இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, டிசம்பர் 19, 2015

திருமண பந்தம் ஏன் ?

ஞானி ஸ்ரீ பூவுவின் கொள்ளுப்பேத்தியின் மகன் M. ரித்தீஷ் சென்னை.

ஒரு மனிதன் எதற்காக ? திருமணம் செய்கின்றான் அல்லது செய்து வைக்கப்படுகின்றான் மனிதன் திருமணம் செய்வதின் முக்கிய நோக்கம் தாம்பத்யம் மட்டுமல்ல ! உடல் சுகத்துக்காகத்தான் திருமணம் என்றால் அது ஏற்க முடியாத விடயம் அதற்கு விபச்சாரிகள் போதும் எல்லோருமே விபச்சாரன், விபச்சாரி ஆகி தாம்பத்யம் என்பதே விபச்சாரம் என்ற அர்த்தமாகும் பிறகு தாத்தா, பாட்டி, தாய், தந்தை, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா, அண்ணன், அண்ணி, தம்பி, அக்கா, தங்கை, மாமா, அத்தை, மச்சான், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, குறிப்பாக கொழுந்தியாள் என்ற உறவுகள் எப்படியிருக்கும் ?

ஐந்தறிவு ஜீவிகளைப்போல் யாரும் யாருடனும் புணைந்து கொள்ளலாம் என்ற நிலையே மேலோங்கி நிற்கும் இப்படி உன்னதமான உறவு முறைகள் இருக்கும் பொழுதே சில காமவெறியர்கள் அதையும் அசிங்கப்படுத்தி விடுகின்றார்கள் சில அரைவேக்காடுகள் வாயில் வந்ததை எல்லாம் பாட்டு என்று பாடுகின்றனர் இல்லையெனில் சொல்லவும் வேண்டுமா ? திருமணம் என்ற பந்தம் இல்லையென்றால் குடும்பம் என்ற அமைப்பு வருவதெப்படி ? கணவன் இரவில் வீடு திரும்பி ஆகவேண்டும் என்ற கட்டமைப்பை அமைப்பவளே மனைவிதான் அவள் இல்லையெனில் இவன் எங்கு போவான் இந்த அமைப்பு இருந்தும்கூட சின்னவீடு, பெரியவீடு, நடுவீடு, மேலத்தெரு மேகலா வீடு, நடுத்தெரு நர்மதா வீடு என்ற உறவுகள் தோன்றி விடுகின்றன கணவன் மனதால் களைப்புறும் தருணத்திலும் மனைவி என்பவளே அவனை மார்பில் அணைத்து அவனுக்கு ஆறுதல் கொடுக்கின்றாள் இந்த ஆறுதல் சுகம் கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் உலகில் எங்கும் கிடைக்காது இந்த ஆறுதல் சுகம் பெற்றவனுக்கு இதன் அருமை புரியும் அதையும் இதை பெற்று இழந்தவனுக்கு அதிகம் தெரியும் இன்னும் சொல்லப்போனால் காதல் என்ற சொல் தோன்றி இருக்காது காமம் என்ற சொல்லே உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும் இதையும் தாண்டி எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றது திருமணம் செய்தாலே ஒருவன் சமூகத்தின் பார்வையில் பெரிய மனிதனாகிறான்.

அதற்காக பிள்ளையார், ஔவையார், சுவாமி விவேகானந்தர், மதர். தெரசா, திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம், திரு. ஏ.பி. வாஜ்பாய், திரு. கு. காமராஜர், திரு. அன்னா ஹசாரே, திரு. வி.கே. கிருஷ்ண மேனன், திரு. ரடன் டாட்டா, திரு. ராஜேந்திரகுமார், திரு. வி.கே. ராமசாமி, திருமிகு. சுஸ்மிதா சென், திரு. சாம்பசிவம் இவர்களெல்லாம் பெரிய மனிதர்கள் இல்லையா ? என்று கேட்க கூடாது தன்னோடு தனது சந்ததி அழிந்து போய் விடக்கூடாது தனது சந்ததியினரை இன்னாரு மகன் மன்னாரு என்று தொடர்ந்து வளர்ப்பது என்பதே முக்கியம் அதன் காரணமாகவே ஒவ்வொரு மனிதனும் ஆண் பிள்ளையை பெற நினைக்கின்றான் வீடு குடும்பமாக இருப்பதற்க்கு பெண் பிள்ளைகளை பெற நினைக்கின்றான் காரணம் இடையில் தனது மனைவி இறந்து விட்டால்ள் குடும்பத்தில் சமைக்கவும் மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றவும் பெண் தேவைப்படுகின்றாள் இதற்கெல்லாம் ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடியாதா ? என்று குதர்க்கமாக கேட்ககூடாது அப்படிக் கேட்பவர்களுக்கு மட்டும் இந்த பதில் அவள் வேலைக்காரி என்ற ஸ்தானத்தை விட்டு விரைவில் வீட்டுக்காரியாக பதவி உயர்வு பெறுவாள் இதுதான் மனித மனங்களின் யதார்த்தமான உண்மை.

எவ்வளவுதான் பணமிருந்தும் அந்த வீட்டில் பத்து ஆண்கள் இருந்தாலும் அது சமூகத்தின் பார்வையில் குடும்பமாகாது அதே வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் அது குடும்பம் ஆகிறது உறவுகளின் செய்முறை மரியாதைகளை பெண் என்பவளே ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றாள், வீட்டில் சேமிப்பு இருக்கும், தங்க நகைகள் இருக்கும், வெள்ளிப் பாத்திரங்கள் இருக்கும், வீட்டில் பொருட்கள் சரியான இடங்களில் இருக்கும், வீடு சுத்தமாக இருக்கும், வீட்டில் கண்டிப்பாக வெளக்குமாறு இருக்கும், வீட்டு வாசலில் நான்கு புள்ளிகள் வைத்தாவது கோலம் போட்டிருக்கும், அவள் இல்லையேல் வீடே அலங்கோலமாய் இருக்கும் அந்த வீட்டுக்குள் பிற பெண்கள் வருவார்கள் போவார்கள் அங்கு பெண் இல்லா விட்டாள் எந்தப் பெண்ணும் துணிந்து வரமாட்டாள் காரணம் அவள் திரும்பும் பொழுது அவள் உடம்பில் துணி இருக்காது பெண் இல்லாத வீட்டில் பெண் கொடுக்கவே யோசிப்பார்கள் தற்கால சூழலில் வேண்டுமானால் வரதட்சினை பிரச்சனையால் பெண் குழந்தைகளை விரும்பாமல் இருக்கலாம் இதற்கு காரணமும் ஆண் வர்க்கமே.. பெண்கள் இல்லாத வீட்டில் அன்பு இருக்காது தனது சந்ததிகளுக்கும் அன்பு தெரியாது அதை சொல்லிக் கொடுக்க அன்னையால் மட்டுமே முடியும் அறிவையும் உலக நடப்பையும் சொல்லிக் கொடுப்பதே தந்தையின் கடமை ஆகின்றது அதற்காக தந்தையர்களில் அன்பு வைப்பவர்கள் எங்குமே இல்லையா ? என்று கேட்ககூடாது.

இன்று ஆண் பிள்ளையை பெற்றவர்கள் அவனது அட்டகாசம் தாங்க முடியாமல் பெண் குழந்தைகளே போதும் என்ற நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது மகன்கள் இருந்தும் சிலர் மகள்களின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருக்கின்றார்கள் காரணம் பெண் குழந்தைகள் என்றுமே பாசமானவர்களே... மகளின் உத்தரவால் மருமகன் பார்த்துக்கொள்வார் அதேநேரம் அந்த மருமகன் தனது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருப்பார் இதைப்பற்றி இங்கு யாரும் என்னிடம் கேள்வி கேட்ககூடாது காரணம் இது வாழையடி வாழையாக கிடைத்த ரிமோட் கண்ட்ரோலின் செயல் இன்று மகன்கள் பலரும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றார்களே காரணம் என்ன ? முதலில் நாம் நமது தாய்-தந்தைக்கு சோறு போடாமல் விரட்டினோம் அதற்கு மனைவியும் உடந்தை அதைப்படித்துக் கொண்ட மகன்கள் நம்மை முதியோர் இல்லத்திலாவது சேர்க்கின்றார்களே என்று பெருமைப் படவேண்டும் முற்பகல் வினை பிற்பகலில் விளைகிறது இதுதான் வாழ்வியல் உண்மை.

நட்பூக்களே... இந்தப்பதிவு வந்ததின் காரணம் தெரியுமா ? முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் சமீபத்தில் கல்யாணம் கட்டுவது எதற்காக ? என்ற பதிவை எழுதியிருந்தார் பலரும் யோசனை சொல்லுங்கள் என்று சொல்லியிருந்தார் அதைப்படித்து கருத்துரை எழுதினேன் அது போச்சு... போச்சு... கோயமுத்தூர் அவரது வீடுவரை போய்க்கிட்டே இருந்துச்சு... சரி இதை எதுக்கு இப்படி கருத்துரையாக விடுவானேன் நம்மளே பதிவாக இட்டாலும் ஐயாவும் வந்து படிச்சுட்டு கருத்துரையும், தமிழ் மண ஓட்டும் போடுவாரேனு.... அவருக்கு மட்டும் ஒரு Small Comment கொடுத்துட்டு இங்கிட்டு வந்துட்டேன். டியா எப்பூடி ?

இந்தப்பதிவை எழுத வைத்த திரு. முனைவர் ஐயாவுக்கு நன்றி
காணொளி

69 கருத்துகள்:

  1. வணக்கம் கில்லர் ஜி !

    குடும்ப வாழ்வின் அவசியத்தை சொன்ன பதிவு நெஞ்சம் தொட்டது
    எல்லாம் யதார்த்தமான உண்மைகள் ;;; இடைக்கிடை கொளுந்தியாளுக்கான முக்கியத்துவம் மேகலா வீடு நர்மதா வீடு இவங்க எல்லாம் யார் என்று கேட்க மாட்டேன்..... எனக்குப் பதிவு பிடித்திருக்கு அவ்வளவே !

    மிகவும் அருமை ஜி தொடர வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே முதல் வருகைக்கு நன்றி எதையோ கேட்க மாட்டேன் என்பது அதை விளக்கம் கேட்பது போல் இருக்கின்றதே...

      நீக்கு
  2. குடும்பத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லிவீட்டீர்கள்! அருமை சகோ.. த.ம.2
    ஆனாலும், ஆண்கள் சமைத்தால் சமைக்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அடுப்பும் ஆண்கள் ஏற்றினால் ஒளிர மாட்டேன் என்று சொல்லும் விளக்கும் ரொம்ப மோசம் சகோ. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நன்றி
      ஹா..ஹா..ஹா.. இப்படி அடுப்பும், விளக்கும் இருக்கின்றதா ? சகோ.

      நீக்கு
  3. பெண்ணில்லா வீடு பாழடைந்த கோயிலென்பர்,பெண்கள் வீட்டின் கண்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்து எழுதிய பதிவு.ஒரு வீட்டிலோ,குழுவிலோ எத்தனை ஆணிருந்தாலும் கலகலப்பிருக்காது. ஆனால் ஒரு பெண் இருந்து விட்டால் அவ்விடமே அதிரும். பெண்கள் கூடினால் வரும் சத்தம் சண்டையாகவும் இருக்கலாம், சந்தோஷமாகவும் இருக்கலாம். பெண்ணிருந்தால் அவ்விடமே லகலகலக தான். நாங்கள் எங்கள் வீட்டில் எங்க மகள் ஸ்கூலால் எங்கேனும் ஒர்ரு நாள் சென்றாலே ஐயோ பிள்ளை இல்லாதவீடு இப்படி வெறிசச்சென இருக்கின்றதே என எண்ணி கவலைப்படும் படி இருக்கும். பெண் குழந்தைகளுக்கு நிகர் அவர்களே தானென்பேன்.அதே போல் தான் நீங்கள் சொன்ன வயதான பின் பெற்றோரை பராமரிக்கும் மருமகனும்,வயோதியர் விடுதியில் விடும் மகனுமாய்.... பெண்களின் அருமை உணராத சமூகம் வரதட்சனை எனும் ஒன்றை காரணம் காட்டி பெண்சுசுக்களை அழிக்கும் முன் இதை சற்று சிந்திக்கலாம்.

    திருமணம் என்பது எதற்காக எனும் உங்கள் டாபிக்கு வந்தால்... தாம்பத்யத்துக்காக மட்டுமல்ல என்பது சரியே! தாம்பத்தியம் என்பது திருமண வாழ்வில் பத்தில் ஒன்றே தவிர அதை தாண்டியும் திருமண வாழ்க்கை கற்றுத்தருவது பல!சந்ததிகள் வளரவும்,எவரும் எவருடனும் உறவாடலாம் எனும் காட்டு மிராண்டி நிலை தவிர்க்கப்ட்டு உணர்வுகளை அடக்கி கட்டுப்படுத்தவும்.இப்படித்தான் வாழ வேண்டும் எனும் வரயறைக்குள் ஆண் பெண் வாழவும்,சுய ஒழுக்கத்தினை கற்பித்து நமக்கான் கடமைகளை சரியாக நிறைவேற்றிட நிர்பந்திக்கும் படியான ஒரு படியே திருமண வாழ்க்கை. திருமண மின்றி வாழ்வோருக்க்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் திருமணம் நம்மை வரயறைக்குள் வாழ்ந்து, அதற்காக கடமைகளை நிறைவாக்கி நம் சந்ததிகளை சமுதாயத்தில் நல்லவர்களாக வளர்த்து விடும் பொறுப்பை தருகின்றது.
    அத்தோடு கொடுத்தலும் பெறுதலுமான ஒருவகை புரிந்துணர்வை விட்டுக்கொடுத்தலை கற்றுக்கொள்ள திருமண வாழ்க்கை உதவுகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அழகான நீணஅட விளக்கவுரை அருமை நன்றி
      பெண்கள் கூடுமிடம் கலகல கல என்று இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கின்றேன், பார்த்து இருக்கின்றேன் ஆனால் இப்பொழுதுதான் லகலகலக என்றிருக்கும் என்று கேள்விப்படுகிறேம்
      ம்ம்.... எல்லாம் சினிமா படுத்தும்பாடு.....

      நீக்கு
  4. உண்மை திருமணபந்தம் குறித்த அருமையான பதிவு..

    பதிலளிநீக்கு
  5. பெண் இல்லா வீடு நரகம். ஆண்கள் மட்டும் வாழும் இடம் வீடாயிருந்தாலும் லாட்ஜுக்கு சமம்! சேவல் பண்ணை என்று பாலகுமாரன் ஒரு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தார். அது போல. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தத்துவத்துக்கு குடும்பம் சிறந்த உதாரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கருத்துரைக்கு நன்றி
      பாலகுமாரனின் நாவல் நானும் படித்திருக்கிறேன் அவருடைய நாவல் படிப்பவர்கள் பொறுமைசாலியாக மட்டுமல்ல அறிவாளியாகவும் இருக்கவேண்டும்.

      நீக்கு
    2. பாலகுமாரனின் படைப்புகள் இப்போதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் ரகம்!! இங்கே கூட 'மேன்ஷனை'ப்பற்றிக் குறிப்பிட அவர் வைத்த தலைப்பைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறேன்.

      :))

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே அவரின் கதைகள் படித்து பல வருடங்கள் கடந்து விட்டது

      நீக்கு
  6. திருமணம் பற்றிய நெஞ்சைத் தொடும் பதிவு நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  7. திருமண பந்தம் பற்றிய பதிவு சற்றே மாறுபட்டுள்ளது. அதாவது அதிகமான செய்திகள், குறைந்த நகைச்சுவை. தான் விலைமாதாக இருந்த நிலையில் தன்னைக்காண வந்தவன் தன் வீட்டிற்கே மணமகனாக, தன் சகோதரிக்குக் கணவனாக, வரும் நிலையில் திருமணம் முடிவுற்ற நிலையில் அவன் யாரிடமும் சொல்லாமல் வந்து தனியாக இருக்கும்போது அவனிடம் கதாநாயகி லலிதா கூறும் வசனம் நினைவிற்கு வந்தது. "நீங்கள் எதற்காக என்னைத் தேடி வந்தீர்களோ அதுவே இப்போதுசாஸ்திரம் சம்பிரதாயம் என்று உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது......" நான் ரசித்த பாலசந்தர் திரைப்பட வரிகளில் இவையும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி இதில் எனக்கு நகைச்சுவை சேர்க்கும் வழிகள் தெரியவில்லை சமூகத்தில் புரட்சியான கருத்தை திணிக்கும் தைரியசாலியானவர் திரு.கே.பாலசந்தர்

      நீக்கு
  8. திருமண விளக்கம் அருமை

    பதிலளிநீக்கு
  9. அன்பின் ஜீ!..

    இது சாட்டை அடி இல்லை..
    சவுக்குக் கட்டை அடி - சரியான அடி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது

      நீக்கு
  10. "குடும்பம் ஒரு கோயில்"
    கோயிலின் ஆகம விதிப்படிதான் வாழ்க்கை அமைய வேண்டும்!
    நல்ல அலசல்! நன்றி
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. திருமணபந்தம் என்பது ஒரு கட்டுப்பாட்டிற்குள் என்பது உண்மையே. வீடு ஒளிர்வதற்கு பெண்கள் மிக முக்கியமானவர்கள் என்பதை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள்..சரிதான் அதே பெண்கள் தான் தங்கள் கணவரின் பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்புகின்றார்கள் என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டியதே.

    பெண் இல்லாத வீட்டில் ஒரு பெண் நுழைந்தால் ..........ஆக வெளியே வரவேண்டிய நிலை என்பதால் என்று சொல்லியிருப்பதை ஏனோ ஏற்க முடியவில்லை. எல்லா ஆண்களும் அப்படிப்பட்டவர்கள் அல்லர். அதே போன்று எல்லா பெண்களும் அப்படிப்பட்டவர்கள் அல்லர். இருபாலினத்திலும் +, - இருக்கின்றது. எனவே ஒரு தராசு போலத்தான் இதைப் பார்க்க வேண்டும் என்பது எங்கள் தாழ்மையான கருத்து ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தாங்கள் சொன்ன முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதை நானும் மேலே குறிப்பிட்டு இருக்கின்றேன்.
      இருபாலினத்திலும் + - உள்ளதை பார்க்கவேண்டும் என்பது உண்மைதான் ஆனால் இதில் பெரும்பான்மை யார் என்பதுதானே பேச்சு வழக்கு அதைத்தான் நான் வலியுறுத்தி இருக்கிறேன் நான் ஆணினம் என்பதால் வேறு மா3யாக பேசமாட்டேன் உண்மை நிலவரத்தை பேச நான் என்றுமே தயங்கியதில்லை எனது கண்களுக்கு இனம் தென்படவில்லை உண்மையை கண்டேன் சொன்னேன் தங்களின் விரிவான அலசலுக்கு நன்றி.

      நீக்கு
  12. வீட்டைக் கூட்டுவதற்கு ஒவ்வொரு முறையும் விளக்குமாற்றை தேடி அலைவதுதான் என் வேலைநண்பரே.... விளக்குமாறுகூட காணமல் போய்விடுகிறது நண்பரே....தாங்கள் அனுபவசாலி.... பதிவிட்டுவிட்டீர்கள் நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வெற்றி பெற்றவர்கள் வரிசையில் அப்துல் கலாம், வாஜ்பாய், இவர்களுக்கு முன் தாங்கள்தானே (பிள்ளையார்) இருக்கின்றீர்கள் ஆகவே தாங்கள்தான் உயர்ந்த மனிதர்.

      நீக்கு
  13. திருமண பந்தம் பற்றிய பதிவு அருமை சகோ .

    பதிலளிநீக்கு
  14. நான் பெற்றது இரண்டும் மகள்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஒரு வகையில் பாக்கியம் என்று நினையுங்கள்

      நீக்கு

  15. திரு துளசிதரன் அவர்கள் சொன்னதுபோல பெண் இல்லாத வீட்டில் ஒரு பெண் நுழைந்தால் என்ன நடக்கும் என்று எழுதியிருப்பதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இனி வருங்காலத்தில் குடும்பம் என்பது வெறும் பெயரளவில் இருந்துவிடுமோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.
    விரிவான பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பெரும்பான்மை என்ற வகையில் எழுதினேன்
      ஆம் விவாகரத்து பெருகுவதைப் பார்த்தால் இனி தாங்கள் சொல்வதே நடக்கும்.

      நீக்கு
  16. ரொம்பநாளாக சொல்லவேண்டும் என்று மனதில் இருந்த கருத்துக்களை பொழிந்தது போன்று இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பொதுவாக மனதில் தேங்கி கிடப்பவைகளையே எழுதுகிறேன் எழுத நினைக்கும் பொழுது அது கொட்டி விடுகிறது.

      நீக்கு
  17. டாக்டர் கந்தசாமி அவர்களின் பதிவில் என் கருத்தை எழுதி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் கருத்தை அன்றே படித்தேன் இன்றும் படித்தேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. அன்புள்ள ஜி,

    திருமண பந்தம் குழந்தைகளின் சொந்தமே என்று சொல்லி சிறப்பாக உரைத்துவிட்டீகள்! ஆண் பெண் பிள்ளைகள் பற்றியும் அழகாக அவர்களின் மனதையும் திறந்து விட்டீர்கள்.

    த.ம.14

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே தங்களின் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. பெண்மையை உயர்த்தி பிடித்ததற்கு நன்றி நண்பரே!
    த ம 16

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு விட்டு பதிவுக்கு வரும் தங்களுக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  20. நீங்க கேட்கக் கூடாதுன்னு சொல்லி விட்டதால் நான் கேட்கலே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உங்களது கருத்து அந்த கேள்விக்கு பதில் வேண்டும் 80 போல் இருக்கின்றது

      நீக்கு
  21. மணமுடிப்பு (கல்யாணம், திருமணம்) ஏனென்று
    கேட்கலாமா தம்பி!
    இரு உள்ளங்களை (மனங்களை) முடித்து விடத்தான்
    அதைக்கூட ஏனென்று கேட்பாய் தம்பி!
    ஆண்டவன் அரை அரையாகப் படைத்தான் - அந்த
    அரை(ஆண்) அரை(பெண்)யை முடித்தால்
    முழுமை அடையத் தானே...
    அதைக்கூட ஏனென்று கேட்பாய் தம்பி!
    வாழையடி வாழையாக
    தலைமுறையைத் தோற்றுவிக்கவே
    அதைக்கூட ஏனென்று கேட்பாய் தம்பி!
    ஆண்டவன் படைத்தான் - ஆதலால்
    மணமுடித்து வாழ்கின்றோம் - அதுவும்
    சுடு/இடு காட்டிற்குப் போகும் வரை
    ஒருவரை ஒருவர் நம்பி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்து பதிவின் தலைப்புக்கு மட்டும் என்றே தோன்றுகிறது
      தலைப்பு என்ற கேள்வியை வைத்து பதிவு என்ற பதிலை விரிவாக கொடுத்து இருக்கின்றேனே... நண்பரே..

      நீக்கு
    2. கேள்வி நல்ல கேள்வி
      பதிலும் பயனுள்ள பதில்
      தங்கள் எழுத்தில் மின்னுவது
      நல்ல எண்ணங்களே!
      தலைப்பை வைத்துக் கருத்திட்டதாக
      கவலைப்படாதே சகோதரா - தங்கள்
      பதிவின் உட்பொருள் உணர்வேன் - தங்கள்
      எண்ணத்தில் தோன்றும் நல்லதெல்லாம்
      நறுக்காக எழுதுங்கள்
      ஊரும் உலகமும் ஒரு நாள் திருந்தும்!

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  22. ஐயையோ, நான் கருத்து இடவில்லையோ? கருத்து கந்தசாமி இப்படி இருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பதிவு வெளியானதும் ஓட்டு மட்டும் போட்டு இப்பொழுதுதான் கருத்துரை இடுகின்றீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. பதிவு நன்று.
    பெண்கள் கணவனைப் படுத்தாத பாடு படுத்தி
    கோடேற வைக்கும் வெளிநாட்டில் திருமணம் பற்றி பேசவே நளினச் சிரிப்பு வருகிறது.
    (நாம் 48 வருடங்கள் வரும் ஆடியில் கொண்டாடப் போகிறோம்)
    வேதாவின் வலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  24. வணக்கம்
    ஜி
    அற்புதமான விளக்கம் அறியாத விடயங்களை அறியத் தந்தமைக்கு நன்றி ஜி.த.ம17
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  25. உங்களிடமிருந்து வித்தியாசமானதொரு நீண்ட பதிவு! அருமையான கருத்துக்கள்! பாராட்டுக்கள்! பதிவை எழுத தூண்டிய ஐயாவிற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  26. பெண்களை பெருமை படுத்தி எழுதியதற்கு பெருமையுடன் நன்றி கூறுகிறேன்!

    மாலையுடன் யோசனையாக நிற்கும் குழந்தை மிக அழகு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையை எழுத நினைத்தேன் எழுதினேன் இதில் நான் பாலினம் பார்ப்பதில்லை வருகைக்கு நன்றி
      குழந்தை ரித்தீஷ் எனது பேரன்.

      நீக்கு
  27. வணக்கம் சகோ,

    மிக மிக அழகாக ஆழமாக சொல்லியுள்ளீர்கள். பெண் என்பவள் அன்பின் வடிவம்,,,,,

    நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

    குடும்ப நிலைக் குறித்த நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி சகோ

      நீக்கு
  28. ...முத்தான வாழ்வுக்கு மூன்று எனத் தொடங்கி, இரண்டே பெறுக இனிதே வாழ்க எனச் சுருங்கி, ஒன்று பெற்றால் ஒளிமயம், என ஆகிவிட்டபிறகு... மாமா, அத்தை, சித்தாப்பா போன்ற உறவுகள் இனி பழைய புத்தகங்களில் மட்டுமே.. உங்களின் குழந்தையை நூலகத்திற்கு (சுற்றுலா எனக் கூறி) அழைத்துச்செல்லுங்கள்....

    மகன்:- வாழ்ந்து முடித்தபிறகு -சொர்கத்திற்கு அனுப்பிவைக்கிறான்.(நம்பிக்கை)
    மகளோ:- வாழும்போதே வீட்டை சொர்கமாக்குகிறாள்.
    "பெண்ணைப் போற்றிடுவீர் ...பெண் மகவை பெற்றிடுவீர்" !!!! கோகி-ரேடியோ மார்கோனி....

    பதிலளிநீக்கு
  29. உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம், முடிவிலும் ஒன்று தொடரலாம்... இனியெல்லாம் சுகமே... கோகி-ரேடியோ மார்கோனி

    பதிலளிநீக்கு
  30. சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
    முடிவே இல்லாதது......
    எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
    இனிய கதை இது...... கோகி-ரேடியோ மார்கோனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகிய பாடல் வரிகளுடன் தங்களின் கருத்துரைக்கு நன்றி
      நாமே குழந்தை நமக்கேன் குழந்தை இதை மறந்து விட்டீர்களே....

      நீக்கு
  31. சரியாக சொன்னீர்கள் பெண் இல்லையென்றால் அந்த வீடு ஒரு குடும்பம் ஆகாது என்று. அழகு.
    ஆமா, அது யாருங்க கல்யாணம் பண்ணிக்கிறாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அந்த திருமணம் தமிழ் கலாச்சாரத்தை கேவலப்படுத்தும் செயல் நக்கீரன் வெளியிட்டது அதன் முழு காணொளி விரைவில் பதிவுடன் தருகிறேன்

      நீக்கு
  32. திருமணப் பந்தம் குறித்தும்...
    பெண் என்பவள் இருந்தாளே அது குடும்பம் என சமூகத்தில் மதிக்கபடும் என்பதையும்...
    மிக அருமையாக, உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்...
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  33. நல்ல கருத்துத் தான். ஒரு பதிவு இன்னொரு பதிவை எழுதத் தூண்டியதனால் எங்களுக்கு இதைப்படிக்க நேர்ந்தது.

    பதிலளிநீக்கு
  34. திருமண பந்தம் குறித்த அருமையான பதிவு. ஏற்கெனவே கருத்துக் கொடுத்தேன். போச்சா இல்லையானு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்து கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு