நான் சகோவின் வீட்டுக்கு சென்றபோது எனது செல்லில் சுட்டது நன்றி
ஷார்ஜா திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்.
அகிலா எனது அத்தை மகள் அஜந்தா ஓவியம் போல் அழகானவள்
அவள் கவிதை எழுதுவதிலும் அழகு எந்த நேரமும் எழுதிக் கொண்டே.. இருப்பாள் எனக்கு சின்ன
வயதிலிருந்தே..... அவளை கல்யாணம் செய்து கொள்ள ஆசை மாமாவும் - அத்தையும் சொல்லி
விட்டார்கள் அவளது விருப்பமே எங்கள் விருப்பம் எனது விருப்பத்தை அவளிடம் சொன்னேன்
என்னை தீர்க்கமான பார்வை ஒன்றை பார்த்தாள் அவளது பார்வையில் ஆசையோ, காமமோ இல்லை
ஒரு திடகாத்திரமான ஊடுருவலான பார்வை பிறகு நிதானமாக சொன்னாள்
சரி நாம கல்யாணம்
செய்துக்கிறலாம் அதுக்கு முன்னே இந்த சமூகத்தைப்பற்றி... உங்களது கருத்தை கவிதையா
எழுதிட்டு வாங்க அதற்கு பிறகுதான் உங்களுக்கும், எனக்கும் ஒத்துப்போகுமான்னு நான்
கருத்து வேறுபாடு தெரிஞ்சுக்கிற முடியும் அதிக பட்சமா ஒருநாள் எடுத்துக்கங்க ஆனா,
அடுத்தவங்க கவிதையை கொண்டு வரக்கூடாது நான் எல்லா பத்திரிக்கையும் படிக்கிறவள்
எனக்குத் தெரியும் சொந்தமா சிந்திச்சு எழுதணும் போயிட்டு நாளைக்கு வாங்க
நான்
வீட்டுக்கு வந்து விட்டேன் என்ன இவள் கவிதை கத்திரிக்காய்னு கேட்கிறாள்... கவிதை
எனக்கு எப்படி வரும் ? அதுவும் சமூகத்தைபத்தி நமக்கு பக்கத்து வீட்டு சண்முகத்தை
பத்தியே தெரியாது போடீ பொடலங்கானு சொல்லிடுவோமா ? வேற எவளாவதுனா... சொல்லிடலாம் நாளை
பின்னே பார்த்துதானே ஆகணும் அவளே வாயாடி வேறே எங்கே பார்த்தாலும் கிண்டல்
பண்ணுவாள் சரி எதற்கும் எழுதிப் பார்ப்போமே நமக்குத்தான் மூளையிருக்கே திடீரென
சந்தேகம் இருக்கா ? என்னை நானே கேட்டுக்கொண்டு எழுதத் தொடங்கினேன் மூன்று நாள் முடிந்து
விட்டது ஒரு வழியாக எழுதி அவளை பார்க்கப் போனேன்.
என்ன
அத்தான் மூணு நாளா ஆளையே காணோம் ?
வேலை விசயமா தேவகோட்டை போயிருந்தேன்
காலையிலதான் வந்தேன் அதான் உடனே எழுதிட்டு வந்தேன் இந்தா...ன்
(தயக்கமாய்
கொடுத்தேன்)
வாங்கிப்
பிரித்து சத்தமாக, இனிமையாக படித்தாள்.
அத்தை
மாமா எனசொல்லிப்பார் நீ மருமகனாகி விடுவாய்
அவர்கள்
மகளை காதலித்துப்பார் நீ காதலனாகி விடுவாய்
அகிலாவை
சுற்றிப்பார் அகிலத்தையே சுற்றியவனாகி விடுவாய்
அவளையே
கல்யாணம் செய்துபார் நீ கணவனாகி விடுவாய்
அகிலாவை
அம்மாவாக்கிப்பார் நீ அப்பாவாகி விடுவாய்
நான்
அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன் டீச்சர் முன் மாணவன்போல...
என்ன இது ?
க... கவிதை
கவிதையா... இதென்ன உங்க
ஃப்ரண்டு கில்லர்ஜி எழுதி தந்தது மாதிரி இருக்கு தேவகோட்டை போனது இதுக்குத்தானா ? பள்ளிக்கூடத்துல
ரெண்டாவது படிக்கிற புள்ளைங்க வாசிக்கிற வாய்ப்பாடு மாதிரி இருக்கு, உங்களை கட்டிக்கிறதுக்கு
நான் இதை எழுதி தந்த கில்லர்ஜியவே கட்டிக்கிறலாமே.... மீசை சும்மா நச்சுனு
வச்சுருப்பாரு... இவ்வளவுதானா உங்க லெட்சணம் நமக்கு சரியா வராது இதோட விட்றணும்
எங்க அப்பா கிட்டேபோயி அப்படியாக்கும் இப்படியாக்கும்னு சொல்லி ஏதாவது கோல்மால்
செஞ்சு கல்யாணம் முடிக்கலாம்னு நினைச்சீங்க இப்பவாவது தனியா கேட்டேன் அப்புறம்
மணமேடையில வச்சு கவிதை எழுதச் சொல்லி கேவலப் படுத்திப்புடுவேன் ஜாக்கிரதை
(ஆட்காட்டி விரலை நிமிர்த்திக் காட்டி)
கவிதையாம் கவிதை ஒரு ''கமா'' கூடபோடத் தெரியலை. ஜா
அவள்
உள்ளே போய் கதவை சட்டீரென சாத்தினாள்.
ChivasRegal சிவசம்போ-
இந்த ஆறு வரி எழுதத்தான் மூன்று நாளா ? நமக்கெல்லாம் குவாட்டரை
இறக்குனா ஃஆப் அவருல ஃபுல் கவிதை வரும்னு சொன்னா குடிகாரப்பயனு சொல்லுவாளுக....
திருமதி மனோ சுவாமிநாதன் ஓவியம் வரைவார் என்று தெரியாது ப்ரமாதமான அழகு திருமதி மனோ சுவாமிநாதனுக்குப் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குசமூகத்தைப் பற்றிய கருத்துக்களை உறவுகளாலேயே சொன்னது சாதுர்யம் ரசிக்கத் தெரியாதவரைக் கிட்டாதாயின் வெட்டென மறக்க வேண்டும்
வாங்க ஐயா தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஹாஹா.... கவித கவித! :) நமக்கும் இப்படித் தான் கவிதை எழுதத் தெரியாது. ரசிக்க மட்டுமே தெரியும்.
பதிலளிநீக்குவாங்க ஜி எனக்கும் கவிதை வராது...
நீக்குரசனை கேட்ட ஜென்மம் ,இந்த ஜென்மத்தில் அகிலாவுக்கு கல்யாணம் நடக்காது :)
பதிலளிநீக்குபகவானே இப்படி சாபம் விடலாமா ?
நீக்கு
பதிலளிநீக்குதிருமதி மனோ சாமிநாதன் அவர்களின் ஓவியம் அருமை! அவருக்கு பாராட்டுக்கள்! உங்கள் நண்பர்(?!) எழுதிய கவிதையும் அருமை! அவருக்கும் என் பாராட்டைத் தெரிவியுங்கள்.
ஹாஹாஹா எனது நண்பரை புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே....
நீக்குமடக்கி மடக்கி எழுதினால் கவிதைதானே.... இல்லையாமா?
பதிலளிநீக்குதிருமதி மனோ சாமினாதன் ஓவியம் நன்றாக வரைவார் என்று எனக்குத் தெரியுமே.....
வாழ்த்துகள் மேடம்...
வாங்க நண்பரே அகிலாவுக்கு இது கவிதையாக தோன்றவில்லையே....
நீக்குகல்யாண கவிதை....:)
பதிலளிநீக்குதம 5
வருக சகோ நலம்தானே....
நீக்குகவிதையும் மனோ அக்காவின் ஓவியமும் மிக அருமை சகோ.
பதிலளிநீக்குதங்களின் பாராட்டுகளுக்கு நன்றி சகோ
நீக்குகல்யாணம் செய்துகொள்ள கவிதையா?
பதிலளிநீக்குஆகா
தம+1
ஆமாம் நண்பரே இப்படியும் சிலர்...
நீக்குசகோதரி மனோசாமிநாதன் அவர்கள் வரைந்த ஓவியம் அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே அவர்களின் சார்பாக..
நீக்குசுட்ட பழம் போல சுட்ட படமும் அழகு.. அருமை..
பதிலளிநீக்குஹாஹாஹா சுட்டபழத்தை இன்னும் மறக்கவில்லையா ஜி ?
நீக்குஅதானே...
பதிலளிநீக்குகமா போடத் தெரியாத காத்தவராயனுக்கு எல்லாம் காதல் எதுக்கு!?..
பேசாம - நரிக் கதை எழுதப் போகலாம்!...
சரி!.. கதை எழுதவாவது தெரியுமா?..
ஆமாம் ஜி இவனுக்கு எதுக்கு காதல் தேவையில்லாமல்.
நீக்குஅட கல்யாணத்துக்கு முன்ன...இப்படியெல்லாம் பரிட்சை இருக்குமாக்கும்..... சே..இது பெரிய கொடுமையாகவுல்ல இருக்கு நுழைவுத்தேர்வு மாதிரி..........
பதிலளிநீக்குகொடுமைதான் நண்பரே இவள் கிடைக்கா விட்டால் இன்னொருத்தி.
நீக்குஅழகு கவிதையே படைத்து விட்டு
பதிலளிநீக்குகவிதையே வராதுனா எப்படி ...???
இது கவிதையெனில் சந்தோசமே....
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்கு‘காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்...?’
அத்தை மகள் அகிலாவை அத்தான் மறந்தாரா? மணந்தாரா?
நன்று.
த.ம.8
வருக மணவையாரே அதான் புட்டுக்கிருச்சே... இனி விதியின் வழி.
நீக்குஓவியர் மனோ அவர்களுக்கு பாராட்டுகள். கவிதையை ரசித்தேன் என்கிறேன். நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்தானே?
பதிலளிநீக்குவருக முனைவரே கவிதை எனக்குகூட பிடிச்சுத்தான் இருக்கு ஆனால் அகிலாவுக்கு வாய்ப்பாடு மாதிரி இருக்காமுல....? பாவம் நண்பன்.
நீக்குகல்யாண கவிதை ம்ம்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே
நீக்குநான் எழுதறதை விட நல்லாத் தான் இருந்தது. இதை வேண்டாம்னுட்டாங்களா! சரியாப் போச்சு போங்க! :)
பதிலளிநீக்குவாங்க எனக்குகூட நல்லாத்தான் தெரியுது அகிலா மெத்தப்படித்தவளாக இருப்பாளோ....
நீக்குஅருமை அருமை ஜி..இரசித்தேன்.எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் தோணுது..???ஐயா..அருமை..
பதிலளிநீக்குநன்றி.
வருக சகோ மனதில் தோன்றியதை எழுதுவதே எனது பாணி
நீக்குமனோ அவர்கள் நன்றாக ஓவியம் வரைவார்கள் என்பது எனக்கு 2012 லியே தெரியுமே....உண்மையாக....
பதிலளிநீக்குஅது சரி கில்லர்ஜி செம ஆளு!!! என்னா சாமர்த்தியம்பா..நேரடியா கவிதையைக் கொடுத்தா ஓரம் கட்டிடுவாள்னு டுப் அனுப்பி மடக்கிட்டதை என்னானு சொல்லுறது....ஹஹஹ்
ஆம் ஏற்களவே மீனாம்பதி என்ற பதிவில் ஒரு ஓவியம் வெளியிட்டு இருந்தேன்
நீக்குஇதுதான் ஊரான் பிள்ளையை கிணற்றில் இறக்கி விட்டு ஆழம் பார்ப்பது ஹாஹாஹா
ஓ! உண்மை தான் குவாட்டர் இறக்கினா புல் கவிதை வரும்..
பதிலளிநீக்குHA!..ha!..nanru...nanru...
https://kovaikkavi.wordpress.com/
வருக சகோ இதுதாே உண்மை....
நீக்குமனோ சாமிநாதன் அவர்கள் வரைந்த படம் அழகு. அகிலாவிற்கு பிடித்தமாதிரி கவிதை எழுதி கொடுங்கள்.
பதிலளிநீக்குஇந்த கவிதையும் நன்றாக இருக்கிறது. கவிதாயினி இன்னும் எதிர்பார்க்கிறார்.
வருக சகோ அகிலா மரபு கவிதையை எதிர் பார்க்கின்றாளோ.....?
நீக்குஹாஹாஹா! வழக்கம் போல அருமை!
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி நண்பரே..
நீக்குஓவியம் அருமை. காதலன் கிறுக்கினாலும் கவிதை என்று ஒப்புக் கொள்ள வேண்டாமோ?
பதிலளிநீக்குவருக நண்பரே நமக்கு தெரியுது அகிலாவுக்கு தெரியவில்லையே...?
நீக்குஎன் ஓவியத்தை இங்கே வெளியிட்டிருப்பதற்கு அன்பு நன்றி கில்லர்ஜி! ரசித்துப்பாராட்டிய சகோதரர் பாலசுப்ரமணியம் அவர்கள் முதல் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனங்கனிந்த நன்றி!
பதிலளிநீக்குஅந்தக் காலத்தில் சுயம்வரத்தின்போது மணமகனின் வீரம் பார்த்து மணமகள் மாலையிடுவாளாம். இப்போது கவிதை போலிருக்கிறது! ஆனாலும் கவிதை நன்றாகவே இருக்கிறது!
வருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி பதிவு எழுதி வெகுநாட்களாகி விட்டது இவ்வளவு நாளும் ட்ராப்டில் கிடந்தது
நீக்குஇந்தக் கவிதைக்கே அகிலாவா?! உமக்குப் பேராசை அதிகம்!
பதிலளிநீக்குவருக நண்பரே பேராசை எனக்கு அல்ல நண்பனுக்கு...
நீக்கு