இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 31, 2016

தமிழ் எண்கள்

 
FACE BOOK கில் ஒரு நண்பர் மேற்கண்ட கடிகாரப் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் தமிழ் எண்களை படியுங்கள் என்று, இதை நாம் எங்கு படிப்பது ? யாரிடம் படிப்பது ? நாம் சிறுவயது தொடங்கி பள்ளிக்கூட ஆசிரியரிடம்தான் படித்து வருகிறோம் ஆனால் நமக்கு இந்தத் தமிழ் எண்களை சொல்லித் தரவில்லையே காரணம் என்ன ? முதல் காரணம் நமது அரசாங்கம் இந்த எண்களை அங்கீகரித்து நடைமுறை படுத்தவில்லை அதன் காரணமாய் நமது ஆசிரியர்களில் பெரும்பாலானோருக்கும் இந்த எண்கள் தெரியவில்லை


1985 ம் ஆண்டு தேவகோட்டையில் ஒரு பெரியவர் பாலபாடம் என்ற 1910 ம் ஆண்டு பழந்தமிழில் அச்சடித்த பெரும்பாலான எழுத்துக்கள் இப்பொழுது கிடையாது புரட்டும்போதே உடைந்து விடும் அந்த நிலையிலான பழங்கால நூல் ஒன்று வைத்திருந்தார் சுமார் 400 பக்கங்கள் இருக்கும் அவர் செல்வந்தரும்கூட நான் அடிக்கடி அந்த நூலை எடுத்துப் படிப்பேன் ஒருநாள் அவர் நூலை புரட்டிக் கொண்டே இருந்தார் நான் என்ன ஐயா தேடுறீங்க ? எனக்கேட்டேன் அதற்கு அவர் ''கள்ளுன்னலின் கொடுமை'' நேற்று படித்தேன் கொஞ்சம் பாக்கியிருக்கு அதான் தேடுகிறேன் என்றார் அதற்கு தலைப்பும் பக்கமும் போய்ப் பார்த்தால் உடனே கிடைத்து விடுமே என்றேன் எண்கள் தமிழில் இருக்கும் எப்படி பார்ப்பது ? எனக்கேட்டார் எனக்குத் தெரியும் என்றேன் எங்களுக்குள் தொடங்கிய விவாதம் சவாலாகி இரண்டு ரூபாய் பந்தயத்தில் வந்து நின்றது இரண்டே நிமிடத்தில் எண்களைப் பார்த்து பக்கத்தை விரித்து வைத்தேன் சொன்னபடியே இரண்டு ரூபாயை கொடுத்து விட்டு, இதுதான் பள்ளிக் கூடத்திலேயே கிடையாதே இத்தனை வயதான எனக்கே தெரியவில்லை உனக்கு எப்படித் தெரியும் ? நான் விவேகானந்தரிடம் (காலண்டர்) படித்தேன் என்றேன் அன்றே எனக்குள் தொடங்கிய முயற்சிதான் இன்றும் யாருடைய உதவியுமின்றி COMPUTER ரில் நானாகவே பல மொழிகளை படிக்கவும் TYPE செய்யவும் கற்றுக் கொண்டேன்.



 இந்த தமிழ் எண்கள் COMPUTERரில் TYPE செய்யும் போது பூஜ்யம் மட்டும் ஆங்கில எண்களைப் போல் தான் வருகிறது உண்மையான தமிழ் பூஜ்ய எண் 90 % மலையாள எழுத்தான '''' வைப்போல் இருக்கும் (மலையாள() ஏனோ தெரியவில்லை COMPUTER ரில் வருவதில்லை மேலும் தமிழ் எண்களைப் போல் தெலுகு, ஹிந்தி, மலையாளம், அரபிக் மொழிகளிலும் எண்கள் உண்டு அதேபோல் மலையாளம், அரபிக் இரண்டு மொழிகளைத் தவிர மற்ற மொழிகளின் பூஜ்ய எண் ஆங்கிலத்தில்தான் வருகிறது ஆனாலும் சமீபத்தில் சில இடங்களில் பூஜ்யத்தை பார்த்தேன் அது எப்படியென தெரியவில்லை இதனைக் குறித்த எனது ஐயங்களை தீர்ப்பார் யாருமில்லை இன்றும் நம்மூரில் சில வாகனங்களில் இந்த எண்களை காணலாம், அப்பொழுது எனக்குள் ஒரு சந்தோஷம் தோன்றும்.

தமிழ் வாழ ! அந்த தமிழோடு நாமும் வாழ !

காணொளி 

62 கருத்துகள்:

  1. பாஸிட்டிவ் செய்திகளுக்காக சில செய்தித் தாள்களைப் படிக்கும் பொது அங்கு கஉ என்றெல்லாம் பார்த்துக் குழம்பி இருக்கிறேன். தமிழ் எண்கள் என்று தெரியும்தான். ஆனால் என்ன என்று குழம்புவேன்! உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  2. காணொளி காணாத ஒளியாக ஒளிந்து கொண்டதேன்?

    தமிழ் எண்கள் குறித்த விபரங்கள் அத்தனையும் அருமை,
    இந்த கடிகாரத்தின் படி நான் க-1 , உ-இரண்டு,ங-3 அ. 8, ஏ-7 என இலகுவாக கற்றுகொண்டேன்.

    உ நாட்களாக உங்கள் புதிய பதிவுகள் வராததேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மன்னிக்கவும் உங்களின் கருத்து முறையே தவறு இதை தமிழ் எழுத்துருவில் சொல்கின்றீர்கள் அது முதல் தவறு இதோ கீழே பாருங்கள் இதுதான் எண்

      ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௦

      மேலும் கீழே விவேகானந்தர் காலண்டரில் பாருங்களேன் சுலபமாக புரியும்
      2 தினங்களாக எனது பதிவு வரவில்லையா ? முதலில் பிழைப்பு பிறகே வலைப்பூ

      நீக்கு
    2. அப்படி எனில் தமிழ் எண்கள் தமிழ் எழுத்துருவில் இல்லையா?

      நீக்கு
    3. எழுத்துருவு உண்டு நீங்கள் ௩ - 3 (ங) என்றும், ௭ - 7 (ஏ) இப்படிப் போடுவதை தவறு என்றேன் மேலும் ௨ - 2 (உ) உதாரணம் உலகம் வித்தியாசம் தெரிகிறதா? இதைத்தான் சொன்னேன் நான் தட்டச்சு செய்தது எண்கள் வழி நீங்கள் செய்தது எழுத்து வழி
      ரொம்ப சொல்லிட்டேனு சண்டைக்கு வந்திடாமல் அதான் பயமாகீது

      நீக்கு

  3. தமிழ் எண்களை எங்களது ஊரில் உள்ள துவக்கப்பள்ளியில் நான் படித்தபோது (அது அந்த காலம்- 1949-54 ஆண்டுகள் ) சொல்லிக்கொடுத்தார்கள். பின்னர் ஏனோ பள்ளிகளில் இந்து அரபிய எண்களை மட்டும் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த தலைமுறை இளைஞர்களுக்கு தமிழ் எண்கள் தெரியாது என்பது வருத்தப்படவேண்டிய ஒன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நானும் பலமுறை இதை நினைத்து இருக்கிறேன் எனது குழந்தைகளுக்கு நான் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன் நான் நாட்டுக்கு வருவது தெரிந்தவுடன் எனது மகள் மீண்டும் படிக்க தொடங்கி விடும் காரணம் நான் வந்தவுடன் எழுதச்சொல்லுவேன் இன்றுவரை அப்படித்தான்.

      இப்பொழுது உலகம் முழுவதும் நடைமுறையில் எழுதும்
      எண் பெயர் அரபிக் எண். அதாவது 1 2 3 4 5 6 7 8 9 0
      இதை பலரும் ஆங்கில எண் என்று நினைக்கின்றார்கள் அது தவறு

      அரேபியர்களின் எண் பெயர் அரஃப் எண்
      இதுதான் தமிழ் எண் - ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௦

      நீக்கு
  4. சில கார்களில் இந்த மாதிரி தமிழ் எண் கன்னட எண் என்று போட்டுக் கொள்கிறார்கள் புழக்கத்தில் இல்லாதைப் படிக்கத் தயக்கம் எழுகிறது உபயோகத்தில் இல்லாதவரை இதைத் தெரிந்து கொள்ளாததால் நட்டம் ஏதுமில்லை. ஏதாவது விபத்து நேர்ந்தால் அடையாளம் சொல்வதும்கடினமாகி விடும் தெரிந்து கொள்வதில் தவறில்லை. தெரியாதது பெரிய இழப்புமில்லை. மாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தாங்கள் சொன்ன வி10 விபரம் அருமை நல்ல யோசனைதான் தமிழ் எண்களை நாம் அழித்து விட்டோம் என்ற கருத்தையே வலியுருத்தினேன் வேறொன்றுமில்லை ஐயா வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. இந்த எழுத்துருக்களை/எண்களைப் பழைய புத்தகத்தில் பார்த்திருக்கின்றேன் ஜி. இதை நான் அப்போது நினைவில் வைத்துக் கொண்டது எப்படி என்றால் அதன் உருவை வைத்து எனக்குள்ளேயே ஒலி வடிவில் பின்னர் எழுதவும்.பின்னர் அதையே அடிப்படையாக வைத்துக் கொண்டு எண்களை பதினொன்று, பன்னிரெண்டு பதின்மூன்று என்று எழுதிப்பார்த்ததுண்டு...
    நல்ல பதிவு ஜி..

    சரி காணொளியில் உங்கள் மகன் தமிழ் சொல்லுவதென்ன???!!!!ஆங்கிலத்தில் சொல்ல வைத்து நக்கலா...ஹஹ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எல்லா மொழி எண்களையும் படிக்க வேண்டியது 10 எண்கள் மட்டுமே இதுதான் மொழியின் சூட்சுமம்

      காணொளி மகனை ஒரு கல்யாண நேரத்தில் எடுத்தது வசனம் வாட்ஸ்-அப்பில் பேசியது இரண்டையும் பொருத்தமான இடத்தில் இணைத்தேன் அவ்வளவுதான் வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி

      நீக்கு
  6. கால மாற்றம் நமது மொழி, கலாசாரங்களில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டது. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற நிலையும் மாறிவிடுமோ என்கிற அச்சம் எனக்குள் அவ்வப்போது எழும்... அதை உறுதி படுத்தும் நிகழ்வுகளில் இந்த எண்கள் பற்றிய விடயமும் ஒன்று...
    சரியான தருணத்தில் வந்த பதிவாகவே கருதுகிறேன் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் உணர்வுப் பூர்வமான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  7. அன்பின் ஜி..

    தங்களின் தமிழார்ந்த சேவைக்கு மனமார்ந்த நன்றி..

    எண்களுக்கு வடிவம் தான் அஃதே தவிர -
    உச்சரிப்பு ஒன்று இரண்டு மூன்று தான்!..

    மேலும், அரபு எண்கள் வடிவத்தில் - தற்கால எழுத்துக்களுடன் - ஒன்று மற்றும் ஒன்பது மட்டுமே ஒத்து இருப்பவை..

    மற்றதெல்லாம் அரிவாள் மூக்கு (2,6) அரிவாள் மனை (3) கொடுக்காப்புளி(4), கோழி முட்டை (5) மேல் முனை கீழ் முனை (7,8) மாதிரி தானே..

    வாக்கியத்தின் கடைசியில் புள்ளி வந்தால் முற்றுப்புள்ளி.. இலக்கங்களுடன் கூடி புள்ளி வந்தால் பூஜ்யம் (0)..

    அரபு மொழி வலமிருந்து இடமாக எழுதப்பட்டாலும் -
    எண்கள் இடமிருந்தே தொடங்குகின்றன..

    அரபு மொழி விஷயத்தில் - இலக்கங்கள் பண விஷயமாகும் போது இடம் தொடங்கி வலம் தானே!..

    இல்லாவிட்டால், குடி கோவிந்தகுடியாகி விடும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் விரிவான விளக்கவுரையில் நானும் சில விடயங்கள் அறிந்தேன் மிக்க நன்றி

      நீக்கு
  8. தமிழ்வாழ! அந்தத் தமிழோடு நாமும் வாழ்வோம் நண்பரே...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் நண்பா,
    கில்லர்ஜியின் பதிவினைக் காண எண்: "க" அழுத்தவும்.
    பதிவுலகின் எண்: க தாங்கள்தான் என்பதை சொல்லாமல் சொல்லி
    விட்டீர்கள்.
    த ம +
    நட்புடன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நான் தற்போது ‘’௪‘’ இந்த இடத்தில்தானே இருக்கிறேன் ஏன் ? பொய் சொல்கின்றீர்கள்.

      நீக்கு
  10. அன்புள்ள ஜி,

    தமிழ் எண்கள் மாணவர்களுக்கு வழக்கில்லாமல் அரபு எண்களே வழக்கில் வைத்துள்ள முறையே பல ஆண்டுகளாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்தான் மாணவர்கள் தமிழ் எண்களை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

    கடலை உருண்டை இங்கு ரசித்து ருசித்து சாப்பிடலாம்
    1 2 3 4 5 6

    என்று அவள் கூறினாள். 0
    7 8 9 0

    நன்றி.

    த.ம. 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே தங்களின் தகவல் மனதுக்கு 6தல் அளிக்கின்றது நன்றி.

      நீக்கு
  11. நானும் பள்ளியில் படிக்கும்போது இந்த எண்களை காலண்டரில் பார்த்து கற்றுக்கொண்டேன். ஆனால், வழக்கத்தில் இல்லாததால் இப்போது மறந்துவிட்டது. மற்ற மொழிகளில் அந்த மொழிக்கான எண்களையே பயன்படுத்துகிறார்கள். இதை பள்ளியிலேயே அறிமுகப்படுத்தி சொல்லிவந்தால் நன்றாக இருக்கும்.
    நல்ல பதிவு!
    ஓட்டுப் பட்டையை காணவில்லை. வாக்குக்கு பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வழக்கத்தில் இல்லாததால் மறந்து விட்டது என்று சொன்னீர்களே ஆகவேதான் நான் இன்றும் இதை அன்றாடம் உபயோகத்தில் வைத்து இருக்கிறேன் முக்கியமான கணக்குகள் இந்த எண்களில்தான் எழுதி வைப்பேன் காரணம் பிறருக்கு தெரியாது என்ற நம்பிக்கையில்.

      நீக்கு
    2. ஆஹா... அடியேனும் இப்படித்தான் செய்வது வழக்கம்!

      நீக்கு
  12. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஹிந்தியை வளர்க்க பாடுபடுகிறார்கள் ,தமிழ் ஓரங்கட்டப் படுகிறது !இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இதைப் பற்றியே கவலையே இல்லை .தமிழ் எப்படி வாழும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான் நம்மிடம் நல்ல விடயத்துக்கு ஒன்றுமை இல்லையையே...

      நீக்கு
  13. தமிழ் வாழ! அந்தத் தமிழோடு நாமும் வாழ! – உங்கள் தமிழ் உணர்விற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். அதேசமயம் இந்த எண்களை நடைமுறைப் படுத்தாததும் நல்லதுதான். உலக மொழியாம் ஆங்கிலத்தை நாட்டு நடப்பில் எல்லா காரியங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்; திடீரென ஆங்கில எண்களுக்குப் பதிலாக தமிழ் எண்கள் என்றால் குழப்பம்தான் மிஞ்சும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே திடீரென புகுத்தினால் குழப்பம் வரும் என்பது உண்மையே இருப்பினும் இப்படியொரு எண்கள் இருப்பதே பல தமிழர்களுக்கு தெரியவில்லையே என்பதே எனது ஆதங்கம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  14. தமிழ் வாழ்க....

    சில முறை கற்றுக் கொள்ள முயற்சித்தேன். நினைவில் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உங்களால் முடியும் வேற்று மொழியே கற்றவர்தானே நீங்கள் இது நம் மொழி கண்டிப்பாக முடியும்.

      நீக்கு
  15. தமிழ் அழிவை தோக்கி போக அரசியல்வாதிகளே காரணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான வார்த்தை சொன்னீர்கள் ஐயா வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. கடந்த நான்கு நாட்களாக
    இணையம் ஒத்துழையாமை இயக்கத்தில் இறங்கிவிட்டது
    எனவேஓரிரு பதிவுகளைக் கவனியாமல் விட்டிருப்பேன் என நினைக்கிறேன்
    இனி தொடர்வேன் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி

      நீக்கு
  17. ஆய்வு தொடர்பாக நூலகங்களுக்குச் செல்லும்போதுதான் முதன்முதலாக தமிழ் எண் உள்ள நூல்களைக் கண்டேன். எனக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. சில நூல்களில் குறிப்பெடுக்க அந்த எண் தெரியாத நிலையில் தனியாக குறித்துக்கொண்டு தேவையான விவரங்களை எடுக்க ஆரம்பித்தேன். பொதுவாக தமிழ் எண்ணைப் பற்றிய அடிப்படை அறிவு நமக்குத் தேவை. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய நல்ல பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவருக்கு வணக்கம் தங்களுக்கு இந்த எண்கள் தெரிந்திருக்கும் என்பது எனது கணிப்பு உண்மையாகியது எனக்கு நூலில் பார்ப்பதற்கு முன்பே நான் யதார்த்தமாக விவேகானந்தர் காலண்டரில் வருவதை தினம் பார்ப்பேன் பிறகே அதன் வழியே பயன் படுத்திக் கொண்டேன் இன்றும் புழக்கத்தில் வைத்திருக்கிறேன்.

      நீக்கு
  18. கல்லூரியின் போது தான் தமிழ் எண்ணகளை பற்றி தெரியும். கற்றேன்.ஆனால் இப்போது மறந்து விட்டது, மீண்டும் நினைவில் வைக்க முயல்கிறேன் சகோ. நீங்கள் பலவற்றை கற்று இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி சகோ. தம 15

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ முயன்றால் முடியாதது எதுவும் பொதுவாக நான் நேரத்தை எதற்காகவாவது பயன்படுத்தி விடுவேன் அதன் எனது இயல்பு குணம் தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. தம.கரு

    முயன்று பார்த்தேன் சகோ. இப்படி தம போட்டே நினைவு வைத்துக் கொள்ளலாம் போல என தோன்றுகிறது. தம போடுபவர்கள் இதை உபயோகித்தால் பழகிவிடும் அல்லவா....? எப்பூடி...:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பொதுவாக பதிவுகளுக்கு போனவுடன் வாக்களித்து விடுவேன் எப்படியும் நாம் ஓட்டளிப்பது உறுதி எதிர் ஓட்டுப்போடப்போவதில்லையே பிறகே படிப்பேன் காரணம் அடுத்த பதிவுக்கு போகும் அவசரத்தில் மறதி வந்து விடும்

      நீக்கு
  20. உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கு சகோ,

    தமிழ்படித்தவர்களிடம் கூட இதன் தெளிவு இருக்குமா? என்பது ஐயமே. பள்ளி நாட்களிலே சொல்லிக்கொடுக்காமை தான் ,,,,,,

    தங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நானும் தமிழன்தானே ஆகவே படித்தேன் இது மட்டுமல்ல மலையாளிக்கே மலையாள எண் பந்தயம் கட்டி பணம் வாங்கி இருக்கிறேன் காரணம் தமிழர்களைப் போலவே மலையாளிகளுக்கு அதிக பட்சமாக மலையாள எண் இருப்பதே தெரியவில்லை.

      நீக்கு
  21. தமிழ் எண்களை டைப் செய்வதற்கு உபாயம் கூறவும். சில எழுத்துக்கள் வருகிறது. சிலவற்றிற்கு (உ த.) 4.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தங்களது கணினியின் மொழி அமைப்பில் தமிழ் சேர்ந்து இருப்பீர்கள் அதில் எண்கள் என்ற அமைப்பையும் இணைக்கவும் சில நேரங்களில் சில கணினிகளில் இருப்பதில்லை உங்களுக்கு மின்னஞ்சலில் 10 எண்களையும் அனுப்புகிறேன் தேவைப்படும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்

      நீக்கு
    2. சகோ! நீங்கள் தமிழில் எழுத எந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள்? நான் என்.எச்.எம் எழுதி (NHM Writer) பயன்படுத்துகிறேன். அதில் ஓர் எண்ணை எழுதிவிட்டு உடனே ~ எனும் குறியை அழுத்தினால் அந்த எண் தமிழ் எண்ணாக மாறும். நீங்கள் வேறு மென்பொருளைப் பயன்படுத்துபவராக இருந்தாலும் எதற்கும் முயன்று பாருங்களேன்!

      நீக்கு
    3. வணக்கம் நண்பரே இப்பொழுது உள்ள எனது சொந்த கணினியில் இந்த தமிழ் எண்கள் கொண்டு வரமுடியவில்லை
      நான் அலுவலகத்தில் வேலையின் காரணமாக கோப்புகளின் எண்களை அரேபியர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தமிழ் எண் இணைத்து வைத்திருந்தேன் ஏற்கனவே கொடுத்திருந்த கணினி இப்பொழுது புதிய கணினி கொடுத்து விட்டார்கள் முன்பு சேமித்து வைத்திருந்த பழைய நகல்களை வைத்து இப்பொழுது குறிப்பு கொடுக்கிறேன் மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  22. தமிழ் எண்களை மீண்டும் இத்தனை பேருக்கு நினைவூட்டியமைக்கு முதலில் என் நன்றி நண்பரே!

    '0'-வை அழுத்தினால் 'ய' போன்ற வடிவுடைய தமிழ் எண்ணுரு வராமல் ஏன் '0'-வே வருகிறது எனக் கேட்டிருந்தீர்கள். குறிப்பிட்ட அந்த எண்ணுரு உண்மையில் '0' இல்லை நண்பரே, 'பத்து'தான். உண்மையில், தமிழ் எண்முறையில் '0'-வே கிடையாது. எனவே, அதற்கான எண்ணுருவும் கிடையாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், உங்களைப் போலவே நிறைய பேர் 'பத்து'க்கான எண்ணுருவைச் சுழியத்துக்கான எண்ணுரு எனத் தவறாக நினைத்து விடுகின்றனர். தமிழ் எண்கள் கொண்ட கடிகார உருவங்களில் கூடப் பத்தாம் எண் வர வேண்டிய இடத்தில் '௧ய' எனப் பலர் அமைத்து விடுகிறார்கள். இவை தவறு! ஆனால், இந்தப் பிழைக்கான காரணம் நாம் கிடையாது. நம் பாடமுறையின் அழகு அப்படி. தமிழ் எண்ணியல் முறையையும், வியப்பூட்டும் கணிதமுறைகளையும் பற்றி விளக்கும் 'கணக்கதிகாரம்' நூலைப் படித்தால் இப்படிப்பட்ட குழப்பங்களை நாம் தவிர்க்கலாம். அந்நூலைத் தரவிறக்க: https://archive.org/details/balagzone_gmail

    இந்தப் பதிவை பிளாகர் முகப்புப் பக்கத்தில் பார்த்தவுடனே இது பற்றி நீங்கள் என்ன எழுதியிருப்பீர்கள் எனப் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், உடனே படிக்க நேரம் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் விரிவான விளக்கவுரைக்கு நன்றி தாங்கள் கொடுத்த இணைப்புக்கு செல்கிறேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. நல்ல பகிர்வு அண்ணா...
    தமிழ் எண்களில் நானும் இன்னும் குழப்பம்தான்...
    இனிமேலாவது குழப்பத்தை தவிர்க்க முயற்சிக்கணும்.

    பதிலளிநீக்கு
  24. தமிழ் எண்களை சிறுவயதில் எண்சுவடியில்
    மட்டுமே பார்த்திருக்கிறேன் ஐயா....
    இது பத்தி ஒரு பேச்சு மூச்சும் எடுக்காத
    வாத்தியார்....
    இது வாத்தியாருக்கே தெரியாத கொடுமை...
    தமிழ் நாட்டிலேயே தமிழறியா தமிழர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆசிரியருக்கே தெரியவில்லையெனில் மாணவர்களுக்கு யார் கற்பிப்பது ?

      நீக்கு
    2. ஆசிரியருக்கே தெரியவில்லை என்றால்
      நாமாகவே கற்க முயல வேண்டியதுதான்...நண்பரே

      நீக்கு
  25. எம்மொழி அது செம்மொழி http://ajaisunilkarjoseph.blogspot.com/2016/01/blog-post_9.html அன்பு நண்பரே.....
    நம்ம தமிழே காணாமல் போகுது
    இதுல வேற எண்கள் தெரியலைனா
    ஆச்சரிய பட ஏதுமில்லை....


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் காலண்டரில்தான் கற்றேன் நண்பரே
      இதோ வருகிறேன் நண்பா மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  26. தமிழ் எண்கள் என் அப்பா படித்ததோடு சரி.அவர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
    நீங்க எதைவிட்டுவைத்திருக்கிறீங்க.!! உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள் அண்ணா ஜி.
    காணொளி காணவில்லை. மன்னிக்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சைனா மொழி ரொம்ப நாட்களாக கற்கவேண்டும் என்று நினைக்கிறேன் நேரம் கிடைக்கவில்லை

      நீக்கு