இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 30, 2015

எனது கொள்கை


என்னிடம் சிறு வயது தொடங்கி ஒரு பழக்கம் உண்டு ஏதாவது காரணத்தால் எனக்கு எதிரிகள் உருவாகி விட்டால் அவரை எப்படியாவது நமது மரண காலத்துக்குள் நண்பராக்கி விடவேண்டும் என்பது காரணம் நாளைய எனது மரணம் எந்தவொரு மனிதருக்கும் சந்தோஷத்தை கொடுத்து விடக்ககூடாது என்பது எனது கொள்கை நண்பர்களை அதுவும் நான் எதுவுமே செய்திடாமல் எனக்கு மரியாதை செய்து சந்தோஷப்படுத்தியவர்களுக்கு துரோகம் செய்வேனா ? எனக்கு துரோகம் செய்தவர்களை நான் உடன் மறந்து விடுவேன் காரணம் அதனால் பழிக்குப்பழி வாங்கும் எண்ணங்களை உருவாக்கும் முடிந்த அளவு நன்மையை கருதியே ஏதாவது செய்ய நினைப்பேன் அது சிலநேரங்களில் புரிதலின் காரணங்கள் மாறுபட்டு என்னை கெட்டவனாக்கி விடுகிறது பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள் அது எனது தற்போதைய வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டு வருகிறது கவலைகளும், வேதனைகளும் எனக்கு புதிய விடயங்கள் அல்ல ! அவைகளை கரும்புச்சக்கைகளைப் போல கசக்கி வாழ்ந்து வருபவன் நான் ஆனால் வீண் பழிகள்தான் எனது மனதை வாட்டி வதைத்து விடுகிறது.

யாரிடமும் பேசும் பொழுதும் சரி, எழுதும் பொழுதும் சரி இவை சரியானவைகள்தானா ? என்பதை பலமுறை யோசித்தே வார்த்தைகளை வெளியேற்றுவேன் குடும்பத்திலும் சரி, வெளியிடங்களிலும் சரி நான் நடுநிலையோடு பேசுவதால் கெட்டவன் என்ற பெயரே எனக்கு கிடைத்து இருக்கின்றது ஒருவேளை பெயர் ராசிதான் காரணமோ... என்னவோ... நான் தவறே செய்யாதவன் என்று ஆணித்தரமாக சொல்லி விடமுடியாது அறியாது செய்த தவறுக்காக மனதால் வருந்தி வெட்கப்படுபவன் நான்.

//ஒரு மனிதன் தவறுகளை குறைக்க வெட்கப்பட்டால் போதுமானது//

இது ஒரு வேதத்தில் சொல்லப்பட்ட வார்த்தை இதை எனக்கு விபரம் தெரிந்த வயதில் தேவகோட்டை வீதிகளில் யாரோ, எவரோ சுவற்றில் எழுதி இருந்ததை படித்திருக்கின்றேன் அன்று முதல் நானும் வெட்கப்பட ஆரம்பித்தேன் அதன் காரணமாக எனது தவறுகள் குறைந்தை வருவதை கவனித்தேன் அதையே எனது கொள்கையாகவும் ஆக்கி கொண்டவன் காரணம் நான் சொன்னது யார் ? என்பதை பார்ப்பதில்லை சொன்னது என்ன ? என்பதை பார்ப்பவன் எனக்குப் பிடித்த, பிடிக்காத பெரியாரின் கருத்துகளும் உண்டு, கிருபானந்த வாரியாரின் கருத்துகளும் உண்டு கூடுதலாக பெரியாரின் கருத்துகள் பிடிக்கும் இதனால் நான் கெட்டவனாகி விடுகிறேன் .

எனது மனதுக்கு தவறு என்று தெரிந்து விட்டால் என்னால் பாதிக்கப்பட்ட இதயம் என்னைவிட அகவையில் உயர்வோ தாழ்வோ துளியும் தாமதிக்காமல் மன்னிப்பு கோருவதில் தயங்குவதில்லை இதில் நான் வறட்டுக் கௌரவம் பார்ப்பதில்லை அதேநேரம் தவறில்லை என்றால் என்னிடமிருந்து யாருமே மன்னிப்பை பெற முடியாது எனது தலையில் அகந்தையும் கிடையாது சேரவிடுவதும் இல்லை சேர்ந்தாலும் தலையில் தட்டி இறக்கி விடுவேன் நான் தனிமை விரும்பி தனிமையில் சிந்திக்கும் பொழுது மனம் விசாலமாகும் அதற்காக நண்பர்களை ஒதுக்குபவன் என்று அர்த்தமல்ல ! இந்தியாவிலும் சரி, U.A.Eயிலும் சரி அதிக நண்பர்களை, அதிக நாட்டு நண்பர்களை பெற்றவன் நான் எனது ஆசையே நாளைய எனது மரண ஊர்வலத்துக்கு நிறைய பேர்கள் வரவேண்டும் என்பதே ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவனது மரணநாள் அன்று கணித்து விடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து அரசியல்வாதிகளின் மரணக்கூட்டத்தை இதில் சேர்க்க வேண்டாம் அதன் வகை வேறு நான் சொல்வது என்னைப்போன்ற சாதாரணக்காரர்களின் மரணம்.

வாழ்க ! நலம்.

நல்லதை நினை நன்மை நடக்கும்
தொண்டு செய் மேலான நிலை அடைவாய்.
- குடமுருட்டி சிவமுத்தர் ஸாது சுவாமிகள்

உன்னுடைய மரணம் எந்த ஒரு மனிதனுக்கும் சந்தோஷத்தை
கொடுக்ககூடாது அந்த முறையில் வாழ முயற்சி
- கில்லர்ஜி (எனது செல்வங்களுக்கு நான் சொல்வது)

குறிப்பு - பதிவுகள் எழுத எனக்கு இந்த குருட்டு சமூகத்தில் ஆயிரமாயிரம் விடயங்கள் கொட்டிக் கிடப்பது எனது கண்களுக்கு தென்படுகிறது அதை தொடர்ந்து எழுதுவதற்க்கு தமிழ் மணம் ஓட்டுப்பெட்டி எனக்கு இடையூராக இருப்பது போல் தோன்றுகிறது இனிய நண்பரொருவர் இல்லை என்கிறார் போகட்டும் காலம் பார்க்கலாம்.

என்றென்றும் இதே நட்புடனே....
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി కిల్లర్ జి    Killergee كـــيللرجــــي
தேவகோட்டையான்

58 கருத்துகள்:

  1. மனிதனும் தெய்வமாகலாம்
    தங்களைப் போன்று தேடிச் சென்று கருத்தினை வாரி வழங்குவதில்
    வலைப் பதிவு வாரியாரை எனது பார்வையில் கண்டதில்லை.
    வெள்ளந்தி பேச்சு வெளிச்சத்தை தராவிடினும்
    நிச்சயம் இருட்டுக்குள் தள்ளாது நண்பா!
    கவலையை கழுவில் ஏற்றுங்கள்!
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகை தந்து தோள் கொடுத்தமைக்கு நன்றி தோழா

      நீக்கு
  2. நல்ல சிந்தனைகள். சுவற்றில் எழுதப் பட்டிருந்த வேறு சில வார்த்தைகள் எனக்கும் ஆறுதலைக் கொடுத்திருக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

      நீக்கு
  3. கில்லர்ஜி....வேண்டாம் இதுபோன்ற பதிவுகள்..இதனை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை..வேறு...வேறு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. செல்வா அவர்களின் முதல் வருகைக்கு நன்றி இனி இதுபோன்ற பதிவுகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன் தங்களின் அன்புக்கு நன்றி

      நீக்கு
  4. நல்ல மனம் வாழ்க
    நாடு போற்ற வாழ்க
    தங்கள் மனத்தாங்கல்
    விரைவில் சரியாகட்டும்
    புயலுக்கு பின்னே அமைதி
    எல்லாம் நன்மைக்கே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பே சிவமாய் வரும் நண்பா மிக்க நன்றி வருகைக்கு....

      நீக்கு
  5. உள்ளத்தில் இருப்பவற்றை ஒளிவின்றி உரைக்கும் உங்கள்
    பண்பு உயர்வானது! ஒருசில தடுமாற்றங்கள், தடைகள் அதனால் வரலாம்.
    ஆனால் அவை நிலையாகாது.

    நிறைவான எண்ணங்களுடன் செல்லட்டும் உங்கள் பயணம்!
    சிறப்புற வாழ்த்துகிறேன் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  6. ’’என்னுடைய மரணம் யார் ஒருவருக்கும் மகிழ்ச்சியான நிகழ்வாக அமையக்கூடாது.’ அழகாக சொல்லியுள்ளீர்கள். இன்றைய காலைப்பொழுதில் நல்ல கருத்துக்களை உள்வாங்கியுள்ளேன்.. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்ல கருத்து என்று சொன்னமைக்கு நன்றி

      நீக்கு
  7. புரிகிறது ஜி... சிலவற்றை மறந்து விடுங்கள்... அதுவே என்றும் நல்லது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்தால் நன்று ஜி மறக்க முயல்வேன் நன்றி ஜி

      நீக்கு
  8. நேர்மறைக் கருத்துக்களை மனதில் கொள்வோம், வரவேற்போம். மற்றவற்றைத் தவிர்ப்போம். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் கருத்துகளுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  9. ‘பழுத்த மரம் தான் கல்லடி படும்.’ என்பார்கள். எனவே எதற்கும் கவலைப் படவேண்டாம். நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
  10. தங்களின் உயர்ந்த உள்ளம் ஓங்கட்டும். கவலைகள் மறந்து போகட்டும். மனம் மகிழ்ச்சிக் கொள்ளட்டும்.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு...

      நீக்கு
  11. இந்த பதிவின் மூலம் உங்களுடைய கள்ளம் கபடமில்லாத மனதை மேலும் தெரிந்து கொள்ள முடிந்தது சகோ. உங்களுடைய பிரச்சனைகளும் விரைவில் நீங்கி மகிழ்ச்சியாக இருக்கவும் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அன்பு நண்பருக்கு, என்னாச்சு உங்களுக்கு? ” வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்; வாசல்தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால், ஓடுவதில்லை” என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன்.

    /// என்னிடம் சிறு வயது தொடங்கி ஒரு பழக்கம் உண்டு ஏதாவது காரணத்தால் எனக்கு எதிரிகள் உருவாகி விட்டால் அவரை எப்படியாவது நமது மரண காலத்துக்குள் நண்பராக்கி விடவேண்டும் என்பது காரணம் நாளைய எனது மரணம் எந்தவொரு மனிதருக்கும் சந்தோஷத்தை கொடுத்து விடக்ககூடாது என்பது எனது கொள்கை ///

    என்ற உயரிய கொள்கை (புத்தரின் கொள்கையும் இதுதான்) கொண்ட உங்களுக்கு மனக்கவலை வரலாமா? அடுத்து என்ன? ஆக வேண்டிய காரியங்களைப் பாருங்கள். எப்போதும் போல வலைப்பக்கம் வாருங்கள். எல்லாம் சரியாகி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் ஆறுதல் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது தொடர்ந்து எழுதுவோம்...... நலம்

      நீக்கு
  13. வணக்கம் ஜி! தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு ஒன்றும் ஆகாது ஜி! இனி இந்தமாதிரி பதிவுகள் வேண்டாம்! தங்கள் கொள்கையில் எனக்கும் உடன்பாடு உண்டு! மனச்சஞ்சலங்கள் மறையட்டும் மகிழ்ச்சி பொங்க இனி எழுதுங்க ஜி! நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வார்த்தைகள் மனதுக்கு சந்தோஷத்தை தந்தது நன்றி

      நீக்கு
  14. ஆமாம் சகோ என்ன ஆச்சி?
    இது போன்ற பகிர்வுகள் அடடா சகோவிற்கு என்ன ஆச்சோ என்று கலங்க வைக்கிறது. ஆதலால் இதுவும் கடந்து போகும் என்று கடந்து செல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ இனி நகைச்சுவை பதிவுகள் வரும்.

      நீக்கு
  15. அன்பின் ஜி..

    நேற்று தங்களுடன் தொலைபேசியில் உரையாடிய விஷயங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

    எல்லாவற்றையும் கடந்து வாருங்கள்..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  16. ஆமாம் என்னாச்சு கில்லர்ஜி! பெயரில் மட்டும்தான் கில்லர்? வேண்டாத மன எண்ணங்கள் எல்லாவற்றையும் புறம்தள்ளி கில்லராய் இருக்க வேண்டாமோ! அதுதானே கில்லர்ஜி!

    சுவற்றுக் கிறுக்கல்கள் பலவற்றில் பெரிய வாழ்க்கைத் தத்துவமே இருக்கும்..அவர்கள் எல்லோரும் பெரிய மகான்களாக இருக்க வேண்டும்..ஹஹஹ் அப்படித்தான் சமீபத்தில் எந்தத் தத்துவப் பித்தனோ ரயிலின் கழிவறைச் சுவற்றில் ஊசியால் பொரித்திருந்த வாசகம்.."எவனொருவன் உன்னப் பின்னால் தொடுகின்றானோ அவனைக் கழுதை போல் உதைத்திடு. முன்னால் வந்து நின்று கைகொடுப்பவனைக் கண் நோக்கிய பின் தோளோடு அணைத்திடு" இது எப்புடி?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களின் கருத்துரைக்கு நன்றி தாங்கள் சொன்ன கழிவறை தத்துவம் அருமை அதிலும் விடயம் இருக்கின்றது.

      நீக்கு
  17. அண்ணா...
    எல்லாவற்றையும் எதிர்க்கொள்ளும் திறன் இருக்கும் தங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவா...?

    நாம் போகும் பாதையில் மலர்களும் இருக்கும் முட்களும் இருக்கும்... முட்கள் குத்திவிட்டதே என்பதற்காக அதற்கு மேல் பயணிக்காமல் இருக்க முடியுமா...?

    அந்த முள்ளை எடுத்து அடுத்தவருக்கு குத்தாமல் தூர எறிந்து விட்டு நடந்துதானே முன்னோக்கிச் செல்வோம்...

    எது நடந்தாலும் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள்...

    உறவு அரசியல், பதிவு அரசியல் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.. நம்மோடு அன்பு வரட்டும் இந்த அரசியல் நமக்கு வேண்டாம்...

    உங்களை எனக்குத் தெரியும்... எப்பவும் போல் பயணியுங்கள்...

    சிரிப்போடு சிந்தனைப் பதிவுகளே கில்லர்ஜியின் வெற்றி... சோகங்களை இனிச் சுமக்காதீர்கள்... போதும்... மீண்டும் ஒரு சந்தோஷப்பகிர்வோடு வாருங்கள்...

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கும், அதன் மூலம் ஆறுதல் தந்தமைக்கும் நன்றி
      இனி நகைச்சுவை பதிவுகள் தர முயல்கிறேன்.

      நீக்கு
  18. என்னாச்சு சகோ, இது தங்கள் கெட்டப்புக்கு நல்லா இல்ல சகோ,

    எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எல்லாம் சரியாகும், எல்லாவற்றையும் சுமக்க ஆரம்பித்தால் தாங்க முடியாது, அமைதியாகுங்கள். எல்லாம் சரியாகும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி இனி பதிவில் மாற்றம் தருவேன்

      நீக்கு
  19. எனது மரணம் யாருக்காவது மகிழ்ச்சியை தந்தால் சந்தோசம்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அப்படியானால் நாம் வாழ்ந்த காலத்தில் பலரும் துன்பப்பட்டதாக அர்த்தமாகிறதே...

      நீக்கு
  20. அன்புள்ள ஜி,

    யாருடைய மனதையும் கொலை செய்யாத ‘கில்லர்’ரின் பண்பு... உயர்வானது.
    ‘உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது!
    -கவியரசரின் வாழும் வரிகள்!

    த.ம.13




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே தங்களின் வார்த்தை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  21. நண்பரே இன்றுதான் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்தது
    துன்பம் யாருக்கும்
    சொந்தமில்லை
    இன்பம் யாருக்கும்
    நிரந்தரமில்லை

    கவலை வேண்டாம் நண்பரே
    வாழ்வில் எத்தனையோ மேடு பள்ளங்களைப் பார்த்தாகிவிட்டது,
    இனி சிறு சிறு கற்களைக் கண்டா மனம் தளர்வது
    எதிர்மறை எண்ணங்களை தூர தூக்கி எறியுங்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்லதொரு கருத்து தந்து ஆறுதல் தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  22. நல்ல பன்புதானே!

    கொட்டிக்கிடப்பவற்றை தயங்காது எழுதுங்கள்;ஓட்டுப்பேட்டியை மறந்து! அது நீங்கள் வேண்டாமென்றாலும் நிறையும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. நமது மரணம் மற்றவர்களுக்கு சந்தோசத்தைதருகிறதா...? நம் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் துக்கத்தை தருகிறதா...???? செத்த பிறகு நமக்கு எப்படி தெரியும் நண்பரே.... புதைப்பாங்களா...??? எரிப்பாங்களா..... இல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தெரியாது நண்பரே... ஒருவேளை தெரியலாம் அதுவல்ல பிரட்சினை நமது வாழ்க்கை முறை சரியானது என்பதை பிறர் அறியக்கூடும்

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே.

    இன்றுதான் வலைப்பக்கம் வந்தேன். தங்களின் பதிவுகளை படிக்க வந்தால், வருத்தம் மேலோங்கும், விஷயங்களை அலசிய பதிவு வருத்தத்தை தந்தது. நம் மனதின் எண்ணங்கள் நன்றாக இருந்தால் நடப்பவை என்றும் நல்லதாகவே நடக்கும். இதில் மாற்றமேதுமில்லை. ஆனால் நட்போடு பகிரும் போது சுமைகள் சற்று லேசாகும். கவலையை கைவிட்டு மன தைரியத்தோடு தாங்கள் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தங்களின் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  25. சகோதரர் தமிழ் இளங்கோ குறிப்பிட்ட வைர வரிகளைத்தான் நானும் குறிப்பிட விரும்புகிறேன்.

    "வாழ்க்கை என்றால் ஆயிரமிருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்.
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை!
    எதையும் தாங்கும் இதயமிருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதியிருக்கும்!"

    விரைவில் மன அமைதி கிடைத்திட விரும்புகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் நீண்ட கருத்துரைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  26. தூற்றுவார் தூற்றட்டும் ! போற்றுவார் போற்றட்டும்! நம் கடன் பணி செய்து கிடப்பது அல்லவா? வேண்டாத சிந்தனைகளை ஒதுக்கி ஊக்கமுடன் பயணியுங்கள் உடன் வர நாங்கள் இருக்கிறோம்! நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  27. வணக்கம்
    ஜி
    எதுநடக்கிறதோ அது நன்றாக நடக்கட்டும்... கவலைகள் வேண்டாம்... நாம் நாமாக வாழ்வோம்.. ஜி... பதிவை படித்த போது மனம் கனத்து விட்டது... த.ம 18
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  28. இதுவும் கடந்து போகும். இன்று இருக்கும் மனநிலை நாளை இருப்பது இல்லை. கவலைப்படவேண்டாம். நான் நினைத்தேன் வழமைக்கு திரும்பியாச்சு என்று. பழையபடி கலகலப்பாக பதிவு எழுதும்படி அன்போடு கேட்டுக்கறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் கருத்துரைக்கு நன்றி நாளையே நகைச்சுவை பதிவு.

      நீக்கு
  29. நல்ல மனம் வாழ்க.... நாடு போற்ற வாழ்க....

    பதிலளிநீக்கு