இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 08, 2015

Fighting Fish.

 
ஒரு முறை பொழுது போகாமல் அபுதாபியில் ஹம்தான் வீதியில் நடந்து போய்க்கொண்டு இருந்தேன் வழியில் வீட்டில் வளர்க்கும் மீன் கடையை காணவும் சரி நண்பரின் வீட்டில் மீன் தொட்டி இருக்கிறதே.. அவரது வீட்டுக்கு ஏதாவது புதிய மாடல் இருந்தால் வாங்கி கொடுப்போமே என உள்ளே நுளைந்தேன் எல்லா வகை மீன்களுமே நண்பர் வீட்டில் இருந்தது போலவே தோன்றிற்று உள்ளே வியாபாரத்துக்கு இருந்தவர்கள் இரண்டு எஜிப்தியர்கள் (EGYPT) அவர்களின் தாய்மொழி அரபு என்றாலும் நான் ஆங்கிலத்தில் பேசினேன். ஒரு இடத்தில் மேலே புகைப்படத்தில் உள்ள சிறிய டப்பாக்களில் ஒரு மீன் மட்டும் போட்டு இருந்தார்கள்
இது மட்டும் ஏன் ? ஒவ்வொரு டப்பாவிலும் ஒவ்வொரு மீனாக இருக்கு ? ஒன்றாக தொட்டியில் போடக்கூடாதா ?
இது பைட்டிங் ஃபிஷ் சிங்கிளாகத்தான் போடனும், டஃபுல்ஸ் போட்டால் ? பைட் போடும்.
டஃபுல்ஸ் பைட் செய்தால்தானே... உனக்கு ட்ரிபுஃல்ஸ் கிடைக்கும் வியாபாரம் பெருகும், இப்படி பிரித்து வைப்பது நீ செய்யும் பாவம் இல்லையா ?
? ? ?
என்னை ஒரு மா3யாக மேலிருந்து கீழாக பார்த்தார்கள்... ஒன்றும் சொல்லவில்லை ஒரு தொட்டியில் ஒரேயொரு மீன் மட்டும் நீந்திக்கொண்டு இருந்தது நான் கேட்டேன்.
இது என்ன ? புதுசா இருக்கு.
இது அரவாண் இது ராசிக்காக வளர்ப்பாங்க, இது இருந்தால் இருக்குமிடத்தில் செல்வம் கொழிக்கும்.
அப்படியா ? அப்ப, ஏன் ? விற்கிறே....
? ? ?
நான் அப்படியே... பார்த்துக்கொண்டே வந்தேன் ஒரு தொட்டியில் குட்டி குட்டியாக ஆமைகள் இருந்தன... நான் கேட்டேன்.
வியாபாரம் எப்படி ? போகுது.
சுமார்தான்.
இப்படி ஆமையை விற்றால் ? வியாபாரம் எப்படி ? சூடு புடிக்கும் முதலில் இதையெல்லாம் நிறுத்து.
ஏன் ?
ஆமை புகுந்த இடம் விளங்காது அதனால்தான்.
யாரு ? சொன்னா... ?
எங்க நாட்டில் இப்படி பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அது உங்கள் நாட்டுக்கு எங்க நாட்டுக்கு அப்படியில்லை, இந்த ஆமைதான் இப்பக் கொஞ்சம் வியாபாரம் ஓடுது...
இல்லை ஆமை விற்கிறதை நிறுத்தினால் ? உனக்கு நல்லா வியாபாரம் நடக்கும்.
இப்ப நீ எதற்க்கு ? வந்தே...
மீன் வாங்க..
கதவு திறந்துதான் இருக்கு இடத்தை காலி பண்ணு...
ஹும் நல்லதுக்கு காலம் இல்லை இதற்க்கு மேல் நின்றால் பாரதிராஜாவின் முதல் மரியாதை கிடைக்காது என வெளியேறும்போது... மற்றவன் இவணிடம் சொல்லிக்கொண்டு இருந்தான் அரபு மொழியில்...
இவணை கண்டவுடன் நினைச்சேன் மீன் வாங்குறவனா இல்லை ஆளும், மீசையும்.
வெளியில் வந்த நான் நினைத்துக்கொண்டேன் நல்லவேளை கோட்-ஸூட் போட்டு வந்து இங்கிலீஷுல கேட்டதால மரியாதையா, பதில் சொன்னான் வழக்கம்போல கருப்பு டி - சர்ட் போட்டு வந்து அரபு பேசியிருந்தால் கழுத்தைப்பிடிச்சு வெளியே தள்ளியிருப்பான்.
ஆமா, ஆமை புகுந்த இடம் விளங்காது 80 உண்மையா ? காரணம் அரபிக்காரன் வீட்டில் பெரும்பாலும் ஆமை வளர்க்கின்றான், எல்லா அளவு ஆமைகளும் வளர்க்கிறான், ஆமையை பராமரிக்க வேலைக்கு ஆள் வைத்திருக்கிறான் அவன் மட்டும் செல்வந்தனாக இருக்கிறானே... எப்படி ? நம்மூருல மட்டும் ஆமை புகுந்த வீடும், ஆமீனா புகுந்த வீடும் விளங்காது என்கிறார்கள், அப்படியானால் ? ஆமீனா வேலை பார்ப்பவர் அவரது வீட்டில் நுளையும்போது அவரது மனைவி ஒன்றும் சொல்ல மாட்டாரா ? இது எனக்கு குழப்பமாகவே இருக்கிறது, மேலும் ஆமீனா என்ற பெயரும் வைக்கிறார்களே, இதுவும் எனக்கு குழப்பமாகவே இருக்கு யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.
ஆமா, அரபு மொழியில் ஆமைக்கு பெயர் என்ன ? தெரிந்து கொள்வோமா ?
 ’’ஸுல்ஹஃபாஹ்’’ ஆமை.سلحــفاه
அப்படியென்றால் ? ‘’ஆம’’ என்று அரேபியர்கள் சொல்கிறார்களே இதன் அர்த்தம் என்ன ?
 ’’ஆம’’ குருடன். أعــــمى
இன்றைக்கு அரபி படிச்சது போதுமடி பொன்னுத்தாயி.

காணொளி – 1
காணொளி - 2

60 கருத்துகள்:

  1. காணொளிகள் அருமை.

    எந்த ஊர் கடற்கரை...இவ்வளவு மீன்கள் வந்து கரை ஒதுங்குகின்றனவே.
    எப்பவும் இப்படித்தானே..? இல்லை கடலில் ஏதாவது..காரணத்தால் ஒதுங்குகின்றனவா..?

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் முதல் வருகைக்கு நன்றி மீன்கள் ஒதுங்குவது எந்த நாடென்ற விபரம் கிடைக்கவில்லை நான் நிற்கும் இடம் U.A.E அஜ்மான்.

      தினம் இப்படி ஒதுங்குனா ? மீனவர்கள் பிழைப்பு என்னாவது ? கடைசியாக கிடைத்த தகவல் நடுக்கடலில் சண்டை போட்ட மீனவர்கள் கடலில் தீ வைத்து விட்டார்களாம் தீக்கு பயந்து கரைக்கு ஒதுங்கிய மீனை மக்கள் பிடித்துப்போய் தீயில் சுட்டுத்தின்றது அதைவிடக் கொடுமை.

      நீக்கு
  2. நண்பர்ஜீ...

    ஆமை என்பது மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் ஒரு உயிரினம்... அது ஒரு வீட்டினுள் நுழைய நிறைய நேரம் தேவைப்படும் ! அப்படிப்பட்ட ஒரு மந்தமான உயிரினம் வீட்டினுள் நுழையும் அளவுக்கு வீடு கவனிப்பாரற்று கிடந்தால் விளங்குமா ?!...

    அதே போல ஆமினா என்பவர் சொத்தினை பரிமுதல் செய்வதற்காக நீதிமன்றத்தால் அனுப்பப்படும் அரசு அதிகாரி ! அவர் தொழில் ரீதியாய் ஒரு வீட்டினுள் நுழைவது அந்த சொத்தை சீல் வைக்க !!!

    எதுகை மோனையையும் தாண்டி, " ஆமை புகுந்த வீடும் ஆமினா புகுந்த வீடும் விளங்காது " என்ற அனுபவ மொழியின் அர்த்தம் இதுதான் !

    சரி... சென்ற வருடம் ஊருக்கு சென்ற போது, வாஸ்து மீன் என்று ஒன்று பிரபலமாகியிருப்பதை கண்டு நொந்தேன் ! அந்த மீனை வீட்டு வாசலில் தொட்டிலில் வைத்தால் அதிர்ஷ்டம் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய்கள் விலை !

    எங்கள் ஊரில் உழைப்பால் உயர்ந்த மிக ஆச்சாரியமான ஒரு ஹோட்டல் முதலாளி, தனது சைவ ஹோட்டலில் கூட அந்த மீனை வளர்க்கிறார் !...

    என்னத்த சொல்ல செல்லத்தாயி ?!....

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபாரிஸிலிருந்து... முயல் வேகத்தில் வந்து ஆமையைப் பற்றிய விடயங்களை இந்த (கில்லர்ஜி) அறியாமைக்கு அறியத்தந்த நண்பா விளக்கவுரைக்கு ஈபிள் உயர நன்றிகள்.

      உண்மைதான் நண்பரே கோவையில் ஒரு பைக் மெக்கானிக் ஷாப் அதனுள் என்ன இருக்கும் 80 உங்களுக்கே தெரியும் அங்கு மீன் தொட்டியில் அரவாண் நீந்திக்கொண்டு இருந்தது அதன் விலை கேட்டேன் 30 ஆயிரம் ரூபாய் என்றார்கள் அந்த ஒர்க் ஷாப்புக்கு திருட வருபவனுக்கு ஒன்றுமே கிடைக்காது ஆனால் மீன் ஒன்றே போதுமே...

      நீக்கு
  3. ரகசியமா வாக்கு மட்டும் போடலாம்னு பாத்தா வாக்கு பொட்டிய காணலியே
    எங்க ஊருக்கு வாரதா சொல்லி இருந்தீக, ஆனா வரலை.
    சில பேர் சொல்லாம கொள்ளாம நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம், மா'நிலம்' விட்டு மா'நிலம்' , நகரம் விட்டு நகரம், ஏரியா விட்டு ஏரியா, தெரு விட்டு தெரு, வீடு விட்டு வீடு, இப்டில்லாம் வந்திருந்தாக. உம்மை உண்மையாவே அய்யா காமராசர் போலன்னு நெனைச்சேன். ஏன் வராம ஏமாத்துனீ க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருவேன் நண்பா நிச்சயம் சந்திப்பேன் என்னையும் பிறரைப்போல நாடு வி(ற்)ட்டு நாடு பறக்க மா’’நிலம்’’ விற்று பறக்கும் மோ(ச)டிப் பேர்வழி என்று நினைத்து விட்டீர்களே நண்பா.... மனதுக்கு வேதனையாக இருக்கிறது...

      தங்களது வாக்கை விட தங்களின் கருத்துரையை மிகவும் நேசிக்கின்றேன் (அதற்காக வாக்கு போடமல் இருங்கள் என்று அர்த்தமல்ல) வாக்கு விழுந்து விட்டதே... வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  4. கிஷ்கிந்தா கில்லர்ஜி அவர்களே!
    கிங் பிஷ்ஷர் மேட்டரை இப்படியா லீக் அவுட் செய்வது.
    நம்ம நாட்டு ஆமை விவகாரத்தைத்தான் சொன்னேன் நண்பரே!
    நம்ம நாட்டில் பெரும் அளவில் பொறா(ஆ)மை அல்லவா விலையில்லாமல் விற்கபடுகிறது.
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையாக சொன்னீர்கள் இதில் அரேபியர்களுக்கு பொறாமை கண்டிப்பாக கிடையாது அதை நான் உறுதியாக சொல்வேன் ஊவா நஸீஃப் (அவனது பிராப்தம்) என்று அழகாக சொல்வார்கள்.

      நீக்கு
  5. எங்களுக்கும் பொழுது போச்சு.

    பதிலளிநீக்கு
  6. சாமானியன் சாம் பதில்களையும் ரசித்தேன்.

    வழக்கம்போல உங்கள் பதிவு ரசனை. சுலபமாக ஸுல்ஹபாஹ் பெயர் கற்றுக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கு நன்றி அரபு இனியும் தொடர்ந்து படிக்கலாம்.

      நீக்கு
  7. காணொளியை ரசித்தேன். அருமை. கடைக்காரர் உங்களிடம் மாட்டிக்கொண்டாரா அல்லது நீங்கள் கடைக்காரரிடம் மாட்டிக்கொண்டீர்களா என நினைத்துப் பார்க்கிறேன். எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே விடாக்கண்டனும், கொடக்கண்டனும் என்ற நிலைதான்.

      நீக்கு
  8. ஆமை பற்றிய நண்பர் சாமானியனின் கருத்துடன் ஒத்துப் போகின்றேன் நண்பரே
    மற்றபடி அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒருவிதமான மூட நம்பிக்கைதான்
    உழைப்பே உயர்வுதரும்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே உழைப்பே உயர்வு தரும் அருமை உழைக்காதவன் சோம்பேறி அவன்தான் அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டும் உழைப்பாளிக்கு அடுத்தவன் பணம் தேவையில்லை.

      நீக்கு
  9. ‘கேள்வியின் நாயகன் என்ற பட்டம் உங்களுக்கு பொருந்தும். காணொளிகளை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும் பட்டத்திற்க்கும் நன்றி.

      நீக்கு
  10. அப்போ ஆமை கதை.மீன்கதை சொன்னதெல்லாம் பொன்னுதாயிக்குத்தானா.....!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பொன்னுத்தாயிக்கு மட்டுமல்ல, பொன்னுச்சாமிகளுக்கும் சேர்த்துதான்.

      நீக்கு
  11. உண்மையான பழமொழி
    ஆம்பி பூத்த வீடு உருப்படாது...

    ஆம்பி என்பது பூஞ்சை, காளன்..
    சூரிய வெளிச்சம் வராத வீட்டில் பூஞ்சை பூக்கும்...
    அந்த வீட்டில் நோய் குடிஇருக்கும்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் Jose Robinson அவர்களின் முதல் வருகைக்கும், விளக்கவுரைக்கும் நன்றி.

      நீக்கு
  12. அன்பின் ஜி..

    அமீனா என்ற சொல்லுக்கு -
    நல்லொழுக்கம் வாய்ந்த - நம்பத் தகுந்த - பாதுகாக்கப் பெற்ற -
    என்றெல்லாம் அர்த்தம் கூறப்படுகின்றது.

    அரசு அல்லது நீதியின் பொருட்டு - முன்சென்று நடவடிக்கை எடுப்பவன்
    இப்படித்தானே இருக்க வேண்டும்!..

    நல்லொழுக்கம் வாய்ந்த - நம்பத் தகுந்த - எனும் அர்த்தங்களுக்காக -
    அமீன் (ஆண்) என்றும் ஆமீனா (பெண்) என்றும் பெயர்கள் சூட்டப்படுகின்றன..

    மற்றபடி - ஆமை புகுந்த வீடு என்பது புரட்டு..
    கல்லாமை புகுந்த வீடு தான் உருப்படாது..

    தவிர - பதிவில் குறிப்பிட்டுள்ள வாசகம் -
    எங்கேயோ கிடந்த வேலையற்ற பேர்வழிகளால் சொல்லப்பட்டது..
    பழமொழியெல்லாம் அல்ல!..

    கருத்துரைக்கு மாற்றாக மற்றொரு கருத்து ஒன்றை தங்களுக்கு பிரத்யேகமாக அனுப்புகின்றேன்.. கண்டு கொள்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இவ்வளவு விபரங்கள் கிடைக்குமென நான் நினைக்கவில்லை மேலும் விபரங்கள் மின்னஞ்சலில் தந்தமைக்கும் நன்றி ஜி

      நீக்கு
  13. காணொளி கண்டேன்!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    ஜி
    நல்ல கேள்விகள் கேட்டு எங்களை யும் அசத்தி விட்டீ்கள் வீடியோநன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 12

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  15. விவேக் ஒரு படத்தில் ஆமை புகுந்த வீடு என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். கல்லாமை, முயலாமை, இயலாமை....... ETC., போன்ற ஆமைகள் புகுந்த வீடு விளங்காது என்று.


    அமீனா என்றால் கோர்ட்டு நோடீஸ் கொடுப்பவர் தானே? அவர் வீட்டில் நுழைந்தால் வழக்காடு மன்றம் செல்கிறோம் என்று அர்த்தம். ஒரு ஆட்டை மீட்க மந்தை ஆட்டையே விற்று செலவு செய்யும்படி வரும். அதனால் விளங்காது. [இதற்க்கு கொமாரசாமியும், கோமனவள்ளியும் விதி விளக்கு!!]

    பதிலளிநீக்கு
  16. எல்லாம் சரி நண்பரே அதென்ன ? கொமாரசாமியும், கோமணவள்ளி மட்டும் விதிவிலக்கு அவர்கள் இந்தியர் இல்லையோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதிமன்றம் ஏழைகள் நுழைந்தால் அம்போ தான். ஆனால் பணக்காரர்களுக்கு அது எல்லா விதத்திலும் பாதுகாப்பு கொடுக்கும். உதாரணத்துக்கு ஒரு வழக்கில் தீர்ப்பு சாதகமா வராதுன்னு தெரிஞ்சா, வேணுமின்னே கேசை போட்டு இரண்டு மூன்று தலைமுறைக்கு இழுத்தடிக்கலாம், அதுவரைக்கும் தற்போதைய சவுகரியத்தை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். சில சமயம் திறைமையான வக்கீல்கள் இருந்தால் போதும் "நீதி" யும் நமக்கு கிடைக்கும். சில சமயம் கொமாரசாமி மாதிரி நீதி தவறாதவர்கள் கிடைத்தால் இன்னமும் சவுகரியம்தான்!!

      நீக்கு
    2. அவர்கள் மேல் மட்டக் குடிமகன்கள் நண்பரே...
      நாம் மொடாக் குடிமகன் ''கள்'' நண்பரே....
      மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. திரு.ஜெயதேவ் சொல்வதே சரியான விளக்கம். வீட்டினுள் பொறாமை, இயலாமை, முயலாமை, இப்ப்டி கெட்ட விஷயங்கள் உள்புகுந்தால் வீடு விளங்காது என்று அர்த்தம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி தொடர்ந்தால் ? சந்தோஷம்.

      நீக்கு
  18. நான் ரசித்து, சிரித்து, சிந்தித்த பதிவு இது நண்பரே!

    அமீனாவைப் பற்றி நிறைய பேர் சொல்லிவிட்டதால் அதை விட்டு விடுகிறேன். ஆமைக்கு வருகிறேன். ஆமை வளர்த்தால் வீட்டுக்கு ஆகாது என்ற பழமொழி இந்தியாவில் மட்டுமே உண்டு. ஆமை மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லா வன விலங்கு உயிரினகளுக்கும் இப்படி எதாவது ஒரு முதுமொழி இருக்கும்.

    மற்ற நாடுகளில் எல்லாம் விலங்குகளை உணவாக பார்த்த போது இந்தியாவில் மட்டுமே. அவற்றை தெய்வமாக பார்த்தார்கள். கிட்டத்தட்ட எல்லா விலங்குகளுமே ஏதோ ஒரு தெய்வமாக அருள் பாலிக்கிறது. யானை - விநாயகர், பசு - காமதேனு, நாய் - பைரவர், பாம்பு - நாக தேவதை இவை எல்லாம் இந்தியர்கள் விலங்குகள் மீது கொண்ட அன்பைக் காட்டுகிறது.

    ஆமை வளர்த்தால் வீட்டுக்கு ஆகாது, பறவைகளை வளர்த்தால் செல்வம் பறந்துப் போகும், பாம்பை அடித்தால் வஞ்சம் வைத்து பழிவாங்கும் என்பது எல்லாமே மனிதன் அவற்றிற்கு தீங்கிழைக்கக் கூடாது என்பதற்காகதான்.

    ஆமைகள் மிக மெதுவாய் இனப்பெருக்கம் செய்பவை. அதற்கு சாதகமான சூழல் இருந்தால்தான் கூடும். நமது வீடு அதற்கு ஏற்றது அல்ல. அதனால் மனிதன் அவற்றை வளர்த்தால் இனவிருத்தி நடைபெறாது.

    இப்படிப்பட்ட விலங்குகளை எல்லாம் வளர்த்தால் வீட்டுக்கு ஆகாது என்றார்கள். மாடு, ஆடு போன்ற வீட்டு விலங்குகளை செல்வம் என்றார்கள்.

    எனது நண்பர் செந்தில்குமரன், உலகளவில் பிரபலமான ஒரு வனவிலங்கு போட்டோகிராபர். நேஷனல் ஜியாகரபி விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். உலகம் முழுவதும் சென்று படம் எடுத்த அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான்.

    இந்தியர்களைப் போல் விலங்குகளை நேசிக்கும் மனிதர்கள் உலகில் எங்குமே பார்க்க முடியாது என்பார். நமது முன்னோர்களின் பழமொழி ஒவ்வொன்றிலும் மிகப் பெரிய அர்த்தம் உள்ளது.

    த ம 14

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லேட்டாக வந்தாலும் நிறைய விடயங்களை தந்தமைக்கு நன்றி தாங்கள் சொல்வது உண்மையெனில் இந்தியர்கள் அனைவரும் உடனே வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கிறோமோ இல்லையோ ஆமை வளர்த்தாக வேண்டும் நண்பரே

      காரணம் மக்கள் தொகை கூடுவதை உடனே தடுக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம் சரிதானே...

      நீக்கு
    2. நண்பரே,
      எனது கருத்துரை தவறாக புரிந்து கொள்ள வைத்துவிட்டது என்று நினைக்கிறேன். இங்கு நான் வீட்டில் ஆமையை வளர்த்தால் ஆமைகள் தங்களுக்குள் உறவு கொள்ளாது. அதற்கு சாதகமான சூழல் நமது வீடுகளில் இல்லை என்றே சொல்ல வந்தேன். தாங்கள் மனிதனின் இனவிருத்தி என்று புரிந்து கொண்டீர்கள் போல. மனிதன்தான் எப்படிப்பட்ட சூழலிலும் ஒன்றாக கலந்து பிள்ளைக் குட்டிகளை பெற்று விடுகிறானே..?

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே நான் சரியாகத்தான் புரிந்து கொண்டேன் மக்கள் அதை தோஷம் 80 போல் ஒதுக்குவதால் தமாஷுக்காக எனது பதிவையும், தங்களது தற்போதைய பதிவையும் முடிச்சுப்போட்டேன் வேறொன்றுமில்லை.

      நீக்கு
  19. தவக்களையை பார்க்கவே சகிக்கலே ,அதிலும் கலர் கலராய் தொட்டியில் வளர்ப்பதா ?...கேட்டால் இதையும் வாஸ்து என்பார்கள் ,எப்படியெல்லாம் மூட நம்பிக்கை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவக்களையை மட்டுமல்ல நிறம் மாறும் பச்சோந்தியைக்கூட வர்ணம் பூசி இதை பூஜித்தால் ரெட்டைக்குழந்தை பிறக்கும் என்று விற்றால் அதையும் வாங்குவதற்கு மக்கள் உண்டு பூமியிலே...

      நீக்கு
  20. இன்றைய தங்கள் வாயில் இல்லை வலையில் மீன் மாட்டிக்கொண்டது, அது மட்டுமா? ஆமை,,,,,,,,,,, நானும் எங்கோ கோயிலுக்கு போன போது ஆமை உருவம் வாங்கி வந்து சாமி அறையில் வைத்தேன், வந்தது பாருங்கள் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் சாமி, அப்பா,,,,,,,,, அருமை வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கிட்டே சில நேரங்களில சிங்கமே மாட்டும்போது மீன் என்ன ? ஆமை என்ன ? ஆமை உருவத்தால சாமி வந்துச்சா ? இது புதுசாவுல இருக்கு.. வருகைக்கு நன்றி டீச்சர்.

      நீக்கு
  21. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது எதற்கு என்றால், ஆமை பல வருடங்கள் உயிர்வாழும். அதன் சுவாசம் மிக மெதுவாகத்தான் இருக்கும். 250, 300 வருடங்கள் வாழும் சக்தி வாய்ந்தது. நம்மள மாதிரி மூச்சு வாங்கிக்கிட்டு இருக்காது. 1 நிமிஷத்துல நாமஅ 15 ற்கு மேல் மூச்சு விடுவோம். அதை 8, 7 என்று கொண்டு வந்து நன்றாக இழுத்து விட்டால் டென்ஷன் இல்லாமல் நிறைய வருடம் வாழலாம் அதற்குத்தான்மூச்சுப்பயிற்சி, எல்லாம் கற்றுத் தரப்படுகிறது பழையகால்த்தில் ரிஷிகள் அப்படித்தான் வாழ்ந்தார்கள் என்றும் சொல்லுவார்கல். ஸோ அப்படி அதிக நாள் வாழற ஒண்ணை நம்ம வீட்டுல வளர்க்க முடியுமா? அது உசிர விடறதுக்கு முன்னாடி நாம விட்டுருவோம்.... அதான் சொல்லிருப்பாங்க.....

    ஆமினா தெரியாதுங்க. நாங்க ரொம்ப நல்லவங்க.....

    பொன்னுத்தாயி இந்த மீசைக்காரர்கிட்ட சொல்லு தாயி எங்களுக்குச் சத்தியமா ஆமினா யாருன்னு தெரியாதுன்னு.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க அதாவது வீட்ல ஆமை வளர்த்தால் அது நம்மைவிட கூடுதல் காலம் வாழுது அதனாலே மனுசனுக்கு ஆமை மீது பொறாமை அப்படித்தானே... கெட்ட எண்ணங்கள் இது.

      அப்படினா ஆமீனவை தெரிஞ்சவங்க கெட்டவங்க அப்படித்தானே அர்த்தம் ?
      பொன்னுத்தாயியை பொன்னுச்சாமிக்கிட்டே அனுப்பி வைங்க...

      நீக்கு
  22. மற்றொரு கருத்து ஆமை பற்றி...அவை வாழ்வதற்கான சூழல் நம் வீடுகள் கிடையாது.....அதுகளும் பாவம் இல்ல குடும்பம் குட்டினு வாழ வேண்டாமா சொல்லு பொன்னுத்தாயி இந்த மீசை காரர்கிட்ட......ஒண்ணு தெரியும்மா ஸ்டார் டர்ட்டில் என்ற ஒரு வகை ஆமை இந்தியாவில் நிறைய இருக்கின்றன என்று அது தாய்லாந்திற்கு கடத்தப்பட்டன அங்கு இந்த வகை ஆமைக்கறி மிகவும் ஃபேமஸ் என்பதற்காக....இப்போது கண்காணிப்பு இருந்தாலும் கடத்தப்படுகின்றன......நம் நாட்டில் பறவைகல் விலங்குகள் எல்லாமே தெய்வமாகக் கொண்டாடப்படுவதால், (நம்ம ராம்நாராயணன் படங்கள் போல) அப்படியும் இருக்கலாம்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை நம்ம மனுஷங்க... சில மிருகம், பறவைகளை தெய்வமாக வழிபட்டான் இல்லையெனில் அதுவும் தொங்கும் கறிக்கடைகளில்...

      நீக்கு
  23. உங்கள் இந்த பதிவு சிரிக்க,சிந்திக்க வைத்துவிட்டது. ஒரு பழமொழியின் கருத்தை அறியக்கூடியதாக தகவல்கள் கிடைத்திருக்கு.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தாமதமாக வந்தாலும் விடுபட்ட பதிவுகளையும் படித்து கருத்துரை இடுவதற்க்கு நன்றி விடயங்கள் பல அறிந்தமை கண்டு சந்தோஷம்.

      நீக்கு
  24. எப்படியெல்லாம் இந்த மனுசன் யோசிச்சி பதிவிடுகிறார்..பா.பொன்னத்தாயி.
    காணொளியைத்தான் பார்க்க முடியவில்லை என் கணினியில் ஏதோ கோளாறு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க இப்படியெல்லாம் யோசித்து ஒரு பதிவைப்போட்டு உங்களிடம் ஓட்டு வாங்குவதற்க்குள் தலையில் இருக்கிற 3 ½ கிலோ மூளையும் கரைஞ்சு ஓடிரும் போல....

      நீக்கு
  25. இரு முறை வந்தும் கருத்திடாமல் போய்விட்டேன் ஒரு முறை காணொளிகளில் உங்கள் கை வண்ணம் இருக்கும் என்று சொன்னதாக நினைவு. கடற்கரையில் ஒதுங்கும் மீன்களில் உங்கள் கைவண்ணம் இருக்கிறதா. ஒரு வேளை அந்த மீன்கள் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டவையாய் இருக்கும் அவற்றை உண்பது சரியா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மீன்களைப்பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை ஆனால் மக்கள் பிடித்து சமைத்து உண்டது உண்மை எந்த நாடு என்பதின் விபரம் இல்லை நான் நிற்பது அஜ்மான் என்ற இடம் மற்றவை கடைகளிலும் நண்பரின் வீட்டிலும் எடுத்தது.

      நீக்கு
  26. ஆமை புகுந்த வீடு என்பது திணிக்கப்பட்ட பழமொழி இன்னும் பல கோவில்களில் ஆமை சிற்பங்களைக் காணலாம்.
    தமிழன் ஒருகாலத்தில் ஆமையை தெய்வமாக வைத்திருந்தான்.
    நிறய தகவல்கள் இருக்கின்றன
    தம +

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே.

    அழகான உரையாடல். (நடுநடுவே தங்களிடமிருந்து அரபியும் கற்றுக் கொள்ளலாம்.) கடைசியில் வளர்க்க வேறு ஏதாவது கடையில் மீன்கள் வாங்கினீர்களா, இல்லையா.? பழமொழி கேள்விப் பட்டிருக்கிறேன். தங்கள் பதிவையும், அதற்கு வந்த கருத்துக்களையும் படித்து பல விடயங்கள் அறிந்து கொண்டேன்.மீன்கள் ஆமைகள் வளர்ப்பது ராசி என சுவாரஸ்யமான தகவல்களுடன் இருந்தது தங்களின் இந்தப் பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.

    என் தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீன் என்னத்த வாங்க அதான் எனக்கு மீசை சரியில்லைனு சொல்லிட்டானே... அதோட பொடி நடையா வீட்டுக்கு போயிட்டேன்...

      நீக்கு
  28. பெயரில்லா6/11/2015 11:15 AM

    நல்ல தத்துவப் பிவு போல விளக்கங்கள்
    ஆனால் நகைச்சுவை தான்...
    நன்று....

    பதிலளிநீக்கு