இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 06, 2016

16-ம் பெற்று தெருவில் விற்று


இந்த உலகத்தில் நானும் வாழ்ந்திருந்ததற்கு அடையாளமாக எதையாவது, விட்டுச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்து, எழுந்து கீழே விழுந்து கொண்டே..... இருக்கிறது நான் வரும் பொழுது எதையுமே கொண்டு வரவில்லை வாழும் காலங்களுக்காக நான் இரவல் வாங்கிய உடைகளைக் கூட போகும்போது எடுத்துக் கொள்வார்களே அய்யகோ நான் வேறு எதை விட்டுச் செல்லமுடியும் ?

01
எனது பற்களை கொடுப்போம் என்றால் இனிப்பான கோபால் பல் பொடியில் பல் துலக்கியதால் இனிப்போடு சேர்த்து பற்களைப் பூராம் பூச்சி தின்று விட்டது,

02 
வாயை யாருக்காவது கொடுப்போம் என்றால் இது ஒரு உளறுவாய் தேவையில்லை என்று சொல்லி 
விட்டார்கள்,

03
எனது மூக்கை கொடுப்போம் என்றால் அலிபாபா குகை போலிருக்கு வேண்டாமென சொல்லி விட்டார்கள்,

04 
எனது காதை கொடுப்போம் என்றால் அது கேட்காது என்று சொல்லி விட்டார்கள்,

05
எனது கண்ணை கொடுப்போம் என்றால் கணினி ஏற்கனவே மண்ணை அள்ளி போட்ருச்சு,

06 
எனது முடியை கொடுப்போம் என்றால் மூடிக்கிட்டுப் போ என்று சொல்லி விட்டார்கள்,

07
எனது மண்டையோட்டை கொடுப்போம் என்றால் இப்பொழுது திருவோடு தூக்கி கொண்டு யாரும் தெருவோடு போவதில்லையாம்,

08
எனது மூளையை கொடுப்போம் என்றால் அது உன்னிடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்,

09
எனது இதயத்தை கொடுப்போம் என்றால் இரண்டாவது படிக்கும் போதே இனியா திருடிக்கொண்டு போய் விட்டாள்,

10 
எனது குடலை கொடுப்போம் என்றால் ஏற்கனவே பசிக் கொடுமையிலே சிறுகுடலை பெருங்குடல் தின்னுருச்சாம்,

11
எனது கல்லீரலை கொடுப்போம் என்றால் அது கல்போல ஆகிவிட்டது,

12 
எனது ரத்தத்தை கொடுப்போம் என்றால் NAPOLEAN உதவியால் அதில் பித்தம் கலந்து விட்டதாம்,

13
எனது கிட்னியை கொடுப்போம் என்றால் நான் உழைத்து... உழைத்து இரண்டுமே சட்னியாகி விட்டது,

14
எனது கைகளை யாருக்காவது கொடுப்போம் என்றால் லஞ்சம் வாங்கி... வாங்கி கறை படிஞ்சு போச்சாம்,

15
எனது கையிலுள்ள ரேகைகளை கொடுப்போம் என்றால் ஏற்கனவே கேது எட்டாம் வீட்டுல வாடகை கொடுக்காம பனிரெண்டு வருசமா குடியிருக்கான்,

16
எனது கால்களை கொடுப்போம் என்றால் நீ நடக்கும்போது கால் வடக்கு திசை நோக்கிப் போகுது... என்று வேண்டாமென சொல்லி விட்டார்கள்.
  
தனக்கு ஆறறிவு என போட்டுக் கொண்ட மனிதர்கள்...

ஆயினும் மனிதனால் ஓரறிவு எனகொடுக்கப்பட்ட ''கரையான்கள்'' என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ள காத்திருக்கின்றன.... என்னால் மனிதனுக்கு எதையும் விட்டுச்செல்ல முடியவில்லை எனினும் இந்த உடல் முழுவதும் கரையானுக்காகவாவது விட்டு செல்ல முடிகிறதே...... என்றும் இந்த விசயங்களையாவது ஆறறிவு மனிதனுக்கு www.killergee.blogspot.com மில் போட்டு செல்ல முடிகிறதே... என்ற சந்தோஷத்துடன் வடக்குதெரு நோக்கி நடந்து செல்கின்றேன்.

48 கருத்துகள்:

  1. அப்ப பாவம்தான் எதையும் கொடுக்க முடியாதுதான்...
    ஆமா ரெண்டாப்பு படிக்கும் போதே இனித் தேவையில்லைன்னு இனியாக்கிட்ட கொடுத்திட்டீங்களா அண்ணா...

    அது இனியாவது திரும்ப கிடைக்குமா?

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுக்கவில்லை நண்பரே திருடிக்கொண்டு போய் விட்டாள் இனி கிடைச்சு என்ன ஆகப்போகுது.

      நீக்கு
  2. அன்புள்ள நண்பரே
    16 ம் பெற்று அதை விற்க முயன்றது
    மிக மிக அருமை....
    மனிதன் எதையும் விட்டுச்செல்ல
    முடியாது என்பதை உணர்த்தியது
    அதை விட அருமை....
    மனிதன் முயன்றால் சிலவற்றை
    விட்டு செல்லலாம்....
    பெயரை விட்டு செல்லலாம்....
    நினைவுகளை விட்டு செல்லலாம்.....
    அன்புடன் இருந்தால் தன்னையே விட்டு செல்லலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அற்புதமான விடயத்தை அழகாக தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. இப்படியும் ஒரு பதினாறா? வித்தியாசமான சிந்தனைதான்.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள ஜி,

    ‘தெருவில் ஒரு திருவிளக்கு’

    விட்டுச் செல்ல வீடு... மக்கள்...!

    ‘ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
    தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
    கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

    வீடு வரை உறவு வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?’

    நன்றி.

    த.ம.2


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே இதுதானே வாழ்வியல் உண்மை நன்றி

      நீக்கு

  5. //இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.//

    அப்படி வாழ்ந்துவிட்டால் எதையும் விட்டுச் செல்லவேண்டியதில்லை. எனவே கொடுப்பதற்கு எதுவும் இல்லையே என் கவலை வேண்டாம். தங்களின் நல்ல குணமே மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து தங்களுடைய புகழை நிலை நிறுத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்து மனதுக்கு இதமாக இருக்கின்றது வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. பட்டினத்தார் கனவில் வந்து ஏதும் சொல்லியிருப்பார் - என நினைக்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அவர் மட்டும்தான் கனவில் வருவது பாக்கி இருக்கின்றது.... ஹாஹாஹா

      நீக்கு
  7. அடடா... கொடுக்க முடிந்ததை கொடுக்கலாம்.....

    பதிலளிநீக்கு
  8. வடக்குத் தெரு மச்சான் என்று கேள்வி பட்டிருக்கிறேன் ,அதுக்கு இப்போதான் அர்த்தம் புரிந்தது :)

    பதிலளிநீக்கு
  9. பாகம் பாகமாக உடல் உறுப்புகளைக் கொடுப்பதைக்காட்டிலும் மொத்தமாக உடலையே தானமாக எழுதி விட்டால் யாருக்கு எப்படி உதவுமோ அப்படி உபயோகிப்பார்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் கருத்தும் சரியானதே...

      நீக்கு
  10. யாரங்கே..! இப்படியெல்லாம் தீவிரவாதமாக யோசித்து பதிவெழுத எவ்வளவு மூளை வேண்டும். உண்மைக்குப் புறம்பாக கில்லர்ஜிக்கு மூளை இல்லை என்று சொன்ன அந்த மானிட பதருக்கு 'டாஸ்மாக்கை மூடு' பாடலை போயஸ் கார்டனில் பாட ஆணையிடுகிறேன்.!
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே பாவம் ஏதோ சொல்லிட்டுப் போறாரு... விடுங்க அங்கே போயி பாடினால் பொடாவுல போட்ருவாங்க....

      நீக்கு
  11. இருக்கிற சொத்து.சேத்து வைத்திருக்கிற பணம் தருகிறேன் என்று சொல்லிப்பாருங்கள்..இலவச பொருளுக்கு அடித்துக் கொண்ட கூட்டம் சேரும் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணத்துக்கு மயங்காதோர் உண்டா ? நண்பரே...

      நீக்கு
  12. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
    அவன் யாருக்காகக் கொடுத்தான்?
    ஒருத்தருக்கா கொடுத்தான் -
    இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...

    இல்லையென்போர் இருக்கையிலே
    இருப்பவர்கள் இல்லையென்பார்;
    மடிநிறையப் பொருளிருக்கும் -
    மனம்நிறைய இருளிருக்கும்!

    எதுவந்த போதும் பொதுவென்று வைத்து -

    வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!

    ம்ம்ம் அட சே மத்ததெல்லாம் போட்டும்..எல்லோரையும் அன்பு செய்யலாம் என்றால் உங்கள் இதயத்தையும் இனியா திருடிக் கொண்டுவிட்டாளே! அது சரி இதயம் இல்லாமல் எப்படி இவ்வளவு காலம்!!!! வடக்குத் தெரு நோக்கிப் போகும் போதாவது இனியா வருகின்றாளா பார்ப்போம் எதற்கும் கொஞ்சம் காத்திருந்துவிட்டுப் போகவும்....
    நாம் மரணத்தை அடையும் தருவாயில் நம்மால் பொருள் கொடுத்து உதவ முடியவில்லை என்றாலும் நம்மையாவது மருத்துவக் கல்லூரிக்குக் கொடுக்கப் பதிவு செய்யலாம் அப்படியும் இல்லை என்றாலும் நமது உறுப்புகள் ஏதேனும் கொடுக்கவாவது காத்துக் கொள்ளலாம்...இறந்தபிறகும் வாழ்வோம்!!எங்கேனும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக நான் கண்ணை தானம் செய்வேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. சரித்திரத்தில் இடம்பெற என்ன சாதனை நாம் செய்திட்டோம்... அன்பாய் பேசி, பரிவாய் நடந்து மக்கள் மனதினில் இடம்பெறாலாமே!

    நம்முடைய தடங்களாய் நமது நினைவுகளை அவர்களிடம் விட்டுவிட்டு செல்ல நாம் தான் நிறைய செய்யவேண்டும்...
    யோசிக்க வைத்த பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  14. அட...பதினாறும் கொடுக்க முடியலை...ஆனா...16றையும்...ஒருத்தர்க்கு கொடுக்கலாம்...சரிதான். ஆனால் உரமாகி...ஒரு விதை விழுந்து மரமானால் நிறைய கொடுக்கலாம்....

    10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்லதொரு கருத்து சொன்னீர்கள்.

      நீக்கு
  15. கொடுக்கக்கூடாது என தீர்மானித்து விட்டு கொடுக்கணும் என முடிவெடுத்தால் இப்படித்தான் ஆகும். நீங்கள் பேசாமல் நீங்கள் வங்கியில் சேர்த்து வைத்திருக்கும் பணம்,லாக்கஅரில் இருக்கும் நகை, ஊரிலிருக்கும் வீடு, உங்க பேரிலிருக்கும் புண்ணியம், அனைத்தையும் என் பேருக்கும் தானம் செய்து விடுங்கோ!

    நான் உங்க ஊரு பேரு எல்லாம் தினம் தினம் ஊருக்கே சொல்லிட்டிருக்கேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாக்கரில் .............

      ஒட்டு போட்டேன்,அதுக்குரிய கமிஷ்ன் இன்னும் வரல!அதையும் கொடுத்திருங்க! ஹாஹா!

      நீக்கு
    2. அடடே நீங்கள் போனவாரமே கேட்டிருக்கலாம் நேற்றுதான் உகாண்டா நண்பருக்கு மொத்தமாக எழுதிக் கொடுத்தேன்

      நீக்கு
    3. கமிஷன் இந்த மாதம் 30-ஆம் தேதி வரும்

      நீக்கு
  16. வணக்கம் ஜி !

    இரண்டாம் ஆண்டிலேயே இதயத்தில் இனியா
    இன்றும் அதே இனியா ! தொடரட்டும் ஜி அருமையான பதிவு வாழ்க வளமுடன் !

    எஞ்சும் வாழ்வில் எதனைக் கொடுப்போம்
    ஏக்கம் நூறும் கண்டேன் - விழி
    விஞ்சும் நீரில் விடியல் கழுவும்
    விதியை நானும் கொண்டேன் !

    கருத்துச் சொல்லக் கவிதை தேடிக்
    கையின் இரேகையில் காயம் - வலி
    பருத்துக் கொண்டே போனால் உன்றன்
    பைந்தமிழ் காவல் தாயம் !

    வாழ்க நலம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் கவிதையான கருத்துரை அருமை

      நீக்கு
  17. கலக்கல் நண்பரே.

    பதிலளிநீக்கு
  18. ஆஹா, அதான் இதயத்தைக் கொடுத்துட்டீங்களே சகோ அப்பவே, அப்புறம் என்ன?
    வடக்குத்தெரு கதை நல்லா இருக்கு,,
    ஆனா இப்படியெல்லாம் யோசிக்கும் மூளையை யார் வேண்டாம் என்றார்கள்,,,,
    நன்றி சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சமூகத்துல சண்முகம்னு ஒரு ஆளு சொல்லிட்டாரு என்ன செய்யிறது.

      நீக்கு
  19. எப்படிதான் இப்படி ம்..திரும்ப எழுத வைக்கிறீங்க. எதையும் கொடுக்கமுடியாத நிலையில நீங்களா.அதுதான் இதில் உங்க எழுத்துக்களால் கொடுக்கிறீங்க..இருக்கும்வரை நன்மைகளை செய்து, அன்பா இருந்தால் நிச்சயம் 2பேராவது நினைப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்கள் சொல்வது போல எழுத்தை விட்டுச் செல்கிறேனோ... சரிதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. தலைபைபைப் பார்த்து ஏமாந்தேன்!

    பதிலளிநீக்கு
  21. போகிற ஊருக்கு வழி காட்டுமா?
    இந்த வடக்குத் தெரு?
    எடக்கு மடக்கான பதிலால்
    வடக்கே தலை வைத்து என்ன!
    கால் நீட்டியும் நடந்து வரலாம் என்று வரவைத்து விட்டீர்களே சபாஷ்!
    ரசித்தேன்,
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்தமைக்கு நன்றி

      நீக்கு
  22. வணக்கம்
    ஜி

    ஆறடி உடம்பு ஆறடி மண்ணுக்கு சொந்தம்
    பூமியில் வாழும் போது நாம்
    யாருக்கும் சொந்தமில்லை.
    இதுதான் இயற்கையின் நியதி.
    வாழும் காலத்தில்
    மனிதனாய் வாழ்வோம்...

    நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு