இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், செப்டம்பர் 22, 2015

தமிழைக் காப்போம், தரணியில் வாழ !

தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !

உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்த நிலையில் இணையத்தில் உலவி வருவது நம் தமிழ்மொழி என்பது நாம் அறிந்ததே இது தமிழர்களான நம் அனைவருக்கும் பெருமையான விடயமே...

இவைகள் நமது மறைவுக்குப் பின்னும் நிலைத்திருக்க, தொடர்ந்திருக்க நாம் அனைவரும் மொழியுணர்வுடன் நாம் உலகின் எந்த மூலையில் வாழ்வாதாரத்துக்காக வாழவேண்டிய சூழல் இருந்தாலும் நம் சந்ததிகளுக்கு தமிழ் மொழியை கற்றுக்கொடுத்து ஊக்கப்படுத்துதல் அவசியம் ஆகவே நாம் அனைவரும் இதையொரு உணவான, உணர்வான விசயமாக எடுத்துக் கொள்ளவேண்டும் தமிழின் சுவையை குழந்தைகளுக்கு உணவுடன் ஊட்டவேண்டும்.

உலகின் பழமையான ஆறு மொழிகளில் நமது இனிய தமிழும் ஒன்று இது எவ்வளவு பெருமைக்குறியது ஆகவே நேற்று வந்த ஆங்கிலம் உலகில் கொடிகட்டி பறக்கிறது பன் மொழிகள் பயின்ற எட்டையபுரத்துக் கவிஞன் சொன்னான்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" 
என... அந்தக் கவிஞனின் மொழி உணர்வை நாம் சிறிதளவாயினும் நினைத்துப் பார்த்தல் அவசியம் இன்றும் பல குடும்பங்களில் தமிழ் எழுத அறியாத, பேசத்தெரியாத தமிழ்க் குழந்தைகளை காணும் பொழுது நெஞ்சம் பதறுகிறது இதற்க்கு காரணம் குழந்தைகள் அல்ல பெற்றோர்களே... இந்நிலை நீடித்தால் நாளை நமது தமிழின் நிலை ? நினைத்துப்பாருங்கள் தமிழர்களே...
அகத்தியர், வள்ளுவன், ஔவையார், வளர்த்த தமிழ் நமது மொழி.

மேலும் தமிழ் வளர்த்த சான்றோர்கள்...

உ.வே.சாமிநாத அய்யர் இவர் மட்டும் இல்லை என்றால் எத்தனையோ இலக்கியங்கள் தமிழுக்கு கிட்டாமலேயே போயிருக்கும் ஏடு காத்த ஏந்தல் என்று அவரைச் சிறப்பிக்கிறார்கள்.
பரிதிமாற் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரை பரிதிமாற் கலைஞராக மாற்றிக் கொண்ட தமிழறிஞர் வாழ்ந்து என்னவோ 32 ஆண்டுகள் தான், அதற்குள் தமிழுக்கு அவர் செய்த தொண்டுகள் அளப்பரியவை தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழிஎன்று முதன்முதலாக நிலை நாட்டியவர் இவர்தான்.

தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் தமிழ் ஆய்வு உலகில் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஒரு புதிய நெறியை உருவாக்கியவர். ராபர்ட் கால்டு வெல்லுக்கு அடுத்தபடியாக திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வை வளம்பெற வளர்த்தவர் தொ.பொ.மீ. மொழியியல் துறையில் விரிவான மொழியியல் ஆய்வை ஏற்று வளர்த்தவர்.
மறைமலை அடிகள் தேகம். இது மகள் நீலாம்பிகை இசைத்த வள்ளலார் பாடலில் இருந்த ஒரு சொல். மறைமலை அடிகளுக்கு இதற்குப் பதிலாக யாக்கைஎன்ற தமிழ்ச் சொல் இருந்திருக்கலாமே என்று தோன்றியது. இது நடந்தது 1916ல். இந்த சம்பவத்தின் விளைவாகத் தோன்றியதே தனித் தமிழ் இயக்கம்’. தமிழில் பிற மொழிக் கலப்பை பெரிய அளவில் நீக்கி தூய தமிழ் ஒளிரச் செய்த மாபெரும் இயக்கம் வேதாசலம் என்பதே மறைமலை அடிகளின் இயற்பெயர்.

தேவநேயப் பாவாணர் தமிழே, உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த வாதங்களை முன் வைத்த தமிழறிஞர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் ஒரு சிறந்த சொல் ஆராய்ச்சி வல்லுநரும் கூட.
கா. அப்பாத்துரையார் அந்த தந்தைக்கு மகன் நாற்பது மொழிகள் கற்க வேண்டுமென ஆசை. ஆனால் மகன் கற்றது 18 மொழிகள்தாம்.  தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. இதில் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் பெரும்புலமை பெற்றார். அவர்தாம் பல்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார். குமரிக்கண்டம் பற்றி முதலில் ஆய்வு செய்தவர் இவரே. அப்பாத்துரையார் இந்தி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கினாலும், இந்தி எதிர்ப்பை எதிர்கொண்டு துணைவியாருடன் சிறை புகுந்தவர்.

சிதம்பர நாத செட்டியார் கும்பகோணத்தில் 1907-ல் பிறந்தவரான பேராசிரியர் அ.சிதம்பர நாத செட்டியார், மாபெரும் தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆங்கிலம் தமிழ் அகராதியை உருவாக்கி தமிழுக்கு பெரும் சேவை செய்யும் பணியை இவரிடம்தான் அப்போதைய சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.எல்.முதலியார் ஒப்படைத்தார்.
ஆபிரகாம் பண்டிதர் ஆகத்து 2, 1859-இல் பிறந்தவர். தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர், தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராக பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழு நேர மருத்துவராகப் பணியாற்றினார். இவர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

மு. வரதராசன் மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன், இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், சிறுகதைகள் மற்றும் நாவல்களுக்கும் புகழ் பெற்றவர். 1912-ம் ஆண்டு ஏப்ரல் 25-ல் பிறந்தார். தமிழில் வித்வான் படிப்பில் மாநிலத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர். 1939-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கீழ்திசை மொழிகளில் விரிவுரையாளர் ஆனார். இவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறுநூல் இன்னமும் தமிழ் மாணவர்களுக்கு பயனாக உள்ளது.
வையாபுரிப் பிள்ளை 1891-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாள் பிறந்த ச.வையாபுரிப் பிள்ளை, 20-ஆம் நூற்றாண்டின் முதன்மையான தமிழ் ஆராய்ச்சியாளர்களுல் ஒருவர். சிறந்த பதிப்பு ஆசிரியராக விளங்கியவர். தொல்பொருள் மற்றும் ஒப்பிலிக்கிய சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலக்கணக்கை ஆராய முயன்றவர். தமிழில் மிக அதிக ஆர்வம் இருந்தும் சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராக 7 ஆண்டுகள் பணி செய்தார்.

மயிலை சீனி. வேங்கடசாமி சங்க கால இலக்கியம், வரலாறு, நுண்கலை, தொல்லியல் மற்றும் சமூகவியல் என ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமியின் பங்களிப்பு அளப்பரியது. இவரது தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரது குடும்பத்தில் ஓலைச் சுவடிகள் மற்றும் நூல்களை சேகரித்து வந்தனர்.
ரா.பி.சேதுப்பிள்ளை
பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை எதுகை மோனையைப் பயன்படுத்தி மேடைப் பேச்சில் தமிழகத்தையே கட்டிப் போட்டவர். சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட இவர் பிறந்த ஊர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ராசவல்லிபுரம்.

இப்பேர்ப்பட்ட தமிழ் அறிஞர்கள் வளர்த்து தந்த தமிழைப் போற்றி காப்போம் என சூழுரைக்க புதுக்கோட்டை வாருங்கள் தமிழர்களே...

புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 1) கட்டுரைப்போட்டிக்கு 50 லட்சம் காசுகள் பரிசு என அறிவித்து இருந்தார்கள் எனவே ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.

நான் போட்டிக்கு அனுப்பிய கவிதையைக் காண கீழே சொடுக்குக...

தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டையான்
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergee كـــيللرجــــي

72 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி!
    அன்று :என் பையனுக்கு ஆங்கிலமே தெரியாது?
    இன்று :என் பையனுக்கு தமிழே தெரியாது என்று பெருமையாக பல பேரன்புள்ள பெற்றோர்கள் பேசுறாங்க!!!
    விரிவான அலசல்
    வித்தியாசமான அலசல்
    வாழ்த்துக்கள்! ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையே.. சரியான சாட்டையடி

      நீக்கு
  2. வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. த.ம.+1 சகோ
    நானும் இத்தலைப்பில் எழுதப் போகிறேன்...பதிவிட்ட பின்னர் இங்கு மீண்டும் வந்து வாசிக்கிறேன். நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மீண்டும் வருக சகோ தங்களது பதிவுக்காக காத்திருக்கிறேன்

      நீக்கு
    2. தமிழ் அறிஞர்கள் , முன்னோடிகள் பற்றி தொகுத்து கட்டுரை அருமை சகோ. நாமும் நம் பங்காற்றத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது .. வாழ்த்துக்கள் சகோ

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  4. அருமையான கட்டுரை!
    ஆழ்ந்த ஆய்வும் அழகாகச் சொல்லிய விதமும் சிறப்பு!

    வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  5. அருமை நண்பரே
    வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  6. அழகாகச் சொன்னீா்கள் நண்பரே..
    தங்கள் பதிவு மனதுக்கு நிறைவைத் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  7. தமிழின் சிறப்புகளை தமிழறிஞர்களின் சிறப்போடு சேர்த்து கூறியிருப்பது அருமை.
    இவர்களில் பரிதிமாற் கலைஞர் அவர்களின் பேரனான திரு.கோவிந்தன் எனக்கு கல்லூரியில் தமிழ் கற்றுக் கொடுத்த பேராசிரியர் என்பதை இங்கு பெருமையோடு நினைவுகூறுகிறேன்.
    உங்களுக்கு தெரிந்த மொழிகளில் என்பெயரையும் எழுதி அனுப்புங்களேன்.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே!
    தங்கள் தளத்தில் தமிழ்மணம் ஒட்டுப்பட்டை தெரியவில்லை. அதனால் என்னால் ஓட்டளிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பர் திரு. செந்தில் குமார், Senthil Kumar, सेंथिल कुमार, సెంథిల్ కుమార, ശെന്തിൽ കുമാർ, سينتيل كومار அவர்களே...

      மின்னஞ்சல் அனுப்புகிறேன் நண்பரே...

      நீக்கு
    2. பிரமாதம் நண்பரே, பல மொழிகளில் நமது பெயரை மட்டுமாவது எழுத தெரிந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் கேட்டேன். உடனே செயல் படுத்தி விட்டீர்கள்.
      மிக்க நன்றி!
      இப்போது ஒட்டுப்பட்டை வந்துவிட்டது.
      த ம 12

      நீக்கு
    3. மின்னஞ்சலிலும் அனுப்புவேன் நன்பரே மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. நல்ல கட்டுரை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல கட்டுரை அண்ணா...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. விழிப்புணர்வு கட்டுரை கருத்துக்களோடு புலமைகளின் அறிமுகம் சிறப்பாக அமைந்துவுள்ளது.

    சாவில் தமிழ் படித்துச் சாவோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ''சாவில் தமிழ் படித்துச் சாவோம்'' பெருமையான விடயமே நண்பா...

      நீக்கு
  12. அன்புள்ள ஜி,

    தமிழ் வளர்ச்சி பற்றி நமது தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் வளர்த்ததைப் பற்றி ... கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டிக்காக அலசி இருப்பது கண்டு களித்தேன். வாழ்த்துகள்.

    த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தமிழ் மணம் வேலை செய்யவில்லையே...

      நீக்கு
    2. தமிழ் மணக்கிறது.

      நன்றி.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. வெற்றி நிச்சயம் இது
    தேவக் கோட்டை மீது
    சத்தியம்!
    வெற்றி வந்து சேரும்
    வாங்கித் தந்த பெருமை
    தமிழுக்கு சேரும்
    சிறப்பு!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபாரிஸ் டவரிலிருந்து கோட்டையை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பா..

      நீக்கு
  14. தமிழ்ச் சான்றோர்களை நினைவு கூர்ந்ததில் மகிழ்ச்சி!..

    தாய் மொழியினைப் போற்றும் பதிவு!..

    வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  15. வாழ்த்துகள் தோழர்.
    தம +

    பதிலளிநீக்கு
  16. கில்லர்ஜி,இதை எவ்வாறு தமிழ்ப் படுத்துவது என்று யோசிக்கத் தோணலையா ?

    பதிலளிநீக்கு
  17. வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ஜி.
    தாய்மொழியின் மகத்துவத்தை மிக அருமையாக கூறியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. அருமையான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. எல்லாவற்றிலும் கலக்குறிங்க சகோ. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சகோ...

      நீக்கு
  20. பெயரில்லா9/23/2015 11:49 AM

    45வது எனது கருத்து..
    ஆம் சகோதரா நலம்
    ஆனால் மிக நெருக்கடி நேரம்.
    இரண்டாவது பேரன் முதல் பிறந்த நாள் வீட்டிலும் வெளியிலும் கொண்டாட்டம்
    வேறு சில வசதியீனங்களுமாய் இன்னும் முடியவில்லை.
    பதிவு நன்று. கவிதைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு

  21. அருமையான கட்டுரை சகோ. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  22. சகோ வணக்கம்.
    என்ன இது? நானெல்லாம் என்னாவது????
    எதையும் விட்டு வைக்கமாட்டோம் என்று,,,,,,,,,
    ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்,,,,,,,,,
    அழகாக அருமையாக தெளிவான விளக்கம் சகோ,,
    வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தங்களுடன் நான் போட்டி போட முடியுமா ? முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது 80 எமக்கும் தெரியும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  24. அருமையாக எழுதி உள்ளீர்கள்! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  25. அன்பு ஜி! நான் எழுதிய கட்டூரைக்கு தங்கள் கருத்தை அறிய ஆவல் (நேரமிருப்பின்) நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வெற்றி உமதே அருமையான விடயங்கள் அலசிய விதம் அருமை

      நீக்கு
  26. தமிழ்வளர்க்கப் பாடுபட்ட பெரியோர்களைப் பற்றி அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள். பாராட்டுகள். வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  27. வெற்றிக்கனி பறிக்க வாழ்த்துகிறேன்.அருமை

    பதிலளிநீக்கு
  28. தமிழின் பெருமைகூறும் கட்டுரை.போட்டியில் வெற்றி வாகைசூட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. என்ன எழுதினாலும் ஒரு கில்லர் டச் தெரிகிறது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வாழ்த்துகளே எனக்கு ஒரு வெற்றியே...

      நீக்கு
  30. ஒன்று பட்டால் தமிழ் வாழும்..............

    பதிலளிநீக்கு
  31. செம்மொழியாம் நம் தமிழ்மொழி சீர்மைபெற உழைத்த செம்மல்களைச் சான்றுகாட்டி தமிழின் பெருமையினை கட்டுரையில் வடித்துள்ளீர்கள். வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  32. மரியாதைக்குரியவரே,
    வணக்கம். தமிழ் வாழ,அந்த தமிழோடு நாம் வாழ என பசுமையான வார்த்தையை பதிவிட்டுள்ளீர்!.வாழ்த்துக்கள் என அன்பன்,
    C.பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. பரமேஸ்வரன் அவர்களின் முதல் வருகைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறேன் நன்றியுடன்...

      நீக்கு