இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

மதுரை சுந்தரபாண்டியர்களுடன்...

திரு. தமிழ்வாசி பிரகாஷ், திரு. கில்லர்ஜி, மற்றும் அன்பின் ஐயா திரு. சீனா அவர்கள்.
அன்பு நண்பர்களே வணக்கம்...
மதுரை அம்பிகா திரையரங்கம் அருகில் நின்று அரசியல் பதாகைகளின் வாசகங்களை வாசித்துக்கொண்டு நின்றேன் நம் தமிழன் வார்த்தைகளை செதுக்குவதில் அறிவாளியாக இருக்கின்றானே ஆனால்  அறிவிழந்து கிடக்கின்றானே... வேதனையாக இருந்தது நம் தமிழனுக்கு இன்னும் உறக்கம் கலையவில்லையே என்ன செய்யலாமென ஆலோசிக்கும் பொழுது...

// அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது // என்ற தமிழ்ப்பாடல் வேறொன்றுமில்லை எனது கைப்பேசியிலிருந்து வந்த அழைபொலியால் நினைவலைகள் கலைந்து யாரென பார்த்தேன் அன்பு நண்பர் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் அழைப்பு கைப்பேசியை எடுத்து தொடுதிரையை வடக்கு திசையை நோக்கி தள்ளி விட்டு சம்பிரதாயமாக கிரஹாம் பெல்லின் சகோதரியின் பெயரைச் சொல்லி சொல்லுங்கள் நண்பரே என்றேன் இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.... வாருங்கள், I’m Waiting 4 you என்பதை தமிழில் சொன்னேன் சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தமிழ்வாசி வந்தார் நலம் விசாரித்து விட்டு அன்பின் ஐயா திரு. சீனா அவர்களின் வீட்டுக்குப் போனோம்.

அடுக்குமாடி கட்டடத்தின் நுழைவாயில் காவலாளிகளிடம் விபரங்கள் கொடுத்தவுடன் உள்ளே விட்டார்கள் தொங்கு பெட்டியில் மூன்றாவது தளத்துக்குப் போனோம் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த கதவைத் திறந்தது ஐயா திரு. சீனா அவர்கள் மற்றும் அவருடைய மனைவி பதிவர் திருமதி. செல்வி அவர்கள் வரவேற்று உபசரித்தார்கள் சுமார் 2 ½  மணிநேரம் வலைப்பூவைப் பற்றியும், வலைச்சரத்தைப் பற்றியும், பல பதிவர்களையும் நினைவு கூர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் புகைப்படங்களும் எடுத்து விட்டு விடை பெற்று மீண்டும் நானும், நண்பர் தமிழ் வாசியும் அப்பல்லோ மருத்துவமனையை நோக்கி விரைந்தோம் நண்பர்களே ஏன் தெரியுமா ?

 திரு. கில்லர்ஜி, திரு. வலிப்போக்கன், திரு. தமிழ்வாசி பிரகாஷ்
.


அந்த இடத்தைதானே அடையாளம் சொல்லி நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களை வரச்சொன்னோம் அவரும் வர மூவரும் அருகில் இருந்த ஸஃபா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டே பேசினோமா ? பேசிக்கொண்டே சாப்பிட்டோமா ? தெரியவில்லை பிறகு நண்பர் திரு. தமிழ்வாசி அவர்கள் விடை பெற்றார் நானும் நண்பர் திரு. வலிப்போக்கனும், வழிநெடுக பேசிக்கொண்டே வந்தோம் சாலையோரத்தில் ஒரு சிறிய கோயில் இருந்தது அது காளியாத்தாளா ? மாரியாத்தாளா ? என்பதை தினமும் வணங்கும் நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் அதன் அருகில் ஒரு ஐந்தறிவு பைரவர் கிடந்தார் மாலையில் நான் இதே வழியில் போகும்பொழுது அதே இடத்தில் வைரம் பாய்ந்த ஆறறிவு டாஸ்மாக் கிடந்தது இப்பொழுது அதே கோணத்தில்  ஐந்தறிவு... நின்று கொண்டே பேசினோம்... பேசினோம்... பேசினோம்... திடீரென பைரவர் ஆங்கிலத்தில் WEEL என்று கத்திக்கொண்டு ஓடும்போது கவனித்தேன் காதிலிருந்து குருதி ஒழுகியதை காரணம் என்ன ? பிறகுதான் தெரிந்தது நானும் நண்பரும் சுமார் 3 ½ மணிநேரம் அதே இடத்தில் நின்று கொண்டு பிளேடு போட்டதே என்று பிறகுதான் வீட்டுக்குப்போக வேண்டுமென தோன்ற விடை பெற்றோம்.


 

இனிய நண்பர் திரு. பகவான்ஜியை அழைத்தேன் அவர் கன்னியாகுமரிக்கு குமரியம்மனுக்கு வைரமூக்குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் சென்று இருப்பதாக சொன்னார் பதிவுகளில்தான் அப்படியோ ?

மற்றொருநாள்...
மதுரை மீனாம்பாள்புரத்தில் நண்பரொருவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து இறக்கி விட்டுச்செல்ல நண்பர் திரு. பகவான்ஜியை அழைத்தேன் வந்து வீட்டுக்கு கூட்டிச் சென்றார் அவரது கணினி திறந்திருக்க சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நானும் இரண்டொரு பதிவுக்கு பின்னூட்டமிட்டேன் அவரின் துணைவியார் தேனீர் கொடுக்க அருந்திக்கொண்டு இருக்கும் பொழுதே கவிஞர் திரு. ரமணி ஐயா அவர்கள் பகவான்ஜியிடம் கைப்பேசியில் என்னை அவரது வீட்டுக்கு அழைத்து வரச்சொல்ல இருவரும் புறப்பட்டோம் வில்லாபுரம் நோக்கி...

திரு. பகவான்ஜி மற்றும் கவிஞர் திரு. ரமணி S அவர்கள்.

எனது ஹெல்மெட் தலையில் நண்பர் கொடுத்த ஹெல்மெட்டையும் மாட்டிக்கொண்டது நல்லதாய்ப்போய் விட்டது காரணம் சொந்த பந்தங்கள் நிறையப்பேர் வில்லாபுரத்தில் இருக்கின்றார்கள் அவர்களை பார்த்தால் என்னாகும் ? வேறென்ன பதிவுகள் மேலும் நீளும் அந்தப்பதிவுகள் வேறு மாதிரியிருக்கும் வீட்டில் கவிஞர் மட்டுமே இருந்தார் எங்களை வரவேற்று எனக்கு நினைவுப்பரிசோடு பொன்னாடை போர்த்தி மனம் நெகிழச் செய்து விட்டார் மலேசிய பயண விபரங்கள், நண்பர் திரு. ரூபன் சந்திப்பு, புதுக்கோட்டை பதிவர் மாநாடு மற்றும் ....த்திகம் பற்றிய விபரங்களை பேசிக்கொண்டு இருந்தோம் பிறகு மூவரும் மோட்டார் சைக்கிளில் உணவகம் வந்து உணவருந்திய பிறகு கவிஞர் விடைபெற நண்பர் பகவான்ஜியும், நானும் பேரூந்து நிலையம் வந்தோம் அவர் அலுவலுக்குச் செல்ல (இரவுப்பணி) நான் பேரூந்தில் தேவகோட்டை நோக்கி புறப்பட்டேன் எமது வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் இதுவும் One

 கவிஞர் தந்த பரிசு.
 
இதுதான் தி கிரேட் தேவகோட்டை செல்லும் பேரூந்து
எமது சந்திப்பு பதிவுகளைக் காண கீழே இணைப்புகளை சொடுக்கவும்.
வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் தொடரும்...

60 கருத்துகள்:

  1. அன்பின் இனிய பதிவர்களைச் சந்தித்த பசுமை நினைவுகளின் பதிவு!..

    மகிழ்ச்சியாக இருக்கின்றது.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. தங்களது சந்திப்பை எங்களுடன் பகிர்ந்தமையறிந்து மகிழ்ச்சி. தங்களின் தாய்நாட்டுப்பயணத்தில் இந்த முறை அதிகமான நண்பர்களைச் சந்தித்துள்ளீர்கள் போலுள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முனைவரே இந்தமுறை அதிகமான நண்பர்களை சந்தித்து இருப்பது உண்மையே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. நண்பரே நீங்கள் மதுரை வருவதை முன்கூட்டியே கூறியிருந்தால் உங்கள் புண்ணியத்தில் இத்தனை பதிவர்களை நானும் சந்தித்திருப்பேன். நீங்கள் கடைசி நாளில் கூறியதால் முடியாமல் போய்விட்டது. ஆனாலும் சுவராசியமான சந்திப்பு. படிக்கும் போதே மகிழ்ச்சி தந்தது.
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நானும் தேவகோட்டையில் உள்ள அனைத்து மார்கெட்டுகளிலும் தேடினேன் தங்களின் தொலைபேசி எண் எனக்கு கிடைக்க தாமதம் ஆனதே காரணம்.

      நீக்கு
  4. ஒரு மகிழ்ச்சியான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. தேவையைப் பொருத்து காளியாத்தாளாகவும்...மாரியாத்தாளவாகவும் மாறிக் கொள்ளும் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ அப்படி ஒரு சிஸ்டம் உண்டா ?

      நீக்கு
    2. எனக்கு சந்தேகம் வந்தது. நான் வணங்குவது காளியாத்தவா...? மாரியாத்தாவான்னு... போய் பார்த்தபோது...அது சக்திஸ்வரி திருக்கோயில் என்று எழுதியிருந்தது..நண்பரே...

      நீக்கு
    3. சக்திஈஸ்வரி உங்களை காக்கட்டும்.

      நீக்கு
  6. அருமையான இனிமையான பதிவர்கள் சந்திப்பு
    நிகழ்த்தியுள்ளீர்கள் சகோ!

    தங்கள் பதிவும் ரசித்துப் படிக்கக் கூடியதே!
    சிறப்பு! வாழ்த்துக்கள்!

    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் கருத்துரை கண்டு சந்தோஷமே பதிவுகளில் இடைவெளி விடுவது கண்டு வருத்தமும் உண்டு

      நீக்கு
  7. மட்டற்ற மகிழ்ச்சி நண்பா!
    வலைபூ மூலம் நீ எதை சாதித்தாய்?
    என்று இனி என்னை நோக்கும் விரல்களுக்கு
    இதோ இருக்கிறது பார்! என்று விலை மதிப்பில்லாத
    அன்பு உள்ளங்களை என்று
    இந்த பதிவை உதாரணாமாக காட்டி மகிழ்வேன்.

    அன்பு மழை அடை மழையாய்!

    விழிகளில் காரிருள் சூழ்கிறது.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பர் உண்மையான வார்த்தையை சொன்னீர்கள் விலை மதிப்பில்லா பொக்கிஷம்தான் வலை நட்பூகள்.

      நீக்கு
  8. வணக்கம் சகோ,
    இன்னும் இருக்கும் போல இருக்கு,,,,,,,
    அன்பு உள்ளங்களைச் சந்தித்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி,,,,,
    அது உண்மைதான் வலிப்போக்கனார் ஆத்தா வை பற்றி பேசியதால் இருக்கும், காதில் வலிவந்து ஓடியதற்கு காரணம்.
    இன்னும் மலரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இன்னும் வரும்.... உண்மைதான் நண்பர் வலிப்போக்கன் சிறந்த பக்திமான் 80 பழகினால்தான் தெரியும்.

      நீக்கு
  9. மதுரையின் இனிய சந்திப்பு நம் பதிவர் நண்பர்களுடன்....இல்லையா ஜி?

    அது சரி நம் நண்பர் செந்திலைத் தேடினோம்...ஏன் சந்திக்கவில்லை? மதுரை வரை சென்று விட்டு நண்பர் செந்திலைச் சந்திக்காமல் வந்துவீட்டிர்களே....ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நான் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்க்கு கவுண்டமணியுடன் ஸூட்டிங் இருப்பதாக சொல்லி விட்டார் ஆகவே சந்திக்க முடியாமல் போய் விட்டது.
      கருத்துரையோடு ‘’வாக்கும்’’ அளித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  10. உங்கள் பதிவில் உங்களோடு அன்பின் சீனா அய்யா சீனா, தமிழ்வாசி பிரகாஷ், கவிஞர் ரமணி, வலிப்போக்கன், பகவான்ஜீ – ஆகியோரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. வலிப்போக்கன் முகத்தை இப்போதுதான் முதன்முதல் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... நான் ஏற்கனவே மதுரையை கலக்கியது யாரு ? என்ற பதிவில் புகைப்படம் போட்டு இருக்கின்றேனே... கருத்துரைக்கு நன்றி பதிவுகள் விடுபடுகின்றதே நண்பரே...

      நீக்கு
  11. இனிய சந்திப்புகள்;மறக்க முடியாத நினைவுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை ஐயா சென்னையில் ஒருநாள் பதிவு படித்தீர்களா ?

      நீக்கு
  12. ஒரே நாளில் 5 பதிவர்களை சந்தித்தது பற்றி சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் பகிர்ந்திருக்கிறீர்கள். இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  13. நண்பர்களின் சந்திப்பை எங்களிடம் பகிர்ந்து கொண்டது அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  14. இனிமையான சந்திப்புகளின் நினைவுகள் என்றென்றும்
    நெஞ்சினில் நிலைத்து நிற்கும் நண்பரே
    இம்முறைதமிழகம் வந்தபொழுது
    தாங்கள் பயணித்துக் கொண்டே இருந்திருக்கிறீர்கள்
    பதிவுலகந நண்பர்களைச் சந்தித்துக் கொண்டே இருந்திருக்கிறீர்கள்
    என்பது புரிந்தது
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே மகிழ்சிகரமான சந்திப்புகளே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  15. அன்புள்ள ஜி,

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியர்களுடன் சந்திப்பை படங்களுடன் விளக்கியதைக் கண்டு மகிழ்ந்தேன்.

    த.ம. 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் மணவையாரே தங்களைத்தான் சநதிக்க இயலவில்லை என்ற வருத்தம் உண்டு.

      நீக்கு
  16. இந்த முறை தமிழகத்தில் ஓர் ரவுண்டு கட்டிவிட்டீர்கள் போலிருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அப்படித்தான் எனக்கும் தெரிகிறது.

      நீக்கு
  17. குமரியம்மனுக்கு நான் வைரமூக்குத்தி நேர்த்திக் கடன் செய்தால்,எங்க வீட்டிலே இருக்கும் அம்மன் காளியாத்தா ஆயிடுமே ,அத்தோடு நான் காலி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அப்படித் தெரியவில்லையே ஜி பக்திமான் போல் தெரிந்தது எதற்கும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்.

      நீக்கு
  18. சுமார் 3 மணி நேரம் 29 நிமிடங்கள் பொறுத்துக் கொண்டிருந்த அந்த பைரவரால் 3 மணி 30 வரை பொறுத்துக் கொள்ள இயலவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்க்குமே ஒரு வறைமுறை உண்டு நண்பரே அது மீறும் பொழுது இப்படித்தான் நடக்கும்.

      நீக்கு
  19. அத்தனைப் பதிவர்களுடனும் சந்திப்பு, கலந்து உரையாடி உண்டு மகிழ்ந்து பகிர்ந்தீர்கள்.... தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  20. பதிவர்களுடனான [மதுரையை மீட்ட சுந்தரபாண்டியர்களுடனான] சந்திப்பு பற்றிய பதிவு அருமை! இனிமையும் கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமா ? தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  21. மகிழ்வான சந்திப்பு...
    படங்கள் அருமை...
    சொல்லியிருந்தால் மாமாவிடம் கூப்பிட்டுச் சொல்லியிருப்பேன்... அம்சவல்லி பவன்ல போய் சாப்பிட்டு அவரையும் பார்த்துட்டு வந்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சொல்லிட்டீங்கள்ல அடுத்தமுறை போய் விடலாம்.

      நீக்கு
  22. இம்முறை பயண அனுபவங்கள் இனியான, மகிழ்ச்சியான, மறக்கமுடியாதவையாக உங்களுக்கு இருந்திருக்கு. மகிழ்ச்சியான தருணங்களை உங்க நகைச்சுவையான எழுத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சந்தோசமான பயணங்களே.. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  23. அன்பின் சந்திப்பை படங்களுடன் பகிர்ந்திருக்கிங்க.
    பகவான்ஜீ படு பவ்யமானவர் போல தெரியாருய்யா...(உண்மையா?)

    பதிலளிநீக்கு
  24. அட அட அட! எத்தனை சந்திப்பு! அவற்றை நீர் எழுதும் விதத்தில்தான் எத்தனை தித்திப்பு! வர வர உங்கள் நகைச்சுவையின் தரமும் அளவும் கூடிக் கொண்டே செல்கிறது! (உடனே, எங்கே செல்கிறது எனக் கேட்டு விடாதீர்!). ஆனால், இன்னும் நீங்கள் சந்திப்புகள் தொடரும் என்று குறிப்பிட்டிருப்பது வியப்பூட்டுகிறது. கடந்த பதிவுக்குக் கருத்துரையிடும்பொழுது "ஒரு குட்டிப் பதிவர் சந்திப்பே நடத்திவிட்டுப் போயிருக்கிறீர்கள் போல" என்று குறிப்பிட நினைத்திருந்தேன். ஆனால், வழக்கம் போல் அதை மறந்து விட்டேன். ஆனால், மறந்ததும் நல்லதாய்ப் போய்விட்டது. இது 'குட்டிப் பதிவர் சந்திப்பு' இல்லை போலிருக்கிறது. ஏன், புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்புக்கு வர மாட்டீர்களோ? அதனால்தான், நேரம் கிடைத்தவுடன் முன்கூட்டியே எல்லாரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து விட்டீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்பொழுதுதானே வந்தேன் மீண்டும் வருவதற்க்கு நானென்ன தமிழ் நாட்டு அரசியல்வாதியா ? இல்லை தமிழ் திரைப்பட கசாநாயகனா ? இல்லை இந்திய கிரிக்கெட் வீரரா ?

      நீக்கு
  25. பதிவுக்குத் தொடர்பில்லாத ஒரு விதயம்.

    நண்பரே! நீங்கள் இந்தத் தளத்தில் யாரும் நகலெடுக்க முடியாதபடி பூட்டுப் போட்டிருக்கிறீர்கள். ஆனால், அதன் காரணமாக மின்னஞ்சல் மூலம் தொடர்வதற்கான செயலி, தேடல் பெட்டி ஆகியவை பயன்படுத்த இயலாத நிலைக்கு ஆளாகியுள்ளன. மின்னஞ்சல் மூலம் தொடர்வதற்கான செயலியில் நம் மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கும் இடத்தில் நீங்கள் அம்புக்குறி (cursor) கொண்டு அழுத்திப் பாருங்கள். உள்ளே செல்லாது. தேடல் பெட்டிக்கும் இதே நிலைதான்.

    தளத்தை யாரும் நகலெடுக்காமல் பாதுகாப்பதற்காகப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிரல்தான் (script) எல்லாராலும் பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்விளைவுதான் இது. அதை நீக்கி விட்டீர்களானால் சரியாகி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு எனது பதிவுகள் முழுவதுமாக திருடப்பட்டு முகநூலில் பகிரப்பட்டது ஆகவேதான் தங்களின் யோசனைக்கு நன்றி மேலும் எனக்கு கணினி அறிவு குறைவு என்று சொன்னால் பொய்யாகும் ஆகவே இல்லை 80தே சரி.

      நீக்கு
    2. நானும் அப்படித்தான் நண்பரே! கணினியைத் தொடக்குவது எப்படி, அணைப்பது எப்படி என்று கூடத் தெரியாமல்தான் களத்தில் இறங்கினேன். இப்பொழுது மற்றவர்களுக்கு ஓரளவு மேலோட்டமான வலைப்பூ உதவிகளைச் செய்து தரும் அளவு முன்னேறியிருக்கிறேன். ஆர்வம் இருந்தால் போதும், எப்பொழுது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் யார் வேண்டுமானாலும். உங்களுக்கு இருக்கும் இளமைத் துடிப்புக்கு இவற்றையெல்லாம் நீங்கள் கற்றுக் கொள்வது பெரிதில்லை. நேரம் ஒதுக்குங்கள் போதும். வாழ்த்துக்கள்!

      நீக்கு
  26. அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  27. பதிவர்களை தாங்கள் ஊக்குவித்தல் என்னை வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நான் எப்போ ஊக்கு வியாபாரம் பார்த்தேன்.

      நீக்கு
  28. அருமையான சந்திப்பை அழகாய் விபரித்தீர்கள் கவிஞரின் பரிசு கண்ணைப்பறிக்குது))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு