இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மார்ச் 16, 2015

நீ இன்னும், பாமரனே...

You want see big size ? Just click one time Photo Inside.
பாமரப்பயல்களுக்கு, பார்த்தாயா ? சம்பளத்தின் நிலைபாட்டை இந்தக்கோடிகள் எங்கிருந்து போகிறது தெரியுமா ? தெருக்கோடியில் நிற்க்கும் நம்மைப்போல் உள்ளவர்களிடமிருந்துதான்.... நம்மிடம் ஏது ? இவ்வளவு பணம் எனக்கூட நீ கேட்பாய், ஏனெனில் நீ இன்னும் பாமரனே..  சிறுதுளி பெருவெள்ளம் என்பதின் பொருள் உனக்கு தெரியுமா ? தெரியாது, ஏனெனில் நீ இன்னும் பாமரனே.... தமிழ்நாட்டின் தற்காலமக்கள் தொகை 7 கோடி தலைக்கு ஒருதினம் ஒருரூபாய் போதுமடா பாமரா... ஒருநடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து முடிக்க ஒரு மாதகாலம் தாராளம் மிகுதிக்குத்தான் டூப் மாஸ்டர்கள் இருக்கிறார்களே... ஆபத்தான காட்சிகளில் நடிக்க அன்றாட அத்தக்கூலிக்கு, (முக்கியவிசயம், பெரும்பாலும் தமிழர்கள்) பாமரா இந்தப்பணத்தை நீ என்று சம்பாரிக்கமுடியும் ? எப்படி சம்பாரிக்க முடியும் ? முடியாது காரணம் நீ உனக்காக வாழவில்லை இவர்களை போன்றவர்களுக்காக வாழ்கிறாய், இவர்களுக்காகவே சாகிறாய், ஏனெனில் நீ இன்னும் பாமரனே.... இதனால்தான் பெண்களும் துணிவே துணையென, துணிந்து விட்டார்கள் துணிகளை களைந்து உன்மனதில் நிலைகொள்ள, காரணம் நீ சிலை வடிக்கிறாய், வருங்கால தலைவியே என்கிறாய், ஏனெனில் நீ இன்னும் பாமரனே.... அற்புதமான மனிதப்பிறவி எடுத்து பூமிக்கு வந்திருக்கிறாய், உன்னைப்படைத்த இறைவனுக்கு சேவை செய்து வாழவேண்டாம், உன்னைப்பெற்ற தாய்-தந்தையர்க்காக வாழவேண்டாம், உனது தாய்நாட்டுக்காக வாழவேண்டாம், உனது ஊரின் புகழுக்காக வாழவேண்டாம், உனது வீட்டிக்காக வாழவேண்டாம், உனக்காகவாவது சுயநலவாதியாக வாழலாமே ! புரிகிறதா, பாமரா ? ஒருவேளை புரியவில்லையெனில் நீ இன்னும் பாமரனே...
 
 CHIVAS REGAL சிவசம்போ-
தந்தை பெரியார், Dr. M.S. உதயமூர்த்தி இவங்களெல்லாம் சொல்லி கேட்காத நாங்க, நீ சொல்லி கேட்ருவோமாக்கும், தலைவன் படம் ரிலீஸானா குவாட்டர் கிடைக்குமே நீ கொடுப்பியா ? கொடுக்கமாட்டே, ஏன்னா, நீ ஒரு கஞ்சனே....


66 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஜி
    அவர்கள் கோடி ஆக்க யார் காரணம் நம்மைப் போன்ற பாமரந்தான்.... ஜி.. கையில பணம் இல்லா விட்டால் பக்கத்தில கடவேண்டி படம் பார்க்கும் கூட்டம் எத்தனை பேர்....... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள் நன்றி.

      நீக்கு
  2. இந்நிலை என்று மாறுமோ?
    வேதனைதான் மிஞ்சுகிறது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அந்த வேதனையின் விளைவே இந்தப்பதிவு.

      நீக்கு
  3. ஊசி முனைக் காதில் ஒட்டகங்கள் நுழைந்து வெளியே வந்தாலும்
    இந்த ஓட்டைக் காதுகளில் எதுவும் நுழையாது!..

    ஊதுகின்ற சங்கை எடுத்து ஊதி விட்டீர்கள்..
    ஒற்றை ஆளாவது திருந்தினால் சந்தோஷம் தான்!..

    பதிலளிநீக்கு
  4. அவனுக்கு தொழில் அது... அவன் பின்னால் நாம் எதற்காக ஓட வேண்டும்...
    பால் அபிஷேகமும்... பூக்குழியும்.... காவடியும் எடுக்கும் கேவலங்கள் எல்லாம் எப்போது திருந்துவது?
    நல்ல பகிர்வு அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இந்தவகை செயல்களை அரசாங்கமே தடுக்கமுடியும் ஆனால் அவர்களும் ஊக்குவிற்க்கின்றார்கள்.சுயநலத்திற்க்காக...

      நீக்கு
  5. ஊசிமுனை காதுக்குள்ள ஒட்டகங்கள் போகும்போது.........தாங்கள் சொல்வது போ காமலா இருக்கும்?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகும் நண்பரே ஆனால் நிற்காது... டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களை விடவா சொல்வதற்க்கு ஆள் வேண்டும்.

      நீக்கு
  6. நல்ல தொரு பதிவு நண்பரே!

    பாமரன் தான் நாம் எல்லோரும்! யோசிக்கும் புத்தி இருந்தாலும் பாமரன் தான்! டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி ஐயா அவர்கள் எழுதாததா நீங்கள் சொல்லியது போல்....என்னதான் விழிப்புணர்வுகள் எழுதப்பட்டாலும், பேசப்பட்டாலும் சுயம் வேண்டும்...சுய சிந்தனைகளும், சுய திருத்தங்களும், சுய உணர்வுகளும் வேண்டும். அது இல்லையேல் செவிடன் காதில் சங்குதான்.....ஒரு வேளை பாமரன் அந்நியனாகிவிடுவானோ?! உங்கள் இந்த இடுகை எங்களுக்கு ஒரு சிறிய இடுகைக்கு வழி வகுத்துவிட்டது....ம்ம்ம் அதுவும் சுட்டதுதான் (எங்களுக்கு மின் அஞ்சலில் வந்த ஒன்றுதான்....இப்போது அது சுற்றி வருகின்றது. உங்களுக்கும் கூட யாராவது அனுப்பியிருக்கலாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் இடுகை என்று சொன்னது புகைப்படத்தைதானே... இதை நான் எழுதியே ஒரு வருடத்திற்க்கும் மேலிருக்கும் புகைப்படத்தை எனது பாணியில் கொஞ்சம் மாற்றினேன், இன்றைய சம்பளம் இன்னும் கூடுதலே... தங்களது பதிவைக்காண காத்திருக்கிறேன்.

      நீக்கு
  7. கடவுளே வந்தாலும் திருத்தமுடியாது. பெற்றவங்களுக்கு ஒரு நேரச்சாப்பாடு போடாதவங்க,கட் அவுட் க்கு பால் அபிஷேகம். இதையெல்லாம் பார்க்கும்போது....
    வாசிக்கும்போது மனதுக்கு ரெம்பவே கஷ்டமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்தான் சகோ மாற்றங்கள் வரும் நம்புவோம்.

      நீக்கு
  8. சுய சிந்தையற்றவர்கள். இப்படி யார் சொல்லியும் திருந்தாத ஜென்மங்கள்.

    பதிலளிநீக்கு
  9. தாங்கள் சொல்வதை, என்னால் முடிந்த அளவு செயல்படுத்திக் கொண்டு இருக்கிறேன். சிலரிடம் பேரம் பேசுவதில்லை என்று,
    அப்புறம் முன் கை நீண்டால், நம் முன்னால் உள்ளவர் பக்கம் நம் கை நீட்டினால், அவரின் முழங் கை முகம் பேர்க்கும் இது எனக்கு தெரிந்த வகையில்,


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் செயலுக்கு எமது ராயல் சல்யூட்.
      தங்களின் முழங்கை தத்துவம் அருமை.

      நீக்கு
    2. முழங்கைக்கு தங்கள் கருத்து,

      நீக்கு
    3. அதைச்சொல்வேன் விரைவில் பதிவின் மூலம் இது ஒரு பொதுவான வேதனை.

      நீக்கு
  10. அன்புள்ள ஜி,

    பாமரனுக்கு நன்றாகப் பாடப் எடுத்தீர்கள்... மர மண்டைகளில் ஏறவாப் போகிறது? ஊதுற சங்கை ஊதி வைப்போம்... காதுள்ளவன் கேட்கக் கடவன்.
    -நன்றி.
    த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே... எத்தனையோ அறிஞர்கள் சொல்லி விட்டார்கள் மாற்றம் வரவில்லையே.... இருப்பினும் ஊதுவோம்.

      நீக்கு
  11. பாமரனாக பலர் இருப்பதால் பலரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஊதுகிற சங்கு என்று கூற மாட்டேன். பகலவனைப் பார்த்து நாய் இடும் ஊளைதான் இவையெல்லாம் என்று சொல்லுவேன். ஏனென்றால் நம்மில் அநேகர் பாமரர்களே,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை பல பதிவர்களும் செய்கிறார்கள் அவர்களை உயர்த்தி எழுதுவதால் அவர்கள் உயர்ந்து விட்டார்கள் என்று சொல்லவில்லை நீ தாழ்ந்து விட்டாயே 80தே எமது கவலை.

      நீக்கு
  12. உங்கள் சிந்தனையே ஒரு தனித் தன்மை படைத்தது!

    பதிலளிநீக்கு
  13. சரியாக சொன்னீர்கள் நண்பரே!
    த ம 12

    பதிலளிநீக்கு
  14. அருமையான கருத்து சொல்லியிருக்கிறீர்கள் கில்லர்ஜி. படிக்க வேண்டியவர்கள் படித்தால் புரியும்படி இருக்கிறது பதிவு. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.
    பாராட்டுக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  15. சம்பந்தப்பட்ட நடிகர்களே சொல்லியும் திருந்தாத ஜென்மங்கள் ,திருடனா பார்த்து திருந்தினால்தான் உண்டு என்பதைப் போலத்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் பகவான்ஜி சில நடிகர்கள்கூட சொல்கிறார்கள், சிலர் சொல்வது போலவே நடிக்கிறார்கள்.

      நீக்கு
  16. யாதவ் பயேங் மனிதருள் மாணிக்கம். இந்த மாதிரி மனசு தமிழக முதல்வர் யாருக்கேனும் இருந்திருந்தால் மாநிலம் பசுமையாகியிருக்கும், மாதம் மும்மாரி பொழிந்து கொண்டிருந்திருக்கும், மக்கள் உணவுத் தன்னிறைவு பெற்றிருப்பார்கள். அயோக்ய அரசியல்வாதிகள், முட்டாள் மக்கள், விளைவு நாடு முழுவதும் பஞ்சம், இலவசத்தை நம்பிய மக்கள் தெருவில்.

    வாழ்க..........யாதவ் பயேங்!! இறைவன் தங்க;ளுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் வழங்கட்டும்.

    [தொடரும்]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் Jadav Payeng பாராட்டுக்குறியவரே..... வாழ்த்துவோம் அவரை.

      நீக்கு
  17. நடிகர்கள் சம்பளம்!! ஒரு பொருளின் விலையை நிர்ணயிக்க அதன் உரிமையாளருக்கே அதிகாரம் உண்டு, அதில் தலையிட மற்றவர்களுக்கு இடமில்லை என்பது என் கருத்து.

    அவர்கள் என்னை விட எவ்விதத்தில் மேம்பட்டவர்கள்?

    இப்படி கேள்வி கேட்பவர்கள் வேண்டுமானால் 150 கோடியில் ஒரு படத்தில் நடித்துப் பார்க்கட்டும், படம் ஓடுகிறதா, போட்ட முதல் வருகிறதா என்று பார்ப்போம்.

    ஒரு நடிகன் சாதாரண கூலித் தொழிலாளி நிலையில் இருந்து ஒரு நட்சத்திர நடிகராக உயர்ந்து நிலைத்து நிற்க சந்தித்த சோதனைகள், வேதனைகள், உழைப்பு, இன்னல்கள் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? அரசியல்வாதிகள் போல இவர்கள் கொள்ளையடித்துவிடவில்லை. தயாரிப்பாளரிடம் ஊதியமாகவே பெறுகிறார்கள். தயாரிப்பாளரும் சும்மா கொடுத்துவிடவில்லை, இவரை வைத்து படமெடுத்தால் ஓடும், லாபம் வரும் என்றால் மட்டுமே அவர் கொடுப்பார். படம் பார்ப்பவரும் தர்மத்துக்கு கொடுக்கவில்லை, தன்னுடைய மகிழ்சிக்கு, பொழுது போக்குக்குத் தான் கொடுக்கிறார்கள். எனவே நடிகர்களை சம்பளத்தை ஏளனம் செய்வது தகாது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவுரையான கருத்துரைக்கு முதற்க்கண் நன்றி நண்பரே...
      தாங்கள் சொல்வது அனைத்தும் மறுக்க முடியாத உண்மையே...

      இந்நிலையின் தொடக்கம் எங்கே 80தை நாம் கவனிக்க வேண்டும் பாமரன் தனது சந்தோஷத்திற்க்காக கூலியை கொடுத்து விட்டு தனது நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பி விட்டால் இவ்வளவு சம்பளம் ஏறியிருக்க வாய்ப்பில்லை ஆனால் அவர்களை நடிக்கும் தொழிலில் உள்ள சராசரி மனிதன் என்று நினைக்காமல் அவனைக் கடவுளாக பூஜிப்பதால்தாலும், யாரோ ஒரு தமிழன் எழுதிய வசனத்தை தமிழே தெரியாத இவண் உச்சரிக்க அதை இவணும் நம்பி கைதட்டுகிறான், அதையே வேதவாக்காக தனது வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்வதாலும் இன்று இத்தனை கோடிகள் வாங்கும் சில நடிகர்கள் தொடக்க காலத்தில் இதனைவிட அருமையாக, கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு, நடித்தார்கள் அன்று கூலி குறைவு, இன்று வந்து போனால் போதும் இந்த நிலைக்கு கோடிகள், தயாரிப்பாளர் வியாபாரி சின்னமீனைக் கொடுத்து, பெரியமீனை பிடித்து விடுவான் தாங்கள் சொன்ன ஒருவிடயம் அருமை இவர்கள் அரசியல்வாதிகளைப்போல ஊழல் செய்யவில்லை இமேஜ் ஏறும்போது சம்பளம் தானாகவே உயர்ந்து விடுகிறது. என்னைப்பொருத்தவரை ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட வேண்டும் 80தே... இதனால் பல வீட்டில் அடுப்பு எரிவதில்லை, பெற்றோர்களின் வயிறே எரிகிறது.
      இன்னும் எழுத ஆசை வேண்டாம் பதிவுக்கு வழி தந்து விட்டீர்கள் நன்றி நண்பரே....

      நீக்கு
  18. பொழுது போக்கா படம் பார்த்தோமா...வந்தோமான்னு இல்லாமல்....அபிஷேகம் பண்ணுறேன்னு உயிரையே விடுறானுங்க... தலைவான்னு சொல்லுறாங்க...தலைமைப் பண்பு நடிகர்களுக்கு இருக்கா. அமுக்குளியா தன்னுடைய காரியத்தை செய்துட்டு போயிடுறானுங்க. அவுங்க நிழலாக பண்ணிட்டு போறதை ஜனங்க நிஜம்னு நம்பி ஏமாந்து போயிறாங்க...எல்லாம் ஒருமயக்கம் தான்...எப்போ திருந்துவானுங்களோ...விழிப்புணர்வு பதிவு அருமை சகோ தம் 17

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், விரிவான கருத்துகளை பதிந்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  19. கடவுள் போல யார் வந்தாலும் திருத்தமுடியாது சகோ!

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா3/17/2015 3:08 AM

    இதுவும் ஒருவித அரசியலே.
    எனக்கு கொஞ்சம் தான் புரியுது.
    ஆனாலும் வாசித்தேன் சகோதரா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அரசியல்வாதிகளும் நடிகர்களே... சகோ.

      நீக்கு
  21. உண்மையான ஆதங்கம் தான். ஆனால் எவ்வளவு சொன்னாலும் திருந்தவ போகிறார்கள். கோடிகளில் புரளும் இவர்களுக்காக தங்களின் உயிரையும் மாய்த்தவர்கள் எத்தனை பேர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஜென்மங்கள் இருந்து நாட்டுக்கு பிரயோசனம் இல்லையே... போகட்டும்.

      நீக்கு
  22. தராதரம் அறியாத மனிதரை நினைத்து வரக்கூடிய தார்மீகக் கோபம்தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே என்று தணியும் இந்தக் கோபம் ?

      நீக்கு
  23. உழைத்துப் பெற்றாலும் ஒருவகையில் இவர்கள் பெரும் சம்பளம் அதிகம்தான் என்று எனக்குத் தோன்றுகிறது! கிரிக்கெட் வீரர்களும் இதில் அடக்கம்! இவர்களை ரசிக்கலாம்! கொண்டாடுவது எல்லாம் அதிகமாகத்தான் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதன் நண்பரே உண்மையாக உழைத்தாலும் அதிகம்தான்.

      நீக்கு
  24. கில்லாடி கில்லர் ஜி !

    உண்மையின் தரிசனம் இதுதானே
    உரக்கச் சொல்வதும் நீதானே
    பண்ணிசை கேட்டுப் பழகிட்டால் -குத்துப்
    பாட்டுக்கள் எமக்குப் பிடிக்காதே !

    (இது நம்ம வாய்ஸ்)


    புத்தி சொல்லக் கிளம்பிட்டார்
    பூலோ கத்தை மாற்றிவிட
    பத்திக் கொண்டு வருகிறதே - தல
    படத்தை பார்ப்பது தவறென்றால் !

    ( இது ரசிகன் வாய்ஸ் )

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருபுறமும் சீரான கருத்துரை வழங்கிய சீராளன் அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  25. நியாயமான கோபம். என்ன செய்வது. தற்காலச்சூழலில் இது தவிர்க்கமுடியாததாகிவிட்டதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் முனைவரே வருகைக்கு நன்றி.

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே.!

    நல்ல சமூக விழிப்புணர்வை தூண்டும் விஷயத்தை பதிவாக்கியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.. யாதவ் பயேங் இயற்கை மீது பற்று வைத்து உழைத்திருப்பது பெரும் பாராட்டுக்குரிய செயல்.. அவரை அறிமுகப்படுத்தி பெருமைபடுத்திய தங்களுக்கு நன்றிகள்.. அவரைப் பற்றி ஏற்கனவே படித்ததும் நினைவுக்கு வந்தது..உலகில் நல்லவர்களும் இவரைப்போன்று உள்ளார்கள்..வாழ்க வளமுடன் என அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..

    இவரிடம் பேரம் பேசுவோம்..என நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது உண்மை.. பெரிய பெரிய கடைகளில் வாயே திறக்க முடியாதே..! வாங்கிய பொருட்களுக்கு வரும் பில்லுக்கு போக மீதியிருக்கும் சில்லறையையும் சேர்த்துக் கொடுத்தல்லவா வெளி வருவோம்...!.காரணம், பகட்டுத்தன்மையில் விளக்குப்பூச்சிகளாய் வீழ்ந்து விட்டோம்..என்ன செய்வது..? காலத்தின் கொடுமை..

    பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரரே...

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து விரிவான விளக்கவுரை தந்தமைக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  27. திருடர்களா.... பார்த்து இரக்கப் பட்டு திருந்தினால்தான் உண்டு....

    பதிலளிநீக்கு
  28. அண்ணே ! இப்போனு இல்ல . காலந்தொட்டு கலை நம் மக்கள் ரத்தத்துல ஊறிப்போன ஒரு விஷயம் . என்ன அந்தகாலத்துல கூத்தாடிகளுக்கு இருந்த மரியாதை இப்போ விசுவாசமாகவும் அப்படியே நம்பற அளவுக்கும் மாறிடுச்சி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அந்தக்கலையாலே இப்போ தற்கொலை செய்துக்கிறாங்களே....

      நீக்கு
  29. ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு விதமாக பாமரனும் உற்பத்தி ஆகிக் கொண்டேதான் இருக்கிறான்

    பதிலளிநீக்கு
  30. நல்லக் கருத்தை சொன்ன பதிவு.
    வாழ்த்துக்கள்.
    வெகுதூரம் சுமைதூக்கி வரும் பழக்கார பாட்டியிடம், இது போன்று செருப்பு தைக்கும் தொழிளார்களிடம் பேரம் பேசாமல் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தாங்கள் சொன்னதை நடைமுறைப்படுத்தி வருகிறேன் நெடுங்காலமாக....

      நீக்கு