இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

சென்னையில், ஒருநாள்

பெருந்தகை ஐயா புலவர் திரு. சா. இராமாநுசம் அவர்களுடன் நான்தாங்கோ கில்லர்ஜி.
என்னை சென்னைக்கு வரவழைத்த புலவரின் வரிகள்.


புகைப்படத்தை பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.


அன்பு நண்பர்களே வணக்கம்...
சிங்காரச் சென்னையில் ஒருநாள் அது திருநாளே... ஆம் ஐயா புலவர் திரு. சா. இராமாநுசம் அவர்கள் தனது கருத்துரையில் சொன்ன ஒரேயொரு வரிகளே என்னை சென்னை நோக்கி பயணிக்க வைத்தது அதற்காக பிற பதிவர்கள் தவறாக நினைக்க வேண்டாம் தில்லை அகத்து நிறுவனர்களில் ஒருவரான சகோ திருமதி. கீதா அவர்களிடம் சொன்னேன் சொன்னதுதான் தாமதம் மற்ற அனைத்து வேலைகளையும் தெளிவாக அமைத்து அனைத்து சென்னைப் பதிவர்களிடமும் சொல்லி விட்டார்கள்.


திரு. ஆரூர் மூனா அவர்கள், திரு. இராய. செல்லப்பா அவர்கள், கவிஞர் திரு. மதுமதி அவர்கள், திரு. அரசன்.சே அவர்கள் மற்றும் ஐயா புலவர் திரு. சா. இராமாநுசம் அவர்கள்.


ஐயாவுடன் அன்பேசிவம் திரு சக்தி அவர்கள்.

புகைப்படத்தை பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.
திரு. ஆரூர் மூனாவுடன், திரு. இராய. செல்லப்பா அவர்கள்.


அன்று காலை 10.00 மணிக்கு சந்திப்பு என்பது முடிவாயிருந்தது எப்பொழுதுமே நான் காலம் தவற விடுவதில்லை சொன்ன நேரப்படி ஆஜராகி விடுவது எனது விபரம் அறிந்த 2 ½ வயது முதல் என்னிடம் உள்ள பழக்கம் அதிலும் தெரியாத புதிய இடமென்றால் முன்கூட்டியே போய் விடுவதும் எனது சிறப்பு அம்சம் அதைப்போல புலவர் ஐயா வீட்டின் கோடம்பாக்கம் ஏரியாவுக்கு சரியாக காலை 09.00 மணிக்கே போய் விட்டேன் கிடைத்த தகவல்படி ஐயாவின் திருவேங்கடம் அபார்ட்மெண்டை கண்டு பிடித்து விட்டு அந்த ஏரியாவின் ஒரு பகுதியில் நின்று கொண்டு கவனித்ததில் நிறைய பதிவுகள் எழுத விடயங்கள் கிடைத்தது குறிப்பாக என்னுள் கொழுந்து விட்டு எரிந்த கோபம் காரணம் என்றோ எவனோ சொல்லி விட்டு போனானே //வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்// அந்த வார்த்தைகள் மட்டும் எமது செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது காரணம் நான் காணும் முகங்களில், செல்பேசி வழிகளின் மொழிகளில் என் இனிய தமிழ் இல்லை பேசிய தமிழும் //இன்னாபா சவாரி கீதா// //அந்த கஸ்மாலம் புட்டுகிச்சுபா// என்ற வகையில் இருந்தது சென்னையின் உயர்வகை மனிதர்கள் வாழும் கோடம்பாக்கத்தில் தமிழ் வாழ்வது இப்படித்தானா ?

பின்புறம் நிற்பது திரு. ஸ்கூல் பையன், திரு. ஆரூர் மூனா, அன்பேசிவம் திரு. சக்தி, திரு. போலி பன்னிக்குட்டி ராம்சாமி, திரு. தளிர் சுரேஷ் உட்கார்ந்திருப்பவர்கள் திரு. இராய. செல்லப்பா, திரு. டி.என். முரளிதரன், மற்றும் ஐயாவுடன், உங்கள் கில்லர்ஜி.

  புகைப்படத்தை பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.
 
திரு. அரசன்.சே மற்றும் திரு. இராய. செல்லப்பா அவர்கள்.

 திரு. அரசன்.சே, திரு. கில்லர்ஜி, ஐயா புலவர். திரு. சா. இராமாநுசம், திரு. இராய. செல்லப்பா அவர்களுடன் கவிஞர் திரு. மதுமதி.


 
  புகைப்படத்தை பெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.

  ஐயா புலவர். திரு. சா. இராமாநுசம், அன்பேசிவம் திரு. சக்தி, திரு. தளிர் சுரேஷ், திரு. கில்லர்ஜி, திரு. டி.என். முரளிதரன் மற்றும் திரு. போலி பன்னிகுட்டி ராம்சாமி அவர்கள்.

 புலவர் ஐயாவுடன், திரு. ஸ்பை.

 

சரியாக 10.00 மணிக்கு சகோ கீதா அவர்களை அழைத்தேன் வந்து கொண்டே இருக்கிறேன் என்று சொன்னார்கள் ஐயா வீட்டின் அழைப்பு மணி பொத்தானை அழுத்தினேன் திறந்த கதவின் வழியே முகம் மலர அழைத்தார் ஐயா திரு. புலவர். இராமாநுசம் அவர்கள் ஐயாவுடன் இதுவே முதல் சந்திப்பு என்னை காலை சிற்றுண்டி சாப்பிட வைத்தார் பிறகு பேசிக்கொண்டு இருக்கும் பொழுது சிறிது நேரத்தில் திருமதி. கீதா அவர்கள் வந்தார்கள், பிறகு வேலூரிலிருந்து வந்த அன்பேசிவம் திரு. சக்தி அவர்கள், தொடர்ந்து... வந்த பதிவர்கள் திரு. அரசன் சே அவர்கள், கவிஞர் திரு. மதுமதி அவர்கள், திரு. டி. என். முரளிதரன் அவர்கள், திரு. ஆரூர் மூனா அவர்கள், திரு. ‘’தளிர்‘’ சுரேஷ் அவர்கள், திரு. போலி பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள், திரு. ஸ்கூல் பையன் அவர்களை ஸ்கூல் பையன் என்பதால் அவரின் துணைவியார் அழைத்து வந்தார் பிறகு அதிரடியாய் திரு. இராய. செல்லப்பா அவர்கள் வந்தார்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள் புலவர் ஐயாவை செல்பேசியில் தொடர்பு கொண்டு தான் வரமுடியாத சூழலை சொல்லி என்னிடமும் பேசினார் தொடர்ந்து வந்த செல்பேசியில் குவைத் பதிவர் (சென்னை வந்திருக்கின்றார்) திருமதி. மஞ்சுபாஷிணி சம்பத்குமார் அவர்கள் என்னிடம் வழக்கம் போலவே அதட்டலாக பேசி என்னை பயமுறுத்தினார்.



குறிப்பாக திரு. இராய. செல்லப்பா அவர்கள் எனது வாழ்க்கை குறித்த பல விபரங்களை சொன்னார் அனைவருமே எனக்காக நல்ல எண்ணங்களோடு விவாதித்தனர் அந்த விவாதத்திற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் இருப்பினும் எனது தரப்பு வாதத்தை பகிர்ந்தாலும் அவைகளை குறித்த பதிவுகள் எழுதும் எண்ணங்களே என்னுள் ஒடிக்கொண்டு இருந்தது... இருக்கின்றது... 

வலைப்பூவைப்பற்றியே அனைவரும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை பிறகு அனைவரும் பிரியாவிடை பெற என்னையும், திரு. ‘’தளிர்‘’ சுரேஷ், மற்றும் வேலூர் அன்பே சிவம் திரு. சக்தி அவர்களையும் திரு. இராய. செல்லப்பா அவர்கள் ஆட்டோவில் சரவணபவன் ஹோட்டலுக்கு அழைத்துப் போய் மதிய விருந்தளித்து மகிழ்சியுடன் அனுப்பி வைத்தார் பிறகு நண்பர்கள் ‘’தளிர்’’ சுரேஷும், சக்தியும் பிரியாவிடை பெற்றார்கள் நான் ஷேர் ஆட்டோவில் ஏறி //கோ ட்டூ தி கிரேட் தேவகோட்டை// என்றேன்.



எமது சந்திப்பு பதிவுகளைக் காண கீழே இணைப்புகளை சொடுக்கவும்.
வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் தொடரும்...

71 கருத்துகள்:

  1. சிறப்பான சந்திப்பு! படங்களும் அருமை!
    புலவர் ஐயாவையும் சக பதிவர்களையும் படங்களில்
    காண்பதும் மகிழ்வாக இருக்கின்றது சகோ!

    நல்லுறவுச் சந்திப்புகள் தொடர வாழ்த்துகிறேன்!

    த ம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ முதல் வருகை தந்து முத்தாய்ப்பாய் கருத்துரை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. அசத்தலான சந்திப்பும் அருமையான வர்ணனையும். சூபர் போட்டோக்களும் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  3. அருமையான சந்திப்பு நண்பரே
    அசத்துங்கள்
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
  4. புலவர் ஐயாவோடு பதிவுலக நண்பர்களை பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  5. மிக்க மகிழ்ச்சி ஜி... படங்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  6. நண்பர்களின் சந்திப்பும், படங்களும் அசத்தலாக இருக்கு .சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி புரோட்டா சாப்பிட்டு வந்தேன் நல்ல சுவையே...

      நீக்கு
  7. ஒரு மாநாடு அல்லவா நிகழ்ந்திருக்கின்றது!..

    அன்பின் சொந்தங்களைக் கண்டதும் மனதில் தேன் மாரி பெய்தாற்போல உணர்வு!..

    மகிழ்ச்சி வெள்ளத்தை - நயமுடன் பதிவில் வடித்திருக்கின்றீர்கள்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நலமா ? ஹா...ஹா...ஹா மாநாடா ? தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. பெயரில்லா8/17/2015 12:12 PM

    மிக மகிழ்வான சந்திப்பைப் படத்தோடு தந்தது மகிழ்வு.
    மிக்க நன்றி சகோதரா.
    படங்கள் நன்றாக . தாங்களும் நன்றாக உள்ளீர்கள்
    மகிழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  9. அபுதாபியில் இருந்து வந்து தமிழக பதிவர்கள் நிறைய பேரை சந்தித்து விட்டீர்களே !உங்களின் ஆர்வமான சந்திப்புக்கு வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திக்கற்று நின்றவனுக்கு பசுமைபோல் காட்சியளித்தவர்கள் நம் தமிழ்ப்பதிவர்கள் ஜி

      நீக்கு
  10. மினி பதிவர் சந்திப்பு நிகழ்வை அழகாக படங்களுடன் பகிர்ந்திருக்கிங்க.
    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பே. நண்பர்கள் பலரைக் காணும் வாய்ப்பு உங்களின் பதிவின் மூலமாகக் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே உண்மையே சென்ற இடமெல்லாம் சிறப்பன சந்தோஷமே

      நீக்கு
  12. சென்னை பதிவர்கள் சங்கமம்
    அறிவின் ஊற்றோடு உறவாடிவிட்டு வந்துள்ளீர்கள்
    வாழ்த்துகள் கில்லர்ஜி!
    அதுசரி
    திருச்சி பக்கம் போனீர்களா?
    மலை ஏறி சென்று மாலையிட்டு
    தமிழி சோலை ராகம் பாடுவது சற்று கடினம்தான்!
    மூட்டு வலியால் மீசை துடிக்குமே?
    நன்றி நண்பா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நாங்க ஈபிள் டவரிலியே நடந்து ஏறினவங்கே உச்சிப் பிள்ளையார் கோயில் ஏறமாட்டோமா ?

      நீக்கு
  13. கொடுவா மீசைக்காரரே உங்களைப் புகைப்படத்தில் பார்த்துப் பயந்து,பம்மி நேரில் காண வந்தால் அட! இவ்வளவுதானா இந்த மனுஷன் என்று எண்ணும்படி வைத்துவிட்டீர்கள்....ஹஹ்ஹஹ் அந்தக் கொடுவா மீசைக்குள் புதைந்திருந்தது புன் சிரிப்பும், ஈர மனதும்....

    மிக்க மகிழ்ச்சி தங்களைச் சந்தித்ததில்...

    துளசிக்குத் தங்களைச் சந்திக்காமல் போய்விட்டோமே என்றிருக்கிறது..
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நான் சந்தித்த சென்னை பதிவர்களில் முதல் நபராக வருகை தந்தமைக்கு நன்றி தங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

      பாலக்காட்டு ராஜாவைப்பற்றி கடந்த பதிவு (மன் ஆ...) வில் எழுதினேன் தாங்கள் படிக்கவில்லை போலவே... அவருடன் செலிபோணில் பேசினேன்.

      நீக்கு
  14. விடுமுறையில் தாய்நாடு வந்து கிட்டதட்ட முக்கியமான எல்லா பதிவர்களையும் சந்தித்து விட்டீர்கள் என்று நினக்கிறேன். உங்கள் பதிவினூடே நானும் அவர்களைச் சந்தித்தது போன்ற ஒரு உணர்வு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்வது போல்தான் எனக்கும் தோன்றுகிறது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  15. அறிமுக விழா போல், பதிவுலக நண்பர்களுடன் சந்தித்த விபரங்களை, பெரும் உவகையுடன்....ஆஹா... நாமும் உடனில்லையே என்று ஏங்க வைத்த அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தமுறை கண்டிப்பாக சந்திப்போம் நண்பரே வருகைக்கும் கருகத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  16. உங்களுடன் கழித்த அந்த சில மணிநேரங்கள் இன்னும் நினைவலைகளில் நிற்கிறது! சிறப்பான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பர் சுரேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. பதிவர் விழாவில் சந்திப்பதைவிட இம்மாதிரி சந்திப்புகளில் அனுகூலங்கள் அதிகம் ஒருவருடன் ஒருவர் பழக அதிக வாய்ப்பு. வாழ்த்துக்கள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா சரியாக சொன்னீர்கள் நன்றி.

      நீக்கு
  18. அன்புள்ள ஜி,

    ‘வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்’ நூலை வெளியிட்ட பெரும்புலவர் அய்யா சா. இராமாநுசம் அவர்கள், மேனாள் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவராகப் பதினைந்து ஆண்டுகள் சீரிய பணியாற்றிய புகழுக்குச் சொந்தக்காரரின் சொந்த வீட்டில் அவரையும் வலையுலக நண்பர்களையும் சந்தித்ததைப் புகைப்படத்துடன் அழகுடன் விளக்கியது கண்டு வியந்தேன்!

    நன்றி.
    த.ம. 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அவரை சந்தித்து ஆசி பெற்றது பாக்கியமே வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. சிறப்பான சந்திப்பு பற்றி அறிந்து மகிழ்ச்சி. நானும் புலவர் ஐயாவின் வீட்டிற்கு ஒரு முறை சென்று அவரையும் இன்னும் சில பதிவர்களையும் சந்தித்து மகிழ்ந்தது நினைவில்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களைத்தான் சந்திக்க முடியாமல் போய் விட்டது.

      நீக்கு
  20. செல்வாக்கானவர்தான்.... தாங்கள்....நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நண்பா இப்படிச் சொல்லிப்புட்டீக....

      நீக்கு
  21. வலைப்பூ புதிய புதிய உறவுகளை...எதிர்பார்ப்பில்லா அன்பு உள்ளங்களை
    தந்து கொண்டே உள்ளது.....புதுகையில் மேலும் பல உறவுகளைக்காணும் ஆவலில் உள்ளோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையான வார்த்தையே.... புதுக்கோட்டை விழா சிறக்கட்டும்

      நீக்கு
  22. சிறப்பான, இனிமையான மறக்கமுடியா தருணங்களாக உங்களுக்கு அமைந்திருக்கும் சகோ. வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் எமது வாழ்வில் பொன்னான தருணங்களே....

      நீக்கு
  23. நல்லதொரு சந்திப்பு அண்ணா...

    பதிலளிநீக்கு
  24. என்னவொரு அழகான சந்திப்பு. தங்களை மிஸ் செய்தது நான் மட்டும் தானா!
    த ம 16

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே நானும்கூட தங்களை.... வருகைக்கு நன்றி

      நீக்கு
  25. எனக்கு விபரம் தெரிந்த 2 1/2 வயது முதல் என சொல்லியிருக்கிங்க என்னால் நம்ப முடியவில்லை .... சும்மா காமடி

    வாழ்த்துக்-கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நம்பிக்கைதான் வாழ்க்கை சிலர் பிறக்கும்போதே கோடீஸ்வரன் என்கிறார்கள் அவன் சம்பாரிச்சுட்டா வந்தான் அதுபோல்தான் இதுவும் நண்பரே...

      நீக்கு
  26. இந்தியால நல்லாப் பொழுது போச்சு போல!

    பதிலளிநீக்கு
  27. Nanpara padivu nanparai santhithu oru pudiya ooukathai petru irupergal endru ninikeran vaalthukal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே உண்மையே தங்களைக்காண முடியவில்லையே...

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே.

    தாய் நாடு வந்தது முதல் அனைவரையும் சந்தித்து மகிழ்ச்சிக்குள்ளாக்கி, தாங்களும் மகிழ்ந்திருக்கிறீர்கள். நல்ல நட்புக்கு உங்களை இனி உதாரணமாக சுட்டிக் காட்டலாம். மன மகிழ்வோடு அதை விவரித்து எழுதிய உங்கள் பதிவை படிக்கும் போது நட்பின் பெருமையை உணர்கிறேன்.அனைவரையும் உங்களோடு நாங்களும் சேர்ந்து சந்தித்த நிறைவை தருகிறது. இவ்வினிய நட்பு சந்திப்புக்கள் இனியும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது வருகைக்கு நன்றி

      நீக்கு
  29. //ஸ்கூல் போ...கா...த பையனுடன் ஸ்கூல் பையன்!// - :-)))

    ஏறத்தாழ இந்தச் சந்திப்பின்பொழுதுதான் நீங்கள் என்னிடமும் பேசியில் உரையாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை நீங்கள்! உங்களுடன் காய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நான் சென்னை வருவதற்க்கு ஒரு வாரம் முன்புதான் தங்களை தொடர்பு கொண்டு சென்னை வருவதாக சொன்னேன்

      நீக்கு
    2. ஓ அப்படியா! சரி, சரி. நானும் விளையாட்டுக்குத்தான் முறுக்கிக் கொண்டேன். ;-)

      நீக்கு
  30. வணக்கம் சகோ,
    சென்னையிலுமா?????,
    அனைவரையும் நாங்கள் தங்கள் பதிவின் மூலம் சந்தித்தோம். ஆங்,,,,,,,அப்புறம் அது என்ன ஷேர் ஆட்டோவிலேயே தேவகோட்டையா? பக்கம் தானா?????
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ.. வருகைக்கு நன்றி ஆமா ஷேர் ஆட்டோவில் ஏறினேன்.

      நீக்கு
  31. நண்பரே! இந்தப் பதிவுக்குக் கருத்திடும்பொழுது கூடவே ஒரு கண்டனத்தையும் பதிவு செய்ய எண்ணியிருந்தேன். ஆனால், இதன் தொடர்ச்சியாக மூன்று பதிவுகளைப் படித்து விட்டுப் பிறகு மொத்தமாகக் கருத்திட்டதில் அது மறந்துவிட்டது. இதோ விடுபட்ட கருத்து கீழே:

    "சென்னையின் உயர்வகை மனிதர்கள் வாழும் கோடம்பாக்கத்தில் தமிழ் வாழ்வது இப்படித்தானா?" என்று பதிவின் ஓரிடத்தில் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அது என்ன ஐயா, மனிதர்களில் கூட உயர்வு தாழ்வு என இருக்கிறதா? இப்படிப்பட்ட கருத்துக்கள் கொண்டவர் இல்லை என்று உங்களைப் பற்றி நினைத்திருந்தேனே! :-((

    அதே இடத்தில், சென்னைத் தமிழ் பற்றியும் விமரிசித்திருந்தீர்கள். ஐயா! தெரியாமல்தான் கேட்கிறேன், சென்னை தவிர்த்த இதர பகுதிகளில் தமிழ் அப்படியே துய்யத் தூய்மையாக, அந்தக் கால அரசர் திரைப்படங்களில் வருவது போலத்தான் பேசப்படுகிறதா? தேவகோட்டையில் எப்படி? எல்லாரும் "வாருங்கள்! அமருங்கள்! நலமாக இருக்கிறீர்களா?" எனவெல்லாம்தான் பேசுவீர்களா? தமிழ்நாட்டிலும் இலங்கை, மலேயா எனத் தமிழர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் தமிழ் ஒவ்வொரு விதமாகப் பேசப்படுகிறது. அவற்றையெல்லாம் வட்டார வழக்கு என்பதாக ஏற்றுக் கொள்ளும்பொழுது சென்னைத் தமிழை மட்டும் கொச்சைத் தமிழ் என ஒதுக்குவதும் இழித்துரைப்பதும் எந்த வகையில் நியாயம்?

    உண்மையில் சென்னைத் தமிழ் ஏன் இப்படி இருக்கிறது, சென்னைத் தமிழர்கள் ஏன் இப்படிக் கடைநிலை மனிதர்களாக இருக்கிறார்கள் என்பவை பற்றி நான் ஒரு பதிவு எழுதியுள்ளேன். நேரமிருந்தால் நீங்கள் அதைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். சுட்டி: http://agasivapputhamizh.blogspot.com/2013/10/chennai-tamil-annai-tamil-illaiyaa.html

    இதே போல, சென்னையுடைய மண்ணின் மைந்தர்கள் பற்றி, அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், அவர்களை இப்படி ஆக்கியது யார், எது என்பவை பற்றிப் பகீர் உண்மைகளை அறிய இதழாளர் சமஸ் எழுதியுள்ள, கருவூலமாகப் பாதுகாக்க வேண்டிய ஆராய்ச்சிப் பதிவான இதையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்! சுட்டி: http://writersamas.blogspot.in/2014/09/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு வணக்கும் நான் சொன்னது தமிழ் மொழியை கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கமும், கேட்டதும் இந்த நிலையில் இருக்கிறதே 80தே..

      மேலும் நான் மனிதர்களை ஏற்றத்தாழ்வு தரம் பிரிப்பவன் இல்லை இது தங்களுக்கும் தெரியும் என்னைப்பொருத்தவரை பிரணாப் முகர்ஜியும், தாங்களும், நானும் ஒன்றே என்று கருதுபவன் பதவிகளில் வேண்டுமானால் ஏற்றதாழ்வு இருக்கும் அதேநேரம் மனிதாபிமானத்தில் உயர்ந்தவர் யார் என்பதில் உங்கள் இருவரையும் நான் தோற்கடிக்க முயல்வேன் இது முடியுமா ? முடியாதா ? 80 இறைவனுக்கே தெரியும் நம்முன் திடீரென மிஸ்டர். டி. சுனாமி வரும்போது தெரியும் நான் சொன்னது எத்தனை சத்தியமான உண்மை 80 இருப்பினும் சமூகம் உயர்வகை மனிதர்கள் (கோடம்பாக்கம் சினிமாத் துறையினரை) என்றே நினைக்கிறது அதன் அடிப்படையில் குறிப்பிட்டு விட்டேன் இருப்பினும் நான் குறிப்பிட்டு இருக்ககூடாதுதான் வருந்துகிறேன்.

      உதாரணமாக பிற மொழிக்காரர்களுக்கு தமிழ்நாட்டில் எந்தப்பாகத்து மக்கள் பேசினாலும் அது தமிழ்தான் என்று புரிந்து கொள்கிறார்கள் ஆனால் சென்னைத்தமிழை அவர்களால் இந்த மொழிதான் 80தை புரிந்து கொள்வதற்க்கு கஷ்டப்படுகின்றார்கள் உதாரணத்திற்க்கு திருவனந்தபுரம் மலையாளம் போல...

      மேலும் இலக்கிய வகையில் இன்றும் தமிழ் பேசிக்கொண்டு இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்களே இது தங்களுக்கும் தெரியும் அதைப்போல நாம் பேசினால் ஒரு மா3யாக பார்க்கின்றார்களே... என்ன செய்வது.
      தாங்கள் கொடுத்த இணைப்புகளுக்கு கண்டிப்பாக சென்று கருத்துரை பதிப்பேன் மீள்வருகைக்கு நன்றி நண்பரே... தொடர்க...

      நீக்கு
    2. கருத்துக்களை ஏற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே! உங்களைப் போன்றவர்களிடம்தாம் இப்படியெல்லாம் உரிமையோடு சொல்ல முடியும். எதிர்க் கருத்தாகவே இருந்தாலும் சரியானதாக இருந்தால் மனதார ஏற்றுக் கொள்பவர் தாங்கள். அதனால்தான் தங்கள் மீசையைப் பார்த்தும் அஞ்சாமல் துணிந்து சொன்னேன். ;-) மிக்க மகிழ்ச்சி! நன்றி!

      நீக்கு
    3. மேற்படி எதிர்மறையான கருத்தைத் தனிப்பட்ட முறையிலேயே கூட நான் உங்களிடம் சொல்லியிருக்கலாம். ஆனால், நீங்களே குறிப்பிட்டுள்ளது போல, சென்னைத் தமிழ் பற்றியும் சென்னைத் தமிழர்கள் பற்றியுமான பெரும்பாலானோரின் கருத்து இப்படித்தான் இருக்கிறது என்பதால், பொதுவில் கூறினால் மற்றவர்களும் மனம் மாற உதவுமே என்பதற்காகத்தான் இப்படி வெளிப்படையாகத் தெரிவித்தேன். தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாதது குறித்து மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
    4. நாம் கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் வாழ்கிறோம் நண்பரே ஆகவே யார் மனதையும் புண் படுத்தாமல் கருத்து சொல்லும் பக்குவம் நமக்கு வேண்டும் அதைவிட முக்கியம் பிறரின் கருத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்தால் போதுமானதே..

      நீக்கு
  32. அன்பின் நண்பரே வணக்கம் ...
    முதலில் மன்னிக்கணும் .. கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து இந்த பக்கம் வருகிறேன் .. இணையத் தொடர்பு சரிவர அமையாதலால் மொபைலில் ஒருமுறை வாசித்தாலும் கருத்துரை எழுத இயலவில்லை ...

    இன்றுதான் நேரம் கிட்டியது ... உங்களை சென்னையில் சந்தித்தது மிகவும் மன நிறைவை தந்தது ... என்ன, அதிக நேரம் செலவிட இயலவில்லை அந்த மனக் குறை தான் ... மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிட்டுகையில் சந்தித்து நிறைய உரையாட வேண்டும் ..

    பதிலளிநீக்கு
  33. படங்கள் அனைத்தும் அட்டகாசம் சாரே ..

    பதிலளிநீக்கு
  34. நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது படித்து ஆச்சர்யம் ப்ளஸ் மகிழ்ச்சி ..அப்படியே தொடருங்கள், பலரும் அதை கடைபிடிப்பதில்லை ,,, நன்றிங்க சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மீண்டும் ஒருநாள் சந்திக்கலாம் பேசலாம் தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு