இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 20, 2015

என்னைப்பார் யோகம் வரும்.

சிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் ''என்னைப்பார் யோகம் வரும்'' என அப்படியானால் ஒரு புகைப்படத்தை பார்த்தாலே யோகம் வருமென்றால் ?

உயிருடன் தினம் தினம் பார்த்து அதனுடன் வாழ்வைக் களிக்கிறார்களே சலவைத் தொழிலாளிகள் அவர்களின் வாழ்வாதாரம் ஆண்டாண்டு காலமாக உயரவில்லையே ஏன்

இந்த புகைப்படத்தை எத்தனை காலம் வீட்டில் மாட்டிவைத்தால் யோகம்வரும் புகைப்படத்தை மாட்டி வைப்பவர்கள் அதை உயிருடன் வாங்கி வீட்டில் கட்டி வைத்தால் என்ன

ஒருவேளை வளப்பதற்க்கு பிரச்சனையாக இருந்தால் நம்மூரில் ஆட்டோவை வாடகைக்கு  விடுகிறோமே அதைப்போல... சலவைத் தொழிலாளிகளிடம் வாடகைக்கு விடலாமே ! அப்படி செய்தோமையானால் நிச்சயமாக அது யோகம்தான் ஏனெனில் உபரி வருமானம் யோகம்தானே !

இதற்கே இவ்வளவு யோகமென்றால் இதைவிட கூடுதல் எடையுள்ள யானையை வாங்கி வளர்த்தால் இன்னும் கூடுதலான யோகம் கிடைக்குமே ! மேலும் கோவில் திருவிழா நாட்களில் வாடகைக்கு விடலாம், அல்லது இன்னும் கூடுதலாக யோகம் வேண்டுமெனில் யானையைவிட எடையுள்ள காண்டாமிருகத்தை வாங்கி வீட்டில் வளர்க்கலாம் அதுவும் இறைவன் படைப்புதானே !

காணொளி

70 கருத்துகள்:

  1. காணொளி அருமை!..

    அடுத்தவன் சோற்றை ஆட்டையைப் போடுபவனுக்கெல்லாம்
    கடைசியில் இந்த உதை தான் நல்ல பலனளிக்கும்!..

    கடைத்தெருவில் கழுதையின் படம் விற்பவன் கடைத்தேறுவதில்லையே!..

    அதைக் கண்ணாரக் கண்ட பின்னும் கழுதையின் படத்தை வாங்குகின்றான் எனில் - அவனுக்கும் இதே வைத்தியம் தான் சரியாக வரும்!..

    பாராட்டுகள்!.. வாழ்க நலம்!..

    (வெள்ளிக் கிழமை விடுமுறை. இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்காமல் - கழுதை கூட என்ன விளையாட்டு!?...சும்மா.. தமாசு!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையாக கருத்துரை தந்தீர்கள்.
      வெள்ளிக்கிழமை நீங்க மட்டும் தூங்காமல் குருவிகளோட பேசுறீங்க அட்லீஸ்ட் நான் கழுதைகளோட பேசக்கூடாதா ? இதென்ன நியாயம் ஜி

      நீக்கு
  2. யோகம் வருகிறதோ இல்லையோ முதல் ஆளாக வந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
    எனக்கு முன் யாராவது வந்து கருத்திட்டிருந்தாலும் முதல் ஓட்டு என்னுடையதுதான் நணபரே..!!!

    எனக்கென்னமோ இதைப் பார்த்ததால் வந்த யோகம் என்றுதான் தோன்றுகிறது. :))

    எல்லாவற்றையும் பகுத்தறிவின் முனை நிறுத்தி இது போல் ஆராய்ந்தால் பல மூட நம்பிக்கைகளும் அர்த்தமிழந்து விடும் என்பது உண்மை.

    தொடருங்கள்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே உங்களுக்கு யோகம் வந்தால் சந்தோஷமே.. முதல் வாக்கு நீங்கதான் ஆனால் கருத்துரையில் வழக்கம்போல்தான் எதற்கும் அடுத்து வரும் (தவளை தன்வாயால் கெடும்) பதிவுக்காவது முதலில் வாருங்கள்.

      நீக்கு
  3. நண்பா!
    ராஜா காது! கழுதை காது
    கதை, கதை, கழுதை கதை
    வெளியிட திட்டமா என்ன?
    வெயிட் பால் குடித்து விட்டு வந்து எழுதுகிறேன்!
    கழுதை பால் தானே? என்று கதைப்பது ?
    ,எனது காதுகளுக்கு கேட்கிறது
    ஏனென்றால்,? என் காது ராஜா காது!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழுதை கத்தியது உங்களுக்கு ஃப்ரான்ஸ் வரை கேட்டுருச்சா ?

      நீக்கு
  4. காலையில எழுந்து குளித்து சாமி கும்பிட்டதும் உங்க பதிவு என்னைப் பார் யோகம் வரும்தான் பார்த்திருக்கிறேன்...
    பார்ப்போம் என்ன யோகம் வருதுன்னு....
    ஒருவேளை கழுதை என்னைப் பார் (எனக்கு) யோகம் வரும்ன்னு சொல்லியிருக்கும்ண்ணே...
    விடியக்காலையில நல்ல ஆராய்ச்சி...
    யானையையோ காண்டாமிருகத்தையோ வாங்கி கட்டி வச்சி யோக ஆராய்ச்சி பண்ணிட வேண்டியதுதானே....
    ஹா.... ஹா.... அருமையான பகிர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில முதல் பதிவு என்னுடையதா ? அப்படினா ? இது எனக்குத்தான் யோகம்.

      நீக்கு
  5. அன்புள்ள ஜி,

    ‘ என்னைப் பார் யோகம் வரும்’ மூட நம்பிக்கையின் மூழ்கித்திளைக்கும் மூடர்களுக்கு நல்ல பாடம் ... திருந்துமா ஜென்மங்கள்!

    நன்றி.
    த.ம. 5.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே திருந்தினால் நலம், ஆனால் இதில் ஒருகூட்டத்திற்க்கு யோகம் 80 உறுதி இதை பிரிண்டிங் செய்யும், விற்பனை செய்யும் கூட்டம்.

      நீக்கு
  6. இந்த எண்ணம் பலமுறை எனக்கும் வந்திருக்கிறது. கேட்டால் கண்திருஷ்டிக்காக வைத்திருக்கிறோம் என்பார்கள். இந்த சின்ன பெட்டிகடைகளுக்கே இத்தனை கண் திருஷ்டி படும் என்றால் பில் கேட்ஸ்க்கும் அம்பானிகளுக்கும் எவ்வளவு பெரிய கழுதையை வைப்பது.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பில்கேட்ஸூக்கும், அம்பானிகளுக்கும் பில்டிங் உயர கட்டவுட் கழுதை வைக்கனும் அதையும் ஒரு நிஜ கழுதை வந்து திங்குமே.... நண்பா.

      நீக்கு
  7. நமது முன்னோர்கள் நமக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கும்
    மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று
    உழைக்காமல், படத்தைப் பார்த்தால் யோகம் வரும் என்பதை நம்புவதற்கும்
    ஆளிருக்கத்தான் செய்கிறர்கள் இக்காலத்திலும்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே தாங்கள் சொல்வது உண்மையே சமூகம் இதை விட்டு வெளியேும் நிலை இன்னும் வரவில்லையே 80தே எமது கவலை.

      நீக்கு
  8. நெத்தியடி என்பது இதுதான் நண்பரே...

    பதிலளிநீக்கு
  9. ஆறாவது அறிவு இல்லைன்னு யாரும் இந்த வீடியோவைப் பார்த்த பின் சொல்ல மாட்டாங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ எழில் நலம்தானே நீண்.......................ட இடைவெளி ஏன் ?
      6அறிவு உள்ளதால்தானே நாயை விரட்டி விட்டு கழுதை திங்கிது... மனிதனைப்போல் அதற்க்கும் சிந்தனை உண்டுதான் போல...

      நீக்கு
  10. இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  11. இது உண்மை தான் சில சமயம் சில மனிதர்களுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது குருவி உட்கார தேங்காய் விழுந்த கதைதான் நண்பரே...

      நீக்கு
  12. அழகான உரை...அருமையான உதை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதைகூட அருமையா ?

      நீக்கு
    2. ஆமாம் ஜி... அந்த கழுதை எவ்வளவு பொறுமையாக நாயிடம் போராடிப் பார்த்தது... கடைசியில் உதை தானே உதவியது....

      நீக்கு
    3. ஆமா, ஆமா, அடி உதவுவது போல அண்ணன்-தம்பி கூட உதவ மாட்டான்.

      நீக்கு
  13. இந்தக் காணொளி நானும் கண்டு ரசித்திருக்கிறேன். யாருக்கு யோகமோ இல்லையோ, அந்த நாய்க்கு நிச்சயம் யோகம் இல்லை! :)))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா உங்கள் கருத்துரையே ஒரு மா3தான் நண்பரே...

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே.!

    மூட நம்பிக்கைக்கு ஒரு சவுக்கடியான பதிவு.. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்.? யானை, அதை விட பெரிதாக காண்டாமிருகம், என்ற வரிகள் தங்கள் வருத்தத்தின் விளைவே எழுந்தது எனினும் சிரிப்பை வரவழைத்தது....உங்களுக்குள் எழும் யோசனைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ஆனாலும் இன்னமும் அனேக இடங்களில் (முக்கால்வாசி இடங்களில்) இந்த மாதிரி மூடநம்பிக்கைகளை குலைக்க முடியவில்லை.. ரத்தத்தோடு ஊறி விட்டது போலும்...என்ன செய்வது.? காணொளி காண முடியவில்லையே..ஏன்.? இது போன்ற பதிவுகளை தொடருங்கள்...நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  15. உழைக்காமல் கழுதை படத்தைப் பார்த்தால் யோகம் வந்து விடுமா?
    நல்ல பதிவு.
    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், தொடர்பில் இணைத்துக் கொண்டமைக்கும், கருத்துரை, வாக்கும் அளித்தமைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே..

    தடைபட்டிருந்த காணொளி கிடைத்துப் பார்த்தேன்.. யோகத்திற்கு பேர் போனவை வந்ததும் நாயின் அதிர்ஷ்டமும் சிதறிப்போனதே..! ம் பாவம் நாய்.. வருந்த வேண்டிய விஷயந்தான்.. பகிர்ந்தமைக்கு நன்றி..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், மாம்பழம், எக்மோர், தாம்பரம்.

      நீக்கு
  17. நல்ல பதிவு .கில்லர்ஜியின் பார்வையே தனி
    இதே கழுதையைப் பற்றி தமிழ்மண நட்சத்திரப் பதிவராக இருந்தபோது இரண்டு பதிவுகள் எழுதி இருந்தேன். ஒன்று கவிதை ஒன்று நகைச்சுவை
    வடிவேலு வாங்கிய கழுதை
    நான் கழுதை
    நேரம் கிடைக்கும்போது படிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கவிதையும், கதையும் படித்து மகிழ்ந்து கருத்துரை இட்டேன் அருமை. 2012 ல் எழுதியிருக்கின்றீர்கள், நண்பரே இதை நான் எழுதியது 2013ல் வரிசைப்படி வரும்போது இன்று போட்டு விட்டேன் இன்றைய எனது சிந்தனையில் எழுதுவது அனேகமாக உங்கள் பார்வைக்கு வருவதற்க்கு எப்படியும் 2018 ஆகும் நான் இந்த உலகில் இல்லா விட்டாலும் தானியங்கியாக வெளியாகி விடும் இடையில் எமர்ஸென்லி பதிவு தனி, மக்கள் இப்பொழுது நகைச்சுவைக்கு நல்ல மதிப்பு கொடுக்கின்றார்கள் ஆகவே இனி நகைச்சுவையே அதிகம் கொடுக்கத் தீர்மானித்துள்ளேன்.

      நீக்கு
  18. கழுதைக் கத்தினால் நல்ல சகுனம் என்பார்களே! இப்படியும் உண்டா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா கடைகளில் பார்த்த்தில்லையா ?

      நீக்கு
  19. கழுதை படம் வைத்திருந்தால் யோகம் வருமா..ஏதோ ஒரு நம்பிக்கைதானே வாழ்க்கையை கொண்டு செல்லுது..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நம்பிக்கை கையை விரித்து விடுகிறதே சகோ...

      நீக்கு
  20. இந்த யோகக் கழுதை சிந்தனையை ,சமீபத்தில் புதுக் கவிதை வடிவத்தில் எதிலோ படித்தேனே :)
    காணொளியில்.நாய் உதைப் பட்டதை போல் முட்டாள் மனிதர்களும் உதைபட்டால்தான் திருந்துவார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்த ஜி ஒருவேளை நண்பர் முரளிதரன் அவர்களின் பதிவில் படித்தீர்களோ... மேலே அவருக்கு கொடுத்திருக்கும் மறுமொழியை படிக்கவும். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  21. “என்னைப்பார் யோகம் வரும்” மடையர்கள் வகுத்தளித்த மடமைகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  22. இந்தப் படம் இதுவரை இப்படிப் பார்த்தது இல்லை நண்பரே! இது புதிய விசயம். இப்படி எல்லாம் கூட இருக்கா என்ன?

    சரி கழுதை யோகம்னா நாய்க்கு யோகம் இல்லையோ.....ஹஹஹஹ

    விலங்குகளை வைத்துக் கூட மூடநம்பிக்கை....ம்ம்ம் மனுஷன் மனுஷனுக்குள்ளேயே மூட நம்பிக்கைகள் இருக்கும் போது...கைம்பெண் எதிரில் வரக் கூடாது....நல்ல நிகழ்வுகளில் அவர்கள் முன் வரக் கூடாது என்றெல்லாம் பேசும் போது.....மனுஷன் உறுப்படவே போவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது மூதாதையர்கள் நல்ல விசயங்களோடு மூடப்பழக்கங்களையும் சரிசமமாக தந்து இருக்கின்றார்கள் 80 உண்மை.

      நீக்கு
  23. ஆமா உங்க ஊர்ல ஒட்டகம் தானே வளர்ப்பாங்க, நீங்க என்ன கழுதையை வளர்க்கிறீங்க?
    கழுதையை பார்த்தா யோகம் வரும், நீங்க தினமும் ஒட்டகத்தை பார்க்கிறீங்க, உங்களுக்கு என்ன கிடைச்சுது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் கழுதை வளர்த்தால் என்ன குரங்கிலிருந்துதானே... மனிதனே வந்தான்.. குரங்கைவிட கழுதை பயனுள்ளதே....

      நீக்கு
  24. நம்மை நாமே தினமும் பார்த்தால் எல்லாமுமே வரும் ஜி... ஹா.... ஹா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்தினம், தினம் பார்த்து அலுத்து போகுதே... ஜி

      நீக்கு
  25. கழுதையின் படம் வைத்து யோகம் வரும் என்று கூறுவது ( மூட) நம்பிக்கை என்றால் அதுவே அறியாமைவின் உச்சம்.

    பதிலளிநீக்கு
  26. நம்மவர்கள் எதையுமே தவறாக புரிந்து கொள்வதில் கில்லாடிகள்! இந்த படத்தின் கருத்து உண்மைதான். அதாவது கழுதை பெரிய உழைப்பாளி, சுமை தூக்கக் கூடியது. கழுதையைப் போல உழைத்தால் முன்னேறலாம் என்பதுதான் படத்தின் உட்கருத்து. கழுதையை வெறுமனே பார்த்தால் முன்னேறலாம் என்று தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு இப்படி கடைக்கு கடை மாட்டித் திரிகிறார்கள் என்னவென்று சொல்லுவது? அருமையான பதிவு ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்த சுரேஷ் அருமையான விளக்கவுரை தந்தீர்கள் உண்மை கழுதை கடுமையான உழைப்பாளிதானே...

      நீக்கு
  27. மூடநம்பிக்கையை இது போன்ற நகைச்சுவை மூலமாகத்தான் களைய முடியும்...
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்...

    வாழ்க வளமுடன்....

    பதிலளிநீக்கு
  28. கழுதை முட்டாள் தனமான மிருகம்னு எந்த முட்டாள் தெரியலை!! வீடியோ ரசித்தேன் நன்றி!!

    பதிலளிநீக்கு
  29. வணக்கம்
    ஜி
    இவை எல்லாம் மூட நம்பிக்கை.... நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வீடியோ நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி- த.ம19
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே மூட நம்பிக்கைகளை மூடினாலே வாழ்வு உயரும்.

      நீக்கு
  30. என்னேங்ணே இவ்வளவு சின்ன பதிவுக்கு இறங்கிட்டிங்க???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழுதையைப்பற்றி எழுத என்ன ? இருக்கு நண்பரே...

      நீக்கு
  31. வெறும் படத்தை மாட்டி வைப்பதை விட, உண்மையாக வளர்த்துச் சலவைத் தொழிலாளியிடம் வாடகைக்கு விட்டால் உபரி வருமானமாவது வரும்; அதை வேண்டுமானால் யோகம் எனச் சொல்லலாம் என்கிற உங்கள் கருத்து அருமை! ஆனால், எனக்கோர் ஐயம்! கழுதையை விடக் காண்டாமிருகம் எடை கூடுதலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காண்டாமிருகம் யானையைவிட எடை கூடுதலானது தெரியாதா ? நண்பரே...

      நீக்கு
  32. "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" இது பழமொழி.....பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வசித்த சித்தர் ஒருவர் இவ்வகை கழுதைகளை ஆராய்ந்தார், "எப்படி இந்த வகை கழுதைகளுக்கு அத்தனை சக்தி கிடைக்கிறது என்று அந்த வகை கழுதைகள் மேயும் இடங்களுக்கு சென்று அவைகள் உண்ணும் தாவர புல் வகை மூலிகைகளை சேகரித்து அதன் மூலம் பல பலசாலிகளான வீரர்களை உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர் கூறியதாக பிறரால் எழுதிய குறிப்புகளில் அப்படி அவர் காட்டில் தேடியபோது "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" என்கிற கூற்று பிறகு பழமொழியாக திரித்து பேசப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கானக கழுதையில் பல வகைகள் உள்ளன. லடாக் பகுதியில் காணப்படும் வகை, கட்ச் பகுதியில் உள்ளதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறே காஷ்மீரில் காண்பது பிரிதொருவகை. இன்று இவ்வினம் ரான் பகுதியில் சுமார் ஐயாயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான ஒரு சரணாலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. நமது பொதி சுமக்கும் கழுதையின் மூதாதையர் இனம் தான் இந்த ஒயில்ட் ஆஸ் என்னும் கானக கழுதை. குறிப்பாக இந்த வகை வெள்ளை மூக்கு கானகக் கழுதை உருவத்தில் சற்று பெரியது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உண்டு. முற்காலத்தில் நமது உள்ளூர் கழுதைகள் துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் போதே இந்த கானகக் கழுதைகள் வடமேற்கு இந்தியப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன என்று கூறப்பட்டுகிறது.

    " எல்லாம் சரிங்க கடவுள் கழுதைக்கு ஏன் தலையில் கொம்பை படைக்கவில்லை?"

    அதற்க்கு மாறாகத்தான் கடவுள் கழுதைக்கு காலில் பலத்தைக் கொடுத்திருக்கிறார்,..... உதய் வாங்கியவர்களை கேட்டுப்பாருங்கள் அதன் பலம் என்ன வென்று தெரியும்.

    விடாமல் முயலுங்கள்,
    விரும்பியதைப் பயிலுங்கள்.
    தொடர்ந்து சிந்திப்போம் .....
    மீண்டும் சிந்திப்போம்!
    நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமாக விடயத்தை தந்தமைக்கு நன்றி நண்பரே தொடருங்கள்.

      நீக்கு
  33. தலைப்பு உள்ளே இழுத்து வந்தது. :)) என்னே உங்கள் சிந்தனை!! அருமை! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு