இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 15, 2015

Germany Part – 2

You Want See Big size ? Just Click One Time Photo Inside.
பழத்தில் மனிதப்பொம்மை.

ஜெர்மனி பெர்லினில்தான் அந்நாட்டின் பாராளுமன்றம் இருக்கிறது எனது இனிய இந்திய பாராளுமன்றத்தில் நுழையாத கில்லர்ஜி ஜெர்மன் பாராளுமன்றத்தில் நுழைந்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இருப்பினும் சபாநாயகர் நாற்காலியில் உட்கார முடியவில்லையே என்ற ஆதங்கம் இன்றுவரை தொடர்கிறது...
(அவ்வ்வ்வ்வ் சகோ மைதிலி சத்தமில்லாமல் படிக்கோணும் கேட்டோ) 

பெர்லின் சுவர் மேற்கு ஜெர்மனியும், கிழக்கு ஜெர்மனியும் இரண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டபோது சுமார் 111.9 கி.மீ நீளம் அளவுக்கு (1961 ஆகஸ்ட 13) குறுக்கே பெரும் சுவர் எழுப்பினார்க(ல்)ள் 

(இந்தச் சுவற்றின் பலம் இரண்டு டண் எடையுடன் கூடிய ட்ரக் வந்து மோதினாலும் ‘’ட்ரக் கண்டம்’’ அந்த அளவுக்கு பலமுடன் கட்டப்பட்டது நமது நாட்டு அரசியல்வாதிகள் குறித்துக் கொள்ளவும்) 

பிறகு பெரும் முயற்சிக்குப் பிறகு மீண்டும் இணைக்கப்பட்டபோது... அந்தச் சுவர்களை இடிக்க ஆரம்பித்தார்கள் நகரின் மையப்பகுதியில் இருந்ததை குறுக்கே சாலைகளை அமைக்கும்போது அங்கும் இங்குமாக இடிக்கத் தொடங்கியது கழுதை தேர்ந்து கட்டெறும்பு ஆனது போல கொஞ்சம் கொஞ்சமாக இடித்தது போக தற்போது அங்கு மிங்குமாக சுமார் மூன்று கி.மீ மட்டுமே ஞாபகச்சின்னமாகவும், எதிர்கால தலைமுறையினர் காணவேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வலைப்பதிவர் கில்லர்ஜி வந்து காணவேண்டுமே என்ற உயர்ந்த, உரத்த சிந்தனையின் காரணமாகவும் வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




இதில் உள்ளதெல்லாம் ’’திண்டுக்கல் பூட்டு’’ தான் சரி சாவி எங்கே ? கீழே நதி ஒடிக்கொண்டிருக்கிறதே... அதில்தான் ஏன் ? அதை வேறு பதிவில்தான் சொல்லமுடியும் காரணம் விசயம் அம் ’’பூட்டு’’

  
ஜெல் என்ற ஒரு வகையான மீன் தலையும் தெரியாது வாலும் புரியாது.

வானூர்தியின் இயந்திரம்.
 
  நண்பரின் அசாத்தியமான தைரியம்.
  சுவற்றின் ஓரம்....

பெண்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட அப்பாவி.

 
நண்பர்களை உட்கார வைத்து மரியாதையாக நிற்கும் ஸ்கூல் பையன்.
  பின்புறம் ஐந்தறிவு.


ஏதாவது புரிகிறதா ?


You Want See Big size ? Just Click One Time Photo Inside.
  பென்ஸ் மியூசியத்தில் சரித்திரக்குறிப்பு சொல்லும் தாணியங்கி இயந்திரம்..



நாடு இரண்டு துருவங்களாக பிரிக்கப்பட்டபோது காதலர்களும் பிரிக்கப்பட வேண்டிய சூழலும் அமைந்தது அப்பொழுது இருபுறமும் காதலர்கள் அழுது புலம்பி எழுதிய வார்த்தைகளும் சித்திரங்களும்தான் நாம் சுவற்றில் காண்பது இந்த சித்திரங்கள் கோணலும் மாணலுமாக இருப்பினும் அதிலும் சில நேர்காணல் இருந்ததை என்அகக்கண் உணர்த்தி என்முகக்கண் கசிந்தது உண்மையே... அந்தக் கண்ணீரில் ஒரு துளியை எடுத்து சுவற்றில் தேய்த்து விட்டேன் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று இந்த சுவற்றை அன்றிலிருந்து இன்றுவரை புதுப்பித்துக் கொண்டே வருவதுதான் அதன் சிறப்பு காரணம் பழமையை போற்றிப் பாதுகாப்பதில் இந்தியர்களைவிட ஜெர்மனியர்கள் உயர்ந்தவர்கள் என்பது எனது சிற்றறிவுக்கும் எட்டியதே... இதைச்சொல்வதில் எமக்கு துளியளவும் பயமில்லை காரணம் நான் படிக்காதவன் மட்டுமல்ல, எதற்கும் படியாதவனும்கூட மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதில் நான் உடன்பாடுள்ளவன்.

(மேலும் காரணம் மதுரை பதிவர் விழாவுக்கு வந்தபோது வாழ்வில் முதல் முறையாக மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்குள் போனேன் என் கண்களால் சுட்டெடுத்தேன் சித்திரங்களை அந்த வேதனைகளை தங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன் விரைவில்)

 
எனது அப்ரூவல் கிடைத்தவுடன்...
எனது மேற்பார்வையில்...
முதன் முதலாக இடிக்கப்பட்டபோது...
பீர்த்திருவிழா ஆம் ’’பீர்’’ குடிப்பதற்கு (ஒரு வாரம்) திருவிழா.
 






  இது பேருந்துகள் செல்லும் சாலை அல்ல எட்டாவது மாடி.

  எங்கள் தி கிரேட் தேவகோட்டையில் இதை ராட்டிணம் என்போம்.
  பெர்லின் ஜூ வின் முகப்பு.
 
எனது கைப்பேசிக்கு ஜெர்மன் தூதரகத்திலிருந்து வந்த குறுஞ்செய்தி கைப்பேசி அரபு மொழியில் இருப்பதால் அரபியுடையதோ... என எண்ணவேண்டாம் எனது கைப்பேசியை அரபு மொழியில்தான் வைத்திருப்பேன் ஐயமெனில் கீழே காண்க....

  எனது அன்றைய கைப்பேசி.
 
  கொல்லப்பட்டவர்களின் நினைவாக...

நாடு இணைக்கப்பட்டாலும் நெருக்கடியான நகரத்தின் மையத்தில் சாலையின் நடுவில் யூ.எஸ்.ஏ ராணுவம் செக் பாய்ண்ட் அமைத்து இன்று வரை நின்று கொண்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயம். பின்னணி அரசியல் சரி அது வேண்டாம் நமது நாட்டு திருடர்களையே நாம் கேள்வி கேட்கத் திராணியில்லாதபோது... நமக்கெதற்கு ? மேலும் நண்பர்கள் எல்லோரும் யூ.எஸ்.ஏ ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுக்கும்போது நான் என்ன ? செய்தேன் என்றால் யூ.எஸ்.ஏ அலுவலகத்தில் 10 யூரோ கட்டணம் வாங்கிக்கொண்டு நமது கடவட்டையில் (PASSPORT) ஆர்மி முத்திரைகள் குத்திக் கொடுக்கிறார்கள் கீழே புகைப்படத்தில் எனது கடவட்டை காண்கவும்.

 
 எனது கடவட்டை (Passport) ஆர்மி முத்திரைகள்.
நாம் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் என்பது ஊர்ஜிதமாவது மட்டுமல்ல, உலகில் எங்கு சென்றாலும் அந்த முத்திரைகளை கண்டதும் நமக்கு வாழ்த்து சொல்வதோடு நம்மை பெருமையோடும் பார்க்கிறார்கள் என்பதைதை நான் உணந்திருக்கிறேன் ஒருயொரு நாட்டைத் தவிர அது எந்தநாடு ? வேறு எந்தநாடு நமது இனிய இந்தியாவில்தான் ஆம் மதுரை பதிவர் விழாவுக்கு வரும்போது தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரை விமான நிலையத்தில்தான் சுங்க அதிகாரியுடன் சண்டை எனது கையில் கோடரி இல்லாத காரணத்தால் ? அவரு(னு)க்கு ஆயுசு கெட்டி 

(உண்மையில் நம் தமிழன் அந்த இடத்திற்கும் சென்று வந்திருக்கிறானே, என பெருமைப்படவேண்டிய விடயம் நண்பர்களே... சத்தியமாக சுயநலத்திற்க்காக சொல்லவில்லை) 

அதென்ன சண்டை ? இதையெல்லாம் சுற்றுலா வந்த இடத்திலேயா  சொல்ல முடியும் வேற எங்கே... வேற எங்கே ? வேற பதிவுதான்.


  பூங்காவில்...

முன்பதிவை காணாத நண்பர்களே கூடுதல் புகைப்படங்கள் காண கீழே சொடுக்குக...
மேலும் புகைப்படங்கள், காணொளி அடுத்த பதிவில்...

எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால்  நான் எதற்காக ஜெர்மனி வந்தேன் என்பதை திரு. தில்லை அகத்தார் அவர்கள் முதல் பதிவில் சரியாக கருத்துரை சொல்லி இருந்ததுதான்.

58 கருத்துகள்:

  1. உங்கள் விடுமுறை(?)யை நன்றாகவே ரசித்திருப்பது தெரிகிறது. மேலும் பல நாடுகளுக்குச் செல்ல வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுநிமிடமே வந்து வாழ்த்தி கருத்துரை தந்தமைக்கு நன்றி ஐயா தங்களது பெர்லின் சுவர் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் தந்துள்ளேன்.

      நீக்கு
  2. தங்களுடன்.ஜெர்மனியைச்.சுற்றிப்.பார்த்ததைப்.போல்.இருக்கின்றது.
    அன்பின்.இனியபொங்கல்.நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்னும் சுற்றலாம் புகைப்படம் இன்னும் இருக்கிறது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  3. இரண்டு பதிவுகளையும் ஒன்றாக படித்தேன் ! படங்களும் கொடுக்கும் விளக்கங்களும் அருமை! நானும் ஜெர்மன் சென்றேன் ஆனால் பெர்லின் போகவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயா அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  4. படங்கள் எல்லாம் அருமை.
    ஜெர்மனிய பெண்களின் பாரம்பரிய உடையை கண்டுப்பிடித்து சொன்னதற்கு மிக்க நன்றி.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கு நன்றி எவ்வளவு விபரங்கள் எழுதி இருக்கிறேன் அதைப்பற்றி எதுவுமே கூறாமல் பாரம்பரிய உடை ரொம்ப முக்கியம்...
      ஆஸ்திரேலியா போயும் இப்படியா ? பால் பொங்கிடுச்சா ?கால் வீங்கிடுச்சா ?

      நீக்கு
  5. படங்களைப் பார்த்து ரசித்தேன் ,உங்களைப் போன்றே நானும் முதலில் ஏமாந்தேன் ,க்ளிக் செய்த பின்தான் தெரிகிறது ...free wifi...cold beer என்பது :)
    அந்த இராட்டினத்தில் ஏறிப் பார்த்தால், ஊரையே பார்க்கலாம் போலிருக்கே !
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களைப் பார்த்தது சரி நான் ஏமாந்தேன்னு எழுதியிருக்கீங்க... எப்பச்சொன்னேன் ஏமாந்தேன்னு...
      ஆமா ஊரே தெரிஞ்சது உண்மையே..3க்கு நன்றி.

      நீக்கு
  6. பெர்லின் சுவரைப்பற்றிய எனது சந்தேகத்துக்கு விளக்கமளித்தமைக்கு நன்றி!! படங்கள் அருமை... மதுரை விமானத் தம்பி முட்டாத்தம்பி... கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை..............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகம் தீர்ந்து சந்தோஷப்பட்டமைக்கு நன்றி ஆமா நண்பா முத்திரைகளைப்பற்றி விபரம் தெரியாதவனை எதற்க்கு வேலைக்கு சேர்த்தாங்கே...

      நீக்கு
  7. படங்களும் பதிவின் விளக்கமும் அருமை
    தொடருங்கள்

    தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றியோடு பொங்கல் வாழ்த்துகளும்....

      நீக்கு
  8. பழ மனித பொம்மை அழகு
    பெர்லின் சுவர் பற்றி அறிந்தோம்.
    ராட்டினம் எவ்வளவு உயரமா.....இருக்கு..... !!!
    படங்களும் விளங்கங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும், கருத்துரைக்கும், பெரிலின் சுவற்று வரலாற்றை அறிந்து, ராட்டிணத்தைப்பார்த்து மயங்கி, அந்த மயக்கத்தில் வாக்களிக்க மறந்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  9. "படம் சொல்லும் பாடம்"
    ஜெர்மனியின் ஜோரான படங்கள்
    வெளி வந்த காரணத்தால்?
    தமிழகத்தில்
    பொங்கல் ரீலீஸ் படங்கள் எல்லாம்
    படுத்து விட்டனவாமே?
    பொங்கலுக்கு ஹிட் படங்கள் தந்தமைக்கு
    வாழ்த்துக்கள்!
    பாராட்டுக்கள்
    அய்யா! கில்லர்ஜி அவர்களே!
    கமென்ட்ஸ் கல்லா கட்டட்டும்.
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வாக்கு பொன்னாகி ரிலீஸான படங்கள் எல்லாம் படுத்து இத்துடன் தமிழ் சினிமா அழிந்து சீர்கெட்டு வரும் தமிழ் பாரம்பரியம் இனியெனும் தழைத்திட இந்த தைத்திருநாளில் வேண்டுகிறேன்.

      நீக்கு
  10. ஆஹா ! அருமையான புகைப்படங்கள் . பகிர்வுக்கு நன்றி அண்ணே ! அப்படியே தங்களுக்கும் தங்களின் இல்லத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா, அப்படியே... உங்களுக்கும் பொங்கலோ பொங்கல்.

      நீக்கு
  11. அழகிய படங்களுடன் தகவல்களும் உங்கள் பாணியில் அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும், பொங்கல் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. ஆரஞ்சு கலரில் பூசணிக்காய் உருவில்......... இது பழம் தானா?

    சுவர் கட்டியபோது விஜயகாந்த் அங்கே இருந்திருந்தால் காதலர்கள் அனைவரையும் சேர்த்து வைத்திருப்பார்!! பின்னர் இடிக்கப் பட்டபோது காதலர்கள் சேர்ந்திருப்பார்களா?!! காதல் அழிவதில்லை அல்லவா!!

    வமான எஞ்சின் சைஸ் யூகிக்க முடியவில்லை, ஒப்பிட்டுப் பார்க்க எதுவும் இல்லாததால். பொதுவாக இது போன்ற படங்களில் நமக்குத் தெரிந்த சைசில் ஒரு பொருளை வைத்தே படமெடுப்பார்கள்.

    படங்கள் அபாரம், எங்க வைக்கின்றன, நன்றி நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பா அதுவும் ஒரு காய்தான் சரி நண்பா அதுதான் மிஸ்ஸாகிப்போச்சு இப்ப விசயகாந்தை இலங்கைக்கு அனுப்பி வைங்களேன், எஞ்ஜின் பென்ஸ் மியூசியத்தில் உள்ளது இன்னும் வரும் நிறைய புகைப்படங்கள். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. அனைத்து படங்களையும் (PARTS I & II) ரசித்தேன். இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வர முடிந்தது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களை காணவில்லையே என நினைத்துக்கொண்டே இருந்தேன் தங்களுக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  14. தகவல்களுடனான புகைப்படங்கள் வெகு அருமை. வாழ்த்துக்கள். த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சர வேந்தரின் முதல் வருகைக்கும். கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  15. சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் எல்லாம் அடிமையாக ஆகிவிட்டார்கள். அந்த நாற்காலி.......ஆசை வேண்டாம் நண்பரே.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாந்தான் வேண்டாம்னுதானே ஒதுங்கி நிக்கேன்.

      நீக்கு
  16. பிசாசு கூட எல்லாம் நின்னு அதத் தொட்டுகிட்டு ஒரு ஃபோட்டோ?!!

    ஃபோட்டோக்கள் அருமை! அங்க போயி சுத்திப்பாக்கறது வுட்டுப்புட்டு அது என்ன பெண்களின் பாரம்பரிய உடை??!! பார்த்து.....

    பெண்களின் கூட்டதிற்கு நடுவே நான்// ஹஹஹ் அங்க இருக்கறதே 2, 3ஓ பொண்ணுங்கதான் மத்தவங்க எல்லாம் ஆணுங்க...ஆனா போடறது மட்டும் பொண்ணுங்க நடுவுலனு....ஹஹஹஹ்

    ஜெல்லி ஃபிஷ் அருமை....5 அறிவு பின்னாடி இல்ல...முன்னாடிதான்...பின்னாடிதான் 6 அறிவு...

    ஓ! நாய்கள் அழகு! 6 அறிவுகளை விட 5 அரிவுகள் கொள்ளை அழகு!!!

    சரி ! சபாநாயக்கர் பத்வி காலியா இருக்காம் வேணுமா உங்களுக்கு?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரு யாரு தெரியுமா ? ஜெர்மனி திருவள்ளுவர் மாதிரி நான் எங்கே போனாலும் பாரம்பரிய உடையைப்பற்றி தெரிஞ்சு கிருவேன் யானைக்கு 5 அறிவுனு சொல்றாங்க, மனுஷனுக்கு 6 அறிவுனு சொல்றாங்க ஆனால் ரெண்டு பேருக்குமே மதம் பிடிக்குது அதனாலே கணக்கும் உதைக்குது சரிதான். சபாநாயகர் பதிவி வாங்குறதுக்குள்ளே சிவலோக பதவி வந்துடும் போலயே... நம்மூருல பத்துமாடி கார் பார்க்கிங் இருக்கு ஆனால் இதைப்பார்த்தால் ரோடு போலவே இருக்கும் அதுதான் சிறப்பு. விஸ்தாரமாக கருத்தை கொடுத்துப்புட்டு வாக்கு போடாமல் புட்டுக்கிட்டு போனதற்க்கு நன்றி.

      நீக்கு
  17. அந்த எட்டாவது மாடி.??....ஆஹா!!! பார்க்கிங்க் ஃப்ளோர்....இப்ப இங்கயும் வந்தாச்சு தெரியும்ல...ஆனா என்ன நீங்க போட்டுருக்கற மாதிரி அவ்வளவு அழகா இருக்காது...சூப்பர்!

    பதிலளிநீக்கு
  18. பேர்லின் சுவர் நிறைய கதைகள் சொல்லும். சேர்ந்தவர்களும் உண்டு. தொலைத்தவர்களும் உண்டு. எங்க வீடருகிலும் ஒருவர் குடும்பத்தை இழந்து வாழ்கின்றார்.
    ஆமாமா...நீங்க வந்து சுவரைக்காணவேணுமென்றுதான்......!!!!!!
    அந்த சுவரில வேறு எழுதியிருக்கு பார்க்கேல்லையோ. அப்பவே உயர்ந்த,உரத்த சிந்தனையாளர்கள் ஜேர்மனியர்கள். அதுசரி பஞ்சாயத்து செய்தீர்களா???. ஆ..ஹா உங்க மேற்பார்வையிலா நடந்திச்சு. சரிதான்.
    நானும் நினைத்தேன் அந்த படத்தில் 3 பேர்தான் ஆனாலும்!!... சரிசரி எதுக்கு வம்பெனக்கு..
    அதனை படங்களும் அழகு. நன்றாக எழுதியிருக்கிறீங்க. நிறைய "விரைவில் பதிவாக" என்பது இருக்கு. மறக்காம பதிவிடுங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாய்ண்ட் to பாய்ண்ட் கவனமாக படிச்சு இருக்கீங்க, இனிமேல் சரித்திரத்தை பற்றி எழுதும்போது கவனமாக இருக்க வேண்டும் இருந்தாலும் நான் உண்மையை மட்டுமே எழுதியிருக்கிறேன் விரைவில் வரும் பார்ட் 3 வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. மீண்டும் நினைவு வந்து மீண்டு வந்து வாக்களித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  20. வணக்கம்
    ஜி
    தங்களின் சுற்றுப்பயணம் இனிதாக அமைந்துள்ளது என்பதை பதிவை பார்க்கும் போது தெரிகிறது...விளக்கங்கள் எல்லாம் சிறப்பாக உள்ளது த.த.ம 8
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ரூபன் தாங்களும் ஜெர்மனியை ரசித்தமை கண்டு மகிழ்ச்சி தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  21. பெர்லின் சுவர்
    பல குடும்பங்களைப் பிரித்த சுவர்
    காதலர்களைப் பிரித்த சுவர்
    தந்தைகளையும் மகன்களையும் பிரித்த சுவர்
    பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது
    மனிதத்தின் பொன்நாள் அல்லவா
    அச்சுவர் அருகில் தங்களைக் கண்டு மகிழ்ந்தேன்
    தங்களின் பயணம் தொடரட்டும் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நம்பரே அது ஒரு வேதனையான சரித்திரமே..
      மனிதாபிமானமுள்ள மனிதனுக்கு அந்த இடத்தில் கண் கலங்குவது உண்மையே...
      எனது பயணம் தொடர வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  22. பதில்கள்
    1. இனிய நண்பருக்கு பொங்கல் நல்வாழ்த்துகளோடு நன்றியும்.

      நீக்கு
  23. அடுத்த முறை நானும் வருவேன்...!!!

    சாவி எங்க...? அறிய ஆவலுடன் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் பூட்டு என்பதால் சாவியை காண ஆவல் கொண்டு வருவதற்க்கும் நன்றி.

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே!

    படங்கள் அத்தனையும் கண்ணுக்கு விருந்தாக இருந்தது...

    பழங்களாலேயே, அமைந்த பொம்மைகள் அழகாக இருந்தன..

    அந்த இராட்டனத்தின் பிரம்மாண்ட வடிவம் பார்க்கும் போதே தலை சுற்றுகிறது...

    இடையிடையே செய்தித் துணுக்குகள் சுவாரஸ்யமாக, ரசிக்கும்படியாக எழுதியிருப்பது அருமை!

    பெர்லின் சுவர் பற்றிய விபரங்கள் அறிய தந்தமைக்கு நன்றி..

    நாங்களும், உங்களுடன் சுற்றிப் பார்த்த நிறைவை தந்தது பதிவு.! .நன்றி...
    அடுத்த பதிவு காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..சுவைபட எழுதி பதிவை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்..

    தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரியின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக கருத்துரை அளித்தீர்கள்.

      நீக்கு
  25. உங்கள் மூலம் நானும் ஜெர்மனி நகரைச் சுற்றி வந்தேன்..... நன்றி கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்னும் சுற்றலாம் வாங்க... நன்றி.

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே!

    தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த உழவர், மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் திருவள்ளுவர் தின வாழ்த்துகள் சகோ.

      நீக்கு
  27. சந்தோஷப் பயணம் என்பது படங்களின் பகிர்வில் தெரிகிறது.
    நிறைய விவரங்கள் தெரியத் தந்தீர்கள்.
    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் வருகை தந்து நிறைய விடயங்கள் அறிந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  28. அங்கு மாடியே.. நான்கு வழிச் சாலை மாதிரி இருக்கு..... இந்தியாவிலோ..... இருக்கிற ரோடே... சந்து பொந்து மாதிரி இருக்கு... இதுல..செவ்வாய் கிரகத்துல கக்கூஸ் கட்ட விண்கலம் வேறு அனுப்பி இருக்காங்க.....

    பதிலளிநீக்கு
  29. அருமையான சுற்றுலா. எப்ப பார்த்தாலும் என்னுடைய comments மட்டும் your comment will be visible after approval. why?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடையது மட்டுமல்ல அனைவருடையதும் அப்படியே....
      வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு