நண்பர்களே... நண்பிகளே...
கடந்த தமிழ்ப் பதிவருடன், in U.A.E பதிவில் நண்பர் மனசு சே. குமார் அவர்கள் அபுதாபியை சுற்றி சுற்றி
காண்பித்தார் என்று சொன்னேன் அல்லவா !
U.A.E என்று சொல்வது 7 Stateகளை
கொண்டது அதாவது...
01. Abu Dhabi - அபுதாபி
02. Dubai - துபாய்
03. Al Sharjah - ஸார்ஜா
04. Ajman - அஜ்மான்
05. Al Fujairah
- புஜைரா
06. Ras Al
Khaimah - ராஸ்
அல் கைமா
இதில் உங்கள் கில்லர்ஜி வசிக்கும்
இடம் என்பதால் அபுதாபியை தலைநகரம் ஆக்கி விட்டார்கள் மற்றவையும் சிட்டிகள்தான்
மொத்தம் 7 ஊர்கள் மட்டுமே இடையே நம்மூர் ஆண்டிப்பட்டி
அரசன்பட்டி மாதிரி சிற்றூர்களும் உண்டு இந்நாட்டின் மொத்த பரப்பளவு 67,340 சதுர கிலோ மீட்டர்கள் சிறு, சிறு ராஜ்ஜியங்களாக
இருந்த 7 ஊர்களை 2004 ம்
ஆண்டு மறைந்த முன்னாள் அதிபர் ஜனாப். ஷேக் ஸையித் பின் சுல்த்தான் அல் நஹ்யான்
அவர்களின் (இவருக்கும் மறைந்த நமது முன்னாள் பிரதமர் திருமதி.
அன்னை இந்திரா பிரியதர்ஷிணி காந்தி அவர்களுக்கும் நல்லதொரு நட்புணர்வு இருந்தது)
பெரும் முயற்சியால்
ஒன்றிணைக்கப்பட்டு 1971 டிசம்பர் 2 முதல் அனைத்தையும் முழுமையாக்கி United Arab Emirates (U.A.E) என்று பெயர் சூட்டப்பட்டது அதற்க்கு முன்புவரை
இங்கு கடல்வழி வணிகர்களின் வாயிலாக தி கிரேட் இந்திய ரூபாய்கள் புழக்கத்தில்
இருந்திருக்கின்றது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 2 மற்றும் 3 ம் தேதிகளை
தேசிய தினமாக கொண்டாடப்பட அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது
7 சிட்டிகளுக்கும் தனித்தனியே
ஷேக்குமார்கள் உண்டு (சே. குமார் அல்ல) அதாவது நம்மூர்
முதல்வர்கள் போல ஒருநாள் முதல்வர்கள் அல்ல நிரந்தர முதல்வர்கள் அதாவது மரணகாலம்
வரை.
الشيخ. زايد بن سلطان أل نهيان
ஷேக் ஸையித் பின் சுல்தான் அல் நஹ்யான்
Sheike.
Zayed Bin Sultan Al Nahyan
(1918 - 2004)
இந்தியர்களை மிகவும் நேசித்தவர்
வாருங்கள், நட்புகளே...
அபுதாபியை சுற்றிப்பார்ப்போம்.
அபுதாபி ரீம் ஐலேண்டில்
உருவாகப் போகும் சிட்டி.
புகைப்படத்தை பெரிதாக காண
மையத்தில் ஒருமுறை எலியால் சொடுக்குக..
அபுதாபி மெரினா
மாலிலிருந்து அபுதாபி சிட்டியை பார்க்கும் கோணம்.
அபுதாபி எமிரேட்ஸ் பேலஸ்
ஹோட்டல் அருகில்.
அபுதாபி ஓல்ட் ஏர்போர்ட்
ரோடு கோர்னீச் அருகில்.
தி கிரேட் இந்திய ரூபாய்
அபுதாபி யாஸ் ஐலேண்ட் அல்
ஸம்ஹாவில் உள்ள Ferrari World Showroom
உருவாக்கும்
பொழுது...
உள்புறங்கள்....
துபாய் போகும் ரோட்டில்
உள்ள ஹோட்டல்.
இதுவும் யாஸ் ஐலேண்ட்.
துபாய் போகும் அல் ராஹா ரோட்டில்
உள்ள அலுவலக கட்டடம்.
ஹெலிகாப்டரிலிருந்து
அபுதாபி கோர்னீச்சை காணும் கோணம்.
அபுதாபி ஷேக் ஸையித் பின்
சுல்தான் அல் நஹ்யான் பாலம்.
செங்கோடன் மகன்
கலியமுத்து குளிக்க தாவும் பொழுது எடுத்தது.
உலகின் மிகப்பெரிய பள்ளி இரண்டாவது
நிலையோடு நிறுத்தக்காரணம் சவூதி அரேபியாவின் மெக்கா பள்ளியை மீறக்கூடாது என்ற
மரபு.
புகைப்படத்தை பெரிதாக காண மையத்தில் ஒருமுறை எலியால் சொடுக்குக..
அபுதாபி முஷ்ஷஃபா போகும்
வழி எனது அலுவலகம் அருகில்.
75 % இந்தியர்களின் உழைப்பில்
உருவானவை.
அபுதாபி மெரினா
மாலிலிருந்து அபுதாபி சிட்டியை பார்க்கும் கோணமே.
புகைப்படங்கள் அதிகமாகி
விட்டதால் இதன் தொடர்ச்சியை காண நாளை வாருங்கள் அதை வேறு கோணத்தில் பார்ப்போமா ?
மேற்கண்ட புகைப்படங்கள்
அனைத்தும் அபுதாபியிலுள்ள இடங்கள் மட்டுமே.
தொடரும்...
அழகிய படங்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குதுபாய் சுத்தி காமிக்கின்றேன் - என்று சுத்தியைக் காட்டாமல் - உண்மையிலேயே சுற்றிக் காட்டி விட்டீர்கள்..
பதிலளிநீக்குஒரு தினார்/திர்ஹாம் செலவில்லாமல் இனிய சுற்றுலா!..
நாளையும் உண்டு ஜி
நீக்குவாயில்லா அப்புராணியாச்சே ஒட்டகம்!..
பதிலளிநீக்குஅப்பு ராணி கதையில வந்த மாதிரியே இருக்கு!..
வழி தெரியாம வந்ததைப் புடிச்சி - இப்படி பண்ணிட்டாங்களே!..
நல்லவேளை ஜி உயிரில்லை இல்லைனா பிரியாணி போட்ருவாங்கே....
நீக்குவணக்கம் ஜி!! ஒவ்வொரு இடத்தையும் நல்ல ரசித்து ருசித்து கட்டியிறுப்பார்கள்போல!!! அவ்வளவும் அம்புட்டு அழகு! ரசனைகாரர்கள் மிகுந்த நாடு போல!! ம்ம்! நன்றி ஜி!
பதிலளிநீக்குஇல்லை நண்பரே இதன் பிண்ணனியில் இந்தியர்களே... அரேபியர்கள் சொல்வது OK மட்டுமே..
நீக்குசாயபுகளுக்கு நேரா கட்டடம் கட்டத்தெரியாதா? எல்லாம் கோணலும் மாணலுமாக் கெடக்கு.
பதிலளிநீக்குவாங்க ஐயா காரணம் இந்தியர்களே பிண்ணனியில் இந்தியனின் மிகப்பெரிய மூளைத்திறமை இருக்கிறது உங்கள் கணக்குப்படி கட்டினால் செலவு குறைவு வேலை உடன் முடிந்து விடும்
நீக்குஇந்த கணக்குப்படி கட்டினால் ? வேலைகள் கூடும் கொட்டேஷன் மாறும் புரிந்ததா ?
அமீரகம் யாரால் உருவாக்கப்பட்டது என்ற தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி! தங்களுடைய உபயத்தில் அபு தாபியை ஒரு வழியாய் செலவில்லாமல் பார்த்துவிட்டேன். அதற்கு நன்றி. படங்கள் மிக அருமை. கட்டிடங்கள் எல்லாம் பிரமாண்டமாய் இருக்கின்றன. பொது மக்கள் வசிக்கும் வீடுகள் எப்படி இருக்கும் என்பதையும் படம் பிடித்து போட்டுவிடுங்களேன். எல்லாவற்றையும் எனக்குப் பிடித்தது செங்கோடன் மகன் கலியமுத்து(?) குளிக்க தாவும்போது எடுத்த படம் தான்!
பதிலளிநீக்குவருக நண்பரே இன்னும் இருக்கின்றதே புகைப்படங்கள் இதில் உள்ள கட்டடங்களில் வசிப்பது 50 சதவீதம் இந்தியர்களே... அரேபியர்கள் 2 தளம் உள்ள வில்லாக்களில் வசிப்பார்கள் அவர்கள் பில்டிங் இஷ்டப்பட மாட்டார்கள் வில்லாவின் புகைப்படமும் தருகிறேன்.
நீக்குகலியமுத்து படம் நான் எதேச்சையாக குளிக்கப்போகும் பொழுது திடீனெர சுட்டது.
என்ன ஜீ நீங்க குளிப்பதே எதேச்சையாதானா!! நான் எதோ வெளிநாட்டு சதியாலதான் குளிப்பீங்க அப்படீன்னு நெனைச்சுட்டிருந்தேன் பஹூத் அச்சா..
நீக்குஎன்ன நண்பரே நான் எதேச்சையாக சொன்ன பதிலை வேற வழியில் உண்மையாக்கிட்டீங்க...
நீக்குUAE என்பதற்கான சொல் விளக்கத்தை இன்று தங்கள் மூலமாக அறியும் பாக்கியம் கிடைத்தது. நன்றி. புகைப்படங்களை எங்கிருந்து ஐயா எடுக்கின்றீர்கள், மிக மிக அருமை.
பதிலளிநீக்குமுனைவரின் கருத்துரைக்கு நன்றி இன்னும் புகைப்படங்கள் வரும் இது அபுதாபி மட்டுமே...
நீக்குபடங்கள் ஒவ்வொன்றும் அற்புதம் நண்பரே
பதிலளிநீக்குகாணக் கண் கோடி வேண்டும்
நன்றி நண்பரே
தம +1
வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி படங்கள் இன்னும் வரும்...
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
நான் வராவிட்டாலும் அபுதாபி பற்றி சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ஜி தகவல் பகிர்வுக்கு நன்றி த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லது நண்பரே செலவில் பாதியை மட்டும் மணியார்டர் செய்யவும்
நீக்குபுகைப்படங்கள் மிக அழகு.
பதிலளிநீக்குநன்றி சகோ நாளையும் வாருங்கள்.
நீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குமுதலில் நீண்ட இடைவெளிக்குப்பின் கருத்துக்களை கோர்த்தெடுத்துக் கொண்டு வருவதற்கு மன்னிக்கவும். நல்ல நல்ல பதிவாக கொடுத்துள்ளீர்கள். அனைத்தையும் படித்து வருகிறேன்.
இந்த பதிவில் தங்களது புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. அபுதாபியின் அழகிய இடங்கள் அதன் பிரமாண்டங்கள் பார்த்தாலே வியக்கும் வண்ணம் உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தங்கள் பாணியில் விளங்கங்கள் அருமை. இடையில் நகைச்சுவையுடன் கலியமுத்துவை அறிமுகபடுத்தியது உண்மையிலேயே சிரிக்க வைத்தது. u.a.e யின் விளக்கங்கள் விபரமாக இன்றுதான் அறிய முடிந்தது. மிக்க நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வருக தங்களின் வரு கண்டு சந்தோஷம் புகைப்படங்கள் இன்னும் வரும் நேரம் இருக்கும் பொழுது விடுபட்ட பதிவுகளை பாருங்கள் நன்றி
நீக்குஅடுத்த முறை பதிவர் சந்திப்பு அங்கு தான் ஜி... சரியா....?
பதிலளிநீக்குநல்லது ஜி நானும், சே. குமாரும் ஷேக்குமார்களிடம் பேசி விடுகிறோம்...
நீக்குதுபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற இடங்களை என் மகன் சுற்றிக் காட்டியிருக்கிறான் அங்கிருந்து வரும்போது ஏழூ ஊர்களிலும் இருந்த மணல் கொண்ட ஒரு பேழை வாங்கி வந்தேன். யுஏஇ யின் வளமான பகுதிகளையே காட்டி இருக்கிறீர்கள். இதற்காகப் பாடுபடும் இந்தியர்களின் நிலை பற்றி எழுதக் கேட்டிருந்தேனே படங்கள் சூப்பர்.
பதிலளிநீக்குவாருங்கள் ஐயா கண்டிப்பாக எழுதுகிறேன் வேதனையான விடயங்களே அதிகம் எழுதுகிறேன் படங்கள் அபுதாபி மட்டுமே...
நீக்குதெரியாத விஷயங்கள். பல அரிய படங்கள். இந்தியர்கள் உழைப்பில் உருவான கட்டிடம் பிரமிக்க வைத்தது.
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
நீக்குசெங்கோடன் மகன் கலிய முத்து குளிக்க தாவிய போது எடுத்த படம்தான் எனக்கு பிடிச்சிருக்கு..நணபரே....
பதிலளிநீக்குவாங்க நண்பரே எதார்த்தமாக எடுத்தேன்...
நீக்குசெலவில்லாமல் ஒரு சுற்றுப் பயணம். நன்றி நண்பரே.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே நாளையும் வருக....
நீக்குஅபுதாபியை அழகுற தந்தான் என்ற பட்டத்தையும் பெற்றமைக்கு நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குதொடர்ச்சி எப்போது?
(வாதாபி கொண்டான்)
நட்புடன்,
புதுவை வேலு
நாளையே வாருங்கள் நண்பரே..
நீக்குகண்கொள்ளாக் காட்சிகள் சகோதரரே!
பதிலளிநீக்குவிந்தை உலகு!
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
வருக கவிஞரே தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குவணக்கம் ஜி! கைபேசியில் பதிவு எழுதுவதால் உங்கள் டாஸ்போர்ட் "க்கு என் பதிவு வராது?? நேரம் கிடைக்கும்போது தளம் வந்து உங்கள் மேலதிக கருத்தை தாறுங்கள் நன்றி!!!!
பதிலளிநீக்குவந்தேன் நண்பரே தங்களது தளத்துக்கு இனி வேறு வழியில் தொடர்ந்து வருவேன்.
நீக்குஅருமையான படங்கள் விமான நிலையம் மட்டும் பார்த்த எனக்கு நாட்டை சுற்றிக்காட்டியதுக்கு நன்றி ஜீ.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே..
நீக்குஅருமையான விளக்கத்தோடு அழகான புகைப்படங்கள். தொகுப்புகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் நண்பரே.....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி துபாய் ராஜா
நீக்குசூப்பர் ஜி! செம படங்கள்....இந்த யுஏஇ யின் அமைப்பு 7 தெரிந்தாலும், படங்களும் தெரிந்திருந்தாலும் நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் படங்கள் அருமை....கடைசி இரு பெயர்கள் தான் எப்போதுமே வாயில் நுழைய மனதில் பதிய மறுத்தவை...இனியும் பதியுமா என்று தெரியவில்லை....மத்ததெல்லாம் எளிது...
பதிலளிநீக்குகடைசி இரு பெயர்களா ? ஹலோ என்ன தூங்குறீங்களா ? அது ஒரு ஆளுடைய முழு பெயர்தான்..
நீக்குஅடுத்த ஷேக்கு நீங்கதான்னு பேரு அடிபடுதாமே....சொல்லவே இல்லை....
பதிலளிநீக்குநான் நல்லா இருப்பது பிடிக்கலையா ?
நீக்குஅருமை ,ஒரு நாள் அபுதாபிக்கு வந்தே தீரணும்:)
பதிலளிநீக்குவாங்க ஜி ஊர் சுற்றலாம்.
நீக்குஅழகான படங்கள். ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல..
பதிலளிநீக்குஇன்னும் புகைப்படங்கள் வரும் சகோ...
நீக்குஅமீரகத்தை உங்கள் தயவில் நானும் கண்டு விட்டேன்!
பதிலளிநீக்குநன்றி
தங்களின் வருகைக்கு நன்றி ஐயா
நீக்குஅபுதாபியின் அழகும் கட்டிட வடிவமைப்புகளும் விழிவிரிய வைக்கின்றன. பல புதிய தகவல்களோடு பதிவு சிறப்பாக உள்ளது. பாராட்டுகள் கில்லர்ஜி.
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ
நீக்குவண்ணமயமான அருமையான படத் தொகுப்புகள் ...
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குஅப்பாடா,,,, எம்புட்டு அழகு,,,,,,,,
பதிலளிநீக்குதங்கள் தொகுப்பு தான் சகோ,,,,
தங்களின் தாமத வருகைக்கு நன்றி சகோ
நீக்குதூபய் போக என்ன செய்ய வேண்டும்.
பதிலளிநீக்குநீங்க அடிக்கடி தென்காசி போற மாதிரி டக்கு டக்கு துபாய் போறீங்க சேகுமாரை தெரியுமோ
வருக நண்பரே சே.குமாரும் அபுதாபியில்தான் இருக்கின்றார் அடிக்கடி சந்திப்போம்
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குமிரள வைக்கும் படங்கள். சிறந்த கேமரா மேனுக்கான விருது வழங்கி கௌரவிக்கலாம். அருமை.
த.ம.17
மணவையாரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஅழகான அபுதாபி. படங்கள் மிக அழகு, நன்றி.
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்குஆஹா! அபுதாபியைச் சுற்றிக் காண்பித்து விட்டீர்கள் சகோ..அழகோ அழகு! நன்றி சகோ
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ.
நீக்குஎன்னவொரு அழகான கட்டிடங்கள். நாங்க டுபாய் தான் பார்த்திருக்கோம். அதுவும் சும்மா சின்ன இடத்தை. நீங்க அழகாக படம்பிடித்து அபுதாபியை காட்டி அங்கு வரும் ஆசை தூண்டிவிட்டீர்கள். அழகு. நன்றி
பதிலளிநீக்குவெல்கம் ட்டூ எகைன் அபுதாபி நன்றி சகோ.
நீக்குWonderful..............
பதிலளிநீக்குநன்றி நண்பரே வருகைக்கு....
நீக்கு