இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2016

தனி ஒருவன்


என்னை தினமும்...
குளிப்பாட்டினாய்,
குளிரூட்டினாய்,
இணைப்பாக்கினாய்,
இனிப்பாக்கினாய்,
கனிப்பாக்கினாய்,
கனிவாக்கினாய்,
இளைப்பாக்கினாய்,
இளைப்பாற்றினாய்,
உணவாக்கினாய்,
உணவாகினாய்,
அணைப்பாக்கினாய்,
அணையாகினாய்,
களிப்பூட்டினாய்,
களிப்பாகினாய்,
விழியாகினாய்,
விழிப்பாக்கினாய்,
சுகமாக்கினாய்,
சுகமாகினாய்,
இச்சையாகினாய்,
இச்சையாக்கினாய்,
எச்சிலாக்கினாய்,
எச்சிலாகினாய்,
சந்தோஷமாக்கினாய்,
சந்தோஷமாகினாய்,
சுவையாக்கினாய்,
சுவையாகினாய்,
நம் இருவரை நால்வர் ஆக்கினாய் இன்று என்னை மட்டும் ஏன் தனி ஒருவன் ஆக்கினாய் ?

இன்று 30.08.1991 & 30.08.2016 எங்கள் (25) வெள்ளி விழா ஆண்டு திருமண்நாள் நினைவாய் என்னவளுக்கு எனது பா(ய்)மாலை காணிக்கை.
 காணொளி

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

கலாச்சாரம்


என்இன தமிழ்ப் பெண்கள் மற்றவர்களிடம் பேசும்போது ''அண்ணா'' என அழைத்து விட்டால் கடைசிவரை தன் சகோதரனை போல்தான் நினைப்பார்கள் அந்தப்பேச்சில் வேறு கள்ளம் கபடம் இருக்காது அதே நேரம் அண்ணா எனச் சொல்லவில்லை என்றால் ? எண்ணங்கள் வேறு விதமாக போக சாத்தியம் உண்டு, ஆனால் அரேபியப் பெண்கள் பேசும் பொழுது வார்த்தைக்கு வார்த்தை அஹூ ஓலத் (சகோதரன்) என்பார்கள் ஆனால் பேச்சின் தொணி ஒரு கொழுந்தனிடம் பேசுவது போல்தான் இருக்கும் இப்படி ஒருவர் இருவர் அல்ல ! நான் சந்தித்த, பழகிய பழகிக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுமே ! இப்படித்தான் இது அவர்களுடைய தவறு என சொல்லவில்லை அவர்களது கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது அப்படி, நமது தமிழ்க் கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது இப்படி
எனது வாழ்வில் ஒரேயொரு அரேபியப் பெண்ணை என்னைவிட ஒருவயது குறைந்தவர் எனது சொந்த சகோதரியாக இன்றுவரை கருதுகிறேன் காரணம் எனது வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் தகுதியற்ற என்னை உன்னால் முடியுமென எனது திறமையை வெளிக் கொணர்த்தியவர் அந்தச் சகோதரி அலுவலகத்தை விட்டு ஓய்வு பெறும்போது வாழ்த்துச் செய்தியில் எல்லோரும் அரபு மொழியில் வாழ்த்தி எழுதியிருந்தபோது நான் மட்டும் ஒரு மாற்றத்திற்காக ஆங்கிலத்தில் எழுதினேன் இப்படி...
I WILL NEVER FORGET YOU'RE HELP IN MY LIFE
நான் சகோதரியாக நினைத்தால் அதில் துளியளவும் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுப்பதில்லை கொடுக்கப் போவதுமில்லை இதுவரை மட்டுமல்ல ! இனியெனும்...
இந்த U.A.E க்கு வந்தும் கூட இதுவரை பத்மா தொடங்கி.... பாத்திமா வரைக்கும் பத்துக்கும் மேற்பட்ட சகோதரிகள் எனக்கு கிடைத்து
இருக்கிறார்கள் நாளையோ ? என்றாவது ஒருநாளோ ? எனது மரணச்செய்தி கேட்டால் அந்தச் சகோதரிகளிடம் கண்ணீர்த்துளிர்த்திடும் என்பதில் துளியளவும் ஐயமில்லை எமக்கு. 

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

சத்தியும், நித்தியும்

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில்...


சத்தியானந்தன்-
ஏண்டா, நித்தி உனக்கு வீடு ஒத்திக்கு கொடுக்காதனால இந்த சத்தியப்பத்தி நீ எங்க சித்திகிட்ட வத்தி வைக்கிறயா ? கத்திஎத்தி விட்டேன் நெத்தியில குத்தி நிற்கும் உன்னைப் பார்தாலே எனக்கு பத்திகிட்டு வருது நீ, இந்த ஊருலயே இருக்ககூடாது ஓடிரு.


நித்தியானந்தன்-
அய்யோ சத்தியண்ணே, சத்தியமா உங்களை பத்தி நான் வத்தி வைக்கலண்ணே, இது ஒங்க சித்தி மேல சத்தியம்ணே.


சாம்பசிவம்-
இவங்களே விலக்கப் போனா கத்தியாலே நம்மளை குத்திடுவாங்கே நாம பத்திரமா பஸ் ஏறிடுவோம், அதான் நம்ம புத்திக்கு அழகு.


காணொளி

புதன், ஆகஸ்ட் 24, 2016

நீரும், நெருப்பும்


எவ்வளவோ யோசித்து பதிவுகள் எழுதுகிறோம் மிகச்சின்ன விடயமாக இருக்கும் அதை பிறர் சொல்லும் பொழுது அடடே இவ்வளவு காலமாக நமக்கு ஏன் ? இது தெரியவில்லை என்று மனம் குழம்பும் இதில் பலருக்கும் பல விடயங்கள் இருந்திருக்கும் சில நேரங்களில் தொட்டால் சுடுவது நெருப்பு என்பது எனக்கு பிறர் சொல்லியே அனுபவப்பட்டு தெரிகிறது ஆம் நண்பர்களே ஒருமுறை சாலையில் போய்க்கொண்டு இருக்கும் பொழுது எனக்கு தாகம் எடுத்தது யார் வீட்டிலாவது தண்ணீர் கேட்போமே.... என நினைத்துக் கொண்டு போகும் பொழுது ஒரு வீட்டில் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது நான் தண்ணீர் குடிப்போமென்று உள்ளே நுழைந்து விட்டேன் சுள்ளென்று எரிச்சல் காரணம் தீயின் ஜூவாலைகள் முகத்தில் அடித்தது தெறித்து வெளியே ஓடி வந்தேன் பிறகு மற்றவர்கள் சொன்னார்கள் அட மூதேவி எரியிற வீட்டுக்குள்ளே போனால் ? சுடாதா ? ஒருவர் சொன்னார் எரியிற வீட்டுல புடுங்கியதெல்லாம் லாபம்னு தெரிஞ்சவன் போல என்று... ச்சே தண்ணீர் தாகத்துக்கு போனால் சமூகம் எப்படியெல்லாம் பேசுகின்றது இந்த அனுபவப் பாடத்தை எனக்கு தீ கற்றுக் கொடுத்தது...
 
இதே போல...

ஒருமுறை வீட்டில் விநாயகர் சதுர்த்திக்கு ஆஞ்சநேயரை வணங்குவதற்காக பூஜை செய்வதற்கான சாமான்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தேன் (சத்தியமா நாந்தாங்கோ) பூஜையில் அமர்ந்து ஊதுபத்தி கொளுத்துவதற்காக தீப்பெட்டியை தேடினால் நான் தீப்பெட்டி வாங்கி வரவேயில்லை சரியென்று எதிர் வீட்டு பரிமளா வீட்டில் கொளுத்திக் கொண்டு வருவோமென ஊதுபத்தியோடு போனேன் விபரத்தை பரிமளாவின் கணவர் சொரிமுத்துவிடம் சொன்னேன் அவரே வீட்டுக்குள்ளே போய் தீப்பெட்டி எடுத்து வந்து கொளுத்திக் கொடுத்தார் நன்றி சொல்லி விட்டு வீட்டுக்கு திரும்பினேன் தீ அணைந்து விட்டது மீண்டும் போய் சொன்னேன் சரியென்று மீண்டும் பற்ற வைத்துக் கொடுத்தார் மீண்டும் அணைந்து விட்டது சங்டத்துடன் மீண்டும் போனேன் சொரிமுத்து மறுபடியும் தீப்பெட்டியை எடுத்து வந்து உரசினார்... உரசினார்... 17 குச்சிகள் தீர்ந்து விட்டது ரெண்டு பேரும் என்ன செய்றீங்க ? கேட்டுக் கொண்டே வந்த பரிமளாவிடம் விபரம் சொன்னேன் ஏங்க வெளியில மழை பெய்யுதுல மழையில நனைஞ்சா ஊதுபத்தி எரியுமா ? கில்லர்ஜிதான் கூமுட்டை மாதிரி இருக்காருனா.. நீங்க அவரைவிட வெளங்காமட்டையா இருக்கீங்க.. வெடுக்கென்று தீப்பெட்டி கணவரிடமிருந்து புடுங்கி இந்தாங்க சாமி கும்பிட்டுட்டு இந்த தீப்பெட்டியை நீங்களே வச்சுக்கங்க மழையில தீப்பெட்டியை நனையாமல் கொண்டு போங்க பரிமளா என்னிடம் கொடுக்க உள்ளே ஒரேயொரு குச்சி இருந்தது இந்த அனுபவப் பாடத்தை எனக்கு தண்ணீர் கற்றுக் கொடுத்தது...

இதே மாதிரி...

சிவாதாமஸ்அலி-
யோவ், நிறுத்துய்யா...

திங்கள், ஆகஸ்ட் 22, 2016

മലയാള മനസ്സ്

Thanks to – one india.com

கண்டாயா தமிழா ! கண்டாயா...
 கோயில், பின்னோக்கி பாதயாத்திரை, படம் வெற்றிபெற முடிகாணிக்கை, கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம், பூமாலைகள், யாருக்கு செய்தீர் ? கோடிகள் உண்டாக்கிய தமிழகத்தில், யாருமே உதவவில்லை.

மலையாள சம்பளத்தில் இது அதிகமே ! அதற்காக மம்முட்டிக்கு பாலாபிஷேகம் செய்யலாமென ! சொல்லவில்லை அது முட்டாள்களின் வேலை திருந்து இனியெனும் இல்லையெனில் வருந்த வேண்டியிருக்கும் நாளைய சமூகம்.



The Great Mr. Mohammad Kutty (Mammootty) Thanks, God Bless you & you're Family.
- Killergee
நல்ல மனம் வாழ, நாவால் வாழ்த்துவோம் தீயமனம் வீழ, தீயால் கொளுத்துவோம் யாகவாராயினும்.
இது பழைய செய்தி.

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2016

Style


உலகிற்கே இந்த ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர் இவரைப் பார்த்துதான் திரைப்பட நடிகர்கள் பலரும் காப்பி அடித்தார்கள் குறிப்பாக டைரக்டர் கே.பாக்கியராஜ்.

Just Now…
தி கிரேட் தேவகோட்டை வந்து இறங்கிட்டண்... டண்... டண்... 

இனிய நட்பூக்களுக்கு நான் தற்போது இனிய இந்தியாவில் அபுதாபி திரும்பும் வரை எமது பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் மறுமொழி இடமுடியாமல் போகலாம் அதேநேரம் தங்களது பதிவுகளை தொடர்ந்து எமது செல் மூலம் படிப்பேன் தமிழ் மணம் ஓட்டும் பதிப்பேன் பின்னூட்டம் இடமுடியாமல் போகலாம் என்பதை அறியத் தருகிறேன்

அன்புடன்
தி கிரேட் தேவகோட்டையிலிருந்து.... கில்லர்ஜி 

புதன், ஆகஸ்ட் 17, 2016

கள்ளிச்செடி


100 ல் 55 பேருக்கு மட்டுமே படிக்க முடியும் எனச் சொல்லியிருந்தார் நான் 55-க்குள் ஒரு ஆளாக முதல் முறையே நுழைந்து விட்டேன் மேலும் எனது நாவு பயிற்சிக்காக தினமும் மூன்று முறை இதை படித்து வருகிறேன் Face Book-ல் அற்புதமான விசயத்தை கொடுத்திருந்த அன்பர் கடைசியாக இந்த சினிமா வசனத்தையும் கொடுத்து இதனை களங்கப்படுத்தி விட்டார் இந்த சினிமா மோகம் இவர்களை என்னபாடு படுத்துகிறது இதில் நாமாக நுழையவில்லை அன்றே நமது தாத்தாமார்கள் இவர்களுக்கு அடிமையாகி நமது தந்தையர்களுக்கு இதை கற்றுக்கொடுத்து அவர்கள் நமக்குள் நுழைத்து விட்டு நாம் நமது பிள்ளைகளிடம் புகுத்தி விட்டோம் அவர்களும் நாளை நமது பேரப்பிள்ளைகளுக்கு திணிப்பார்கள் ரசிகனாக இருப்பது இப்பொழுது ஒரு பதவி போலவே ஆகிவிட்டது.

அதனால்தான் நடிகன் மகன் நடிகனாகிறான் அரசியல்வாதி மகன் அரசியல்வாதி ஆகிறான் ரசிகன் மகன் ரசிகனாகவும் தொண்டன் மகன் தொண்டனாகவும் ஆகிறான் இது என்ன வீட்டில் வளர்க்கும் வாழை மரமா ? வாழையடி வாழையாக தழைப்பதற்கு இன்னும் எத்தனை சந்ததிகள் இப்படியே போவது ? இதை இப்படியே விட்டு வைத்தால் இந்த வாழை முற்றி நாளை கள்ளிச்செடியாகி விடும் ஆகவே இன்றே இதை வேறோடு அறுத்தெறிந்து சுய சிந்தனையாளனாக இனி எனும் வாழ்வோமே !

காணொளி

திங்கள், ஆகஸ்ட் 15, 2016

வானவராயன் & வல்லவராயன்


மேனேஜர் இன்றைக்கு வானத்துக்கும், பூமிக்குமா குதிக்கிறாரே... ஏன் ?
வானவராயன் பேருக்காரன் பூராம் இப்படித்தான் இருப்பாங்கே...
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

முதலாளி எல்லோருக்குமே சம்பளம் உயர்த்தப் போறாராமே.. திடீர்னு என்னாச்சு ?
அவருக்கு விவாகரத்து கிடைச்சுருச்சாம்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *

நம்ம டைப்பிஸ்ட் பர்வதம் இந்த சின்ன சம்பளத்துல எப்படி கார் வாங்கினாங்க ?
மேனேஜருக்கு பர்சனல் செக்ரட்டரி ஆனதாலதான்.
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *

மேனேஜர் பொண்டாட்டிக்கு பயந்தவராமே... நம்ம பியூன் பிச்சைமுத்து இதைக்கூட தெரிஞ்சு வச்சு இருக்கானே... ?
ஆமாமா.. நீங்ககூட பொண்டாட்டிக்கு சேலை துவைச்சு கொடுப்பீங்கன்னு நேற்று கேன்டீன்ல சொன்னானே...
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *

புதுசா வந்த மேனேஜர் எல்லா ஸ்டாஃபுகளிடமும், உங்கள் மனைவிக்கு பிடித்தது என்ன ? னு கேட்கிறாரே எதுக்கு ?
குடும்ப உறவுகளாக இருப்பது அவருக்கு பிடித்தமான விசயமாம்.
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

விடியா மூஞ்சினு சொல்றாங்களே.... அது எப்படியிருக்கும் ?
நம்ம மேனேஜர் மேகநாதனைப்பாரு தெரியும்.
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *

ஏன்டி, விமலா நம்ம மேனேஜர் எதுக்கு புளிக்குழம்புல மிளகுப்பொடி போடணுமானு கேட்கிறார் ?
அவரு வீட்ல மனைவி சமைக்க மாட்டாங்களாம் பர்சனல் செக்ரட்டரி பரிமளாதான் சொன்னாள்.
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *

மேனேஜர் கோபமாக இருக்காரே ஏன்... ?
இதை நான் கேட்டதுக்குத்தான் கோபமாக இருக்கார்.
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *

என்னடி சொல்றே... உங்க மேனேஜரு கண்ணுல ரேகையைப் பார்த்து சோஸியம் சொல்வாரா ? உனக்கு எப்படித்தெரியும் ?
நேற்று ஈவ்னிங் ஓவர் டைம்ல எனக்கு பார்த்து சொன்னாருங்க... நாலு வருஷமா குழந்தை இல்லாத நமக்கு சீக்கிரம் குழந்தை பிறக்குமாம்.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *

நம்ம மேனேஜர் எதுக்கெடுத்தாலும் ''வள்'' ''வள்''ளுனு எரிஞ்சு விழுறாரே...?
அவரு பேரே ''வல்''லவராயன்தானே...
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
நட்பூக்கள் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துகள்

சனி, ஆகஸ்ட் 13, 2016

ராஜபாளையம், ராஜவீதி ராஜலட்சுமி

ராஜவீதி ராஜலட்சுமி வீட்டில்......

சதி-
ஏங்க நம்ம வீட்டுக் காவலுக்கு ஒரு நாய் வாங்கலாங்க...
பதி-
எதுக்குடா செல்லம் தெண்டச்செலவு நீ இருக்கும்போது...
சதி-
உங்க வீட்ல கூடத்தான் உங்க அம்மா இருக்காங்க உங்க அப்பா வாங்கி கொடுக்கலையா ?
பதி-
அது பொண்டாட்டி மேல நம்பிக்கை இல்லாதவங்க செய்யுறது நான் அப்படியா ?
சதி-
உங்களுக்கு எம்மேல நம்பிக்கை இருக்குல ?
பதி-
பின்னே ?  
சதி-
அப்ப அந்த நம்பிக்கையோட இந்த வீட்டை எம் பேருக்கு மாத்துங்க பார்ப்போம் ?
பதி-
ஹூம் கடைசியில அங்கே வர்றீயா ? சரி சரி ரொம்ப குரைக்காதே உனக்கு குட்டியோட சேர்த்து நான் நாய் வாங்கித் தர்றேன்.

சாம்பசிவம்-
நாய் நீ ன்னு சொன்னவன் கடைசியில நான் நாய்னு' ஒத்து போயிட்டியேயா.

வில்லங்கத்தார் மட்டும்தான் பைரவரைப்பற்றி பதிவு எழுத முடியுமா ? நாங்களும் எழுதுவோம்கில்லர்ஜி

வியாழன், ஆகஸ்ட் 11, 2016

தன்மானம்


என்ன ஸார் சொல்றீங்க... இவங்க ரெண்டு பேரும் காவல் துறைக்கு லட்டர் எழுதி வச்சுட்டு தூக்குப் போட்டுக் கிட்டாங்களா ?
ஆமா ஸார் எனக்குகூட நம்ம முடியலையே....

அப்படி என்னதான் ஸார் எழுதி வைச்சாங்க ?
நாங்களெல்லாம் கவரிமான் பரம்பரையில வந்தவங்க இதை எல்லாம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியலை எங்கள் மரணத்துக்கு தன்மானமே காரணம்னு...

அப்படி என்னத்தை பார்த்தாங்க ?
கீழே பாருங்க ஸார் அந்தக் கொடுமையை...

10


09


08


07


06


05


04


03


02


01


Chivas Regal சிவசம்போ-
தமிழ் நாட்டு எலிகள் தன்மானம் உள்ளதுதான்.