மனிதனுக்கு ஆறறிவு
என்று சொன்ன மனிதனுக்கு எத்தனை அறிவு ?
மிருகத்திற்கு ஐந்தறிவு என்பது மிருகத்திற்கு தெரியுமா ?அப்படியானால் ஆறறிவுக்கு மேலானது எந்த இனம் ?
தெய்வம் தனக்கு உயிர்ப்பலி கொடுவென்று, எந்த மனிதனிடம் கேட்டது ?
தெய்வ காணிக்கை என்று முடியை எடுப்பது மீண்டும் முளைப்பதாலா ?
இரக்கமில்லாத மனிதனின் இதயம் வேலை செய்யுமா ?
கொலை செய்தவனுக்கு மனிதனால் தண்டனையை கணிக்க முடியுமா ?
உயர் பதவியாளர்களின் உயிர் மட்டும் உயர்வாக மதிக்கப்படுவது ஏன் ?
Mr. T SUNAMI இவர், மட்டும் இவர்களை மதிப்பதில்லையே ஏன் ?
ஒருவேளை இவர் அகம்பாவம் அதிகம் உள்ளவரா ?
விஞ்ஞானத்தால் உலகம் அழியும் என்பது இறைவனுக்கு தெரியாதா ?
மெய்ஞானத்தால், இறைவனை கண்ட மனிதர்கள் உண்டா ?
உண்டெனில் இனிமேலும் காண்பதற்கு சாத்தியம் உண்டா ?
பூமியை பிரித்துக் கொண்ட மனிதனை, இறைவன் என்ன நினைப்பார் ?
பூமியை துளையிட்டது போல், வானத்தை, துளையிட்டால் நடப்பது என்ன ?
யானைக்கு, மதம் பிடித்ததென சொன்ன முதல் மனிதன் எந்த மதம் ?
மதத்தின் விளைவை அறிந்த மனிதன் தானும் பிடித்துக் கொண்டது ஏன் ?
உலகம் அழியப்போவது நாளை எனில் இன்றாவது மதங்கள் ஒழியுமா ?
ஆத்திகம் பேசிய சில மனிதருக்கு குழந்தை பிறந்ததில்லையே ஏன் ?
நாத்திகம் பேசிய பல மனிதருக்கு குழந்தை பிறந்து உள்ளதே ஏன் ?
உயிருள்ள, மனிதனைவிட உயிரற்ற பொருளுக்கு மதிப்பு உள்ளது ஏன் ?
மனிதனைத் தின்னும் மண்ணை, மனிதன் தின்ன முடியாதது ஏன் ?
மனிதன், உழைக்காமலேயே வாழ்வான் என இறைவன் எண்ணியதாலா ?
இறந்த, மனிதர்கள் பேயாகிறார்கள் என்பது உண்மையா ?
பேய்க்கும், சைத்தான் என்பதற்கும் வித்தியாசம் என்ன ?
உண்டென்றால் அவர்கள் எப்படி, எங்கு வாழ்கிறார்கள் ?
பேயைக் கண்டு அவர்களுடன், பேசிய மனிதர்கள் உண்டா ?
பேசினேன், என்று மந்திரவாதிகள் பொய் சொல்வது ஏன் ?
உண்மை எனில் அவர்களை, விஞ்ஞானிகள் விட்டு வைப்பார்களா ?
உயிர் பிரிவது கண்களின் வழியே என்பது உண்மையா ?
அப்படியானால் இறந்த பிறகும் கண்களுக்கு உயிர் இருப்பது எப்படி ?
சாம்பசிவம்-
இதுக்கெல்லாம் பதில் வேணும்னா ஓடிக்கிட்டு இருக்கிற, ரயிலை
குறுக்கே பாஞ்சு நிப்பாட்டி, டிரைவர்ட்ட கேளும் அவர்தான்
எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்.
காணொளி
வணக்கம்
பதிலளிநீக்குஜி
நல்ல கேள்விகள் கேட்டு எங்களை அசத்தி விட்டீர்கள்... ஜி... எல்லாம் மனிதன்தான் வகுத்தது... பகிர்வு நன்றி வீடியோ அசத்தல் அதில் ஒரு தத்தா பாயும் காட்சி பார்க்கவே பயமாக இருந்தது. த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முதல் வருகை தந்து முத்தாய்ப்பாய் கருத்துரை பதிந்தமைக்கு நன்றி ரூபன்.
நீக்குஉயிர் கண்ணின் வழி பிரியும் என்று யார் சொன்னது அப்படிக் கேட்டதில்லை.
பதிலளிநீக்குவானத்தைத் துளைக்க முடியாது ஏனென்றால் வானம், பூமியைப் போன்றது இல்லையே! வானம் என்பது ஸ்பேஸ்....அது வெற்றிடம்....இல்லையா நண்பரே!
அட மனுஷனுக்கு ஆறு அறிவா? யாரப்பா அப்படிச் சொன்னது? தப்பு தப்பு.....நீங்க எங்கேயோ தப்பா படிச்சுருக்கீங்க!
தெய்வம் எதையும் கேட்பதில்லை.....எல்லாமே இந்த முட்டாள் மனிதர்கள் செய்வதுதான்....
வாங்க, வாங்க தாங்கள் கேள்வி பட்டதில்லை போல...
நீக்குவானத்தை துளைக்க மனிதன் முயற்சிப்பது உண்மைதானே...
நாந்தேன் தப்பா படிச்சிட்டேனோ ?
ஆம் மனிதன் வகுத்ததுதானே மதமும்.
அப்பாவியின் பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி வில்லங்கத்தாரே...
முள்ளம் பன்றியின் உடலில் உள்ள முட்கள் எத்தனை என்பதை யார் அறிவார்?
பதிலளிநீக்குபலாப் பழத்தின் மேலுள்ள முட்களின் எண்ணிக்கைதான் யார் அறிவார்?
நண்பரே கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்!
நண்பரே நம்பிக்கை என்பது யாவருக்கும் வேண்டும்!
அது தன்னம்பிக்கையா?
இயற்கை மீது நம்பிக்கையா?
இயற்பியல்(அறிவியல்) மீது நம்பிக்கையா?
இறை நம்பிக்கையா?
எதுவாகவும் இருக்கட்டும்!
ஆனால்
மூட நம்பிக்கை மட்டும் வேண்டாம்
(அவரவர் மன நிலை அவரே அறிவார்)
நன்றி!
த ம 4
நட்புடன்,
புதுவை வேலு
வருக நண்பரே அழகாக விளக்கம் கொடுத்து அவரவர் மனநிலை அவரே அறிவார் என அருமையாக சொன்னீர்கள் நான் தற்போது பழக்கடையில் இருக்கிறேன் பலாப்பழம் வாங்கி விட்டேன், அடுத்து நான் போவது முள்ளம் பன்றியைத்தேடி நன்றி.
நீக்குமூன்றாவது கேள்விக்கு விடை முருகதாசைக் கேட்டால் தெரியும். அவர்தானே ஏழாம் அறிவு எடுத்தவர்? :))))))))
பதிலளிநீக்குமெய்ஞானமும் விஞ்ஞானமும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து விடுகின்றன .நண்பரே..
வருக நண்பரே மெய்ஞானமும், விஞ்ஞானமும் ஒரே புள்ளியில் இணைவதாக அழகாக சொன்னீர்கள் பண்டைகால மந்திரக்கோலும், இன்றைய ரிமோட்டும் 80போல் நன்றி.
நீக்குகேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறீர்களே நண்பரே
பதிலளிநீக்குயானைக்கு மதம் பிடிப்பது கூட பிரச்சினையில்லை,
மனிதனுக்கு மதம் பிடித்ததுதான், மிகவும் பிடித்துப் போனதுதான் பிரச்சினை
என்ன செய்வது?
தம +1
ஆம் நண்பரே சரியாக சொன்னீர்கள் யானைக்கு மதம் பிடித்தால் ? என்றோ ஒருமுறை ஒரு சில மரணங்கள் ஆனால் ? மனிதனுக்கு மதம் பிடிப்பதால் ஆயிரக்கணக்கில் மரணங்கள் ஆகவே மனிதனை அழிக்கும் மதம் எதற்க்கு ?
நீக்குமனிதனுக்கு மதம் பிடித்ததால்தானே மனிதம் மறந்து உலகமே அழிந்து கொண்டு வருகிறது வருகைக்கு நன்றி நண்பரே..
முரண்பாடான, அதே சமயத்தில் அனைவர் மனதிலும் எழும் கேள்விகளைக் கேட்கவும் அதற்கேற்றவாறு மறுமொழி கூறவும் உங்களால் மட்டுமே முடியும். அம்மொழி ஏற்புடையதா இல்லையா என்பதைவிட அவ்வாறான சிந்தனை உமக்கு வந்தமையறிந்து மகிழ்கின்றேன். எப்படி உங்களால் இவ்வாறெல்லாம் சிந்திக்க முடிகிறது என அனைவரையும் சிந்திக்கவைத்துவிடும் பதிவு. காணொளி கண்டேன்.
பதிலளிநீக்குவாருங்கள் முனைவரே... தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் இதில் பல பதில்களையே கேள்விபோல்தான் மாற்றி இருக்கிறேன் எமது கேள்விகளில் தவறுகள் இருப்பின் சாம்பசிவத்தின் பதில் மூலம் நான் என்னை சிறிது விடுவித்துக்கொள்ள முடியுமே... ஆகவேதான் நான் பதிவு தொடங்கிய காலம் தொட்டு சாம்பசிவம், சிவாதாமஸ்அலி, Chivas Regal சிவசம்போ போன்றவர்களை உருவாக்கி வந்தேன் அவர்கள் சொல்வதும் என் எண்ணமே.... மேலும் எனது எண்ணங்கள் முழுவதுமே சரி என்று வாதாடும் ஆள் நானில்லை தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்கவம் எமக்கு உண்டு.
நீக்குநான் ஏற்கனவே பதிவில் சொன்னதுபோல் எனது உணர்வுகளை முழுமையாக புரிந்து கொண்டவர் தாங்கள். வருகைக்கு நன்றி முனைவரே...
ஆத்தாடி சும்மா நச் நச்னு ....
பதிலளிநீக்குவாங்க டீச்சர் அடிக்கடி லீவு போட்டுறீங்களே.... இருந்தாலும் வர்றீங்களே நன்றி சகோ.
நீக்குஎன்ன ஆச்சி ஜி...? கேள்விகள் இப்படி...?
பதிலளிநீக்குவாங்க ஜி என்ன ? செய்யச் சொல்றீங்க ? அபுதாபியில் வெயில் மண்டையை காய்ச்சு எடுக்குது தூக்கம் வரமாட்டுது வேறவழி உங்களோட தூக்கத்தையும் கெடுக்கிறேன் அதான்.
நீக்குசில கேள்விகள் விடை தெரியா வகை. சில கேள்விகள் வில்லங்க வகை. இரண்டுக்கும் விடை தெரிந்தவரே (கில்லர்ஜி) நம்மிடம் கேள்விகளை கேட்கிறார். என்னவொரு குசும்புத்தனம்..?!!
பதிலளிநீக்குத ம 8
வாங்க இந்த குசும்புதானே வேண்டாங்குறது எனக்குத் தெரியாமல்தானே உங்களிடம் கேட்டேன் வில்லங்க கேள்விகளுக்கு வில்லங்க கோஷ்டிகள் (இனிய தில்லை அகத்தார்) மேலே பதில் சொல்லி விட்டு போய் விட்டார்களே.. நண்பரே...
நீக்கு
பதிலளிநீக்கு"Judge a man by his questions rather than his answers." என்று VOLTAIRE சொன்னதை இங்கு நினைவு கூர்கிறேன்.
வருக நண்பரே கடந்த 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் VOLTAIRE அவர்களின் கருத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
நீக்குஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்குப் பதில் தெரிந்திருந்தும் -
பதிலளிநீக்குஎங்களுடன் ஏனிந்த விளையாட்டு!?..
ஓ அவருக்கு தெரியுமா அப்போ ஏன் எங்கட தலையை உருட்டுகிறார் ...... or டெஸ்ட் ஆ...... எஸ்கேப்
நீக்குஎப்படி ? ஜி இவ்வளவு சிம்பிளா ? காலை வாரி விடுறீங்க ? அதுவும் வலிக்காமல்... இது தெரிஞ்சா, நான் ஏன் ? அபுதாபியிலே வேலை செய்யிறேன். வருகைக்கு நன்றி ஜி.
நீக்குஹலோ மேடம் கேள்வி கேட்கிறதாக இருந்தால் நேரடியாக என்னிடம் கேட்கனும் அதென்ன ? ஜியிடம் கேட்டுப்போறது... அதுவும் உடனே எஸ்கேப்..
நீக்குஇந்த கேள்விகளை எல்லாம் ,காணொளியில் வரும் சிங்கிடமே கேட்கலாமே :)
பதிலளிநீக்குஅவர்தான் ரயிலை நிறுத்த வில்லையே.... ஜி அவர் சிங் இல்லை பங்களாதேஷி வருகைக்கு நன்றி.
நீக்குஅப்பாடா எல்லா கேள்வியும் ஜாய்ஸ்ல விட்டுட்டேன், அப்ப பரிட்சையில் என்ன தான் எழுதினே என்று கேட்பது புரிகிறது.Question Paper சரியில்ல வேற questions தயார் செய்யவும் என்று கேஸ் போட போகிறேன்.எப்புடி? ஆனா ஓட்டு போட்டுடேன் சகோ, நன்றி.
பதிலளிநீக்கும்ம் இப்படியும் ஒரு சமாளிப்பா ? நல்லாத்தான் இருக்கு ஆசிரியருல அதான்... வருகைக்கு நன்றி சகோ.
நீக்குஅருமையான கேள்விகளை கேட்டு அசத்தி இருக்கீங்க சகோ.
பதிலளிநீக்குவாங்க சகோ கேள்விகள் கேட்டு அசத்தி பயன் என்ன ? பதில்கள் கிடைப்பது சாத்தியப் படவில்லையே... வருகைக்கு நன்றி.
நீக்குஅந்தக் காலத்திலேயே சாக்ரடீஸ் சொன்னாராம் ஏன் எதற்கு எங்கு என்றெல்லாம் கேள்வி கேட்டுப் பதிலைப் பெறு என்று. உங்கள் கேள்விகளுக்கு ஒரே பதில் கிடைக்காது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பதில் தருவார். இவற்றிலிருந்து பகுத்து தெரிந்து கொள்வதில் இருக்கிறது உமக்கு பதில். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாருங்கள் ஐயா அழகாக சொன்னீர்கள் உண்மையில் இதற்க்கு பதில்கள் கிடைப்பது 80 இயலாத காரியமே தாங்கள் சொல்வதுபோல அனைத்து பதில்களிலும் பகிர்ந்து எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஎத்தன எத்தன கேள்விங்க ?
பதிலளிநீக்குஏன் இப்படி நல்லாத்தான போயிட்டு இருக்கு....
அப்பா....முடியள..
வாங்க கேள்வி கேட்கிறது கேட்கிறோம் மொத்தமாக ஒரு மாதத்திற்க்கும் சேர்த்து 31 கேட்டேன் இது தவறா ? இதுக்கே இப்படினா ? அடுத்த 365 கேள்விகளை நான் யாரிடம் கேட்பது ?
நீக்குகேள்வியின் நாயகரே வாழ்க!
பதிலளிநீக்குவாங்க ஐயா வாழ்த்தோடு வந்தமைக்கு நன்றி.
நீக்குகேள்வியின் நாயகனே பதிலும் அறிவர்...ஆகையால்...நான் ஜீட்.... வாக்கு போட்டு விட்டேன் சகோ.
பதிலளிநீக்குவருக சகோ கடந்த பதிவு D.D.D.க்கு நான் மறுமொழி தந்ததுபோல கோபமாக பதிவு போட்டதும் சரியா வருது ம்ம் அது...
நீக்குகேள்விக்கேன்ன பதில்?
பதிலளிநீக்குசாம்பசிவா!
வாங்க ஐயா சாம்பசிவம்தான் பதில் சொல்லி விட்டாரே... வருகைக்கு நன்றி.
நீக்குஇது அத்தனைக்குமே பதில் இருக்கு, என்ன கொஞ்சம் நீ.........ளமா போகும், அதான் பாக்கிறேன்.
பதிலளிநீக்குநண்பரே பேச்சுரிமை. எழுத்துரிமை உள்ளது நமது நாடு எழுதுங்கள்.
நீக்குஎல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தாலேயே...ரயிலை நிறுத்தமுடியல... நான் எப்படி குறுக்கால பாஞ்சு ரயில..நிப்பாட்டி..டிரைவரிடம் கேட்டு........ ..???????
பதிலளிநீக்குகுறுக்கே பாய்வதோடு நம்ம வேலை முடிந்து விடும் நண்பரே பிறகு ரயிலை நிறுத்துவது அவர் வேலை.
நீக்கு"என் கேள்விக்கு என்ன பதில்" இதுவே வாழ்க்கையாகிப் போயிற்று.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.
நீக்குபதில்களையும் எழுதிவிட்டால் எங்களுக்கு இலகுவாக இருக்குமல்லவா? எதிர்பார்க்கிறோம் ...அது என்ன CHIVAS REGAL ? உங்கள் நண்பரா?
பதிலளிநீக்குவாங்க நண்பரே பதில் தெரிஞ்சுக்கத்தானே தங்களிடம் கேள்விகளை சமர்ப்பித்தேன்.
நீக்குசாம்பசிவம், சிவாதாமஸ்அலி, Chivas Regal சிவசம்போ இவர்கள் மூவருமே எனது பதிவில் நான் தொடர்ந்து கொண்டு வரும் எனது கற்பனைபிம்பங்களே...
வருகைக்கு நன்றி நண்பரே...
சரசரவென பல சம்மட்டியடிக்
பதிலளிநீக்குகேள்விகளை அடுக்கிய விதம் படித்து
ஆச்சரியப்பட்டுப்போனேன்
ஆழமான சிந்தனை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஆஹா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிஞரின் வருகை கண்டு மகிழ்ச்சியும் நன்றியும்.
நீக்குவாங்க செந்தில்! சொல்லவே இல்ல? ஆமா இந்தக் கவுண்டமணியை என்ன பண்ணீங்க? ஆளையே காணோம்? நீங்க பெரிய விஞ்ஞானியா வர்ரதுக்கான வாய்ப்பு இருக்கு. தயவுசெய்து இந்த ஏழாம் அறிவுக் கேள்விகளில் இருந்து இந்த உலகத்தைக் காப்பாத்துங்கய்யா..
பதிலளிநீக்குவாருங்கள் நண்பரே மனிதனின் சிந்தனைத்திறனை 10 சதவீதமே உபயோகப்படுத்தி இருக்கிறான் மீதம் 90 அவன் உபயோகப்படுத்தினால் இந்த உலகின் நிலை ?
நீக்கு\\வாருங்கள் நண்பரே மனிதனின் சிந்தனைத்திறனை 10 சதவீதமே உபயோகப்படுத்தி இருக்கிறான் மீதம் 90 அவன் உபயோகப்படுத்தினால் இந்த உலகின் நிலை ? \\ தவறான தகவல்.
பதிலளிநீக்குhttp://mentalfloss.com/article/57658/do-people-only-use-10-their-brains
http://www.scientificamerican.com/article/do-people-only-use-10-percent-of-their-brains/
இதுபோல மேலும் எண்ணற்ற இணைய பக்கங்களில் இந்த 10% கணக்கு வெறும் புரளி என்று விளக்கம் தரப் பட்டுள்ளது.
வணக்கம் நண்பரே இதற்க்கு முன் எனது பதிவில் நான் 12 சதவீதம் என்று படித்ததை குறிப்பிட்டேன் தாங்கள்தான் அது 12 அல்ல 10 என்று குறிப்பிட்டீர்கள் அதன் அடிப்படையில்தான் இப்படிச் சொன்னேன் இதுவும் புரளிதானா ? இந்த இணைப்புகளை தந்தமைக்கு நன்றி சென்று பார்க்கிறேன் நண்பரே.....
நீக்குநண்பா இது தான் நான் போட்ட கமண்ட். இதே கருத்தை வலியுறுத்தி இறுதியில் ஒரு சுட்டியும் கொடுத்திருந்தேன். நீங்கள் அதை எவ்வாறு புரிந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை.
நீக்குகில்லர்ஜீ, நாம் வெறும் 10% மூளையைத்தான் பயன்படுத்துறோம், 12% மூளையைத்தான் பயன்படுத்துறோம் என்பதெல்லாம் 20 ஆம் நூற்றாண்டின் கட்டுக் கதைகளுள் ஒன்று. மனிதன் மூளை எதுவும் சும்மா இல்லை, தூங்கும்போது கூட இதயம், இரத்த ஓட்டம் என்று செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பல இணைய பக்கங்களில் விலாவாரியாக எழுதப் பட்டுள்ளன.
Fact or fiction?
Experts Fact Check spoke to agree that there is potential to train the human brain to learn new skills and ideas but the idea that we only use 10 per cent of our brain capacity is, like the film Lucy, pure fiction.
https://faculty.washington.edu/chudler/tenper.html
Do We Use Only 10% of Our Brains?
நண்பரே தாங்கள் கொடுத்த இணைப்புக்கு போய் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் இருப்பினும் எனக்கு இங்கிலீஷ் படித்தால் முதுகுவலி வரும், புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் மீள் வருகைக்கு நன்றி.
நீக்குசுவையான கேள்விகள்! இவற்றுள் பெரும்பாலானவற்றுக்குப் பதிலளிக்க முடியும் என்றாலும் பதில் பெறுவது இல்லை உங்கள் நோக்கம், அனைவரையும் சிந்திக்க வைப்பதே என்பதால் இத்தோடு கழன்று கொள்கிறேன்! ;-)
பதிலளிநீக்குவருக நண்பரே பதிவின் பொருளை அழகாக உணர்ந்து எழுதிவிட்டார்கள் அருமை வருகைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குசிந்தனையை தூண்டும் பதிவிது .எத்தனை கேள்விகள்.? ஆனால் அத்தனையும் அற்புதமானவை. இருந்தாலும் இத்தனைக்கும் பதிலை தேடுவதென்பது இயலாத காரியம்.! நாளொன்றுக்கு ஒன்று வீதம் பதிலை யோசித்து தேடினாலும், சிரமம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும், கேள்விக் கனைகளை சிறப்பாக தொ(கு)டுத்த தங்களுக்கு சிறப்பான நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி.
நீக்கு