நெற்றியில் காதுவரை விபூதியணிந்து சந்தனப்பொட்டு வைத்திருக்கும் ஒரு மனிதர்
நிச்சயம் இறைவனை நம்புகிறார் என்றுதானே அர்த்தம், எனது வாழ்வில் நான் தேவகோட்டையில்,
பலமுறை பார்த்து இருக்கிறேன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்
திருமணத்தில்... இல்லாத ஏழை எளிய வீட்டுக் குழந்தைகள் கல்யாண பந்தியில்
உட்கார்ந்து விடும், அந்தக் குழந்தைகளை தரதரவென இழுத்து வந்து வீதியில் விட்டு
சாதியைக் குறித்து நீதியற்ற முறையில் தகாத வார்த்தைகளில் பேசித்துறத்திய எத்தனையோ
பெரிய(?)மனிதர்களை நான் பார்த்து
இருக்கிறேன், இந்தக் குழந்தைகள் உண்பதால் இவர்களின் கௌரவம் குறைந்து விடும்
எனக்கருதும் பெரிய (?) மனிதர்கள் இவர்கள்.
(இதை
இறைவனும் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை, நினைத்துப் பார்க்க தெரியாத ஆத்திக
மனிதர்கள்)
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்
என்று சொல்கிறார்களே ! இதை இவர்கள் நம்ப மாட்டார்களா ?
இந்த மாதிரியான
சமூக அவலங்களை காணும் போதுதான் என்னுள் நாமும் எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய
காலகட்டம் அது,
தங்களது ம(க்)களுக்கு, திருமணம் நடக்கிறது அவர்கள் நெடுங்காலம்
சீரும் சிறப்புமாய் வாழவேண்டாமா ? அதற்கு மனம் குளிர்ந்த மனங்களின் வாழ்த்துகள் கூட உதவியாகுமே எப்படி ? இந்தக் குழந்தைகள்
வயிராற உண்டு களித்த சந்தோஷத்தை தங்களது தாய்-தந்தைகளிடம் சொல்ல அவர்கள் வறுமையின்
காரணமாய் நம்மால்தான் கொடுக்க முடியவில்லை, தங்கள் குழந்தைகள் சந்தோஷமாய்
உண்டதற்கு காரணகர்த்தாவான ! அந்த மணமக்களை மனதிற்குள் வாழ்த்த மாட்டார்களா ?
அந்த
குளிர்ந்த மனங்களின் வாழ்த்துகள்தான் கண்டிப்பாக பலிக்கும் என்பதே எமது வாதம்.
இளம் பசிக்காரனுக்கு கஞ்சி ஊற்றாதவன் புளிசேப்பக்காரனுக்கு
பிரியாணி போட்டு, இறைவனிடம் என்ன பயன் பெறப்போகிறான் ?
அவன் பூசிக் கொண்டிருக்கும் விபூதியைப்போல் நாமும் ஒருநாள் சாம்பலாவோம் ? ? ? எனத்தெரியாத பல... ஆத்திக ஜடங்கள், இவர்களைவிட சில... நாத்திக ஜனங்கள் உயர்ந்தவர்களே !
குறிப்பு - தேவகோட்டையின் சிறப்புகளை மட்டுமல்ல ! வெறுப்புகளையும்,
யாம் உமிழ்வோம்.
உண்மை அண்ணா...
பதிலளிநீக்குத.ம. 2
உடனடி முதல் வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குநண்பரே...
பதிலளிநீக்குபக்திமான்களெல்லாம் அறம் அறிந்தவர்கள் அல்ல ! இப்படி பட்டவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். விபூதியோ, குல்லாவோ, சிலுவையோ இவர்கள் அணிவது மற்றவர்கள் பார்ப்பதற்கு தானே தவிர, வேறு எதற்கும் அல்ல ! இந்த மனிதர்கள் அவரவர் இறைவனுக்கு கூட உண்மையற்றவர்கள் !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
சரியான சொல்லடி நண்பரே....
நீக்குநல்ல கருத்து. நம் சமூகத்தில் எப்போது நடக்கும்?
பதிலளிநீக்குநாளைய சந்ததிகளுக்காவது... கிடைக்கட்டும்.
நீக்குதம 3+1 அப்புறம் வாரேன்.
பதிலளிநீக்குவருக நண்பரே....
நீக்குஎல்லாமே வேசங்கள் ஜி...! அவர்களாகவே திருந்தினால் தான் உண்டு...
பதிலளிநீக்குநம்புவோம் நண்பரே வேறுவழி.
நீக்குமுன்பு பெரிய வீட்டுக்கல்யாணங்களில் பட்டை அடித்து நிற்ப்பவர் பந்திபார்ப்பவர்கள் .இவர்கள் சம்பளம் பெறுபவர்கள்.
பதிலளிநீக்குபழனிசாமி ஐயாவின் முதல் வருகைக்கு நன்றி.
நீக்குஇதைப் போன்ற வேதனையான காட்சிகளை நான் - கண்டதில்லை..
பதிலளிநீக்குஆயினும் - ஜடங்கள் திருந்த வேண்டும் என்பதில் நானும் உங்கள் பக்கமே!..
தாங்கள் காணாதது வரை சந்தோஷம் நண்பரே...
நீக்குஅதெல்லாம் இந்த கிறுக்குப்பிடித்த சமூகத்தில் நடவா காரியம் அண்ணே !
பதிலளிநீக்குஅடுத்த தலைமுறைக்கு கிடைக்கட்டும் என நம்புவோம்.
நீக்குஆத்திக ஜனங்களைவிட நாத்திக ஜடங்கள் என்ற சொற்பிரயோகம் மிகவும் அருமை.
பதிலளிநீக்குமன்னிக்கவும் முனைவரே...
நீக்குஆத்திக ஜடங்கள் என்றும், நாத்திக ஜனங்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன்.
ஆத்திக ஜடங்களைவிட... நாத்திக ஜனங்கள் உயர்ந்தவர்கள்தான் என்ற உண்மையை உரக்கச் சொன்னீர்கள்..வாழ்த்துக்கள்!!!!
பதிலளிநீக்குஉண்மையைத்தான் நண்பரே நான் என்றுமே எழுதுவேன் இதில் யாருக்கும் பயமில்லை எமக்கு.
நீக்குநல்ல பதிவு நண்பரே, சமூகத்தை உற்று நோக்கியிருக்கிறீர்கள். நகரங்களில் இந்த நிலை மாறி வருவதாக தெரிகிறது. ஆனாலும் போகவேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது.
பதிலளிநீக்குத ம 8
வருக நண்பரே இந்த நோக்குதல் எமது 12 வது அகவையில் தொடங்கியது.நான் எழுத தொடங்கியதற்க்கு இந்தக்காட்சிகளின் ரணமே காரணம்.
நீக்குஇன்னும் 2000 வருஷம் ஆனாலும், 200 பெரியார் வந்து மாற்றங்கள் செய்ய முயன்றாலும் இது மாறாதய்யா மாறாது. இவர் குணமும் செயலும் மாறாது
பதிலளிநீக்குசாதி உணர்வுகள் அழியும் காலம் தொடங்கி விட்டது சாதிகள் அழிந்தால் ஏற்றத்தாழ்வுகள் ஒழியும்.
நீக்குஉயர்வு தாழ்வு கருதாத நாத்திக ஜனங்கள் உயர்ந்தவர்கள் தான்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிந்தமைக்கு நன்றி.
நீக்குஉண்மை...திருந்த வேண்டும்.
பதிலளிநீக்குதம+1
வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குஅய்யா, இது தான் வேதனையின் உச்சக்கட்டம். இது தான் அதிகம் கோபம்,,,,,,,,,,,,,,, அங்கு மடும் அல்ல, எங்கும் உள்ளது. தெய்வம் என்ற பெயரால் தின்று கொழுக்கும் பன்றிக் கூட்டங்கள் ..............................
பதிலளிநீக்குநம்மைப்போன்ற சிறுபான்மை கூட்டத்தால் என்ன செய்ய முடிகிறது எழுதியாவது வேதனையைப் பகிர்வோம் சகோ.
நீக்குமிகச் சரியாகச்சொன்னீர்கள்.
பதிலளிநீக்குகவிஞரின் வருகைக்கு நன்றி.
நீக்குவேஷம் ஏதும் இடாதவர்களும் இப்படி நடந்து கொள்வது கில்லர்ஜிக்குத் தெரியாதா. ?
பதிலளிநீக்குவருக ஐயா நான் அந்த கணக்கில் சொல்லவில்லை.
நீக்குநாத்திகர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் காரணம் அவர்களைப் பொருத்தவரை இறைவன் இல்லை.
ஆனால் ஆத்திகர்கள் நியாயமாக, தர்மப்படி, இறைவன் படைத்த உயிர்களிடம் அன்பு செலுத்தி வாழவேண்டும் 80தே எமது கருத்து.
இப்படிப்பட்டவங்க எல்லா இடமும் இருக்கிறாங்க. நான் இந்தியா வந்திருந்தபோது ஒரு நிகழ்வில் கண்டு மனம் கனத்துவிட்டது. திருந்தமாட்டினம்.
பதிலளிநீக்குவருக சகோ நான் பலமுறை கண்டவன் ஆகவே என் வேதனையை வெளிப்படுத்தினேன். தொடர் வருகை தந்து கருத்துரையும், வாக்கும் அளிப்பமைக்கு நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
சாத்து படியுடன் வருபவனை நம்ப வேண்டாம்.... எல்லாம் வேசம்.. இப்படியான சாத்து படிக்காரர்கள்தான் பல பேருடைய வாழ்வை சீரழித்துள்ளார்கள்...சொல்லிய விதம் நன்று த.ம16
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆம் நண்பரே உண்மையே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஇம்மாதிரியான நண்பர்கள்(?) தேவகோட்டையில் மட்டும் இல்லை, எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஇவர்கள் எல்லாம் வெளி வேஷக்காரர்கள்
உண்மை நண்பரே... நான் எனது ஊரில் கண்டதால் அதிகாரமாக எழுதினேன்.
நீக்குஇதுபோன்ற மனிதர்கள் எவ்விடத்தும் நிறைந்து இருக்கிறார்கள்
பதிலளிநீக்குவேதனைதான் மிஞ்சுகிறது
தம +1
ஆம் நண்பரே வேதனைத்தான் படத்தான் முடிகிறது வேறென்ன செய்வது.
நீக்குஇது உங்கள் ஊரில் மட்டுமல்ல ,எல்லா ஊரிலும் நடப்பதுதான் ...படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் என்று அன்றே சொல்லி விட்டார்களே ,போலி வேடதாரிகளைப் பற்றி :)
பதிலளிநீக்குவருக ஜி சரியான பழமொழிதான் சொன்னீர்கள்.
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்கு‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்றார் பேரறிஞர் அண்ணாத்துரை!
திருமண விருந்தில் ஏழைச் சிறுவர்கள் அழுக்குச் சட்டேயோடும் ... சட்டையில்லாமலும் நல்ல சாப்பாடு கிடைத்திடும் என்ற நம்பிக்கையில் உள்ளே நுழைகின்ற அந்தப் பிஞ்சுகளை விரட்டு அடிப்பதைக் கண்டு இருக்கிறோம்.
தேவகோட்டை ஆனாலும்... தேவனது கோட்டையானலும் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ தமிழ்ப்புலவர் பரம்பரையில் வந்து தவறைச் சுட்டிக்காட்டியது பெருமை.
நன்றி.
த.ம. இரு பத்து.
வருக மணவையாரே எனது 12 வது அகவையில் இந்தக் கொடுமையை பலமுறை கண்டு பொறுக்க முடியாமல் ஒரு பெரிய மனிதரை //நீயெல்லாம் மனுஷனா ? // என்று கேட்டு விட்டேன் இதனால் சிறுவன் என்றும் பாராமல் என்னை மூன்று வீரர்கள் அடித்து விட்டார்கள்.
நீக்குஎன்னைப்பொறுத்தவரை நான் எந்த இடத்திலும் யாரையும் கேள்வி கேட்டு விடுவேன் இதனால் என்னை பலருக்கும் பிடிக்காது.
அக்கொடுமையை அந்தகாலத்தில் நானும் இளவயதில் கண்டதுண்டு
பதிலளிநீக்குவருக ஐயா இது இன்னும் எத்தனை காலம் தொடருமோ....
நீக்குபுளிச்ச ஏப்பக்காரனுக்கு பிரியாணி போடுவது, தனக்கு சார்பாக..அதாவது தனக்கு பாதுகாப்பான அடியாளாக மாற்றிக் கொள்வதற்குத்தான் ..நண்பரே....
பதிலளிநீக்குமிகச்சரியாக சொன்னீர்கள் தோழரே...
நீக்குஜி! இந்த மாதிரி மனுசங்க எல்லா ஊரிலும்...இதைவிடக் கேவலம் என்ன தெரியுமா..நாம் குப்பைத் தொட்டிகளில் எரியும் அந்த விருந்து இலைகளுக்கு நாய்கள் எப்படி வந்து தின்ன அலயுமோ அப்படி மனிதர்கள், சிறு குழந்தைகளும் கூட அந்த இலைகளில் மீந்தவற்றைச் சாப்பிடுவதைக் கண்கூடாதக் கண்டிருக்கின்றோம். அவர்களை அழைத்து வந்து நாங்கள் நெருங்கிய உறவு விருந்து என்றால், அவர்களிடம் உணவு கேட்டு வாங்கிக் கொடுத்துஇருக்கின்றோம். இல்லையேல் உணவகங்களில் உணவு வாங்கிக் கொடுத்து விடுவோம். மிக மிக அவலமான நிலை. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்! - பாரதி. பாவம் பாரதி! யாரப்பா அங்கே! பாரதிக்கு ஒரு எஸ் எம் எஸ் இல்லைனா வயர்லெஸ் நியூஸ் அனுப்பலாமா இன்னும் உலகம் சுத்திக்கிட்டுதான் இருக்கின்றது என்று!!! (அவருக்கும் உங்கள் மாதிரிதான் மீசை பெரிசா வைச்சுருப்பாரு)
பதிலளிநீக்குஆம் அந்தக் குப்பைத்தொட்டி வேதனைக் காட்சிகள் இன்னும் என் கண்களில் தெரிகிறது நான் சிறு அகவை முதல் பாரதியின் கவிதை மீது மோகம் கொண்டவன்.
நீக்குஅருமையான கருத்து அண்ணாச்சி!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குசமூகத்தை உற்று நோக்கி உமிழ்ந்து விட்டீர்கள் உண்மைகளை .
பதிலளிநீக்குஉறைக்கச் சொல்லி உணர்வுகளை தட்டி எழுப்பி தணலாக்கி எரித்து விடுங்கள் தீயவற்றை திருந்த வழிவகுக்கும் இவைகள் சிந்தனைகளை தூண்டி சிறப்புறச் செய்யட்டும். வாழ்த்துக்கள் சகோ நல்ல மனித நேயம் உருவாகட்டும்.
மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியே.
வருக சகோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி.
நீக்கு“ கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா “ என்ற பாரதியின் உரை உங்களுக்கும் உங்கள் பதிவுகளுக்கும் பொருந்தும் நண்பரே!
பதிலளிநீக்குத ம 24. இருபத்து நான்கு மணி நேரம் போதுமா என்று நாங்கள் வியக்கும் உங்கள் பதிவுலகப் பிரசன்னத்திற்கு.
கவிஞரின் வருகைக்கும், வாழ்த்திற்க்கும் நன்றி.
நீக்குபராசக்தி படத்தில் இதுப்போன்ற காட்சி உள்ளது, நன்றி.
பதிலளிநீக்குபராசக்தி படத்தின் ரீ்மேக் பராசக்தி-2050 படத்திலும் இதுப்போன்ற காட்சி இருக்கும்.
ஞாபகத்தில் கொண்டு வந்து பதிந்தமைக்கு நன்றி நண்பரே..
நீக்குhttp://vriddhachalamonline.blogspot.in/2015/03/blog-post_28.html
பதிலளிநீக்குகண்டு வந்தேன் நண்பரே...
நீக்குநான் கூட நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்கும்போதெல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள், இவர்களுக்கு கொடுப்பதால் என்ன பயன் என்று பலமுறை நினைத்ததுண்டு.
பதிலளிநீக்குஆத்தீகர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல, நாத்தீகர்கள் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஏழைப் பங்காளர்களும் அல்ல.
தங்களது சிந்தனை அருமை.
நீக்குஆத்திகர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல, நாத்திகர்கள் அனைவரும் ஏழைப்பங்காளன் அல்ல அதையேதான் நானும் சொல்கிறேன்.
தேவகோட்டையின் சிறப்புகளை மட்டுமல்ல சமூகத்தின் வெறுப்பகளையும் உமிழுங்கள் நண்பரே.....
பதிலளிநீக்குமுடிந்த அளவு.
நீக்குஉண்மைதான் சகோ. இப்படிப்பட்டவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்...திருந்தவே மாட்டார்கள்....
பதிலளிநீக்குதம 25
ஆம் சகோ வருகைக்கு நன்றி.
நீக்குஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றால்..பணக்காரன் சிரிப்பில் யாரைக் காணலாம்...???
பதிலளிநீக்குதங்கப்பல்லை காணலாம் நண்பரே...
நீக்குஉண்மைதான். பசிப்பிணி மருத்துவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே...
நீக்கு