இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

வந்துட்டன்... அபுதாபி

 
அன்பு நெஞ்சங்களே.... நலமா ? நான் வந்துட்டன்... அபுதாபி கடந்த மாதம் இனிய இந்தியாவில் விடுமுறையில் இருக்கும் பொழுது பலருடைய பதிவுகளை எனது செல் போணில் திறக்க முடியவில்லை சிலருக்கு கருத்துரை போட முடியவில்லை, சிலருக்கு தமிழ் மணம் ஓட்டுப்போட முடியவில்லை குறிப்பாக நண்பர்கள் தஞ்சையம்பதி, குழலின்னிசை, வெங்கட் நாகராஜ், தில்லை அகத்து, மற்றும் பலருடைய தளங்கள் திறப்பதே கஷ்டமாக இருந்தது இருப்பினும் அனைத்தையுமே படித்து விட்டேன் 80தை அறியத் தருகின்றேன் குடும்பத்தில் பலருக்கும் சொளவு போல் செல் போண் வாங்கி கொடுத்திருந்தாலும் நான் இன்னும் அதே பழைய பண்டாரத்தைத்தான் வைத்துக்கொண்டு இருக்கின்றேன் ஊருக்கு வந்த காரணத்தால் எனது பதிவுகள் (சில பதிவுகளை விடயமே இல்லையென நானே வேண்டாமென்று நீக்கி விட்டேன்) அவசரமாக அள்ளித்தெளித்த கோலம் போல் காமா சோமா என்று இருந்திருக்கும் இதன் காரணமாகவோ... என்னவோ...
 
எப்படி இருந்த நான்...
இப்படி ஆயிட்டேன்.
 
இனி ‘’அப்படி’’ போக முயற்சிக்கின்றேன் நட்புகளே...
அடுத்து வரும் எனது பதிவுகள் ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, வித்தியாசமாக ஒருநாள் விட்டு மறுநாள் தரலாம் என்று நினைக்கின்றேன் வருகையாளர்கள் அதிகரித்தால் தினம் எமது பதிவுகள் வெளிவரும் 80 குறிப்பிடத்தக்கது தொடர அழைக்கின்றேன்.
 
தேங்கி கிடக்கும் எமது எண்ணங்கள் ஓங்கி ஒலிக்கும் விண்ணில்.
என்றும் நட்புடன் கில்லர்ஜி.


68 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்! மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முதல் வருகை தந்து முத்தாய்ப்பாய் வருகை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. மீண்டும்
    அசத்தல்கள்
    தொடரட்டும்
    டும்., டும்., டும்.,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக அசத்த முயல்வேன் நண்பா....

      நீக்கு
  3. பயணம் சிறப்பாக முடித்துத் திரும்பியது அறிய
    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும், வாழ்த்திற்க்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  4. விட்ட இடத்தை சீக்கிரமே பிடிச்சுடுவீங்க! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தொடர் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  5. வாழ்த்துக்கள் நண்பரே
    தேங்கிக் கிடக்கும்
    உமது எண்ணங்கள்
    ஓங்கி ஒலிக்கட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே கண்டிப்பாக ஒலிக்கும் 8த்திற்க்கும்.

      நீக்கு
  6. அன்புள்ள ஜி,

    தங்களின் தாய்நாட்டுப் பயணம் வெற்றியடைந்தது நாடு திரும்பியதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களை சந்திக்காமல் தொலைபேசித் தொடர்புடன் முடிந்து விட்டதில் வருத்தம் உண்டு.

      நீக்கு
  7. indiavilum mobile mulam pathivukal padithu comment pottaa ungal aarvam paarattathirkkuriyathu sir.


    pathivil thodarungal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மகேஷ் தங்களிடம் பலமுறை பேச முயற்சித்தேன் தொடர்பு கிடைக்கவில்லை பிறகு மறதியும் ஒரு காரணம்.

      நீக்கு
  8. தங்கள் வரவு நல் வரவாகட்டும். ஜீ ......தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, மேடம் வாங்க ம்ம் தொடர்ந்து வாங்க....

      நீக்கு
  9. தேங்கி கிடக்கும் தங்கள் எண்ணங்கள் ஓங்கி ஒலிக்கட்டும் நண்பரே...வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே முயல்வேன் முயன்றவரை...

      நீக்கு
  10. ஆகா.. மறுபடியும் மட்டையடி!..

    வருக.. வருக.. என்று இருகரம் நீட்டி வரவேற்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வரும்போதே மட்டையோடுதான் வந்தேன்.

      நீக்கு
  11. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்...

    உங்க கிட்டயும் பழைய பண்டாரம் தானா!.. எங்கிட்டயுந்தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ரகசியத்தை வெளியில் சொல்லமாட்டேன் ஆனால் மற்றவர்கள் படித்து தெரிந்து கொண்டால் நான் பொருப்பல்ல...

      நீக்கு
  12. இந்தியப் பயணம் முடித்து மீண்டும் அபுதாபி...... வாழ்த்துகள்....

    தமிழ்மணம் - விரைவில் முதலாம் இடம் பெற வாழ்த்துகள் நண்பரே.

    தொடர்ந்து சந்திப்போம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தாங்கள் தமிழ் நாடு வந்திருந்தும் சந்திக்க முடியாமல் போய் விட்டதே..

      நீக்கு
  13. மறுபடியும் அப்படி ஆவீர்கள் என்று எமக்குத் தெரியும். தாய்மண்ணில் சொந்தங்களையும் நண்பர்களையும் தாங்கள் அனுபவித்து மறுபடியும் எழுதத்தொடங்க உள்ள நிலையில் தங்கள் எழுத்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தங்களுக்கு சிகப்புக்கம்பள வரவேற்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தங்களைப் போன்றவர்கள் சிவப்பு கம்பளம் விரிக்கும் பொழுது அதில் மஞ்சள் பூக்கள் பூக்க வைப்பேன் விரைவில்....

      நீக்கு
  14. விட்டுப் போன தமிழ்மணம் சிகரத்தை மீண்டும் எட்டிட வாழ்த்துக்கள். உங்களது இந்திய பயண அனுபவங்களை தொடர்பதிவாக எழுதவும்.
    த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே கண்டிப்பாக பயணக்கட்டுரை வரும்.

      நீக்கு
  15. இந்தியா வந்து மீண்டும் அபுதாபிக்கு சென்ற சகோவுக்கு வாழ்த்துக்கள் ! இனி தினமும் உங்கள் பதிவை காண ஆவலாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினமும் வருகை தந்தால் பதிவுகள் கண்டிப்பாக வரும் சகோ.

      நீக்கு
  16. ஆகா சகோவுடன் தொடர்பில் இருக்க தங்களை நாடு கடத்தினால் தான் எங்களால் இயலும் போல....ஹஹஹ (சும்மாக்கும் சரியா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நாடு கடத்தும் அளவுக்கு நான் கொலைகாரனா ?

      நீக்கு
  17. வருக, வருக, தங்கள் வரவு நல்வரவாகுக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், வாழ்த்திற்க்கும் நன்றி

      நீக்கு
  18. மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஐயா தங்களை சந்திக்காமல் போனதில் வருத்தம் உண்டு.

      நீக்கு
  19. மீள்வருகைக்கும், மின்னல் போல் பதிவுகள் தொடரவும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முயல்கின்றேன் தங்களுக்காகவும்.

      நீக்கு
  20. வாருங்கள் சகோ,
    விடுமுறை விரும்பியது போல் கழித்து தங்கள் பணி தொடர்ந்தது மகிழ்ச்சி,
    இனி,,,,
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலம்தானே சந்திப்போம் பதிவுகளில்.....

      நீக்கு
  21. இல்லம் வந்து சென்றீர் !மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா தங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  22. இனிய சந்திப்பை மறக்க முடியுமா ,மீண்டும் பு கோ வில் சந்திக்க முடியாதா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் மீண்டும் சந்திப்போம் நண்பரே...

      நீக்கு
  23. வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  24. சூப்பர் ஜி ... சந்தித்ததில் மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் நண்பா!
    தாயக- பயண நாயகனை நலம் பாடி வரவேற்கிறோம்.
    இந்த ஒட்டக தேசத்து வலைப் பெட்டக நாயகனின் சேமிப்பு பதிவுகள்
    முன்னேற்றத்தின் முதல் படிக்கட்டை எட்டட்டும்!
    வெற்றி மேளம் கொட்டட்டும்!
    வாழக! வளர்க!
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே.

    நலமா.? தாங்கள் நலமுடன் தாயகத்திலிருந்து திரும்பி பணியின் நோக்கத்திற்காக அபிதாபி வந்ததை தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இனிய இந்தியாவில் விடுமுறையை மகிழ்வாக கழித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.விடுமுறையில் தாங்கள் இட்ட பதிவுகளை படித்தேன். உடனுக்குடன் கருத்திட எனக்கு இயலாமல் போய் விட்டது.காரணம் உங்களுக்கும் தெரியும். இருப்பினும் வருந்துகிறேன். இனி தாங்கள் எண்ணியபடி பதிவுகள் பல தந்து முதலாமிடத்தில் சாதனை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நானும் தொடர்ந்திட முயற்சிக்கிறேன்.
    தங்களுக்கு முடியும்போது என் வலைப்பக்கம் வந்து கருத்திட்டால் மகிழ்வடைவேன்.நன்றி.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ நலமே..... தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி தங்களது பதிவை தொடர்ந்து கொண்டே இருப்பேன்.

      நீக்கு
  27. வாங்க ஜி! இனி கலக்குங்க...தமிழ்நாட்டை யே கலக்கிட்டுப் போயிருக்கீங்க...அதுலருந்து எவ்வளவு கிடைக்கும்...

    பதிலளிநீக்கு
  28. தாயகத்திலிருந்து திரும்பியமை அறிந்து மகிழ்ச்சி. வழக்கம்போல் சுவையான பதிவுகளைக் காண காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம்
    ஜி
    மீண்டும் அமைதியான இடந்தேடி தனியாக சென்று விட்டீர்கள் சொந்தங்களை விட்டு...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு