இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 29, 2015

16-ஆம் நாள் காரியம்

நட்புகளே.... இந்தப்பதிவுக்கு முதன் முதலில் வருபவர்கள் இதன் முந்தைய பதிவான 01. ஆடியோ கேஸட் 02. காட்டுத்தீ படித்து விட்டு தொடரவும் காரணம் இது இறுதிப்பகுதி.

நண்பர்களே... நண்பிகளே... பதினாறாம் நாள் காரியம் முடிந்திருக்கும் அல்லவா ! எனது சிந்தனை கேஸட்டிலேயே இருந்தது பதினாறாம் நாளும் கடந்தது அந்த நேரம் தீபாவளி அவர்களுக்கு தீபாவளி இல்லாத இந்த நேரம் போய்க் கேட்டால் நமக்கு தீபாவளி கொண்டிருவாங்கே... ஏற்கனவே சனிக்கிழமை’’னு சொன்னவங்கே.... சரி பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது இன்று நல்லநாள்தான் இழவு வீட்டில் போய் கேஸட்டைக் கேட்போம் என போனேன் கேஸட் கேட்டு வந்தவன்ர் வீட்டின் முன் நூறாவது நாள் சத்யராஜ் மாதிரியே நின்றிருந்தான்ர் என்னை கண்டதும் ஊரின் எல்லையில் இருக்கும் உக்கிர மாகாளியம்மன் மாதிரியே பார்த்தான்ர் பக்கத்தில் போய் நின்றேன்...

என்னடா ?
கே...ஸட்டு...
கேஸட்டா பாட்டுப்பாடி எங்க அப்பனைக் கொன்னுபுட்டு கேஸட்டா கேட்கிறே ? கோர்ட்டுல கேசைப்போட்டு உள்ளே தள்ளிடுவேன் ஒட்றா...
மேலும் நின்று கொண்டே இருந்தேன் எனது முகம் மட்டும் இஞ்சி தின்ன சிங்கம் போல இறுக்கமாக இருந்தது...

என்னடா மொறைக்கிறே ? டேய் மருது இவனை என்னானு கேளுடா...
உள்ளேயிருந்து வந்த மருது..
உனக்கு என்னடா வேணும் ?  
என்னோட கேசட்டு வேணும்.
டேய் நாங்களே, எங்க அப்பன் சொத்தைப்பூராம் கொழுஞ்சிக்காட்டு சிருக்கிக்கு உயில் எழுதி வச்சுட்டு செத்துப் போயிட்டான்னு... கோபத்துல இருக்கோம் போயிரு... இல்லே...

ஏங்க இவ்வளவு சொத்து வச்சு இருக்கீங்க ஒரு கேஸட்டு வாங்க வக்கு இல்லை ?
டேய் என்னடா  ரொம்ப பேசுறே ?
சத்தம் கேட்டு உள்ளேயிருந்து மருதுவின் மனைவி வந்து...
என்னங்க சத்தம் இங்கே ?
இவன்தான்டி கேஸட்டு வேணுமாம்...
ஏப்பா, கில்லர்ஜி உனக்கு கேஸட்டுதான் முக்கியமாப் போச்சா இங்கே சொத்தெல்லாம் கைமாறிப்போன கோபத்துல ய்யேங் கொழுந்தன் கோவிந்தன் உன்னோட கேஸட்டை கொல்லம் பட்டறையில் வச்சு கூடத்தால அடிச்சு உடைச்சுருச்சு பொல்லாத கேசட்டு பத்து ஓவா பெறுமா ?

எனக்கு இதயத்தில் இடியே விழுந்தது போலிருந்தது அடப்பாவிகளா ‘’தல’’ பாட்டுக் கேஸட்டை கூடத்தால அடிச்சியலா அதுக்கு என் நெஞ்சுல அடிச்சுருக்கலாமடிடா... ?
உங்க குடும்பத்துல பிரச்சனையினா அதுக்கு என்னோட கேசட்டை எதுக்கு உடைக்கணும் ?
டேய்.... போயிருடா... மண்டையை உடைச்சுடுவேன்.
ஏங்க விடுங்க, சின்னப்பயல்ட்ட பேசிக்கிட்டு...

சின்னப்பயலா இந்தச் சின்னப்பயதான் உங்க குடும்பத்து பிரச்சனையை தீர்த்து வச்சான் தெரியுமுள்ள ?
அதான் தீர்த்துட்டியடா... எங்க அப்பனை, கொலைகாரப்பாவி.
யோவ் மரியாதையா... பேசு கேசட்டை உடைச்சுப்புட்டு நீ பேசுறே ?

டேய்... என்னடா யோவ் இப்ப, போறீயா என்ன சொல்றே...?
அந்த மாதிரி கேஸட்டு உன்னால, பதிய முடியுமா ?
ஏண்டா, ஒங்கிட்டே தியாகராஜ பாகவதர் பாட்டுதானடா கேட்டேன் நீ எதுக்குடா பாடுனா ?
அது என்னோட கேஸட்டு நான் பாடுவேன் உனக்கென்ன ?
இவரு, பெரிய யேசுதாஸு இவரு பாடுறாராம்...

ரோட்டில் போய்க்கொண்டு இருந்தவர்கள் ஒவ்வொருவராக நிற்க கூட்டம் கூடி விட்டது பெருசு ஒன்று வந்தது பஞ்சாயத்துக்கு....
டேய், மருது விடுப்பா, சின்னப்பயல்ட்ட சண்டை போட்டுக்கிட்டு கில்லர்ஜி இங்கிட்டு வாப்பா, உன்னோட பாட்டு கேட்டதாலதான் பொட்டண்ணேன் பொட்டு’’னு போனாரு சின்னக் கேஸட்டுக்காக பிரச்சனை ஆக்காதே அவங்களே சொத்து பூராம் கொழுஞ்சிக் காட்டுகாரிக்கு போச்சுனு கோபத்துல இருக்காங்கே... இவங்கே பூராமே, அ.க.மு.க.பொ.கே.ரா.கா கட்சிக்காரங்கே போலீஸ் கேஸாக்கி உன்னைப்புடிச்சு உள்ளே தள்ளிடுவாங்கே... விடப்பா, போயிட்டுப் போகுது பத்து ரூபா பெறுமா ? இதுக்கு எதுக்கு சண்டை போடுறே... போ.. போ.. நல்ல புள்ளையில ராசா போப்பா..

ச்சே என்னங்கடா உலகம் சாகப்போற ஆளுக்கு மனசாந்தியைக் கொடுக்கணும்னு நினைச்ச என் நிம்மதியை கெடுத்துட்டாங்களே... இவங்கெளுக்கு சொத்து கிடைக்கவே கூடாது எல்லா சொத்தும் கொழுஞ்சிக் காட்டுக்காரிக்கே போகட்டும் மனசு (சே. குமார் அல்ல) சபித்தது ‘’தல’’ M.K.T. நடித்து 1941-ல் வெளியான அசோக் குமார் திரைப்படத்தின்... 

‘’பூமியில் மானிட ஜென்மம் பிறந்து மோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்’’ 

என்ற பாடலை பாடிக்கொண்டு இல்லம் நோக்கி நடந்தேன்.

‘’தல’’ M.K.T. நடித்து 1934ல் வெளியான பவளக்கொடி என்ற அவரது முதல் திரைப்படத்தில் மொத்தம் 50 பாடல்கள். அதில் ‘’தல’’ மட்டும் 22 பாடல்கள் பாடினார் அத்தனையும் ஸூப்பர் ஹிட் !

கேஸட் வேண்டியோர் தொடர்புக்கு... sivappukanneer@gmail.com

46 கருத்துகள்:

  1. என்னிடம் அவரின் நிறைய பாடல்களை ஸிடியிலும், ஸிஸ்டத்திலும் வைத்திருக்கிறேன்!

    தொடர் முடிந்து விட்டதா, தொடருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது இறுதிப்பகுதி என்று போட்டு விட்டேனே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. சிரிச்சு சிரிச்சு முடியல. நல்ல நகைச்சுவை பதிவு. த.ம. 1

    பதிலளிநீக்கு
  3. பொட்டு அய்யாவ இப்படி ப(பி)ண்ணீட்டிங்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நீங்களும் அவங்கே கூட சேர்ந்துகிட்டு பேசாதீங்க மனசுக்கு கஷ்டமாக இருக்கு.

      நீக்கு
  4. நேர்மறையான சிந்தை கொண்டவரே!
    பதிவுகளில் மட்டும் எதிர்மறையான தலைப்புகள் ஏனோ?
    22 பாடல்களை கேட்டு கேட்டு தலப்பாக் கட்டு கானத்தை,
    காணாத கானகத்தை, காண்பிக்க வந்திரோ?
    சிடி மூலம் கோபக்கார கோவண்ணே?
    ஒன்னுமே புரியலே உலகத்திலே!
    என்னமோ நடக்குது மர்மா இருக்குது!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா தல பாட்டு கேட்டுப் பாருங்கள் அப்புறம் தெரியும்

      நீக்கு
  5. அதென்னங்க ஜி...
    நூறாவது நாள் மொட்டைய அப்படியே விட்டுட்டு வந்திட்டீக...
    அந்த கொழுஞ்சிக்காட்டுக்காரி எங்கே இருக்கான்னு கண்டு பிடிச்சி.. - இன்னொரு கேசட்டை கூரியர்ல அனுப்பி விடுங்க...

    பதிவுக்கு நெறய சேதி கெடைக்கும்!...

    (எப்பூடி.. அடுத்த பதிவுக்கு அஸ்திவாரம் போட்டாச்சுல்ல!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஏற்கனவே கூடத்தாலே நெஞ்சுல அடிச்ச வேதனையில் இருக்கேன் மீண்டுமா ?

      நீக்கு
  6. வணக்கம் ஜி !

    அப்போ பதினாறாம் நாள் காரியம் முடிந்தும் கேசட் வந்தபாடில்லை
    சரி மனதைத் தேம்பாக்கிக்கங்க ஆமா காட்டுத்தீ பதிவில் ஒரு பாட்டு போட்டீங்களே அது நீங்களா எழுதியது ஒப்பாரிப் பாடல் சுப்பர் !
    தொடர வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கவிஞரே நான் தங்களைப்போல கவிதை எழுத முடியுமா ? எனக்குத் தெரிந்த எழவுப்பாட்டு இவ்வளவுதான்.

      நீக்கு
  7. எனக்கு கேசட் வேண்டாம்.. நண்பரே..... சிடிதான் வேண்டும்...அதுவும் தல பாடிய..எல்லா ...ஒலக . பாடல்களும் எச்டீயில வேணும்.. ஆர்டர் ரை ஏற்றுக் கொல்லுங்கள்நண்பரே.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனே அனுப்புகிறேன் நண்பரே பணத்தை எனது ஸ்விஸ் அக்கவுண்டுக்கு அனுப்பி வையுங்கள்

      நீக்கு
  8. பாட்டு பாடி பயிரை வளர்க்கமுடியுமென ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததை கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் பாட்டு பாடி ஒருவரை பரலோகம் அனுப்பமுடியுமென்பதை இப்போது தெரிந்துகொண்டேன்! பதிவை இரசித்தேன். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நண்பரே நீங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஊமைக்குத்து குத்துவது போல் இருக்கின்றதே...

      நீக்கு
  9. உங்கள் பாட்டைக் கேட்டு உயிர் விட்டிருக்கிறார். நீங்கள் அவரைக் கொன்று விட்டீர்கள் என்று அவர்கள் சொல்வது சரியோ? உங்கள் பெயரை முதலில் மாற்றுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நீங்களும் அவுங்களோட சேர்ந்து கிட்டீங்களா ? அப்ப எனக்கு ஆதரவு யாரு ?

      நீக்கு
  10. வணக்கம் சகோ, இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல,

    அநியாம கொன்னுப்போட்டியளே அவரை, உங்களை சும்மா விட்டதே பெரிசு, ஆமா சின்னப்பய யார்?
    நல்லா இருக்கு கதை,,,

    பதிலளிநீக்கு
  11. என்ன ஓவராத்தெரியலை ? இதுக்குத்தான் பிறருக்கு உதவினால் நமக்குத்தான் உபத்திரவம் சின்னப்பயல் யாரா ? நாந்தேன்
    வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  12. அடடா கேசட்ட போட்டு உடைச்சிட்டாங்களே..... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி அதுவும் கூடத்தால அடிச்சுருக்காங்கே....

      நீக்கு
  13. சொப்பன வாழ்வில்.....
    கற்பனைவானில்
    சிறகடித்துப்பறக்கட்டும்

    பதிலளிநீக்கு
  14. அந்த கால தலயே ,தன் சொத்தை உண்மையில் இப்படித்தான் விட்டாராமே :)

    பதிலளிநீக்கு
  15. ஹா , ஹா ,"இஞ்சி தின்ன சிங்கம் " நல்லாருக்குங்க .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க நானே கேசட்டு போச்சுனு வேதனையில இருக்கேன் வந்ததும் நக்கலா ?

      நீக்கு
  16. கடைசியில 'தல' கேசட்டை உடச்சிட்டானுங்களா...?
    அவனுங்களை சும்மா விடலாமா...?
    கொளுஞ்சிக் காட்டுக்காரிக்கிட்ட போட்டு கொடுத்துடலாம்...
    அது சரி... அங்கயும் சே.குமாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே கொளுஞ்சிக் காட்டுக்காரிதான் மொத்தமாக சுருட்டி விட்டாளாமே... போகட்டும்.

      நீக்கு
  17. ஆரம்பம் முதல் முற்றும் வரை அதே விறுவிறுப்பு. அதுதான் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. பாட்டுப்பாடியே கொன்னாச்சு;பதினாறு நாளும் ஆச்சு.பாழாப்போன கேசட்டு கிடைக்கலியே இன்னும்!
    சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இனிமேல் எங்கே கிடைக்க.... அதான் போச்சே.

      நீக்கு
  19. அடப் பாவமே....போயே போச்...போயிந்தி, இட்ஸ் கான்....போயி.....போயிடுச்சு.....கயி......உடைஞ்சு போனதுல அழுது ஜல்பு பிடிச்சு அழும் போது இப்படி எல்லாம் சொல்லி அழுதீங்களா ஜி ஹஹஹஹஹ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கேஸட்டு போனது உங்களுக்கு சிரிப்பு வருதோ....

      நீக்கு
  20. அடடா! சிரிச்சிட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றது சிரிக்காத மா3 இருக்கே...

      நீக்கு
    2. நிஜமா உங்க எழுத்தையும் அதில் போடும் மேக்கப்பையும் பார்த்தே சிரிப்பு வருமே சார்! ஒரு வீடியோ கெசட்டுக்காக போடும் வெட்டுகுத்து பார்த்து சிரிக்க மாட்டோமா?

      அதிலும் நீங்க ஆங்கிலம் கணிதம் தமிழ் என புது மொழியே படைக்கும் போது சிரிக்கவெல்லாம் காசு தர வேண்டாம் சார்!

      கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்பதோடு வேலையும் அதிகம் சார். அதான் படித்து விட்டு பின்னூட்டாமல் போக கூடாது என சின்னதாய் பின்னூட்டினேன்.

      நீக்கு
    3. வாங்க வாங்க அதென்ன கேசட்டுக்காக ? அவ்வளவு இளக்காரமாக போச்சோ ? அன்றைக்கு நான் அவசரத்துல கோடரி எடுத்துப் போக மறந்துட்டேன் இல்லைனா......

      நீக்கு