இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 28, 2015

காத்திருக்கிறாள்...

 
ன்னைச்சுமப்பவள், எனக்காக காத்திருக்கிறாள்...
ன்னை நேசிப்பவள், என் வருகைக்காக காத்திருக்கிறாள்...
ன்னை அள்ளி, அரவணைத்து கொள்ள காத்திருக்கிறாள்...
ன்னை உண்டு, களித்து ஆனந்தம் கொள்ள காத்திருக்கிறாள்...

யிர் உள்ளவரை, உள்ளன்போடு காத்திருக்கிறாள்...
ரிமையோடு என்னை, ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறாள்...
ச்சந் தலைமுதல், உள்ளங்கால் வரை முத்தமிட காத்திருக்கிறாள்...
லகம் சுற்றித் திரிந்தாலும், வருவேன் எனகாத்திருக்கிறாள்...

காசு பணம் இல்லையெனும், கடமையென காத்திருக்கிறாள்...
காவியணிந்து வாழ்ந்தாலும், கனிவோடு காத்திருக்கிறாள்...
காவியம் படைத்தாலும், கருணையோடு காத்திருக்கிறாள்...
காலம் கடந்தாலும், கடமைக்காக காத்திருக்கிறாள்...

அவள்தான், என்னை இன்றுவரை சுமந்து வரும், பூமித்தாய்.
 -ன் யிர்க்காலம்.

 
CHIVAS REGAL சிவசம்போ-
கிலத்தை ளும் வதான், ஸ்வரன் மகள் லகநாயகின்னு, ருக்கே தெரியுமே ன்னோட மரமண்டையிலே றியிருக்காதுன்னு நினைச்சிட்டீரோ... யமே வேண்டாம் ந்தலையில ங்கியடிச்சு வையார் மேலசத்தியம், தெரியும் நண்பா....

இனிய நண்பர், நண்பிகளுக்கு நான் தற்போது இனிய இந்தியாவில் அபுதாபி திரும்பும் வரை எமது பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் ? மறுமொழி இடமுடியாமல் போகலாம் அதேநேரம் தங்களது பதிவுகளை தொடர்ந்து எமது செல் மூலம் படிப்பேன் தமிழ் மணம் ஓட்டும் பதிப்பேன் பின்னூட்டம் இடமுடியாமல் போகலாம் 80தை அறியத் தருகிறேன்.
அன்புடன்
தி கிரேட் தேவகோட்டையிலிருந்து.... கில்லர்ஜி.

புதன், ஜூன் 24, 2015

வாழ்க்கை எனும் ஓடம்

காலத்தை வென்றவன் நீ
A. L. Muthiah (1927-06-24)24 June 1927 ‘Kaviarasu‘ Kannadasan Today Birthday 24.06.2015

எல்லா மனிதர்களுமே, தன் வாழ்க்கை எனும் ஓடத்தை ஓட்ட ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கிறார்கள், சிலருக்கு அமைகிறது சிலருக்கு அமைக்கப்படுகிறது, இதில் கவிஞர்களுக்கு மட்டும் விதிவிலக்கு எல்லோருமே கவிஞர்களாக முடியாது, ஏனெனில் அதற்கு சராசரி மனிதர்களை விட சிறிதளவாயினும் கூடுதலாக மாறுபட்ட ''அறிவு'' எனச்சொல்வார்களே அது வேண்டும், இந்தக் கவிஞர்கள் வயிற்று பிழைப்புக்காகத்தான் கவிதை எழுதுகிறார்கள், இருப்பினும் தனக்கென ஒரு கௌரவத்தை தனி இடத்தை நிலைப்படுத்திக் கொண்டு வரவேண்டும் 

இந்த வகையில் எனக்குத் தெரிய சினிமாக் கவிஞர்களில் கவியரசர் கண்ணதாசன்  அவர்களை தவிர வேறு யாரும் இந்நிலையை கடைப்பிடித்ததில்லை பாடல்களில் சமூக கருத்துக்களை நமக்கு சொன்னவர் திரைப்படத்தின் கதைக்கு தகுந்தது போல் எழுதியவர் அறிவாளிகள் மட்டும் புரிந்து கொள்ளும் விதமாக, தனது சுயசரிதையையும் சேர்த்திருப்பார் உதாரணத்திற்கு...

தனது, பேரும் புகழும் நிலைத்திருக்க....
நான் காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

தனது, சொந்த வாழ்வில் சறுக்கல் விழுந்தபோது..... 
காலத்தில் அழியாக காவியம் தரவந்த, மாபெரும்
கவிமன்னனே உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்
உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விழலாகுமா மகனே சந்தனம் சேறாகுமா

தனக்கு ஆத்திகத்தில் ஐயப்பாடு வரும்போது......
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

தனது குடும்ப வாழ்வில் விரிசல் காலகட்டத்தில்...
இரவுநேரம் பிறரைப்போலே
என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை என்று
போனால் ஊரென்ன சொல்லும்

தன்மகள் பருவ வயதடையும்போது தந்தையென்ற நிலையில்....
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசிவர பூத்த பருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனிபோல நாணம் அதை மூடியதோனோ

(இது சில, காதலர்களுக்கும் பொருந்தும்)

இன்னும் சொல்லிக் கொண்டே... போகலாம் நான் சொல்ல வந்ததை, கீழே VIDEOவில் இணைத்திருக்கிறேன் கேட்டு மகிழவும். 

இன்றைய கவிஞர்கள் தன்னை தமிழன் என பீற்றிக்கொண்டு பிழைப்புத்தேடி வந்த பிற மொழிக்காரர்களை அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக புகழ்ந்து பாட்டெழுதுகிறார்கள், இதனாலும் கூட பலரும் தமிழர்களை ஆண்டு வந்து இருக்கிறார்கள், ஒருவேளை இவர்கள் கவிதைக்கு தயாரிப்பாளரிடம் பெற்றுக்க கொண்டு, தனியாக நடிகர்களிடமும் (பிறருக்கு தெரியாமல்) பெறுவார்களோ ! இது பாமரப்பயல்களுக்கு மட்டும் விளங்குவதில்லை. 

பண்டைய காலத்தில் புலவர்கள் மன்னர்களை வாழ்த்திப் பாடியதற்கும் இவர்கள் நடிகர்களை புகழ்வதற்கும் என்ன வித்தியாசம் ? அவர்களாவது போரில் வெற்றி பெற்ற வீரத் தமிழர்களைத்தான், புகழ்ந்தார்கள் இவர்கள் ? ? ?

தமிழர்களாம் ? இவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லும் இவர்கள் தமிழர்களாம் ? அதிலும் GREEN தமிழர்களாம் ? 
 
காணொளி.
இன்று இரவு இனிய இந்தியா வருகிறேன்.
கில்லர்ஜி.

திங்கள், ஜூன் 22, 2015

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.



ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு

நம் மூதாதையர்களின் சொல்வாக்குகளில் எத்தனை உண்மைகளை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் நடைமுறையில், இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 127 கோடியென கணக்கு வாத்தியார்கள் சொல்கிறார்கள், சரி இதில் படிக்காதவர்களை விட்டுத்தள்ளுங்கள், எத்தனை கோடி படித்த மக்கள் இந்தியாவில் வாழ்ந்து இந்தியாவுக்காக உழைக்கிறார்கள்  இப்படியே எல்லோருமே நாட்டை விட்டு போய்க்கொண்டிருந்தால்

(அதிலும் இப்போது குடும்ப சகிதமாக போகத் தொடங்கி விட்டார்கள் இதனால் குழந்தைகள் தமிழ் மட்டுமல்ல, இதர இந்திய மொழிகள் படிப்பதற்கு சந்தர்ப்பங்கள் குறைந்து வருகிறது.... தாய்-தந்தையர்களும் குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள், இந்திய மொழிகள் அழிந்து கொண்டிருப்பது... முகக்கண்களுக்கு தெரிகிறது அகக்கண்களுக்கு ஏனோ தெரியவில்லை) 

படித்த மக்கள் அனைவருமே இந்தியாவை விட்டு போய்க் கொண்டிருந்தால் இனி இந்தியாவில் அராஜகர்களின் ஆட்சிதான் நடக்கும், பாமரர்கள் கொத்தடிமைகளாக வாழ வேண்டியநிலை உருவாகும்.

முடிவு..... நினைத்துப்பார் இந்த தருணத்தில் பாலஸ்தீனை... எட்டு மில்லியன் பெரும்பான்மை மக்கள் உள்ள பாலஸ்தீனை, ஆறு மில்லியன் சிறுபான்மை மக்கள் உள்ள இஸ்ரேலியர்கள் கடந்த 1948 June 22 இதேநாள் முதல் கடந்த 67 வருடங்களாக ஆட்டிப் படைக்கிறார்களே ! காரணம் என்ன தெரியுமா

பகுதி மக்கள் அதாவது நான்கு மில்லியன் பாலஸ்தீனியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி அரபு நாடுகளில் வாழ்கிறார்கள், இவர்களைப் போலவே நாமும் அயல் தேசங்களில் வாழத் தொடங்கினால் நாளை நமக்கும் இந்நிலை வராது என்பது என்ன நிச்சயம் ?

நமக்கு பாலஸ்தீனியர்களோ, இஸ்ரேலியர்களோ முக்கியமல்ல நமக்கு முதலில் வேண்டியது இந்தியா ஆகவே, படித்தவர், படிக்காதவர் அனைவருக்குமே இந்தியாவில் வேலை வாய்ப்பை உருவாக்கி வேலை கொடுத்து இந்தியாவை காப்பாற்ற நமது மேதகு வாய்ந்த ஆட்சியாளர்கள் மோடியற்ற ஆட்சி செய்ய முயற்சிக்க வேண்டும், இனியெனும் உணர்வுடன் வாழ்வோம், இந்திய மண்ணுடன் வாழ ! நமக்கில்லை எனினும் நாளைய நமது சந்ததிகளுக்காக...

வந்தேமாதரம் (Tamil)  
वनदे मातरम् (Hindi)  
వందేమాతరం (Telugu) 
വന്ദേമാതരം (Malayalam) 
ವಂದೇ ಮಾತರಂ (Kannada)

சனி, ஜூன் 20, 2015

மெய்யம்புளி, மெய் மெய்யப்பன்

அழகாபுரி நடுத்தெருவுலகூட ஒரு பொண்ணு ரெடியா இருக்கு தம்பி,  பொண்ணு பார்க்குறதுன்னா, உங்களைப்பத்தி உண்மையான எல்லா விபரமும் எனக்கு தெரியனும் பேரென்ன, சொன்னீங்க ? 
மெய்யப்பன். எல்லோரும் மெய், மெய்யப்பனுதான் கூப்புடுவாங்க,

நல்லது இப்படித்தான் பேர் எடுக்கணும் ஆமா... சொந்த ஊரு எது ? 
மெய்யம்புளி.

உங்க, அம்மா அப்பா எங்கே இருக்காங்க ? 
செத்துப் போயிட்டாங்கன்னு சொல்லுங்க !

கூடப்பொறந்தவங்க...
யாருமே, இல்லைனு சொல்லிடுங்க !

எங்கே வேலை செய்றீங்க ?
பாங்க் ஆப் பரோடாவுல வேலை செய்றேன்னு சொல்லுங்க ! 

தவறா நினைக்காதீங்க, தம்பிக்கு தண்ணீ... சாப்டுற பழக்கம்... ஏதாவது... 
அய்யய்யோ அந்தப்பழக்கமே, கிடையாதுன்னு சொல்லிடுங்க !  

பீடி, சிகரெட் புகைப்பீங்களா ?  
சேச்சே, கண்ணுல கண்டாலே ஆகாதுன்னு சொல்லுங்க ! 

வெத்தலை பாக்கு, புகையிலை போடுவீயலா ?
எங்க பரம்பரையில யாருமே, போட்டதில்லைனு சொல்லிடுங்க   

பொண்ணுங்க, பழக்கம் லவ்வு அப்படி இப்படின்னு.... ஏதாவது...
பொண்ணுகளை கண்டாலே எனக்கு அலர்ஜின்னு சொல்லுங்க ! 

தம்பிக்கு, சொந்தமா வீடு, இடம்...
கிராமத்துல நிறைய கிடக்குன்னு, சொல்லிடுங்க ! சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுருக்கோம்னு சொல்லுங்க ! லட்சுமி தியேட்டரைக்கூட லீசுக்கு விட்ருக்கோம்னு சொல்லிடுங்களேன்.  

(தனக்குள்) என்ன... எல்லாத்தையுமே சொல்லுங்க, சொல்லிடுங்கன்னு சொல்றானே... நம்மளை மாட்டி விட்ருவானோ ? எதுக்கும் நேரடியாவே கேட்ருவோம்.

தம்பி, கோவிச்சுக்கிடாதீங்க பொய் ஏதும் பேச மாட்டியலே... 
ஹி.. ஹி.. அது, மட்டும்தான் பேசுவேன்.

(தனக்குள்) அடப்பாவி இவ்வளவு நேரம், பேசியதெல்லாம் பொய்யா ? 

டேய், மெய்யப்பா முதலாளி புரோட்டாவுக்கு மாவு வாங்க பணம் கொடுத்தாராமே, அதுல மிச்சத்துக்கு எண்ணெய் வாங்கிட்டு வரச்சொன்னாரு, ஆமா தரகர்ட்ட என்ன பேசிக்கிட்டு இருக்கே ? 

சரி, தரகரே நான் கிளம்புறேன் ஏதும் மாட்டுனா போன் பண்ணுங்க, யேன் நம்பரு 9977777788     
(தனக்குள்) மாட்டுனாவா ? ? ? அட மூதேவி நம்பருகூட சனியன், பிடிச்ச மாதிரிதான் வாங்கி வச்சுருக்கான், அட்டுப்பிடிச்ச பய.

குறிப்பு - 
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மூன்று வரியில் நான் கேள்விப்பட்ட ஒரு விசயத்தை எனது பாணியில் கொஞ்சம் மிகைப்படுத்தி, ஜவ்வு மிட்டாய் போல் இழுத்து மெருகூட்டி வர்ணம் பூசியிருக்கிறேன், இந்த உண்மையை நான் எழுதக் காரணம் எனக்கு சொன்னவர் 
(சகோதரர் G. கணேசன் ஸ்வீட் ஸ்டால் வெள்ளையன் ஊரணி, பிள்ளையார் கோவில் தேவகோட்டை) 
ஒருக்கால் இதை எதேச்சையாக அவர் படிக்க நேர்ந்தால் ? என்னை தவறாக நினைக்கக் கூடும் அதற்காகத்தான்.

வியாழன், ஜூன் 18, 2015

இதய வலிகள் ஏழு

சுயநல இதயவலிகள்.
 
1. நமது, வேதனைகளில் பங்கு பெற்று நமக்கு 6தல் கூறிய நண்பன் மறுநாள் அதை பிறரிடம் நகைச்சுவை படுத்தி பேசியது நம் காதுக்கு வரும்போது.... ஏற்படுவது.

2. வாழ்க்கைச்சூழல் மாறி நாம் பணக்கார வரிசையில் வரும்போது அதுவரை மதிக்காத மனைவி திடீரென பாசத்தை பொழியும்போது.... ஏற்படுவது.

3. ஆத்மார்த்தமாய், செய்த உதவியை பணம் கொடுத்து கொச்சை படுத்தும்போது.... ஏற்படுவது.

4. உண்மையை சொல்லும் போது நம்பாதவர்கள், பொய் சொன்னதை நம்பும்போது.... ஏற்படுவது.

5. பிறருக்காக, நாம்செய்யும் தியாகத்தை அந்தபிறர் உணர்ந்து பார்க்காமல் பேசும்போது.... ஏற்படுவது.

6. ஆத்மார்த்தமாய், நினைத்திருந்த நண்பன் நமக்கு துரோகம் செய்யும்போது.... ஏற்படுவது.

7. பதவி அதிகாரத்தால், தான்செய்த தவறை பிறர் நம்மீது, சுமத்தப்படும்போது.... ஏற்படுவது.
 
குறிப்பு- இவையனைத்தும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே...  இருக்கிறது.
 
பொதுநல இதயவலிகள்.
 
1. நாட்டுக்காக, நமக்காக உயிர்துறந்த ராணுவ வீரர்களின் மரணத்திற்கு வருந்தாதவர்கள், யாரோ ஒரு பிரயோஜனமில்லாத நடிகர் மரணத்திற்காக வாகனங்களை தீ வைப்பதைக் காணும்போது.... ஏற்படுவது.

2. தனது உழைப்பை, நாட்டுக்காக மட்டுமே கொடுத்த விஞ்ஞானிகளின் மரணத்திற்கு கடையை அடைக்காதவர்கள், தனது உழைப்பை வீட்டுக்காக மட்டுமே கொடுத்த அரசியல்வாதியின் மரணத்திற்காக கடையை அடைப்பதைக் காணும்போது ஏற்படுவது.

3. கிரிக்கெட்டைப்பற்றி, ஒன்றுமே தெரியாத சினிமாக்காரர்கள் தான் சம்பாரிப்பதற்காகத்தான் கூடுகிறார்கள், என்பதை அறியாமல் ஏமாறும் மக்களைக் காணும்போது.... ஏற்படுவது.

4. விபச்சாரியென, தெரிந்திருந்தும் அவர்களுக்கு கோயில் கட்டுவதைக் காணும்போது.... ஏற்படுவது.

5. குடும்பத்துடன், பார்க்கத்தகாதது எனதெரிந்திருந்தும் அந்த சினிமாவைகாண, மக்கள் கூட்டமாக போவதைக் காணும்போது.... ஏற்படுவது.

6. ஊழல்வாதியென, தெரிந்திருந்தும் அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுவதைக் காணும்போது.... ஏற்படுவது.

7. விலைவாசி ஏறுவதை தட்டிக்கேட்க கூடாத மக்கள் மதப்பிரச்சனைக்கு கூடுவதைக் காணும்போது.... ஏற்படுவது.
 
குறிப்பு- இவைகள் அனைத்தும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே... இருக்கிறது.