இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 06, 2015

இயற்கையின் நியதி


இதில் புகைப்படம் இட எனக்கு மனமில்லை ஆகவே அன்பின் ஜி திரு. துரை செல்வராஜூ அவர்களின் தளத்திலிருந்து... நன்றி ஜி.

வணக்கம் நட்பூக்களே... எல்லா பதிவர்களும் மழையின் பாதிப்பைப்பற்றி எழுதி விட்டார்கள் எழுதிக்கொண்டும் இருக்கின்றார்கள் நானும் பலமுறையும் இதனைக்குறித்து எழுதி எழுதி மீண்டும் வேண்டாமென மனதிலிருந்தும் அழித்து விட்டேன் காரணம் எனது எழுத்து சுற்றிச்சுற்றி ஏமாற்றிக் கொண்டே வாழும் அரசியல்வாதிகளையும், ஏமாந்து கொண்டே வாழும் அதிக சதவீதமுள்ள மக்கள் மீதுமே கோபம் கொண்டு எழுத வைக்கின்றது அந்த எழுத்துகள் வரம்பு மீறுகின்றது இந்த தருணத்தில் அந்த மாதிரி எழுதுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கும் என்று என் மனதுக்கு தோன்றியதால் நான் வெளியிடவில்லை இருப்பினும் நாமும் நமது ஆதங்கத்தை சொல்லவேண்டுமே.. ஊடகங்களிலும், முகநூல் வலைத்தளங்களிலும் காணும் புகைப்படங்கள் நாம் எவ்வளவு தூரம் காயம் பட்டிருக்கின்றோம் என்பதை தூரத்திலிருக்கும் எங்களைப் போன்றவர்களால் உணராமல் உணர முடிகின்றது காரணம் இளகிய மனதை ஏனோ நாங்களும் பெற்று விட்டோம்.

இந்த இயற்கையின் சீற்றத்துக்கு காரணம் இறைவன் என்றோ, எதிர்க்கட்சிகளின் சதி என்றோ ஐந்தறிவு ஜீவிகளைப்போல் நானும் சொல்லமாட்டேன் வரும் 2016 ஜனவரி 29 வரை இன்னும் பேரிடர்களை சென்னை சந்திக்க வேண்டியது வரும் என்று நேற்று 05.12.2015 தந்தி தொலைக்காட்சியில் யதார்த்த ஜோதிடர் திரு. ஷெல்வீ அவர்கள் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் சொன்னார் இது நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை குறைவாகவே இருக்கின்றது காரணம் அவரது பதில்கள் எதுவுமே ஆணித்தரமாக இல்லை அதேநேரம் அவரது பேச்சில் சில உண்மைகளும் இருப்பது தெரிகின்றது செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை எனது அனுபவத்தின் வாயிலாக நான் பலரையும் கண்டு விட்டேன் அதேபோல இந்த கூட்டுத்தவறுக்கு நாமே கூட்டாக தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் இதுதான் இயற்கையின் நிய(வி)தி மழை வெள்ளம் வீணாக கடலில் கலந்து விட்டது என்றும், அதை அணை போட்டு தடுக்க அரசு தவறி விட்டது என்றும் வீண் வாதம் செய்து கொண்டு இருக்கின்றோம் பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் ஆறுகளையும், குளங்களையும், கண்மாய்களையும், ஊரணிகளையும், கிணறுகளையும் வெட்டி வைத்தது வெட்டி வேலைக்காக அல்ல ! அதில் முற்போக்கான சிந்தனை தொலைநோக்கு பார்வை இருந்தது இத்தனைக்கும் அவர்கள் எந்த கல்லூரிகளிலும் படித்து பட்டம் பெற்றவர்கள் அல்ல திண்ணைப் பள்ளிக்கூடங்களில் படித்தவர்களே... இன்று மனிதன் நாகரீகம் என்ற பெயரில் சில ஆங்கில இன்ஷியலைப் பெறுவதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து படித்து விட்டு கூத்தாடிகளின் பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்கின்றான் இயற்கையை வணங்குபவனை முட்டாளாக பார்த்தான் இன்று இயற்கை அனைவரையும் முட்டாளாக்கி கொண்டு இருக்கின்றது.

மழை நீர் எங்கு போகும் ஆறுகளுக்கா ? குளங்களுக்கா ? கண்மாய்களுக்கா ? ஊரணிகளுக்கா ? கிணறுகளுக்கா ? போகும் வழி எங்கே ? விவசாய பூமிகளையும், கண்மாய்களையும் மனிதன் கூறு போட்டு நாளைய சோறுக்கு வழியில்லாது அடைத்து விட்டான் இதற்கு காரணகர்த்தா யார் ? அரசு என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லும் மனிதா... அரசு மட்டும்தான் காரணமா ? விவசாய நிலங்களை சில ஆயிரங்களுக்கு வாங்கி கூறு போட்டு லாபம் எடுத்த கோமான்கள் மட்டும்தான் காரணமா ? ஏன் ? நீயில்லையா ? நமது பணத்தை எப்படியாவது பெருக்கி விடவேண்டும் என்று ஊரில் அனைத்து இடங்களையும் வாங்கிப்போட வேண்டுமென்று ஆசைப்பட்டு வாங்கவில்லையா ? என்னை யாருமே திருப்பி கேட்க முடியாது நண்பா ஆம் எனது பேச்சைப்போல செயலும் இருக்கவேண்டும் என்பதே எமது கொள்கை 2010-தில் மதுரை விமான நிலையத்துக்கு பின்புறமுள்ள அருப்புக்கோட்டை சாலையில் விவசாய நிலம் விற்பனைக்கு வந்தது எனது நண்பர்கள் வாங்கினார்கள் நான் வாங்கவில்லை இதை இன்றும் நான் நிரூபிக்க முடியும் என மனதுக்கு இது இயற்கைக்கு செய்யும் துரோகம் என்று தோன்றியது இன்றளவுகூட என்னை பிழைக்கத் தெரியாதவன் என்று சொல்பவர்கள் உண்டு அதைப்பற்றிய கவலை எனக்கில்லை காரணம் நான் எல்லாம் தெரிந்தவன் அல்ல ஆனால் தெரிந்ததை சரியாக தெரிந்து கொண்டவன்.

இயற்கையை அழிப்புக்கு காரணவாதிகள்.

01.  விவசாய நிலங்களை விற்றவர்கள்.
02.  அதை அடிமாட்டு விலைக்கு வாங்கி கூறு போட்டவர்கள்.
03.  அதற்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகள்.
04.  இதை தடுக்காத அரசாங்கம்.
05.  இதிலும் கூட விளம்பரத்தில் நடித்து பொய் பேசியவர்கள்.
06.  போட்டி போட்டு வாங்கிய மக்கள்.

இந்த ஆறு பேருமே சோறு கிடைக்காமல் போவதற்கு காரணம்.

இன்று இயற்கை தனது வேலையை காட்டியபோது அரசாங்கம் நடத்துபவர்கள் மட்டும் தப்பித்துக் கொண்டார்கள் காரணம் அவர்களிடம் ஹெலிகாப்டரும், அதை உபயோகப்படுத்தும் அதிகாரமும் உள்ளது இந்தக் ஹெலிகாப்டருக்கு இடும் பெட்ரோல் செலவும் அதிகாரத்தை கொடுத்து விட்டு சோறுக்காக கையேந்தும் மக்களின் தலையில் நாளை முதல் விழும் என்ன ? விந்தை உலகமடா...
கூறு போட்ட கோமான்கள்கூட சோற்றுப் பொட்டலத்துக்காக மொட்டை மாடியில் நின்று கையேந்திய அவலம் இது நமக்கு படிப்பினையை தரவேண்டாமா ? இல்லை வழக்கம் போல மறதியாகுமா ? தட்டுப்பாடான காலங்களில் விலைவாசி ஏறுவது இயல்பு அதை மக்கள் குறை சொல்லமுடியாது உலகின் பல மூலைகளிலிருந்தும் பலநாடுகள் நமக்கு தொண்டுள்ளத்துடன் உதவிட சென்னையில் இருக்கும் சில வியாபாரிகள் இலவசமாக வேண்டாமடா ? பாவிகளா... நியாயமான விலைக்கு பொருட்களை விற்ககூடாதா ? பாலின் விலை லிட்டர் 150 ரூபாயா ? நாளை உனக்கும் பால் ஊற்றும் காலம் வரும் என்பதை மறந்து விட்டாயடா... மானிடா... யாரோ கொடுக்கும் பொருளுக்கு உனது பெயரா ? நண்பர் மனசு சே.குமார் அவர்கள் சொல்லியது போல நீங்கள் மலம் தின்னும் ஜென்மங்களா ? அரசியல்வாதிகள் இதிலும்கூட ஆதாயம் தேடுவதா ? இந்த தருணத்தை பயன்படுத்தி வீடு புகுந்து திருடும் கூட்டமும் அடே அற்பப்பதருகளா ? உலகமே இன்று இந்திய செய்திகளை படித்துக்கொண்டு இருக்கின்றதடா... இன்று காலைகூட எனது அலுவலகத்தில் ஒரு அரேபியன் சொல்லும் பொழுது வெட்கித்தலை குனிந்தேனடா... உங்களால் இந்தியாவுக்கு பெருமை கிடைக்காது சிறுமை வராமல் வைத்துக்கொள்ள உதவக்கூடாதா ? சுனாமி காலத்தில் மிதக்கும் பிணத்தில் ஆபரணங்களை திருயவர்கள்தானடா.... நீங்கள்.

ஊடகங்கள்கூட மழை விபரம் குறித்து செய்தி சொல்லி காட்டும் இந்த நேரத்திலாவது விளம்பரத்தை நிறுத்தி வைப்பது மனிதாபிமானம் ஆனால் ? தங்கவிலை குறைந்திருப்பதாகவும் வழக்கம்போல அளந்து விடுகின்றார்கள் வளர்ந்து கெட்டவன் ஒருத்தன் ஏதோ புச்சித்தமிழனாம் வேஷ்டி வாங்கி கட்டுங்கள் என்று சொல்கிறான் தமிழ் நாட்டில் புரட்சி தமிழன் என்று சொன்னால் அது தந்தை திரு. ஈ.வெ.ரா. பெரியார் அவர்களை மட்டுமே சேரும் மற்றவரை சொன்னால் நாக்கு அழுகி விடும் இன்னொருத்தி மச்சான் இந்த ராடு வாங்குங்கள் என்று சொல்கின்றாள் எவன் எக்கேடு கெட்டாலும் எனக்கு கெடைக்கு ரெண்டு ஆடு என்பது போல்தான் இவர்கள் மீது படித்தவர்கள் எப்படி ? அபிமானம் கொள்கின்றார்கள் என்பதுதான் எனக்கு இதுவரை விளங்கவில்லை நான் ஏன் ? இதை சொல்கிறேன் என்றால் நமது உறவுகள் குழந்தைகளோடு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை கண்டு கொண்டு இருக்கும் பொழுது இடையில் இதையும் காண்பிக்கின்றார்களே.... நல்லவர்கள் மனது ஏற்றுக்கொள்ளுமா ?

திரைப்பட நடிகர்கள் பணஉதவி செய்யவில்லை என்று சொல்லும் அறிவு ஜீவிகளே... அவங்கே என்ன மசுத்துக்கு உங்களுக்கு கொடுக்கணும் நீங்கதானே... அவங்களை பணக்காரன் ஆக்கி விட்டு காலம் முழுவதும் ஏழையாகவே இருக்கின்றீர்கள் இதில் ஒருவர் ஏழையாம் அவர் சன்னல் வழியே கண்டு வெட்கப்படுகின்றாராம் நாளை இவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு வெள்ள நிவாரண நிதிக்காக கிரிக்கெட் நிகழ்ச்சி நடத்துவார்கள் அதற்கு நீ போட்டி போட்டுக்கொண்டு பணத்தை கட்டி பார்க்கச் செல்வாய் உனக்கு மானமிருந்தால் ரோசமிருந்தால் ? அந்தப்பணத்தை இன்றே தொண்டுள்ளம் செய்யும் நிறுவனங்களுக்கு செய்யலாம் இதற்குப் பெயர்தான் நமக்கு நாமே உதவி என்னை திருப்பி கேட்க நினைக்காதே.. நான் அரபு நாட்டில் கால் பதித்த காலம் தொட்டு செய்கின்றேன் அதற்க்கு ஆதாரமும் உண்டு அவைகளை நான் காண்பிப்பது தற்பெருமை ஆகவே வேண்டாம் சிறிய நடிகரான திரு. லாரன்ஸ் அவர்கள் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக செய்திகளில் படித்தேன் இது உண்மையெனில் உண்மையாக இருக்கும் காரணம் அவர் அனாதைகள் ஆஸ்ரமம் நடத்துகின்றவர் அவர் குலம் வாழ வாழ்த்துவோம் அரசியல்வாதிகள் எங்களுக்கு உதவவில்லை என்று சொல்பவர்களே சிறிய முத்திரை பதிப்பதற்காக அவர்களிடம் ஆயிரத்தையும், ஐநூறையும் வாங்கிகொண்டு வேலையை முடித்து விட்டீர்கள் பிறகு அவர்கள் என்ன எலவுக்கு உங்களுக்கு உதவவேண்டும் ? உங்களுக்கு சிறுகச்சிறுக கட்டிய கப்பத்தை மொத்தமாக எடுத்து ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் இது அவர்களின் கடமை அல்ல ! அவர்களின் வியாபார தந்திரம் உலகை படித்த காலம் முதல் கில்லர்ஜியின் அகராதியில் ஏமாற்றுபவன் அறிவாளி ஏமாறுபவன் முட்டாள்.

இப்பொழுதாவது உண்மைகளின் முகம் தெரிந்ததா ? இல்லை வரும் 2016 மே மாதத்திற்க்குள் மறந்து விடுமா ? வாக்குரிமை என்பது நமக்கு நாமே இடும் வாக்கரிசி என்ற நிலையாகி விட்டது இனியெனினும் உணர்வோம் தன்மான உணர்விருந்தால் ?

- தேவகோட்டை கில்ர்ஜி அபுதாபி

சாம்பசிவம்-
வாக்களிப்பது ஜனநாயக கடமை இல்லையா ?
சிவாதாமஸ்அலி-
ஆமாமா.. நீங்களெல்லாம் கவரிமான் ஜாதி நூல் பிடிச்சது மாதிரித்தான் இதுவரை வாழ்ந்துட்டீங்க...
Chivas Regal சிவசம்போ-
இவங்கே கட்டிங்குக்கு வழியில்லாமல் வெட்டி விட்ருவாங்கே போலயே..

காணொளி
பதிவு நீண்டிருப்பின் மன்னிக்கவும் கில்லர்ஜி.

57 கருத்துகள்:

  1. நல்ல காட்டமான பதிவு, எல்லோரும் சேர்ந்து அழித்திருக்கிறோம் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கும்மாச்சி அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  2. வணக்கம் கில்லர் ஜி !

    சிந்திக்க வேண்டிய பதிவு வெள்ளத்திற்கு காரணமானவர்கள் அனைவருமே தண்டிக்கப் படல் வேண்டும் அதுதான் பாமரன் தண்டிக்கப்பட்டு விட்டான் மற்றவர்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது !
    தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி வாழ்க வளமுடன் !
    தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  3. உங்களது கோபம் நியாயமானது. இது ஒரு அறச்சீற்றம். நம் மக்களுக்கு இதுபோன்ற பேரிடர் இனி நடக்கவேண்டாம். ஆனால் இந்த பேரிடர் தந்த பாடம் மூலம் நாம் இனி எப்படி நடக்கவேண்டும் என்பதை கற்றுக்கொள்வோம். தங்களின் பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனியெனும் நல்லது நடக்கட்டும் நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. என் மனதிலும் இதே எண்ணங்கள். இந்தமுறை மழைநீர் கடலுக்கு சீக்கிரமே போய்ச் சேரட்டும். தொடர்ந்து இன்னும் கனமழை தொடர்ந்து வந்தவண்ணமே உள்ளது பீதியைக் கிளப்புகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

      நீக்கு
  5. அன்பின் ஜி..

    எனது பதிவின் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி.. அதுவும் FB இல் வந்தது.. தவிர..

    உங்கள் மனதைப் போலவே என் மனமும் குமுறியது...
    நான் தங்களை அபுதாபியில் சந்தித்தபோது கூறியது நினைவிருக்கும்..
    நாடி நரம்புகள் அனைத்தும் கெட்டுப் போனவர்களால் நீர்நிலைகள் உயிர் நாடி அறுக்கப்பட்டது..

    இந்த சீரழிவு - 45 ஆண்டு கால வரலாறு..
    நினைக்க நினைக்க இரத்தம் கொதிக்கின்றது..

    P.S. வீரப்பா அவர்களின் வசனம் நினைவுக்கு வருகின்றது..

    இதனால் எல்லாம் யாரும் திருந்தப்போவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி அன்று பேசியவை இன்றும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது திருந்தவில்லையெனில் நமது சந்ததிகளின் வாழ்வும் அழியும் என்பது உறுதி.

      நீக்கு
  6. இயற்கைச் சீற்றத்தைப் போலச் சீறியிருக்கின்றீர்கள். அனைத்திற்கும் நாம்தான் காரணம். மக்கள் தேர்தலுக்கு ஓட்டு மட்டும் வாங்க வருகிறார்கள் என்று குமுறியிருக்கின்றார்கள் ஆனால் அந்த வார்த்தைகள் பணம் செல்லும் வரை மட்டுமே. பணம் வாயை மூடிவிடும். நம் மக்கள் அப்படித்தான். குமுறுபவர்கள் வரும் தேர்தலில் மற்றவருக்கு வாக்களிப்பர். இருவர் மட்டுமே ...வேறு நல்ல தலைவரும் இல்லை..எனவே மக்கள் தேர்தலைப் புறக்கணித்துப் புரட்சி செய்ய வேண்டும். செய்வார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் குமுறுகின்றார்கள் என்று சொல்லி விட்டு பணம் வாயை மூடி விடும் என்று விடையையும் சொல்லி விட்டீர்கள் பிறகு நான் சொல்ல என்ன இருக்கின்றது.

      நீக்கு
  7. இயற்கையின் நியதி – சரியான தலைப்பு. உங்கள் உள்ளக் குமுறல்களை வெளியே சொல்லி விட்டீர்கள். இனி அந்த பழைய மெட்ராஸ் மீண்டும் வர எத்தனை ஆண்டுகளோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையே பல ஆண்டுகள் கண்டிப்பாக ஆகும் அதற்கு முன் இனி இப்பட நடந்தால் என்ன செய்வது என்றே அரசு ஆலோசித்து நடவடிக்கைகள் எடுப்பது அவசியமானது.

      நீக்கு
  8. குமுறிவிட்டீர்கள் அண்ணா...
    நிறைய சொல்லியிருக்கிறீர்கள்...
    நிறைவாய்...?

    நம்ம மக்கள் வரும் தேர்தலிலும் பணத்துக்கு உரிமையை விற்றுவிடுவார்கள். இந்த நம்பிக்கைதானே நம்ம அரசியல் வியாதிகளை மக்களுக்கு உதவாமல் இருக்க வைக்கிறது...

    நம்ம ஜனங்கள் இப்போ பணத்தின் அடிமைகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மக்களிடம் மாற்றுச்சிந்தனை வராதவரை மாற்றமில்லை நம் வாழ்வில்.

      நீக்கு
  9. ஆக, நாங்கள் எல்லாரும் கெட்டவர்கள்; அதனால் அழிகிறோம்! நீர் நல்லவர் அதனால் தப்பித்துக் கொண்டீர். அப்படித்தானே? நல்லது. வாழ்க நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வரும் தேர்தலில் மற்ற தொகுதிகளைவிட சென்னை தொகுதி மக்கள் கண்டிப்பாக நல்ல தீர்வுடன் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை சகோதரர்கள் கஷ்டப்படும் பொழுது எப்படி நண்பரே நாங்கள் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியும்.

      நீக்கு
    2. வரும் தேர்தலில் நல்ல தீர்ப்பு யாருக்கு சகோ????????

      இது இல்லை என்றால் அது, அது இல்லை என்றால் இது,,,,,

      இது தானே இங்கு,,

      நீக்கு
    3. ஆனால், உங்கள் பதிவு அப்படி இல்லையே? நீங்கள் எல்லோரும் குற்றம் இழைத்தீர்கள். அதனால் இப்பொழுது படுகிறீர்கள் என்கிற தொனியில் அன்றோ இருக்கிறது?

      இவற்றுக்கெல்லாம் காரணம் அரசு என்று நாக்கில் நரம்பில்லாமல் நாங்கள் பேசுவதாய்க் கூறியிருக்கிறீர்களே? நான் கேட்கிறேன், எல்லோருமே தவறு செய்யாதவர்களாகவும் உலக மா உத்தமர்களாகவும் இருந்து விட்டால் அரசு என்கிற ஒன்று எதற்கு? மக்கள் குற்றம் செய்யாமல் தடுக்கவும், வலியோர் எளியோரை வாட்டாமல் காக்கவும்தானே அரசு என்கிற ஒன்று ஏற்படுத்தப்பட்டது? அப்படியிருக்க, நீர்நிலைகளையெல்லாம் அவனவன் ஆக்கிரமிக்கப் பெட்டிப் பெட்டியாய் வாங்கிக் கொண்டு அனுமதிகளை வாரி வழங்கி எல்லாக் குற்றங்களுக்கும் வழி வாய்க்கால் திறந்து விட்டுவிட்டு ஏரிகளுக்குப் போகும் வாய்க்கால்களையெல்லாம் மூடி மறைத்து மனை போட்டு விற்க ஊக்குவித்தது அரசா தனியாரா? தமிழ்நாட்டில் முதன்முதலாக நீர்நிலைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது யார், அரசா தனியாரா? அதற்காகத் தனி மனிதர்கள் தவறே செய்யவில்லை என நான் கூறவில்லை. ஆனால், தனி மனிதர்கள் தவறு செய்யத்தான் செய்வார்கள். அதுதான் மனித இயல்பு. அதைச் செய்ய விடாமல் தடுத்துக் காத்து அனைவரையும் காப்பாற்றத்தான் அரசு என்கிற அமைப்பு. அதைச் செய்யாமல் இத்தனை பேரைச் சாகடித்ததற்கு அரசைத் திட்டாமல் நீங்கள் பாதிக்கப்பட்டு உதிரக் கண்ணீர் உகுக்கும் எங்களைத் திட்டுகிறீர்கள். இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? என்னதான் இந்த அளவுக்கு மோசமாக நீர்நிலைகள் சூறையாடப்பட்டிருந்தாலும் இந்த அழிவு இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தாதபடி அரசு நினைத்திருந்தால் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு அனைவரையும் காப்பாற்றியிருக்கலாம். இதை நான் சொல்லவில்லை, களத்திலிருக்கும் பணியாளர்கள் சொல்கிறார்கள், துறைசார் வல்லுநர்கள் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் பாழாய்ப் போன அரசு அதையும் செய்யவில்லை. இத்தனை தவறுகள் அரசின் பக்கம் இருக்க நீங்கள் என்னடாவென்றால், எங்களைக் குற்றம் சொல்கிறீர்கள். இஃது எப்படி இருக்கிறது தெரியுமா? தண்ணீரில் தத்தளிப்பவனைப் பார்த்துத் தரையில் நிற்பவன் கேட்டானாம், "எனக்குக் கூடத்தான் நீச்சல் தெரியாது. நான் கத்துகிறேனா?" என்று. அப்படியிருக்கிறது.

      நீக்கு
    4. வணக்கம் நண்பரே..
      நான் ஏதோ வேற்று நாட்டுக்காரன் என்பதைப் போல நினைத்துக் கொண்டு தங்களது கருத்தை பதிந்து இருப்பது போல் இருக்கின்றது

      கூட்டத்தில் என்னையும் இணைத்துதானே நான் குற்றம் சுமத்தி இருக்கின்றேன் ஆந்த ஆறு பேரில் நானும் இருக்கின்றேன் இருப்பினஉம் தனிப்பட்ட வகையில் நான் ஒரு இடத்தை வாங்காமல் இருந்த விசயத்தை மட்டுமே புகுத்தினேன்
      காரணம் நீ வாங்கவில்லையா ? என்று யாரும் என்னை கேட்டு விடக்கூடாது என்பதால்...

      மீண்டும், மீண்டும் நான் சொல்வது அரசியல்வாதிகளை புரிந்து கொள்ளவேணஅடும் என்பதையும் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதுதான்.

      மக்களைக் காபாபாற்றவே அரசு இருக்கின்றது அரசாங்கம் இல்லாமல் வழி நடத்தும் இடம் உலகில் எங்கும் உண்டா ? அப்படி ஒரு அமைப்பு இல்லாமல் இயங்கவும் முடியாது காரணம் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடுவானே.. ?

      நான் அரசை திட்டவில்லை என்று சொல்கின்றீர்கள் ஒவ்வொரு பதிவிலும் நான் அரசியல்வாதிகளையே தாக்கி எழுதுகிறேன் தாங்களும் படித்துக்கொண்டுதான் வருகின்றீர்கள்

      இனி நாம்தான் விளிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதே எனது பதிவின் நோக்கம் விரிவான கேள்விகளுக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  10. பார்ப்போம் பட்டு தெரிந்த பின்பாவது தன்மான உணர்ச்சி வருகிறதா என்று...............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் என்று நம்புவோம் நண்பரே... வேறு வழியில்லை

      நீக்கு
  11. அன்புள்ள ஜி,

    சுயநலவாதிகள் மிகுந்து விட்டார்கள்... பாமரர்கள் தொடர்ந்து ஏமாற்ற ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. காசு வாங்கி மோசம் போக ஓட்டர்கள் தயாராக இருக்கிறார்கள். காசு கொடுத்ததை மீட்டெடுக்க அரசியல்வாதிகள் தயாராகவே இருக்கிறார்கள்.

    ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...!

    த.ம.8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் திருந்தும் காலம் நெருங்கி விட்டது மணவையாரே இதுவே கடைசி சந்தர்ப்பம்.

      நீக்கு
  12. சிறப்பான பகிர்வு! உங்கள் மனது குமுறுவதைப்போல, நல்ல உள்ள‌ங்களின் சீற்ற‌ல்கள் போல, இளைய தலைமுறைகளும் மனம் குமுறினால் எதிர்காலத்தின் விடியல்க‌ள் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ இளைய தலைமுறையினர்தான் இனி முடிவெடுக்க வேண்டும் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  13. நகரம் வளர்ச்சி அடையும் போது ,அருகில் இருக்கும் விவசாய நிலம் அழியத்தானே செய்யும்,மக்கள் குடியிருக்க வீடு வேண்டாமா ?ஒருவர்
    மீது ஒருவரா படுத்துக்க முடியும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளர்ச்சி முக்கியமே ஜி அதைவிட பாதுகாப்பு அதிமுக்கியம் பாதுகாப்பில்லாத வளர்ச்சி வீழ்ச்சிக்கே வழி வகுக்கும் எல்லாவற்றிலும் பிறநாடுகளை பின்பற்றும் நாம் இதில் மட்டும் தயக்கம் எதற்க்கு ?

      நீக்கு
  14. வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனிடம் பிரார்த்திப்போம் நண்பரே

      நீக்கு
  15. ஆறு குளங்களை ஏரிகளை தூர்த்துக் கட்டிடங்களாக மாற்றியதன் பலனை
    சென்னை அனுபவிக்கிறது.அனாலும் மறைந்திருந்த மனித நேயத்தை வெளிப் படுத்திக் காட்டியிருக்கிறது.சாதி மத இன மொழி மறந்து உதவும் கரங்கள் நீள்வதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகான விளக்கம் தந்தீர்கள் செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம் உண்மையே..

      நீக்கு
  16. இங்கு இன்னும் மனிதம் செத்துவிடவில்லை, தரம் கெட்ட அரசியல் இல்லை என்றால் இங்கு அனைத்தும் சரியாக இருக்கும் என்று மக்கள் உணர்த்த ஆரம்பித்து விட்டார்கள்.

    இயற்கையை நாம் மறந்ததன் விளைவு இது.

    இனியும் அடுத்தவரைக் குறைச்சொல்லி எதுவும் ஆக போவது இல்லை. நம்மை நாம் தற்காத்துக்கொள்ள வேண்டும்.

    நல்ல பகிர்வு, தொடருங்கள் சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ இனியெனும் நாம் திருந்த வேண்டும் இதை அனைவரும் உணரவேண்டும் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  17. இயற்கையை நாம் மறந்ததன் விளைவு -- என்ற கருத்து சரியானதே சகோதரா
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. இந்த கோபம் நியாயமானது. கட்டாயம் வரவேண்டியது.
    த ம பிரச்சனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  19. "அட காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் கையும் காலும்தானே மிச்சம்...." உங்களின் சூடு பறக்கும் பதிவு மழைக் குளிருக்கு இதம் ... இருந்தும் சுகாதாரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையே? மாற்றம் என்பது பிறருக்கு அல்ல நமக்குத்தான் (ஒவ்வொரு தனி மனிதனுக்கும்) தேவை. சிந்தித்துப்பார்த்தால், மாற்றம் வேண்டும் என்று கூறிச் சிலர் அவர்களுக்குத்தேவையான மாற்றத்தை நம்மை வைத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ... வருண பகவான் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்திவிட்டார். மழை பெய்து இன்னும் ஓயவில்லை ... இனிதான் ஆரம்பம்... மிகப்பெரிய சுகாதாரக் கெடுதல்கள்.....அதை எப்படி சமாளிப்பது? அதற்க்கு ஏதாவது எளிய பரிகாரம் கூறுங்கள் .... கோகி-ரேடியோ மார்கோனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      அழகிய பாடலுடன் கூடிய கருத்துரை நன்று ஆம் மாற்றத்தை நமக்கு நாமே ஏற்படுத்த வேண்டும்
      பரிகாரம் ?
      நண்பரே என்னை ஜோசியர் என்று கணித்து விட்டீர்களே…

      நீக்கு
  20. காலத்திற்கு ஏற்ற அவசியமான பதிவு. மூடப்பட்ட ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர் வாரப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் யோசனைகள் நன்று வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
    சில வேண்டுதல்கள்...

    இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
    மணிதம் இன்னும் மரிக்கவில்லை
    என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
    நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
    நிறையவே நாம் ஜாக்கிரதையாக
    செயல்பட வேண்டிய தருணம் இது...

    அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
    வேண்டுதல்கள்..

    1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

    2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

    3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட USB மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

    4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

    5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.

    மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

    நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

    உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் யோசனை பலருக்கும் உதவியாக இருக்கும் நண்பரே...

      நீக்கு
  22. ம்ம் எனக்கு என்னமோ நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கிறோமோ எனப்படுகின்றது.அதிகாரமிருப்பவர்கள் தன் நாட்டின் முன்னேற்றத்துக்கு எது தேவையென உணர்ந்து சட்டங்களை இயற்றணுமே தவிர மக்கள் தாமாக அனைத்தினையும் உணரணும் என எதிர்பார்த்தால் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் என மக்களின் வரிப்பணத்தில் மாதச்சம்பளங்கள் பெறும் நியமனங்கள் எதற்காக? அக்காலத்திலும் அரசர்கள், மந்திரிகள் தான் தன் நாட்டுக்கு எது தேவை என உணர்ந்து அனைத்தினையும் நிறைவேற்றினார்கள். தமக்கு என்ன தேவை என கேட்கும் போது மக்கள் சொல்வதைலும் கேட்டார்கள். இன்றைய நாட்களில் அப்படியா நடக்கின்றது. 2015 ஜனவரி மட்டுமல இனி வரும் காலம் முழுமைக்குமே இயற்கை பேரிடர்களை அனைத்து உலகமும் சந்திக்க தான் வேண்டும். அத்தனை இலட்சணமாய் நாம் பூமியை பாழ் படுத்தி வைத்திருக்கின்றோமே? இந்த நிலையில் நானா நீயா என பேசும் நேரம்ல்ல்ல நாம் என அனைவரும் இணைந்து முடிவெடுக்கும் நேரம். ஆனால் பல படித்தவர்களே அடிமுட்டாள்கள் போல் ஆட்டியில் இருப்போர் என்ன செய்ய முடியும் என சொல்வது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போன்றது.

    விவேகத்துடனாக வேகம் இம்மாதிரி பேரிடர்களுக்கு ரெம்ப முக்கியம்.அப்ப்டி வேகமும் விவேகமுமில்லாத அதிகாரிகளை கொண்டதாகவா நாம் இருக்கின்றோம்.

    ஆட்சியில் இருப்போர் என்ன எப்படி செய்திருக்கலாம் என நான் http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_10.htmlசென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?எனும் தலைப்பில் இட்ட பதிவை முழுமையாக படித்து பாருங்கள் புரியும்.

    தூங்கியது போதும் விழித்தெழுங்கள். தனி நபர் முடிவெடுக்கும் விடயம் அல்ல இது.

    யாருமே மகாத்மாக்கள் அல்ல!
    நம்பிக்கை தானே வாழ்க்கை..!

    மாறுவார்களா? மாறுவீர்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே இந்த மழை மதவாதத்தை ஒழித்து இருக்கின்றது அரசியல்வாதிகளின் முகமூடியை கிழித்து இருக்கின்றது மாறுவோம் என்பதே எனது நம்பிக்கை

      நீக்கு
    2. இதைத்தான் நானும் சொன்னேன். சிலருக்கு எதையுமே அன்பாகச் சொல்லத் தெரிகிறது. நான் எதையுமே கொஞ்சம் காரமாகச் சொல்லியே பழகி விட்டேன். அப்படிச் சொன்னால்தான், சொல்லப்படும் கருத்தின் பின் உள்ள உணர்வு புரிந்து கொள்ளப்படும் என நான் நம்புவதால்தான் அப்படிச் செய்கிறேனே தவிர, வேறெந்த நோக்கமும் இல்லை. :-(

      நீக்கு
    3. வருக நண்பரே கருத்து சுதந்திரம் உள்ளது நமது நாடு யாரும் அவருடைய கருத்தை முன் வைப்பதில் தவறில்லை நண்பரே

      நீக்கு
  23. தமிழ் மணத்திலோ வேறெந்த திரட்டிகளிலோ நான் இன்னும் இணைக்கப்ப்டாட்ததால் என் பதிவுகள் அனேகரை சென்றடைவதில் தாமதம்.. எனிவே

    விகடன் கவர் ஸ்ரோரியின் விமர்சனமாக நான் இட்ட
    http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_10.html
    சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

    http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_6.html
    தேவைகள் இனிமேல் தான் அதிகமாகின்றது.

    http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post.html
    தொற்று நோய் அபாயம்! தற்பாதுகாப்பும் முன் எச்சரிக்கையும்

    போன்ற பதிவுகளையும் படியுங்கள்! உங்கள் கருத்துக்களை இடுங்கள்



    பதிலளிநீக்கு
  24. வணக்கம்
    ஜி
    படித்த போது மனம் கொதிக்கிறது... விரிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ரூபனின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  25. இது பற்றி எனது பதிவுகள் படியுங்கள் அங்கிள்...கருத்திருங்கள்..வளர்வேன்..நன்றி

    பதிலளிநீக்கு