இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 11, 2015

புதுக்கோட்டை போவோமடி...

வரவேற்பு பதாகை.

அன்பு நண்பர்களே... நண்பிகளே... எல்லா பெருந்தலை பதிவர்களும் புதுக்கோட்டை பதிவர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து எழுதி விட்டார்கள் இருப்பினும் இந்தக் கத்துக்குட்டியும் எனது பங்கு அழைப்பு விட வேண்டுமல்லவா ! ஆகவே இதை வித்தியாசமாக முளைக்கொட்டு பாட்டு மாதிரி அழைப்பு விடுப்போமே.. என்று மனதில் தோன்ற அப்படியே என் மனக்குறையும் வந்து விழுந்து விட்டது குறுக்கு கேள்வி கேட்பவர்களுக்கு நீங்கள் வராமல் அபுதாபியில் உட்கார்ந்து கொண்டு அழைப்பு விடுவது முறையா ? எனக்கேட்டு விடாதீர்கள் நானே வர முடியவில்லையேனு வேதனையில் இருக்கிறேன்.
(கனவிலாவது வந்து கலந்து கொல்வேன்)

மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான் மாளிகை
மன்னர் கல்லூரி
புதுக்கோட்டை போவோமடி தன்னானே... னானே...
வலைப்பதிவர் மாநாடாம் தில்லாலே... லேலோ...
பதிவர்களைக் காணலாமே தன்னானே... னானே...
வலையைப்பற்றி வாதிடலாம் தில்லாலே... லேலோ...

தொண்டைமான் கோட்டையடி தன்னானே... னானே...
தொண்டு செய்யும் கூட்டமடி தில்லாலே... லேலோ...
மனம் விட்டு பேசிடலாம் தன்னானே... னானே...
மனக்குறையை போக்கிடலாம் தில்லாலே... லேலோ...

புத்தகமும் வெளியீடாம் தன்னானே... னானே...
புதுமையான திருவிழாவாம் தில்லாலே... லேலோ...
கரந்தையாரின் புத்தகமாம் தன்னானே... னானே...
கரகோஷம் செய்திடுவோம் தில்லாலே... லேலோ...

முத்து நிலவர் தலைமையிலே தன்னானே... னானே...
முத்து முத்தாய் திட்டங்களாம் தில்லாலே... லேலோ...
எட்டுத் திக்கும் ஒலிக்குதடி தன்னானே... னானே...
ஏட்டினிலே எழுத வைப்போம் தில்லாலே... லேலோ...

அறிஞர்களின் கோட்டையடி தன்னானே... னானே...
அறிந்திடலாம் அறிவுலகம் தில்லாலே... லேலோ...
புலவர்களும், கவிஞர்களும் தன்னானே... னானே...
புறப்பட்டாங்க புதுக்கோட்டை தில்லாலே... லேலோ...

ஆரோக்கிய மாதா மன்றத்திலே தன்னானே... னானே...
ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம் தில்லாலே... லேலோ...
மதிய விருந்தும் இருக்குதடி தன்னானே... னானே...
மகிழ்ச்சியோடு களித்திடலாம் தில்லாலே... லேலோ...

விழா சிறக்க வாழ்த்திடுவோம் தன்னானே... னானே...
விசித்திரமாய் வியக்க வைப்போம் தில்லாலே... லேலோ...
சந்தோஷமாய் கூடிடுவோம் தன்னானே... னானே...
சரித்திரமும் பேச வைப்போம் தில்லாலே... லேலோ...

ஆண்டுதோறும் நடத்திடுவோம்  தன்னானே... னானே...
அடுத்து எங்கு முடிவெடுப்போம் தில்லாலே... லேலோ...
தமிழ் வாழச் செய்திடுவோம் தன்னானே... னானே...
தமிழர் என தலை நிமிர்வோம் தில்லாலே... லேலோ...

அகிலமெல்லாம் அழைப்புகளாம்  தன்னானே... னானே...
அபுதாபிக்கும் வந்துருச்சே தில்லாலே... லேலோ...
விரைந்து நானும் வந்திடவும் தன்னானே... னானே...
விடுமுறைதான் கிடைக்கலையே தில்லாலே... லேலோ...

புதுக்கோட்டை போவோமடி தன்னானே... னானே...
வலைப்பதிவர் மாநாடாம் தில்லாலே... லேலோ...
பதிவர்களைக் காணலாமே தன்னானே... னானே...
வலையைப்பற்றி வாதிடலாம் தில்லாலே... லேலோ...

தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
(ஏதோ கவிதை மாதிரி நினைத்து எழுதினேன்)
மையத்தில் சொடுக்கி பெரிதாக காண்பீர்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.
இன்று தேதி11.09.2015 அடுத்த மாதம் இதே தேதியில் 11.10.2015
இலவச பேரூந்து வசதி.
முட்டை மாஸ்’’சுடன் அருசுவை உணவு.
இடையே தேநீரும் உண்டு.
இயன்றவர் நிதி தாரீர்.
வழித்தடங்கள் அறிய அரியநாயகத்தை அழைக்க... 9876543210

நண்பர்களே... நண்பிகளே... எனது சார்பாக எனது மகன் தமிழ்வாணன் அல்லது தங்கை மகன் விவேக் கலந்து கொள்வார்கள் இதைப் படித்த கையோடு கையேடு மற்றும் பணம் அனுப்புவதற்க்கான விபரங்களை கண்டு தங்களது விடயங்களை அனுப்புவீரே... இணைப்பு இதோ...

என்னை சொடுக்குவீரே... பிறகு பணம் அனுப்புவீரே

அன்பு நெஞ்சங்களே நமது மரியாதைக்குறிய திரு. சுப்பு தாத்தா அவர்கள் உடனே இதைப்பாடி You Tube இணைத்து விட்டார்கள் அதையும் கேட்டு தாத்தாவுக்கு வாழ்த்து சொல்வீரே... இதோ இணைப்பு.

https://www.youtube.com/watch?v=uUqs5TQ9FRs
 

84 கருத்துகள்:

  1. முத்துநிலவன் அய்யா கவனத்திற்கு ,
    விழா மேடையில் இந்த பாட்டை பாடிட சொல்லலாமே :)

    பதிலளிநீக்கு
  2. டிக் டிக் டிக்
    டிக்கெட்டு
    டில்லிக்கு ராசாவே
    டிராவிட் போல் எடுத்தாயோ
    கவி விக்கெட்டு!
    வாழ்த்துகள் கில் கில் கில்லர்ஜி
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா ராக்கெட்டு போல வந்து விட்டீர்களே...

      நீக்கு
  3. அருமை, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. விழா சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. ஆகா
    தங்களின் கை வண்ணத்தில்
    அருமையான பாட்டு நண்பரே
    பாடிப் பாடி அழைத்திருக்கின்றீர்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  6. புதுக்கோட்டைக்கு தாங்கள் வராவிட்டாலும் தங்களின் இப்பாடலைப் பற்றிப் பலர் பேசுவர். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் கருத்துரை சந்தோஷமளிக்கின்றது நன்றி

      நீக்கு
  7. உங்களால் வெளி நாட்டிலிருப்பதால் வர இயலவில்லை. என்னால் உள் நாட்டில் இருந்தும் வேறொரு பணி காரணமாக கலந்துகொள்ள முடியாது. மாநாட்டைப்பற்றி தாங்கள் எழுதியுள்ள தெம்மாங்கு பாட்டை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எல்லோருக்கும் சூழ்நிலைகள் ஒருங்கே அமைவதில்லையே...

      நீக்கு
  8. வணக்கம் ஜி!!! அடடடா என்னமா பாடுரிங்க!!! அழகு!!! கண்டிப்பா மாநாடுக்கு போகனும்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா தங்களின் வருகைக்கு நன்றி ஒருபதிவு கடந்து விட்டதே...

      நீக்கு
  9. விழா மேடையில் இந்தப் பாடலை பாடி விடுவோம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ரசிக்கும்படி இருந்தால் நல்லதே....

      நீக்கு
  10. தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் உங்களது பாடல் இடம்பெறப்போகிறது ... வாழ்த்துக்களுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன் -ரேடியோ மார்கோனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே... அப்படி நடந்தால் சந்தோஷமே...

      நீக்கு
  11. அருமை அண்ணா....
    அழகான தன்னானே... தில்லாலோவில் விவரம் சொல்லிட்டீங்க...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. உற்சாகப் பாட்டு.. உல்லாசம் தான்..
    தில்லாலே பாட்டு.. சந்தோஷந்தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பொழுது சாயவும் குவைத்துக்கு வர்றேன் அப்படியே நம்ம ஒட்டகத்தை தயார் செய்யுங்க இப்ப புறப்பட்டால்தான் விழாவுக்கு புதுக்கோட்டை போய் சேரலாம்.

      நீக்கு
    2. அதைத் தான் ரெண்டு நாளா தேடிக்கிட்டு இருக்கேன்!..

      நீக்கு
    3. ஏன் ? ஜி அவுத்தா விட்டு இருந்தீங்க ?

      நீக்கு
    4. நாந்தான் இன்னும் ஒட்டகம் வாங்கவே இல்லையே!..

      நீக்கு
    5. அப்படீனாக்கா ? வேலைக்கு எப்படி போறீங்க ?

      நீக்கு
  13. ஆஹா! சூப்பரான பாட்டு பாடி பதிவா்களை சந்திக்க வருகிறீா்கள் போல... வாங்க! வாங்க!

    பதிலளிநீக்கு
  14. வரமுடியவில்லை என்றாலும் அன்றைய தினம் அனைவா் மனமும் அங்கு தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ வருகைக்கு நன்றி வரத்தான் இயலவில்லை பாடியாவது பார்ப்போம் (சுப்பு) தாத்தா மா3

      நீக்கு
  15. https://www.youtube.com/watch?v=uUqs5TQ9FRs

    your song here.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தாத்தா உடனே மேலே இணைப்பை இணைத்து விட்டேன்.

      நீக்கு
  16. அழகான படங்களோடு அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
  17. கேட்டாலே நடுங்கவைக்கும் பெயரோன்
    புதுக்கோட்டைப் பதிவர் மாநாடு பற்றி
    பாட்டாலே அவிட்டாரே... கண்டியளோ!
    காட்டினாரே பேரூந்து வழி
    நீட்டுவார் சிற்றுண்டி எல்லாம் என
    சாட்டினார் பாட்டாலே எல்லாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே புதுமையாக கருத்தளித்தமைக்கு நன்றி

      நீக்கு
  18. பாட்டு அருமை சகோ, வருவதாக செய்தி வந்தது,,,,,,,,
    வாங்க வாங்க புதுக்கோட்டைக்கு,,,,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் பாடிய சுப்புத்தாத்தாவுக்கும்.... எழுதிய தங்களுக்கும்...

    பதிலளிநீக்கு
  20. தமிழ்மணத்தில் வாக்கும் சேர்த்தாச்சு...

    பதிலளிநீக்கு
  21. புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு விழாவுக்கான தீம் பாட்டாக தங்களது பாடலை மாற்றிவிடலாம் போல, விழாவில் நடைபெறப் போகும் அத்தனை நிகழ்வுகளையும் பாடலிலே சொல்லி அசத்திவிட்டீர்கள். அருமை நண்பரே!
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னையும் நினைவில் வைத்து வருகை தந்தமைக்கு நன்றி...
      6 பதிவுகள் கடந்து விட்டது இதில் தங்களைப்பற்றிய குறிப்புகள் 2 பதிவு

      நீக்கு
  22. பாடியே பட்டையை கிளப்பீட்டீங்க சகோதரரே!

    என்னமாதிரி சொற்களெல்லாம் சோடனையோட
    வரிசை கட்டி வந்திருக்கு..! அருமையோ அருமைதான்!

    மனம் கவர்ந்த பாடல்!
    உளமார்ந்த வாழ்த்து சகோதரரே!

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே பொய் சொல்ல மாட்டீர்கள் 80 எமது கருத்து வாழ்த்தியமைக்கு நன்றி தங்களின் என்.எஸ் கிருஷ்ணன் - டி.ஏ. மதுரமும் பாடியது போன்ற கவிதையும் கண்டேன் தங்களை வாழ்த்தும் பக்குவம் எமக்குப் போறா மிகவும் இரசித்தேன்.

      நீக்கு
  23. பட்டையை கிளப்பி பாட்டையும் தந்துவிட்டீர்கள் நண்பரே.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்லவேளை பட்டையை ''கிளப்பினேன்'' என்று சொன்னார்கள்

      நீக்கு
    2. சாரி நண்பரே சொன்னீர்கள் 80சொன்னார்கள் என்று வந்து விட்டது

      நீக்கு
  24. தங்கள் பாணியில் அசத்தலான பதிவு
    ஆமாம்
    ஷோக்கா தேனீர் அருந்தும் இந்த
    ஷேக்கு யாரு பாத்தா நம்ம ஊருக்காரர் மா3 தெரியலையே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே தாங்களாவது அவரைப்பற்றி கேட்டீர்களே... ஒருவேளை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையோ என்று நினைத்தேன் நன்றி

      நீக்கு
    2. அடையாளம் தெரிந்து என்ன செய்யப்போகின்றோம் .. ஜி?..

      Super Dust Tea.. குடிக்கிறதுக்கு தங்க ஸ்டிக்கானா!..

      ஆனா பாருங்க.. தலைக்கயிறு மட்டும் கொஞ்சம் முரடா தெரியுது!..

      நீக்கு
    3. ஆளும் முரடுதானே... ஜி

      நீக்கு
  25. அருமை அருமை சகோதரா!

    பதிலளிநீக்கு
  26. நீங்கள் செல்லாவிட்டாலும் அங்கு ஒலிக்கப் போவது உங்கள் பாட்டுதான்!

    பதிலளிநீக்கு
  27. அன்புள்ள ஜி,

    புதுக்கோட்டையில் வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்குப் போகலாம் என்றே கைதட்டி கும்மியடித்து ஆடிப்பாடி அழைத்தது நன்றாக இரசிக்க வைத்தது பாடல். வாழ்த்துகளுடன் பாராட்டுகள்.

    நன்றி.
    த.ம.14.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  28. முத்துநிலவன் ஐயா அவர்களின் குரல் மிக அழகாக இருக்கும் அவர் விசுவின் புத்தகவெளியீட்டு விழாவில் ஒரு 4 வரி தமிழ் பெருமை பற்றி பாடினார் அருமை....எனவே இந்தப் பாட்டையும் அவரே பாடிடலாம் அங்கு.....ஐயா எங்களுக்கு இதைப் பற்றித்தான் எழுதியிருந்தார். நாங்கள் ஐயாவிடமே சொல்லிவிட்டால் ஆச்சு....அருமை ஜி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  29. அந்த மோதி ஷேக் என்ன ஷேக்கு குடிக்கிறாருங்கோ?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோதிலால் நேரு பேரன் சுக்கு கசாயம் குடிக்கிறாரு...

      நீக்கு
  30. அந்த அரியநாயகம் வய்சான கில்லர்ஜி மாம்ம்ம்ம்ம்திரிலா இருக்கு...ஹஹஹ்...அம்புட்டு பெரிசா மீசை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அப்படியா இருக்கூகூகூகூகூகூகூ.....

      நீக்கு
  31. கருத்து போட பயமாயிருக்கு...!! என்னமா கலக்கிறீங்க. சூப்பர் அண்ணா ஜி. வாழ்த்துக்கள். கவலைப்படாதீங்க. பதிவர் விழா வேறு நடக்காமலா இருக்கபோகுது. அப்போ கலந்து ஜமாய்ங்க.!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ எதற்க்கு பயம் உள்ளதை உள்ளபடி சொன்னால் போதும் அடுத்த வருடம் கண்டிப்பாக கலந்து கொள்வேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  32. பாட்டு அற்புதம் சகோ. விழா சிறக்க வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  33. எல்லாமே சரி ஜி. வலை பற்றி வாதிடலாம் என்பதுதான் இடிக்குது. பார்ப்பவரை எல்லாம் புகழ்ந்து தளுவோம் என்பதே சரி. இர்ண்டாவது சைவ உணவு என்றுதான் கேள்விப்பட்டேன் . அருமையான ஆக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூவைப்பற்றி நிறைய பேசலாம் என்ற ரீதியில் எழுதினேன் ஐயா (அ)சைவமா ? பரவாயில்லை நான் சைவமும் சாப்பிடுவேன்

      நீக்கு
  34. விழாவினைப் பற்றி அருமையான பாட்டுப் பாடி அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள் கில்லர்ஜி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  35. வலைப்பதிவர்களுக்கான விழா பற்றிய பதிவு அழகு !( வண்ணப்படங்கள்) அருமை.(கவிதை)!..வாழ்த்துக்கள் கலந்து கொள்ளும் வலைப்பதிவர்களுக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  36. அருமையான பாடல்.எனக்கும் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற கவலையுண்டு.

    பதிலளிநீக்கு
  37. ஆஹா...எ ன்னவொரு அழகான பாடலால் அழைப்பு... சந்தநயம் கொஞ்சுகிறது. பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி சகோ பாராட்டுகளுக்கு.

      நீக்கு
  38. அய்யா பதிவு போட்டீர்கள்...பாட்டுப் போட்டீர்கள்...பணமும் போட்டீர்கள்.. அந்த விட்ஜெட் இணைப்பையும் உஙகள் தளத்தில் நிலையாக நிறுத்திப் போட்டிருக்கலாம்ல? நீங்கள் போட்டு வைப்பீர்கள் என்பதால் உங்களுக்கு எங்கள் முன்கூட்டிய நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயன்றுகொண்டுதான் இருக்கிறேன் அன்பர்களே... அவ்வளவு விஞ்ஞான அறிவு எனக்கு இருந்திருந்தால் இந்நேரம் மோடியுடன் மோதி ஆட்சியைப்பிடிச்சு இருப்பேன் இருப்பினும் எனது பதிவுகளில் இணைப்பைக் கொடுத்துக் கொண்டு வருவேன் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  39. ஆஹா! அசத்தலான பாடல் சகோ!
    விடுமுறை கிடைக்கலையின்னா என்ன? உங்க பாட்டு புதுக்கோட்டை போயிடுச்சே.. புதுக்கோட்டை மட்டுமா, வலையுலகம் எல்லாம்!
    வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு