முன்னறிவிப்பு - புகைப்படத்திற்கும், பதிவுக்கும் சம்பந்தமில்லை காரணம் எனக்கு
அரசியல் தெரியாது - கில்லர்ஜி
டேய்......
ராமசாமீஈஈஈஈஈஈஈஈ...... பஞ்சாயத்து வெசத்தை குடிச்சிட்டாருடா.....
என்னாது..................
ஐயோ...... ஐயோ..... நான் என்னாத்தை செய்யிவேன்.... நல்லாயிருந்த மனுசன் இப்படிப்
பண்ணிட்டாரே.......ஏஏஏஏஏஏஏஏஏஏஏ......
விசயத்தை
கேட்டு கிராமமெங்கும் ஒரே பரபரப்பு ஊரைச்சுற்றி கடனை வாங்கி வச்சுருந்த மனுஷன்
இப்படி விசத்தை குடிச்சா கடனை யாருட்டே கேட்கிறது மூத்த பொண்டாட்டி
முருகாயி வாயைத் திறந்தாள்ல் ? எட்டூரு எம்பாட்டு கேட்கும்
என்று வடிவேல் பாடியது போலவே இருக்கும், ரெண்டாவது பொண்டாட்டி ரெங்கநாயகி வாயைத்
திறந்தாள்ல் ? கேட்டவன்
காதுல குருதி ஒழுகும் அவ்வளவு ஒழுக்கமான வார்த்தைகள்ல் வந்து விழும் பஞ்சாயத்து
பஞ்சவர்ணம் கொஞ்சம் கோக்குமாக்கானவரு பந்தாவாக போவார், வருவார் அழகாக பேசி கடன்
வாங்கி விடுவார் திருப்பிக் கொடுப்பது என்னவோ இவருக்கு பாகற்காய் கடிப்பது போலவே
இருக்கும். பஞ்சாயத்துகளை வைத்து நாலு காசு பார்த்து வாழ்க்கையை கடத்துபவர்.
சுற்று வட்டார பதினெட்டு கிராமத்தாரும் வயக்காடு, வரப்புக்காடு என்று சண்டையில்
வருபவர்கள் காவல் நிலையத்துக்கோ, நீதி மன்றத்துக்கோ போகமாட்டார்கள் நேராக
பஞ்சவர்ணத்திடம்தான் வருவார்கள் அடுத்த இரண்டு வருடங்களில் வயல் முருகாயி பெயரில் பத்திரமாகி
விடும், பிறகு ரெங்கநாயகி பெயரில் ஆரம்பித்தது. வயலில் சண்டை போட்டு கட்டி
உருண்டவர்கள் பிறகு கோயிலில் அங்கப் பிரதட்சிணையாக உருண்டு கொண்டு இருப்பார்கள்
நீதானா கூலியைக்கொடு என்று. நாளடைவில் அவர்கள் காசிக்கோ, இராமேஸ்வரத்துக்கோ
பாதயாத்திரையாக போககூடும் எடுப்பும், துடுப்புமாக இருந்த ரெங்கநாயகியை கண்ட
பஞ்சாயத்து பஞ்சாயத்தில் தனக்கு சாதகமாக பேசியே விலக்கி வைத்தவர் காரணம் சோலந்தூர்
சோசியர் சோனைமுத்து தனது ஜாதகத்துல மனைவிக்கு பஞ்சமில்லை என்று குறிப்பு கொடுத்ததை
நம்பி பக்குவமாக பேசி கழட்டி விட்டு ஆவணியில் கோயிலில் வைத்து தாலியைக் கட்டி
வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் ரெங்கநாயகியின் கணவன் கனகு இப்பொழுது ஏர்வாடி
பக்கமாக திரிவதாக அரசல் புரசலான தகவல் மூத்தவள் முருகாயி ஆச்சாக்கும்,
பூச்சாக்கும் என்று ஒரு வாரம் கத்தி அடங்கி விட்டாள் தன்னையும், முதல் வகுப்பு போகும்
தனது மகன் ரத்தினத்தையும் ஒதுக்கி வைத்து விடுவாரோ என்ற பயம் ஊரில் எத்தனை பெண்களை
கழட்டி விட்டு போக்கும் வரத்துமாக இருப்பவர் என்பது அவள் அறியாததா ? பாவம்
அவளும் யாருட்டே போய் சொல்வாள் மனுஷாள் தப்பு செய்தால் தெய்வத்திடம் முறையிடலாம்
தெய்வமே தவறிழைத்தால் ? ஒரே வீட்டில் இரண்டு பக்கம் உலைகள் எந்தப்
பக்கம் நல்ல குழம்பு வாசம் வருகிறதோ அந்தப்பக்கம் சாப்பாடு பஞ்சவர்ணம் தனக்கு
எடுபிடியாக ஒரு கூதரையை வைத்திருந்தார் அதாவது விசயங்களை சொல்லிட்டு வர, கொடுத்து
விட்டு வர இப்படியான காரியங்களுக்கு விபரமானவன் என்றால் தனது கோல்மால் எல்லாம்
தெரிந்து கொள்வான் என்பதால் இப்படியொரு அறிவுக்கொழுந்தை வேலைக்கு வைத்துக்
கொண்டார் சம்பளம் ஏதும் கிடையாது வீட்டில் மதியச்சாப்பாடு மட்டுமே முருகாயிக்கும்,
ரெங்கநாயகிக்கும் வசதியாகப் போயிற்று காரணம் மிஞ்சியது, சுண்டியது, ஊசியது,
கூசியது எல்லாம் மதியச்சாப்பாடுக்கு வரும் பேக்கொதக்குக்குதான் போடுவார்ள்கள் சொல்ல மறந்துட்டேனே..
அந்தக்கூதரை பேருதான் பேக்கொதக்கு சொந்தப் பெயரை யாரும் சொல்வதில்லை அதன்
காரணமாகவே எனக்கும் தெரியவில்லை ரெங்கநாயகி தற்போது முழுகாமல் இருப்பதாக பக்கத்து
வீட்டு பத்மாவும், செங்கமலமும் மிளகாய்ப் பிஞ்சையில் வேலை செய்யும் பொழுது பொறணி
பேசியதாக செய்தி இப்படியான காலகட்டத்திலதான் ஐயோ பாவம் இதோ பஞ்சாயத்து பஞ்சவர்ணம்
விசத்தை குடிச்சிட்டதாக....
ஊரே
திரண்டு பஞ்சவர்ணம் வீட்டை நோக்கிப்படை எடுத்து வந்து பார்த்தால் ? வீட்டின்
வெளியே முருகாயியும், ரெங்கநாயகியும் பத்ரகாளியாய் நின்றிந்தார்கள் வீட்டின்
திண்ணையில் பஞ்சாயத்து கம்பீரமாக உட்கார்ந்து இருந்தார் ஊர் மக்கள் திரண்டு வரவும்
எழுந்து வெளியே வந்து கம்பீரமாக நின்றார் பஞ்சாயத்து பட்டு வேஷ்டி சட்டையில்
புதுமாப்பிள்ளை போல இருந்த அவரைக் கண்டவர்களுக்கு அதிர்ச்சி இடுப்பில் கை வைத்துக்
கொண்டு மனைவிகளைப் பார்த்து அதட்டலாக கேட்டார்...
ஏன்டி....
கொங்காச்சிறுக்கிகளா ? என்னைக் கேள்வி கேட்க ஊரைத் திரட்டுற அளவுக்கு
வளந்துட்டீகளோ..... தொலைச்சுப் புருவேன் தொலைச்சு ஏன்டா... எதுக்குடா வந்தீங்க....
சொல்லுங்கடா.... ?
ஐயா...
நாங்க ஏதோ கேள்விப்பட்டு பதறி அடிச்சு வந்தோம்.... நீங்க.. இப்படி....
நீங்க
எதுக்குடா ? பதறணும் இது எனக்கும், எம் பொண்டாட்டிகளுக்கும்
உள்ள விசயம் எவனாவது தலையிட்டீங்க..... நடக்கிறதே வேற.... ஏய்... புள்ளே..
தெய்வானை வெளியே வா...
பஞ்சாயத்து
சொல்லவும் உள்ளிருந்து தெய்வானை என்று அழைக்கப்பட்டவள் வெளியே வந்தாள் பட்டுச்சேலை
உடுத்தி இருந்தாள் கழுத்தில் புது தாலி தொங்கி கொண்டு இருந்தது கூட்டத்தாருக்கு
புரிந்தது ஓஹோ பஞ்சாயத்து இப்பத்தான் சுடச்சுட மூணாவது கல்யாணம் முடித்துக் கொண்டு
வந்து இருக்கிறது அதனால்தான் மூத்த சக்களத்திகள் வெளியே நிற்கின்றார்கள்
பஞ்சாயத்து சாகவில்லை அப்படீனாக்கா... ஊரெல்லாம் புரளியைக் கிளப்பி விட்டது யாரு ?
டேய்....
தங்கராசு கேட்கிறேன்ல சொல்றா... எதுக்கு வந்தீங்க ?
ஐயா
மன்னிக்கணும்.... நீங்க வந்து.....
வந்து.....
இல்லை
தவறிப்....... போயிட்டதா.....
என்னடா
சொல்றே ?
ஆமாய்யா....
விசத்தை குடிச்சிட்டதா.. கேள்விப்பட்டுத்தான் எல்லோரும் வந்தோம் நீங்க நல்லாத்தான்
இருக்கீங்க சந்தோசம்யா....
எவன்டா
சொன்னது நான் விசம் குடிச்சேன்னு... ஏன்டி இது உங்களோட வேலையா ? தொறத்தி
விட்டுவேன் ஜாக்கிரதை.
ஐயோ....
நாங்க ஏதும் அப்படிச் சொல்லலைங்க...
ஐயா
பெரியவரே யாரு சொன்னது உங்களுக்கு ?
இல்லை
பஞ்சவர்ணம் எல்லோரும் அரசபுரசலா பேசி பதறிப் போயித்தான்பா வந்தோம் நீ புதுசா
கல்யாணம் செய்துட்டு வந்து நிக்கிறே இரு கேட்போம் ஏன்டா முத்து உனக்கு சொன்னது
யாருடா ?
சோமசுந்தரம்தான்
எனக்கு சொன்னான், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று விசாரணை நடந்து கடைசியில்
கொதக்கு சொன்னான் என்று சொல்வதற்கும் மதியச் சாப்பாடு சாப்பிட கொதக்கு வந்து
சேர்வதற்கும் சரியாக இருந்தது வந்தவன் நேராக ரெங்கநாயகியிடம் போய்....
அத்தாச்சி
வாங்க சோறு போடுங்க... இன்னைக்கு என்ன கொழம்பு வச்சீங்க ?
முருகாயி
சட்டீரென ஒன்று விட, பெரியவர் அவரது பங்குக்கு ஒன்று விட்டு...
ஏண்டா
கொங்காப்பயலே எருமை ஈண்டுக்கிட்டு இருக்கும்போது என்னமோ செஞ்ச கதையா... என்ன
கேட்கிறே... சொல்றா.... பஞ்சவர்ணம் மருந்தைக் குடிச்சான்னு ஏண்டா சொன்னே.... ?
ஐயா
நான் மருந்து குடிச்சார்னு சொல்லலை பால்ஆயில் குடிச்சார்னுதான் சொன்னேன்...
பாலாயிலா....
எதுக்குடா சொன்னே ?
மேலக்குடிக்காரன்தான்
சொல்லச் சொன்னான்..
அவன்
சொன்னால் சொல்லிடுறதா.... ?
அவன்
முட்டாசி தந்தான் பஞ்சாயத்து பால்ஆயிலு குடிச்சாருன்னு ஊருக்குள்ளே சொல்லிட்டு வா
நாளைக்கும் முட்டாசி தாறேன்னு சொன்னான்
பஞ்சவர்ணம்
கேட்டியா ? பால்டாயிலுக்குத்தான் பால்ஆயில்னு சொல்லி அது
எப்படியோ... பரவி பால்டாயிலைக் குடிச்சிட்.டே... விசத்தைக் குடிச்சிட்டேன்னு ஊருல
பரவியிருக்கு... ஹும் நல்ல ஆளைத்தான் வேலைக்கு வச்சுருக்கே.... சரி சரி களைஞ்சு
போங்கப்பா.. போங்கப்பா...
கூட்டம்
களைந்து போய் விட பஞ்சாயத்திடம் வந்த கொதக்கு கேட்டான்.
அண்ணே
கல்யாண மாப்புள்ளே மாதிரி ஜம்முன்னு இருக்கீங்க.... இது யாருண்ணே புது அத்தாச்சியா ? எனக்கும் பால்ஆயில்
கொடுங்கண்ணே.... நான் குடிச்சதே இல்லை.
சட்டீரென்று
விழுந்தது கொதக்குக்கு.
இங்கே
பாருங்கடி தெய்வானை இந்த வீட்லதான் இருப்பாள்... இஷ்டம்னா... இருங்க இல்லையா பொட்டியைக்
கட்டுங்க... நீ வா புள்ளே உள்ளே...
புது
மனைவி தெய்வானையை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே போனது பஞ்சப்பட்டி
பஞ்சாயத்து பஞ்சவர்ணம். மூக்காயியும்,
ரெங்கநாயகியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்க சிறிது நேரம் கழித்து
வீட்டுக்குள் நுழைந்த கடந்த இரண்டு வருடத்தில் முதல் முறையாக ரெங்கநாயகி பேசினாள்
முருகாயியிடம்...
என்னக்கா
செய்யிறது ?
என்ன
செய்யிறது இனிமேல் பத்திரமெல்லாம் தெய்வானை பேருக்குத்தான்,
வா, வந்தவளை ராத்திரிக்கு ஜோவடிப்போம் இல்லைன்னா.... அதுக்கும் ரெண்டு கிழி
கிழிப்பான் பேதியில ஓயிருவான்.
என்று
சொல்லி விட்டு உள்ளே நுழையும் பொழுது... கொதக்கு கேட்டான்.
அத்தாச்சிகளா....
எனக்கு சோறு ?
இருவரும்
திரும்பியவர்கள் சேலை முந்தானை கொஞ்சம் உயர்த்தி இடுப்பில் சொகுகி விட்டு ஆளுக்கொரு
காலை தூக்கிக் கொண்டு ஒரேயொரு மிதி மிதிக்க பக்கத்தில் இருந்த மாட்டுத் தொழுவத்தில
கிடந்த சாணியில் போய் விழுந்த கொதக்கு ‘’அம்மா’’ என்றான்.
மணமக்கள்
பல்லாண்டு வாழ வாழ்த்துங்கள் நட்பூக்களே...
அருமை ஜி....பெயர்கள் வந்துவிழும் மாயம்...தாயமாய் விழுகிறது உங்களுக்கு..நாங்களும் பஞ்சவர்ணத்தின் புதுப்பொண்டாட்டியை பார்த்தோம்...ஜோடித்து அழகாக்கியிருக்கின்றீர்கள்..அருமை
பதிலளிநீக்குவருக கவிஞரே இது உங்களுக்கே நன்றாக இருக்கின்றதா ? பஞ்சவர்ணத்தின் பொண்டாட்டியை நான் ஜோவடித்தேன் என்று சொல்வது என்னோட வீட்டில் படித்தால் என்ன நினைப்பார்கள் ? மனதுக்கு வேதனையாக இருக்கின்றது கவிஞரே....
நீக்குஅதைத்தான் முருகாயியும், ரெங்க நாயகியும் பார்த்துக் கொள்வார்களே.....
வருகைக்கு நன்றி கவிஞரே... அதுவும் முதல் வருகைக்கு.
ஆகா.. இப்பவே.. கண்ணைக் கட்டுதே!..
பதிலளிநீக்குஇன்னும் கொள்ள வேலை கெடக்குதே..
கொதக்கும் சாணியில போய் விழுந்துட்டானே!..
ஏ.. சாம்பசிவம்.. எங்கேய்யா போனீரு!?...
வாங்க ஜி எதுக்கு கண்ணைக் கட்டுது.., ? வந்தீங்களே மணமக்களை வாழ்தனும்னு தோணுச்சா உங்களுக்கு ?
நீக்குஒன்னுக்கு ரெண்டு.. இப்ப உபத்திரவத்துக்கு மூணு.. நமக்கு மொய் பணம் மிச்சம்.. நாலாவது ரவுண்டு நரி புடிச்சான் பட்டி.. சரி தானே..
நீக்குவாங்க ஜி அப்படியும் ஒரு ஊர் இருக்கின்றதா ?
நீக்குஅதனால என்ன !.. நரி புடிச்சான் பட்டி..ன்னு ஊர் இல்லேனா புதுசாவே உருவாக்கிப்புடுவோம்!..
நீக்குபஞ்சப்பட்டி பஞ்சாயத்து கதையும் படமும் சூப்பர்...........
பதிலளிநீக்குவாங்க நண்பரே படத்துக்கும் எனக்கும் பந்தம் இல்லைனு சொல்லிட்டேன் மறுபடியும் நீங்க பஞ்சாயத்து வச்சிடாதீங்க...
நீக்குகிராமத்து நடையில் அட்டகாசம்.
பதிலளிநீக்குபடத்துக்கும் பஞ்சாயத்துக்கும் சம்பந்தம் இல்லன்னு கில்லர்ஜி சொன்னா நம்பாமா இருப்பமா?
நண்பரின் கருத்துரைக்கும், நம்பிக்கைக்கும் நன்றி
நீக்குபாவம்தான்... இப்படியும் கல்யாணத் தொடர்கதையா! ஹா.... ஹா... ஹா...
பதிலளிநீக்குவாங்க நண்பரே கல்யாணத்தை தொடர்கதையாகவும் ஆக்கலாமா ? ஹாஹாஹா
நீக்குகிராமத்துக் கதை , கிராமத்து நடை... இப்பவும் இப்படியான ஆட்கள் இருக்கிறார்களா?....
பதிலளிநீக்குவாங்க மேடம் நலமா ? தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குஜோடிக்கிறேன்னு பாலிலே பால்டாயில் கலந்து விட்டதாய் கேள்விபட்டேனே ,உண்மையா :)
பதிலளிநீக்குஹாஹாஹா இது எப்போ ஜி இந்தக்கூத்து ? இருக்கும், முருகாயியும், ரெங்கநாயகியும் இப்ப கூட்டணிதானே... நடந்தாலும் நடக்கலாம்
நீக்குஅருமையான கலாட்டாக்கலியாணம் பால்டாயில்))) ரசித்தேன்!
பதிலளிநீக்குகல்யாணத்திற்க்கு வந்தமைக்கு நன்றி நண்பரே...
நீக்குஎன்னாது பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டானா...?
பதிலளிநீக்குஅதைத்தானே இவ்வளவு நேரம் சொல்லிக்கிட்டு வர்றேன்.....
நீக்குஅப்படினா பால்டாயில் பஞ்சாயத்த குடிக்கலையா...!
நீக்குஇது தப்பாச்சே...!!!
ஆஹா...இப்படியும் கல்யாணம் ஹஹஹா....
பதிலளிநீக்குஎழுத்து நடை சும்மா கொட்டுது....சகோ
வாங்க சதோ தங்களின் கருத்துரை அறிந்து மகிழ்ச்சி நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
தம +1
வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குகொத்தக் அது என்ன பெயர்? உங்களுக்கென்று தனித்துவமான பெயர்கள் கிடைக்கிறதே. நல்ல நகைச்சுவை. மிக்க நன்றி!
பதிலளிநீக்குத ம 8
வருக நண்பரே 'பேக்கொதக்கு' சாமி பெயர் தவறாக சொல்லக்கூடாது
நீக்குபோட்டோ கிராபிக்ஸ்மிக்ஸ் மிக அருமை அட்டகாசம்
பதிலளிநீக்குவருக நண்பரே புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வந்தது யாரோ புண்ணியவான் அருமையாக செய்திருக்கின்றார் இதைப் பார்த்தவுடன்தான் பதிவை எழுதினேன்
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குபடத்தையும் பதிவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்ம தலிவர் கதைபோல இருக்கே ம்ம்ம் நல்லாத்தான் எழுதுறீங்க வாழ்த்துகள் ஜி !
மூன்று மனைவி கொண்டவரின்
மூளை செத்துப் போனகதை மிகவும் அருமை ஜி !
தம + 1
வருக கவிஞரே நீங்கள் என்னை அரசியலில் மாட்டி விடாதீர்கள் எனக்கு அதெல்லாம் தெரியாது நான் ஏதோ தெரிஞ்சதை எழுதிக்கிட்டு போறேன் வருகைக்கு நன்றி
நீக்குஜி இப்படியே எத்தனை கல்யாணம் பண்ணப் போறாரு பஞ்சாயத்தி பஞ்சவர்ணம்? ஒவ்வொரு கல்யாணத்துக்கு முன்னும் பால்டாயில் குடிச்சுருவாருனு கதை பரவுமோ.. என்னது படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லையா? இதானே வேணான்றது ஹிஹிஹி...
பதிலளிநீக்குநேத்து போட்டு போட்டு நெட் கட் ஆகி கட் சம்மர் கரன்ட் கட் (அம்ம்மா சொன்னாங்க கரன்ட் கட்டே இல்லைனு...) ஆகி இப்பத்தான் போட முடிஞ்சுச்சு ஜி.
படம் கிராஃபிக்ஸ் செம...
ஊருல, நிறையப்பேரு இப்படித்தான் காலத்தை ஓட்டுறான் என்ன செய்யிறது படம் என்னுடையது அல்ல எனது படமென்றால் பெயரைப் போட்டு விடுவேன்
நீக்குசிற்றூரில் நடப்பதை தங்களின் பாணியில் எழுதியிருப்பதை படித்து இரசித்தேன்!
பதிலளிநீக்குவருக நண்பரே ரசித்து படித்தமைக்கு நன்றி ஆனாலும் ஒரு வருத்தம் மணமக்களை வாழ்த்தாமல் போய் விட்டீர்களே....
நீக்குஎங்கப்பன் குதிருக்குள்ள இல்ல என்று சொல்ற மாதிரி இருக்கு ஜீ சொல்வது சமயோசிதப் பதிவு அரசியல் தெரியாதவரிடமிருந்து . வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாங்க ஐயா ஹாஹாஹா என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... வருகைக்கு நன்றி ஐயா
நீக்குநல்லா இருக்கு கதை! ஏதோ நடக்கப் போகிறதுனு பார்த்தா, கடைசியிலே மூணாவது கல்யாணமா! கிழிஞ்சது! :)
பதிலளிநீக்குவாங்க சகோ ஹாஹாஹா பஞ்சவர்ணம் மேலே உங்களுக்கு ஏன் இவ்வளவு சலிப்பு ?
நீக்குகதை நல்லா இருக்கிறது. அரசியல் சம்பந்தபட்ட கதையா?
பதிலளிநீக்குவருக சகோ எனக்கு அதெல்லாம் தெரியாது.
நீக்கு
பதிலளிநீக்குஅத்தனையும் அருமையான எண்ணங்கள்
நன்றி நண்பரே வருகைக்கு
நீக்குபஞ்சபட்டி பஞ்சாயத்து கலக்கல் அண்ணா...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே
நீக்குசம்பந்தம் இல்லை என்று சொன்னால் நாங்கள் விட்டுவிடுவோமா என்ன? சம்பந்தம் என்ன என்று தெரிந்துகொண்டோம்.
பதிலளிநீக்குமுனைவரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஇதிலிருக்கும் அரசியல் என்னவென எனக்குப் புரியவில்லை. அரசியல் புரியாமல்தான் பெரும்பாலான மக்கள் இன்றும் தவறான தாட்சியாளர்களையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அரசியல் விழிப்புணர்வுக்காக எழுதுபவர்கள் அனைவருக்கும் புரியும்படியாக அன்றோ எழுத வேண்டும்? இவ்வளவு பூடகமாக எழுதினால் எப்படி?
பதிலளிநீக்குஇதில் அரசியல் இல்லை என்பதே எமது கருத்து நண்பரே புகைப்படம் இணையத்தில் கிடைத்தது அதற்காக இந்த பஞ்சாயத்து கதையை எழுதினேன் வருகைக்கு நன்றி
நீக்குகதை எழுதிய கதாசிரியரே நல்லா இருக்குங்க ,,புகைப்படம் சூப்பர் சகோ
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஆனால் இது கிண்டல் இல்லையே....
நீக்கு