சதாசிவம் சாதாரண பியூன் இவன்
மனைவி சுதா ஒரு பிரைவேட் கம்பெனியில் மேனேஜர் கை நிறைய சம்பளம் கணவனை மதிப்பதில்லை
சதாசிவத்தை சதா... திட்டிக் கொண்டே இருப்பாள் இதனால் சதாசிவத்திற்கும் பதவி ஆசை
வந்தது தான் வேலை செய்யும் ஆபீஸில் மேனேஜர் பதவி மீது ஆசைப்பட்டான் ஆனால் அதற்கு
படிப்பும் திறமையும் வேண்டுமென சொல்லி விட்டார்கள் என்ன செய்வது ? நம்மிடம் படிப்பும் இல்லை திறமையும் கிடையாது படிப்பாவது
செலவு செய்து சர்டிபிகேட் வாங்கி விடலாம், திறமைக்கு எங்கே போவது ? கடையிலும் விற்க மாட்டார்கள் இதனால் ஆபீஸில்
வேலை செய்ய பிடிக்க வில்லை வேலையை விட்டு விடலாம் ஒரு டிடெக்டிவ் கம்பெனி
தொடங்கினால் கை நிறைய சம்பாரிக்கலாம் துப்பறியும் நிபுணர் என்ற பதவியும் கிடைக்குமென
நினைத்து மனைவியிடம் சொன்னான் அவள் அதெல்லாம் வேண்டாம் அதற்கு அனுபவமும் மூளையும்
வேண்டுமென மறுத்து விட்டாள் என்ன செய்வது ? அனுபவம் பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
மூளை நம்மிடம் கிடையாது கடையிலும் விற்க மாட்டார்கள்.
அந்த நேரம் பத்திரிக்கையில் ஒரு
விளம்பரம் பார்த்தான் புதிதாக கண்டு பிடித்த ஏழு சக்கர கார் ஒன்றிக்கு தமிழ் நாட்டில்
டீலர்கள் தேவை ஆறு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கட்டி விட்டால் வாரம் ஒருமுறை மும்பை
தலைமை அலுவலகம் வந்து மீட்டிங்கில் கலந்து கொண்டால் போதுமானது நாம தமிழ் நாட்டிலேயே
பெரிய டீலர்னு பேர் வாங்கிடலாம் கை நிறைய பணமும் புழங்கும் படித்து விட்டு
மனைவியிடம் சொன்னான் அதற்கு அவள் அவ்வளவு பணமும் இல்லை அதற்கெல்லாம் ஹிந்தி
பேசத்தெரிய வேண்டுமென மறுத்து விட்டாள் என்ன செய்வது ? பணமாவது மாமனார் காலில் விழுந்து விடலாம் ஹிந்தி ? நமக்கு தமிழே தகராறு சரி ஏதாவது ஒரு கட்சியில்
சேர்ந்து விட்டால் எப்படியாவது தேர்தல்ல நின்னு ஜெயிச்சுட்டா அமைச்சர் பதவி
கிடைக்கும் கை நிறைய பணமும் வரும் மனைவி தடுத்தும் கட்சிக்காரர்களின் ஆதரவுடன்
மனைவியை தைரியமாக எதிர்த்து கொ.இ.க கட்சியில் சேர்ந்தான்.
ஒரு பதவி கிடைக்குமென
கட்சிக்காக மாநாடுக்கு போனான் பேரணியில் கலந்து கொண்டான் வாழ்க ! வாழ்க ! எனகோஷம் போட்டான் போஸ்டர் ஒட்டினான் கட்டவுட் கட்டினான்
விலை மாதர்களுக்கு பென்ஷன் தொகை வழங்குவதில் ஊழல் நடந்ததாக ஆளுங்கட்சியின் அராஜக
ஆட்சியை எதிர்த்து வரும் 18 ம்தேதி ரயில் மறிப்பு
போராட்டம் என தலைவர் அறிவித்தார் போராட்டத்திற்கு சதாசிவமும் சென்றான் தாய்க்குலத்திற்காக
தன் உயிரையும் துச்சமென நினைக்கும் தலைவன் வாழ்க ! தலைவன் கேட்க வேண்டுமென பக்கத்திலேயே கோஷம் போட்டுக் கொண்டே
சென்றான் ரயிலும் நெருங்கி வந்தது தலைவர் கண் அசைக்க சட்டென சதாசிவத்தை ரயில் முன்
தள்ளி விட்டார்கள் யார் தள்ளி விட்டது ? என்ன நடந்தது ? ஒன்றுமே புரியவில்லை தலைவர் பிரச்சனையை
பெரிதாக்கி காவல்துறைக்கு தலைவலியை கொடுத்து விட்டு சதாசிவம் வீட்டுக்கு சென்று
சுதாவிடம் ஆறுதல் சொல்வது போல் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்து இறந்த சதாசிவம்
குடும்பத்திற்கு கட்சி நிதியிலிருந்து 50,000.00 ரூபாய் வழங்கப்படும் ?
? ? என அறிவித்து விட்டு போய் விட்டார்.
சதாசிவம் ஆவியாகி இறைவனிடம் ACCOUNTS பார்க்க மேலே போய்க் கொண்டிருக்க....
அவனது தோழர்கள் கீழே போஸ்ட்
ஒட்டிக் கொண்டிருக்க... அதில்
தாய்க்குலத்திற்காக ரயில் முன் பாய்ந்து
உயிர் நீத்து சிவலோக பதவி அடைந்த தோழர் சதாசிவத்திற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி.
இவன்
கொ.இ.க
காணொளி
சரி.. அந்த ஊழல் கமிஷன் என்ன ஆச்சு..
பதிலளிநீக்குஅதுவும் சிவலோகம் போய்ச் சேர்ந்து விட்டதா!..
வாங்க ஜி அதை எதிர்க் கட்சிக்கு கப்பம் கொடுத்து வாயைக் கட்டி விட்டார்களே...
நீக்குபல கட்சிகளில் தொண்டர்களை இப்படித் தான் பயன்படுத்துகிறார்கள்....
பதிலளிநீக்குவருக ஜி பாமரனுக்கு இது புரியவில்லையே...
நீக்குஅண்ணா பதிவு பற்றி கருத்து இப்ப இல்லை...
பதிலளிநீக்குமுதலில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இருக்கும் படத்தை மாற்றுங்கள்...
உங்களுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்தான் ... புரிகிறது....
ஆனால் படிப்பவர்களுக்கு இது சரியெனப்படவில்லை....
முதலில் மாற்றுங்கள்.
வருக நண்பரே பொதுவாக பதிவு நல்லதோ, கெட்டதோ எனது புகைப்படங்களையே இடுகிறேன் கடந்த பதிவுக்கு கமல்ஹாசனின் புகைப்படத்தை இட்டேன் இந்தப்பதிவுக்கு அவர் புகைப்படத்தை போட முடியுமா ? அது தவறு மட்டுமல்ல பல பிரச்சினைகளையும் கொடுத்து விடும்.
நீக்குஇந்தப் புகைப்படத்துக்கு எவ்வளவு வேலை செய்தேன் என்பதை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் அந்த திறமையைப் பாராட்டலாமே..
பரவாயில்லை தங்களின் அன்புக்காக அந்தப் படத்தை எடுத்து விட்டேன் இனிமேல் இவ்வளவு வேலை செய்யக்கூடாது என்பதையும் படித்துக்கொண்டேன் வருகைக்கு நன்றி
உங்கள் உழைப்பு தெரிகிறது அண்ணா... நல்ல விஷயத்தில் படம் போட்டால் பரவாயில்லை... பெரும்பாலும் இதுபோன்ற பகிர்வுகளில் உங்கள் படத்தைப் போடுகிறீர்கள்... இணையத்தில் தேடுங்கள்... இல்லையேல் படம் போடாமல் விடுங்கள்...
நீக்குநன்றி.
மீள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி
நீக்குஆமாமாமாமாமாம்! நானும் சொல்லி விட்டேன் !
நீக்குஉண்மையிலே தாய்க்குலத்தை மகிழ்ச்சி படுத்தினாரோ இல்லையோ தாரத்தை மகிழ்ச்சி படுத்தியிருக்குமோ 50.000 நிதி?
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே சிலருக்கு அப்படித்தானே..
நீக்குதொண்டர்கள் தியாகத்தில் குளிர் காயும் தலைவர்கள்
பதிலளிநீக்குவருக நண்பரே பெரும்பாலான தலைவர்கள் இப்படித்தானே...
நீக்குஹஹஹஹஹ் இதெல்லாம்/இது போன்ற கொலைகள் எல்லாம் அரசியலில் சகஜமப்பா...
பதிலளிநீக்குஇப்படித்தான் பல தீகொளுத்திக் கொள்ளலும், இது போன்ற விபத்துகளும்..ஏதோ கட்சிக்காக உயிரை மாய்த்தது போல பேசப்படும் எல்லாமே கொலைகள்தான்.அப்படியே ஒருவர் மாய்த்துக் கொண்டாலும் அது கேனத்தனம்.
இப்படிச் செய்து முடிந்து போனவர்களை விடுங்கள் அவர்களைப்பற்றி பேசுபவர்களை இருப்பவன் கேட்டுக்கொண்டே மறுபடியும் செய்கின்றானே...
நீக்குநாட்டு நடப்பை துல்லியமாக படம் பிடித்து(எழுதி) காட்டியுள்ளீர்கள். அந்த போஸ்டரில் அந்த படம் இருக்கவேண்டுமா ?
பதிலளிநீக்குவருக நண்பரே எல்லாமே பொருத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன் மாற்றி விட்டேன் அன்புக்கு நன்றி
நீக்குவீடியோ போன்ற அந்தப் படம் ஹஹஹ....அப்போ ரயில் ஏறலையா இவங்க அதனால்தான் ரத்தா....
பதிலளிநீக்குபந்த் அன்று ரயில் வராதே...
நீக்குமனைவி மகிழ்ந்து இருப்பாரே ,மனுஷன் இருக்கும் போது கூட ஐம்தாயிரம் சம்பாதிக்க துப்பு இல்லாதவர் என்று :)
பதிலளிநீக்குஆமாம் ஜி சுதா அப்படியானவள்தானே....
நீக்குநடைமுறை உண்மை.
பதிலளிநீக்குவாங்க ஐயா வருகைக்கு நன்றி
நீக்குஅடப்பாவமே...!
பதிலளிநீக்குவாங்க ஜி இவங்கெளுக்கு எதற்கு பரிதாபம்.
நீக்குமிக வித்தியாசமான புகைப்படம், தங்களது எழுத்தினைப் போலவே. நன்றி.
பதிலளிநீக்குவருக முனைவரே இந்த வகையான புகைப்படங்கள்தான் என்னை பதிவுகள் எழுத வைக்கின்றது. ஒன்று கிடைத்தது இரண்டு உருவாக்கியது.
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்கு‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா...’
‘ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்...’
காணொளி காட்டியது கண்டு மகிழ்ந்தேன்...!
சதாசிவத்திற்கு சிவலோக பதவிகிடைக்க முயற்சி செய்து, அப்பதவி அடையச் செய்த அன்னாருக்குச் சி(ச)வத்தின் நன்றி.
த.ம.8
வருக மணவையாரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குஆகா
பதிலளிநீக்குதம +1
வருக நண்பரே நன்றி
நீக்குஅந்த கொ.இ.க பெயரை விரிவாகச் சொன்னால்...அடுத்து நான் கட்சி தொடங்குவதற்கு உதவியாக இருக்கும்.....
பதிலளிநீக்குகொள்கை இல்லாத கழகம் நண்பரே
நீக்குஎன்றுமே அரசியல் நடைமுறை!
பதிலளிநீக்குஉண்மையதானே நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசொல்லிய கருத்தும் வீடியோவும்சிறப்பாக உள்ளது ஜி வாழ்த்துக்கள் த.ம 12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஅதிகப்படியாக சிரமம் எடுத்து படம் அமைத்திருக்கின்றீர்கள் நண்பரே! மனமும் போன போக்கில் போகும் மனிதனின் நிலையை எண்ணி! பேராசை கொண்டவர்கள் துணை இருக்குமானால், துன்பம் தொடர்கதைதான்!
பதிலளிநீக்குஅருமை! அருமை!
வருக நண்பரே முதலில் இருந்த புகைப்படத்தை தாங்கள் காணவில்லை அந்த இடத்தில் எனது படம் இருந்தது அதை திருத்தி விட்டேன் கருத்துரைக்கு நன்றி
நீக்குஇக்காலம் அல்ல எக்காலமும் நடக்ககூடியதை எழுதி வீட்டீர்கள்.
பதிலளிநீக்குஅரசியலில் இதெல்லாம் சகஜம்பா!
த.ம வாக்கு இட்டேன்.
இது சராசரி மக்களுக்கு தெரிகின்றது இருப்பனும் அதுவே வழி இதுதான் எனக்கு புரியவே இல்லை.
நீக்குபரிதாப தொண்டர்கள்.
பதிலளிநீக்குஇவர்களுக்கெல்லாம் பரிதாபப் படக்கூடாது நண்பரே..
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குநல்ல மாட்டுக்கு ஒரு சூடு நம்ம மாடுகளுக்கு ஓராயிரம் சூடு வச்சாலும் அரசியல் வாதிக்கு பின்னால் வாய பொழந்திட்டு போவாங்க ......என்ன செய்வது கற்றும் திருந்தா மக்கள் இருக்கும் வரையில் அரசியல் இப்படியே தான் இருக்கும்
அருமை ஜி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம +1
வருக பாவலரே அருமையான சவுக்கடி வார்த்தை சொன்னீர்கள்
நீக்குஅடடே....
பதிலளிநீக்குதம +1
சகோவின் வருகைக்கு நன்றி
நீக்கு