இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

ஈட்டி மரம்


இறைவன் இந்தப் பிறவியை எனக்கு இந்த தருணத்தில் கொடுத்தமைக்கு முதற்கண் நன்றி காரணம் நேற்று எனது தாத்தாவோ, எனது தந்தையோ, நாளை எனது மகனோ, எனது பேரனோ பெறாத பெரும்பேறை நான் பெற்றிருக்கிறேன் ஆம் எனது மூதாதையர்கள்
Flight டில் பறந்ததில்லை,
Cool drinks குடித்ததில்லை,
Pizza சாப்பிட்டதில்லை,
Pant-Shirt, Chudidhar போட்டதில்லை,
Fume மெத்தையில் படுத்ததில்லை,
Lift டில் ஏறிப்போனதில்லை,
3D Cinema பார்த்ததில்லை,
Weston Toiletடில் போனதில்லை,  
Computerரை தொட்டதில்லை,
Shaver pathதில் குளித்ததில்லை,
இதைப் போலவே.... நாளை எனது சந்ததிகள்....  
மாட்டு வண்டியில் போகப் போவதில்லை,
கம்மங்கூழு குடிக்கப் போவதில்லை,
கேப்பை ரொட்டி தின்னப் போவதில்லை,
வேஷ்டி-சேலை கட்டப் போவதில்லை, 
கயிற்றுக் கட்டிலில் படுக்கப் போவதில்லை,
ஏணிப்படி ஏறப் போவதில்லை,
தெருக்கூத்து பார்க்கப் போவதில்லை,
கம்மாக்கரையில் ஒதுங்கப் போவதில்லை,
அரிச்சுவடியை தொடப் போவதில்லை
ஊரணியில் குளிக்கப் போவதில்லை,
ஆயினும் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வாழ்வாதாரத்தின் முக்கியமாக கொடுக்க வேண்டியதை கொடுத்தெடுத்து ஈ கூட நெருங்காத ஈட்டி மரம் போல் உயிரற்ற ஜடமாக்கி விட்டாயடா சண்டாளா !

Chivas Regal சிவசம்போ- (தனக்குள்)

நடக்கும் போது பார்த்தேனே.... அப்படீனா இதுதான் நடைபிணமா ?

61 கருத்துகள்:

  1. //Pant-Shirt போட்டதில்லை Chudithaar போட்டதில்லை.//

    சுடிதார் நானும் போட்டதில்லை! :P

    எதிர்காலச் சந்ததியினர் இழப்பதுதான் அதிகம் என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  2. ஐயா உண்மை தான் இந்த பிறவியை இறைவன் தந்தது.இப்பவே நிறைய பேருக்கு கேப்பை ரொட்டி என்றால் தெரிவது இல்லை.இனி வரும் தலையினர் என்ன பார்க்க போரார்களோ..!!!

    நல்ல பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
  3. மரபுகள் மங்கிப்போய் விட்டன.
    உறவுகள் உறங்கிப்போயின.

    பண்புகள் பறந்து சென்று விட்டன.
    வம்புகள் மலிந்து விட்டன.

    சென்றவைகளை நினைத்து வருந்தாமல்,
    செல்பிகளைப் பார்த்து மகிழும் காலமிது.

    வந்ததை வரவில் வைப்போம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாத்தா மிகவும் சரியாக சொன்னீர்கள்.

      நீக்கு
  4. கவித்துமான சட்டென முகத்தில் அறையும்
    இறுதி வார்த்தை
    என்ன பின்னூட்டமிடுவது
    என்னும் குழப்பத்தில் நான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே மேல்பகுதி பொதுவானதே
      கடைசி குறிப்பு எனக்கு மட்டுமே சொந்தம்.

      நீக்கு
  5. நீங்கள் சொன்னதையே உங்கள் பேரனும் சற்று மாற்றி சொல்லுவார். எனவே கவலை வேண்டாம். சுப்பு தாத்தா அவர்கள் சொன்னதுபோல வந்ததை வரவில் வைப்போம். சென்றதை செலவில் வைப்போம்.. இருக்கும் வரை மகிழிச்சியாய் இருப்போம். அவ்வளவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே காலமாற்றத்தில் வார்த்தைகளும் மாறலாம்தான்.

      நீக்கு
  6. கேட்ட படித்த விடயமானாலும் கில்லர் அவரது பாணியில் கொன்னுட்டார். அசத்தல்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்

    நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் ஜி.. வாழ்த்துக்கள் த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. கால மாற்றம், அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்துவித மாற்றங்களைக் கொண்டுவரும்... பெற்ற பிள்ளைகள் வளர வளர அவர்களுக்குள் மிகப்பெரிய இடைவெளியும் வளர ஆரம்பிக்கும் காலமிது அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இன்றைய பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடைவெளி நீள்கின்றது.

      நீக்கு
  9. பதில்கள்
    1. ஆம் இயந்திர மனிதனும் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றான் ஜி

      நீக்கு
  10. இன்றைய சந்ததியினர் இழப்புகளை அருமையாக உங்கள் பாணியில் சொல்லி இருக்கீங்க சகோ.

    பதிலளிநீக்கு
  11. மூதாதையர் உழைப்பால் கல்வி பெற்று வளர்சியை பெற்றுக்கொண்டோம்,
    வளர்ச்சி என்கிற பெயரில் நம் சந்ததிகளின் சுதந்திரத்தையும், பாரம்பரியத்தையும்
    பறித்துவிட்டோம், மிகத்தெளிவாக உணர்த்தியிருக்கிறீர்கள்
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியான கருத்தை பதிந்தீர்கள் நன்றி

      நீக்கு
  12. பெற்ற அம்மை அப்பனை கடவுளாக நிணைத்து திட்டுவதாக தெரிகிறது

    பதிலளிநீக்கு
  13. நிதர்சனமான உண்மை அண்ணா ஜி. நாங்க அனுபவித்ததை நினைத்தால், ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் கவலை. அவர்களுக்கு எங்க வாழ்க்கை முறைச்சொன்னால் நகைக்கிறார்கள். நிறைய இழந்துவிட்டார்கள் என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இன்னும் இழப்பார்கள் என்பதும் உண்மை குழந்தையை வளர்க்கும் சூழல்கூட மாறலாம் இதனால் அன்பு என்றால் என்ன என்று கேட்கும் நிலை உருவாகும்.

      நீக்கு
  14. இவ்வளவும் யோசித்தது உயிரற்ற ஜடமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜி உயிருடன் உறக்கும் போது என்றும் சொல்லலாம்.

      நீக்கு
  15. எதிர்காலச் சந்ததியினர் இது மட்டுமல்ல இன்னும் நிறைய இழப்பார்கள்... இணைய உலகம் அவர்களை சுருக்கி விடும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையே இணைய உலகமே முதன்மையான காரணம்.

      நீக்கு
  16. வணக்கம் ஜி !

    நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தங்கள் பக்கம் வருகிறேன்
    பொறுத்தருள்க !


    சீலம் தன்னில் வாழ்கின்ற
    சிறப்பைத் தந்த மாயோனும்
    ஆலம் பாலை அறிந்துண்டு
    அவதிப் பட்ட கதைபோல
    காலச் சுழற்சி எல்லோர்க்கும்
    கண்டிப் பாக இருக்குமெனும்
    மூலப் பொருளை உணர்ந்திட்டால்
    முரண்பா டில்லை வாழ்க்கையிலே !

    ஆடைக் கிலைகள் அரும்பட்டை
    அணிந்து வாழ்ந்த முன்னோரும்
    வாடைக் காற்றின் வரவெண்ணி
    வரப்பைக் கட்டிய பின்னோரும்
    பாடை போன தன்பின்னால்
    பண்பா டெல்லாம் துறந்திங்கே
    கோடை வெயிலும் குளிரடிக்கக்
    கொன்றோம் பழமை நவீனத்தில் !

    மாற்றம் ஒன்றே எல்லோர்க்கும்
    மாறா தென்னும் கருப்பொருளை
    ஏற்றம் கொள்ளும் இடந்தனிலே
    இட்டு நிரப்பி ஏறிட்டால்
    சீற்றம் இன்றிச் செல்லுமிடம்
    சிறந்து விளங்கும் வையத்தில்
    தேற்றம் இதுவே சிந்திப்போம்
    தேவன் படைப்பை மகிழ்விப்போம் !

    காலத்துக்கு ஏற்ற பதிவு ஜி ஆனாலும் விதிவழிப் பயணம்
    தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான் என்னும் பாடல் வரிகளை எண்ணிக் கொண்டே காலத்தைக் கடத்த வேண்டியதுதான் !

    தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
    தம+1


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே அழகிய கவிதையாக கருத்துரை அருமை ஆறுதலையும் கூடவே....

      நீக்கு
  17. உங்கள் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. உண்மையிலேயே சண்டாளர்கள்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  19. மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. மகிழ்ச்சியையும், வேதனையையும் உணர்ந்து பகிர்ந்து தந்துள்ள விதம் அருமை. காலங்கள் மாற மாற அனைத்தையும் நாம் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் விரிவான கருத்துரைக்கும் மன ஆறுதல் தந்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  20. “கொடுத்தெடுத்து” என்ற ஒற்றைச் சொல்லில் கனத்துப் போகிறது மனது. பட்டியலிட்டிருக்கும் இழப்பின் வலியை இந்தச் சொல் இன்னும் காத்திரமாய் சுட்டுகிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  21. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” - நன்னூல். எனவே மாற்றம் ஒவ்வொரு தலைமுறையிலும்.ஆறு மனமே,ஆறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  22. இழப்புகளும் பேறுகளும் இரு சந்ததிக்கும் ஒரேபோல் இருக்காது என்றே நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா காலமாற்றத்தில் இன்னும் மாறுதல்கள் வரும் என்பதும் உண்மையே.

      நீக்கு
  23. அன்பின் நண்பரே ..ஒரு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன் ..
    தாங்களும் தங்களுக்கு பிடித்த பதிவுகளை பதிந்து..வலைப்பதிவு உலகை வளர்க்க வீண்டுகிறேன்.

    http://naanselva.blogspot.com/2016/02/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  24. ஏக்கமும் ஆதங்கமுமாய் தலைமுறைகளின் இடைவெளியில் இன்றைய வாழ்க்கை நிலையை மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  25. வர வர கில்லர் ஜி சரியில்லை....மனசு வெறுத்தது போல் எழுதுகிறார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே உள்ளத்து உண்மைகளை வெள்ளத்தைப்போல் புறம் தள்ளும் உள்ளம் இது.

      நீக்கு
  26. காலம் செய்யும் கோலம் இதுவே!இன்னும் வரும் பல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  27. அன்பரே உள்ளங்கையில் உலகையே
    பார்க்கும் காலமிது....
    அட்வான்ஸாக இன்னும் பல வரும்.....

    பதிலளிநீக்கு
  28. ஈட்டி மரம் ...சிறப்பு

    பதிலளிநீக்கு
  29. இழந்தவை ஏராளம் தான்,,,அருமை சகோ,

    பதிலளிநீக்கு
  30. எதிர்கால சந்ததியினர் இழக்கப் போவது நிறையதான். இறந்தகால நம் மூதாதையர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்தாம். நாம் இவ்விரண்டு சந்ததியினர் நடுவிலும் உள்ளவர்கள். ஆனால் நாம் சொல்லுவது போல், நினைப்பது போல் இருக்கும் என்று தோன்றவில்லை. எந்த ஒரு மாற்றமும் ஓர் எல்லைக் கோடு வரைதான். சாச்சுரேஷன் பாயின்ட் என்று சொல்லுவோம் இல்லையா அப்படித்தான். உடையில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இப்போது முன்பு போன்ற நாகரீக உடைகள் தான் இப்போது மீண்டும் வந்துள்ளது. அது போல் மக்களும் மண் பாத்திரங்களை..அதாவது சட்டிப்பானைகளும் சரி, சைனா க்ளேயினால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களையும் வாங்கும் காலமாக மாறி வருகின்றது. இப்போது மீண்டும் செம்புப் பாத்திரங்களுக்கு கிராக்கி கொஞ்சம் கொஞ்சமாக வரத்த் தொடங்கி உள்ளதாக அறிகின்றோம். அது போல் முன்பிருந்த கரி அடுப்பு அதாவது க்ரில் இப்போது எலெக்ட்ரிக் வடிவத்தில் ஏனென்றால் கரி மரம் எறிப்பதினால் வருவதே...எனவே இப்போது கரி குறைவு. அது போல எலெக்ட்ரிக் சப்ளை தண்ணீர் அல்லது அதுவும் கரியைச் சார்ந்து...நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எல்லாமே மறு சுழற்சி முறையில் மாற்றங்கள் வரும். அது சரி நாம் எதற்கு எதிர்க்காலச் சந்ததியினரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டும்? நாம் தான் இருக்கப் போவதில்லையே நமக்கும் தெரியப் போவதில்லை. நம் காலத்தை நாம் மகிழ்வுடன் வாழ்ந்துவிட்டுப் போவோமே ஜி! இறந்தகாலம் வரப் போவதில்லை. நம்மால் முடிந்தவரை இயற்கையோடு ஒன்றுவோம். எதிர்காலம் நம் கையில் இல்லை. இந்த நிமிடம் நொடி மட்டுமே நம் கையில். இதை மகிழ்வுடன் வாழ்வோம்..மாற்றங்களை ஏற்றுக் கொண்டு...சரிதானே ஜி?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரமாண்டமான விடயங்களோடு கருத்துரை தந்து இருக்கின்றீர்கள் அருமை எனக்கு என்னமோ தெரியவில்லை கடந்தவர்களைவிட, நம்மைவிட, எதிர்கால சந்ததிகளைப் பற்றித்தான் அதிகம் கவலைப்படுகின்றேன்
      காரணம் இன்றைய அரசியல்வாதிகளின் நிலைபாடு சரியில்லை மகவும் மோசமான சூழலுக்கு கொண்டு செல்கின்றார்கள்
      வருகைக்கு நன்றி

      நீக்கு