கொடைவள்ளல், உதாரணத்திற்க்கு
பாரியை, வள்ளலென்று சொல்கிறார்கள். முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்று, இது
சரியா ? ஒருசாதாரண தாவரவகை முல்லை,
இதற்காக ஒரு தேரையே தாரை வார்த்து கொடுத்தது முறையா ? ஒரு அறிவாளிக்கு ஒப்பாகுமா ? இந்த இரக்ககுணம் உள்ளவர்
எப்படி ? மற்றதாவர வகைகளை உண்டார் ? அப்படியானால் இவர் புலால்
உணவு உண்டதில்லையா ? காட்டுக்கு வேட்டையாட போய்
என்ன செய்திருப்பார் ? இவர் இரக்கமானவர் என்றால், அந்த முல்லைக்கு
முள்வேலியொன்றை அமைத்து வழிவகை செய்து கொடுத்திருக்கலாமே ! இப்படிச்செய்தது
அறிவீணர்களின் செயல் மட்டுமல்ல ! பொருளாதாரத்தின் பலம் அறியாதவரின் செயல்,
இப்படிப்பட்டவரை ஒரு மன்னராக எப்படி ? ஏற்றுக்கொண்டார்கள் ? முல்லை, தேர்மீது படந்ததால்
விட்டுக்கொடுத்து விட்டார் சரி, ஒருவேளை மகாராணி மீது படந்திருந்தால் ? ச்சே... நினைத்து பார்க்கவே
மனது எவ்வளவு வேதனையாக இருக்கிறது.
சாம்பசிவம்-
இதே கேள்வியைத்தான், மூணாவது
படிக்கும்போது, குருந்தன் வாத்தியார்ட்ட கேட்டேன், அதிகப் பிரசங்கின்னு சொல்லி, செவிட்ல
அறைஞ்சு ஓரமா உட்கார வச்சுட்டாரு, பிறகுதான் தெரிஞ்சது அறிவுக்கு எப்போதுமே
சோதனைதான்னு.
தம 1 சகோ நீங்க ரெம்ப அறிவாளி தான்...
பதிலளிநீக்குவாங்க உங்களுக்கு தெரியுது குருந்தன் வாத்தியாருக்கு தெரியாமல்தானே ‘’சட்டீர்’’னு கொடுத்துட்டாரு...
நீக்குஅட இது வரையில் எத்தனை அறிவாளிகள் வந்து போயிருப்பார்கள் யாராவது கேட்டிருப்பார்களா இப்படி. உங்களுக்கு மட்டும் தானே இப்படி தோன்றியிருக்கிறது..ம்...ம்...ம் சிந்திக்க வேண்டிய விடயம் தான். நான் நினைக்கிறேன் நீங்க ரொம்ப அறிவாளி என்று. அட நக்கல் எல்லாம் இல்லைங்க உண்மையாய் தான் சொல்கிறேன் நியாயமான கேள்வி தானே. தேரையே கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை தானே.
பதிலளிநீக்குஅடடே வாங்க வாங்க சீக்கிரமே வந்துட்டீங்க பதிவுக்கு, மழை வருமோ ? அதனாலதான் குடை வச்சிருக்கேன் நக்கல் இல்லைனு சொல்றீங்க ஆனால் ? நக்கல் மா3 தெரியுதே....
நீக்குஅறிவிற்கு எங்கும் எப்போதும் சோதனைதான் நண்பரே.
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா எனது அனுபவத்தை சொன்னேன்
நீக்குபடத்தில காட்டிய குடையும்
பதிலளிநீக்குபாரி காட்டிய கொடையும்
எட்டாப் பொருத்தமே!
வாங்க நண்பரே உண்மைதானே இந்தக் குடையாவது வெயிலுக்கும், மழைக்கும் பிரயோஜனம் தேர் அரசாங்கத்துக்கு நஷ்டம் இல்லையா ?
நீக்குசரியான கேள்விதான்! சாம்பசிவம் கேட்டதும் கரெக்ட்! படம் சூப்பர். எவ்வளவு பெரிய குடை (அமைப்பு)!
பதிலளிநீக்குவருக நண்பரே கருத்துரைக்கு நன்றி.
நீக்குமுல்லை, மகாராணி மீது படர்ந்திருந்தால்? நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இருந்தாலும், நீங்கள் அதற்கும் உரிய தலைப்பிட்டு ஒரு பதிவினைச் செய்திருப்பீர்கள்.
பதிலளிநீக்குவருக முனைவரே மூளைக்கு வேலை கொடுத்து விட்டீர்கள்.
நீக்குஅறிவும் சோதனையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் நண்பரே
பதிலளிநீக்குதம +1
வருக நண்பரே உண்மைதான்.
நீக்குஇதுவல்லவோ சோதனை ஜி...! ஹா... ஹா...
பதிலளிநீக்குசத்திய சோதனை ஜி.
நீக்குஅப்போதே அப்படித்தானா..!
பதிலளிநீக்குஆனாலும் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே இப்படி கேட்க மிகப் பெரிய ஞானம் வேண்டும். அந்த ஞானம் உங்களுக்கு இருந்திருக்கிறது. சிந்திக்க வைத்த நல்ல பதிவு.
த ம 8
நாங்க அப்ப மட்டுமல்ல எப்பவுமே இப்படித்தான் எனக்கு மூணாவது படிக்கும்போதே இம்பூட்டு அறிவு இருக்கே ? பதினைஞ்சாவது படிச்சிருந்தா ? எம்பூட்டு இருந்திருக்கும்.
நீக்குஅறிவுக்கு எப்போதும் சோதனைதான் நண்பரே.... குடை வள்ளல் எல்லாம் கொடை வள்ளலாக மாறிவிட்டார்கள்..நண்பரே......
பதிலளிநீக்குவாங்க நண்பரே அந்த சோதனையைத்தானே வேதனையாக கொட்டி இருக்கிறேன்.
நீக்குஅன்பின் ஜி!..
பதிலளிநீக்குஆச்சர்யம்.. தங்களின் கேள்விகளைக் கண்டு!..
பாரி வள்ளல் முல்லைக்குத் தேர் கொடுப்பதற்கு முன்பே மகாராணியார் பரலோகம் போய்விட்டார்கள்..
பாரிவள்ளலின் இரு மகள்கள் - அங்கவை சங்கவை...
இவர்களை ஏளனம் செய்து மகிழ்ந்தனர் - ஒரு தமிழ் திரைப்படத்தில்!..
இப்போதும் பல பட்டி (!?) மன்றங்களில் பாரியின் இந்த செயல் கேலி செய்யப்படுகின்றது.
பாரிக்கு இவ்வளவோ..... இரக்கமா..ன்னுதான் மூவேந்தர்களும் கூடி போட்டுத் தள்ளினார்கள் போலிருக்கின்றது!..
அதற்குப் பின் - அங்கவையும் சங்கவையும் பாடிய - கழிவிரக்கம் பொங்கும் பாடல் (அற்றைத் திங்கள்) ஒன்று உள்ளது.. படித்தால் கல்லும் கரையும்!..
ஜியின் வருகைக்கு நன்றி பாரி வள்ளலைப்பற்றிய நான் அறியாத பல தகவல்கள் தந்தமைக்கும் நன்றி தாங்கள் கூறிய (அற்றைத் திங்கள்) படிக்க முயல்கிறேன்.
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குபாரிவள்ளல் காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையும் மேம்பாலம் கண்டு களித்தேன். இவ்வளவு அறிவுள்ளவர் முல்லைக்குத் தேர் கொடுத்தது... பாரி...தெரியாமல் செய்திருந்தால் தவறு... அவர் தெரிந்துதான் செய்திருப்பார்...! அப்போ தப்பாகுமா?
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றாரே வள்ளலார்’ இதை எந்த வகையில் சேர்க்கலாம்?
பசுவின் கன்றைக் கொன்றததற்காக தன் மகனைத் தேர்க்காலிட்டுக் கொலை செய்தானே கொலைகாரன் (* தங்களைக் குறிப்பிடவில்லை) மனுநீதிச் சோழன் அவன் செய்ததை எந்த வகையில் சேர்க்கலாம்...?
சாரி...பாரி வகையிலா...? இல்லை இவர்களை எந்த வகையில் சேர்க்கலாம்? ஒன்னுமே புரியமாட்டேங்கிது...!
த. ம. 9.
வருக மணவையாரே வள்ளலாரின் பாடல் மனிதன் உண்ணும் பயிர் வகைகளைச் சொன்னாரா ? இல்லை ஒட்டு மொத்த தாவர வகைகளையும் சொன்னாரா ? என்பதில் எமக்கும் ஐயப்பாடு உள்ளது.
நீக்குமனுநீதிச்சோழன் செய்தது சரியா ? உலகுக்கு நீதியை நிலை நிறுத்துகிறேன் என்பதற்காக இப்படியா ? மனித உயிரும் பசுவின் உயிரும் ஒன்றா ? அதற்காக பசுவைக்கொன்றது சரி என்று நான் சொல்லவரவில்லை இதனால்தான் பிஜேபிக்காரர்கள் பசுவை கொன்றவனை தூக்கிலிட வேண்டும் என்று சொல்கிறார்களோ என்னவோ ? ஆனால் மனிதனைக் கொன்றவனை என்ன செய்யவேண்டும் என்று சொல்லவே இல்லை இதுதான் எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
கூட்டத்துல கோவிந்தா போடுவதுபோல என்னையும் ‘’கொலைகாரன்’’ என்று சொல்லி விட்டீர்களே மணவையாரே....
சகோ மூன்றாம் வகுப்பிலே அப்படின்னா ? பாவம் ஆசிரியர்கள்.
பதிலளிநீக்குஆசிரியர் பாவமா ? அப்படீனாக்கா, அப்பாவிப் புள்ளையை சட்டீரென அடிச்சது பாவமில்லையோ ?
நீக்குஇப்படியும் ஒரு சந்தேகமாஆ.... இப்படி உங்களால், உங்களால் மட்டுமே ஜிந்திக்கமுடியும், எழுதமுடியும் பாரியைப்பற்றி. ஸ்..ஸ்ஸ் ப்பாஆஆ..
பதிலளிநீக்குபடிக்கிற புள்ளைங்க சந்தேகத்தை ஆசிரியரிடம்தானே கேட்க முடியும் சகோ.
நீக்குஇது அறிவான கேள்வியா? கேனத்தனமா இருக்கு? அரண்மைனையில் இருக்க வேண்டிய ராணி காட்டுக்கு போக என்ன இருக்கு? கற்பனை ரொம்ப நீளம்.
பதிலளிநீக்குபாரி முல்லைக்கு தேர் கொடுத்தான் என்றால், உடன் உதவ வேண்டும் என்று நமக்கு சொல்ல,
பக்கத்தில் ஏதேனும் கொம்பு இருந்து இருந்தால் அதனை எடுத்து வைத்து இருப்பான், இல்லையாகையால் தேர்.
பின் தேடி கொம்பு நட்டு இருப்பான்.
நாம் தேரை மட்டும் பிடித்துக்கொண்டு இப்படி,,,,,,,,,,,,
சாம்ப சிவம் இந்த கேள்வியை மட்டும் கேட்டு இருப்பார் என்று நான் நினைக்கல
அரசியையும் இழுத்து அப்பு வாங்கிவிட்டு,,,,,,,,,,,,,,,,,
வாங்க, வாங்க காட்டுக்கு எதுக்கு போனாரு ? தியானம் செய்யவா ? வேட்டையாடத்தானே ? மிருகங்களை கொல்வது குற்றமில்லை ஆனால் அப்படிப்பட்டவரு முல்லைக்கு தேர் கொடுத்தாரு என்பதால் இரக்கமானவரா ? மக்கள் அன்றே எதிர் கேள்வி கேட்காமல் வாழ்ந்து வந்து பழக்கப்பட்டு விட்டதால்தான் நாமும் அவ்வழியே வந்து விட்டோம் ஆம் 30 வயதுக் குழந்தையை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து 1000 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்தவரை மக்கள் கேள்வி கேட்கவில்லையே அந்தப்பணத்தில் எனது பணம் இல்லையா ? உங்களது பணம் இல்லையா ? அன்றாவது மன்னர் ஆட்சி இன்று மக்களாட்சியாம் இப்பொழுது அந்த 30 வயதுக் குழந்தை தொடர்பில் இல்லையாம்.
நீக்குவணக்கம் நன்பரே!
பதிலளிநீக்குஇந்தக் கேள்வியை ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே கேட்டுப் பதிலும் சொல்லி விட்டார்கள்,
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
அறிமடமும் சான்றோர்க்(கு) அணி.
அவர்கள் அறியாமற் செய்வதல்ல அவை என்கிறது இப்பாடல்,
உயிர் துயருறுந் தருணத்தில் உதவ விரைகின்ற மனத்தில் ஆராய்ச்சிக்கு இடமில்லை.
அப்படி அவர்கள் செய்வது கூட இகழப்படாது.
அது அவர்களுக்கு அழகு செய்வதே ஆகும் என்று சொல்கிறது இந்தப் பழமொழி நானூறின் பாடல்.
நன்றி !
நண்பரே எனத் திருத்திப்படிக்க வேண்டுகிறேன்.
நீக்குபிழைக்கு வருந்துகிறேன்.
நன்றி.
வருக கவிஞரே எமக்காக பழமையை நினைவு கூர்ந்து பாடல் விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
நீக்குநண்பா!
பதிலளிநீக்குபதிவின் தலைப்பு இதுதானே?
"கு ருவுக்கு கு டைச்சல் கு டுத்த கு ருமுட்டை"
இது எப்படி இருக்கு?
ஈபிள் டவர் மீது ஏறி நின்று என்மீது எச்சில் துப்புவது தெரிகிறது?
ஜூட்!!!!!
த ம 14
நட்புடன்,
புதுவை வேலு
வாங்க நண்பா எச்சில் துப்புவதற்காக நான் ஃப்ரான்ஸ் விசா எடுத்து மீண்டும் வரமுடியுமா ?
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
நல்ல கேள்விகேட்டீர்கள் படித்து போகும் போது இடையில் விரக்தி அடைந்தேன் தங்களுக்குவந்த யோசனை மன்னனுக்கு கூட வந்திருக்காது.ஆகா...ஆகா.....ஆகா...த.ம 16
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்ன ? செய்வது நண்பரே அறிவுக்கு தோன்றியது கேட்டேன் இது தவறா ? எல்லோரும் அடிக்க வர்றாங்க.... பயமாகீது...
நீக்குமுல்லைக்கு தேர் கொடுத்ததும்
பதிலளிநீக்குமூன்று தட்டுப் பாலத்துக்கு குடை
வைத்ததும் பாரிதான் நண்பரே
இரண்டுக்கும் காரணம் வெயில்தான் !
வாங்கிய அடி இப்போதும் வலிக்கும் போல இருக்கு
நல்ல சந்தேகம் கற்றுணர்ந்து தெளிவுறுக !
வாழ்த்துக்கள்
தம +1
வருக நண்பரே அபுதாபியிலும் வெயில் கொளுத்துகிறது அதுதான் காரணமோ ? கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇது மன்னரிடம் பாடி பரிசு பெரும் புலவர்களின் வேலை என்று சொல்கிறார்கள். கவிதைக்கு பொய்யழகு!! இடை மெலிந்து இருக்கலாம், அது இல்லவே இல்லை என்பான் கவிஞன்!! அது போலத்தான், கொஞ்சம் ஓவர் பில்டப்............
பதிலளிநீக்குவாங்க நண்பா, உங்களது கோணமும் சரியாகத்தான் இருக்கு ஒவர் டோஸ் தானோ ?
நீக்குமுல்லைக்கு தேர் ஈந்தான் பாரி என்றால்,முல்லை ஒரு அழகான பெண்ணின் பெயராய் இருக்குமோன்னு எனக்கு படுது:)
பதிலளிநீக்குகொங்கு நாட்டு இளவரசியோட பெயராம் பகவான்ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குஎவ்வளவு பெரிய குடை மலைப்பை தந்தது. தகவல்களுடன் மூன்றடுக்கு பாலத்தில் குடைப் படம் அழகாக இருந்தது. இந்த பெரிய குடையைப்போல் பாரி வள்ளலின் மனமும் வேறு எதையும் சிந்திக்காத பெரிய மனமாய் இருக்கும் போல் தோன்றுகிறது. அதனால்தான் கொடிக்கு தன் தேரை தாரை வார்த்து விட்டு இறங்கி நடந்து விட்டார்.ஆனாலும் மூன்று வயதில் இதைப்பற்றி நல்ல கேள்விகளுடன் சிந்தித்த தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
வெளியூர் பயணத்தின் காரணத்தால் பதிவுகளை படித்து கருத்திடுதல் தடைப்பட்டிருந்தது. வருந்துகிறேன். முந்தைய பதிவுகளை விரைவில் படித்து கருத்திடுகிறேன் .நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வருக சகோ வணக்கம் விரிவான கருத்துரைக்கு நன்றி மூன்று வயதில் அல்ல மூன்றாவது படிக்கும்பொழுது... நான் படிப்பை நிறுத்தியதில் வாத்தியார்களுக்கு சந்தோஷம் என்று கேள்விப்பட்டேன்.
நீக்குபதிவு மிக அருமை சகோ.
பதிலளிநீக்குவருக சகோ வருகைக்கு நன்றி
நீக்குகேள்விகள் கேட்கக் கூடாது. அதிகப் பிரசங்கித்தனம் ஆகும் வழிவழியாக சொல்லப் பட்டுவரும் விஷயங்கள் அப்படியே சரி என்று சொல்வதுதான் ரசிக்கப் படும்
பதிலளிநீக்குவாங்க ஐயா இதைத்தான் அன்றைக்கு குருந்தன் வாத்தியார் செவிட்டில் அறைந்து சொன்னார் வருகைக்கு நன்றி.
நீக்குArumai anna...
பதிலளிநீக்குeppadi irukkingA?
ingu anaivarum nalam.
viraivil thodarbil varean.
important endral kumar006@gmai.com-il vaarungal.
நலம் நண்பரே கருத்திட்டமைக்கு நன்றி.
நீக்குதமிழ் திம்மிகளுக்கு ஒரு விடயம் ஓங்குதாங்காக விளங்க இயலாது இயம்பிறையாகப் போனால் அதின் தற்பெருங்குனத்தின் ஒத்த சீர்வாக்கிய அர்த்ததை தேட தன் வசம் கொண்ட கடுகு மதியினால் கரையேற முடியாமல் அற்ப சொற்ப அறிவை கருனைப்படுத்தி தேடும் போது சர்ப்ப சித்வாகமாக இயலுவதோ சிறு குறு கேள்விகளே ! அர்த்தம் அறியாமல் கேள்விகளை அலவலாதித் தனத்துடன் கேட்கும் திம்மிகள் தம்மை சொற்போர் சக்ரவர்த்தியாக நினைத்து நடை போடுவதைப் பார்த்தால் அய்யகோ என்று சொல்ல முற்படத்தோன்றுகிறது. பிரான்மலை என்று குண்டலகேசியைத் தொலைத்த திம்மிகளால் அறியப்படும் பரம்பு மலை தான் பாரி பார் போற்ற ஆட்சி செய்த இடம். இன்றும் அங்கு வளரம் கொடிபோல் பிறகெங்கும் கானக்கிடைக்காது என்று செப்பிட விரும்புகிறேன். இந்தப் பதிவால் பாரிக்கா இழுக்கு ? பாங்குனார நமக்கல்லவா அது. ஒரு சில நாட்களுக்கு முன் புதிய டெல்லியில் ஒரு நடந்த செய்தி வந்ததே பட்டமர்ந்த பாங்கோர் படித்துணர்ந்திருக்கலாமோ. ஒரு தெரு நாய் மீது மோததிருக்க பரிஜாதப்பூவைப் போன்ற பல கோடி மதிப்புமிக்க காரை மரத்தில் மோதி நிறுத்தினராம் ஒரு புன்னிய கோடி அவனும் அறிவில்லாதவனா ? புரிதலில் கிடக்கு சூட்சமம்.
பதிலளிநீக்கு“டெராபைட்” தாமஸ்
தங்களின் தாக்குதலையும் ஏற்றுக்கொண்டேன் நண்பரே...
நீக்குஉங்கள் படைப்பு நன்று..
பதிலளிநீக்குநண்பர் ஜகதீஷ் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குநண்பரே! ஒன்று நாம் மனதில் கொள்ள வேண்டும்! எந்த இலக்கியமும், வரலாறும் அப்படியே புனையப்படுவதில்லை. எல்லாமே மிகைப்படுத்தல்தான். ஒரு உதாரணத்திற்கு...."கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு. தமிழகம் பரபரப்பு. தமிழக மக்கள் பதட்டம். " "முன்னாள் ஆளுனர் மரணம்....தமிழ மக்கள் கண்ணீர் அஞ்சலி" என்று ஊடகங்களில் வரும் செய்திகளை நீங்களும் பார்த்திருப்பீர்கள் கேட்டிருப்பீர்கள். மக்கள் என்ன அழுது கொண்டா இருக்கின்றார்கள்? இல்லை பதட்டத்துடன் இருப்பார்களா? அவனவன் அடுத்த பஸ், ட்ரைனை பிடிக்கவும், அவனவன் வீட்டுக் கவலைகளை கவனிப்பதிலும் தான் ஒரு சில நிமிடங்கள் இந்த செய்திகளைப் பற்றிப் பேசலாம் அவ்வளவுதான்...னாமும் தான் சொல்கின்றோம்....நான் இடிந்தே போனேன்...மனம் கதறுகின்றது என்று....இவை எல்லாமே யதார்த்தத்திற்கு மிகையானவை. அது போலத்தான் இந்த இலக்கியப் புனைதலும்.
பதிலளிநீக்குஆனால் ஒன்று அறிவிற்கு நிச்சயமாக இந்த உலகில் மதிப்பு இல்லை! சோதனைகள் மட்டுமே என்பது உறுதி! அந்த அறிவையும் வின் வின் சிச்சுவேஷனுக்கு உபயோகப்படுத்தத் தெரியாதவர்கள் இந்த உலகில் வாழ்வது கஷ்டம்தான். அறிவு இருந்தால் மட்டும் போதாது. காமன்சென்ஸ் விஸ்டம் மிகவும் அவசியம்! அதுதான் இந்த உலகம் நண்பரே!
சரி விடுங்க சார் நீங்க ஏன் டென்ஷன் ஆகுனும் ?
நீக்குதில்லை அகத்தாரின் அழகாக விளக்குவுரைக்கு நன்றி
நீக்குபெயரில்லா நண்பருக்கும் நன்றி.
நீக்கு