நெடுங்காலமாகவே
இந்த விசயத்தைப்பற்றி எழுத வேண்டுமென நினைத்திருந்தேன் அதாவது மலையாளிகளிடம்
பேசும்போது தனது கேரளத்தை ‘’தைவத்தின்ற சொந்தம் பூமி கேரளம்’’ என்பார்கள்.
(ദൈവത്തിൻറേ സ്വന്തം ഭൂമി കേരളം அர்த்தம் - இறைவனின் சொந்த பூமி கேரளா)
இந்த
வார்த்தையை கேட்டு நான் பலமுறை பல நண்பர்களிடம் விவாதம் செய்திருக்கிறேன் இது
எப்படி ? சாத்தியம்
ஆனால், இதுவரை யாருமே எமக்கு சரியான பதிலை தரவில்லை இவர்கள் மட்டுமல்ல மலையாள
அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஏதோ ஒரு காரணத்தில் மட்டுமல்ல பல இடங்களில் அவர்களும்
இதையே சொல்லிச்சொல்லி வலியுறுத்துகிறார்கள் தெய்வம் உண்டா இல்லையா ? என்ற
விசயத்திற்கு நாம் போகவேண்டாம், யாம் அதைப்பற்றியும் விவாதிக்க வரவில்லை தெய்வத்தின்
சொந்த பூமி கேரளம் என்றால் மற்ற தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், ஏன் ? மற்ற
நாடுகளான சீனா, அமெரிக்கா, ஜப்பான், மற்றும் உகாண்டா இவையெல்லாம் தெய்வத்திற்கு
சொந்தமில்லையா ? அதை படைத்தது யார் ? என்ற
கேள்வி எழுகிறது உலகையே படைத்தது இறைவன்தானே... அப்படி இருக்கும்போது
இப்படிச் சொல்வது எந்த விதத்தில் சரியாகும் அல்லது இதற்க்கு புராணத்தில் ஏதும்
சொல்லப்பட்டு இருக்கிறதா ? இல்லை அரசாங்க கெஜட்டில் ஏதும் வரைபடம் உள்ளதா ? நான்
வாதம் செய்வதற்காக வரவில்லை மேலும் அந்த அளவுக்கு பக்குவமும் போறா, தெரிந்தவர்களிடமிருந்து...
தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன், இவ்வளவு காலமும் நினைத்துக்கொண்டு இருந்ததை
இன்று எழுதக்காரணம் நமது இனிய நண்பர் ‘’தளிர்’’
சுரேஷ் அவர்கள் கடந்த வருடம் வந்த ‘’கனவில் வந்த காந்தி’’ தொடர் பதிவில்கூட கேள்வி
பதிலில் தனக்கு கடவுளின் நகரமான கேரளாவில் பிறக்க வேண்டும் எனகேட்டு இருக்கிறார்.
நண்பர் ‘’தளிர்’’ சுரேஷ் அவர்கள் தனது பதிவில் சொல்லியது. கீழே...
நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய் ?
நிறைய பேர் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை
என்பார்கள். எனக்கு அதில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. இதைப்பற்றி விரிவாகவே
ஓர் பதிவு எழுதலாம். மறுபிறவி எடுத்தால் இதே இந்தியாவில்
பிறக்க வேண்டும் என்பதும் கடவுளின் நகரமான கேரளாவில் இயற்கை எழிலை ரசித்துக்கொண்டே
இருக்க அங்கே பிறக்க வேண்டும் என்ற ஆசை உண்டு
இப்படி அவரும் கேட்டவுடன்தான் இதை
உடனே எழுத வேண்டுமென நினைத்து எழுதியுள்ளேன் இதற்காகவே கடந்த சில மாதங்களாக
மீண்டும் என் கண்ணில் பழக்கப்பட்ட (கண்டவுன்
தெறித்து ஓடினார்கள் என்பதும், விரட்டிப் பிடித்தேன் என்பதும் வேறு விசயம்) சுமார் ஐம்பது மலையாளிகளிடம் கேட்டு இருக்கிறேன் யாருமே சரியான விளக்கத்தை சொல்லாமல் நீ
வேண்டுமானால் தமிழகத்தை அப்படிச் சொல்லிக்கொள். என்றுதான் சொல்கிறார்களே தவிற
மலையாளிக்கே உரித்தான குணமாக தனது விட்டுக் கொடுக்காமல் வாதம் செய்கிறார்கள், நான்
அவர்களிடம் சொன்னது இது வெளியுலகம் தெரியாத மலையாளத்தில் சொல்வதால்தான் நீங்கள்
ஆதரிக்கிறீர்கள் தமிழர்களில் பெரும்பாலானோருக்கு மலையாளம் தெரியாது
தெரிந்தவர்களும் நமக்கேன் வம்பு எனக் கேட்பதில்லை ஆனால் நான் கேட்பேன். இதையே ஆங்கிலத்தில் (God’s Nativity India) ‘’இறைவனின்
சொந்த நாடு இந்தியா’’ என்று நாம் சொன்னால் மற்ற நாடுகள் அப்படியென்றால் ? எங்கள் நாட்டை படைத்தது
யாரென கேட்குமா கேட்காதா ? மலையாளிகளிடம் இந்த வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் என்ன என்றால் அவர்கள் சுற்றுலாத்துறை அப்படி சொன்னது, இப்படி சொன்னதென வேறு
விசயத்துக்கு போய் விடுகிறார்கள் அவர்களிடம் நான் விவாதித்ததை எழுதினால் இன்னும் நான்கு பதிவுகள் போடலாம், ஆகவே
அவைகள் வேண்டாம்
.
மேலும் நமது பதிவர்கள் பலரும் அவர்களது
பதிவுகளில் இதையே சிறிய அளவில் வலியுருத்தி இருக்கின்றார்கள் ஆகவே உடனே
இந்தப்பதிவை எழுதினேன்
.
இதனைக் குறித்து தங்களின் கருத்து என்ன உண்மை என்ன ? தெரிந்தவர்கள் தெரிவிக்க
வேண்டுமென என் இனிய நட்புகளை கேட்டுக்கொ(ல்)கிறேன்
.
அன்புடன் உங்கள்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
ஆமாம்... அவனுங்க எல்லாம் கடவுளின் நாடுன்னு சொல்லுவானுங்க... ஏன் சினிமாவில்... அரசியல்வாதிகள் பேசும்போது எல்லாம் இதைத்தான் சொல்லுறானுங்க...
பதிலளிநீக்குஅதாவது இயற்கை வளமிருக்கோ இல்லையோ... மலைகள், அருவி, அழகான தோட்டங்கள், அருமையான சீதோஷ்ண நிலை... சின்னச் சின்ன காயல்கள்... கடல்... ஆறு... இப்படி எல்லாம் ஒருங்கே இருப்பதனால் அப்படிச் சொல்றானுங்க போல...
என்ன இருந்தாலும் நம்ம ஊரு நமக்கு சொர்க்கபுரி அண்ணே....
அவனுக போறானுங்க... விடுங்க...
ஆம் நண்பரே சொர்க்கமே என்றாலும் அது தேவகோட்டை போல வருமா ?
நீக்குநண்பரே, ஓரடி மண்கேட்ட வாமனன் கதையை வைத்து அவர்கள் அப்படிச் சொல்கிறார்களோ என்னவோ?
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் கருத்துப்படியும் இருக்கலாம்.
நீக்கு''திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” இதை நான் சொல்லவில்லை ,சொன்னவர் சுவாமி விவேகானந்தர்!நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் :)
பதிலளிநீக்குவாங்க ஜி புரிந்து கொண்டேன்
நீக்குஇது எல்லாம் சும்மா ஜி... உடான்சு...
பதிலளிநீக்குஆம் ஜி அப்படித்தான்...
நீக்குஅடடா..உண்மை தெரிஞ்சா நல்லாருக்குமே சகோ..
பதிலளிநீக்குவருக சகோ தெரிந்து கொள்ளத்தான் கொளுத்திப் போட்டேன்.
நீக்குகில்லர்ஜி
பதிலளிநீக்குகேரளம் அல்லது மலையாளம் உண்டானது பற்றி ஒரு புராணக்கதை உண்டு. பரசுராமர் சத்திரியர்களைக் கொன்ற பின் தன்னுடைய மனுவை கடலில் எறிந்தார். அப்படியாக கேரளம் தோன்றியது.
பரசுராமர் விஷ்ணுவின் அவதாரம். ஆகவே கேரளம் கடவுள் உண்டாக்கிய நாடு. அதாவது கடவுளின் சொந்தம் நாடு.
ஜெயகுமார்
வருக நண்பரே தங்களது கருத்தும் ஒரு விடயத்தை சொல்கின்றது.
நீக்குவணக்கம் ஐயா.சமீபத்தில் நான் ஒரு கி.மு கி.பி என்ற காணொலியை கேட்டேன் இதில் பூமி என்பது ஒரு தூசுக்களாலும் வாயுகளாலும் நிறைந்த ஒரு பந்து என்றும் நாம் அனைவருமே ஆப்பிரிக்கா கண்டத்தில் தான் மனித இனமே தோன்றியது என்றும் முதலில் உலகில் தோன்றிய உயிரினம் பாக்டிரீயா அது தான் நமது எள் தாத்தா என்றும் மேலும் நாம் அனைவருமே உராங்குட்டான் என்ற குரங்கு வகையை சேர்ந்தவர்கள் என்றும் மேலும் பல தகவலை தெரிந்துக் கொண்டேன்.அப்படி பார்த்தால் நாம் இறைவனின் சொந்த நாடு ஆப்பிரிக்கா என்றும் இருக்கலாம்.
பதிலளிநீக்குஎன்னை பொருத்தவரையில் இறைவனின் பிறப்பிடம் ஒவ்வொரு மனிதனின் உள்ளிருக்கும் எண்ணங்களின் தொகுப்பு என்றே கூறுவேன் ஐயா.
நல்ல தேடல் விடைக்கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள் ஐயா.
வாங்க சகோ தங்களது கருத்தும் ஏற்க வேண்டும் நிறைய விடயங்கள் நான் தெரிந்து கொள்ளத்தானே பதிவை எழுதினேன்.
நீக்குஅன்பரே.....
பதிலளிநீக்குநான் கேள்விப் பட்டதை தங்களுக்கு சொல்கிறேன்....
கிறிஸ்தவ முறைப்படி நான் கேள்விபட்டிருக்கிறேன்...
இயேசுபிரானின் பன்னிரண்டு சீடர்களில்
ஒருவராத தோமா நம் இந்தியாவில்
வந்திருக்கிறார் அதுவும் அவரது முதல்
வருகை கேரள மாநிலம் .....
அங்கிருந்து இந்தியா முழுவதுமு
பரவியதுதான் கிறித்தவம் .....
இதை வைத்து தெய்வத்தினு சொந்தம் கேரளம்
என்று சொல்லி இருக்கலாம்.....
இவை எனக்கு தெரிந்தவை.....
உங்களுக்கு தெரிந்தவை எங்களுக்கு சொல்லுங்கள்
வருக நண்பரே தங்களது கருத்தும் கேள்விப்படாத புதிய விடயமே இன்னும் வரட்டும் தகவல்கள் பார்ப்போம்
நீக்குஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
நீக்குஅறுபதை இருபது வெல்லுமா உலகிலே....
மீள் வருகைக்கு நன்றி நண்பா.
நீக்குநம் நட்பிருக்க நன்றி வேண்டாமே....!!!
நீக்குநன்று
நீக்குஉங்களால் விரைவில் நாங்கள் மலையாளம் கற்றுக்கொள்வோம் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவருக முனைவரே இனி எல்லா மொழிகளையும் கலந்து பதிவு தருவேன்
நீக்குஉதாரணத்துக்கு இந்தியாவை பாரதமாதா என்றழைக்கிறோம் தமிழை தமிழன்னை என்கிறோம் அது போல மலையாளிகள் தெய்வத்திண்ட சொந்த பூமி கேரளம் என்று கூறுகிறார்களோ என்னவோ ?
பதிலளிநீக்குதங்களின் கருத்தும் ஏற்க கூடியதே வருகைக்கு நன்றி
நீக்கு//இன்னும் 4 பதிவுகள்//
பதிலளிநீக்குபோடுங்கள் ...
வருக நண்பரே 4 என்ன ? 40 பதிவுகள் எழுதுவேன் தாங்கள் தொடர்ந்தால் ?
நீக்குஅத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கேரளாவின் பெரும்பங்கு வருமானம் சுற்றுலா மூலமே கிடைக்கிறது. அவர்களை கவரும் விதமாக ஒரு கேப்ஷன் தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கிய வார்த்தைகள்தான். 'காட்'ஸ் ஓன் கன்ட்ரி'. அழகு, ஆரோக்கியம் (ஆயுர் வேத மருத்துவம்) எல்லாமே கிடைப்பதாலும் அதை அதிகமாக விளம்பரப்படுத்தியதாலும். அந்த கேப்ஷன் நன்றாக சென்று சேர்ந்துவிட்டது. தேவதைகளின் பூமி என்று ஏதோ ஒரு நாடு தனது சுற்றுலாவில் விளம்பரப்படுத்தும். எல்லாம் வெளிநாட்டினரை ஈர்ப்பதற்குதான். வேறு ஒன்றுமில்லை.
பதிலளிநீக்குவருக நண்பரே நிறைய விடயங்கள் அளித்தீர்கள் தங்களிடம் இல்லாத விடங்களும் உண்டோ ?
நீக்குஎனக்கு தெரியாது அண்ணா ஜி இப்படி சொல்வது. அதனால நானும் உங்களால் அறிந்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குகேரளாவுக்கு நான் சென்றிருக்கேன். எனக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துவிட்டது.எங்க நாட்டிலிருக்கும் ஓர் இடம் மாதிரிதான் கேரளாவும்.
ஆனா எனக்கு ஒரு டவுட்??
எப்படி உங்களுக்கென்றே வருகுது சந்தேகங்கள்,கேள்விகள்.
விவாதிக்க வரேல்லை என்று சொல்லியே அதை சொல்லிக்காட்டீடிங்க.
வருக சகோ தங்களுக்கு வந்த டவுட்டு ? எனக்கு வரக்கூடாதோ ? இதென்ன ? நியாயம் தர்மம் ?
நீக்குசெந்தில் குமார் அண்ணன் சொன்ன கருத்து சரி என எனக்குத் தோன்றுகிறது. தவிர,தாங்கள் சொன்ன படி பிடிவாதமாய் தன் கருத்தை முன் வைக்க நினைக்கும் மலையாளிகளின் குணம் கூட இப்படியான கேள்விகள் எழ வாய்ப்பாகி விடும். அப்துல் கலாம், கமலஹாசன் ஆகிய இருவரும் கேரளா என என்ன்னிடம் சொன்ன வடு மாங்கா மலையாளிகளை நான் சந்தித்திருக்கிறேன், என் ஊர்க்காரனையே எனக்கிட்ட இல்லை சொல்லி வாதம் செய்யும் திறமை மலையாளிகளின் தனி (கெட்ட) குணம். உங்கள் பதிவின் வழி இரண்டொரு ஆன்மிகம் சார்ந்த தகவல்கள் கருத்துரையாக கிடைத்ததது போல் இன்னும் கிடைக்கலாம்
பதிலளிநீக்குவருக நண்பரே அருமையாக சொன்னீர்கள் இதை தமிழ் நாட்டை விட்டே வெளியேறாத தமிழர்கள் படிக்க வேண்டும்.
நீக்குமலையாளியிடம் ஒரு முறை நானே ஐயா திரு. அப்துல் கலாம் அவர்களை மலையாளி என்று சொல்லி அவன் மறுக்காமல் சந்தோஷிக்க மறுதினம் நான் கேட்ட கேள்வியில் ரூம் மாறி விட்டான்.
நேற்று இரவு நான் அளித்த கருத்துரை - எவிட போயி!?..
பதிலளிநீக்குசேற்றில் செந்தாமரை என்பது தெரிந்ததே..
செந்தாமரையில் சேறு!?.. என்றால் - அன்பின் ஜி அவர்களுக்குப் புரியும் என்று நினைக்கின்றேன்..
தவிரவும் - குவைத்திற்குத் திரும்பியதும் இதப் பதிவின் தொடர்பாக எனது தனிப்பட்ட சில கருத்துகள் - தங்கள் பார்வைக்கு வழங்குகின்றேன்.. வாழ்க நலம்!..
அன்பின் ஜி கருத்துரைகள் வில்லையே...
நீக்குதங்களின் விடயங்களை காண ஆவலுடன் இருக்கிறேன்.
இறைவனின் பூமி கேரளா என்பதால்தான் பெரியாறு அணையைில் பிரச்சினை எழுப்பியவர்கள் எல்லாவற்றுக்கும் கேரளாவின் இறைவனையே சார்ந்து இருக்கவில்லையே ஏன்?நண்பரே........
பதிலளிநீக்குசந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் அரசியல்வாதிகள் மட்டும்தான் இருக்க வேண்டுமா நண்பரே... ?
நீக்குஏழையின் சிரிப்பே இறைவனின் இருப்பிடம்!
பதிலளிநீக்குஅருமை ஐயா மிகச்சரியான விடயமிது வருகைக்கு நன்றி
நீக்குஇயற்கை அழகுக்காக அப்படிச் சொல்லி இருப்பார்கள் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது! ஒரு பழைய காமெடி நினைவுக்கு வருகிறது. ஏதோ ஒரு ஜீவா படத்தில் போலீஸ்காரர் கஞ்சா கருப்புவின் பயறைக் கேட்பார். அவர் 'வாழவந்தான்' என்பார். இவர் "நாங்க மட்டும் சாகவாடா வந்தோம்" என்று சொல்லி இன்னும் அடிப்பார்!
பதிலளிநீக்குவருக நண்பரே பொருத்தமான விடயத்தை சொன்னீர்கள்.
நீக்குஇயற்கை அழகுக்காக அப்படி சொல்லி இருக்கலாம் என்று ஸ்ரீராம் சொல்லுவதான் என் கருத்தும்
நீக்குமதுரைத்தமிழனின் கருத்துரைக்கு நன்றி
நீக்குகடவுளின் நாடு
பதிலளிநீக்குஎன்பதை விட
மனிதர்களின் நாடு
மேலானது நண்பரே
நன்றி
தம +1
உண்மைதான் நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஇயற்கை வளம் கொஞ்சுவதால் அப்படிச் சொல்ல ஆரம்பித்து அதுவே பிரபலமாகியிருக்கலாம். சிங்காரச் சென்னை போல தான் சகோ.. அதிமுக்கியமாக ஒன்றும் படவில்லை எனக்கு.
பதிலளிநீக்குசிங்காரச் சென்னை ஆமாம் சகோ பெயரில்தானே ? நடைமுறையில் இல்லையே அருமையான விடயம் சொன்னீர்கள் நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅது என்னவோ மாதவா கேரளா கடவுள் தேசம் தான் அப்படி அங்கே கோவில்கள் பாராமரிப்பு தூய்மை நெறிமுறை என்று இன்றும் ஸ்பெஷல் விஜபி ஏதும்மில்லை ஆனால் தமிழ்நாடு இதுக்கு நேர் எதிர் காச்டு கொடுத்தால் எந்த கேள்ள்வியும் இல்லாமல் பூமாலை தோளில் விழும்! ]அதிவு ரசித்தேன் அடுத்த வருடம் நானும் கேட்டுப்பார்க்கின்றேன் டவுட்[[[[
பதிலளிநீக்குவருக நண்பரே கேட்டுச் சொல்லுங்கள்.
நீக்குஜி நாங்களும் இதை ஒரு பதிவில் சொல்லியிருந்தோம் உங்களுக்கும் நினைவிருக்கலாம். அதாவது எங்கு பார்த்தாலும் காட்ஸ் ஓன் கன்ட்ரி என்று சுற்றுலாத் துறையின் போர்டுகளில் காணப்படும் மட்டுமின்றி எப்போதும் அவர்கள் சொல்லுவதும் அதுவே.
பதிலளிநீக்குஅது இயற்கை அழகால் சூழப்பட்ட மாநிலம் என்பதால் இருக்கலாம் என்று சொல்லப்படுவதும் உண்டு மற்றவர்களால். அப்படிப் பார்த்தால் கர்நாடகா, ஹிமாச்சல், காஷ்மிர், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் இயற்கையில் தவழும் மாநிலங்கள் அவர்களும் சொல்லலாமே என்றும் கேட்டிருந்தோம். அதற்கு சுற்றுலா வாலிபர் நம் வெங்கட்ஜி சொல்லியிருந்த பதில் அழகு. கேரளத்தார் அதை வெளியில் சொல்லிக் கொள்கின்றார்கள் மற்றவர்கள் அதைச் சொல்லிக் கொள்வதில்லை அவ்வளவே என்று. உண்மைதான்...
சுற்றுலாத்துறையினர் வெளிநாட்டவரைக் கவர்வதற்கு ஏற்படுத்திய வாசகம் அது. பார்க்கப்போனால்...விவேகானந்தர் கேரளத்திற்கு வந்த போது சொன்ன வாக்கியம்தான் எங்கள் அடுத்தக் குறும்படம், விவேகானந்தரின் கேரளத்தின் விஜயம், செயின்ட் த க்ரேட். கேரளா iS a lunatic asylum என்று சொல்லியிருக்கிறார். சுவாமியையும் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எனவே, பல விடயங்களை மறைக்கவே இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இதை நாம் மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் தோன்றுகின்றது.
கீதா: மேற்சொல்லப்பட்டக் கருத்துடன் இதையும் சொல்லலாமோ என்று தோன்றுகின்றது. கேரளத்தில் சுத்தம் பராமரிக்கபடுகின்றது என்று சொல்லலாம். சாப்பாட்டின் விலையும் குறைவுதான். வயிற்றிற்கும் ஒன்றும் செய்வதில்லைதான். சுத்தம் சோறு போடும், சுத்தம் இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பார் என்று சொல்லுவதுண்டு இல்லையா அதனாலும் சொல்லுகின்றார்களோ என்றும் தோன்றுகின்றது.
வாங்க தங்களது பதிவின் போதே சொல்லி இருந்தேன் உண்மைதான் சுயபுராணக்காரர்கள்தான் அவர்கள் நிறைய விடயங்கதள் சொல்லி இருக்கின்றீர்கள்
நீக்குவிவேகானந்தரைப் பற்றிய குறும்படத்தை ஆவலுடன் எதிர் பார்த்து நானும்.
உண்மைதான் அங்கு கோயில்கள் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்
வணக்கம்
பதிலளிநீக்குஜி.
எல்லா இடத்தையும் சொல்லியுள்ளீர்கள் ஈழத்தை பற்றி சொல்ல வில்லையே...துளசிதரன் அண்ணா கொடுத்த விளக்கம் நன்று.. தாங்கள் பதிவில் சொல்லிய கருத்து எனக்கு புதிது..தற்போது அறிய வாய்ப்பு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் ஹி ஹி ஹி மறந்துட்டேன்.
நீக்குநாதஸ் திருந்திட்டானாம். அப்படியா, யார் சொன்னது? அவனே சொன்னான். இப்படித்தான் இருக்கு இந்த "God's own country" என்று மலையாளிகள் சொல்லிக் கொள்வதும்!!
பதிலளிநீக்குகேரளா கடவுளின் சொந்த பூமியா? அங்கே நடக்கும் செயல்கள் அப்படி எண்ண வைக்க வில்லை. தமிழகத்தில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கில் பசுக்கள் அங்கே கொண்டு செல்லப் பட்டு உணவுக்காக கொள்ளப் படுகின்றன. பாலூட்டிய தாய்........... பசு, உழைத்து குழந்தைகளை வளர்ப்பவர் தந்தை அது எருது. தாயையும், தந்தையையும் வெட்டித் தின்னும் மக்கள் வாழும் பூமி நிச்சயம் கடவுளின் சொந்த நாடாக இருக்க முடியாது.
ஒருசில விஷயங்களில் அவர்களை பாராட்டத்தான் வேண்டும். இயற்கையை பாழ் படுத்துவதில்லை, பசுமையை, இயற்கை வன விலங்குகளை, பாரம்பரிய கலைகளை, மருத்துவத்தை காத்து வருகிறார்கள். மற்றவர்களை ஏய்த்துப் பிழைப்பது இவர்களிடம் எனக்குப் பிடிக்காத ஒன்று.
வணக்கம் நண்பரே நல்ல கருத்தை முன் வைத்தீர்கள் மேலும் மலையாளிகளைக் குறித்து தங்களது மிகத்தெளிவான கருத்தை கண்டு வியக்கின்றேன்.
நீக்குதம 15
பதிலளிநீக்குNo....
பதிலளிநீக்குella thamavum ok akiduthu
வருகைக்கு நன்றி.
நீக்குநல்ல வேளை சகோ நான் அடுத்தவர்கள் இடத்தில் இல்லை.
பதிலளிநீக்குபகிர்வு அருமை.
ஹாஹாஹா வாங்க சகோ...
நீக்கு