இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மார்ச் 24, 2016

வெள்ளையபுரம், வெள்ளந்தி வெள்ளையம்மாள்

குறிப்பு - தமிழ்மணம் உடல் நலம் சரியில்லை Dr. D.D யை வலைவீசி தேடிக்கொண்டு இருக்கின்றேன் வழக்கமாக ஓட்டுப் போடும் நண்பர்கள் இணைக்க முயற்சி செய்ய வேண்டாம் நன்றி - கில்லர்ஜி

இவள்தான் வெள்ளையம்மாள் இந்த புகைப்படத்தைக் கண்டதால் எழுதிய பதிவு இப்படத்தை எனக்கு இன்றைய தேதி 24.03.2016 முதல் 99 வருடங்களுக்கு இரவல் கொடுத்த கோவைக்கவி பதிவர் சகோதரி திருமதி. பா. வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றி.

வெள்ளையம்மாள் கிராமத்துக் க(ட்டை)ன்னி மனதில் கள்ளமில்லாத உள்ளம் மூக்கும் முழியுமாக இருப்பாள் கன்னம் உப்பி இருக்கும் இவளைக் கிள்ளாதவர்களே இருக்க முடியாது அவ்வளவு வசீகரமானவள் பள்ளிக்குப் போனால் பார்ப்பவர் கண் பட்டுவிடும் என்றும் படித்து தன்னைவிட அறிவாளியாகி விடுவாளோ ? என பயந்து அவரது தந்தை பண்ணையார் பொன்னையா இவளை முதல் வகுப்பின் பாதியிலேயே நிறுத்தி விபரமாக இவளது சான்றிதழையும் வாங்கி வைத்துக் கொண்ட நல்ல இதயம் படைத்தவர் இவர் இரண்டாம் வகுப்பு பூர்த்தி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பண்ணையாருக்கு தொந்தியார் என்ற புனைப்பெயரும் ரகசியமாக உள்ளது காரணம் வருடம் முழுவதும் 8 மாத கர்ப்பிணி போல் இருப்பார் அந்த சுற்று வட்டாரம் தேவகோட்டை எல்கையை தொடும் வரையிலான18 பட்டிக்கும் இவர்தான் தலைவர், நீதிபதி எல்லாம் தீர்ப்புகளும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல்தான் இருக்கும் இவர் முடிவெடுத்தால் மாற்றம் இல்லை யாரும் விரல் நீட்டி எதிர்த்து வாய் பேசமாட்டார்கள் அவரைச்சுற்றி அல்லக்கைகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு சம்பளமே இவரின் வீட்டில் வயிறு புடைக்க உண்பதே... எதிர்ப்பவர்கள் புறமுதுகு காட்டி ஓடவேண்டியது வரும் ஆகவே யாரும் நாக்கு மீது பல்லுப்போட்டு பேசமுடியாது ஆனால் ? தேவகோட்டைக்குள் கால் வைக்க முடியாது என்பது வேறு விடயம் ஒருக்கால் வைத்தால் ? கால் இருக்காது கோடரி வெட்டு விழும் என்று அவர் காது படவே பேச்சு வழக்கும் உண்டு ஆகவே இவருக்கு தேவகோட்டையை நினைத்தாலே தொடை நடுங்கும் காரணம் தேவகோட்டை கில்லர்ஜி வகையறாக்கள் சொந்தம் விட்டுப் போகக்கூடாது எனக்கருதி அவரது தங்கை கல்யாணியின் மகனுக்கு 250 பவுன் நகையை போட்டு மாவட்டமே சிறக்க மணம் முடித்துக் கொடுத்தார் ஐ.டி முடித்து விட்டு ஒரு பெரிய்ய்ய்ய கம்பெனியில் ஒரு அமௌண்டை தட்டிச்செல்லும் மாப்பிள்ளையுடன் கூட்டுக் குடும்பமாய் சென்னையில் வெள்ளையம்மாள் வாழும் வாழ்க்கையை இதோ காண்போம் வாருங்கள்.

மச்சான் இன்னைக்கு ஆப்பீசு முடிஞ்சு எப்போ... வருவீங்க ?
ஏண்டி. உங்கிட்டே எத்தனை தடவை சொல்றேன் பட்டிக்காட்டுத்தனமா மச்சான்’’னு சொல்லாதே அத்தான்’’னு கூப்பிடுனு... ?

எனக்கு அது வரமாட்டுது மச்சான்...
எது வரமாட்டுது ?

நீங்க சொன்னீயளே அதான்.
ஏண்டி... அதான் வருது இடையிலே ’’த்’’ போட்டு சொல்ல முடியாதா ?

எங்க ஊருல மச்சான்’’னுதான் சொல்லுவோம்.
அது உங்க ஊரு வெள்ளையபுரத்துல இது சென்னை அழகா அத்தான் அப்படினு கூப்பிட்டாத்தான் மரியாதை ஆஃபீஸ் ஃப்ரண்ட்ஸ் வர்ற நேரம் எல்லாம் நீ மச்சான், மச்சான்’’னு கூவுறதை கேட்டுப்புட்டு ஆஃபீஸுல எல்லோரும் கிண்டல் பண்றாங்க...

வேற எபடடி மச்சான் கூப்பிட.. ?
அதான் சொல்றேன்ல சொல்லு பார்ப்போம் அத்தான்.

அத்... து... தான்
அடியே கூமுட்டை கூப்பிட்டா மூன்றெழுத்து இல்லைனா ஐந்தெழுத்து நான்கு எழுத்துல வராதா ? மறுபடி சொல்லு அத்தான்.

அத்...தே...த்தான்.
ம்ஹும் ஆறெழுத்து... நான் சொல்லுற மாதிரியே சொல்லு.... அ
த்
த்
தா

ஆத்தாடி அத்தா சொல்லக்கூடாது முஸ்லீம் வீட்டுலதான் அப்பாவை அப்படி கூப்புடுவாங்க....
அடி வெள்ளையபுரத்து வெளங்கா மட்டை ஏண்டி அவசரப்படுறே ? சொல்லுவேன்ல... அத்தா இல்லடி அத்தான்டி.

அம்மாடி எனக்கு வராது மச்சான்
சரிடி நீ பேசாமல் என்னை பெயரைச் சொல்லி கூப்பிடு அதான் பிரச்சினையே இல்லை.

அய்யய்யோ... புருஷன் பெயரைச் சொல்லக்கூடாது.
எவன் சொன்னது உங்கழுத்துல போட்டுருக்கியே.. அதுக்குப் பேரென்ன ?

இது நீங்க கட்டுனது மச்சான் தாலி.
அடியே.. இவளே.. அது எனக்குத் தெரியாதா ? மத்ததெல்லாம் நிறைய மாட்டி வச்சுருக்கியே அதக்கேட்டேன்.

எதும் உங்களுக்கு வேணுமா மச்சான் ?
எனக்கு வேண்டாம்டி இந்தா இதுதான் இதுக்குப் பேரென்ன ?

செயினு மச்சான்.
முதல்ல இந்த மச்சான்’’னு சொல்றதை நிறுத்துடி.

சரி மச்சான்.
ஐயோ... உனக்கு இங்கிஷுல சொல்லத் தெரியுது அதையே தமிழ்ல தெரியாதா ?

அது வந்து... மச்சான் இதை தமிழ்ல சொன்னா... மச்சானோட பேரு வரும்னு எங்க அக்காதான் கல்யாணத்துக்கு முன்னேயே இங்கிலீச்செல்லாம் சொல்லிக் கொடுத்துச்சு.
அடேங்கப்பா. ஒங்க அக்கா எம். ஏ. பி. எட் முடிச்சவ.. கழுதை விட்டையிலே முன்விட்டை வேற, பின்விட்டை வேறயா ஏண்டி இப்படி கழுத்தை அறுக்குறீங்க...?

ய்யேன்... மச்சான் கோபப்படுறீங்க ?
பின்னே என்ன... அத்தான்னு சொல்லத் தெரியாதா ?  

அப்ப மாமானு சொல்லவா  மச்சான் ?
எங்க அப்பாவை எப்படிக் கூப்பிடுவே ?

மாமா’’ன்னு..
ஏண்டி நானும் மாமா எங்க அப்பனும் மாமாவா ?

அப்ப அவுங்களை பெரிய மாமானு கூப்பிடுறேன் மச்சான்.
ஆமாடி அவரு பெரிய மாமா, நான் சின்ன மாமா, எங்க அண்ணனை நடு மாமானு கூப்பிடு வெளங்கிடும்.

ய்யேன் மச்சான் இதுக்குப் போயி இவ்வளவு பிரச்சனை பண்ணிறீங்க ?
அய்யோ.. இப்படிக் கொல்றாளே... இங்கே பாருடி கடைசியா சொல்றேன் என்னை பெயரைச் சொல்லி கூப்பிட முடியுமா... முடியாதா ?

சொ...சொல்றேன்.. மச்..சான்...
ம்.. ம் சொல்லு சங்கிலி.

சங்.... அய்யய்யோ குலதெய்வத்துக்கு ஆகாது மச்சான்.
இங்கே பாருடி நீ இப்பச் சொல்லலை உங்க வீட்டுலதானா கொண்டு போயி விட்டுட்டு வந்துடுவேன்.

அய்யய்யோ வேண்டாம் மச்சான் இல்லைனா.. வேற பேரு சொல்லிக் கூப்பிடுறேன் மச்சான்.
அதெப்படி வேற பெயரைச் சொல்லிக் கூப்பிடுவே... அது தப்பில்லையா... சரி சொல்லு பார்ப்போம் ?

இந்த டி.வி பொட்டியிலே கிரிக்கிகிட்டு வெள்ளாடுவாங்கள்ல அந்த பேரு....
என்ன சொல்றே... கிரிக்கிகிட்டு வெள்ளாடு.... மே... மே.. அப்படினு கூப்பிடுவியா ?

இல்லே மச்சான் கையிலே மட்டைய வச்சுக்கிட்டு நடுவாள.. நின்னு வெள்ளாடுவாங்களே... எல்லாரும் சுத்தி ஒக்காந்து பார்ப்பாங்க...
ஓஹோ கிரிக்கெட்டா சரி அது எந்தப் பெயரைக் கூப்பிடுவே ?

மச்சான் பேரு மாதிரியே ஒராளு வெள்ளாடுவாரு..
என்னை மாதிரி எவன்டி மீசை வச்சு கிரிக்கெட்டு விளையாடுறான் ? தாடி வச்சவன் இருக்கான்.

மச்சான் அந்த ஆளுக்கு மீசையே இல்லே மொழுக்கட்டீனு இருப்பாரு... பேருகூட குழி குழினு சொல்வாங்க...
ஏண்டி... கங்குலி’’யை சொல்றீயா ?

ஆமா மச்சான் அந்தப் பேருதான்.
ஏண்டி... விளங்காதவளே... சங்கிலி பொண்டாட்டி’’யை நீ கங்குலி பொண்டாட்டி’’னு சொல்லிக்கிறேனு சொல்றியே வெட்கமா இல்லை.

என்ன மச்சான் இப்படிச் சொன்னாலும் சண்டைக்கு வர்றீங்க ?
இப்படி வெள்ளந்தியா இருக்காளே... என்ன செய்யிறது ச்சே ’’மனசு’’ சே. குமாருக்கு தெரிஞ்சா ’’வெள்ளந்தி மனுசி’’னு தொடர் எழுத ஆரம்பிச்சுடுவாரே... அய்யோ சொக்கா நான் என்ன செய்யிவேன் படிக்காதவளைக் கட்டிக்கிட்டு இவ்வளவு அவதியா இருக்கே...

என்ன மச்சான் உட்கார்ந்துட்டீங்க... ஆப்பீசுக்கு போகலையா ?
ஆமாடி காலையில ஆரம்பிச்சு விளக்கம் சொன்னேன் மணி இப்ப 11.30 ஆச்சு இனி போயி கிழிக்க... போடி உள்ளே போயி உன் வேலையை பாரு இனிமே என்னை மச்சான்’’னே... கூப்பிடு அடுத்தவன் பொண்டாட்டி’’னு சொல்றதுக்கு மச்சானே பெஸ்ட்.

சரி மச்சான் ய்யேன் தலையை புடிச்சுக்கிட்டு இருக்கீங்க ?
உன்னோடப்பேசி தலைவலியே வந்துடுச்சு நான் கொஞ்சம் படுக்கிறேன். 

மச்சான் சுக்கு நச்சுப்போட்டு காப்பித்தண்ணி போட்டுத் தரவா ?
போடி அப்படியே கொஞ்சம் சயனைட்டும் கலந்து கொண்டு வா ! குடிச்சிட்டு சாயிறேன்.

சரி மச்சான் எங்கே வச்சுருக்கீங்க ?
எதை ?

இப்போ ஏதோ சொன்னீங்களே.. செயின்நட்டு... அப்படினு... ?
? ? ?

 காணொளி
 பதிவு பெரிதாக போயிருந்தால் மன்னிக்கவும் கில்லர்ஜி

59 கருத்துகள்:

  1. அத்தான்னு கூப்பிடச் சொன்னால் அயித்தான்னு கூப்பிடுவாகளே...

    :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அதையும் குறை சொன்னாலும் சொல்வானே சங்கிலி அத்தான்.

      நீக்கு
  2. வயிற்றுவலி வந்ததுத்கான் மிச்சம்....மச்சான் பாடு ஜாலிதான்..
    விடுங்க எப்படி கூப்பிட்டா என்ன..?
    கொஞ்சநாளில் சரியாய்டும்....

    தொந்தியார் வர்ணனை அபாரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே அவங்க பொண்டாட்டி-புருசன் நமக்கென்ன ? சரிதான்

      நீக்கு
  3. வணக்கம்
    ஜி

    அற்புதமான உரையால் கிராமத்து மனம் வீசுகிறது சொற்களில் அசத்தி யுள்ளீர்கள்... படமும் அற்பும் வீடியோவும் அற்புதம் தனபாலன் அண்ணா எங்கு உள்ளார் என்பது எனக்கு மட்டுமே தெரியும்....சொல்லமாட்டேன் ஆகா..ஆகா.ஹீ...ஹீ ஜீ...தனியாக முகநூலில் சொல்லுகிறேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும் ரசிப்பிற்க்கும் தகவலுக்கும் நன்றி

      நீக்கு
  4. வணக்கம் ஜி !

    சிரிக்க முடியல்ல ஜி அந்த மாமா மேட்டர் பெரிய மாமா சின்ன மாமா நடு மாமா தாங்கள் இப்படி அவஸ்தைப் பட்டீங்களா ஜி
    ம்ம் யார் கண்டது இல்லையா ஆமா அந்த செயின்நட்டு எனக்கும் கொஞ்சம் தேவை ஜி கிடைக்குமா ???????


    பேதைமனம் கொண்டவளும் பேர்சொல்ல மாட்டாமல்
    சீதைமனக் கூட்டில் சிதைகின்றாள் - கீதையவள்
    கற்றிருந்தால் வாழும் கலையறிந்து சீர்பெறுவாள்
    உற்றவனுக் கேற்றபடி ஊர்ந்து !

    என்ன செய்யலாம் ஜி அவள் படிக்காததால் இவ்வாறு இருக்கிறாள் சகித்துப் போனால் என்ன ஜி !

    அத்தனையும் அருமை ஜி ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே...
      சிரிக்க முடியலையா ?
      அப்படின்னா பதிவு சரியில்லையோ ?
      கவிதை வரிகள் நன்று ரசித்தேன்
      சகித்துப் போக என்னிடம் சொல்லக் காரணம் ?
      சங்கிலியிடம் போய் சொல்லுங்கள் கவிஞரே.

      நீக்கு
  5. தமிழ் மணத்துக்கு வந்திருப்பது சாதா காய்ச்சல் போல் தெரியவில்லை ,வயோதிக நோய் முற்றிய மாதிரியிருக்கே !இதுக்காக நாம் செயின்நட்டை தேடிப் போக முடியுமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வாங்க ஜி இதுக்கு எதற்கு செயின் நட்டு ?

      நீக்கு
  6. திருமதி வெள்ளையம்மாள் அவர்கள் சங்கிலி அத்தான் என்று சொல்லாமல் இருந்தார்களே...!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே அப்புறம் ரோட்டுல போறவங்க வந்து தர்மஅடி கொடுப்பாங்க....

      நீக்கு

  7. உங்க ஊரு தேவகோட்டையில் இப்படித்தான் பேசுவாகளா? குமாரின் வெள்ளத்தி மனுசியையும் இழுத்தாச்சா? நல்லாருக்கே! சயனட்டு,,, செயின் நட்டு?? ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இது எங்க ஊரு இல்லை வெள்ளையபுரத்து பேச்சு.

      நீக்கு
  8. சங்கிலிக்கு வந்த சங்கடம் நினைக்கவே சங்கடமாக இருக்கிறதே..

    எதுக்கும் சங்கிலியாண்டார்புரம் சங்கிலி கருப்ப சாமிக்கு குங்கிலியம் வாங்கி பூசை போட்டு பார்க்கவேண்டியது தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அங்கு ஒரு நேர்த்திக்கடன் வைத்தால்தான் சரியாகும் போல.... ஆவணி பிறக்கட்டும் பார்ப்போம்.

      நீக்கு
  9. பதிவின் ஆரம்பதில் உடல் உறுப்புகளை வைத்து எழுதியது அருமை.... ஆமாம் பாதி உறுப்புகளை காணவில்லையே சென்சரில் கட் பண்ணிட்டாங்களா என்ன?

    பதிலளிநீக்கு
  10. சென்னைக்கார மைச்சான் தன் மனைவிக்கு "அத்தான் என் அத்தான் அவர் என்னைத்தான் எப்படி சொல்வேனடி' என்ற பாட்டை டவுன்லோடு பண்ணி அதை குறைந்தது 100 தடவையாகவது கேட்க வைத்து பாட சொல்லி இருந்தால் இவ்வளவு கஷ்டம் பட்டு இருக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தெரிந்ததை எழுதினேன் மறைந்ததை மறந்தேன்

      நல்ல யோசனை சொன்னீர்கள் இப்பொழுதுதே சங்கிலிக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன் தகவலுக்கு நன்றி

      நீக்கு
  11. அத்தான் - னு சொல்லறதுக்கு இவ்வளவு அக்கப்போரா? கடைசி வரை நகைச்சுவை தன்மை குன்றாமல் உரையாடலை அமைத்திருப்பதும், வெள்ளையம்மாவின் சித்திரத்தை உடல் உறுப்புகளின் வழியாக வர்ணித்திருப்பதும் அற்புதம் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவாக கருத்துரை எழுதியமைக்கு நன்றி

      நீக்கு
  12. அதுதான் அத்தான் வரலையே.. அத்தானை அயித்தான்னு கூப்பிடச் சொல்ல வேண்டியதுதானே...
    என்னையும் கோர்த்து விட்டிட்டீங்களே... அது சரி....
    கலக்கல்...

    பதிவு பெரிசா இருந்தா மன்னிக்கனுமா... அப்போ நான் எழுதுறதெல்லாம்.... ஒவ்வொரு பதிவுக்கும் மன்னிப்பு கேக்கணுமோ இனி.... ஹி...ஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயித்தான்னு சொல்லச் சொன்னால் அவள் வாயில் சைத்தான் என்று வரலாம் என்ற பயம் சங்கிலிக்கு இருக்குமோ....

      நீக்கு
  13. வெள்ளந்தியாள் படிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் கணவன் பேரைச் சொல்லாததற்கு அது காரணம் என்று தோன்றவில்லை வேறு ஒரு செல்லப் பெயரில் கூப்பிடச் சொல்லி இருக்கலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நகரத்தில் வசிப்பவர்கள் அத்தான் என்பதை நாகரீகமாகவும், மச்சான் என்பதை அநாகரீகமாகவும் கருதுவது வழக்கமானதுதானே...

      நீக்கு
  14. அருமையான பதிவு

    மச்சான் சொல்லுகின்ற
    பொன் வாயாலே
    அதான் வருமாம்
    அத்தான் வராதாம்
    அப்படி என்றால்
    'த்' என்ற எழுத்து
    இடையே நுழைய மறுக்கிறதா?
    இப்படி
    தமிழை உச்சரிக்க வைக்க
    முயற்சி எடுத்தமைக்கு
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உச்சரிப்பு முக்கியம் இல்லையா ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. எப்படி பாஸ் இப்படிலாம் உங்களால அருமையா எழுதமுடியுது ?

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் நண்பரே இணைப்புக்கு சென்றேன் இதில் ‘’மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்’’ படித்து இருக்கின்றேன் மற்றவைகளை நிச்சயம் படிப்பேன் தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. மதுர தமிழன் சொன்னா மாதிரி நெறைய மிஸ் ஆகியிருக்கு...
    அத்தான்..., சொல்லியே செத்தான்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிச்சத்தையும் எழுதிடுவோம் நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் ஜி!
    எனது வாக்கை போட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வருகைக்கு நன்றி தமிழ்மணம் இணைய வில்லையே நண்பரே எப்படி ஓட்டுப் போடுவீர்கள் ?

      நீக்கு
  19. வித்தியாசமான உரையாடல்! காட்சி அருமை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. நண்பரே கொஞ்ச நாட்களுக்கு
    அப்புறம் நன்றாக சிரித்தேன்...
    வெள்ளந்தி வெள்ளையம்மாள்
    அருமையோ அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் விட்டு சிரியுங்கள் நண்பரே பிரச்சினைகள் பிரிந்து சாகும்

      நீக்கு
  21. பதிவின் ஆரம்பத்தில் புகைப்படத்திற்கான ஒப்புகையே அருமை. நாங்களும் எவ்வளவோ முயன்று பார்க்கிறோம். உங்களைப் போல் சிந்திக்கமுடியவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் கருத்துரையில் முடிவில் சொன்ன பொய் அழகு.

      நீக்கு
  22. தங்களால் மட்டுமே முடியும்நண்பரே
    தம வோட்டு அளித்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வருகைக்கு நன்றி தாங்கள் வரும் பொழுது சரி Dr. D.D செய்து விட்டார்

      நீக்கு
  23. கணவன் பெயரைஅந்த காலத்தில் சொல்லமாட்டார்கள். எங்கள் ஊரில் ஒருதடவை அரசு அலுவலர் ஒருவர் வந்து, ஒரு பெண்ணிடம் தங்கள் கணவர் பெயர் என்ன என்று கேட்டதற்கு அவர் ‘தரிசனத்தூர்’ பெயரைக் கொண்டது அவர் பெயர் என்றார். கேள்வி கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை. அக்கம் பக்கத்தில் கேட்டதற்கு அதற்கு பொருள் சிதம்பரம் என்றார்கள். (சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் நடப்பதால் அதை தரிசனத்தூர் என சொல்லியிருக்கிறார். இப்போதெல்லாம் அந்த கஷ்டம் இல்லை.

    ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அது ரோஜாதான். எனவே தாலி கட்டிய கணவனை அத்தான் என்றாலும் மச்சான் என்றாலும் ஒன்றுதானே. அதற்கு ஏன் அவர் கோபப்படவேண்டும். வெள்ளயபுரம் வெள்ளந்தி வெள்ளையம்மாள் சொன்னதில் தவறில்லை.

    பதிவில் வழக்கம்போல் உங்களின் குறும்பை இரசித்தேன்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் விளக்கவுரைக்கு நன்றி
      சிலருக்கு மச்சான் என்பதைவிட அத்தான் என்பது சங்கிலி போன்றவர்களுக்கு பிடிக்கின்றது என்ன செய்வது ?

      ஒரு விடயம் சொல்லட்டுமா ? எனது மனைவி என்னை அத்தான் என்றுதான் அழைப்பாள் நான் வேண்டுமென்றே... மச்சான் என்று சொல்லச் சொல்வேன் அவளுக்கு அதற்கு வெட்கமாக இருக்கும் இத்தனைக்கும் அவள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து தேவகோட்டை வந்தவள்.
      தங்களது கருத்து என்னை பழைய நினைவுகளை மீட்டி விட்டது.

      நீக்கு
  24. குமார் சொல்வது போல் தேவகோட்டை பக்கம் அயித்தான் என்று தானே அழைப்பார்கள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அத்தான் என்பதை அயித்தான் என்று கிண்டலுக்கு சொல்வது எல்லா ஊர் வழக்கத்திலும் உள்ளதுதானே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  25. Write comedy posts more. Nice post! This is second comment!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நன்றி முதலில் கருத்துரை வரவில்லையே...

      நீக்கு
  26. ஜி! அத்தான் என்று சொல்லுவது கஷ்டம் என்றால் அது என்ன ஒரு பாட்டு கூட உண்டே அயித்தையும் மாமனும் சொகம்தானா...என்று உங்கள் பகுதியிலெல்லாம் அயித்தை அயித்தான் என்று தானே சொல்லுவார்கள் இல்லையா? அது சரி மச்சானின் அம்மாவை எப்படி அழைத்தாள் வெ? அத்தை என்றால் அத்தான் அயித்தை என்றால் அயித்தான் வந்துவிடுமே...பாட்டாகப்பாடச் சொல்லியிருந்தால் அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் என்று பாடியிருப்பாளோ...விடுங்க ஜி அவங்க பாடு அது சரிதானே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் அவசியமில்லாத கேள்வி எல்லாம் கேட்க கூடாது வேண்டுமானால் வெள்ளையம்மாளின் சென்னை முகவரி தருகிறேன் நேரடியாக போய் கேட்டுக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  27. ஏதோ எழுபதுகளில் வெளிவந்த கறுப்பு - வெள்ளைத் திரைப்படம் பார்த்த உணர்வு. அந்தக் காலத்தில்தான் இப்படிப்பட்ட பெண்கள் இருந்தார்கள். :-)

    கதைக்கு முன்னால் நீங்கள் எழுதியிருந்த முன்னுரையில் தலையிலுள்ள உறுப்புகளின் பெயர்கள் வரும்படி அமைத்திருந்த விதம் வியப்பு. அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  28. தமிழ்மணத்தில் வாக்களித்தேன் நண்பரே! வாக்குச் சேர்கிறது. ஆனால், வாக்களித்தவுடன் 'உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது' எனும் வழக்கமான அறிவிப்பு வருவதில்லை. மாறாக வெற்றுப் பக்கமாக அப்படியே நிற்கிறது. உடனே நாம், வாக்குச் சேரவில்லை போலும் என நினைத்து மீண்டும் முயன்றால் 'உங்கள் வாக்கு ஏற்கெனவே சேர்க்கப்பட்டது' என வருகிறது. உங்கள் வலைப்பூவில் மட்டுமில்லை எல்லா வலைப்பூக்களிலும் இந்தச் சிக்கல் மாதக்கணக்காக இருக்கிறது. ஆக மொத்தத்தில் வாக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பிரச்சினையாகவே இருக்கின்றது தமிழ் மண வாக்கிற்க்கு நன்றி நண்பரே

      நீக்கு
  29. ஓ! இந்தப் படமா?...
    இது என்னது இல்லை.
    இது முகநூல் பூனே தமி;ழ் சங்கம் பட வரி எழுதத் தந்த படம்.
    அதுக்குள்ளெ எனது பெயா!....
    ஓ.கே ஏதோ பிழைத்துப் போங்கள்...ஆகா!...கா!!!....
    தேடிப் பிடித்திட்டேனே......
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி பதிவைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லையே... சரியில்லையோ.....

      நீக்கு
  30. ஹ ஹ ஹா!

    வணக்கம் நண்பரே!

    தமிழ்மணத்திற்கு உடம்பு சரியில்லை என்ற வரியிலேயே உங்கள் குசும்பை ஆரம்பித்துவிட்டீர்கள்.

    இலக்கியத்தில், ( நமக்கு வேறென்ன தெரியும்? ) கேசாதிபாதம்,பாதாதிகேசம் என்று சொல்வார்கள்.

    பொதுவாக, கடவுளைத் முடியில் தொடங்கி அடிவரை பாடுவதும் அடியில் தொடங்கி முடிவரை பாடுவதும் இதன் பொருள்.

    இங்கு வெள்ளையம்மாளை வைத்து ரகளை செய்துவிட்டீர்கள்..!!!

    அது சரி இந்தக் கதை உங்கள் நூல் தொகுப்பில் இருக்கிறதா?

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி

      ஆம் எனது நூலில் பகுதி வெளிவராதது, மிகுதி வெளி வந்தது இந்த கங்குலி பொண்டா மன்னிக்கவும் சங்கிலி பொண்டாட்டி வெ.வெ.வெ. எனது நூலில் இருக்கின்றா(ள்)ர்
      வருகைக்கு நன்றி

      நீக்கு