இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 06, 2015

புதுக்கோட்டை போறேங்க...



ஏங்க எந்த ஊருக்கு போறீங்க ?
நான் புதுக்கோட்டைக்கு போறேங்க...

என்ன விசயம்... ? 
அங்கே மாநாடு நடக்குதுல அதுக்குத்தான்.

சாப்பாட்டுக்கு பணமெல்லாம் வச்சுருக்கியா ?
பணம் எதுக்கு அங்கேதான் வயிறு நிறைய வேண்டியதை சாப்புட்டுக்கிறலாமே.. ? 

என்ன மாநாடு ? 
அதாங்க கம்பூட்டருல எழுதுறாங்களாமே... லோகம் மொழுக்க படிக்கிறாங்களாமே.. அதுக்குத்தான்.

அதுல உனக்கு என்ன புரியும்னு போறே... ? 
என்னங்க பார்த்தா, படிச்சவரு மாதிரி இருக்கீங்க... லூசு மாதிரி கேள்வி கேட்குறீங்க ?

என்னையா நீ படக்குனு லூசுனு சொல்றே ?
பின்னே, என்னங்க.. கேனப்பய மாதிரி கேள்வி கேட்டா... ?

யோவ் என்னய்யா நீ விட்டா பேசிக்கிட்டே போறே... ? 
கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாமா ?

சரி நிறுத்துய்யா.. நானும் பதிவர் மாநாட்டுக்குத்தான் போறேன்.
அப்படியா... அப்பயேன் தெரியாத மாதிரி கேட்டீங்க... ?

உனக்கு வெப்ஸைடைப்பற்றி தெரியுதானு டெஸ்ட் பண்ணினேன்.
நல்லவேளை சொன்னீங்க நான் செவுலு தெறிக்க ரெண்டு விடப்பார்த்தேன்.

எந்த ஊரு உனக்கு... எடக்கு மடக்கா பேசுறே.... ?
தி கிரேட் தேவகோட்டைதான்...

நினைச்சேன் மா3னு சொல்லும் போதே அந்த ஊரு ஆளுனு... சரி பார்த்தால் படிக்காத ஆள் மாதிரி இருக்கே... தி கிரேட் தேவகோட்டைனு சொல்றே...
ஏன்... சொல்லக் கூடாதா ? தி கிரேட் ப்ரிட்டன்னு சொன்னா... அதுக்கு மட்டும் வாயைப் பொத்திக்கிட்டு இருக்கீங்க... எனக்கு எங்க ஊரு பெருசுதான்யா..

சரி நீ என்ன படிச்சுருக்கே... ?
நான் படிக்கலை.

படிக்காமல் எப்படி... வெப்ஸைடைப்பற்றி தெரிஞ்சு வச்சு இருக்கே.. ?
என்னோட கனவையெல்லாம் என்னோட புள்ளைங்க தீர்த்துடுச்சுல அவங்களை படிக்கச்சொல்லி கேட்பேன்.

அடடே பரவாயில்லையே.... ஆமா யாருடைய பதிவுகளை படிப்பே..
தஞ்சையம்பதி பதிவர் இருக்காரே... தெரியுமா ?

ஆமாய்யா நானும் படிச்சுருக்கேன் கோயிலைப்பற்றி எழுதுவாரு....
அவரு எந்த ஊருல இருக்காரு ?

தஞ்சாவூருலதான்.
இப்புட்டுதானா... ஓன் லெட்சணம் அவரு குவைத் நாட்டுல இருக்காரு....

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் ?
நீ என்னத்தை படிச்சு கிழிச்சியோ... போ பார்த்தால் பேண்டு – சட்டை போட்டு படிச்ச ஆள் மாதிரிதான் இருக்கு வெசயம் இல்லையே.

அப்பயேன் அவரு தஞ்சையம்பதினு போட்டுருக்காரு... ? 
மலேசியா வாசுதேவன் சென்னையிலே இருக்கலையா ? தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபியில இருக்கலையா ? அதே மாதிரிதான்யா.. அடுத்த வாரம் கூட தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அபுதாபிக்கு போயி கில்லர்ஜியையும், குமாரையும் பார்க்கப் போறாராம்.

கில்லர்ஜியை உனக்கு தெரியுமா ?
தெரியுமாவா என்னையா கூமுட்டை மாதிரி கேட்குறே ? என்னோட வீட்டுக்கு எதிர்த்த வீட்டு பக்கத்து வீட்டுக்கு எதிர்த்தாப்புலதான் அவரு வீடு.

என்னையா குழப்புறே ?
படிக்காத நான் பேசுறதே உனக்கு புரியலைனா.. மாநாட்டுல எவ்வளவு பெரிய படிச்ச அறிஞர்கள் பேசுவாங்க அதை எப்படி புரிஞ்சுக்குவே... ?

நீ பேசுறதைப் பார்த்தா.. உன்கூட மாநாட்டுக்கு வந்து நடக்கிறதை கவனிச்சாத்தான் எனக்கும் புரியும் போலயே...?  
பின்னேயென்ன... மாவுடியான் மாதிரிதான் இருக்கே... ? 

யோவ் கொஞ்சம் மரியாதையா.. பேசுய்யா பக்கத்துல இருக்கிறவங்க திரும்பி பார்க்கிறாங்க...
சரி நீ யாரு... பதிவுகளை படிப்பே ?

நான் அப்படியே மேலோட்டமா... பார்ப்பேன்.
பாப்பியா... படிப்பியா ?

அது.. வந்து படிப்பேன்...
அட முடுதாரு... நீ சொல்றதை பாத்தா டெல்லிக்காரரு வெங்கட் நாகராஜ் போட்டா போட்ருந்தா படம் பாப்பே படிக்கிற மாதிரியில்லையே...

சரி நீ யாருடையதை படிப்பே...
நான் எங்க ஊருக்காரங்க சே. குமார், அப்புறம் சமையலைப்பத்தி தெரிஞ்சுக்கிறனும்னா.. உமையாள் காயத்ரி இவங்க பதிவை படிக்கச் சொல்வேன்.

அவ்வளவுதானா ?
அவ்வளவு தானாவா... அட முடுமை நான் சொல்ல ஆரம்பிச்சேன்னா மாநாடு முடிஞ்சு வீட்டுக்குப் போறது வரைக்கும் சொல்வேன் அவ்வளவு ஆளுக இருக்காங்க...

சரி வேற ஏதாவது கதை எழுதுறவங்க பதிவு படிப்பியா ?
ஆமா சரித்திரம் படிக்கனும்னா, கரந்தையாருடைய பதிவு, அப்பொறம் கோயில் சிற்பங்களை தெரிஞ்சிக்கிற.. முனைவர் பி. ஜம்புலிங்கம் அவருடைய பதிவு, குடும்பத்தைப்பத்தி தெரிஞ்சிக்க ஜியெம்பி ஐயா பதிவு, நாட்டுநடப்பை பாட்டாலே சொல்லுற புலவர் ராமாநுசம் ஐயா பதிவு, அப்பொறம் கம்பூட்டரைப்பத்தி தெரிஞ்சிக்க திண்டுக்கல் தனபாலன் பதிவு, எல்லா வெசயத்தையும் தெரிஞ்சிக்க ஸ்ரீராம் பதிவு, உன்னைப்போல ஏமாத்துற ஆளுகளைப்பத்தி தெரிஞ்சுக்க, வே. நடனசபாபதி பதிவு, யாரக்காவது பிறந்தாளு, இறந்தநாளு தெரிஞ்சுக்கிறதுக்கு யாதவன் நம்பி பதிவு, நெனைச்சு, நெனைச்சு சிரிக்க பகவான்ஜி பதிவு, சின்ன வெசயத்தைக் கூட பிரமாண்டமாக ஊதி பெரிசா எழுதுற வில்லங்க கோஷ்டிகள் துளசிதரன் – கீதா பதிவு, அப்பறம் சிரிக்க வைக்கிற பழனி கந்தசாமி ஐயா, சென்னை பித்தன் பதிவு, மரபுக்கவிதை படிக்க இளமதி, சசிகலா பதிவு, சின்ன பதிவு படிக்க கமலா ஹரிஹரன் பதிவு, புதுமைக்கு மகேஸ்வரி பாலசந்திரன் பதிவு, சமையலுக்கு சாரதாபதிவு,  வழியில் நடப்பதையெல்லாம் தெரிஞ்சிக்க வலிப்போக்கன் பதிவு, நாடகத்தைப்பற்றி படிக்க மணவையார் பதிவு சினிமா விமர்சனம் படிக்க தோழர் மது பதிவு, பிரமிக்க வைக்கிற S.P. செந்தில்குமார் பதிவு, ஊருசுத்திக் காண்பிக்கிற வெங்கட் நாகராஜ் பதிவு, அப்பொறம் காதல் கவிதை எழுதுற துபாய் ராஜா பதிவு, புதுசா வந்துருக்கிற கரூர் பூபகீதன் பதிவு, சட்டத்துறையை அலச செந்தில்குமார் பதிவு, இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம் பாத்தியா... திருமயம் வந்துருச்சு.

இவ்வளவு சொல்றே விழாவை நடத்துற கவிஞர் முத்து நிலவன் ஐயாவைச் சொல்லவில்லையே...
அட கொங்காப்பயலே, அவரு சொல்லாமலா.. நான் மாநாட்டுக்குப் போறேன் ?

உனக்கு வெப்ஸைடே இல்லை அவருக்கு உன்னை எப்படித்தெரியும் ?
அவருதானே வாங்க கில்லர்ஜி மாநாட்டு கையேடெல்லாம் தயார் செய்துருக்கோம் வந்து வாங்கிட்டுப் போங்கனு சொன்னாரு.

கில்லர்ஜியா... அவருதான் அபுதாபியிலே இருக்காரே.. ? 
அட வெளங்கா மட்டை அவரு உடம்பு மட்டும்தான் அங்கே இருக்கு நான் ஆவியா மாநாட்டுக்குப் போறேன்.
ஆவியா ? அடப்பாவி

சொன்னவன் சட்டென்று ஓடுகின்ற பேரூந்திலிருந்து கீழே குதித்து விட்டான் மேலும் விபரங்கள் நாளைய தினத்தந்தியில் நண்பர் திரு. S.P. செந்தில்குமார் அவர்கள் தருவார் காணுங்கள்.
அன்றைய தினம் அனைத்து திசைகளிலிருந்தும் புதுக்கோட்டைக்கு பேரூந்துகள் இலவசம் வாரீர்... வாரீர்... வாரீர்...
 
காணொளி
2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டையான்

கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergee كـــيللرجــــي

84 கருத்துகள்:

  1. ஆ......!

    லிஸ்ட்டில் என் பெயரும்! தன்யனானேன்.

    பதிவை ரஸித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை
    எதுக்கும் லாய்க்கில்லா பதிவுன்னு
    என் பதிவை விட்டுட்டீங்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே வலையுலக பிதாமகன் தங்களை மறக்க முடியுமா ? நேற்று நள்ளிரவில் எழுதியது பதிவின் ஒன்றைத்திறந்து எடுத்துப்போட்டேன் கவிஞரே விடுபட்டமைக்கு வருந்துகிறேன்.

      நீக்கு
  4. அருமை சகோ,
    தங்கள் நினைவில் யானும் எனும் போது நெகிழ்ந்து போனேன்.
    காணொளி அருமை சகோ,
    இப்படி சோறு போட்டா போக வேண்டியது தான்,,,,
    ஆனாலும் நிஜம் தான் அவர்கள் எதற்கும் தயார் தான் போலும்,,,,
    சரி என்ன ஒட்டகத்துல வருவீர்கள் என்றால் பஸ்ல்,,,,,,,,, ஓஓ வெயிட்டிங்க,,,,,, பஸ்ஸக்கு சரி சரி,,,,
    மனமெல்லாம் இங்கே தான்,, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி சகோ

      நீக்கு
  5. உங்களுக்கே உரிய நடை. ரசித்தேன். கொஞ்சநாள் வலைப்பக்கம் என்னால் தொடர்ந்து வரவில்லை என்றதும் என்னை மறந்து விட்டீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதெப்படி எங்கள் சகோதரர் பெயரை மறந்தீர்கள்.பலூன் கலர் கலரா புதுக்கோட்டைக்கு கொண்டு வருகிறார் அவரை மறந்துட்டிங்களே..

      நீக்கு
    2. வருக நண்பரே அப்படியெல்லாம் இல்லை தாங்கள் வராவிட்டாலும் நான் வந்து கொண்டுதான் இருக்கிறேன் தவறியமைக்கு வருந்துகிறேன்

      நீக்கு
  6. பலசுவை பதிவுகளை "குழலின்னிசை "வழங்கி வந்தாலும்,
    பிறப்பும், இறப்பும் வாழ்வில் பிண்ணிப் பிணைந்த
    நிகழ்வுகள் அல்லவா?
    கதை, கவிதை, கட்டுரை, படம் சொல்லும் பாடம், இன்னும்,
    பல்வேறு பதிவுகளை யாருடைய மனமும் புண்படா வண்ணம்,
    தன் எண்ணத்தை பதிவு செய்யும் எமது தளத்தையும் பதிவில் சொல்லியமைக்கு உமக்கும் தரும்! பிறந்தநாள் பரிசு பதிவாக!
    த ம +
    நன்றி நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரைக்கு நன்றி நண்பா...

      நீக்கு
  7. வணக்கம் ஜி! புதுகைககு புதுமையாய் அழைத்தவர் நீங்கதான் ஜி! ஒருத்தரையும் விடாமல் அவர்கள் சிறப்புகளோடு.,..உங்கள் அன்புக்கு ..உள்ளம் கனிந்த நன்றிகள்! வாழ்த்துக்கள்!! எப்பவும் எதிலும் கலக்கல்தான் ஜி! நன்றி நன்றி!!

    பதிலளிநீக்கு
  8. அருமை நண்பரே... 'கில்லர்ஜி'ங்கிற பேருக்கு ஏத்த மாதிரி கூட பேசிகிட்டு இருந்தவரை குதிக்க வச்சுட்டீங்க...

    அனைத்து பதிவுகள் சிறப்பையும் தொகுத்தமைக்கும், அந்தப் பட்டியலில் என் பெயர் இணைத்தமைக்கும் வாழ்த்துக்களும், வணக்கங்களும்...

    பதிவர் திருவிழா நாள் வரை அதிரடி அழைப்பு பதிவுகள் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே நான் ஒன்றும் செய்யவில்லை அவனாகத்தான் குதித்தான்.

      நீக்கு
  9. சந்திக்க முடிந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை சந்திக்க முடியாத வருத்தம் எனக்கும் உண்டு ஐயா.

      நீக்கு
  10. சகோதரரே!.. உங்கள் பதிவு அட்டகாசம்!

    உண்மையில் என் பெயரும் உங்கள் அன்பு உள்ளத்திலும் இருக்கின்றதெனக் கண்டு நெகிழ்ந்துபோனேன்!..

    அன்பிற்கு மிக்க நன்றி சகோ!

    நாங்களும் ஒருமுறையேனும் இப்படி எல்லாப் பதிவர்களையும் காணும் நாள்வாராதா எனும் ஏக்கம் மேலோங்கிக்கொண்டே போகிறது!
    நல்ல பதிவு! வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  11. கலக்கலான பதிவு..!
    கவளம் கவளமா சாப்புடுற நண்பரைப் புதுக்கோட்டைக்கு வரச் சொல்லுங்க.!,,விழுந்து விழுந்து சிரிச்சேன்..
    அப்படியே நம்ம வலைப் பக்கம் வாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவரைப்போல 4 பேர் போதுமா ?

      நீக்கு
  12. ஹஹ ஆமாம் அனைவரும் பேருந்து அல்லது இரயில் வண்டிகளில் அமர்ந்ததும் கில்லர்ஜி முகவரியைத் தந்துவிடுங்கள் (புகைப்படத்துடன்
    )அவர் செலவில் அனைவரும் புதுக்கோட்டை செல்கிறோம். சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசாங்கமே நம்மளுடையதுதானே.... நீங்க ஃப்ளைட்ல கூட போயிட்டு வாங்க...

      நீக்கு
  13. இங்கே வரும் உங்கள் ஆவியுடன் அன்றைக்கு நான் பேச விரும்புகிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசலாம் ஜி இதே பேரூந்தில் ஏறுங்கள்.

      நீக்கு


  14. உடல் அங்கிருந்தாலும் மனம் புதுக்கோட்டையில் இருக்கிறது எனத் தெரிகிறது. அதனாலென்ன நேரடி ஒளிபரப்பில் நிகழ்ச்சிகளை காண முடியும் என எண்ணுகிறேன். அது சரி எந்த பதிவையும் விட்டு வைப்பதில்லை போல் தெரிகிறதே. எனது பதிவையும் பதிவில் சொன்னமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே மனம் பதிவர் விழாவைச் சுற்றியே வருகிறது நன்றி

      நீக்கு
  15. அட்டகாசமான பதிவு சகோ. தங்களுடைய தளத்தில் என்னுடைய பெயரையும் இணைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கு. கானொளியில் ஒருவர் பெரிய உருண்டையாக உருட்டி சாப்பிடுவது சிரிப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எல்லாம் உங்களது சமையலின் கைவண்ணமோ ? இந்த பூட்டு பூட்டுறானே...

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே.

    தங்களது அழைப்பின் ஒவ்வொரு பாணியும், மிக அருமை. மிகவும் ரசித்துப் படித்தேன். எப்படி தங்களுக்கு மட்டும் இவ்வாறெல்லாம் எழுத தோன்றுகிறது.? அருமை. வாழ்த்துக்கள்.!
    தங்களுக்கு இணையாக நின்று பேசி ஜெயிக்க முடியாமல்,எங்கே தோற்று விடுவோமோ என்ற பயத்தில், ௬ட வந்தவர் அந்த முடிவை எடுத்து விட்டாரோ.? இல்லை, ஆவியாகி தங்களுடனேயே வரும் ஐடியாவோ.? தாங்கள் படிக்கும் அனைவரோடும் என் பெயரையும் இணைத்து , என்னையும் பதிவுலத்திற்கு அடையாளம் காட்டி,என்னை நெ(ம)கிழச்செய்ததற்கு என் நன்றிகள் எப்போதும்... ஆனாலும், ஆவி எழுதிய எழுத்தின் தவறை சகோதரர் கில்லர்ஜி சரி செய்து விடுவார் என நினைக்கிறேன். (அதான்..."சின்ன பதிவு.")

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் விஸ்தாரமான கருத்துரை மகிழ்சி அளிக்கிறது நன்றி

      நீக்கு
  17. ஆவியா வர்றீங்களா...அட சொல்லீட்டீங்கள்ல உங்க ஆவிய பிடிச்சு ஜீபும்ம்பா மாதிரி ஒரு ஜக்குக்குள்ள போட்டு எடுத்துட்டுப் போறோம்..இல்லைனா பஸ்ஸுலருந்து குதிச்சா மாதிரி அங்க எல்லோரும் ஓடிட்டாங்கன்னா..அதான்.ஹஹஹ

    வில்லங்க கோஷ்ட்டிங்களயும் சொன்னதுக்கு தாங்க்ஸ்பா......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க நல்லவேளை முன்கூட்டியே சொன்னீங்க நான் வேறு மா3 வருவேனே....

      நீக்கு
  18. என்னைய வெச்சுத் தான் அக்கப்போர் ஆரம்பம் ஆனதா!..

    சிவசம்போ..ன்னு பஸ்ஸூல வந்த ஆள் - அநியாயத்துக்கு குதிச்சி ஆவியாப் போய்ட்டான்!.. பாவம்!..

    (குறிப்பு!.. - ரொம்ப நளைக்கு அப்புறம் நல்லா சிரிச்சதில வயிறு வலி கண்டு விட்டது.. அபுதாபிக்கு வரும் போது டாக்ட்டர் 7மலையிடம் சொல்லி நல்ல மாத்திரைக்கு வழி செய்யவும்..)

    ஏ.. சதாசிவோம்!.. அடுத்த வாரம் அபுதாபி போறது அதுக்குள்ள அகிலத்துக்கும் பரவிடுச்சே!.. இந்த ஒட்டகம் வேற மெதுவா போவுது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அவன் தேவையில்லாமல் குதிச்சுட்டான் இதற்க்கு நான் பொருப்பு கிடையாது
      7 மலை விடுமுறையில் உகாண்டா போயிட்டாரு நீங்க வாங்க 6 முகத்திடம் பார்த்துக் கொள்ளலாம்.

      நீக்கு
  19. ஒரு பெரிய பதிவர் லிஸ்ட்டே கொடுத்திட்டீங்க!
    சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இரவு நேரத்தில் எழுதினேன் ஆகவே நபர்கள் குறைந்து விட்டது என்னைப் பொருத்தவரை இது சிறியதே...

      நீக்கு
  20. ஆகா
    நண்பரே இதுபோல் எழுத தங்களால் மட்டும்தான் முடியும்
    அசத்திவிட்டீர்கள்
    வீடியோ கான்பரன்சிங் முறையில்
    பதிவுத் திருவிழா அன்று, பேச முடியுமா என்று பாருங்களேன்
    தங்களின் மீசைக்குள் ஒளிந்திருக்கும் முகத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்
    நன்றி நண்பரே
    தம ’+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சந்தோஷமான விடயம் முயல்கிறேன் நண்பரே முடியாத பட்சத்தில் செல்மூலம் மைக்கிலாவது 2 வார்த்தைகள் பேசுவேன் நன்றி

      நீக்கு
  21. "கில்லர்ஜீ -உங்க பதிவுல...கொன்னுட்டீங்க"...பத்து இடத்தில் "மா3" உபயோகப்படுத்தி ஒரு மாதிரியா அசத்தியிருக்கீங்க... நல்ல சிந்தனை ...நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்பரே கவனமாக படியுங்கள் நான் அவனைப்பிடித்து வெளியே தள்ளவில்லை எதிர்பாராத விதமாக அவன்தான் பேரூந்திலிருந்து குதித்தான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  22. உண்மையிலே தி கிரேட் தேவ கோட்டை... தேவ கோட்டையார்தான்...வாழ்த்துக்கள்!! நண்பரே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா இவ்வளவு நாட்களாக பொய் சொல்கிறேன் நினைத்தீர்களா ? நான் எப்பொழுதும் பேசுவது உண்மையே...

      நீக்கு
  23. ஆஹா அருமை உங்கள் மனம் முழுதும் இங்கேயே இருப்பதை உணர முடிகின்றது..ஒண்ணூ தெரியுமா...நீங்க இங்க வந்தப்ப பதிவர் விழா பற்றி கேட்டதால் தான் இந்த விழாவே நடக்குது....ஆமா எங்க என் பதிவ படிக்க மாட்டீங்களா இதுல எழுதலயே...சரி சரி சீக்கிரமா வாங்க சாப்பிட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கடுமையான உழைப்புகளுக்கும் மத்தியில் எமது பதிவுக்கும் வந்தது மகிழ்ச்சி.. உண்மையே அன்று நான்தான் பேச்சைத் தொடங்கினேன்... நினைவு வைத்திருப்பதற்க்கு நன்றி

      நீக்கு
  24. அன்புள்ள ஜி,

    புதுக்கோட்டை விழாவிற்கு அழைப்பு விடுத்தது அருமை. தி கிரேட் தேவகோட்டையார்...!

    த.ம.15

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  25. ஆஹா...
    லிஸ்ட்ல குமாருக்கு ரெண்டு தபா கிடைச்சிருக்கு...
    அருமை அண்ணா...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  26. ஆவியா மாநாட்டுக்கு போறவங்களோடு கோபிக்கமுடியாது என் பெயரை போடேல்லையே என்று. ஆவியின் ஆவ்.வ் அண்ணா ஜி ன் மனசு எல்லாம் புதுக்கோட்டையில்தான்..
    சூப்பரான அழைப்பு. ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா என்னை உண்மையிலேயே ஆவியாக்கிடுவீங்களோ.... வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  27. அய்யா கோவை ஆவிதான் கேள்விப்பட்டிருக்கோம்...
    இப்ப தேவக்கோட்டை அபுத்ஆவி ச்சே..அபுதாவி அடச்சே..அபுதாபி வேறயா.. தாங்குமாய்யா நம்ம பதிவர் விழா..? பேயோட்டுற யாராவது பதிவர் இருக்கீங்களா சாமியளா..கொஞ்சம் அவசரமா வாங்கய்யா..வ்! இங்க ஒரு ஆபி ச்சே அபுதாவி அடச்சே அபுதாபி வந்திருக்காமில்ல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே.. வரச்சொல்லி அழைப்பு கொடுத்து விட்டு இப்ப மறிச்சுக்கட்ட ஏற்பாடா ? சரிதான் விழாவுல நான் விஞ்ஞானரீதியில பங்கேற்கிறேன்.

      நீக்கு
    2. அண்ணா, பதிவர் விழாவிற்குப் பல ஆவிகள் வருது..வேற என்ன பண்றது.. :)

      நீக்கு
  28. அருமை கில்லர் ஜி கொஞ்ச நாள் எழுதலன்னா மறந்துட்டீங்களே கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே அப்படியெல்லாம் இல்லை லிஸ்ட் எடுக்க ஒரு பதிவை க்ளிக்''கினேன் அதில் வந்தவர்களை இணைத்து விட்டேன்... தவறியமைக்கு வருந்துகிறேன்

      நீக்கு
  29. அருமை நண்பரே, இப்படி ஒரு பதிவை எழுத உங்களால் மட்டுமே முடியும். அனைத்து பதிவர்களையும் நினைவில் வைத்து சிரிக்க சிரிக்க பதிவு தந்தது அற்புதம். பதிவெழுதும் போது இரண்டு முறை என் நினைவு தங்களுக்கு வந்தது நான் செய்த பாக்கியம். அபுதாபியில் இருந்தாலும் தங்களின் நினைவு முழுவதும் இங்குதான் இருக்கிறது என்று மீண்டும் நிரூபித்த பதிவு. நன்றி நண்பரே!
    தமிழ் மணம் வாக்களிக்க முடியவில்லை நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே லேட்டானாலும் லேட்டஸ்டா கருத்துரை போட்டீங்க....
      சரி ரிப்போர்ட்டரே... பேரூந்திலிருந்து குதித்தவன் கதி என்னாச்சு ?

      நீக்கு
  30. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மாணவன் திடீரென ஆ’’சிரி’’யர் ஆனால் ? ‘’சிரி’’ப்பாகுமே ஜி அதுவும் L.K.G நானா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      நீக்கு
  31. அருமை1 பட்டியல் பெரிது! உமக்கே உரிய நகைச் சுவை! நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா என்னைப் பொருத்தவரையில் பட்டியல் சிறியதே.. வருகைக்கு நன்றி

      நீக்கு
  32. சுவாரசியமா இருக்குது உங்க அழைப்பிதழ்... எங்க ஊரு ஆவிக்கு ஒரு தோழமை கிடைச்சிருச்சு....
    கோவை டூ புதுக்கோட்டை பேருந்து தான் போட்டிருக்கீங்க... கண்டிப்பா ஏறிடறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் சரியான பஸ் பாய்ண்டை பிடிச்சுட்டீங்களே... நல்லபடியாக போயிட்டு வாங்க.....
      தங்களைப்பற்றி குறிப்பிட்ட பதிவுக்கு தாங்கள் வரவில்லை இப்படித்தான் நிறைய பதிவர்கள் குறிப்பிட்ட பதிவுக்கு வராமல் குறிப்பிடாத பதிவுக்கு வரும் பொழுது மனதுக்கு வருத்தமாகி விடுகிறது என்ன செய்வது....

      நீக்கு
  33. ஆஹா, எல்லாப் பதிவர்களையும் (என்னையும் சேர்த்து) கலாய்ச்சாச்சு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கலாய்த்தேனா ? உண்மையைத்தானே எழுதினேன்...

      நீக்கு
  34. ஹஹஹஹா சகோ எப்டி சகோ? சான்சே இல்ல..
    ஆமாம், ஒருத்தர் பாவம் கில்லர்ஜி பாக்குறதுக்குள்ள சாப்பிடனும்னு பெரிய கவளமா உருட்டுறார்,,நீங்க பாத்ததோடு இல்லாமல் படமும் எடுத்திட்டீங்களே

    என்னைச் சொல்லாம விட்டாலும் என் பதிவுகளுக்கு வந்துவிடுவதால் விட்டுவிடுகிறேன் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ பொது இடத்துல இப்படியா ? சாப்பிடுவது மூதேவிப்பய...
      நான்தான் எல்லோருடைய பதிவுகளுக்கும் வருகிறேனே....

      நீக்கு
  35. அருமை நன்பரே ... கிளம்பியாச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பா சென்று வென்று வாருங்கள்

      நீக்கு
  36. பெயரில்லா10/08/2015 11:31 AM

    மிக நன்று
    நல்ல விளம்பரம்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  37. தங்களின் இப்பதிவைப் படிக்கத் தவறிவிட்டேன். உங்களது நினைவூட்டு உதவியது. தாங்கள் தயாரிக்கவுள்ள நூல் பட்டியலில் கில்லர்ஜி அகராதி என்ற ஒரு நூலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். புதுப்புது சொற்கள், புதுப்புது விளக்கங்கள், அப்பப்பா. மிக அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் மனம் சிறந்த பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  38. வணக்கம்
    ஜி

    அற்புதமான உரையாடல்... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஜி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி ரூபன்

      நீக்கு
  39. ஆஹா.... எனக்கும் இங்கே இடம்.... அதுவும் இரண்டு இடங்களில்! நன்றி நண்பரே.....

    பதிவினை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  40. ஹாஹாஹா, நல்லாவே இருக்கு!

    பதிலளிநீக்கு