இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 06, 2015

Police Your Friend (U.A.E) الشرطه اصدقاؤك


அபுதாபி அலுவலக வேலை முடிந்து, அல்காமராஜர் ரோட்டில் காரில் போய் கொண்டிருந்தேன் பின்புறம் POLICE CAR லைட் போட்டுக் கொண்டு வந்தது, நான் அடுத்த PARKING வரை காரை ஓட்டி வந்து, நிறுத்தி விட்டு இண்டிகேட்டரை போட்டேன், ஒரு போலீஸ் அதிகாரி இறங்கி வந்தார்.
அஸ்ஸலாமு அலைக்கும் 
என, கை கொடுத்தார்.
அலைக்கும் ஸலாம் 
என்றேன்.

கேப் பால் அஹ்
(எப்படி இருக்கிறாய் சகோதரா ?)
ஹம்துலில்லாஹ் தமாம்.
(இறையருளால் நல்லாயிருக்கேன்)
ஜீப், ரொஹ்ஷா அவ் மொளுக்கியா, (லைசென்ஸ், R.C கார்டு, கொடு)
நான், இரண்டையும் எடுத்துக் கொடுத்தேன், பார்த்து விட்டு கேட்டார்.

இஸ்ஸூம் மால் இந்தே கில்லர்ஜி ?
(உனது பெயர் கில்லர்ஜியா ?) 
நாம். (ஆம்)
பீ, மாலும் கானூன்
(சட்டம் தெரியுமா ?) 
மாலும். 
(தெரியும்)
லேஷ், இந்தே கலம்த் ஹாத்ப்
(நீ ஏன் டெலிபோன் பேசினே ?)
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அவரது கேள்வி, கடந்த ½ மணி நேரமாக டெலிபோன் வரவும் இல்லை, நான் பேசவும் இல்லை பிறகு எப்படி ? இருப்பினும் நான் கேட்டேன்.

மீனு கலம்த் ஹாத்ப்
(யாரு பேசினா டெலிபோன் ?)
இந்தே கலம்த், அனா ஸூப் 
(நான் பார்த்தேன், நீ பேசினே)  
நான், சட்டென காரிலிருந்த எனது மொபைலை எடுத்து போலீஸ் அதிகாரியிடம் கொடுத்து விட்டு சொன்னேன்.

வல்லாஹி, அனா மாபி கலம்த் கஸாப், கபுல் நூஸ் ஷா அனா மாபி கலம்த் ஹாத்ப், ஸூப் அனா பீ ப்ளூடூத், இந்தே ஸூப் மொபைல்மாலி, மும்கின் அனாகலம்த் ஹாத்ப் ? பீ முக்கலிபா மித்தீன் திர்ஹாம், சவி அரபாமியா மாபிமுஸ்கில். 
(சத்தியமா நான் பொய் பேசலை, கடந்த ½ மணிநேரமா எனக்கு போன் வரவில்லை பாரு என்னிடம் ப்ளூடூத் இருக்கு, ஒருவேளை நான் போன் பேசியது உண்மையானால் அபராதம் 200 Dirham’s என்றால் 400 Dirham’s எழுது பிரச்சனை இல்லை) 

எனது தீர்க்கமான பதிலில் ஒரு மாதிரியாக, பார்த்த அவர், மொபைலில் Dialled Call, Received Call இரண்டையும் செக் செய்து விட்டு கேட்டார்,
அதா, மொபைல் மால்மீன்
(இந்த மொபைல் யாருடையது ?)
ஹஹ்கி. 
(என்னுடையது)  
இந்தே இந்தி, மொபைல் தாக்கல் ஜிசில் அரபி கேப்... இந்தே மாலும் அரபி
(நீ இந்தியன், மொபைல் அரபியில இருக்கு எப்படி... உனக்கு அரபி தெரியுமா ?)
நாம். 
(ஆமாம்)  
அதா கேப், தெக்ஹா அனா
(இதை எப்படி... நான் நம்புறது ?)
அனா ஸ்ஸூ சவி இந்த ஈஜி, தெக்ஹா
(நான், என்ன செய்தால் உனக்கு, நம்பிக்கை வரும் ?)
ஜிசில் இஸ்ம் மாலி. 
(என்னுடைய பெயரை எழுது) 

நான், காரிலிருந்து வெளியே வந்து அவருடைய NAME PADGEஜை பார்த்தேன் அதில்.
مــحمـــد سالم أحمـد إسـماعـــيل المــنصوري
முஹம்மத் ஸாலம் அஹமத் இஸ்மாயில் அல்மன்சூரி.
என்று டைப் செய்திருந்தது, நான் எனது மொபைலில் அவருடைய பெயரை டைப் செய்து கொண்டே வந்தேன், பகுதியிலேயே அவர் என்னை தட்டிக்கொடுத்து விட்டு...
தமாம் லேகின், அனா ஸூப் இந்தே கலம்த் கேப்
(நல்லது ஆனா, நான் பார்த்தேனே.. நீ பேசுறதை எப்படி ?)
மும்ப்கின் கலாத், இந்தே ஸூப் நபர்தாணி. 
(ஒருவேளை தவறு நீ பார்த்தது வேறு நபராக இருக்கலாம்)    
அவர், சிரித்துக் கொண்டே. சொன்னார்.
ஸினப் மால்இந்தே மும்தாஜ், மப்ரூக்.
(உன்னுடைய மீசை அழகாயிருக்கு வாழ்த்துகள்) 

ஸுக்ரான், அல்லாஹ் ஜீப், கதீய மிஸான் அனா, தரீக்மால் பாபா.
(எனது தந்தை வழியா, எனக்கு இறைவன் கொடுத்த அன்பளிப்பு நன்றி)  
ஹா ஹா.. இந்தே, கலம்த் மஸ்பூத்.
(ஹா ஹா.. நீ, நல்லா பேசுறே)  
அவர் எனது லைசென்ஸையும், R.C கார்டையும் கொடுத்து விட்டு போய் விட்டார், அவர் போனதும் நான் நினைத்தேன் இவரிடம் நாம் நியாயத்திற்காக எவ்வளவு நேரம் வாதாடியிருக்கிறோம் அவர் நம்மை ஒன்றும் செய்யவில்லையே ! இதனால்தான் "காவல்துறை உங்கள் நண்பன்" என எழுதி வைத்தார்களோ எழுதியது சரிதான், எழுதிய நாடுதான் மாறி விட்டது, நான் காரை கிளப்பிக் கொண்டு போனேன் காரின் சக்கரம் முன்நோக்கி ஓட எனது எண்ணங்கள் பின்நோக்கி ஓடியது, இதே சம்பவம் என் இனிய இந்தியாவில் நடந்தால் எப்படி இருக்கும் ? என் கற்பனையுடன் வலை பிண்ணத் தொடங்கினேன்.

குறிப்பு- பிண்ணிய வலை, அடுத்த வாரம் வீசப்படும்.  

CHIVAS REGAL சிவசம்போ-
எண்ணம் பின்னோக்கி ஓடி, முன்னால முன்னோக்கி ஓடுற வண்டியில பின்னால மோதினா, பின்னால கம்பிக்கு முன்னால, உட்கார்ந்து எண்ண,வேண்டி வந்துடப்போகுது, கொஞ்சம் முன்னால யோசிக்கிறது பின்னால நல்லது, ஏதோ என்னால சொல்லமுடிஞ்சது பின்னால, முன்னாலயே சொல்லலையேனு சொல்லக்கூடாது பாருங்க... வலை பிண்ணப்போயி கொலைக்கேஸூல விழுந்துடாம இருந்தாசரி. 

காணொளி

83 கருத்துகள்:

  1. ஆஹா...அருமையாக பேசி....அவர் பெயரை எழுதியென அசத்தி இருக்கிறீர்கள் சகோ. வாழ்த்துக்கள்.
    தம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் வந்து வாழ்த்தி வாக்கு அளித்தமைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  2. நல்ல அனுபவம். உங்கள் அரபிக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வாக்கோடு வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  3. ஆஹா! நண்பா!
    நீர்தான் அரபி மொழி அறிந்த அருந்தேவரே!
    (தேவர் மீசை உடையவர்)
    காவல் துறை உங்களது நண்பன்!

    கொஞ்சம் புதுவை காவல்துறை செய்தியையும் கண் கொண்டு பாரூங்கள்)
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே காவல் துறை நமது நண்பன் என்று சொல்லுங்கள் நண்பா.

      நீக்கு
    2. நண்பா!
      புதுவையில் சிறுமி வழக்கில் சிபிசிஐடி போலீஸரால் தேடப்படும் நபர்களாக காவலர்கள் இருந்துள்ளனரே!
      புதுவை செய்தி படித்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள் (காவல் துறை நமது நண்பன்) நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      நீக்கு
  4. வணக்கம் நண்பா!
    தம வெண்பா 4
    நட்புடன்,
    புதுவைவேலு

    பதிலளிநீக்கு
  5. முதலில் வியக்க வைப்பது உங்கள் அரபி அறிவு. அடுத்துதான் அந்த (நாட்டு) காவல்துறையின் கண்ணியம். கடைசி பாரா படித்துத் தலை சுற்றிப் போனேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே இங்கு குற்றம் செய்தவன் மட்டுமே பயப்படவேண்டும் 80தை தெரிந்து கொண்டவன் நான், வருகைக்கும் வாக்கோடு கருத்திட்டமைக்கும் நன்றி.

      நீக்கு
  6. எப்படி இருக்கும்...? கேவலமாக இருக்கும்... ம்... பார்ப்போம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பரே நான் கேவலப்படுத்தமாட்டேன் ஆனால் உண்மையை மட்டுமே எழுதுவேன்.

      நீக்கு
  7. இதேபோல் இந்தியாவில் என்றால் சொல்லவா வேண்டும் ? அந்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் அண்ணா . போகிறபோக்கில் அரபிக்கு சரியான தமிழையும் சொல்லி எங்களுக்கும் அரபியை கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி அண்ணா .

    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடயங்களை சரியாக புரிந்து கொண்டு கருத்தளிக்கும் தங்களக்கு எமது நன்றி நண்பரே...

      நீக்கு
  8. நல்ல அனுபவம்தான் நண்பரே
    இதே இந்தியாவாக இருந்தால், ..........................
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... இந்தியாவாக இருந்தால்................ பொறுங்கள் நண்பரே வரும்.....

      நீக்கு
  9. ஐயா, உங்களுக்கு எந்த மொழி தான் தெரியாது...
    நீங்கள் தமிழரபியில எழுதியிருந்ததையே என்னால் படிக்க முடியவில்லை. எப்படித்தான் அந்த மொழியை கத்துக்கிட்டீர்களோ!!

    சரி, சரி, நீங்கள் இந்தியாவில் சில காலம் கம்பி எண்ணிக்கொண்டிருந்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். எதனால் என்று தெரியாமல் இருந்தது. இப்ப தெரிஞ்சிடுச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருக்கால் நீங்கள் சொல்வதுபோல் நான் இந்தியாவில் கம்பி எண்ணினால் நிறைய பதிவுகள் வெளிவரும் 80 உண்மை உண்மையானவரே...

      நீக்கு
  10. கலக்கிட்டீங்க.... இனி எந்த இந்தியரைப் பார்த்தாலும் அந்த போலிஸ் பம்முவார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலக்கல் இல்லை நண்பரே சரியான பதிலை முறையாக சொன்னால் பயப்பட வேண்டி அவசியம் இல்லை.

      நீக்கு
  11. மொழி எவ்வாறு கைகொடுக்கிறது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல உதாரணம். அந்த சூழலை நிதானமாக நீங்கள் கையாண்ட விதம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முனைவரே, மொழி இந்த நாட்டில் எவ்வளவு அவசியம் 80தை 1996ல் இந்த நாட்டில் நான் கால் பதித்ததும் தெரிந்துகொண்ட வாழ்வியல் உண்மை அன்றிலிருந்து இன்றுவரை கற்றுக்கொண்டே..... வருகிறேன் போலீஸ்காரர்களிடம் பேசத்தெரியாமல் பலரும் மாட்டி விடுகின்றார்கள், எனக்குகூட பயப்பட வேண்டிய அவசியமில்லை சரியான பதிலை நம்மால் கொடுக்கவில்லையெனில் என்னவாகும் ? வந்தவர் அபராதத்தை எழுதிக் கையில் கொடுத்து விட்டு போய்விடுவார் அவ்வளவுதான் நான் சரியாக பேசியதால் 400 திர்ஹாம்ஸ் மிச்சம்.

      காந்திஜியின் பொன்மொழியொன்றை தருகின்றேன்.
      //இரண்டு மொழிகள் தெரிந்தவன் இரண்டு மனிதனுக்கு சமம்//

      நீக்கு
  12. வொல்லா!.. தமாம்.. தமாம்!.. மப்ரூக்.. ஜேன்!.

    அப்போ போன்..ல பேசியது யாரு!.. மன்னார் அன் கம்பெனியா?..

    தெரியல சார்!.. நாங்க ராஜ மன்னார்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபத்தலாயாஹி ஜேய்ன்...
      நீங்களே மாட்டி விட்ருவீங்க போலயே ஜி.

      நீக்கு
  13. இந்தியா என்றால் இதுதான்.

    https://www.facebook.com/video.php?v=1133385223353862
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்று வந்தேன் நண்பரே... மானக்கேடுதான் ரௌடிகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் என்ன ?

      நீக்கு
  14. தாங்கள் அவர்கள் பேசும் மொழியில் பேசியதாலும் எழுதியதாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தங்களின் மீசையை பார்த்து பொறாமையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு ஒப்புக்கு வாழ்த்தி சென்று இருக்கிறார்கள்..என்றே நிணைக்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  15. இரவே வாசித்தேன் அண்ணா...
    கருத்திடும் மனநிலை இல்லை....
    அரபியில் விளையாண்டிருக்கிறீர்கள்...
    மீசை ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு மாதிரி... ம்.... பல வகை மீசைகளா அண்ணா...
    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே கருத்திடும் மனநிலையில் இல்லை... என்ன பிரட்சினை மாலை வருகிறேன்.

      நீக்கு

  16. மணிமேகலை காப்பியத்தில் ஒரு உள் கதை உண்டு, ஆதிரையின் கணவன் கப்பல் பயண விபத்தில் தப்பித்து நாகர் இன மக்களிடம் மாட்டிக்கோள்வான், அவர்கள் அவனை தலைவன் முன் இருத்துவார்கள், அவன் தலைவனிடம் அவர்கள் மொழியில் பேசியதால் ஏராளமான பொன் பொருளோடு திருப்புவான், இது உண்மையா? இல்லையா? என்பது ,,,,,,,,,,,,,,,,,,, தாங்கள் மகிழ்ச்சியா பயணம் தொடர நேர்ந்தது தங்களுக்கு தெரிந்த மொழி அறிவாலே,அவர் பாராட்டியதே போதும்,நம்நாட்டில் என்று ஏன்? இங்கு ஆங்கிலத்தில் லீவ் லெட்டர் சொன்னால் போகுது,இன்னும் என்ன மொழி ஸ்டாக் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனக்காக மணிமேகலையை கப்பல் ஏற்றியது கண்டு மகிழ்ச்சி.
      இன்னும் எத்தனை மொழிகள் ஸ்டாக் உள்ளது ? இதென்ன ? கோடவுணா ?

      இருப்பினும் உடனடியாக அரிய... 2014 செப்டம்பர் மாத பதிவு My India By Devakottaiyan சொடுக்கிப் பார்க்கவும்.
      தங்களுக்காகவும் இனி பழமொழிகளை புகுத்துவேன் நன்றி.

      நீக்கு
    2. நான் எங்கப்பா மணிமேகலையைக் கப்பல் ஏற்றினேன். ஆதிரையின் கனவன்.சரி 2014 பதிவைப் பார்க்கிறேன்.பிறகு வருகிறேன்.

      நீக்கு
    3. கப்பலில் ஏறியது ஆதிரையின் கணவன் 80 தெரிவாக எழுதியிக்கின்றீர்கள் இது தெரியாமலா இருப்பேன் ? சும்மா, சும்மாக்காச்சுக்கும்.

      நீக்கு
  17. நமது நண்பர்கள் என்பதை பல நேரம் நிருபிக்கிறார்கள். இந்த பதிவிலேயே
    நல்லா அரபி கற்றுக்கொள்ளலாம் போல.... பேசாம ஒரு பக்கம் அரபி வார்த்தைகளை பதிவிடுங்கள் நாங்களும் கற்றுக்கொள்கிறோம்.
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு மதிப்பளித்து இனி அரபி மட்டுமல்ல எனக்கு தெரிந்தவைகளை புகுத்துகிறேன் நண்பரே... நன்றி

      நீக்கு
  18. படித்துக் கொண்டே வரும்போது இது இந்தியாவில் நடந்திருந்தால்,... என்று எனக்குத் தோன்றியது.

    உங்கள் பார்வையில் அதைப் படிக்க காத்திருக்கிறேன்.

    இருக்கும் இடத்தின் மொழி தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் ஹிந்தியின் அவசியம் என்ன 80 தங்களைப் போன்றவருக்கே நன்றாக தெரியும் விரைவில் அடுத்த பதிவு.

      நீக்கு
  19. போலீசில் இரண்டு பிரிவு இருக்கிறது நண்பரே!

    ஒன்று தன் மக்களை நண்பர்களாக நடத்துவது. வளர்ந்த நாடுகளில் இதைப் பார்க்கலாம்.
    மற்றொன்று தன் மக்களை அடிமைபோல் நடத்துவது. இது பொதுவாக காலனிய ஆதிக்க நாடுகளில் இருக்கும்.
    இந்தியர்களை எப்படி மிரட்டி ஒடுக்க வேண்டும் என்பதற்காக வெள்ளையர்கள் காவல்துறைக்கு கற்று தந்த பாடம் அது. 67 வருடங்கள் கடந்தும் இன்னும் நம் அரசியல்வாதிகள் அதை மாற்றவில்லை. சொந்த நாட்டு மக்களையே அடிமை போல் தான் நடத்துகிறார்கள்.
    அபுதாபி போலீஸ் உங்களை கண்ணியமாக நடத்திருக்கிறது.

    நல்ல பதிவு. நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையாக விளக்கமளித்து உள்ளீர்கள் இங்கு தவறு செய்யாதவரை பயமில்லை நண்பரே நமக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு.

      நீக்கு
  20. எதிலும் வல்லவர் தாங்கள் என்பதை நிரூபிக்கும் எழுத்தும் செயலும். வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மனம் நிறைந்த வாழ்துக்கு நன்றி.

      நீக்கு
  21. தாங்கள் அங்கே சென்று எத்தனை ஆண்டுகள் ஆயிற்று? அரபி நன்கு தெரியுமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா நான் 1996 ரில் வந்தேன் 2000 தில் படித்தே தீரவேண்டும் என்ற சூழலுக்குள் தள்ளப்பட்டு, 2001 முதல் டைரியிலும் இதையே பயன்படுத்த ஆரம்பித்தேன், 2003 முதல் டைப்பிங் அடிக்கப்பழகி விட்டேன் எனக்கு 100 சதவீதமும் தெரியும் என்று சொல்ல மாட்டேன் ஆனால் நான் அரபியைப்பற்றி ஏற்கனவே கொடுத்த பதிவுகள், கொடுக்கும் பதிவுகள், கொடுக்கப்போகும் பதிவுகள் அனைத்தும் 100 சரியே... தொடர் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  22. வெளிநாட்டில் கூட மரியாதைக் கிடைக்கிறது ,உள்நாட்டில் அடி உதைதான் கிடைக்கிறது :)
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி நம் நாட்டில் மாற்றப்பட வேண்டிய விசயங்களில் இது முக்கியமானது.

      நீக்கு
  23. வணக்கம்
    ஜி
    தங்களின் அரபு மொழி பேச்சாற்றல் கண்டு வியந்து விட்டேன்... நான் கூட8 வருங்கள் மலாய் மொழி கற்றது குறைவு பேச தெரியும் எழுத தெரியும் சுமாரா... இருந்தாலும் மலேசியாவில் ஆங்கிலம் பேசி பேசி பழக்க பட்டு விட்து..என்ன செய்வது.. மற்றது வீடியோவை முழுமையாக இரசித்தேன் ஒவ்வொரு விதத்தில் வருகின்றீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்... த.ம17
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் (சிலிர்க்க வைத்த ஸ்ரீலங்கா) பதிவுக்கு வரவில்லையே...நன்றி.

      நீக்கு
  24. உங்களுக்கு அரபி தெரியாமல் இருந்திருந்தால் , உங்களால் அவர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் இருந்தால், உங்களுக்கே உரித்தான மீசை இல்லாதிருந்தால் நீங்கள் போலிஸ் உங்கள் நண்பன் என்று சொல்ல மாட்டீர். அதுவும் அரபுப் போலீஸ் நிச்சயம் எல்லோருக்கும் நண்பர் அல்ல. உங்களை ஏதாவது செய்துவிட்டு பத்திரிக்கையில் K என்பவர் இன்ன குற்றத்துக்காக சிறை வைக்கப் பட்டுள்ளார் என்ற செய்தி வரும் நாமும் யார் அந்த K என்று முடியைப்பிய்த்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஐயா மிகத்தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் வாழும் இடத்தில் மொழி எவ்வளவு அவசியம் 80தை உணர்ந்தவன் நான், காரணம் மொழிதான் அல்ல மொழிகள்தான் என்னை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

      நீக்கு
  25. நண்பரே! உங்களைக் காப்பாற்றியது உங்கள் அரபு மொழி, கொடுவா மீசையும் தான்...அந்த போலீஸ் ரொம்பவே மயங்கிட்டாரோ?!!!!!உங்க மீசையப் பார்த்து...பொறாமையா இருந்துருக்குமே அவருக்கு....எப்படியோ ஒருநல்ல அனுபவம்....அது சரி இங்க எப்படி இருந்துருக்கும்...இங்கேயும் கூட எல்லா போலீசும் அப்படி இல்லை...ஒரு சிலர்தான் ..ஆனாலும் வெளிநாடுகளில் போலிஸ் மக்களை மரியாதையாக நடத்துவ்து பபோல இங்கு இல்லைதான். வெயிட்டிங்க் உங்கள் அடுத்த பதிவிற்காக....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைக்காப்பாற்றியது மட்டுமல்ல இங்கு என்னை வாழவைத்துக்கொண்டு இருப்பதே மொழிகள்தான் நண்பரே... விரைவில் காவல்துறை உங்கள் நண்பன்

      நீக்கு
  26. இந்தியாவாக இருந்திருந்தால் ஐம்பதோ நூறோ குடுத்திட்டு வண்டியை எடுத்துகிட்டு போக வேண்டியிருந்திருக்கும்!! லைசன்சை மறந்திட்டு வந்தாலும் சரி, வண்டியையே திருகிட்டு வந்தாலும் சரி, அதே சார்ஜ் தான்!! எல்லோரையும் சமத்துவத்தோட பார்க்கிறது தான் நம் காவல்துறையின் தனிச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே எனது கோணத்தை சொல்கிறேன் விரைவில் வருகைக்கு நன்றி நண்பரே.....

      நீக்கு
  27. பல்மொழிப்புலமை உங்களிடம்
    படிக்க வேண்டும் அரபு நானும்!

    பதிலளிநீக்கு
  28. அய்யா G.M.B அவர்களோடு உடன் படுகிறேன். நீங்கள்தான் காரில் செல்லும்போது போனில் பேசவே இல்லை. அப்புறம் எப்படி அந்த போலீஸ்காரருக்கு மட்டும் நீங்கள் போனில் பேசியதாகத் தெரிந்தது? ஒருவேளை அரபியில் நீங்கள் பேசாமல் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பார். நல்ல சுவையான பதிவு.

    த.ம.22

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நன்றி நல்லகேள்வி இரண்டு கேட்டீர்கள்.
      முதல் கேள்விக்கான விளக்கம் பதிவிலேயே வருகிறது அதாவது போலீஸ்காரர் பார்த்தது உண்மையே 100க்கணக்கான கார்கள் போய்க்கொண்டு இருக்கும் பொழுது அவர் பார்த்த கார் அடுத்தட்ராக் மாறி வேகமாக முந்தி இருக்கலாம் இவரது பார்வையை விட்டு விலகி இருக்கலாம், அவனது காரின் நிறத்தைப்போலவோ அல்லது அவனது காரின் நம்பரைப்போலவோ சீரியல் மட்டும் மாறி எனது கார் பிடிபட்டு இருக்கலாம் இந்த வகையான தவறுகள் நடப்பது இயல்பு இதை பக்குவமாக நாம் எடுத்துச்சொல்லும்போது மனிதாபிமானம் உள்ள அவர் கேட்டுக்கொண்டார் இதுதான் உண்மை.

      அடுத்தது பேசத்தெரியவில்லை என்றால் என்ன செய்வார் ?
      ஒன்றும் பிரட்சினை இல்லை அபராதம் மட்டும் எழுதிக்கொடுத்து விட்டு போய்விடுவார் கண்டிப்பாக மரியாதை குறைத்துக்கூட திட்டமாட்டார் பேசத்தெரியாத காரணத்தாலும்கூட பலரும் அபராதம் கட்டி இருக்கிறார்கள்.

      இன்னும் இதைப்போல அபராதம் கட்டிய அனுபவங்கள் எனக்கு உண்டு காரணம் கூடுதலாக வாய் பேசியதற்காக.... இதையும் எழுதுவேன் விரைவில்.

      நீக்கு
  29. Nice Post! கடமை. கண்ணியம் , கட்டுப்பாடுடன் இருக்கும் காவல்துறை நண்பரை சந்தித்த அனுபவத்தினையும், தங்களின் மொழிப்புலமையையும் .... பதிவு அருமை!
    இருவரும் பேசியதைப் பார்க்கையில், விசாரணையே சாதாரணமான பேச்சு போல இருக்கிறது... எங்கோ மச்சம் இருக்கு....அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசுது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே இங்கு நியாயத்தை போலீஸ்காரரிடம் யார் வேண்டுமானாலும் கேட்கலாம் இது நம்நாட்டுக்காரர்கள் பலருக்கும் தெரியாது.... மச்சமெல்லாம் கிடையாது நண்பரே நானும் அபராதம் கட்டி இருக்கிறேன் விரைவில் சொல்கிறேன், பதிவின் மூலம்....

      நீக்கு
  30. தங்களின் ஒவ்வொரு கெட்டப்பையும் படம் பிடித்து காட்டிய ஒளிப்பதிவுக்கு-ஒளிப்பதிவாளர்க்கு நன்றி!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே இதின் ஒளிப்பதிவாளர் 90 சதவீதம் நானே... கேமரா சுழலும்போது கவனித்தீர்களா.... காரில் நான் மட்டுமே...

      நீக்கு
  31. வெளி மாநிலமோ அல்லது வெளி நாடோ அந்தந்த இடங்களில் பேசப்படும் மொழியைக் கற்றுக்கொண்டால் எவ்வளவு உபயோகமாக இருக்கும் என்பதை உங்கள் பதிவு தெளிவுபடுத்துகிறது. அரபி மொழியில் உங்களுக்கு உள்ள புலமை அறிந்து வியக்கிறேன். வாழ்த்துக்கள்! தமிழ் நாட்டில் காவல் துறையினர் ‘உங்கள் நண்பன்’ என்று ஒரு குறும்படத்தை திரு பரமகுரு I.P.S அவர்கள் சென்னை மாநகர காவல் துறை ஆணையாளராக இருந்தபோது 1957 இல் வெளியிட்டார்கள். அந்த தலைப்பு படத்தோடு சரி. உண்மையில் நடப்பது வேறு. உங்களுடைய அனுபவம் இங்கு நடந்திருந்தால் எப்படி இருக்கும் என தாங்கள் எழுத இருக்கும் பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. வருக நண்பரே அந்தக் குறும்படம் //ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது// என்ற பழமொழிபோல் இருப்பது வேதனையே... தங்களது ஆவலை நாளையே பூர்த்தி செய்சிறேன் நண்பரே... வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. அனுதாபி போலிஸ் முன் அசத்திவிட்டீர் கில்லேர்ஜி.
    இந்தியாவில் நடந்தால் எப்படி இருக்கும் அறியக் காத்திருக்கிறோம் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  34. அன்புள்ள ஜி,

    காவலர்கள் நமது நண்பர்கள் என்று நமது நாட்டில் ஏட்டில் மட்டும்தான் இருக்கிறது. நீங்கள் பாடல் வரிகளை முனுமுனுத்துக்கொண்டு சென்றிருப்பீர்கள்... அது அவர்களுக்கு அலைபேசியில் பேசிக்கொண்டு செல்வதுபோல இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
    அரபு மொழியில் பேசி அசத்தியிருப்பதைக் நாங்கள் கண்டு அசந்து விட்டோம். எனக்கும் அரபு தெரியும் என்பது தங்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை... சொல்லட்டுமா? 1 2 3 4 5 6 7 8 9 0 என்ன ஜி சரிதானே!

    செல்போன் பேசினால் போலிஸ் தொடர்ந்து வருவார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நமது நாட்டில் செல்போன் பேசிக்கொண்டுதான் பெரும்பாலானோர் வாகனம் ஓட்டுகிறார்கள். இங்கு பேருந்து ஓட்டுனர் மட்டும்தான் செல்பேசிக்கொண்டு ஓட்டினால் வேலையிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவார்கள் என்பதால் பேசுவது இல்லை... மற்றபடி இங்கு எல்லோரும் செல் பேசிக்கொண்டுதான் (டூ வீலர் உட்பட) ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள்.

    காரில் அமர்ந்தவுடன் தாங்கள் சீட் பெல்ட் அணிவதைப் பார்த்தேன். இங்கெல்லாம் 100 இல் ஒருவர் அணிந்தாலே பெரிய காரியம்.

    வீடியோ அபுதாபியைச் சுற்றிக் காண்பித்ததைப் பார்த்து இரசித்தோம்.
    நன்றி.
    த.ம. 24

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே, இங்கு ஆச்சர்யமான விசயம் என்ன தெரியுமா ? தவறு செய்த அடுத்த நொடியே போலீஸ் நமது பின்புறம் இருக்கும், தங்களுக்கு அரபு நம்பர் தெரியுமென்பதை இன்று தெரிந்து கொண்டேன் செல்போண் பேசுவதை கண்காணிப்பதற்காகத்தான் பிறநாட்டவர்கள் காரில் கூலிங் பேப்பர் ஒட்டுவதற்க்கு 30 சதவீதம் மட்டுமே அனுமதி.
      பெல்ட் போடாமல் கார் ஓட்டக்கூடாது தாங்கள் முழுவதும் காணொளி கண்டது குறித்து மகிழ்ச்சி.

      நீக்கு
  35. வணக்கம் சகோதரரே.!

    மொழிகள் பல தெரிந்திருந்தால், அதுவும் நாம் எங்கு வாழ்கிறோமோ.. அந்த நாட்டின் மொழியை கற்றிருந்தால், அது எப்போதும் நம் இன்னல்களை களைந்து நமக்கு கைகொடுக்கும் என்பதற்கு தங்கள் பதிவு ஒரு உதாரணம்...
    (நாங்கள் அன்று அவரிடம் மாட்டியிருந்தால் "ஙே" என்று விழித்திருப்போம் என்பதும் உறுதி.).

    மொழிகள் பல கற்று தேர்ந்திருக்கும் தங்களுக்கு என் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்...
    தொடர்புடைய அடுத்த பதிவையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்... நன்றி

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கருத்துரைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி தாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவு நாளையே...

      நீக்கு
  36. மொழியின்முக்கியத்துவம் என்பதற்கு இதைவிட வேறொன்றும் வேண்டுமா?
    காணொளியிலெங்களையும் அழைத்துச்சென்றீர்கள் பஸ் ஸ்டேஷன்,துபாய்
    ரோட்,முஸ்ஸபாரோட்,அந்த இடத்தில்நீங்கபாடினது,அபுதாபி நேவி,தாஜ்மஹால்மாதிறி,அந்த இடத்துல நீங்ககட்டிப்போட்ட புள்ள மாதிறி முழிக்கிறது,அபுதாபி,இருந்து சார்ஜா, செய்யது ப்ரிட்ஜ்........எல்லாசரிதான்
    ஒரேஒருவார்த்தை.......(மீசை நல்லாஇருக்குன்னு சொன்னதுக்கு இப்புடியா
    எத்தனை கெட் அப் சாமீ..........தாங்க முடியலியே....)மைண்ட்வாய்ஸ் கேட்டிருக்குமோ?அருமைசகோ எத்தனை முயற்சி நீங்களே படம் எடுத்துஇருப்பீங்கன்னு நினைக்கிறேன் அருமைசகோ கலக்குங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, இவ்வளவு விளக்கவுரைகளா ?அருமை காணொளியை முழுமையாக கண்டு இருக்கின்றீர்கள் 80 புரிகிறது.
      இதெல்லாம் கெட்-அப் இல்லை ரியல் லைஃப்.
      ஆம் காணொளியை எடுத்தது 90சதவீதம் நானே எனக்கு இதில் கூடுதல் ஆர்வம் உண்டு வருகைக்கு நன்றி.
      பாராட்டிப்பேசுறது மா3தான் இருக்கு ஹூம் நானும் நம்பிட்டேன்.

      நீக்கு
  37. மற்ற நாடுகளில் காவல்துறை மக்களின் நண்பர்கள் தான்...இந்தியாவிலும் அவர்கள் நண்பர்கள் தான்..ஆனால் யாருக்கு? :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்கு ? அரசியல்வாதிகளுக்கு..... பெருங்கொண்ட பணமுதலைகளுக்கு....

      நீக்கு
  38. பெயரில்லா3/09/2015 2:23 PM

    இதென்ன இது. 77 கருத்து !
    எனக்கு 7 கூட வருதில்லையே...
    கெட்டிக்காரன்.
    உங்கள் பதிவு கார் முன்னோடி
    பின் பின்னோடிப் பல சாகசம் காட்டுவது
    போல அருமையாக இருந்தது.
    குளப்பிட்டிங்க ! இனிப் போய் மற்றப் பதிவைப் பார்க்க வேண்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வரவும் 77 ஆ,...... ய்யேன் வேணுமுன்னா 76 ஐ விட்டுப்புட்டு மிச்சத்தை பூராம் அள்ளிக்கிட்டு போங்களேன்.

      நீக்கு
  39. சகோ உண்மையதான் பேசுவே உண்மையமட்டும் தான் பேசுவேன்
    உண்மையிலேயே உங்களைப்பாராட்டிதான் சொல்லி இருக்கேன்
    சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நானும் சும்மாக்காச்சுக்கும் சொன்னேன் சகோ....

      நீக்கு
  40. சகோ.. உங்கள் இடுகை சமயத்தில் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. சௌதியில்தான் ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் போதுமானதல்ல. அரபிமொழி நிச்சயம் அவசியம். ஆனால் அமீரகத்தில், போலீசுடன் ஆங்கிலத்திலும் பேசலாம். நீங்கள் சொல்லியபடி, நிதானமாக (not aggressive. they expect respect first) விளக்கினால் அவர்கள் உண்மையைப் புரிந்துகொள்வார்கள். தவறு செய்பவன் மட்டும்தான் பயப்படவேண்டும். அதேபோல், arrogantஆகப் பேசக்கூடாது. காவல் துறை (டிராபிக் எல்லாம்) உண்மையான நண்பர்கள், இங்கு கல்ஃப் தேசங்களில் (சௌதியைத் தவிர)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இங்கும் இப்பொழுது படித்தவர்கள் நிறைந்து விட்டார்கள் உண்மைதான் இங்கு சட்டம் தன் கடமையை மட்டுமே செய்கின்றது.

      நீக்கு