இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 30, 2016

4 பேர் 4 விதம்



4 வயது மகளிடம் கடந்த இரண்டு தினமாகவே வெறுப்புடன் பேசினான் அரவிந்தன் இத்தனை நாள் கொஞ்சிக் கொண்டு இருந்த அப்பா திடீரென்று ஏன் கோபப்படுகிறார் ? என்பது புரியாமல் விழித்துக் கொண்டு முகம் வாடி இருந்தாள் ஸ்வேதிகா அம்மாவிடம் வந்து ஒட்டிக் கொள்ள நீ அப்பா கிட்டே போகாதடா செல்லம் அவரு இப்படித்தான் உனக்கு நான் இருக்கேன்டா கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னாள் மலர்விழி. கடந்த ஒரு மாதமாக ஒட்டிக்கொண்டே திரிந்த மகள் நாம் போனவுடன் முகம் வாடி விடக்கூடாதே என்பதற்காக கடைசி இரண்டு நாளில் வெறுப்பது போல் நடந்து கொண்டது பாவம் ஸ்வேதிவுக்கு எப்படி புரியும் ? விடுமுறை முடிந்து மீண்டும் துபாய் புறப்பட்ட கணவன் குழந்தைக்கு சந்தோசமாக டாடா சொல்ல முடியாமல் போய் விட்டதே என்று வருந்துவது மலர்விழிக்கு மட்டும்தானே தெரியும்.
* * * * * * * * * * * 01 * * * * * * * * * *

சுந்தரம் சட்டீரென கன்னத்தில் அறைந்ததும் ’’அம்மா’’ என்று அலறி கீழே விழுந்தாள் மல்லிகா சத்தம் கேட்டு உள்ளிருந்து ஓடி வந்த அவனின் அம்மா ஏன்டா முரட்டுப்பயலே வாயும், வயிறுமா இருக்கிறவளை இப்படிப் போட்டு அடிக்கிறியடா உனக்கு அறிவு இருக்கா ? அதுக்காக என்னை வேலைக்குப் போகச் சொல்றா வேலைக்குப் போயி சாப்பிடுற அளவுக்கு நாம என்ன இவளுக குடும்பத்தைப் போல பிச்சைக்காரங்களா ? ஏன்டா தண்டச்சோறு ஒரு குழந்தைக்கு தகப்பனாகிட்டே இன்னும் அப்பன் சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடுறியே உனக்கு அறிவு இருக்கா ? என்ற அம்மாவை இல்லாததை எத்தனை தடவை கேட்பே ? என்று சொல்லி சட்டீரென்று விட்டான் சுந்தரம் ‘’அம்மா’’ என்று அலறி கீழே விழுந்தாள் அம்மா ’’கட் கட்’’ என்று டைரக்டர் சொல்லவும் கீழே கிடந்த மல்லிகாவும், அம்மாவும் எழுந்தார்கள்.
* * * * * * * * * * * 02 * * * * * * * * * *

டெல்லிக்கு அவசரமாக கிளம்புறீங்களே... அவ்வளவு முக்கியமான விசயமா ? என்று கேட்டதும் ‘’தூ’’ என்று வாயிலிருந்த வெற்றிலையை துப்பிய அமைச்சர் விஜயகுமார் ஏன்டி வெளங்காமட்டை உனக்கு எத்தனை தடவைதான்டி சொல்றது ? ஊருக்கு கிளம்பும்போது குறுக்கு கேள்வி கேட்காதேன்னு என்று சொல்லி விட்டு மீண்டும் வெற்றிலையை எடுத்து வாய்க்குள் ஒதுக்கி சுவைத்தவரை ஏங்க நானும் எத்தனை தடவை கேட்கிறேன் என்னையும் ஒருதடவை டெல்லிக்கு கூட்டிக்கிட்டுப் போயி அந்தப் பாராளுமன்றத்து நாற்காலியில் உட்கார வைக்க மாட்டீங்களா ? அவசரமாக வந்த அவரது பி.ஏ. டெலிக்ராமை படித்து சொன்னான் உங்களது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது டெல்லி வரவேண்டாம் மனைவி பூங்கோதையை பார்த்து ‘’தூ’’ என்று வாயிலிருந்த வெற்றிலையை துப்பினார் முன்னாள் அமைச்சர் விஜயகுமார்.
* * * * * * * * * * * 03 * * * * * * * * * *

கல்யாண வீட்டில் நாதஸ்வரம் ஊதிய வித்வான் நாகேஸ்வரனை அடித்து விட்டதாக ஒரே பரபரப்பு நாங்க இனி நாதஸ்வரம் வாசிக்க மாட்டோம் தாலி கட்டும் நேரத்தில் இப்படி தகராறு செய்து விட்டாங்களே... என்று பதறியடித்து சமாதனப்படுத்த முயன்றனர் திருமணத்துக்கு வந்திருந்த பெரியவர்கள் நாதஸ்வரக்கார கோஷ்டிகளிடம் மன்னிப்பு கேட்டு தயவு செய்து தாலி கட்டு முடியட்டும் பிறகு பேசித் தீர்மானிப்போம் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாதம் முழங்க திருமணம் இனிதே நடைபெற்றவுடன் நாதஸை அடித்தவனை தேடியதில் அது டாஸ்மாக்கில் மூழ்கி சாப்பாட்டுக் கூடத்தின் பாத்திரம் கழுவிமிடத்தில் கவிழ்ந்து கிடக்க ஏன்டா இவரை அடிச்சே ? இவரு அசிங்கமா வாசிச்சாரு... நல்லாத்தானே வாசிச்சாரு ? இல்லை ‘’பீப் பீப் பீப்’’ அப்படின்னு அசிங்கமா வாசிச்சாரு... கல்யாண வீட்ல இப்படி வாசிக்கலாமா ?
* * * * * * * * * * * 04 * * * * * * * * * *

புதன், செப்டம்பர் 28, 2016

சித்தன் போக்கு 7 O'clock


மனிதன் இப்படி வாழ்ந்து இப்படித்தான், மரணிக்க வேண்டும் என்பதை மேலே உள்ளவன் தீர்மானித்திருக்கிறான் என்கிறது பொதுவான சமூகம்இல்லை உன் வாழ்க்கை உன் கையில் என்கிறது மறுபுறத்து சமூகம்.

இப்படித்தான் வாழவேண்டும் என ஒரு வட்டத்துக்குள் தன்னை நிலை நிறுத்தி வாழ்கிறவர்களும் உண்டு, எப்படி வேண்டுமானாலும் வாழலாமென சித்தன் போக்கு 7 O'clock என்று போகிறவர்களும் உண்டு, இதில் எமது போக்கு எந்த வகை ? யாமறியேன் பராபரமே.... வாழும் முறை சரியோ... தவறோ ? ஒன்று மட்டும் சர்வ நிச்சயம் அது யாருக்கும் தீங்கு செய்யாமை அதற்கு முன் நினையாமை, இது இன்றுவரை உண்மையென சத்தியம் செய்ய சாத்தியமே !

இறைவன் மீதோ, இறை வணக்கத்தின் மீதோ நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ வாழ்க்கையின் நடைமுறையில் நேர்மை, நியாயம், உண்மை, இருந்தால் ? ? ? அவனை இறைவன் ஏற்றுக் கொள்வான் என்பதில்100 க்கு 100% எமக்கு நம்பிக்கை உண்டு, இறைவனை வணங்குகிறவன் பசியால் தர்மம் கேட்கிறவனிடம் இருந்தும் இல்லை என்பதேன் ? இதை இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பது அவன் கண்ணுக்கு புலப்படவில்லையே ஏன் ? அப்படியானால் உனது இறை வணக்கத்தின் நேரம் வீண் விரையம்தானே ! அதற்குப்பதில் அந்த பொன்னான நேரத்தை உனக்காகவோ, அல்லது உன்னை சார்ந்தவர்களுக்காகவோ உணவுக்காக உழைத்திருக்கலாமே இறை வணக்கத்திலேயே இருப்பவனைவிட உழைத்துக் கொண்டே இருக்கும் உழைப்பாளி சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவான் என ஒரு வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது அது எந்த வேதமென சொல்ல, நான் விரும்பவில்லை காரணம்...

சுப்பையா சொன்னது சுல்த்தானுக்கும், சூசைக்கும் பிடிக்காது
சூசை சொன்னது. சுப்பையாவுக்கும், சுல்த்தானுக்கும் பிடிக்காது
சுல்த்தான் சொன்னது சூசைக்கும், சுப்பையாவுக்கும் பிடிக்காது

யார் சொன்னார்கள் என்பதைவிட, என்ன சொன்னார்கள் ? என்று ஆராய்ந்து பார்த்தால் நமக்குள் ஜாதி, மதச்சண்டைகள் இருக்காது. என்பதை எமக்கு சொன்னவர் அருமை நண்பர் திரு. சிவாதாமஸ்அலி

ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

எல்லாம் நன்மைக்கே...


எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் என்று நினைக்கிறேன் நான் கட்டிக்கொள்ள வேண்டிய முறைப்பெண் இதற்கு மேல் ஊர், பெயர் விபரம் வேண்டாமே காரணம் இந்தப்பதிவுகூட நாளை இந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு இடையூறு வரலாம் அந்தப்பெண் மூக்கை வடித்துக் கொண்டு பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும் எல்லோரும் என்னிடம் நீ தான் இந்தப் புள்ளையை கல்யாணம் செய்துக்கிறணும் என்பார்கள் எனக்கு கோபம் வரும் சண்டை போடுவேன் இன்னும் ஞாபகம் இருக்கின்றது பலமுறை பிள்ளையார் கோயிலுக்கு சென்று பிள்ளையாரப்பா எனக்கு இந்தப் புள்ளையை கல்யாணம் செய்து வச்சிடாதே எந்த நேரமும் மூக்கை வடிச்சுக்கிட்டே இருக்கு எல்லோரும் எனக்கு கட்டி வைக்கப் போறதாக சொல்றாங்க இந்த ஆபத்திலிருந்து நீதான் என்னை காப்பாற்றணும் என்று வேண்டுவேன். 

எனது அப்பத்தா கேட்பார் நீ அடிக்கடி கோயிலுக்கு போறீயே... எதற்கு ? நான் சொல்வேன் எனக்கு அறிவு (?) நிறைய வளரணும்னு வேண்டிக்கிட்டேன் அன்றே நான் பொய் சொல்லப் பழகியதற்கு காரணம் நானா ? இந்த சமூகம்தானே... காலம் உருண்டோடியது சொந்தம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது ஊர் மாற்றங்கள் வேலை வாய்ப்புகள் நான் அப்பெண்ணை சுத்தமாக மறந்து விட்டேன் என்பதே நிதர்சனமான உண்மை காரணம் நான் கட்டிக்கொள்ளும் முறைப்பெண்கள் மட்டும் 17 பிறகு அப்படி இப்படி என்று ஒரு 10 இருக்கலாம் ஆனால் நடந்தது என்ன ?  

சம்பந்தமே இல்லாத சம்பந்தம், சம்பந்தம் இல்லாமலே வந்தது சம்பந்தம் சம்’’பந்தத்தை’’ கொடுத்து விட்டு சம்பந்தம் இல்லாமல் போய் விட்டது யாம் மீண்டும் சம்’’பந்தம்’’ ஆவோம் எமது இறுதி நாளில் சரி அது கிடக்கட்டும் கதைக்கு சம்பந்தம் இல்லாத விசயம் நாம் பதிவுக்குள் வருவோம்.

காலம் உருண்டோடி மீண்டும் அப்பெண்ணை சந்தித்தேன் உண்மையிலேயே நான் வியந்து மயங்கி மனம் வருந்தினேன் இதுவும் நிதர்சனமான உண்மை அப்சரஸ் என்றும், அழகி என்றும், அஜந்தா என்றும், தேவதை என்றும், ரம்பா, என்றும், ஊர்வசி என்றும், மேனகா காந்தி என்றும் சொல்வார்களே அதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணமாக தோன்றியது எத்தனை ஆண்டுகள் கழித்து இந்த சந்திப்பு நிகழ்ந்தது தெரியுமா ? எனக்கு மணமுடித்து இரண்டு பொக்கிஷங்கள் பிறந்து என்னவள் மறைந்து இவ்வளவும் கடந்த பிறகு. விடுமுறையில் வரும் பொழுது அனைவரது வீடுகளுக்கும் ஒருமுறை மட்டுமே சென்று விடுவது வழக்கம் மீண்டும் செல்ல காலம் போதாது காரணம் சொந்தங்கள் அதிகம் ஒருமுறை இந்தியா வந்திருந்த பொழுது அந்த வீட்டுக்கு போனேன் உள்ளே அப்பெண் முதல் பிரசவம் ஆண் குழந்தை பெற்று ஒரு மாதமே ஆன நிலையில் பிறந்த வீட்டில் முதல் முறையாக கண்டேன் குழப்பமாகி, தர்ம சங்கடத்துடன் இது..... யார் ? எனக்கேட்டேன். 

யாரா ? தெரியலை இவதான் ................. பார்த்து பல வருஷம் ஆச்சுல..... அதான் 

எனக்குள் வியப்பு, குழப்பம், ஆச்சர்யம், கவலை, வேதனை, ஆத்திரம் யார் மீது ஆத்திரம் ? எனக்கே புரியவில்லை இப்பெண்ணையா ? நாம் பிள்ளையாரிடம் வேண்டாம் என்று அன்று வேண்டிக் கொண்டோம் நீண்ட நேரம் பேச்சு வராமல் மௌனமாகி விட்டேன் என்ன சொல்ல...  யாரிடம் சொல்ல ? குழந்தைக்கு அன்பளிப்பு பணத்தை கையில் திணித்து விட்டு வெளியேறினேன் ச்சே விதி என்று சொல்வார்களே அது உண்மைதானோ ? 

விதி ஊமையாகி விட்டதே நாம் இவ்வளவு காலம் கடந்து சந்தித்து இருக்கின்றோமே... இதற்கு அயல்தேச வாழ்க்கையும் ஒரு காரணம்தானே ? பணத்துக்கு ஆசைப்பட்டு பந்தத்தை இழந்து விட்டோமே நம்மைப்போல எத்தனை மனிதர்கள் இப்படி மனம் புழுங்கி வாழ்வார்கள் இவள் வாழ்க்கையைத் தொடங்கும் பொழுது நமக்கு எல்லாமே முடிந்து விட்டதே நமக்கு எல்லாமே விரைவில் முடிந்து விட்டதே இன்னும் ஒன்றுதான் பாக்கி நாம் விரும்பாத வாழ்க்கையை நமக்குள் திணித்து விட்டது என்னை புரியாத ஆறறிவு (?) மனிதர்களா ? அல்லது பிள்ளையார் போன்ற இடைப்பட்டவர்களா ? 

சட்டென ‘’அந்த’’ பிள்ளையாரின் நினைவு வந்தது அவரைப் பார்த்து திட்டி விட்டு வந்தால் மனப்பாரம் குறையும் போல் தோன்றியது அவரும் இதே ஊரில்தானே இருக்கின்றார் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு உடனே அதே பிள்ளையாரை காணப் போனேன் நுழைவாயிலில் ஒரு பெரியவர் நேர்த்திக்கடனுக்கு லஞ்சமாக ஒரு தேங்காயை உடைத்து விட்டு பிள்ளையாருக்கு ஆன்மீக இரு கை சல்யூட் வைத்து விட்டு சென்றார் வாசலில் பண்டைகால மளிகைக் கடையில் இருப்பது போல மரத்தில் அடுக்குப் பெட்டிகள் டோக்கன் பெற்று செருப்புகள் அதனுள் சிறை வைக்கப்பட்டது, அன்று நான் கயிற்றைப் பிடித்து இழுத்த அடித்த கோயில் மணி தொங்கவில்லை எலட்ரானிக் செட்டிங் ஸிஸ்டத்தில் சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்தது, தூண்களில் கருப்பு அழுக்குகளோடு விபூதியும், குங்குமமும் இல்லை டைல்ஸ் பதிக்கப்பட்டு இருந்தது, தடுப்புக்கம்பிகள் இருந்தது, டியூப் லைட்கள் அதன் மையத்தில் இறை பயம் இல்லாத மனிதர்கள் உபயம் திரு. இன்னாரு மகன் மன்னாரு என்று வைத்திருந்தார்கள் உண்டியல் வெகு உறுதியாக ஸ்டீல் பாக்ஸில் இருந்தது, அதன் கீழிலும் உபயம் மாவுடியான் வெல்டிங் ஒர்க்ஸ் என்று எழுதி இருந்தது, ஐயரின் தலையில் குடுமி இல்லை இடுப்பில் சாம்ஸாங் செல்பேசி சொருகி இருந்தது ஆனால் பிள்ளையார் கொஞ்சமும் மாற்றமின்றி அதே அழுக்குத் துண்டை இடுப்பில் கட்டி இருந்தார் நான் பிள்ளையாரைக் கண்டதும் பிள்ளையார் என்னிடம் சொல்வது போல் ஒரு அசிரீரி குரல் ஒலிப்பது போன்ற உணர்வு 

பீடை பிடித்த உன்னை அவள் மணந்திருந்தால் அவளது இன்றைய நிலையென்ன ? 

செவிட்டில் அறைவது போலிருந்தது எனக்கு உடல் சிலிர்க்க சட்டென என்னுள் எண்ணம் மாறியது உண்மைதான் அவள் நீண்ட தீர்க்காயுசுடன் சுமங்கலியாய் எல்லா வளமும், நலனும் பெற்று பல்லாண்டு காலம் வாழட்டும் பிள்ளையாருக்கு நன்றி உரைத்து அவருக்கு கொடுக்க வேண்டிய லஞ்சத்தை உறுதியான ஸ்டீல் பாக்ஸில் போட்டு விட்டு எல்லாம் நன்மைக்கே என்ற பெரியோர் வாக்கு உண்மைதானோ என்ற சிந்தையுடன் கோயிலை விட்டு வெளியேறினேன்.

வியாழன், செப்டம்பர் 22, 2016

அம்மா... தாயே...



உணவைத்தேடி
அலைந்தேன்
கிடைத்தது
அமிர்தமாய்
ஒரு முழு இட்லி
இடமோ
குப்பைத் தொட்டியாம்
எனக்கு அது
வயிற்று
குளிரூட்டியாம்
கண்டேன் கனியிடத்தை
எமக்கு அதுவே
இனி அட்சய பாத்திரம்.
பாத்திரத்தில் ஒருநாள்
பார்த்தேன் பால்
கேட்டு அழுத
பச்சிளம் பிஞ்சு
இதோ என்னை அப்பா
என்றழைக்க எனக்கும்
ஒரு உறவு
எச்சியில் ஒரு பங்கு
கொடுத்து வளர்த்தேன்
மகனை கோடீஸ்வரன்
என்று பெயர் சூட்டி
அழைத்தேன்
நிச்சயம் ஒரு நாள்
அது நிஜமாகும்
என்ற கனவுகளோடு
பிச்சை முத்து நானும்
கோடீஸ்வரன் என் மகனும்
பிச்சை கேட்டு
நம்பிக்கையோடு
நடுத்தெரு
நாராயணன் வீட்டில்
அம்மா... தாயே...
பிச்சை போடுங்க....