பூக்கடைக்கு விளம்பரம்
எதற்கு ? என்பார்கள் இருப்பினும் இவரைத்
தெரியப் படுத்துகிறேன் காரணம் என்ன ? பூவோடு சேர்ந்த இந்த (கில்லர்ஜி) நாரும் மணம் பெறும் என்ற நப்பாசையே... அன்றி வேறில்லை.
ஐயா திரு. பழனி கந்தசாமி
அவர்கள் வலையுலகில் ‘’பழம்’’ பெறும் பதிவர் என்பது வலையுலகம் அறிந்த விடயமே... கோவைக்கு
திருமணத்திற்கு வருகிறேன் என்று சொல்லவும் கண்டிப்பாக வருவேன் என்று சொன்னவர்
சொன்னபடியே குறிப்பிட்ட திருமண மண்டபத்திற்கு காலையிலேயே வந்து விட்டார்
பதிவுகளில் அவருடைய கரடு முரடான கருத்துரைகளையும், ப்ரொப்பைலில் இருக்கும் அவருடைய
முறுக்கிய மீசையையும் கண்ட நான் உண்மையிலேயே கொஞ்சம் பயந்துதான் இருந்தேன் ஆனால் நேரில்
கண்டபொழுது எனது கணிப்பு பொய்யாகி விட்டது.
வயதில் சிறியவரையும் வணங்கி
இன்முகத்துடன் பேசிப்பழகும் அவரின் இயல்பு நிலை கண்டு பிரமித்தேன் அவரிடமிருந்து
கத்துக்குட்டியான நானும் சில விடயங்களை கற்றுக் கொண்டேன் கற்றல் என்பது மரணம்வரை என்று சொல்வார்கள்
உண்மைதானே...
பிறகு மீண்டும் ஒருநாள்
வீட்டுக்கு வந்து என்னை அவரது காரில் வீட்டிற்க்கு அழைத்துப் போனார் வீட்டில் அவரது
கணினியில் சில விடயங்களை பகிர்ந்து கொண்டோம் பிறகு மருதமலை போகும் வழியில்
அவருக்கு ஒரு சிறிய வேலை காரணமாக ஐயா வேலை செய்த கோயமுத்தூர் வேளாண்மை
பல்கலைக்கழகம் போய் முடித்து விட்டு மலையேறி முருகனிடம் இருவருமே (மனதிற்குள்
சீக்கிரமே தமிழ் மணத்தில் நான் முதலிடம் பிடிக்க அருள் கொடு தமிழ்க்கடவுளே முருகா
என்று இருக்குமோ ?) வேண்டிக்கொண்டோம் எவ்வளவோ
விடயங்களைக்குறித்து பேசினோம், வலைப்பூவைப்பற்றி, எனது வாழ்க்கைக்குள் பந்தப்பட்ட
விடயங்களைப்பற்றி, நாட்டு நடப்புபற்றி, பிறகு மதியம் ஹோட்டல் அன்னபூர்ணாவில்
அன்னம் களித்து என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டார் எமது வாழ்வில் இன்றைய பொழுது
புதுமையான இனிமையான பொழுது என்பது எமது திண்ணமான எண்ணம்.
ஒட்டிக்கோ கட்டிக்கோ
விவேக் & தமிழ்வாணன்
வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் தொடரும்...
கொடுத்து வைத்தவர் நண்பா நீவீர்!
பதிலளிநீக்குவலையுலகின் மூத்த பதிவர் அய்யா
பழநி கந்தசாமி அவர்களின் நட்பை நான்கு தலைமுறை சொல்லும் அளவிற்கு
பாசத்தை பதிவாக்கி விட்டீர்கள்.
மருத மலை முருகன் உங்கள் இருவரில் யாருக்கு தமிழ்மணம் மாம்பழம் தரப் போகிறார்?
சீக்கிரம் பதிவு என்னும் தேரில் பவனி வாருங்கள்....
பாராட்டு மாலையோடு காத்திருக்கிறோம்.
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
வருக நண்பரே முதல் வருகைக்கு வணக்கமும், நன்றியும்.
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஅருமையான இனிய சந்திப்பு! நேரில் காண்பதுபோல்
உங்கள் பதிவு அதுவும் சிறப்பு!
உறவுகள் தொடர்கதை என்பது பதிவுலகைப் பொறுத்த மட்டில்
நூற்றுக்கு நூறுவீதம் உண்மை!
தொடரட்டும் உங்கள் சந்திப்புகள்!
வாழ்த்துக்கள் சகோ!
வாங்க சகோ நலம்தானே.... நீண்ட இடைவெளிக்குப்பிறகு உடல் நலம் பெற்று எமது தளம் வந்தமைக்கு நன்றி தொடர்ந்தால் சந்தோஷமே....
நீக்குசில முறை நானும் ஐயாவை சந்தித்து இருக்கிறேன். உங்கள் சந்திப்பு பற்றி அறிந்து மகிழ்ச்சி நண்பரே.... சந்திப்புகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.
நீக்குநன்றி, கில்லர்ஜி. என்னை மிகவும் உயரத்தில் கொண்டு போய் வைத்து விட்டீர்கள். தலை சுற்றுகிறது. கீழே விழுந்தால் என்ன ஆவேன் என்ற பயம் மனதைக் கலக்குகிறது.
பதிலளிநீக்குபோட்டோக்கள் அருமை.
வணக்கம் ஐயா யதார்த்தமான உண்மையை எழுதினேன் அவ்வளவுதான் நிறைய விடயங்கள் எழுத மறந்து போனது காரணம் புகைப்படங்கள் அதன் விபரம் மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.
நீக்குஇனிய சந்திப்பு. கந்தசாமி ஸார் அவர் பதிவில் எழுதி இருந்ததையும் படித்தேன். இதுபோன்ற நட்புகள் வலையுலகின் பரிசு.
பதிலளிநீக்குவாருங்கள் நண்பரே தங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதில் வருத்தமே...
நீக்குகோவைக் காரரின் மீசையைப் பார்த்து
பதிலளிநீக்குதாங்கள் பயந்துவிட்டீர்களாக்கும்,
ஆகா தங்களது மீசையைப் பார்த்துதான் வலை உலவே
கலங்கிப் போயிருக்கிறது நண்பரே
ஆனாலும் ஒரு செய்தி நண்பரே
பெரிய அளவில் மீசை வைத்திருப்பவர்கள்
குழந்தை மனதுக்காரர்கள் என்று சொல்வார்கள்
தம +1
வருக நண்பரே உண்மையிலேயே நான் கண்ட வகையில் ஐயா குழந்தை மனதுக்காரரே தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி உண்டு வருகைக்கு நன்றி.
நீக்குஐயாவுடனான உங்களது சந்திப்பை உங்களது எழுத்தில் படித்து மகிழ்ந்தோம். உங்களின் உணர்வுகளுக்கு ஈடுகொடுத்த அவருக்கு நன்றி கூறவேண்டும். தொடர்ந்து தாய்மண்ணில் தாங்கள் சந்தித்தவர்களைப் பற்றிய பதிவுகள் வரும் என நினைக்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குஇதுவரை பார்த்திராத கோயிலுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. அடுத்த திவ்யதேசம் செல்ல காத்திருக்கிறோம்.
இம்மாதப்பதிவாக புத்தர் தொடர்பான ஒரு வரலாற்று நாடகத்தைக் காண அழைக்கிறேன்.
http://ponnibuddha.blogspot.com/2015/08/blog-post.html
முனைவரின் வருகைக்கு நன்றி தங்களை சந்தித்ததிலும் அளவற்ற சந்தோஷமே... இதோ வருகிறேன்
நீக்குஐயா பழனி கந்தசாமி அவர்களை சந்தித்ததை அழகிய படங்களோடு சுவைபட பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை.
நீக்குவலையுலக ஜாம்பவான்கள் கோவையில் சந்தித்துக் கொண்ட அனுபவம் இனிமை நிறைததாக இருக்கிறது. இனிய நினைவுகளின் தொகுப்பை எழுதியிருக்கும் விதம் அருமை நண்பரே!
பதிலளிநீக்குத ம 8
வாங்க நண்பரே ஜாம்பவான் (திரு. பழனி கந்தசாமி அவர்கள்) சரி அதென்ன ? ஜாம்பவான்கள் புரியவில்லையே... தெளிவாக எழுதுங்கள் நண்பரே..
நீக்குஅன்பின் இனிய சந்திப்பினைப் பகிர்ந்த விதம் அழகு..
பதிலளிநீக்குஉங்களுக்குத் தெரியாமல் - நானும் தொடர்ந்து வந்த மாதிரி இருக்கின்றது.
வாழ்க நலம்!..
வாங்கி ஜி தொடந்து வாருங்கள் போவோமா... புதுக்கோட்டை நன்றி ஜி.
நீக்குஒட்டிக்கோ கட்டிக்கோ ஜோடி யாரென்று சொல்லவே இல்லையே:)
பதிலளிநீக்குவருக ஜி மருமகன் விவேக் & மகன் தமிழ்வாணன்.
நீக்குஅப்படி என்றால் ,வெட்டிக்கோ என்பதையும் சேர்த்துக்குக்கலாமே :)
நீக்குஎதை வெட்டிக்க ?
நீக்குபழனி கந்தசாமி சார் அவர்களுடன் இனிய சந்திப்பு. அருமை.
பதிலளிநீக்குநட்பு வளர்க! வாழக வளமுடன்.
சகோவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி
நீக்குகற்றல் என்பது மரணம் வரை என்பது உண்மைதான் நண்பரே.....
பதிலளிநீக்குஉண்மையே உண்மையைத் தவிற வேறில்லை நண்பா...
நீக்குகோவை சந்திப்பு அருமை... எங்க ஊருக்கு வந்திருக்கீங்க .. சொல்லியிருக்கலாமே... இப்போது தொடர்ந்து இங்கு வரவில்லையாதலாம் அறிய முடியாமல் போயிருக்கலாம்....
பதிலளிநீக்குவாங்க சகோ நான் சந்திக்க நினைத்து தவறிய நபர்களில் தாங்களும் ஒருவர் வருகைக்கு நன்றி
நீக்குவலைப் பூவில் தெரிந்து கொள்வதற்கும் முகமறிந்து தெரிந்து கொள்வதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. டாக்டர் ஐயா பழக இனிமையானவர்.
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களின் கருத்தும் உண்மையே...
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குமகிழ்ச்சியான சந்திப்பு, மீசையைப் பார்த்து பயந்தது யார் நம்பிட்டோம்,,,,,,
என் சகோ சொன்னது போல் பெரிய மீசைக்குள்ளும் குழந்தை மனம் உண்மை தான் ,,,,,,,
அதெப்படி முருகன் என்ன சொன்னார்,,,,,,,,,,,,
நன்றி சகோ,
வாங்க சகோ நம்பிக்கையே வாழ்க்கை பிரார்த்தனையை வெளியில் சொல்லக்கூடாது தெய்வ குற்றமாகி விடும்.
நீக்குஉங்கள் இருவருடைய சந்திப்பு, பதிவு, படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கு. இந்த பதிவில் உங்கள் இருவரையும் நேரில் பார்த்த மாதிரி இருக்கு. சந்திப்பு தொடர வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குசகோவின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி.
நீக்குஅருமையான சந்திப்பு. அழகான படங்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே, தங்களின் தொடர் வருகைக்கு...
நீக்குமாம்பழம் போல் இனிக்கும் சந்திப்பு!
பதிலளிநீக்குதிக்விஜயம் முடிந்தது!
வருக ஐயா தங்களுடன் தொலைபேசியில் பேசியதில் மகிழ்ச்சி.
நீக்குஇனிமையான சந்திப்பை அழகிய படங்களுடன் எங்களோடு பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி சகோ.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி சகோ...
நீக்குபழனி கந்தசாமி ஐயாவை சென்னை பதிவர் சந்திப்பில் 2013ல் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடிய நினைவுகள் வருகின்றது. அருமையான மனிதர்! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மைதான் நல்ல மனிதர் வருகைக்கு நன்றி.
நீக்குஅய்யாவின் அளவு கடந்த அன்பு, பாசம், மனித நேயம் இவற்றை அறிந்திருக்கிறேன். தங்கள் பதிவு, பிணைப்பின் ஆழத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...
நீக்குமீசைக் காரரும் மீசைக் காரரும் சந்தித்துக் கொண்டது மகிழ்ச்சிதான்.
பதிலளிநீக்குபடங்களைப் பார்க்கும் பொழுது மகிழ்வாய் இருந்தது.
God Bless YOu
ஆம் நண்பரே மகிழ்ச்சியான விசயமே...
நீக்குகோவை 'பழம்'பெறும் வலைப் பதிவர்
பதிலளிநீக்குதிரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களைக்
கண்டு,
பேசி,
அவருடன் உண்டு, மகிழ்ந்த
பரவச தருணத்தை
அழகாய் பகிர்ந்தீர்கள்.
நன்றி!
.
நண்பர் நிஜாமுத்தீன் அவர்களின் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான சந்திப்பை அழகாய் பதிவிட்டீர்கள் சகோ!
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குமூத்த வலைப்பதிவர் முனைவர் அய்யாவுடன் உங்களது இனிய சந்திப்பு. மலரும் நினைவுகளில் ஒன்றாக உமது மனத்துள் அவ்வப்போது உதிக்கும்.
பதிலளிநீக்குதங்களின் தாமத வருகைக்கும் நன்றி நண்பரே...
நீக்குநாங்கள் அடிக்கடிச் சொல்லுவது...வலையில் அறிவதற்கும் நேரில் அறிவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு நண்பரே!
பதிலளிநீக்குஅருமையான சந்திப்பு! ஐயாவைப் பற்றி நேரில் அறியவில்லை என்றாலும் வலைத்தளம் மூலம் நன்றாகவே அறிவோம்....(கீதா உங்களிடம் நீங்கள் சொல்லும் முன்பே சொல்லியிருப்பாரே!!!!!!?) தொடரட்டும் இனிய சந்திப்புகள்! வலை அன்பு ஓங்கட்டும்! புகைப்படங்கள் அருமை!
தங்களின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி.
நீக்குஇன்னார் இனியர் என்று எண்ணாது பழகுபவர் முனைவர் பழனி கந்தசாமி மட்டுமல்ல பாசம் கந்தசாமி என்பதை நானும் அறிவேன்!
பதிலளிநீக்குஆம் ஐயா உண்மையே வருகைக்கு நன்றி.
நீக்குசந்தோஷமான சந்திப்பு....
பதிலளிநீக்குஐயா வலையில் படித்தேன்....
நன்றி நண்பரே
நீக்குஇனிமையான சந்திப்பு ஜி...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
சந்திப்பை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் வருகைக்கு நன்றி.
நீக்குஅவர் மீசையைப் பார்த்து இவர் அஞ்சுகிறாராம். உமது அக்கப்போருக்கு ஓர் அளவே இல்லையா?
பதிலளிநீக்குநான் எப்பொழுதுமே உண்மையை எழுதுபவன் உண்மையைத் தவிற வேறில்லை.
நீக்கு