இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 20, 2015

ஆடியோ கேஸட்


நண்பர்களே... நண்பிகளே... நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் எனக்கு இசை, பாடல்கள் மிகவும் பிடித்தமான விடயமே.. பாடல் கேட்பது மட்டுமல்ல... பாடுவதும் எனக்குப் பிடித்தமானவையே 2010 சென்னையில் எனக்கு ஏற்பட்ட பேருந்து விபத்து ஒன்றில் நாடியில் அடிவாங்கி எனது நாக்கு பற்களுக்குள் சிக்கி Cut ஆகி விட்டது இதன் காரணமாக எனக்கு இனிய தமிழ் உச்சரிப்பு பாதிக்கப்பட்டு விட்டது இன்றும் அடிபட்ட இடத்தில் உணர்வுகள் இருக்கிறது.

நான் பாடல் கேட்பதிலும் இன்றைய மனிதன் அல்ல ! ஏழிசை வேந்தன் M.K. தியாகராஜ பாகவதர், நடிப்பிசைப் புலவர் K.R. ராமசாமி, T.R. மஹாலிங்கம், வெங்கலக் குரலோன் சீர்காழி S. கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், இவர்களின் பாடலை மிகவும் விரும்பி கேட்பேன், மேலும் நல்ல உச்சரிப்புக்காக, குரலுக்காக T.M. சௌந்தர்ராஜன், மற்றும் புதிய பாடகர் S.P. பாலசுப்பிரமணியம் இவர்களின் பாடல்களையும் சில நேரங்களில் கேட்பேன் அபுதாபியில் எனது CARரில் நண்பர்கள் ஏறுவதற்கு மிகவும் யோசிப்பார்கள் சிலர் விதியே என்று பஞ்சுடன் ஏறுவார்கள் பஞ்சு அருணாசலமே ஏறினாலும் எனது கொள்கையிலிருந்து விலகி கொள்ள மாட்டேன் என்பது  வேறு விடயம்.

தேவகோட்டையில் இருக்கும்போது ஆடியோ கேஸட்டில் பாடல்கள் பதிய மியூசிக்கல்ஸ் போவேன் என்னைக்கண்டதும் கேஸட் பதிய எப்படியும் இரண்டு மாதமாகும் என்பார்கள் அதற்கும் நான் சம்மதித்தால் SORRY அதுக்கு பிறகு கடையை காரைக்குடிக்கு மாற்றினாலும் மாற்றுவோம் பிறகு வாங்களேன் காரணம் அவன் பலமுறை என்னிடம் பட்டு அழுந்தியதின் பாதிப்பு ஒருமுறை மற்றொரு மியூசிக்கல்ஸ்க்காரன் கடையை திறந்து கொண்டு இருக்கும்போது நான் வருவதைக் கண்டவன் சட்டென உள்ளே போய் கதவைப் பூட்டிக் கொண்டான் நானும் வாசலிலேயே உட்கார்ந்திருந்தேன் மதியம்12.30 ஆகியது கடையை திறக்கவே இல்லை அவன். வேறு வழி ? பசித்தது வீட்டுக்கு வந்து விட்டேன் ஏன் ? இப்படிச் செய்தான் என்பது  எனக்குப் புரியவே இல்லை. 

பிறகு முடிவெடுத்தேன் பணம், பணம் கொடுத்தால் எதுவும் நடக்கும் ஒன்றுக்கு ஒன்றரை மடங்கு பணம் கொடுத்தேன் காரியம் நடந்தது காரணம் என்ன என்றால் மற்றவர்கள் எல்லாம் பாடலை எழுதிக்கொடுத்து விட்டு வந்து விடுவார்கள் அவனும் பாடலை பதிந்து கொடுத்து விடுவான் ஆனால்  எனக்கு ஒரு கேஸட்டில் 12 முதல்14 பாடல்கள்வரை பதியலாம் அல்லவா ! இதை நான் எப்படி  வரிசைப்படி எழுதியிருக்கின்றேனோ ? அப்படியே பதிய வேண்டும் உதாரணத்திற்கு சிவகவி பாடல் வருகிறது அடுத்தபாடல் சீர்காழியின் பாடலாக இருக்கும் மூன்றாவது பாடல் மீண்டும் சிவகவி படத்தின் மற்றொரு பாடலாக இருக்கும் இது மாறி வந்தால்  அவன் செத்தான் கேஸட் எனக்குத் தேவையே இல்லை பணமும் கொடுக்க மாட்டேன் பெரும்பாலும் ஒரே படப்பாடல் என்றால் அவர்களுக்கு சுலபமாக வேலை முடிந்து விடும் என்பது  தெரிந்த விடயமே இருப்பினும் எனக்கு அது சரியாக வராது இப்படியான நிறைய சம்பவங்கள் உண்டு.

தேவகோட்டையில் பொடுகு மலையான் என்ற செல்வந்தர் ‘’பொட்டு’’ சுருக்கமாக இப்படிச் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும் அவரும் என்னோட சேர்ந்தவர் போல இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் M.K.T.யின் பாடல் ரசிகர் வயது 93 சுகமில்லாமல் கிடக்கின்றார் மரணத்தின் கடைசி நிமிடங்கள் சுற்றமும் நட்பும் புடைசூழ நிற்கின்றார்கள் அவரின் கடைசி ஆசையை சொல்லி இருக்கிறார் M.K.T. பாட்டு கேட்கனும் திடீர்னு பாட்டுக்கு எங்கே போவது ? மற்றபடி நேத்து ராத்திரி யம்மா இப்படியான ஆக்கப்பூர்வமான பாடல்கள் என்றால் அனைவரது வீட்டிலும் பொக்கிஷம் போல் இருக்கும் இதுக்கு உடனே மியூசிக்கல்ஸ் போனாலும் அவனும் தூசியைத்தட்டி பதிவு செஞ்சு நமக்கு இப்பக் கதையாகுமா

வேறு யாருக்கிட்டே இருக்கப் போகுது ஒருவர் சொல்லியிருக்கிறார் நம்ம மீசைக்காரர் மகன் கில்லர்ஜியை புடிங்கடா பறந்து வந்தார்கள் விடயத்தை என்னிடம் சொல்லிக் கேட்க நான் சொன்னேன் ஸுச்சுவேஷன் ஸாங் சரி வராது போலயே டேய் யாருடா ? இவன் என்னமோ டைரக்டர் போல பேசுறான் உன்னையெ சினிமா எடுக்கவா ? கூப்பிட்டோம்... கேஸட்டைக் கொடுடா மூதேவி பத்து நிமிஷத்துல கதை முடிஞ்சுரும் பிறகு வாங்கிக்க.. வேறு வழியின்றி எனது பொக்கிஷமான M.K.T. யின் கேஸட்டுக்கு அவர்கள் அறியாமல் ஒரு முத்தம் கொடுத்து அனுப்பினேன்.

அடுத்த பதினைந்து நிமிஷத்தில் செய்தீ காட்டுத் தீயாய் பரவியது.

தொடரும்...

57 கருத்துகள்:

  1. சிச்சுவேசன் கேட்டீங்களா... சிரித்தேன்.
    நானும் இப்படித்தான் ஒரு பழைய பாடல் ஒரு புதிய பாடல் என 90 கேசட்டுகளில் பதிந்து வைத்திருந்தேன். எனக்கும் பாடல்கள் கேட்பதென்றால் அலாதி பிரியம்... ராசாவின் இசையில் லயித்துக் கிடப்பேன்... இப்போதும்... எப்போதும்...

    ஆமா பாட்டை கொடுத்து பொட்டுவை பொட்டுன்னு போக வச்சிட்டீங்களா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே நான் ஸுச்சுவேசனுக்கு தகுந்த மா3தான் பாடல் கேட்பேன் 90 பாடல்களுக்குப் பிறகு முடிந்து விட்டது என்ன ? நண்பரே நீங்களும் என்னை கொலைகாரன் 80 போல சொல்கின்றீர்களே...

      நீக்கு
  2. இசைத் தொடர் அருமை. தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தொடரும்.... தொடருங்கள்....

      நீக்கு
  3. ஏகப்பட்ட கேசெட்ஸ் வைத்திருந்தேன். எல்லாம் குப்பையில் இப்போது! எம் கே டி பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதில் கிடைக்காத பாடல் "உன்னையே அன்புடன்... வாரி அணைத்து.."

    நானும் இப்படி விதம் விதமாக பதிவேன். எனக்கு அப்படி ஒத்துழைப்புக் கொடுத்தவர் மதுரையில் அருமை நண்பர் மாதவராவ். பொதுவாகவே மதுரைக்காரர்கள் ரசிகர்கள். மார்க்கெட்டில் கிடைக்கும் பலப்பல காம்பினேஷன் கேசெட்கள் அவர்கள் தயாரித்ததாய் இருக்கும்.

    ஒருமுறை நான் நேசித்த பெண் ஒரு கேசெட் பதிவு செய்து தரச் சொல்ல, அந்தப் பெண்ணின் பெயர் கொண்டு ஆரம்பிக்கும் பாடலை கேசெட்டின் இரண்டு பக்கமும் முதலிலும் கடைசியிலும் அந்த முதல் வரியை மட்டும் பதிந்து கொடுத்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் பழைய நினைவு விடயங்களை நான் கிளறி விட்டேனோ... அந்தப்பெயர் சியாமளாவா ? ஆரவள்ளியா ? சிவகாமியா ? பவளக்கொடியா ? சிந்தாமணியா ?

      நீக்கு
  4. அடுத்து...?

    ஆவலுடன் உள்ளேன் ஜி...

    பதிலளிநீக்கு
  5. பழைய சினிமா பாட்டு கேட்டு ரொம்ப காலம் ஆகிவிட்டது. இப்ப எல்லாம் எங்க வீட்டம்மா பாடும் பாட்டை கேட்கவே நேரம் இல்லை. எங்க வீட்டும்மா படுவதோடு என் தலையில் பூரிக்கட்டையால் டிரெம்ஸும் வாசித்துவிடுகிறார்கள் ஹும்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இசை எங்கும் நிறைந்திருக்கும் தலையில் பூரிக்கட்டையில் அடித்தால் ஒரு ஓசை வரும், ஓங்கி கொட்டினால் மற்றொரு ஓசை வரும் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  6. என்ன நடந்திருக்கும் என அறியமுடிகிறது. எனினும் தங்களின் வாயால் (பதிவால்) அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் உடனே யூகிக்க கூடியவர்தானே நண்பரே முடிவை நான் கடந்த பதிவிலேயே சொல்லி விட்டேன் இருப்பினும் சமூகம் என்னை கொலைகாரன் என்று சொன்னதைத்தான் ஏற்க முடியவில்லை.

      நீக்கு
  7. வணக்கம் ஜி! சூப்பர் ஜி! பாட்டுபாடி வாழைத்தாரை பழுக்க வச்சதா கேட்டிருக்கேன்! பழுத்த பழம் உயிர்விடவும் ....?அந்த செய்தீ என்ன?
    ஆவலுடன்....!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி விரைவில் செய்தீ வரும் நண்பரே...

      நீக்கு
  8. நானும் நண்பரும் போட்டி போட்டுக்கொண்டு இப்படி பல வீட்டிலிருந்து காசெட்டுகளை கொண்டு வந்து எங்களுக்கு வேண்டிய வரிசையில் பதிவு செய்வோம். தில்லியில் பதிவு செய்து தரும் கடைகளில் ஹிந்தி மட்டுமே கிடைக்கும் என்பதால், வீட்டிலேயே பதிவு செய்து கொள்வோம். இப்போது கூட அந்த காசெட்டுகள் உண்டு என்றாலும் கேட்கத்தான் முடியவில்லை....

    தீ போல பரவிய செய்தியை தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப்போல் தாங்களும் பழமை விரும்பியாய் இருப்பதில் சந்தோஷம் ஜி செய்தீ விரைவில்...

      நீக்கு
  9. இப்பத்தான் .... தெரிஞ்சது நண்பரே... நீங்க தொப்பி அணியிற ரகசியம்....இஇஇரகசியம் தொடரட்டும் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா, தங்கமலை இரகசியத்தை வெளியில சொல்லிடாதீங்க... வெட்ககேடு.

      நீக்கு
  10. உண்மை சகோ,
    இப்ப இதில் பாட்டு கேட்க யாரும் இல்லை,
    சரி அதையும் உங்க வாயால இல்ல கையால சொல்லுங்க. என்ன நடந்தது என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சொல்றேன் சொன்னால்தானே விடுவீங்க.....

      நீக்கு
  11. ஆனாலும் ஒரு ஆத்மாவின் ஆவலை பூர்த்திசெய்ய உதவியிருக்கிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாராட்டுற மா3தான் தெரியுது இருந்தாலும்.......

      நீக்கு
  12. ஆஹா! நாங்க சின்ன வயசுல இதையேதான் செஞ்சோம்......காட்டுத்தீ போல பரவிய செய்தி என்னவோ ...காத்திருக்கின்றோம்..

    கீதா: நாங்க எங்க வீட்டுல காசெட்ல எம்கேடி பாடல் சீர்காழி பாடல்கள் என்று பதிந்து....அவங்க பாட்டு மட்டுமா,,,எங்க வாய்சும்ல பதிவோம்...ஹஹ அப்படிப் பதிந்து குறிப்பாக நானும் எனது அத்தை மகனும் பாடிப் பதிந்து வீட்டில் உள்ளோர் எல்லாரும் தலை தெறிக்க ஓடி, இனி காசெட் வாங்கித் தரமாட்டோம் என்று எங்களுக்கு வேட்டு வைத்துவிட...அப்புறம் என்னா காசெட் இருந்தாதானா? நாங்க பாடியே கொன்னோம்ல....இப்போ எல்லாம் டிஜிட்டல் ஆனதுனால எல்லாம் இணையத்தில்....

    தொடர்கின்றோம்...நல்ல சுவாரஸ்யமான அனுபவம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீனாக்கா, நீங்க பாடியே பல பேரை கொன்று இருப்பது உண்மைதான் நல்லது எனக்கு சமயத்துக்கு உதவும் விடயம் நன்றி.

      நீக்கு
  13. ஓகோ! முந்தைய பதிவில் நீங்கள் குறிப்பிட்ட அந்த நிகழ்வு இதுதானா? ஆக, நல்ல நோக்கத்துக்காகத்தான் உதவியிருக்கிறீர்கள்! நான், ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன்.

    அது கிடக்கட்டும், உண்மையிலேயே உங்களுக்கு நாக்கில் பிரச்சினையா? அன்று பேசும்பொழுது அப்படி ஒன்றும் தெரியவில்லையே! கதை விடுகிறீர்கள்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையே எனது நாக்கு பற்களுக்குள் சிக்கி சிறிய அளவில் கட்டாகி பேசுவதற்க்கு மிகவும் சிரமப்பட்டேன் இதை மதுரை பதிவர் விழாவில் சொல்லிவிட்டுதான் பேசினேன் காரணம் தமிழே பேசத்தெரியவில்லை என்று யாரும் சொல்லி விடக்கூடாதே...
      இந்த வி10 பற்றி பதிவு எழுதுவேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. நீங்கள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே எழுதிச் செல்வதால் எது உண்மை, எது விளையாட்டு என என்னால் பிரித்தறிய முடிவதில்லை. உண்மையிலேயே வருந்துகிறேன்!

      நீக்கு
    3. வாழ்க்கையே ஒரு விளையாட்டுதான் நண்பரே நம்மை தூக்குறதுக்காக எமன் எருமை மாட்டில் வரும் பொழுது எங்க வீட்டு மாடு மா3யே இருக்கேனு சொன்னோம்னா.... சிரிச்சுட்டு சில நேரம் போய் விடவும் வாய்ப்பு உண்டு நண்பரே...

      நீக்கு
    4. ஆகா! எங்கள் வீட்டில் மாடு இல்லையே!...

      நீக்கு
    5. எங்க வீட்டுல பண்ணையா ? வச்சுருக்கோம் சும்மா சொல்ல வேண்டியதுதான் ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரு பொய் சொல்லலாம் என்று காந்திஜி சொல்லியிருக்கின்றார் நண்பரே.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வாங்க ஐயா கதையைக் கேட்கிறீங்களா ? இல்லை அவர் கதை முடிந்ததா ? என்று கேட்கின்றீர்களா ? தெரியவில்லையே... தொடரும் ஐயா

      ஐயா தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்கின்றேன்.

      நீக்கு
  15. நானும் இப்படித்தான்.. நூற்றுக்கும் மேற்பட்ட ஒலிப்பேழைகளைச் சேர்த்து வைத்திருந்தேன்.. மாறி விட்ட தொழில் நுட்பத்தில் அவற்றைக் கேட்க இயலவில்லை..

    எனது சேகரிப்பில் இருக்கும் பாடல்களில் பல - இப்போது மீண்டும் கிடைப்பது அரிதாக இருக்கின்றது..

    நிறைய செய்திகள் - தங்கள் பதிவில்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஜி பழமை அழிந்து கொண்டே வருவது வேதனைக்குறியதுதான் என்னிடமும் குறைந்து விட்டது நான் யூ.ஏ.ஈ வந்து விட்டதால்.

      நீக்கு
  16. நானும் எம்கேடி ரசிகன்தான்!
    என்ன நடந்தது என அறியக்காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வாங்க ஐயா தாங்களும் எனது வட்டத்துக்குள் இருப்பது கண்டு மகிழ்ச்சியே....

      நீக்கு
  17. ஆகா தியாகராஜ பாகவதரின் பாடல்கள் பலவற்றைக் கேட்டு ரசித்திருக்கிறேன் நண்பரே
    தொடருங்கள்
    காத்திருக்கிறேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே காலத்தால் மறக்க முடியாதவர் திரு. எம்.கே.தியாகராஜ பாகவதர் நன்றி தொடருங்கள்...

      நீக்கு
  18. அட.. டா... ஆவலுடன் தொடர்கிறேன் சகோ!

    பதிலளிநீக்கு
  19. கிழடுகள் இருக்கிற வீட்டில் இருந்து பலரும் வந்து ,உங்கள் வீட்டின் முன்னால் வரிசையாய் நின்று இருப்பார்கள் ,அப்படித்தானே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம்மைப்பற்றி பல கிழவர்களுக்கும் ஏற்கனவே தெரியும் ஜி இவன் நம்ம ஜாதியென்று....

      நீக்கு
  20. வணக்கம்
    ஜி

    நன்றாக உள்ளது... தொடருங்கள் காத்திருக்கேன் அடுத்த தொடருக்கு...த.ம 16
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் ரூபன் தொடர்வதற்க்கு.... நன்றி

      நீக்கு
  21. பழையதையும், புதியதையும் ஒருசேர ரசிக்கும் தங்களது பாணி அருமை. உங்களுடன் நாங்களும் ரசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே.

    நல்ல பாடல்களை பதிந்து ரசித்திருக்கிறீர்கள். ஆடியோ கேஸட்டில் நமக்கு பிடித்தமான பாட்டை பதிந்து கேட்பதென்பது ஒரு சுவாரஸ்யமான விஷயந்தான். இப்போதுதான் அதற்கெல்லாம் நேரமே கிடைப்பதில்லை. சரி.! பெரியவர் விருப்புடன் கேட்டதைதானே நிறைவேற்றியிருக்கிறீர்கள். அதுவும் யாராலும் நிறைவேற்ற முடியாத ஒரு காலகட்டத்தில்.. ! அவர்களே நிமிஷத்தில் கதை முடிந்து விடும் என "முடிவு" கட்டிய செயலுக்கு உதவிய தங்களை பாராட்டத்தான் வேண்டுமே ஒழிய தீயாக செய்தீக்களை பரவ விடக்௬டாது. இதன் தொடர்ச்சியாக இன்று என்ன திருப்பங்கள் நடந்தது என்பதையும் படித்துக் கருத்திடுகிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தாங்கள் சொல்வது போல முடிவு கட்டிதான் வந்து கேட்டார்கள் ஆனால் பழியை என்மீது சுமத்தலாமா ?

      நீக்கு
  23. சிரிச்சு வயிற்றூவலிதான். அப்பாடா பழைய அண்ணா ஜி பதிவு வந்தாச்சு.
    அப்போ நீங்க என் தாத்தா காலத்து ஆளா? நான் கேட்டது குறைவு.1,2 பாட்டு கேட்டிருக்கேன். சூப்பரா எழுதியிருக்கிறீங்க.
    நானும் கேஸட் களில் பாட்டுக்கள் பதிந்து கேட்டிருக்கேன். இங்கே பரணில் பெரிய பெட்டி நிறைய கேஸட் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ உங்க தாத்தாகூட லேட்டஸ்ட் ஆளாகத்தான் இருப்பாரு.. அந்தக் கேஸட் காலங்கள் ஒரு கனாக்காலம் ம்ஹூம்

      நீக்கு
  24. கேசட் கொடுத்து ஓர் ஆத்மாவை கரையேற்றி விட்டிருக்கிங்க போல! சுவாரஸ்யமான விஷயம்தான்! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் என்மீதுதான் பழி போடுகின்றீர்கள் நண்பரே..

      நீக்கு
  25. ஆஹா! நல்ல ரசனை சகோ
    நானும் பல கேசட்டுகள் வைத்திருந்தேன், கணவர் அவற்றைக் காலிசெய்ய வைத்துவிட்டார் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அவையெல்லாம் பொக்கிஷம் இனி கிடைக்குமா ?

      நீக்கு
  26. வணக்கம் ஜி !
    அடடே நல்ல நல்ல பதிவெல்லாம் மிஸ் பண்ணி இருக்கிறேனே
    பொறுத்தருள்க ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே இப்பவாவது வந்தீங்களே.... நன்றி

      நீக்கு