இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 15, 2016

வாக்காளப் பெருங்'குடி' மக்களே...


வாக்காளப் பெருங்குடி மக்களே... எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கின்றது ஆம் வயிற்றெரிச்சலாகத்தான் இருக்கின்றது அது என்னவென்று முடிவில் சொல்கின்றேன் எல்லா கட்சித் தலைவர்களுமே அடுத்த தலைமையை இழிவாக பேசி ‘’நான்தான் முதல்வர்’’ என்று சூழுரைக்கின்றார்கள் இவர்கள் என்னமோ யோக்கிய சிகாமணிகள் மாதிரி எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை மறந்து விடுவகின்றார்கள் இவர்கள் எல்லாம் தங்களது பலத்தை காண்பிக்க தகுதி இருந்தால் ? ? ? கட்சித்தலைவர்கள் அனைவருமே ஒரே தொகுதியில் போட்டியிடத் தயாரா ? அப்பொழுதுதான் யாருக்கு மக்களிடத்தில் மதிப்பு இருக்கின்றது என்பதை துல்லியமாக கணிக்க முடியும் எல்லா இடங்களிலுமே தலைமைகள் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகின்றார்கள் இதுதான் நமது தமிழ்நாட்டின் சாபக்கேடு இதற்கு காரணமென்ன ? நன்றாகவே தெரிகின்றது இது ஊழல் பெருச்சாளி என்று இதுதான் சந்தர்ப்பம் என்று அனைவருமே தலைவர்களை மொத்தமாக சேர்ந்து ஆப்பு அடிக்க வேண்டும் இந்தக்கருத்து எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இருக்கின்றது இதனைக்குறித்து நண்பர்கள் பலரிடமும் இதையே பேசியிருக்கின்றேன் மேலும் ’’எமக்கு யாமே’’ என்று தனியாகவும் பேசிக்கொண்டு இருந்திருக்கின்றேன் (சமீபத்து பதிவொன்றில் கவிஞர் ஐயா திரு. ரமணி. S அவர்களும் இதனை வலியுறுத்தி இருந்தார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றேன்) இதை நமது வாக்காளர்கள் விளங்கி கொள்வதில்லை இந்த தலைவர்கள் எல்லோருமே ‘’நான்தான் முதல்வர்’’ ‘’நான்தான் முதல்வர்’’ என்று கூப்பாடு போடுவதை கேட்கும் பொழுது எனக்கு சுமார் 35 வருடங்களுக்கு முன்பு நான் ராணி வாரஇதழில் படித்த ஒரு துணுக்கு எனது நினைவோட்டங்களில் நுழைந்து செல்கின்றது எல்லோரும் இந்நாட்டு மன்னர் இதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை என்பதையும் இங்கு சொல்லிக்கொள்ள நான் கடமைப்பட்டு இருக்கின்றேன். இதோ இதுதான்.

பாபு-
ஹாஹாஹா நான் இந்த உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்.
கோபு-
ஹாஹாஹா நான் விற்றால்தானே... ?

குறிப்பு - இந்த இடம் மனநல மருத்துவமனை என்பதும், இவர்கள் இருவருமே இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளாக இருக்கும் நேபாளிக்காரர்கள் என்பதையும் நான் நினைவு படுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றேன் - கில்லர்ஜி

அரசியலில் தனது வாழ்க்கையை நுழைத்து பல ஆண்டுகளாக இதே தொழிலில் (தொழில்தானே) காலத்தை கடத்தும் அதேநேரம் எல்லா நெளிவு சுழிவும் தெரிந்தவர்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது இப்படிப்பட்டவரை சாதாரண நடிகன் தேர்தலில் வெல்ல முடிகின்றது அதற்காக நடிகனாக இருப்பவனுக்கு உலக அனுபவம் தெரியாது என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல ! இவ்வளவு ஓட்டும் விழுந்ததற்கு அடிப்படை காரணம் என்ன ? இதுதான் எமது கேள்வி ஒரு ஈர்ப்பு சக்தி அதாவது திரையில் பல நன்மைகளை செய்தவர் நிஜத்திலும் செய்வார் என்ற அறியாமையே அன்றி வேறில்லை திரைப்படத்தில் வெறும் காலால் 50 பேர்களை எத்தியே வீழ்த்தியவர் கடந்த சென்னை வெள்ளத்தில் மூழ்கப் போனவரை இந்திய ராணுவவீரர்கள் கயிற்றை இறக்கி தூக்கினார்கள் என்பதை தமிழ்நாட்டு எந்த ராசாவும் மனசிலிருந்து மறந்து விடக்கூடாது என்பதையும் நான் தெளிவு படுத்தக்கடமைப்பட்டு இருக்கின்றேன் இருப்பினும் மறக்கின்றார்கள் இது தமிழ்நாட்டில் மட்டும் அதிக சதவீதமாக இருப்பதுதான் மேலும் வீழ்ச்சிக்கு காரணம்.

ஒவ்வொரு தலைவர்களும் பழையதை மறந்து விட்டு எவ்வளவு பகிரங்கமாக பொய் பேசுகின்றார்கள் காரணம் என்ன ? மக்களும் மறந்து விடுகின்றார்கள் என்பது அவர்களின் திண்ணமான எண்ணம் உண்மையும் அதுதானே... தமிழா முகத்தால் மட்டும் விழித்தால் போதாது இனியெனும் அகத்தால் விழி இல்லையேல் வீழ்ந்திடுவாய் குழியில்.

நட்பூக்களே... எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கின்றது என்று சொன்னேனே காரணம் தெரியுமா ? நான்தான் முதல்வர் என்று சொல்கின்ற அனைத்துக் கட்சித்தலைவர்களும் ஒன்றை மறந்து விட்டார்கள் அதை நான் இங்கு நினைவுறுத்த கடமைப்பட்டுள்ளேன் ஆம் இவர்கள் அனைவருமே ’’அபுதாபியில் ஒருவன் இருக்கின்றானே’’ என்பதை மறந்து விட்டார்கள் என்பதே ஆம் இதை மறந்து விட்டார்கள் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கின்றது நட்பூக்களே...


முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு நான் ஏற்கனவே சொல்லி இருந்த இரும்புக்குதிரை பதிவில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அல்ல அக்கப்போரானது என்று ஆகவே என்னை குறை சொல்ல மாட்டீர்கள் என்பதை இங்கு நினைவுறுத்த கடமைப்பட்டு இருக்கின்றேன் கில்லர்ஜி

53 கருத்துகள்:

  1. மக்களை மடையராக நினைத்து விட்டார்கள்.. ஆனாலும் கிராமங்களில் பழமொழி ஒன்று சொல்வார்கள்.. அது தான் நினைவுக்கு வருகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அந்த நாட்டாமை பழமொழியை சொல்லி இருக்கலாம் உண்மை அதுதானே....

      நீக்கு
  2. ரசித்தேன். அதே மே 16 ஆம் தேதியில் பதிவர்களுக்குள் ஒரு வாக்குப் பதிவு நடத்தி விடுவோம் நண்பரே... நான் உங்களுக்கு வோட்டுப் போடுகிறேன். நீங்கள்தான் முதல்வர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்ல யோசனை செய்திடலாம் தங்களது ஆதரவுக்கு நன்றி

      நீக்கு
  3. தங்களுக்கே என் வாக்கு நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  4. நான் தான் முதல்வர்...கோஷம் தான் இப்போ...எங்க பார்த்தாலும்.

    நல்லா சொல்லி இருக்கீங்க

    நகைச்சுவை சூப்பர்....

    இரண்டுக்கும் போட்டாச்சு...ஓட்டு...

    மறக்குற வியாதியை அவங்க மறக்காம செயல்படுத்திக்குறாங்க தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இன்றைய நிலை இப்படித்தானே இருக்கின்றது வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. எனது வாக்கு கில்லர்ஜி முதல்வருக்கே....

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கே ஒட்டு.
    எந்தத் தொகுதிலே நிற்கிரீக ?


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாத்தா நலமா ? தொகுதியை விரைவில் அறிவிப்பேன் பதிவர்களுடனும், ஆண்டவனுடனும் மட்டுமே கூட்டணி

      நீக்கு
  7. நீங்கள் ஓட்டு போட்டு நான் அடைந்த ,தமிழ்மண 'முதல்வன் 'பதவியை தக்க வைக்கவே என்னால் போதும் போதும் என்றாகி விட்டதால் ,அந்த முதல்வன் பதவிக்கு நான் உங்களுக்கு வழிவிடுகிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி நீங்கள் சொல்வது தமிழ் மணம் வாக்கு, நான் கேட்பது தமிழனின் மானம் காக்கும் வோட்டு
      வேட்டு வைக்க மாட்டீர்களே....

      நீக்கு
  8. அன்புள்ள ஜி,

    முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே...


    முதல்வனே என்னைக் கண் பாராய்...! தங்களையும் நாங்கள் எளிதில் பார்க்கக்கூடிய முதல்வராக இல்லையே! இருந்தாலும் ஓட்டுப் போடுகிறேன்.

    இதோ த.ம. ஆறு மனமே ஆறு.

    வாழ்த்துகள்...!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே நலம்தானே... பார்த்து நாட்களாகி விட்டது தேர்தலுக்காவது வாருங்கள் நன்றி

      நீக்கு
  9. தலைவர்கள் முதலமைச்ராக,
    கட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்காக
    போராடும் போர்ச்சமரில்
    மக்கள் வாக்குகள் தான்
    (மே 16 இல்) தீர்ப்புக் கூற இருப்பதை
    நினைவூட்டியதிற்கு நன்றி!

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

      நீக்கு
  10. எங்க நிக்கிறிங்க...( தரையிலதான்னு சொல்லாதீங்க...)

    ஓட்டு உங்களுக்குத்தான்....

    அடுத்த முதல்வர் நீங்கதான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரையிலதான் ஹிஹிஹி விரைவில் அறிவிப்பு வரும் ஆதரவுக்கு நன்றி

      நீக்கு
  11. கண்டிப்பாக நீங்க தான் அடுத்த முதல்வர் சகோ. எனது ஓட்டு உங்களுக்கு தான்.

    பதிலளிநீக்கு
  12. வருக ! வருக! நல்லாட்சி தருக! ஓட்டு உங்களுக்கே!.

    பதிலளிநீக்கு
  13. நல்ல நினைவாற்றல் உங்களுக்கு. அப்போதைய ராணி இதழில் படித்தது இன்னும் நினைவிருக்கிறதே. தவிரவும் பொருத்தமாகக் கொண்டுவந்து உரிய இடத்தில் சேர்த்துவிட்டீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நான் எதையுமே அவ்வளவு சுலபமாக மறந்து விடுவதில்லை வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. தமிழ்மண வாக்கை போட்டுவிட்டேன்.. தமிழ்மாணத்தை காக்க தேர்தலில் குதித்து இருப்பதால் பாதுகாப்புக்கு நீச்சல் படையை நியமித்துக் கெள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்ல தருணத்தில் ஞாபகப்படுத்தீனீர்கள் மிக்க நன்றி

      நீக்கு
  15. உங்கள் இடுகை எப்போதுமே தனித்துவமானதாக இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் போர் நடந்தால் மன்னர் எதிர் மன்னர், தளபதி எதிர் தளபதி, படை வீரர் எதிர் படைவீரர் என்றுதான் போர் புரிவார்கள் என்று பல சரித்திர நாவல்களில் படித்த ஞாபகம் உள்ளது. ஆனால் நம்ம காகித புலிகள் வசதியான இடத்தில் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள். முதல்வர் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே தொகுதியில் பேட்டியிட்டால் தான் நல்லா இருக்கும். எல்லோருடைய என்னமும் அதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலம்தானே.... அருமையான கருத்தை முன் வைத்தீர்கள் இது எனது நெடுநாளைய கனவு தொடர்ந்து வாருங்கள் தேர்தல்வரை... நன்றி

      நீக்கு
  16. நீங்களே அடுத்த முதல்வரா இருங்க! நீங்க நின்னா/உட்கார்ந்தா என்னோட, எங்க குடும்பத்தோட ஓட்டு உங்களுக்குத் தான்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா வாங்க, வாங்க திருச்சி தொகுதியில் மலைக்கோட்டைக்கு சென்று வர கேபின் கார்கள் இயக்கப்படும் முதல் கையெழுத்து பிள்ளையாருக்கே...

      நீக்கு
  17. யார்யாரோ தேர்தலில் நிற்கிறார்கள் வெற்றி பெறுகிறார்கள் முதல்வராகவும் நினைக்கிறார்கள் அப்படி இருக்க இவர்களை விட கில்லர்ஜி எதில் தாழ்த்தி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி

      நீக்கு

  18. கடைசியில் சொன்னீர்களே அது பலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். சீக்கிரம் முடிவெடுங்கள்! நாங்கள் உங்கள் பக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ஆதரவு இருக்கும் பொழுது எனக்கென்ன மனக்கவலை.

      நீக்கு
  19. உங்களுக்கே என் ஓட்டு!

    பதிலளிநீக்கு
  20. வாங்க நினைச்சோம் உங்க வயித்தெரிச்சல் அதுவாத்தான் இருக்கும்னு. ஆனா நல்ல வயித்தெரிச்சல்தான் ஜி. அது சரி சொல்லவே இல்ல...நீங்க நிக்கறீங்கனு....அதெல்லாம் சரி நீங்க வெளிய வராமலேயே வேணாலும் ஆட்சி பண்ணுங்க, படுத்துக்கிட்டே வேணாலும் பண்ணுங்க, எங்க நிக்கறீங்கனு சொல்லுங்க, கட்சியா சுயேச்சையானு சொல்லுங்க....உங்க தொகுதில நாங்க இல்லைனாலும் உங்களுக்கு ஓட்டு போட்டுடறோம்....ஒரு நல்ல தலைவர் கிடைச்சாருன்னாவது மகிழ்வோம்...ஏக் தின் கா ராஜா நு டெமோ பண்ணிக் காமிச்சுருங்க அப்புறம் என்ன...தமிழ்நாடே உங்க பின்னாடிதான்.. ஒண்ணே ஒண்ணு மக்கள் நம்புவாங்களானு தெரில..நீங்க ஊழலற்றவர்னா நம்பமாட்டாய்ங்களே அதுதான் கவலையா இருக்குது ஜி...மக்கள் அந்த அளவு ஊழல் அம்னீஷியாவுல இருக்காங்க...ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க எல்லாம் சரி கடைசியில் ஒருநாள் முதல்வரா ? இதுக்கா இவ்வளவு முயற்சி நான் சுயேட்சைதான்.

      நீக்கு
  21. வணக்கம் ஜி !!!

    என்னது பொன்னான வாக்கு கோடாரிக்கா ?????????//
    அப்போ கில்லரும் அரசியலில் குத்த்தாச்சா ? ஜி தங்கள் பதிவுகளை இருமுறை படித்தால்தான் அதன் உட்பொருள் விளங்கும் இதுவும் அதுபோலவே நன்றி ! மக்கள் விழித்துக் கொண்டால் நல்லதே !

    கில்லரின் ஆதங் கத்தால்
    கிளர்ச்சிகள் எழுந்து மக்கள்
    வல்லரின் கையில் ஆட்சி
    வழங்கிட வேண்டும் நீதி
    மல்லரின் கம்பம் போலே
    வழுக்கிடாத் தன்மை கொள்ளப்
    பொல்லரின் சூழ்ச்சி எல்லாம்
    பொடிப்பொடி ஆகும் அன்றோ !

    தொடர வாழ்த்துகள் ஜி வாழ்க வளத்துடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே கவிதையால் கருத்துரை தந்திர் நன்று, நன்றி

      நீக்கு
  22. ஐயோ ஐயோ வாக்குப் பட்டை வம்பிழுக்குதே ஜி !
    காலம் தாழ்த்தி வாக்களித்துப் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  23. வாங்குவது கிடைப்பது இலாபம் என்று சிந்திக்கும் வரை இங்கு எல்லாமே வியாபாரம் தான் அதுக்காக நடிகன் மாநிலம் ஆளக்கூடாதா! மாற்றம் தான் விடிவு தரும் ஐயா எனக்கு அங்கு ஓட்டு இல்லை[[

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நடிகன் நாடாளக்கூடாது என்பதல்ல எமது கருத்து அவன்தான் ஆளமுடியும் என்று மக்கள் நம்புவதை நான் ஏற்கவில்லை வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  24. அருமை பெருங்குடி மக்களை நம்பித்தான் தேர்தலே இருக்கிறது கில்லர்ஜி தேர்தல்லா நின்னா தமிழ்மண ஒட்டு மாதிரி எங்கள் ஒட்டு உங்களுக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் ஆதரவுக்கு நன்றி

      நீக்கு
  25. உண்ணும் உணவு தொண்டைக்குழி மட்டில்... பேசிய சொல் காற்றோடு.... மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்வார்...தம் மக்கள் நலம் ஒன்றே என எண்ணுவார்... மறதி எங்களின் பிறப்புரிமை அதற்காக எங்கள் தன்மானத்தலைவன் அன்னிய மண்ணிலிருந்து கொடுக்கும் குரல் எங்கள் காதுகளில் கேட்கவில்லை.... கேட்டாலும் விழாதது போல் தான் இருப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே கேட்காத காதுக்கு நான் சொல்லி என்ன செய்ய நண்பரே.. வருகைக்கு நன்றி

      நீக்கு
  26. தகுதியுள்ள அரசியல் தலைவர்களையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் புகழ் ஒன்றை மட்டுமே தகுதியாகக் கொண்ட ஒருவருக்கு அரசியல் களத்தில் முதன்மை தருவதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

    ஆனால் அதே நேரம், எல்லா அரசியலாளர்களுமே கெட்டவர்கள் என்கிற உங்கள் கருத்து முற்றிலும் தவறானது. இதே கருத்தைத்தான் சில நிமிடங்களுக்கு முன் ஜி.எம்.பி ஐயாவின் பதிவிலும் தெரிவித்து வந்தேன். அதை அப்படியே படியெடுத்து இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

    "எல்லா அரசியலாளர்களும் கெட்டவர்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லகண்ணு, வைகோ, தமிழருவி மணியன், பழ.நெடுமாறன், தோழர் தியாகு என நல்ல தலைவர்களும் நிறையவே இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் இறங்காத, ஆனால் அரசியலில் இருக்கிற தலைவர்களான பெ.மணியரசன், குளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், திருமுருகன் காந்தி என இளந்தலைமுறை அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள். எனவே, எல்லாருமே கெட்டவர்கள் என்பது சரியான பார்வை இல்லை என்பது என் கருத்து. என்னைப் பொறுத்த வரை, தமிழ்நாட்டு அரசியலில் இன்றிருக்கும் மாபெரும் பின்னடைவு என்னவெனில் நல்ல அரசியலாளர்களுக்குத் தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதுதான். இதுதான் கருணாநிதி, செயலலிதா ஆகிய இருவர் மட்டுமே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர்க காரணமாக உள்ளது. "தமிழர்களுக்கிடையில் ஒற்றுமையில்லை... ஒற்றுமையில்லை" எனக் காலங்காலமாகப் பல்லவி பாடும் தலைவர்கள் முதலில் தங்கள் முதுகைக் கொஞ்சம் தேய்த்துக் கழுவிக் கொண்டால் தமிழ் சமூகமும் தூய்மையடையும், உருப்படும்".

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஐயாவின் தளத்தில் நானும் படித்தேன்
      மக்கள் மனம் மாறும்வரை யாருமே தமிழ் நாட்டுக்கு நல்ல ஆட்சியை கொடுக்க முடியாது இதுதான் நடைமுறை உண்மை மாற்றம் வேண்டும்தான் அது மக்கள் மனதில்.

      விரிவான கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  27. வணக்கம்
    ஜி
    வருங்கால மந்திரி வாழ்க முரளி அண்ணா சொன்னது போல நீங்கள் கேளுங்கள் நான் கள்ள வாக்காவது போடலாம் இவை எல்லாம் இந்தியாவில் கைவந்த கலை ஜி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  28. கவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு