இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 26, 2016

சமத்துவபுரம்


நல்லோனுக்கும் கள்ளோனுக்கும்
கருவறையில் தொடங்கி வைப்பதும் இருட்டு
கல்லறையில் முடித்து வைப்பதும் இருட்டு.

எமது பார்வையில் இதுவே சமத்துவபுரம்.

 காணொளி

Hi, Dear just ask audio voice. 
Place: Ramanathapuram Distric (near Sathirakkudi) Karuppapillai Madam Village.

36 கருத்துகள்:

  1. நீங்கள் எழுதியுள்ள‌தைப் படித்தபோதே ' சதாரம்' என்ற படத்தில் வரும் இந்தப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. காணொளியை கேட்டால்.. அதே பாடல் தான்! பாதியிலேயே முடிந்திருக்கிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நான் எப்பொழுதுமே அவசியமான வரிகளை மட்டுமே எடிட் செய்து வெளியிடுவது வழக்கம்.

      நீக்கு
  2. நம் வாழ்வில் காணா சமரசம் உலவும் இடமே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி மறைந்தாலும் காண முடியாதுதான் இருக்கும் பொழுதே கண்டு கொள்வோம்.

      நீக்கு
  3. நீங்க போட்டிருக்கிற படம் சமரசம் உலாவும் இடமாகத் தெரியவில்லையே. அங்கே பணக்காரர்கள் பெரிய மாடங்களாகவும், அலங்காரக் கல்லறைகளாகவும் கட்டிக்கொள்கிறார்கள். சாதாரணர்கள் வெறும் சிலுவைக் குறியை மட்டும் வைத்துவிடுகிறார்களே. (இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே புகைப்படம் நான் உருவாக்கியது விருந்தாளி போன கிராமத்தில் ''ஒதுங்க'' போனபோது சுடுகாடை கண்டேன் உடன் மனதில் தோன்ற செல்லில் ஒளியலை எடுத்து வைத்தேன் பாடல் மனதில் தோன்றியது.

      நீக்கு
  4. சிறப்பான கருத்து! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  5. சமரசம் என்பது மண்ணுக்கு கீழே தானே தவிர வேறெங்குமில்லை. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே உண்மையான வார்த்தை சொன்னீர்கள்.

      நீக்கு
  6. பின்னூட்டங்களிலிருந்து சமரசம் உலாவும் இடமே என்கிற சீர்காழி பாடல் காணொளியாக இருக்கிறது என்று அறிகிறேன். உங்கள் தளத்தில் என்னால் காணொளி காண முடியாதவன் நான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் முன்பெல்லாம் காணொளி கண்டு விமர்சிப்பீர்களே...

      நீக்கு
  7. என்து பார்வையில் செத்துப் போவதில் கூட சமத்துவம் இல்லை ..நண்பரே.... சிலர் சுகபோகங்களை அனுபவித்து சாகிறார்கள் பலர்.. துன்பங்களை சுமந்து கொண்டே சாகிறார்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நண்பரே நல்ல மரணம் கிடைக்கவும் நமக்கு அதிஷ்டம் வேண்டும் அழகிய மரணம் குறித்து விரைவில் விரிவாக எழுதுகிறேன்.

      நீக்கு
  8. சூப்பர்! கில்லர்ஜி! மண்ணோடு மண்ணாகக் கலக்கும் போது பணக்காரனா ஏழையா சாதியா மதமா....கருவறையை அப்படிச் சொல்ல முடியாதே...சிலர் பணக்காரக் கருவறை...சிலர் ஒன்றுமே இல்லாத கருவறை...

    கண்ணை மூடிவிட்டால் கூட யார் வருகிறார்கள் என்றா தெரியப் போகிறது...ஒன்றுமே இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் Mr. T-Sunami வரும் பொழுது மட்டும் சமத்துவம் நிலைக்கின்றது

      நீக்கு
  9. அங்கும் சமத்துவம் இல்லை ஐயா. நினைவில் கொள்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும் முனைவரின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  10. சமரசம் மிக நன்று

    பதிலளிநீக்கு
  11. சமரசம் நன்று... இப்பல்லாம் கல்லறையில் சமத்துவம் இல்லை அண்ணா...

    பதிலளிநீக்கு
  12. சமரசம்!?...

    அது யாருக்குத் தேவை?...

    புளி ரசம், தக்காளி ரசம் இவற்றால் கூட பயனுண்டு..
    சமரசத்தால் என்ன பயன்!..

    மயானத்தில் கூட மருந்துக்கும் சமரசம் கிடையாது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களது கருத்துரையும் உண்மைதான்.

      நீக்கு
  13. வீட்டுக்குள்ளே கூட சமரசம் கிடையாது.. - சுடு
    காட்டுக்குள்ளே சமரசம் கேட்பதேன்!..

    உணவை உண்ணும் இடத்தில் கூட சமரசம் கிடையாது- மனிதனை
    மண் உண்னும் இடத்தில் மட்டும் சமரசம் கேட்பதேன்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி மண் உண்ணும் இடத்தை நினைத்தாவது மனிதனிடம் சமரசம் உருவாகட்டும் என்ற எண்ணமே....

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    தெளிவான சிந்தனைக்கும் உண்மையான வரிகளுக்கும் பாராட்டுக்கள். காணொளி காண இயலவில்லை இருந்தும் அனுமானித்தேன்.இங்கு இணைய குறைபாடு அடிக்கடி அதனால்தான், நான் அவ்வப்போது வலைத்தளம் வருவதும் குறைந்து போனது.இப்போது சற்று பரவாயில்லை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  15. அருமை ஐயா.நேரம் பயனுள்ளதாகவும் சிந்திக்கவும் வைத்தது ஐயா.நன்றி

    பதிலளிநீக்கு
  16. அங்கேயும் வித்தியாசங்கள்.....

    கருத்துள்ள பாடல்.

    பதிலளிநீக்கு
  17. காணொளியைப் பார்க்க முடியவில்லை. ஆகவே மீண்டும் வரவேண்டும். :)

    பதிலளிநீக்கு
  18. சமரசம் உலாவும் இடம் இதுதான் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் இருக்கும்போது மற்றவரைவிட உயர்வாக வாழவே எண்ணுகிறது மனக்குரங்கு. அருமையான திரைப்படப் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு