நம் முன்னோர்கள் சில
செயல்களை நமக்கு எல்லோருக்கும் புரியாமலே சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.
ஆடிப்பெருக்கில் வெள்ளம்
வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போயிருக்கும் அதனால் அங்கே நீர்
நிலத்தில் இறங்காமல் ஓடி கடலை அடையும் ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர்
கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தியன்று சிலைகளை களி மண்ணால்
செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். அதை ஏன் ? மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து ஆற்றில் போடவேண்டும் ? ஈர
களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும் சற்று காய்ந்த களிமண்
நீரின் வேகத்தை தாங்கிக்கொண்டு அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும்
நீரானது பூமியின் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரட்சினையை தீர்க்கும்
ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும் இதையே இன்றைய இளைஞர்களை களி மண்ணை ஆற்றில்
போடவேண்டும் என்றால் வரமாட்டார்கள்.
எப்படி நம் முன்னோர்களின்
சாமர்த்தியம் ?
பண்டாகால நம் முன்னோர்கள்
இதன் வழியே பண்டிகைகளை புகுத்தி மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்கு வழி வகுத்தார்கள்
இவ்வாறாக பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் பிற பண்டிகைகளும், திருவிழாக்களும்.
கணபதி பப்பா மோரியா
இன்றைய விநாயகர் சதுர்த்தி
எப்படி இருக்கிறது ?
டண் கணக்கான அளவுகளில்
கிரேனில் தூக்கிப்போய் கடலில் இறக்குகின்றார்கள் அவைகளில் கெமிக்கல் கலந்த
சுண்ணாம்பு கடல் தண்ணிரில் கலந்து கடலை மாசு படுத்துகின்றன அவைகளை மீன்கள் உண்டு
அந்த மீன்களை நாம் உண்ணுகிறோம் புதிய வியாதிகளை நாமே உருவாக்குகின்றோம் வீண்
செலவுகள், வேதனைகள் எவ்வளவு கொடுமை யாராவது நினைத்துப் பார்க்கின்றோமா ? இல்லை
காரணம் மூளைச்சலவை அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு மக்களாகிய நாமும்
ஒத்துழைக்கின்றோம் ஆகவே இவர்கள் வருடத்துக்கு வருடம் விழாவின் பிரமாண்டம்
வலிமையாகிறது இது பக்தியா ? இந்தப்படை போதுமா ? இன்னும்
கொஞ்சம் வேண்டுமா ? என்பதுதானே...
கடந்த இருபது வருடங்களில் இந்த விழாக்கள் அளப்பெரிய
வளர்ச்சியைப் பெற்று விட்டன இந்தியாவில் இந்த விழாவின் வருடாந்திர செலவு மட்டும்
வருடத்துக்கு 20,000 ஆயிரம் கோடி செலவு ஆகிறதாம் நண்பர்களே பிள்ளையார் என்னை
இப்படி கொண்டாடுங்கள் என்று சொன்னாரா ? இந்தப்பணத்தை வைத்து கல்யாணம்
ஆகாத எத்தனை ஏழைப்பெண்களுக்கு வாழ்வு அளிக்கலாம் அப்படிச் செய்தால் பிள்ளையார்
ஏற்றுக் கொள்ள மாட்டாரா ? அப்படி ஏற்கவில்லை எனில் அவர்
கடவுளே இல்லையே பக்தி வேண்டியதுதான் அவை அறிவுப்பூர்வமாக இருத்தல் அவசியம் இல்லையா ? தங்களுக்கு
நினைவிருக்கலாம் சில வருடங்களுக்கு முன்பு பிள்ளையார் பால் குடிக்கின்றார் என்று
ஒரே பரபரப்பு ஊடகங்களுக்கு சொல்லவும் வேண்டுமா ? எவ்வளவு வேகமாக பரப்பினார்கள்
அந்த அலை ஓய்ந்ததும் ஒருவர் சொன்னார் பிள்ளையாரை நான்தான் பால் குடிக்கச் சொன்னேன்
என்று சொல்லி மக்களிடம் மேலும் பீதியைக் கிளப்பினார் அவரை பிள்ளையார் ஒன்றுமே
செய்யவில்லை இதன் காரணமாகத்தான் பலரும் பல வித்தைகளை கையாள்கின்றார்கள்.
அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற் பொருள் குவிதல்
வேண்டின்
நலமெல்லாம் பெருக
வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சிய திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை
- கவியரசர் கண்ணதாசன்
இப்பொழுதெல்லாம் மதங்களின்
திருவிழாக்கள் பக்தியின் வழியில் இல்லை என்பது மட்டும் நிச்சயமாகி விட்டது ஒரு காலத்தில்
ஐயப்பன் கோவிலுக்கு மாலையணிந்து விரதமிருந்து போகின்றவர்களை அனுப்பி வைக்கின்ற
பொழுது அதை அவரின் கடைசியாத்திரை என்ற கணக்கிலே அனுப்பி வைத்தோம் அவர்கள் வீடு
திரும்ப 1 மாதம்கூட ஆனது காரணம் காடு, மலை கடந்து போய்
வந்தார்கள் அவர்களை புலிகள் அடித்திருக்கலாம் என்று நம்பப்பட்டது இப்பொழுது
அப்படியில்லை காலையில் புறப்பட்டால் மறுநாளில்கூட வீடு திரும்புகின்றார்கள் அதேபோல
வயது முதிர்ந்த பக்கவப்பட்டவர்களே மலைக்குப் போய் வந்தார்கள் இன்று அந்த பழக்கமும்
மலையேறி விட்டது,
//டேய் மாப்ளே என்னடா மாலை
போட்ருக்கே ?
ஆமாடா ஐயப்பன் கோயிலுக்கு போறேன் நீயும்
வாயேன்...
சரிடா நானும் நாளைக்கே மாலை போடுறேன்..//
இதுதானே நடக்கின்றது இதுதான் பக்தியா ? இதில்
பக்தியின் மார்க்கம்
உண்டா ? ஒரு
நேர்த்திக் கடன்தான் உண்டா ? இதில் பழனி பாதயாத்திரையும்
சேரும் ஐயப்பனுக்கு மாலையணிபவர்கள் கோவில் போய்விட்டு வீடு திரும்பி மாலையை
கழட்டும்வரை விரத முறைகள் மாறக்கூடாது விரதமுறைகள் நான் சொல்ல வேண்டியதில்லை
அனைவரும் அறிந்தவையே... மலைவாசலில் கள்ளு விற்கப்படுகின்றதே யாருக்காக ? நான் நேரில் கண்ட உண்மை எப்பொழுது தெரியுமா ? 1989-ல் இன்று நிலை என்னவோ ? யாமறியேன்
பராபரமே... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றங்கள் மலையை விட்டு
இறங்கியதும் மாலையை கழட்டி விடும் ஆசாமிகள் பலரும் உண்டு இறைவனை வணங்காதவர்கள்,
இல்லை என்று சொல்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், வாழட்டும் ஆனால் இறைவனை
வணங்குபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக வாழ்ந்து காண்பிப்பதே இறை பக்தியை உயர்வு
படுத்தும் இல்லையேல் தாழ்வு படுத்தும் என்பதே எமது கருத்து இறை
நம்பிக்கையுடையோரே மதம் வளர்க்க வேண்டாம் சரியாக இருக்கும் அதை மழுங்கடிக்காமல்
வாழ்வதே சிறப்பு மதம் மறந்தால் மனிதனாகலாம் ஆகவே...
மதம் மறப்போம் மனிதம் வளரப்போம்.
புதுக்கோட்டை பதிவர்
திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக
எழுதப்பட்டது (வகை 2) விழிப்புணர்வு கட்டுரைப்போட்டிக்கு ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று
உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும்
உறுதி தருகிறேன்.
நான் போட்டிக்கு அனுப்பிய
பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...
காணொளி
2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும்
வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டையான்
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി కిల్లర్ జి Killergee كـــيللرجــــي
உண்மைதான் சகோ,
பதிலளிநீக்குஇன்று மதங்களின் திருவிழாக்கள் எல்லாம் பக்தியின் வழியில் இல்லை,,,,
அருமையாக சொலல்லியுள்ளீர்கள்,,,,,,
வாழ்த்துக்கள் சகோ,
வருக சகோ முதலில் வந்து முத்தாய்ப்பான கருத்துரை வழங்கியமைக்கு நன்றி
நீக்குவணக்கம் ஜி! இன்றைய பண்டிகைகள் பணத்செருக்கின் பலத்தை காட்டத்தான் கொண்டாடுகிறார்கள்
பதிலளிநீக்குஅழகான கருத்துக்கள்! வாழ்த்துக்கள்
வருக நண்பரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஉண்மைதான். பணச்செருக்கும், படாடோபமும் உண்மையான கடவுள் பக்தியை மறைத்துவிட்டது.
நீக்கு
பதிலளிநீக்குஅருமையான விழிப்புணர்வூட்டும் கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்! கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலில் மூன்றாவது வரியான
கற்பக மூர்த்தி தெய்வக்
...களஞ்சியத் திருக்கை சென்று
விட்டுப்போய் உள்ளது.
வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே கொடுத்து விட்டேன்
நீக்குசாட்டை உங்கள் கையிலுமா!..
பதிலளிநீக்குஐயப்பன் கோயில் மாலை பற்றி ஒரு விஷயம்..
சரி.. நானும் நாளைக்கே.. - என்றெல்லாம் சொல்வதில்லை..
இன்றைக்கே .. இப்பொழுதே.. என்று கிளம்பிவிடுகின்றார்கள்..
Instant - மாலை போட்டு விடவும் All in One குருசாமிகள் தயராக இருக்கின்றார்கள்..
ஆனாலும் - அவர்களே எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டு அல்ல!..
போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துகள்!..
வாங்க ஜி அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குபக்தி மார்க்கம் போய்... அதுவே ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. திடீரென ஐய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு செல்வதும், உடனே நடை பழனி செல்வது என எங்கும் பிரபலமாகிவிட்டது. உண்மையை உரக்க சொன்ன கில்லர்ஜிக்கு வாழ்த்துகள்...!
நீக்குநன்றி நண்பர் திரு.தங்கம் பழனி அவர்களே...
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குபிள்ளையார் அப்பனை ஏன் அன்றைக்கு ஆற்றில் கறைத்தத்தார் என்பதற்கு நல்ல விளக்கம் கொடுத்து... அதே பிள்ளையாரை இன்று கடலில் கறைத்து சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை அழகாகச் சொன்னீர்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
த.ம.4
வருக ஜி அருமையான கருத்துரையை முன் வைத்தமைக்கு நன்றி
நீக்குசர்வ சக்தியுள்ள கடவுளை களி மண் உருண்டையாக ஆக்கியது மகா மகா மோசமானது.... தங்களின் பெரியாப்பாவும்..சித்தாப்பாவும் ஒரு மாம்பழத்துக்காக அடித்துக்கொண்டததை அவதாரம் என்பது அதைவிட மோசமானது...நண்பரே....
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள் நண்பரே..
நீக்குஅது சரி என்னோட பெரியப்பாவும், சித்தப்பாவும் ஒரு முறை வேஷ்டிக்காக அடித்துக் கொண்டதாக ஐயன் ஞானி ஸ்ரீபூவு சொன்னனதாக ஞாபகம் நீங்கள் என்ன புதிதாக மாம்பழம் என்கின்றீர்கள்.... இது எனக்கு தெரியாதே நண்பரே....
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி என்றால் அரசு விடுமுறை தினம் என்பது மட்டுமே பலருக்கும் தெரியும். கடவுள் பக்தி தேவைதான். ஆனால் ஆடம்பரமான, இயற்கை சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் பக்தி தேவையில்லை. அருமையான கருத்துகள் உள்ளங்கடங்கிய கட்டுரை. வாழ்த்துகள் கில்லர்ஜி சார்.
பதிலளிநீக்குநண்பர் தங்கம் பழனி அவர்களின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தரும் சிறந்த பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி இன்று இவ்வளவு நண்பர்கள் எனது தளத்திற்க்கு வருவதற்க்கு தாங்களும் ஒரு காரணம் அதை என்றும் மறவேன் நண்பரே... தொடர்ந்தால் நலமாகும்....
நீக்குகாரணங்களை மறந்து விடுகிறோம். காரியங்களைப் பிடித்துக்கொண்டு ஆடுகிறோம். நல்ல பதிவு.
பதிலளிநீக்குஆம் நண்பரே உண்மையை சொன்னீர்கள் நன்றி
நீக்குஆகா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள்
மற்றவர்களுக்கு பரிசில்களில்
எவற்றையும் மிச்சம் வைக்க மாட்டீர்கள்
போலிருக்கிறதே
தம=1
ஹாஹாஹா தங்கள் வாக்கு பலித்தால் பரிசைப்பெறுவது தாங்கள்தான் நண்பரே... நன்றி
நீக்குஅனைத்தும் வணிகமயமாகிவிட்ட சூழலில் மதங்களும் அப்பட்டியலில் சேர்ந்துவிட்டது. அமைதியாக வீட்டுக்குள் நடந்துகொண்டிருந்த விழா, தற்போது அரசியலாக்கப்பட்டு....நினைக்கவே வேதனையாக உள்ளது.
பதிலளிநீக்குமுனைவரின் மிகச்சரியான கருத்துரைக்கு மிக்க நன்றி
நீக்குவழி பிள்ளையார் அல்ல! அறிவோம்
பதிலளிநீக்குவிழி பிள்ளையார் நண்பா!
விழிப்புணர்வு பிள்ளையார் வெற்றி வழியில் நிற்கிறார் உம்மை வரவேற்க!
கண்ணுக்கு தெரிகிறாரா?
வெற்றிப் படி பிள்ளையார்!
வாழ்த்துகள்!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
அதோ தெரிகின்றார் பிள்ளையார்பட்டியில் நண்பரே..
நீக்குபக்தி என்ற பெயரில் பக்தர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். திருந்தினால் நல்லது, போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் கில்லர்ஜி சார்!
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நான் எழுத நினைத்த நிறைய விடயங்களை தாங்கள் எழுதி விட்டீர்கள் ஆகவே விடயங்களை சுருக்கி விட்டேன்.
நீக்குநண்பர் கில்லர்ஜி, தேவகோட்டை,
பதிலளிநீக்குபிரமாதம்....
சரியான சிந்தனை...
உங்கள் சிந்தனைக்கும் உழைப்பிற்கும்
எனது உளமார்ந்த பாராட்டுக்கள் நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
தமிழ் மண முதல்வர் ஐயாவின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் மிக்க நன்றி ஐயா தங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும்... தொடர்ந்தால் சந்தோஷமே...
நீக்குஐயா தங்களது விபரங்களை கையேட்டில் பதிவு செய்ய நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்திற்க்கு அழைக்கிறேன்.
பிள்ளையாரை ஆறு இல்லாதபோது வீட்டுக் கிணற்றில் அல்லது அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைத்தார்கள் அதெல்லாம் வீட்டிலேயே சிறிய களிமண் பிள்ளையார் வைத்து வழிபட்ட காலம் இப்போது கம்யூனிடி வழிபாடு பலரும் சேர்ந்து செய்வது. களிமண் போய் ப்லாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிரம்மாண்ட சைஸ் மாசு விளைக்கும் பெயிண்ட் . காலம் மாறிப்போச்சு. பக்தி எல்லாம் இல்லை.படாடோபமும் பெருமையும்தான் மிஞ்சுகிறது. என் அனுபவம் பற்றி ஐயப்ப வழிபாடு குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தேன் பக்தியாவது விரதமாவது, 95 விழுக்காடு எல்லாமே வேஷம். ஒரு வித்தியாசமான விழிப்புணர்வுக் கட்டுரை. வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருக ஐயா தங்களின் ஆணித்தரமான நீண்ட கருத்துரை கண்டு மகிழ்ச்சி தங்களது பதிவின் இணைப்பு தந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....
நீக்குபக்தியை விடப் பக்ட்டு அதிகமாகி விட்டது
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா மிகச்சரியாக சொன்னீர்கள்
நீக்குஜாக்கிரதை ,பெரியப்பா கோவிச்சுக்கிட்டு கண்ணை நொண்டிடப் போறார் :)
பதிலளிநீக்குவாங்க ஜி பெரியப்பு இப்படியெல்லாமா ? செய்வாரு.... இது நரபலியாச்சே... ?
நீக்குஅற்புதமான கருத்துக்கள் கொண்ட அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் நண்பரே...
பதிலளிநீக்குவருக நண்பரே வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
நீக்குநல்லதொரு விழிப்புணர்வுக்கட்டுரை சகோ. எல்லாமே ஒரு விளம்பரமாகி விட்டது. என்ன செய்வது?
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஆமா அங்கும் இப்படியா?
பதிலளிநீக்குஇங்கு இன்று விநாயகர் சதுர்த்தி என்று தமிழ்க் காலண்டர் இருந்தால் பார்த்துக்கொள்ளலாம்
நீக்குஆவணிச் சதுர்த்தி அருமை தான்
பதிலளிநீக்குஅதற்காக ஆக்கிய பிள்ளையாரை
ஆற்றில் கரைப்பது சரியா?
நானோ தவறு என்கிறேன்.
மார்கழி முப்பத்தொரு நாளும்
மாட்டுச்சாணியாலே பிள்ளையார் பிடித்து
அறுகம்புல்லு ஊன்றி வழிபட்ட
பிள்ளையாரைத் தென்னம் பாளையில் ஏற்றி
கடலில் பயணிக்க வைப்பதே வரலாறு!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
தங்களின் விடயம் புதுமையாக இருக்கிறதே நண்பரே....
நீக்குகாரணமின்றி செய்து வரும் காரியத்திற்கு கூறிய காரணம் சரியே
பதிலளிநீக்குஐயாவின் கருத்துரைக்கு நன்றி
நீக்குவந்தேன் நண்பரே மிகவும் அருமை பதிவுகள் இன்னும் வேண்டுமா ?
பதிலளிநீக்கு....அவரை ஏன் "பெரியப்பா" என குறிப்பிட்டதின் நோக்கம் என்ன என்று புரியவில்லை ??...உங்களது பதிவுகளில் சுற்றுச் சூழல் மாசு குறித்து நிறைய உணர்சிவசப்பட்டிருக்கிரீர்கள்..... களிமண் பற்றி கூறியது சரிதான் ஆனால் முன்னோர்களை முன்னிறுத்தி இதற்குத்தான் என்று கூறியது சரியில்லை...அதற்க்கு வேத ஆகம விதிமுறைகளில் காரணம் கூறப்பட்டுள்ளது.... நீங்கள் கூறியதுபோலவே வேறு பல கோணங்களில் "விஞ்ஞானமும் மெய்ஞானமும்" என்கிற புத்தகத்திலும் கூறப்பட்டுள்ளது. அருமையான முயற்சி ... வாழ்த்துக்கள் ... நலம் விரும்பும் -கோகி.
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே
நீக்கு//பிள்ளையார் அப்பா
பெரியப்பா புத்தி மதியை
சொல்லப்பா//
என்று குழந்தைகள் பாடுவார்களே கேட்டதில்லையா ? நண்பரே... மேலும் நான் படித்த ஒரு தகவலை முன் வைத்தே இந்த பதிவை தொடங்கினேன்
இப்போது பக்தியை விட ஆடம்பரம் தான் பெரிதாக இருக்கு என்பதை தங்கள் பதிவு உணர்த்துகிறது. உண்மையும் அது தானே ! அருமை சகோ.
பதிலளிநீக்குவிரிவான கருத்துரைக்கு நன்றி சகோ
நீக்குதெரியாத விடயம் ஒன்றினை தெரிந்துகொண்டேன். சிறப்பாக அருமையாக எழுதியிருக்கிறீங்க. பிள்ளையாரப்பா எல்லாப்போட்டியிலும் அண்ணா ஜி வெற்றியீட்ட வேண்டும். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஹாஹாஹா வெற்றிக்கு பிள்ளையாரப்பாதான் வரவேண்டுமோ.... நன்றி சகோ.
நீக்குஅருமையான கட்டுரை வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா .
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி
நீக்குஅருமையான கட்டுரை. எல்லாமே வியாபாரமும் ஆடம்பரமும் ஆகிவிட்டன. பக்தியும் விதிவிலக்கல்ல......
பதிலளிநீக்குபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
வருகைக்கு மிக்க நன்றி ஜி
நீக்குஅருமையான விழிப்புணர்வு பதிவு.
பதிலளிநீக்குநீங்கள் சொன்ன ஒவ்வொன்றும் உண்மைகள்.
எளிமையான பண்டிகை நாளுக்கு நாள் ஆடம்பர விழாவாக பொருள் விரயம் , மற்றும் சுற்றுபுற பாதிப்பை ஏற்படுத்தும் விழாவாக மாறி வருவது வேதனை தரும் விஷயம்.
நான் கேட்டதற்கு உடனே சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.
வருக சகோ வருகை தந்து கருத்துரை தந்தமைக்கு நன்றி
நீக்கு