இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 12, 2015

ஐந்தறிவு

மனிதனுக்கு, ஆறறிவு என்ற மனிதன், மிருகங்களுக்கு ஐந்தறிவு என்று கணக்கிட்டான் ஆனால் இந்த மனிதன் காதலை யாரிடமிருந்து கற்றுக் கொண்டான் ? காமத்தை யாரிடமிருந்து கற்றுக் கொண்டான் ?

பறவைகளை பார்த்து காதல் படித்தான், மிருகங்களை பார்த்து காமம் படித்தான், பறவைகள் அருகருகே அமர்ந்து தங்களது அலகால் ஒட்டி உரசி காதல் மொழி பேசுவதை கண்டு, காதல் செய்வது எப்படியென படித்தான், மிருகங்கள் புணைவதைப் பார்த்து தாம்பத்யம் கொள்வது எப்படியென படித்தான், ஆடு மாடுகள், தாவரங்களை உண்பதை கண்டமனிதன் உணவுண்ணும் பழக்கங்களை படித்தான், இந்த வகையில் விஷச்செடி கொடிகளையும் படித்தான், மிருகங்கள் ஒன்றை யொன்று அடித்து சாப்பிடுவதைப் பார்த்த மனிதன் ஆபத்தில்லாத மிருகங்கள், பறவைகளை அடித்து சாப்பிட்டான், மீன்களை பிடிக்க கொக்குகளை பார்த்து படித்தான், பறவைகளை பிடிக்க சிலந்திகளிடமிருந்து வலை பின்னுவதை படித்தான், குழந்தைகளுக்கு உணவூட்டும் முறையை பறவைகளிடமிருந்து படித்தான், வீடு கட்டும் முறையைகூட பறவைகள் கூடு கட்டுவதை பார்த்துதான் படித்தான், காடுகளில் காற்றில் மூங்கில்கள் உரசி தீப்பிடித்து மிருகங்கள் எரிந்தபோது சாப்பிட்ட மனிதன் தீயால் சமைப்பதை கற்றுக்கொண்டான், பறவைகள் தண்ணீருக்குள் தலையை விட்டு ஆட்டுவதை கண்டமனிதன் குளிக்க கற்றுக் கொண்டான்.

பண்டைகால பெண்கள் உடன்கட்டை ஏறினார்களே எப்படி ? யாரிடமிருந்து கற்றுக் கொண்டார்கள் ? சிட்டுக்குருவியை போன்ற ஒருஜாதி வகைப்பறவை (Sorry, I Don't Know that Birds Name) தன் ஜோடிப்பறவை இறந்து விட்டால் மற்ற பறவை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமாகப்போய் தன்னுடைய இறகுகளை தன்னைத்தானே அணைத்துக் கட்டிக் கொண்டு மேலிருந்து கீழே விழுந்து இறந்து விடும், அதனுடைய அறிவுக்கு எட்டிய தற்கொலை இப்படித்தான், இருப்பினும் இதனைப் பார்த்துதான் தன்னால் பறக்க முடியாது என்பதால் கணவனுக்காக தீயில் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை பெண்கள் படித்துக் கொண்டார்கள் என்பதை விட, படிக்க வைக்கப்பட்டார்கள் என்பதுதான் சரி, காரணம் ஆணாதிக்கம். 

(இந்த பழக்க வழக்கங்களை ஒழித்த பெருமை மரியாதைக்குறிய சுப்பிரமணிய பாரதியார் அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும் சிறிய அளவில் சாரும்) 

இத்தனையும் மற்றவைகளிடமிருந்து படித்துக் கொண்ட நன்றி கெட்ட மனிதன் அவைகளுக்கு ஐந்தறிவு என்றும் தனக்கு ஆறறிவு என்றும் போட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் ?  பறவைகளும், மிருகங்களும் தன்னிடம் கேள்வி கேட்காது என்ற, தைரியத்திலா...  இது எப்படி இருக்கிறது தெரியுமா ? படிப்பை முடித்து சான்றிதழை வாங்கிக் கொண்டு கல்லூரியை விட்டு வெளியே வரும்போது... ஆசிரியருக்கு, மாணவன் மதிப்பெண் போடுவது மாதிரி இருக்கு.

காணொளி.


57 கருத்துகள்:

  1. தமிழ் மண இணைப்புடன் தம 1

    பதிலளிநீக்கு
  2. பதிவு.....யோசிக்க வைக்கிறது சகோ

    காணொளி,பாடல் .....பெருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது நொடியே முதல் வருகை தந்து தமிழ் மணத்தில் இணைத்தமைக்கும் காணொளியை ரசித்தமைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  3. அந்த பறவை அன்றில் பறவை என்பார்கள். கிளிகூட ஒரே ஜோடியோடு தான் வாழுமாம் அண்ணா! அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்:) வாழ்த்துகள். இந்த பதிவின் அமைப்பையே செதுக்கும் உங்கள் ரசனையே ரசனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவையின் பெயரை நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றி சகோ தொடர்ந்தால் நலமே...

      நீக்கு
  4. வணக்கம்
    ஜி
    6அறிவு படைத்த நாம் பின்பற்றுவது எல்லாம் கொப்பி.... பதிவை படித்த போது திகைத்து விட்டேன்...
    பதிவின்படி தாங்கள் கேட்ட கேள்வி.. நியாயமானது... சிந்திக்க தூண்டுகிறது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஜிகாணொளி மிக அருமை த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. கருத்துகளையும் காதல் பாட்டையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இந்த காணொளிக்காக எனது புகைப்பட தேடல் அதிகமானது இதன் வேலையும் கூடுதலே அதை ரசித்து எழுதி வாக்கும் அளித்தமை கண்டதும் கஷ்டம் அன்றில் பறவை போல் பறந்து விட்டது நன்றி.

      நீக்கு
  6. இதைத்தான் கவிஞர் பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் பாயும் நீரினில் படகினைக் கண்டான் என்று பாடினாரோ...

    உடன்கட்டை ஏறும் கொடும் பழக்கம் பிரம்ம சமாஜம் நிறுவிய ராஜாராம் மோகன் ராய் யால் முன்னெடுக்கப்பட்டு, 1829 இல் வில்லியம் பெண்டிங்கால் சில இடங்களில் தடை செய்யப்பட்டது. 1861 இல் இந்தத் தடைச் சட்டம் இங்கிலாந்து மகாராணியால் இந்தியா முழுவதும் பரவலாக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரித்திர விடயம் தந்தமைக்கு நன்றி நான் அவர்களும் சிறிய காரணமே என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.

      நீக்கு
  7. விலங்குகளிட்ம் இருந்து கற்றுக் கொள்ள மனிதனுக்கு நிறைய இருக்கிறது நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே நன்றியை நாயிடம் கற்றுக்கொள்ளலாம், பகுந்துண்ணும் பழக்கத்தை காகத்திடம் கற்றுக்கொள்ளலாம், இசையை குயிலிடம் கற்றுக்கொள்ளலாம், உழைப்பை கழுதையிடம் கற்றுக்கொள்ளலாம், தந்திரத்தை நரியிடம் கற்றுக்கொள்ளலாம், இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.

      நீக்கு
  8. என்னது.. என்னது!..
    வ.உ. சுப்பிரமணிய பாரதியாரா!?.. யாருங்கோ அவரு!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி மன்னிக்கவும் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் இன்ஷியலை பாரதிக்கு கொடுத்து மிகப்பெரிய தவறை செய்து விட்டேன் வருந்தி திரு(ந்)த்தி விட்டேன் தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  9. உடன் கட்டை ஏறிய (ஏற்றிய ) கொடுமையை அரும்பாடுபட்டுத் தடுத்தவர் ராஜா ராம் மோகன் ராய் அவர்கள்..

    பறவைகளில் - புறாக்கள் தன் துணையை இழந்து விட்டால் மீண்டும் ஒரு துணையைத் தேடிக் கொள்ளாமல் - உண்மையான துறவு வாழ்க்கை வாழ்கின்றன.

    மற்றபடி - மனிதன் தந்திரத்தைக் கற்றுக் கொண்ட விஷயத்தை போனால் போகட்டும் என்று விட்டு விட்டீர்கள்..

    தந்திரத்தைக் கற்றுக் கொண்ட மனிதன் - ஒன்றை மட்டும் கண்டும் காணாமல் விட்டு விட்டான்..

    அது என்ன தெரியுமா!..

    புறாக்களைப் போல - நரிகளும் தன் இணையை இழந்து விட்டால் வேறொன்றை நாடிச் செல்வதில்லை!..

    புறாக்கள் விஷயம் நேரில் அவதானித்தது..

    நரிகளைப் பற்றிய செய்தி - ஆய்வாளர்கள் கூறுவது..

    இருந்தாலும் நம் முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொண்டவற்றைக் கூறாதது சற்றே வருத்தம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி நீண்ட கருத்துரை மூலம் தங்களது விளக்கங்களை அளித்தமைக்கு நன்றி நானும் அந்த புறா வகைகளுடன் இருப்பதில் பெருமை கொள்கிறேன் ஜி...

      நான் 5 அறிவு 6 அறிவு கணக்கை மட்டுமே குறி வைத்து எழுதினேன் மற்றபடி நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுக்காமலா ? நாம் கலாச்சாரம் படித்தோம் என்னவொன்று அதை இப்பொழுது அனாச்சாரமாக்கி விட்டோம் அவ்வளவே மீண்டும் நன்றி ஜி.

      நீக்கு
  10. அன்புள்ள ஜி,

    அஞ்சையும் ஆறையும் அருமையாக விளக்கினீர்கள். கற்றுக் கொண்டவிதத்தை சொல்லி...காணொளியிலும் காட்டி... கடைசியில் சங்கு ஊதிவிட்டீர்கள்!

    த.ம. 8.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே முடிவில் நாம் எல்லோருக்கும் சங்குதானே ஊதினோம்.

      நீக்கு
  11. பிறரை ஏமாற்றும் மனிதன்,,,,,,,,,,,,, அப்புறம் தாங்கள் மனிதன் ஆறறிவு மற்றவை ஐந்தறிவு என்று நினைக்க வேண்டாம். பள்ளியில் முதல் ரேங் தான் சிறப்பு. அதுபோல் ஐந்தறிவு தான் சிறப்பு . அந்த வகையில் நாம் கடைசி எனக்கொள்வோமே,,,,,,,,,,,,,,, அவைகள் நம்மை இப்படித்தான் நினைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சரியாக சொன்னீங்க அவைகளைவிட நாம் கூடுதலே எண்ணிக்கையில் அவைகள் நம்மை பின் தங்கி இருக்கிறார்கள் என்றுதான் நினைக்குமோ.... ஸூப்பர் கணிப்பு சகோ.

      நீக்கு
  12. ஆசிரியருக்கு எப்படி மாணவன் மதிப்பெண் ?

    சிந்திக்க வைத்த பகிர்வுக்கு நன்றிங்க சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  13. நான் சொல்ல நினைத்த கருத்துக்களை அப்படியே, அய்யா ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்கள் சொல்லி விட்டதால், அவற்றை அப்படியே வழிமொழிகின்றேன்.
    த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே.

    தங்கள் சிந்தனை அற்புதம். முற்றிலும் உண்மையும் ௬ட.! இன்னமும் ஐந்தறிவு ஜீவன்களிடமிருந்து கற்க வேண்டியது நிறையவே உள்ளது என தோன்றுகிறது. ஆறாவதாக நமக்கு இறைவன் தந்த பகுத்தறிவால் பலனேதும் இல்லையோ என யோசிக்க வைக்கிறது தங்கள் பதிவு. பகிர்வுக்கு நன்றி. காணொளியும் கண்டேன். படங்கள் அருமையாக இருந்தன.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  15. பெயரில்லா5/12/2015 4:46 PM

    கடினமான உலோகங்களில் கடிமிதுன வகைப்பட்டில் ஒற்றிசைந்து உருவாக்கப்படும் இயந்திரப்ப் பறவைகளுக்கு முன்னோட்டி உதாரனசம்பத்தாக விளங்கி நிற்கும் பறவைகளின் பரிபூர்ன பரிச்சயத்தின் மெச்சும் நிலையாவுகையின் பொதிப் பிம்பத்தை மாசில்ல குவலயமாக்கி அதிமதுர வேதிவினையில்லாமல் பதிவு செய்துள்ளீர்கள் என்று சொல்ல முயலும் போதே அதென்ன பாரதிக்கு தொட்ட அன்னக் குறியிட்டுள்ளீர்கள் என்று கேட்கவும் விழைகிறேன் என்று சொல்லும் போதே கரந்தையார் சொன்னது போல விலங்குகளிடம் கற்பதற்கு நிறைய இருக்கிறது என்று பகரவும் விரும்புகிறேன்.. வளையாபதியில் விலங்குகளின் நுன்னறிவு பற்றி பகர்ந்திட இருனூறு பாடல்கள் இருந்ததாகக் கலித்தொகை பாட்டு ஒன்று கூறுகிறது. குண்டலகேசியைத் தொலைத்த தமிழர்கள் கூடவே வளையாபதியையும் வெட்டியாய் விட்டேத்திவிட்டார்கள். இது போன்ற அறிவிழந்த சமூகத்தை நான் கண்டதே இல்லை.

    “டெராபைட்” தாமஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ‘’டெராபைட்’’ தாமஸ் அவர்களின் விளக்கவுரைக்கும் நன்றி.

      நீக்கு
  16. கில்லர்ஜீ ................!!


    மொத்தமா 100% தப்பான கட்டுரை. ஒவ்வொரு ஜீவனுக்கும் எனப்படும் உள்ளுணர்வு இருக்கிறது. அதன் படிதான் அது செல்கிறது. முக்கியமாக உடலுறவைப் பற்றி யாரும் யாருக்கும் சொல்லித் தரவேண்டியதில்லை, இயல்பிலேயே தெரியும். அதே போலத்தான் மற்றவையும்.

    மற்றபடி, பறவைகளைப் பார்த்து விமானத்தைப் படைத்தது போல சிலவற்றை மனிதன் எடுத்து கையாண்டிருக்கலாம் மறுப்பதற்கில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 100 சதவீதமும் தவறெனச் சொல்லி 50 சதவீத்ததை ஏற்றுக்கொண்டமைக்கும், மனதில் படும் எண்ணங்களை அப்படியே எழுதும் தங்களுக்கு சிறப்பான நன்றி நண்பரே
      பிறவிகளில் முதல்வகை மனிதனா ? மிருகங்களா ? என்ற கேள்விக்கு விடை கிடைத்தால் பதில் கிடைக்கலாம் இருப்பினும் மனிதன் பலவற்றையும் பிற உயிரிணங்களைப் பார்த்தே படித்து இருக்கின்றான்.

      நீக்கு
  17. அதானே...? இந்த கேள்வி ஐந்தறிவு ஜீவன்களிடம் பிறக்குமா...?

    காணொளி அசத்தல் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவைகளும் பேசுகிறது ஜி பாழாப்போன நமத்துத்தான் அதன் மொழி புரிவதில்லை. காணொளி அதிக வேலை கொடுத்து விட்டது ஜி நன்றி.

      நீக்கு
  18. ஆமா நாங்க அவங்க கிட்ட இருந்து கத்துக் கொண்டோம். அப்போ அவங்க எல்லாம் யாரைப் பார்த்துக் கற்றுக் கொண்டாங்க. ம்..ம்..ம் இப்படியா குழப்பி விடுகிறது என் மண்டையை. ஹா ஹா ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க, ஹா ஹா ஹா குழம்பிட்டீங்களா ? அவங்க நம்மளைப்பார்த்து கத்துக்கிறலை அதனாலதானே அவங்க ஆதி காலத்து பாணியிலேயே வாழ்றாங்க...

      நீக்கு
  19. எல்லாம் அறிந்து கொண்ட மனிதன் பிரியாணிக்காக ஐந்தறிவு பிராணியாக மாறிக் கொண்டு இருக்கிறான் நண்பரே.....

    பதிலளிநீக்கு
  20. ஆதி மனிதன் வாழத் தொடங்கியதே தன்னைச் சுற்றி இருக்கும் விலங்குகள், பறவைகள், இயற்கை இவற்றிடம் இருந்து கற்ற பாடங்களினால்தான். டார்வின் தியரிப்படி அறிவற்ற மைக்ரோ ஆர்கானிசம், பரிணாம வளர்சியில் உருப்பெற அதாவது எவொல்யூஷன் தியரிப்படி ஓரறிவு, இரண்டு அறிவு என்று வளர்ந்து வளர்ந்து இறுதியில் ஆறறிவு படைத்த மனிதன் என்ற உருப்பெற்றான். ஆனால் மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட அந்த ஆறறிவு உபயோகமற்றது என்பது இயற்கைக்குத் தெரியாமல் போய்விட்டது. அந்த இயற்கை அளித்த ஆறறிவால் தன் தாயாகிய இயற்கையையே அவன் அழிக்கின்றானே! முரண்பாடு! பகுத்தறியத் தெரியாமல்! இந்த ஆறறிவுதான் மனிதனுக்கு சுயநலத்தையும் கற்றுக் கொடுத்தது. இந்த பரிணாம வளர்ச்சி மட்டும் இல்லாது போயிருந்தால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் இந்த உலகம் எப்படி அழகாக இருந்திருக்கும் என்று!!!!

    பறவைகளோ, விலங்குகளோ தற்கொலை செய்துகொள்ளாது. அவற்றிற்கும் தன் துணையை இழக்கும் போது ஒரு சில விலங்கு, பறவை வகைகளுக்கு வருத்தமும் துக்கமும் ஏற்படும். அதற்காக அவை உணவு உட்கொள்ளாமல், கூட்டில் இருந்தால் தன்னை வெளியில் கொண்டு வர தன் அலகால் கூட்டை உடைக்க முயற்சிக்க அது இறக்கும். அவ்வளவே. எந்தப் பறவையும், விலங்கும் தற்கொலை செய்து கொள்ளாது. இந்தத் தற்கொலை எண்ணம் எல்லாம் மனிதனுக்குத்தான் ...இந்த ஆறறிவால் பகுத்தறியத் தெரியாமல்....

    இதே போன்ற ஒரு கட்டுரை கீதா எழுதுவதற்கு விலங்குகள்-மனிதன்-பகுத்தறிவு என்ற தலைப்பிட்டு பல அறிவியல் ஆதாரங்களைத் தேடி எடுக்க வேண்டி பாதியில் நின்று கொண்டிருக்கின்றது. நீங்கள் அதின் ஒரு பாகத்தை மிக அழகாக எழுதிவிட்டீர்கள். னாங்களும் அதைப் பின்னர் எழுதி முடிக்கின்றோம். பதிவிடுகின்றோம். நல்ல ஒரு பதிவு. எங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு. இது போன்றே எழுதுங்கள் நண்பரே! வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லங்கத்தாரின் வருகைக்கு முதற்க்கண் நன்றி அழகான விரிவுரைகளுடன், விளக்கமாக கருத்துரை தந்தமை கண்டு மகிழ்ச்சி நானும்கூட ஒருசிலர் எதிர் கருத்து தந்தமையால் தவறான ஒரு விடயத்தை கையெடுத்து விட்டோமோ ? என்று மண்டை காய்ந்து விட்டேன் சகோ இனியா அவர்களைப்போல்... நான் ஒரு பாகம்தான் தந்து இருக்கிறேனா உங்களைப்போல் 3 கிலோ மீட்டருக்கு என்னால் எழுத முடியாது வருகைக்கு நன்றி நன்றி நன்றி.

      நீக்கு
  21. மற்றும் ஒரு கருத்து நண்பரே! ஒவ்வொரு உயிரினத்திற்கும் இன்ஸ்டிங்க்ட் எனப்படும் ஒரு உணர்வு உண்டு! அதன் படிதான் எல்லா உயிரினங்களும் செயல்படுகின்றன. ஒரு சில விஷயங்களைத் தவிர பிற சில விஷயங்கள் மனிதன் இயற்கையிலிருந்துதான் கற்றுக் கொண்டான். ஆனால் பசிஉணவு, உடலுறவு, போன்றவை எல்லாம் இன்ஸ்டிங்க்ட் சம்பந்தப்பட்டது. அதனால் தான் கீதா சில அறிவியல் ஆதாரங்களைத் தேடி பாதியில் நிற்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன் நன்றி.

      நீக்கு
  22. நம்மவர் எல்லோரும் விலங்குகளிடம் இருந்து கற்கிறார்கள்
    ஏற்றுக்கொள்கிறேன் ஐயா!
    ஆனால், எனக்கொரு ஐயம்!
    தானும் தின்னாது - மற்றதையும்
    தின்ன விடாத நாய் பழக்கத்தைப் பழகிய
    நம்மாளுங்க - ஏன்
    'கா' 'கா' என்று எல்லாவற்றையும் கூப்பிட்டுச் சாப்பிடும்
    காக்காப் பழக்கத்தைப் பழக மறுத்தான்...
    காகத்தில இருக்கிற ஒற்றுமை
    நம்ம தமிழரில இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பர் அழகான கேள்வி கேட்டீர்கள் மனிதன் தனக்கு சாதகமானதை ஏற்பதும், பாதகமானதை ஏசுவதும் ஆரம்பம் முதல் செய்து வருகிறான்.

      நீக்கு
  23. பெயரில்லா5/13/2015 3:04 PM

    //பிறவிகளில் முதல் வகை மனிதனா இல்லை மிருகங்களா என்ற கேள்விக்கு”

    அன்பான அண்ணா நீங்கள் தான் கேள்வியின் நாயகர் 80பதுO. இந்த சார்லஸ் டார்வின்னு ஒரு அறைகுறை எவ்ல்யூஷன் தியரின்னு ஒன்றை உளறிட்டு போய்டுதுங்களே அஃதை அப்படியே எடுத்து ஹம்தான் ஸ்டீரிட் ஓரமா கடாசிடட்டுங்களா ? இல்லை ரெண்டு தெரு தள்ளி கார்னீஸ்ல விட்டுவிடவா ?வாழ்க்கை முழுக்க விலங்கியலை வேறு படித்துவிட்டேனுங்க.கில்லர்ஜி என் அறிவுக்கண்களை கழுவித் தூறந்து விட்டுவிட்டீங்களே! உங்களுக்கு N வணக்கம்

    தருமி தங்கப்பன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் தருமி தங்கப்பன் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் எனது பதிவுகளுக்கு ஆதரவோ, எதிர் கருத்தோ, என்னைப் பாராட்டியோ, அல்லது தாக்கியோ எழுதலாம் அதை அனுமதிப்பேன் பதில் கொடுப்பேன் ஆனால் எனது பதிவுக்கு வரும் நண்பர்களை தராதரமற்ற வகையில் விமர்சித்து எழுதுவதை அனுமதிக்க முடியாது என்பதை அறியத் தருகிறேன் நன்றி.

      நீக்கு
    2. பெயரில்லா5/14/2015 7:27 AM

      அன்பிற்குரிய அண்ணா, என்னாங்க என் மேல் ஏன் இப்படிக்கா கோபப்படுதீக. உங்கள் பதிவு படித்துத் தெளிவு பெற்றேன் அதற்கு உங்களுக்கு நன்றி தானே தெரிவித்தேன். இதில ஒரு வரின்னாச்சுக்கும் வேறு யாரைப் பற்றியாச்சும் இருக்கிறதுங்களா ? இந்த ரிட்டையர்டு கேசு மேல் இத்தனை வன்மம் ஏன் ? வெளங்கலைங்க ! சாமீ வெளங்கலை! சார்லஸ் டார்வின் என்கிறபடி நான் சொல்லியது பரினாமம் பத்தி குண்டக்க மண்டக்க சொல்லிட்டுப் போன ஒரு காலிப்பயலுங்க சார். நான் ஒழுங்கத்தானே பேசிக்கினு இருக்கிறேன்.
      அய்யோ நான் நம்பாத ஆண்டவா பாராட்டி கருத்து சொன்னா கூட பொல்லாப்பு வந்து சேருதே! கோபப்பட்டு எழுதும் போது உங்க தமிழ் அழகா இருக்குண்ணே.
      தருமி தங்கப்பன்

      நீக்கு
    3. நண்பர் தருமி தங்கப்பன் அவர்களுக்கு நேற்று முழுவதும் இணையம் வரமுடியவில்லை மன்னிக்க...
      //ஒன்றை உளரி விட்டுப் போயிடுதுங்க// என்ற வரிகள் எழுயவர் கண்டால் வேதனைப்படுவார் அதனைத்தான் குறிப்பிட்டேன் முடிந்தால் தொடர்பு கொள்க 055 74 666 13 நன்றி.

      நீக்கு
    4. பெயரில்லா5/15/2015 11:25 AM

      அண்ணாச்சி நான் டார்வின்கிற அறிவியல் அறிஞரை தான் அப்படி சொன்னேன். ஏன்னா நீங்க ஏற்கனவே கண்டறியப்பட்ட அறிவியில் தியரியை இனிமேல் கண்டுபிடித்தால் தான் உண்டு என்ற ரீதியில் சொன்னதை சும்மா வெளாட்டுக்கு நக்கலா பதிவு பண்ணினேன். மற்றபடி உங்க அல்லது மற்ற பதிவரின் மனசைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை. தொந்தரவுக்கு மன்னிக்கவும். மகள் வீட்டுக்கு வந்திருக்கிறேன். எல்லாரும் RAK -க்கு வீக் என்ட்டுக்கு வந்திருக்கோம். அடுத்த வாரம் தொடர்பு கொள்கிறேன்.பரஸ்பரம் வம்பும் கிண்டலும் பதிவர்களிடம் சகஜம் தானே. இல்லாவிட்டால் என்ன விறுவிறுப்பு இருக்கும் பதிவுகளில். எல்லாருக்கும் எல்லாமே சரியாக தெரியவேண்டியது இல்லை. அவர் அவர் துறையில் அவரவர் ராஜா. நான் விலங்கியல் மட்டுமே படித்து பாடம் நடத்தி ரிடையர்டும் ஆயாச்சு.

      தருமி தங்கப்பன்

      நீக்கு
    5. நண்பர் தருமி தங்கப்பன் அவர்களின் விளக்கவுரைக்கு நன்றி தவறான புரிதலுக்கு வருந்துகிறேன்.
      என்னை அண்ணா என்று அழைக்கலாம் அல்லது தம்பி என்று அழைக்கலாம் தவறில்லை இரண்டையும் மாறிமாறி அழைப்பது தவறான கருத்து என்பதை அறியவும் தங்களது மகள் குடும்பத்துடன் விடுமுறை சிறப்புடன் களிக்க வாழ்த்துகள் நட்புடன் நன்றி.

      நீக்கு
  24. கற்பதுஎன்று வந்து விட்டால் எல்லா ஜீவராசிகளும் பாடமே. காணொளி அருமை. அதென்னகடைசியில் சங்கு...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கருத்துரைக்கு நன்றி அந்தப்பாடலில் சங்கு ஊதுவது வருகிறது ஆகவே அதற்க்கு பொருத்தமாக படம் கொடுத்தேன் மேலும் இன்றைய காதல்கள் பலதும் சங்கு ஊதலில்தான் முடிகிறதே...

      நீக்கு
  25. பதிவுலகில் தாங்கள் தனக்கென ஒரு வித்தியாசமான சிந்தனை யாளர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயாவின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  26. அதுங்களுக்கு 'பிளாக்'கில் எழுதத் தெரியலே ,படிக்கத் தெரியலே,அதான் ஐந்தறிவாவே இருக்கு :)

    பதிலளிநீக்கு
  27. சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி வருகிறது,

    கடுவனை இழந்த மந்தி ( பெண்குரங்கு) ஒன்று தன் குட்டியை மற்ற குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு, மலைமேல் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வதாக....

    சமீபத்தில் இலங்கையில் மட்டும் காணப்படும் ஒருவகைக் குரங்குளைப் பற்றிய காணொளி பார்த்தேன்...

    அவற்றிடமும், சமூக அடுக்குகளும், நம்மிடையே இருக்கும் சாதி அமைப்பைப் போன்ற அமைப்பும் காணப்படுவதாக அவ்வாய்வாளர் காட்சிப் படுத்தி இருந்தார்.

    தரவுகள் உண்மையா அல்லவா.... அது சரியா ...சரியில்லையா என்பதல்ல......

    இப்படியும் சொல்லப்பட்டிருக்கின்றன.

    மிக மிக மிக தாமதமாக வருகிறேன்.

    நண்பர் என்ன சொல்லப் போகிறாரோ :)

    உடு ஜூட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே தாமதமாகவே வரவேண்டும் 80 தங்களது நேர்த்திக்கடன் அதை நேர்த்தியாகவே செய்கின்றீர்கள் மந்தியை அழைத்து வந்து நன்றி.

      நீக்கு