அன்பு நெஞ்சங்களே கடந்த வருடம் நான் வலைச்சர
ஆசிரியராக இருந்த பொழுது எமிரேட்ஸ் அல் ஸார்ஜாவில் வாழும் பிரபல வலைப்பதிவர் சகோதரி திருமதி. மனோ சாமிநாதன்
அவர்களிடம் ஒரு ஓவியம் வரைந்து கேட்டிருந்தேன் என்பது தங்களுக்கு
நினைவிருக்கலாம் அந்த ஓவியத்தை உள்ளன்போடு வரைந்து தந்த சகோ அவர்களுக்கு எமது
நன்றி.
மீனாம்பதி
முதியோர் காப்பகம்.... வேப்பமரத்தடி நிழலில்...
ஏங்க, யேன் ஒரு மாதிரியா இருக்கீங்க...
ஒண்ணுமில்லே மீனாட்சி.
இல்லை
எனக்குத் தெரியாதா உங்களைப்பத்தி, யேன் எங்கிட்டே மறைக்கிறீங்க ?
இல்லை, என்னைக்காவது நமக்கு இப்படி ஒரு
நிலைமை வரும்னு நீ நினைச்சு பார்த்திருப்பியா ?
நான் எதுக்காக இப்படி நினைக்கப் போறேன் ? அதைப்பத்தியே
நினைக்காதீங்க.... மனசு கவலைப்பட்டா, ஆத்திரமாகி, கோபம் வரும் அதுவே சாபம்
விடச்சொல்லும் அப்புறம் நம்ம புள்ளைங்களுக்குதானே... கஷ்டம் மறந்துடுங்க....
இன்னும்கூட நீ புள்ளைங்கமேலே பாசம்
வச்சுருக்கியா மீனாட்சி ?
என்ன இருந்தாலும் நம்ம புள்ளைங்கதானே....
என்னாலே மறக்க, முடியலையம்மா... அவங்களை நினைச்சாலே கோபமா வருது.....
யேன் கோபம் வருது தப்பு உங்களிடம்தானே
இருக்கு... எல்லா
சொத்தையும் இப்பவே புள்ளைங்களுக்கு எழுதி வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்துடுச்சு ?
நமக்குப் பிறகு சொத்து பிரிக்கிறதுல
அவங்களுக்குள்ளே சண்டை வரக்கூடாதுன்னு நினைச்சு நியாயமான முறையிலே பிரிச்சு
எழுதுனேன், எல்லாமும் மாத்தியாச்சு இந்த வீடு மட்டும் ஏன்... மிச்சம் இருக்கு நம்ம புள்ளைங்க
எல்லோரும் ஒண்ணாத்தானே இருக்கோம்னு நினைச்சேன், ஆனா நான் உன்னை மறந்துட்டேனே அது
எப்படி ? அதுதான், தாங்க முடியலை.
சேச்சே என்னங்க நீங்க தொழில்ல எவ்வளவு
எதிரிகளை எதிர்த்து வந்தீங்க நீங்களா... இப்படி சின்னக் குழந்தையாட்டம் கண்
கலங்கிகிட்டு, இனி நமக்கு என்னயிருக்கு ? வீடு போ, போன்னு சொல்லிடுச்சு, காடு வா, வான்னு
சொல்லுற வயசு.
தொழில் எதிரிகளெல்லாம் வெளியாட்க அதுனாலே
ஜெயிச்சேன், ஆனா வீட்டுக்குள்ளேயே அதுவும் பெத்த புள்ளைங்களே, இப்படி....
புள்ளைங்கதானே போனாங்க, நான் போகலையே... அப்புறம் ஏன் மனசைப் போட்டு
குழப்பிகிறீங்க.... ?
நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு ?
முப்பத்து அஞ்சு வருஷமாச்சு, ஏன் திடீர்னு இந்தக் கேள்வி ?
இந்த முப்பத்து அஞ்சு வருஷத்துல என்னைக்காவது நீ என்னைக் கல்யாணம்
செய்து கிட்டதுக்காக வருத்தப்பட்டு இருக்கியா ?
ஒருக்காலமும் நான் கவலைப்பட்டதில்லை, உங்க மேலே
விருப்பபட்டுதானே எங்க அம்மா - அப்பாவை எதிர்த்து கல்யாணம் செஞ்சோம், என்ன... மனக்கஷ்டம் பத்து வருஷமா
புள்ளையில்லாம தவமா தவமிருந்து கோயில் குளம்னு ஏறி வந்தேன், தெய்வம் கண் திறந்து
ரெட்டை குழந்தை அதுவும், ஆண் குழந்தைங்க எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா... அந்தக் குழந்தைங்களா இப்படி.... ?
(மீனாட்சியம்மாள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது சபாபதி
ஐயா காண்பது, வாழ்வில் முதல்முறை என்றுகூட சொல்லலாம்)
மீனாட்சி,
நமக்கு குழந்தைகள் பிறக்காமல் இருந்திருந்தால், இந்த நிலைமை வந்துருக்காது
இல்லே... வீடு இல்லாத நிலைக்கு வந்துருக்க மாட்டோம்ல...
இப்பகூட
என்ன... இருபது வருஷத்துக்கு முன்னே நாம முதியோர் இல்லத்துக்கு
தானம் கொடுத்த வீட்லதான் இருக்கோம், பார்த்தீங்களா ? நம்ம
பேருதான் இப்பவும்கூட இருக்கு, இதுவும் நம்ம வீடுதாங்க....
ஆனா, நம்ம புள்ளைங்க கம்பெனி பேரையெல்லாம்
மாத்தி அவுங்க பொண்டாட்டி பேரை வச்சுட்டாங்களே....
அதனால என்னங்க நம்ம மருமக்களோட பேருதானே...
நீங்க வைக்கலையா என்பேரை... நான்
கட்டாயப்படுத்துனதாலதான் உங்க பேருல பாதியை சேர்த்தீங்க.... ?
நமக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கிறதாலதானே
போட்டி போட்டு கிட்டு வெளியே அனுப்பிட்டாங்க ஒரு புள்ளைய பெத்து இருந்தால் இப்படி
ஆகியிருக்காதோ....
நாம, இங்கே வரணும்ங்கிறது விதி குழந்தைகளை
கோவிச்சு என்னங்க செய்ய முடியும் ?
நீ உங்க அம்மா வீட்ல எவ்வளவு வசதியா வாழ்ந்தவ... உன்னை இந்த நிலைக்கு
அதுவும் இந்த வயசுல... மனசு ஆறமாட்டுதுமா...
ஆனாலும் அதைவிட வசதியா என்னை
வச்சிருந்தீங்களே... இனிமே என்ன இருக்கு.
நானாவது சின்ன வயசுல அனாதையா வாழ்ந்து
பழக்கப்பட்டவன், ஆனா நீ உன்னை இப்படி விட்டுட்டுப் போறதை நினைச்சா...
யாரும், யாரையும் விட்டுட்டு போக மாட்டோம்,
பேசாம இருங்க.
ஒரு விசயத்துல, எனக்கு சந்தோஷம்.
என்ன ?
உன்னோட, அப்பா - அம்மா உயிரோட இல்லை,
அவருக்கு முன்னாலே நான் தோற்கலை, ஆனா உன்னோட அண்ணன்கள் போட்ட சவால்
நிறைவேறிடுச்சு.
ஏங்க எப்பவோ உள்ள, விசயங்களை இப்பயேன்...
நினைக்கிறீங்க ?
இல்லை மீனாட்சி நான் தோத்துட்டேன்,
தோத்துட்டேன்...
சரி விடுங்க... அதையே நினைக்காம...
மீனாட்சி உன் மடியில கொஞ்சம்
படுத்துக்கிறவா....
சரி படுத்துக்கங்க...
மீனட்சியம்மாள் மரத்தில் சாய்ந்து கொண்டு
கால்களை நீட்ட சபாபதி ஐயா மடியில் தலைவைத்து சாய்ந்தார்... அவர் நிரந்தரமாக
சாய்ந்தது தெரியாமல் மீனட்சியம்மாள் மனஉலைச்சலில் இவரை அனாதையாக விட்டுப் போகிறோமே...
எனத்தெரியாமல் அப்படியே.... உறங்கினாள் நிரந்தரமாய்.....
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.
அன்பின் சகோ திருமதி. மனோ சாமிநாதன்
அவர்களுக்கு அன்று மின்னஞ்சலில் சொல்லி இருந்தேன் நான் சொல்ல மறந்த விடயத்தை
தாங்கள் யதார்த்தமாக புகைப்படத்தில் தந்து விட்டீர்கள் எனது பதிவு வரும்பொழுது
தங்களுக்கு புரியுமென அதுதான் இவர்கள் இருவருமே முடிவில் இறந்து கிடப்பது அதன்
பாவத்தை (முக பாவணை) தாங்களாகவே தந்து விட்டீர்கள் அதற்காக எமது சிறப்பு நன்றிகள்.
என்றும் அன்புடன் கணபதி
– மீனாம்பாள் அவர்களின் மகன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
குறிப்பு – நேற்று முன்தினம்12.06.2015 சார்ஜாவில் இருக்கும்
திருமதி. மனோ சாமிநாதன் அவர்களின் வீட்டுக்குப் போய் அவர்களின் கணவர், மகன்,
மருமகள், மற்றும் பேரன் எல்லோரையும் கண்டு வந்தேன் அனைவரும் உள்ளன்போடு வரவேற்று
உபசரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி
மூத்தக் குடிமக்களை முத்தமிட்டு வணங்கும் முதல் தர பதிவு!
பதிலளிநீக்குசிந்தனை சிறகடித்து பறக்கிறது நண்பரே!
இளமையில் தானம்
முதுமையில் நிதானம் இதுவல்லவோ? உதாராணப் புருஷன் பொஞ்சாதி உயில் சாசனம்.
வரைப்படம் வெகு சிறப்பு!
பதிவுக்கு பாராட்டு பத்திரம் அதுவே போதும்!
வயது ஏற ஏற இதுபோன்ற பதிவுகள் வருவது இயற்கையே!
முதல் தர பதிவுக்கு; த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
முதல் வருகை முதல் தர பதிவு என்று முத்தாய்ப்பாய் கருத்துரை தந்தமைக்கு கண்டு மகிழ்ச்சி இதைவிட வேறென்ன வேண்டும் ? நன்றி நண்பரே...
நீக்குஅற்புதமான கற்பனை. கற்பனையாக இருந்தாலும் மனதைத் தொட்டு உலுக்கியது.
பதிலளிநீக்குவருக ஐயா தங்களின் கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது.
நீக்குநெகிழ்த்தியது.
பதிலளிநீக்குஓவியம் அற்புதம்.
கருத்துரைக்கு நன்றி நண்பரே..
நீக்குஇனிமே தான் தோற்கப் போகிறார்...
பதிலளிநீக்குஇனி தோற்பதற்க்கு என்ன இருக்கிறது ஜி ?
நீக்குநகைச்சுவையாக எழுதி எங்களை வேற்று உலகிற்கு அழைத்துச் செல்லும் தாங்கள் இப்பதிவின் மூலம் நெகிழவைத்துவிட்டீர்கள். வாழ்க்கையின் யதார்த்தமான நிலையைப் படிக்கும்போது சற்று வேதனையே. என்ன செய்வது? உண்மை நிலை தற்போது இவ்வாறே உள்ளதே.இவ்வாறான சிந்தனையைத் தூண்டிய திருமதி மனோ சாமிநாதத்தின் ஓவியத்திறமைக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுனைவரின் கருத்துரை மகிழ்ச்சியளிக்கின்றது இதை நான் எழுதியே 2 வருடமாகி விட்டது கடந்த வருடம்தான் சகோவிடம் ஓவியம் கேட்டிருந்தேன் அதன் தாமதமே பதிவின் தாமதம் எனக்கு ஓவியம் எப்படி வேண்டுமோ அதைச் சொல்லியிருந்தபடியே வரைந்து தந்து விட்டார்கள் நான் சொல்ல மறந்தது இருவரும் முடிவில் இறந்து விடுவார்கள் என்பதே ஆனாலும் அதை அவர்களே சரியானபடி வரைந்து விட்டார்கள் விஸ்தாரமான கருத்துரை அளித்த முனைவருக்கு நன்றி.
நீக்குமனதை நெகிழ வைத்த பதிவு. இது போன்று உண்மையில் நடக்கிறது என்பதுதான் வேதனை. சோகத்தை ஓவியத்தில் வடித்த திருமதி மனோ சாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருக நண்பரே சமூக அவலம் எனது மனதை காயப்படுத்தியதின் விளைவே இந்தப்பதிவு வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குபல இடங்களிலும் நிகழ்கின்ற நிதர்சன உண்மைகள் பதிவாக. பாராட்டுக்கள் .திருமதி மனொ சாமிநாதனுக்கும் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஆம் ஐயா உண்மையில் சம்பவங்கள் இப்படித்தானே... நடக்கிறது பாராட்டுகளுக்கு நன்றி ஐயா.
நீக்குஇங்கே - குவைத்தில் காலை 5.30..
பதிலளிநீக்குவிடியற்காலைப் பொழுதில் - மனம் பரிதவித்து விட்டது..
அன்பின் ஜி அதிகாலையில் மனது காயம் பட்டு விட்டதோ... யதார்த்த நிகழ்வுகள்தானே... ஜி வருகைக்கு நன்றி.
நீக்குமனதை பாதிக்க வைத்து விட்டீர்கள் ...தாய்மையை வெளிக்காட்டும் பதிவு
பதிலளிநீக்குஇந்தப்பதிவு தங்களின் மனதை பாதித்து விட்டது என்றால் எனக்கு சந்தோஷமே.. காரணம் இது எனது எழுத்துக்கு கிடைத்த வெற்றி ஒரு எழுத்தாளனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும் ?
நீக்கு//தாய்மையை வெளிக்காட்டும் பதிவு//
மிகச்சரியாக உணர்ந்து குறிப்பிட்டமைக்கு நன்றி சகோ.
ஓவியம் மட்டும் ஆயிரம் உணர்வுகளை உள்ளடக்கியது. கண் இமைக்க மறந்தேன் காலங்கள் நகர்ந்ததை நினைத்து... மச்சானுக்கு நன்றிகள் சமர்ப்பணம்.
பதிலளிநீக்குஇந்திய எல்லையில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் தருணத்திலும் எனது பதிவை படித்து கருத்திட்ட மாப்பிள்ளைக்கு நன்றி.
நீக்குஅருமை, அருமை நண்பரே,
பதிலளிநீக்குகதைக்கு பொருத்தமான படம். மேலும் மெருகூட்டுகிறது.
த ம 7
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே...
நீக்குமனதை பாதித்து,கண்களில் கண்ணீர் வரவைத்துவிட்டது கதை. அருமை.
பதிலளிநீக்குமிகவும் அழகாக ஓவியத்தை வரைந்து கொடுத்த மனோஅக்காவிற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அந்தக்கண்ணீர் எனது எழுத்துக்கு கிடைத்த பரிசு வருகைக்கு நன்றி சகோ.
நீக்குபெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு!
பதிலளிநீக்குயதார்த்தம்
த ம 8
ஆம் ஐயா சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.
நீக்குமனதை நெகிழ வைத்து விட்டது சகோ. சோகத்தை ஓவியமாக வரைந்த மனோ அக்காவுக்கு வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ இடையில் பதிவுகள் விடுபடுகிறதே...
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
எழுதியதை படித்த போது மனம் நெகிழ்ந்து விட்டேன்... ஒவியம் மற்று வீடியோ எல்லாம் அருமையாக உள்ளது த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் தங்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குமனதை கனக்கச் செய்துவிட்டீர்கள் நண்பரே
பதிலளிநீக்குதாங்கள் எழுதியது வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம்
இன்று பல்வேறு இல்லங்களில் அரங்கேறும் காட்சி இதுதான்
நன்றி நண்பரே
தம +1
வருக நண்பரே இந்த அரங்கேற்றம் சமூக அவலம்தானே... விரிவாக அலசி கருத்துரை தந்தமைக்கு நன்றி.
நீக்குஇன்றைய வாழ்க்கையில் இது அனேக வீடுகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது. அதை அழகாய் எழுத்தில் பிரதிபலித்துக்காட்டியிருக்கிறீர்கள்! மறக்காமல் உங்கள் பெற்றோரின் பெயரையே இந்தத் தம்பதிக்கும் கதைக்கும் தலைப்பாக சூட்டியிருக்கிறீர்கள்! இனிய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎன் ஓவியத்தை இங்கே வெளியிட்டிருப்பதற்கு என் அன்பு நன்றி! பாராட்டியிருக்கும் அனைத்துள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
வாங்க சகோ அழகாக கருத்துரை தந்தமைக்கு நன்றி எனது பெற்றோரின் பெயரை சிறிய அளவில் மறைமுகமாக புகுத்தினேன் அதை குறிப்பிட்டமைக்கு நன்றி.
நீக்குநெகிழவைத்த பகிர்வு! ஓவியமும் அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குஅழகான ஓவியம். ஓவியத்திற்கேற்ற அருமையான கதை. படிக்க படிக்க நெஞ்சம் கனக்க, கண்களில் கண்ணீர் மழை.! வாழ்வின் நிசர்சனங்களை படிப்பித்த கதை உண்மையிலேயே மனதை உருக்கி விட்டது சகோதரரே.! எல்லோருமே இந்த தம்பதியரை போல மரணத்திலும் இணைய முடியுமா.? கொடுத்து வைத்தவர்கள். காணொளிப் பாடலும் கதைக்கு ஒத்து வருகிறது. அருமை.
ஓவியம் வரைந்த சகோதரிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வாருங்கள் சகோ ‘’கண்ணீர் மழை’’ இந்த வார்த்தைகள் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது விரிவான கருத்துரை தந்தமை கண்டு மகிழ்ச்சி.
நீக்குபடம் அருமை !ஒரு உறுத்தல் ,மீனாம்பதி உங்களின் பெற்றோர்கள் அல்லவா ?காணொளியில்'உன் கண்ணில் நீர் வழிந்தால் 'பாடலைசு சேர்த்திருந்தால் பொறுத்தமாய் இருந்திருக்கும் :)
பதிலளிநீக்குவாங்க ஜி தாங்கள் சொன்னதும் பொருத்தமான பாடல்தான்
நீக்குஎனது பெற்றோரின் பெயர் கணபதி – மீனாம்பாள்.
இந்த பதிவின் தம்பதியினர் பெயர் சபாபதி – மீனாட்சி
வருகைக்கு நன்றி ஜி.
உள்ளம் உருக வைத்த பதிவு! வேறென்ன சொல்ல!
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கு நன்றி.
நீக்குhi sir, ungaludan pesiyathil mikka sonthosham.
பதிலளிநீக்குenathu skype id
m9441226627
நன்றி நண்பரே...
நீக்குவணக்கம் கில்லர்ஜி !
பதிலளிநீக்குஓவியத்துக்காய் எழுதிய கதையா இல்லை கதைக்காகவே வரைந்த ஓவியமா
இரண்டுக்கும் அப்படி ஒரு பொருத்தம் இரண்டையும் இனிமையாய் தத்ரூபமாய் செதுக்கிய இருவருக்கும் வாழ்த்துக்கள் ..நெஞ்சம் நிறைந்த பதிவு காலத்தைக் கண்ணீரோடு காட்டியது ...........வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு
வருக கவிஞரே எழுதிய கதைக்கு கேட்டபடியே கிடைத்தது ஓவியம் வருகைக்கு நன்றி.
நீக்குகதை உள்ளத்தை தொட்டுவிட்டது. பெரியோர்கள் சொல்லிவைத்த நெறிமுறைகளை காலப் போக்கில் காற்றில் பறக்க விட்டு விட்டோம் என்பது வேதனைக்குரிய விஷயம். நீ இயலாத நிலையில் இருந்த போது கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் காப்பாற்றியவர்கள் இயலாத நிலையில் இருக்கும் பொது நீ கைவிடாதே, கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள். இந்த பதிவுக்கு பொருத்தமான பாடல் இது தான்:
பதிலளிநீக்குஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா......
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒருராணி...........
ஒரே ஒருராணி பெற்றால் ஒன்பது பிள்ளை, அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை.........உருப்படி இல்லை..........
சொந்தம் என்று வந்ததல்லாம் சொந்தமும் இல்லை - ஒரு துணை இல்லாமல் வந்ததல்லாம் பாரமும் இல்லை
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா............
தம்பி நன்றி கேட்ட மகனை விட நாய்கள் மேலடா...........நாய்கள் மேலடா...........
படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்
படுக்கையிலே முள்ளே வைத்து பார்த்து மகிழ்ந்தான்
பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான்
பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான் - ஒருவன்
பெண்டாட்டியின் கால்கலுக்கு காவல் இருந்தான்.
வருக நண்பரே அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி.
நீக்குஅருமையான உள்ளார்த்தமான கதை. மனதை நெகிழ்த்தியது. இன்றும் இது நடந்து கொண்டுதானே இருக்கின்றது....
பதிலளிநீக்குஅதை அப்படியே ஓவியத்தில் தந்திருக்கும் சகோதரி மனோ சுவாமிநாதன் அவர்களுக்கு பாராட்டுகள், மனமார்ந்த வாழ்த்துகள்~! அருமையான ஓவியம் தத்ரூபமான ஓவியம் நீங்கள் கதை எழுதியிருக்கா விட்டாலும் பல கதைகள் சொல்லும் ஒரு ஓவியம்! குடோஸ் டு போத் ஆஃப் யு!!!!!!!!
தில்லை அகத்தாரின் தாமதமான வருகைக்கும், பாராட்டிற்க்கும் நன்றி.
நீக்குசுத்தமான நிமிடங்களை சறுக்கவிட்டுவிட்டால் இத்தரனியின் மாமந்தையில் வித்தகனாக இயலாது சத்துவமாக இப்படி தான் ஆகிடுமோ ?
பதிலளிநீக்குசுருக்கமான கருத்துக்களுடன்
டிபிரிட்டோ தமிழன்
டெராபைட்டார் என்கிற ”டெராபைட்” தாமஸ்
வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குஓவியத்தை பார்த்தபின் பதிவினை படிக்கும் பொழுது ஒருவித கணம் மனதில் அப்பிக்கொள்கிறது... நன்றி!!! பதிவிற்கும் படத்திற்கும்!!!
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...
நீக்குநான் பார்த்து இருக்கிறேன் உனக்கு முன் நான் போகனும் என்று, இல்லை உங்களுக்கு முன் நான் போகனும் என்று, ஆனால் அந்தம்மாள் சொல்லுவாங்க, நான் முன்னாடி போக கூடாது, பாவம் அவர் கஷ்டப்படுவார், அவர்களிடம் அகப்பட்டு, எதுவும் கேட்க தயங்கி, இப்படி எல்லாம் அவரால் முடியாது, ஆனால் நான் ஏதோ சமாளித்து இருந்து விடுவேன் என்று,,,,,,,,,
பதிலளிநீக்குஅதுபோலவே அவர் முதலில் போனார், அந்தம்மா 3 நாள் கழித்து பின்னால் போனார், ஊரே அழுதது,,,,,,,,,
போனபின் தன் தாய் தந்தையின் பாசத்தை சிலாகித்தான் அவன்,ஒரே பிள்ளையாய் இருந்தும்,
என் நினைவுகள் பின்னோக்கிய பதிவு அருமை சகோ,
ஓவியம் அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
தங்களின் நினைவோட்டம் வேதனையானது சகோ...
நீக்குஅன்புக் கில்லர்,
பதிலளிநீக்குஎங்கே என் பின்பொழிப்புரை ஏன் சுருக்கமாக எழுதினாலும் தவறா ?
ஈடுஇல்லாப் பெருமை கொண்ட இமயமே அதன் அறிவுச்சுடரின் நிகராக கொண்ட மாபெரும் அறிஞர்களாக தன் மானக்கர்களை மாற்றிய மாற்றிக்கொண்டிருக்கும் டிபிரிட்டோ பள்ளியின் தன்மான செல்வன்
“டெராபைட்” தாமஸ்
மீள் வருகைக்கு நன்றி.
நீக்குநடை முறையில் நடக்கிற நிதர்சனமான கதை. அழகாய் சொல்லிச் சென்று இருக்கிறீர்கள்.மனதை நெகிழச் செய்கிறது.
பதிலளிநீக்குஓவியத்தை மனோ அக்கா அருமையாக வரைந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
கதையும் ஓவியமும்ம் அருமை சகோ. பல திறமைகளுக்கு வாழ்த்துக்கள் சகோ
தம 19
விரிவான கருத்துரைக்கு நன்றி சகோ...
நீக்குபிள்ளையை பெத்தால் கண்ணீரு...தென்னையை பெத்தா இளநீருன்னு அன்னிக்கே பாடிவிட்டது நிணைவுக்கு வருகிறது.நண்பரே...
பதிலளிநீக்குவருக நண்பரே கருத்துரைக்கு நன்றி.
நீக்கு