என்னை நேசிப்பவள், என் வருகைக்காக காத்திருக்கிறாள்...
என்னை அள்ளி, அரவணைத்து கொள்ள காத்திருக்கிறாள்...
என்னை உண்டு, களித்து ஆனந்தம் கொள்ள காத்திருக்கிறாள்...
உயிர் உள்ளவரை, உள்ளன்போடு காத்திருக்கிறாள்...
உரிமையோடு என்னை, ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறாள்...
உச்சந் தலைமுதல், உள்ளங்கால் வரை முத்தமிட காத்திருக்கிறாள்...
உலகம் சுற்றித் திரிந்தாலும், வருவேன் எனகாத்திருக்கிறாள்...
காசு பணம் இல்லையெனும், கடமையென காத்திருக்கிறாள்...
காவியணிந்து வாழ்ந்தாலும், கனிவோடு காத்திருக்கிறாள்...
காவியம் படைத்தாலும், கருணையோடு காத்திருக்கிறாள்...
காலம் கடந்தாலும், கடமைக்காக காத்திருக்கிறாள்...
அவள்தான், என்னை இன்றுவரை சுமந்து வரும், பூமித்தாய்.
-என் உயிர்க்காலம்.
CHIVAS REGAL சிவசம்போ-
அகிலத்தை ஆளும் இவதான், ஈஸ்வரன் மகள் உலகநாயகின்னு, ஊருக்கே தெரியுமே என்னோட மரமண்டையிலே ஏறியிருக்காதுன்னு நினைச்சிட்டீரோ... ஐயமே வேண்டாம் ஒந்தலையில ஓங்கியடிச்சு ஔவையார் மேலசத்தியம், தெரியும் நண்பா....
இனிய நண்பர், நண்பிகளுக்கு
நான் தற்போது இனிய இந்தியாவில் அபுதாபி திரும்பும் வரை எமது பதிவுகள் வந்து
கொண்டுதான் இருக்கும், ஆனால் ? மறுமொழி இடமுடியாமல் போகலாம் அதேநேரம்
தங்களது பதிவுகளை தொடர்ந்து எமது செல் மூலம் படிப்பேன் தமிழ் மணம் ஓட்டும்
பதிப்பேன் பின்னூட்டம் இடமுடியாமல் போகலாம் 80தை அறியத் தருகிறேன்.
அன்புடன்
தி கிரேட்
தேவகோட்டையிலிருந்து.... கில்லர்ஜி.