நட்புகளே.... இந்தப்பதிவுக்கு முதன் முதலில் வருபவர்கள் இதன் முந்தைய பதிவான 01. ஆடியோ கேஸட் 02. காட்டுத்தீ படித்து விட்டு தொடரவும் காரணம் இது
இறுதிப்பகுதி.
நண்பர்களே... நண்பிகளே... பதினாறாம் நாள் காரியம் முடிந்திருக்கும் அல்லவா ! எனது சிந்தனை கேஸட்டிலேயே இருந்தது பதினாறாம் நாளும் கடந்தது அந்த நேரம் தீபாவளி
அவர்களுக்கு தீபாவளி இல்லாத இந்த நேரம் போய்க் கேட்டால் நமக்கு தீபாவளி
கொண்டிருவாங்கே... ஏற்கனவே சனிக்கிழமை’’னு சொன்னவங்கே.... சரி
பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது இன்று நல்லநாள்தான் இழவு வீட்டில் போய்
கேஸட்டைக் கேட்போம் என போனேன் கேஸட் கேட்டு வந்தவன்ர் வீட்டின் முன் நூறாவது நாள் சத்யராஜ் மாதிரியே நின்றிருந்தான்ர் என்னை கண்டதும் ஊரின்
எல்லையில் இருக்கும் உக்கிர மாகாளியம்மன் மாதிரியே பார்த்தான்ர் பக்கத்தில் போய்
நின்றேன்...
என்னடா ?
கே...ஸட்டு...
கேஸட்டா பாட்டுப்பாடி
எங்க அப்பனைக் கொன்னுபுட்டு கேஸட்டா கேட்கிறே ? கோர்ட்டுல கேசைப்போட்டு உள்ளே
தள்ளிடுவேன் ஒட்றா...
மேலும் நின்று கொண்டே இருந்தேன் எனது முகம் மட்டும் இஞ்சி தின்ன சிங்கம் போல
இறுக்கமாக இருந்தது...
என்னடா மொறைக்கிறே ? டேய்
மருது இவனை என்னானு கேளுடா...
உள்ளேயிருந்து வந்த மருது..
உனக்கு என்னடா வேணும் ?
என்னோட
கேசட்டு வேணும்.
டேய் நாங்களே, எங்க அப்பன் சொத்தைப்பூராம் கொழுஞ்சிக்காட்டு சிருக்கிக்கு
உயில் எழுதி வச்சுட்டு செத்துப் போயிட்டான்னு... கோபத்துல இருக்கோம் போயிரு...
இல்லே...
ஏங்க
இவ்வளவு சொத்து வச்சு இருக்கீங்க ஒரு கேஸட்டு வாங்க வக்கு
இல்லை ?
டேய் என்னடா ரொம்ப பேசுறே ?
சத்தம் கேட்டு உள்ளேயிருந்து மருதுவின் மனைவி வந்து...
என்னங்க சத்தம் இங்கே ?
இவன்தான்டி கேஸட்டு வேணுமாம்...
ஏப்பா, கில்லர்ஜி உனக்கு கேஸட்டுதான் முக்கியமாப் போச்சா இங்கே சொத்தெல்லாம்
கைமாறிப்போன கோபத்துல ய்யேங் கொழுந்தன் கோவிந்தன் உன்னோட கேஸட்டை கொல்லம்
பட்டறையில் வச்சு கூடத்தால அடிச்சு உடைச்சுருச்சு பொல்லாத கேசட்டு பத்து ஓவா பெறுமா ?
எனக்கு இதயத்தில் இடியே விழுந்தது போலிருந்தது அடப்பாவிகளா ‘’தல’’ பாட்டுக் கேஸட்டை கூடத்தால
அடிச்சியலா அதுக்கு என் நெஞ்சுல அடிச்சுருக்கலாமடிடா... ?
உங்க
குடும்பத்துல பிரச்சனையினா அதுக்கு என்னோட கேசட்டை
எதுக்கு உடைக்கணும் ?
டேய்.... போயிருடா... மண்டையை உடைச்சுடுவேன்.
ஏங்க விடுங்க, சின்னப்பயல்ட்ட பேசிக்கிட்டு...
சின்னப்பயலா இந்தச்
சின்னப்பயதான் உங்க குடும்பத்து பிரச்சனையை தீர்த்து வச்சான் தெரியுமுள்ள ?
அதான் தீர்த்துட்டியடா... எங்க அப்பனை, கொலைகாரப்பாவி.
யோவ்
மரியாதையா... பேசு கேசட்டை உடைச்சுப்புட்டு நீ பேசுறே ?
டேய்... என்னடா யோவ் இப்ப, போறீயா என்ன சொல்றே...?
அந்த
மாதிரி கேஸட்டு உன்னால, பதிய முடியுமா ?
ஏண்டா, ஒங்கிட்டே தியாகராஜ பாகவதர் பாட்டுதானடா கேட்டேன் நீ எதுக்குடா பாடுனா ?
அது
என்னோட கேஸட்டு நான் பாடுவேன் உனக்கென்ன ?
இவரு, பெரிய யேசுதாஸு இவரு பாடுறாராம்...
ரோட்டில் போய்க்கொண்டு இருந்தவர்கள் ஒவ்வொருவராக நிற்க கூட்டம் கூடி விட்டது
பெருசு ஒன்று வந்தது பஞ்சாயத்துக்கு....
டேய், மருது விடுப்பா, சின்னப்பயல்ட்ட சண்டை போட்டுக்கிட்டு கில்லர்ஜி
இங்கிட்டு வாப்பா, உன்னோட பாட்டு கேட்டதாலதான் பொட்டண்ணேன் பொட்டு’’னு
போனாரு சின்னக் கேஸட்டுக்காக பிரச்சனை ஆக்காதே அவங்களே சொத்து பூராம் கொழுஞ்சிக்
காட்டுகாரிக்கு போச்சுனு கோபத்துல இருக்காங்கே... இவங்கே பூராமே,
அ.க.மு.க.பொ.கே.ரா.கா கட்சிக்காரங்கே போலீஸ் கேஸாக்கி உன்னைப்புடிச்சு உள்ளே
தள்ளிடுவாங்கே... விடப்பா, போயிட்டுப் போகுது பத்து ரூபா பெறுமா ? இதுக்கு எதுக்கு சண்டை
போடுறே... போ.. போ.. நல்ல புள்ளையில ராசா போப்பா..
ச்சே என்னங்கடா உலகம் சாகப்போற ஆளுக்கு மனசாந்தியைக் கொடுக்கணும்னு நினைச்ச என்
நிம்மதியை கெடுத்துட்டாங்களே... இவங்கெளுக்கு சொத்து கிடைக்கவே கூடாது எல்லா
சொத்தும் கொழுஞ்சிக் காட்டுக்காரிக்கே போகட்டும் மனசு (சே. குமார் அல்ல) சபித்தது ‘’தல’’ M.K.T. நடித்து 1941-ல் வெளியான அசோக் குமார் திரைப்படத்தின்...
‘’பூமியில் மானிட ஜென்மம்
பிறந்து மோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்’’
என்ற பாடலை பாடிக்கொண்டு
இல்லம் நோக்கி நடந்தேன்.
‘’தல’’ M.K.T. நடித்து 1934ல் வெளியான பவளக்கொடி என்ற அவரது
முதல் திரைப்படத்தில் மொத்தம் 50
பாடல்கள். அதில் ‘’தல’’ மட்டும் 22 பாடல்கள் பாடினார் அத்தனையும் ஸூப்பர் ஹிட் !