவைப்பற்றி சொல்லாமல் புத்தாண்டு வாழ்த்து மட்டும் தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  11. சில சிந்திக்கவும் சில சிரிக்கவும் வைக்கின்றன. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிந்திக்க வைத்தால் சரிதான், சந்தி சிரிக்காமலிருந்தால் அதுவும் சரிதான்.

      நீக்கு
  12. தீக்குளிப்பு-இது பத்தி நானும் யோசிச்சுகிட்டே இருக்கேன் கொஞ்சநாளா.

    எமகண்டன் சொன்ன பதில்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் உண்டா? ஏன்னா வாழ்க்கைத்துணை பற்றி சொன்னது ஷாக்கா இருக்கு.

    கடவுளை பார்ப்பது பற்றி பேசும் முன்னர் பார்ப்பது என்றால் அறிவியல் ரீதியாக என்ன என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் கில்லர்ஜீ !! மேலும் கண்ணால் பார்ப்பது மட்டுமே இருக்கிறது அது தவிர வேறு எதுவும் இருக்காது என்பது அறியாமை. கண்ணுக்கு எல்லாம் புலப்படும் என்பதும் சிறுபிள்ளைத் தனம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே,,, தீக்குளிப்பு பற்ரி நல்லா யேசிங்க ஒரு முடிவுக்கும் வாங்க,,,

      எமகண்டனின் பதிலுக்கும் எனக்கும் சம்பந்தம் உண்டே... காரணம் மனைவி என்பவன் கணவனின் பாதி உருவமாய் உள்ளன்போடு வாழவேண்டும் 80தே எமது கருத்து இது இல்லாதபோதுதான் விவாகரத்துகள் பெறுகி வருகிறது இன்று உடன் கட்டை ஏறுவது இன்று மறைந்து விட்டது இதற்க்கு காரணம் ஆணாதிக்கம் குறைந்து பெண்களின் ஆதிக்கமும் வளரந்து வருகிறது 80தையே காட்டுகிறது உடன்கட்டை ஏறுவது மறைந்து விட்டதில் எமக்கும் சந்தோஷம் உண்டு காரணம் அது முட்டாள்த்தனமா செயலே ஒருவேளை மனைவியோடு கணவனும் உடன்கட்டை ஏறினால் நான் சரியென்பேன்.

      நண்பரே மீண்டும் படித்துப்பார்க்க... கடவுளைக்காண்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை இதைத்தான் நிருபர் நிருபமா ராவிடம், எமகண்டனும் சொல்லி இருக்கிறார். மேலும் விபரம் வேண்டுமெனில்... அதற்க்கென பதிவுதான் வேறு வழியில்லை வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
    புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

    அடுத்த தனிக் கிழமை எப்போது வரும்?
    த.ம.8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே,, தங்களுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்.... தனிக்கிழமை ? அதான் எனக்கும் குழப்பமாக இருக்கிறது நண்பரே.... தொ(ல்)லைக்காட்சியில இப்படித்தான் சொன்னாங்கே....

      நீக்கு
  14. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

    சிரித்துவிட்டு மட்டும் போகாமல்
    சிந்தனைக் குவியலாய்ச் சிதறிய
    எண்ணங்களின் தொகுப்பு மிக அருமை!

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் சிறப்பான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
      தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  15. அனைத்துமே அருமை ஜி! பரவாயில்லை சனிக்கிழமை வரை வெயிட் பண்ண வைக்காமல் தளத்திலேயே தந்ததற்கு,,எமனேஷ்வரனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்! நன்றிகள்!

    ஜி! விரல் பிரிக்க முடியாத அளவு கல்வி....தன்னடக்கம்??!!

    சரி இந்த எழுத்தாளர் எமகண்டனும் தாங்களும் ஒன்றானால்.....மனைவி பற்றியது முரண்படுகின்றதே ஜி! மனைவி பற்றிய ஒரு பதில் உதாசீனப்படுத்திய வார்த்தைகள்...வலி....மனதை வருத்தியது உண்மை...

    விபச்சாரன்...வார்த்தை அருமை....

    ஏன் ஜி காதலைப் பற்றி இப்படி ஒரு எண்ணம்.....புரிகின்றது..பல காதல்கள் பொய்த்துவிடுவதாலும், தோல்வி அடைவதாலும் என்று எடுத்துக் கொண்டாலும், உண்மையான காதல் தெய்வீகமானது ஜி....அதை அனுபவித்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் ஜி. காதல் பொய்யானாலும், தோல்வி அடைந்தாலும், உண்மையாக இருந்தாலும் அனுபவம் பேசலாம். இந்த இரண்டு அனுபவம் இல்லை என்றால் அதைப் பற்றிக் கருத்து சொல்ல முடியாதே ஜி!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விஸ்தாரமான கருத்துரைக்கு நன்றி சனிக்கிழமை அல்ல ‘’தனிக்கிழமை’’ ஆகவே தாங்களுக்கு கிடைப்பது கடினமே,,,,
      மனைவி நான் உதாசீனப்படுத்தவில்லை அந்த வார்த்தை இந்த கில்லர்ஜிக்கு மட்டுமே பொருந்தும் மற்றவர்களுக்கு அல்ல எனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருக்கிறேன் நான் எனது மனைவியை இன்றுவரை மட்டுமல்ல எனது கடைசி நிமிடம் வரை நேசிப்பேன் இதற்க்கு காரணம் நாங்களிருவரும் 10 சதவீதம் மட்டுமே வாழ்ந்திருக்கலாம் என்பதால் கூட இருக்கலாம் நாங்களிருவரும் இணைக்கப்பட்டது பிறரின் சந்தோஷங்களுக்காகவே ஆகவே இன்றுவரை நானறியும் கட்டாய திருமணங்களை முழுமூச்சுடன் எதிர்த்திருக்கின்றேன் எனது இந்த வயதுக்குள் விவாகரத்துவரை போக வேண்டிய மூன்று தம்பதிகளை இணைத்து வைத்திருக்கிறேன் காரணம் பிரிவின் கொடுமையை முழுமையாக உணர்ந்தவன் நான்.
      காதலைப்பற்றி... எமக்கு தவறான கருத்து இல்லை காதல் இல்லாத மனிதர்கள் இல்லையென்றே சொல்லலாம்.. வெற்றி பெற்ற காதலைவிட தோல்வியடைந்த காதல் மரணகாலம் வரை வாழும் காதலைப்பற்றி.. விரைவில் நான் வெளியிடும்.பதிவு
      ‘’மேலே வானம் கீழே கீதா’’
      காண்க..... நன்றி

      நீக்கு
  16. தங்களின் பேட்டி அருமை. மீன் கருவாடு ஆகும். கருவாடு மீன் ஆகாது. எத்துனை பெரிய தத்துவம்.நாம் உணர்ந்தால் மேலே சொன்னவற்றில் தவிர்க்கப்பட வேண்டிய வரிகள் குறையும் இல்லையா? அது என்ன 3 1/2 2 3/4 பெரிய வித்தியாசம் இல்லையே,,,,,,,, மீன்டும் புது வருட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி மீனு, கருவாடு மட்டுமல்ல நண்டு, கணவாய் தத்துவமெல்லாம் நம்மகிட்ட நிறைய இருக்கு 3 ½ க்கும், 2 ¾ க்கும் அதிக வித்தியாசம் இல்லைதான் என்னைத் தொடருபவர்கள் கண்டிப்பாக வருவார்கள் புதிதாக வருபவர்களை ‘’ஊக்கு’’ விற்பதற்காகத்தான் சும்மா (கல்யாணி) கவரிங் செய்யத்தான் கூடுதல் நன்றி...

      நீக்கு
  17. வணக்கம் சகோ,
    ஆகா!! என்ன ஒரு ஆழமான பதில்கள்..உள்ளத்து சோகங்கள் தெரிகின்றன சகோ..புரிந்து கொள்ளாத மனைவி என்று சொன்னாலும் அவரையே நினைத்து நேசிக்கிறேன் என்று சொல்லும் உங்களை வியக்கிறேன்..
    நடிகர்களுக்கு ரசிகனாய் இருப்பது, போற்றப்படக் கூடியவர்கள், நண்பர்கள் , விபச்சாரன் இவற்றை மிகவும் ரசித்தேன் சகோ. தனிக்கிழமையில் திறக்காத புத்தகம் மற்ற கிழமைகளில் திறந்த புத்தகம்!! :) அப்படித்தான் இருக்கிறது உங்கள் பேட்டி சகோ

    அப்புறம் சகோ, உங்கள் தளம் டேஷ்போர்டில் தெரியவில்லை..உங்கள் கருத்துரையில் பார்த்தபின்பு தேடினாலும் இல்லை சகோ..அவ்வப்பொழுது ங்கள் தளம் திறந்து பார்க்க வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், விலாவாரியான கருத்துரைக்கும் நன்றி சகோ நான் மனதில் எதையும் பூட்டி வைக்கத்தெரியாதவன் ஆகவே... எமகண்டனின் வாயிலாக வந்து விட்டது
      ஆம் சகோ எனக்கும், டேஷ்போர்டிற்க்கும் இடப்பிரட்சினை இருந்து கொண்டே இருக்கிறது சரி செய்யவேண்டும்.

      நீக்கு
  18. திறக்காத புத்தகத்தின் திறந்த மன பேட்டி முழுவதும் கில்லர்ஜியின் முத்திரைகள் !

    " கடவுளை கண்டால் உங்கள் வரம் "... நண்பரே ! அப்படி மறைய முடியாதா என நான் அடிக்கடி ஏங்கும் எனது கனவய்யா அது !

    ( கனவை திருடியவர்மீது காப்பிரைட் சட்டம் பாயுமா என கேட்டு சொல்லுங்கள் மக்கமாரே ! )

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் மனம் திறந்த கருத்துரைக்கு நன்றி இனியெனும் கண்டால் ? கேட்டு சொல்கிறேன் நண்பா,,

      நீக்கு
  19. திறக்காத புத்தகத்தின் சாவி எங்கே இருக்கிறது ஜி,,,?

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கில்லர் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோதரி தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
      சாவி கிடைக்குமிடத்தை தனிக்கிழமை சொல்கிறேன்.

      நீக்கு
  20. நேற்று நான் எழுதிய விரிவானதொரு பாராட்டுரையைக் காணவில்லை கில்லர்ஜி.

    இதற்கு முன்பு இரண்டு தடவை இது நிகழ்ந்திருக்கிறது. என்ன ஆயிற்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னை தாக்கி எழுதிய கருத்துரையைகூட நான் நீக்குவதில்லை இது அந்த கூகுள் ஆண்டவரின் சோதனையாகத்தான் இருக்கும்

      நீக்கு
  21. நிருபமா ராவின்[நீங்கள்தான்] கேள்விகள் அறிவுபூர்வமானவை.

    உங்கள்[எழுத்தாளர் எமகண்டன்] பதில்கள் உணர்ச்சிபூர்வமானவை.

    குடும்ப உறவுகள், காதல், சினிமா, அரசியல் என்று வாழ்க்கையின் முக்கிய கூறுகள் பற்றி மிகச் சுவையாகவும் விரிவாகவும் பதில் அளித்தீர்கள்..

    படித்து, ரசித்து மகிழ்ந்தேன் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் ரசித்து, மகிழ்ந்தமை கேட்டு நான் மகிழ்கின்றேன் நண்பரே.... நன்றி.

      நீக்கு
  22. திறக்காத புத்தகத்தை திறந்த போது உங்களைக்கண்டேன்...மறைந்தாலும் வாழ்ந்து கொண்டுள்ளார் உங்களுடன் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் ...அவர்..விபச்சாரம் பற்றிய கருத்து அருமை...நல்ல எழுத்து வன்மை...பள்ளி செல்லாதவர்கள் தான் பிரகாசிக்கின்றார்கள் அனைத்திலும் வாழ்த்துகள் சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து திறக்காத புத்தகத்தை திறந்து படித்து குறிப்பிட்டு கருத்திட்டமை குறித்து மகிழ்ச்சியான நன்றி

      நீக்கு
  23. வணக்கம் நண்பரே!
    என்ன இது? U U U
    சான்றிதழ் பெறப் பட வேண்டிய பதிவிற்கு A A A என்று கொடுத்து உள்ளீர்களே? இது குறித்து மேல் முறையீடு செய்து ஊ சான்றிதழ் பெற வாழ்த்துக்கள்.
    தங்களை பற்றிய ஒரு நேர்காணல் நிகழ்வாகவே எனக்கு தொன்றுகிறது.
    கேள்விகள் படு சூப்பர் ஜீ.
    நன்றி!
    புதுவை வேலு
    'எனது பதிவில் தங்கள் கருத்துக்கு பதில் உள்ளது பார்க்கவும். நன்றி நண்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சான்றிதழ் விளக்கம் அளித்தமைக்கு நன்றி
      தங்களது ஏரியாவுக்கு வந்து கண்டேன் நண்பா....

      நீக்கு
  24. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. எப்படித் தான் இப்படி எல்லாம் சிந்திகிறீர்களோ ம்.ம். பயந்துதான் விட்டேன் தொடருமோ என்று ஹா ஹா தப்பிட்டோம். நிருபராகவே ஆகலாம் போல இருக்கே ஆக வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க நீங்க மட்டும் எலியை வைத்துக்கூட பதிவு போடுறீங்க... நாங்க போடக்கூடாதோ....
      வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.

      நீக்கு
  25. எமனேஸ்வரம் எழுத்தாளர் மணிகண்டனின்... இல்லை எமகண்டனின் பேட்டியில் வாழ்க்கை வலிகளும், நாட்டின் மீதான, இளைஞர்கள் மீதான தனது எண்ணங்களும் அழகாக விரிந்து கிடக்கின்றன...

    அருமை அண்ணா....

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மணிகண்ட... இல்லை எமகண்டனை பாராட்டியமைக்கு நன்றி நேற்று 02.01.2015 அல்அய்ன் வந்தேன் நண்பரே... மொபைல் சார்ஜர் இல்லாமல் தங்களை அழைக்க முடியாமல் போய்விட்டது மன்னிக்க...

      நீக்கு
    2. இன்றுதான் அலைன் போகிறேன்... நான் கூப்பிடுகிறேன்...

      நீக்கு
  26. உங்க வலைப்பக்கம் கூட எனக்கு திறக்க மாட்டேங்குது ஜி! டேஷ்போர்டில் கிடைக்கவில்லை! தேடி வந்து படித்து ரசித்து மகிழ்ந்தேன்! மனம் திறந்த பேட்டியாக மனதில் உள்ளதை பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுரேஷ் அவர்களின் தேடலுக்கு நன்றி ஆம் நண்பரே டேஷ்போர்டு கடந்த ஒரு மாதமாக சதிக்கின்றது என்னை...

      நீக்கு
  27. தாகம் உள்ளவர்களுக்குத்தான் தாக்கம் ஏற்படும்! திறக்காத புத்தகமா? பாடப்புத்தகமாக பரிமளிக்கிறீர் சகோ...வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே!

    நல்ல கேள்விகள்.! அதற்கேற்ற அருமையான பதில்கள். ! அனைத்துமே உண்மையாக, மனம் திறந்து சொன்ன பதில்களாக இருந்தது. (அதனால்தான் திறக்காத புத்தகம் பத்திரிக்கையிலிருந்து பேட்டி காண வந்தார்களோ?) ஆசை, பேராசை,பற்றிய கேள்வி பதில், பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தின் பலன்கள், போன்றவை மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
    சிறப்புடன் பகிர்ந்தமைக்கு நன்றி.! வாழ்த்துக்கள்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரியின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  29. தாங்கள் சிரிக்க மட்டுமல்ல சீரியஸாகவும் எழுதக்கூடியவர் 80 எனக்குத் தெரியும்.
    அதற்காக இப்படிச் சிரிப்பில் தொடங்கி சீரியசாக்கி விட்டீர்களே நண்பரே!
    சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வகுக கவிஞரே தாங்கள் என்னை சரியாக புரிந்து கொண்டீர்கள் 80 எனக்கு ஏற்கனவே தெரியும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  30. திறக்காத புத்தகம் மனம் திறக்க வைத்தது. தண்டிக்கப்படவேண்டியவர்கள் இப்படி எல்லா கேள்வியும் பதிலும் சிறப்பாகவும் சிந்திக்கும்படியாகவும் இருந்தது. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான விடயத்தை பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது சகோ....
      தங்களுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்

      நீக்கு
  31. ஆசைகளுக்கு விளக்கம் தந்த..எமனேஸ்வரம் எழுத்தாளர் எமகண்டன் . இந்த பேட்டியில் தனது முத்திரையை உலகுக்கு உணர்த்திவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகத்திரையை கிழிப்பதுபோல் கருத்துரை தந்த நண்பருக்கு நன்றி.

      நீக்கு
  32. உஷ்... அப்பாடா...! எங்கே நிருபமாராவை எம்மிடம் பேட்டி காண அனுப்பி விடுவீர்களோ என்றிருந்தது. உங்கள் பதில்களில் சீரியசான விஷயங்களுக்கு நடுவே நகைச்சுவையும் கலந்திருக்கிறது. நாம் எல்லோரும் விபத்தின் விளைவுகளே என்று ஒரு பதிவுஎழுதி இருந்தேன். பிள்ளைகள் பெற்றோர்களுக்குக் கடன் பட்டவர்களா என்னும் கேள்விக்குப் பதில் என் கருத்தை ஒட்டி இருக்கிறது. அது சரி. என்பது என்பதை 80 என்றுதான் எழுதுவீர்களோ. ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ச்சி தங்களிடம் நிருபமாராவ் வந்தால் ? ஊதி தள்ளி விடமாட்டீர்களா ? ஐயா
      //விபத்தின் விளைவுகளே// இணைப்பு அனுப்புங்கள் ஐயா அல்லது வெளியிட்ட வருடம் சொல்லுங்கள் போதும் இருப்பினும் நான் தேடுவேன்
      80 சமாச்சாரம் சிக்கனம்தான் ஐயா.

      நீக்கு
  33. எழுத்தாளர் எமகண்டனின் நேர்முக உரையாடலைப் படித்தேன். இரசித்தேன்! சில பதில்கள் ‘நச்’ என இருந்தன. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    மேலும் உங்களின் இந்த பதிவு எனது டேஷ் போர்டில் வரவில்லை.அதனால் நீங்கள் பதிவிட்டதே தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கு நன்றி ஆம் நண்பரே டேஷ்போர்டுக்கும் எனக்கும் மனஸ்தாபம். தாங்கள் நான்கு தினங்களுக்கு ஒருமுறை நேராக தளம் வாருங்கள் கண்டிப்பாக பதிவைக்காணலாம்.

      நீக்கு
  34. திறக்காத இந்த புத்தகத்தை திறந்தா பல விஷயம் தெரியும் போலவே!!! சில இடங்களில் மனைவியை மெச்சியும்,சில இடங்களில் மொத்தியும் இருக்கிறீர்கள். நான் இதை எடிட் பண்ணி என் ஆத்துகாறார்கிட்ட சொல்லபோறேன்:)) நன்றி அண்ணா. குறிப்பா நல்ல நண்பன்= மனைவி:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நான் மெச்சவும் இல்லை, மொத்தவும் இல்லை உண்மையை எழுதியிருக்கிறேன் எடிட் என்றால் ? எப்படி ? மொத்துனதை டெலேட் செய்துட்டா ? எனது பதிவு நாலு பேருக்கு உபயோகம் என்றால் சந்தோஷமே.... மீண்டும் நன்றி

      நீக்கு
  35. கற்பனை என்பதா, யதார்த்தம் என்பதா? ஆனால் ஒன்று மற்றும் நிச்சயம். நினைக்கும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள ஒருவகை துணிவு வேண்டும். அது உங்களிடம் அதிகம் உள்ளது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் கருத்தை நான் எப்பொழுதுமே ரசிப்பவன் காரணம் என்மீது எப்பொழுதுமே ஒரு வகையான சுமையை இறக்கி வைத்து விடுகிறீர்கள் அதன் காரணமாகவோ என்னவோ நான் கவனமாக எழுத வேண்டுமென்ற பயம் மனதில் தொற்றிக்கொள்கிறது ..
      இது கற்பனை அல்ல தாங்கள் சொல்வதைப்போல மனதில் உள்ள யதார்த்தமான உண்மையை கொட்டி விடுகிறேன் அல்லது உளறி விடுகிறேன் என்றுகூட சொல்லலாம் வருகைக்கு நன்றி முனைவரே...

      நீக்கு
  36. உங்களுக்கு எழுத/ typing தெரிந்த மொழிகள் எத்தனை என்கிறியள்...
    பல தெரிந்தாலும்
    ஆனால்.
    ஒன்றுக்குள் ஒன்று கலப்பதில்லை.
    தேவை ஏற்படின்
    பிறமொழிச் சொல்களை
    அடைப்புக்குள் இட்டு
    தமிழை முதன்மைப்படுத்துகிறேன்!
    தங்கள் எல்லாக் கேள்விகளுக்கும்
    என்னால் பதில் கூற
    எனக்கோ அறிவில்லை.
    நேர்காணல் நன்று
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னடக்கத்துடன் பதில் தந்த இலங்கை வேந்தனின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  37. வணக்கம்
    ஜி
    திறக்காத புத்தகம் திறந்த புத்தகம் பற்றிய செவ்வி மிக அருமையாக உள்ளது இரசித்துப்படித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திறக்காத புத்தகத்தையும் திறந்து படித்து கருத்துரைத்து வாக்களித்தமைக்கு நன்றி ரூபன்.

      நீக்கு
  38. இன்றுதான் தங்கள் பதிவு கண்டேன்! சிரிப்பு, சோகம், சிந்தனை விரக்தி,திறமை என்பதோடு இன்னும் பல உணர்வுகளை ஒரே பதிவில் எழுப்பிய தங்கள் திறன் கண்டு வியந்தேன்! தொடரட்டும் தங்கள் பணி! வாழ்த்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயா அவர்களின் வருகையும், கருத்தும் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தேன் இன்று, தொடர் வருகைக்கும் அழைக்கிறேன் நன்று.

      நீக்கு
  39. எமனேஸ்வரம்..எழுத்தாளர் மணிகண்டன் அவர்களின் பொழுது போக்கு எழுத்து..எழுத்து என்று இப்போது புரிந்துவிட்டது...

    பதிலளிநீக்கு
  40. ///நடிகனுக்கு ரசிகனாய் இருப்பதை விட
    அரசியல் வாதிக்குத் தொண்டனாய் இருப்பதைவிட
    எழுத்தாளருக்கு வாசகனாய் இரு///
    அருமை நண்பரே அருமை
    உண்மை நண்பரே உண்மை
    எழுத்தாளரின் அனுபவம் நமக்கு வழிகாட்டும்
    நம் பாதையினை நெறிப்படுத்தும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நேசிக்கும் சரியான விடயத்தை எடுத்துக்காட்டிய, நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  41. பதில்கள்
    1. தில்லை அகத்தார் போல் மறக்காமல் தொடர்ந்து வாக்களித்தமைக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  42. அன்புள்ள ஜி,

    மிகத் தாமதமான வருகைக்கு வருந்துகிறேன். வலைத்தளம் நெட் இணைப்பு கிடைக்கவில்லை. எழுத்தாளர் எமகண்டன் பேட்டி இரசித்துப் படித்தேன். தங்களின் நெடுங்காலக் கனவு நனவாக வாழ்த்துகள்.
    நன்றி.

    த.ம.14.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கனவு நனவாக வாழ்த்தி, ஓட்டும் அளித்தைமைக்கு நன்றி மணவையாரே

      நீக்கு
  43. தவறுக்கு மன்னிக்கவும் எம கண்டன் என்பதற்கு மணி கண்டன் என்று வந்து விழுந்துள்ளது... சினிமா நடிகனுக்கு ரசிகனாக இருப்பதைவிட..... எமக்கு பிடித்த எமனேஸ்வரம்.எழுத்தாளர் எமகண்டன் ரசிகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  44. ஆஹா வித்தியாசமான பேட்டி!!!! ஆக இருக்கு.சிந்திக்கவும்,சிரிக்கவும் வைத்திருக்கிறீங்க. தாமதமானதால் தனிக்கிழமையை தவறவிட்டுட்டேன்.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிக்கிழமை வராமல் வியாழக்கிழமை வந்து கண்டு ரசித்தமைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  45. பொங்கலுக்கு பொங்கல்(பதிவு) கிடைக்கும்தானே.......!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  46. நல்லவேளையாக ...எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன்.....தப்பித்தார்....கொங்கு நாட்டிலோரு எழுத்தாளரை.... தற்கொலை செய்ய துாண்டிவிட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யய்யோ நம்மளை அந்த லிஸ்டில் சேர்க்காதீங்கோ.....

      நீக்கு
  47. அய்யா.... தனிக்கிழமை எப்போது வரும், “திறக்காத புத்தகம் வாங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  48. "விபச்சாரன்" பொருத்தமான வார்த்தைதான், கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  49. எனது வார்த்தைக்கு மதிப்பளித்து வருகை தந்து தருத்தளித்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  50. விபச்சாரத்திற்கான ஆண் பாலின சொல் புதிது. அது எல்லாம் ஓகே. அதிக மகிழ்ச்சி கிடைப்பது சாத்தியம் தானா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      அதிக மகிழ்ச்சி எந்த இடத்தில் ?

      நீக்கு